Tuesday, September 17, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்ஒமர் கய்யாமுக்கு.... கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!

ஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!

-

ஒமர் கய்யாமுக்கு….கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!
இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சிறுவர்கள் சிலர்....

 

ஒமர் கய்யாம் பட்,

இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்….துஃபைலும், ஜூபைரும் மற்றும் வாமிக், ஜாவீத்…இனாயத் மற்றும் உன்னோடு கூட, இறந்துபோன இன்னும் சிலரது நினைவுகளும்… ஆமாம், நீ இறந்துவிட்டாய், ஒமர். இல்லையில்லை.. கொல்லப்பட்டாய்….

சில மாதங்களுக்கு முன்புதான் – கடையை மூடியிருந்த ஷட்டரின் மீது தலையை மோதியடிக்கப்பட்டு மயக்கமானாய். பின்னர் காவல்நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டாய். காவல்துறையினராலும், சிஆர்பிஎஃப் போலீசினாலும் பந்தாடப்பட்டு, கிட்டதட்ட 51 மணிநேர சித்திரவதைக்குப் பிறகு நீ இறந்து போனாய். இறக்கும்போது உனக்கு17 வயதுதான். பதினொன்றாவது வகுப்பைக் கூட தாண்டியிருக்கவில்லை நீ, ஒமர்.

உனது இறப்பு காஷ்மீரைத் தாண்டி வசிப்பவர்களுக்கு பத்தோடு பதினொன்று நூற்றுக்கணக்கில் இறந்துபோனவர்களுள் நீயும் ஒரு ஆள்.

அந்த வெள்ளிக்கிழமை, மசூதியில் பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாய். உனக்குச் சில மீட்டர்கள் முன்னால் சென்று கொண்டிருந்த மக்களை பின் தொடர்ந்து நீயும் சென்றாய். அவ்வளவுதான். காவல்துறையினரும், சிஆர்பிஎஃப்பும் சூழ்ந்து கொண்டு தடிகளால் உன்னைத் தாக்கினார்கள். அடிகளாலும் உதைகளாலும் உன்னை மூர்க்கமாய் கிழித்தெறிந்தார்கள்.

உன்னுடைய தந்தை கய்யாம், ஜெயிலில் நீ கழித்த கடைசி மணித்துளிகளை – மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது நீ சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்கிறார், ஒமர்.

நீ உயிருடன் இருந்த அந்த கடைசி நிமிடங்களில் என்ன நினைத்தாய், ஒமர்?

ஏன் உனக்கு அது நிகழ்ந்திருக்க வேண்டும்? எனக்கும் தெரியவில்லை.
நீ ஏன் அவ்வளவு கொடூரமாக மரணத்தை நோக்கி துரத்தப்பட்டாயென்று? சில நிமிடங்களில் உன் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டதென்று? உன் தந்தையிடமிருந்தும் உன் மூன்று தமக்கைகளின் வாழ்விலிருந்தும் நீ ஏன் இப்படி அபாண்டமாக பறிக்கப்படவேண்டும்?

ஒமர், நீ யார் மீதும் கல்லெறியவில்லை. கோஷமிட்டுச் சென்றவர்களின் பின்னால் நீ சென்றாய், அவ்வளவுதான். உனது மரண ஊர்வலத்தில் ஆண்களும் பெண்களும் மாரடித்து கதறியபடி சென்ற கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

உனது நண்பர்கள் சில்லிட்டுப்போன உன்னுடலை மாறி மாறி சுமந்தனர். உன் மரணம் அவர்களது ஆத்திரத்தைக் கிளறியது. ஒவ்வொரு படுகொலையும் போராட்டத்தை தட்டியெழுப்புகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த வந்த காவல்துறையினரை நோக்கி கல்லெறியத் தூண்டியது. உன்னுடலை புதைக்குமட்டும் அமைதியாயிருக்கும்படி மன்றாடிய பெரியவர்களுக்காக கண்களில் நீர் வழிய அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர், அந்த இளைஞர்கள்.

ஆனாலும் நீ கேட்கலாம், உமர்….ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி? ஏன் எங்கள் பெண்களுக்கு மட்டும் இப்படி? எதற்காக நாங்கள் இவ்வளவு அடக்குமுறைகளை அனுபவிக்க வேண்டும்? எதற்காக அப்பாவி மக்களை கொலை செய்ய வேண்டும்? எதற்காக எங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவேண்டும்?

கேள்விகள் நன்றாகத்தான் இருக்கின்றன, ஒமர்!
இந்த நாட்டில் பலர், அதிகாரம் கொண்ட சிலர் காஷ்மீர்தான் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு என்றும், அங்கிருக்கும் ஐந்து வயதுக்குழந்தை கூட தீவிரவாதி என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு நீ நகைக்கிறாய்தானே, ஒமர். புரிந்து கொள்ளமுடிகிறது.

இதோ, இப்போது உன்னைப் போல பலரும் பலியிடப்பட்ட பின்னர் இரும்புக் கரங்களின் மூலம் அமைதி திரும்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.. எல்லோரும் தேசபக்தியை, ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த இந்தியாவுக்காக கிரிக்கெட் பார்க்கத் துவங்கிவிட்டார்கள். தேசநலன் என்பதும் மக்களின் நலன் என்பதும் பிசிசிஐயின் குழுக்கள் விளையாடும் கிரிக்கெட் பந்தில்தான் உள்ளதே தவிர அரசியல் ஆர்ப்பாட்டங்களில் அல்ல என்றே நினைக்கிறார்கள்.

இலட்சக்கணக்கான போலீசையும் ராணுவத்தையும் குவித்துவிட்டு பழைய நிலைமை திரும்பியிருப்பதாக கூறிக்கொள்கிறது அரசு. விடுதலையைக் கேட்கும் மக்களிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறது அதிகார வர்க்கம்.

ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து வரவழைக்கப்பட்ட 44 மாணவர்களிடம் ப,சிதம்பரம் ”முன்னேற்றம் தேவையெனில் அமைதி மிகவும் முக்கியம்” என்று அறிவுறுத்துகிறார், நாட்டின் மற்ற பாகங்களுக்கு கிடைக்கும் எல்லா வசதி வாய்ப்புகளும், முன்னேற்றத் திட்டங்களும் காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டுமெனில் அங்கு அமைதி நிலவுவது மிகவும் முக்கியம் என்று அவர்களிடம் அழுத்திச் சொல்லுகிறார்.

நாட்டின் மறுகாலனியாக்கத்திற்கு உங்கள் விடுதலை உணர்வும், சுயநிர்ணய உரிமைகளும் நல்லதல்லவே!

எது வசதி வாய்ப்பு? எது முன்னேற்றம்?

நாட்டின் அத்தனை வளங்களையும் பட்டா போட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதுதான் முன்னேற்றமா? பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்குவதுதான் வசதி வாய்ப்பா? இந்திய ஜனநாயகம் என்றும் இறையாண்மை என்றும் சொல்லிக் கொள்வதற்கு அர்த்தம்தான் என்ன?

மிலே சுர் மேரா துமாரா என்றும் ஹம் சப் ஏக் ஹென் என்றும் பாடல்களை சொல்லித் தருகிறார்களே, அவையெல்லாம் உண்மையில் என்ன? உரிமைக்கான ஒவ்வொரு போராட்டமும் நசுக்கப்பட்டு, துப்பாக்கியின் முனையில் அன்றாட வாழ்க்கையை கழிக்க வேண்டியதுதானா?

உனது நுரையீரல் நொறுங்கியதாலும், மூளைச்சாவினாலும் நீ இறந்துபோனதாக உனது மருத்துவமனை சான்றிழ் கூறுகிறது. கேள்விகள் ஒமர், உன் முகம் எழுப்பும் அத்தனை கேள்விகள்… என்னை துளைத்தெடுக்கின்றன, ஒமர் கய்யாம்! உன்னைப்போல எத்தனை பேர், விளையாடும்போதும், ஜீலம் நதிக்கரையில் அமர்ந்திருக்கும்போதும், பள்ளிக்கூடம் விட்டு வரும்போதும், தோட்டங்களுக்குச் சென்றிருக்கும்போதும்…. எத்தனையெத்தனை ஒமர்கள்?

இந்தப் படுகொலைகள் ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லும் கடமை இந்த நாட்டிற்கு இருக்கிறது, ஒமர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு இன்னும் பதிலில்லை.

இந்தியாவின் மானப்பிரச்சினையும், தேசபக்தியும் வெளிப்பட வேண்டியது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அல்ல, ரத்தம் சொட்ட சொட்ட மடிந்து போன, வன்முறையால் அடக்கி ஒடுக்கப்பட்ட உங்கள் ஒவ்வொருவரின் சாவுக்கான பதிலிலும்தான்…

இறந்து போன 102 பேருக்கு தலா 5 லட்சங்கள் தருவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த 5 லட்சங்களுக்கு என்ன அர்த்தம்? நம்பிக்கைக் கீற்றாய், தங்களின் கண்ணுக்குக் கண்ணாய் தாய்க்கும்- தந்தைக்கும் இருந்தவர்களை இந்த இழப்பீடு திரும்பிக் கொண்டுவந்துவிடுமா?

திரும்பவும் கேள்விகள் ஒமர்….கேள்விகளே என்னைச் சூழ்ந்திருக்கின்றன!

சோபோரில் நடந்த அமைதியான ஊர்வலத்தில் ராணுவத்தின் துப்பாக்கிச்சூடால் தன்மகனை இழக்கக் கொடுத்த அந்த தந்தை சொன்னதை நினைவு கூர்கிறேன், ஒமர். அவர் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துவிட்டார், டீத்தூள் வாங்கச் சென்ற தன் மகன் அமைதியான வழியில் எதிர்ப்பைக் காட்ட நடத்தப்பட்ட ஊர்வலத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொண்டிருக்கிறான். இடையில் புகுந்த ராணுவம் நிராயுதபாணியாய் நின்றவர்களை – அப்பாவி பொதுமக்களை அதிரடியாய் சுட்டிருக்கிறது. அப்படிக் கொன்றவர்களிடமிருந்தே என் மகனின் தியாகத்துக்கு விலை பேச மாட்டேன் என்று அவர் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துவிட்டார், ஒமர்!

உங்கள் குடும்பத்தினர் உணரும் அந்த வெற்றிடத்தை ஒருநாளும் இந்த பணம் ஈடு செய்யாது. வலிகளையும் போக்காது. விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1321 வழக்குகளில் 54ஐ மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டது அரசு. இதில் எட்டாயிரம் காஷ்மீர் மக்கள் காணமல் போனது கணக்கிலேயே வராது.ராணுவத்தின் அடக்குமுறைக்கு சாட்சியாக மரித்த மக்களின் பெயர்களை முறையாகக்கூட பதிவு செய்யவில்லை,அரசாங்கம்.

ஆமாம், ஒமர், உங்கள் சுயநிர்ணய உரிமையை இந்த அரசாங்கம் பறித்திருக்கிறது. எங்கள் கண்களால் நாங்கள் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

உங்கள் ஒவ்வொருவரின் உயிரை, வாழ்வை காக்கத் தவறிய அரசாங்கம், தனது இறையாண்மையை, பிச்சையிடுவது போல இந்த தொகையைக் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்கிறது. ஒமர், தான் செய்த பல்லாயிரக்கணக்கான கொலைகளை மூடி மறைத்து, ரத்தக்கறை படிந்த தனது கைகளை பொதுவில் சுத்தப்படுத்திக்கொள்கிறது இந்த அரசாங்கம். ஆம், அப்பாவி சிறுபிள்ளைகளை – அவர்களின் கனவுகளோடு உரிமைகளையும் ஒருசேரக் கொடூரமாகச் செய்த கொலைகளை…

__________________________________________________________________

– சந்தனமுல்லை
___________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம் ! | வினவு!…

    இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்…….

  2. ஹ்ம்ம்… இதுக்கு என்ன தீர்வு சொல்லுர? இந்தியாவுக்கு பில்லி சூனியம் வைக்கலாம் வா..

    • ஆஹா! என்ன ஒரு சமூக அக்கறை உள்ள பதில். பலோசராக்களே! உங்களுக்கு இதயம் என்று ஒன்று இருக்கிறதா?

      • “”””டீத்தூள் வாங்கச் சென்ற தன் மகன் அமைதியான வழியில் எதிர்ப்பைக் காட்ட நடத்தப்பட்ட ஊர்வலத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொண்டிருக்கிறான்.””””

        டீத்தூள் வாங்க போனா… வாங்கிட்டு வீட்டுக்கு வரவேண்டியது தானே!!! இப்ப பாரு ஊர்வலம் போனவன்…போக சொல்லி தூண்டி விட்டவன் எல்லாம்… வியாக்கியானம் பண்ணுரான்… அப்பாவி பாதிக்க பட்டு செத்து போய்ட்டான்…

        மக்களே விழிப்பாய் இருங்கள்…நீங்களும் அரசுக்கு எதிராய் மூளை சலவை செய்யப்பட்டு…
        தியாகி பட்டம் வாங்கிதர படலாம்…

        • ஆம் மக்களே நீங்களும் பாலேசாராவைப் போல் மிகவும் நல்ல பிள்ளையாக ..
          பிழைப்புவாதியாக, சந்தர்ப்பவாதியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். நக்கிப் பிழைத்தலே நயமான வாழ்க்கை என்று பாலேசாரா அறிவுறுத்துகிறார்.
          ஏற்றுக் கொள்ளுங்கள்.

    • உன் குடும்பத்தில் ஒருவர் இப்படி இறந்தாலும் நி இதே கருத்தை சொல்லனும் அப்ப தான் நீ உண்மையான தேச பக்தன்!!![obscured]

      • ஆமாங்க, பம்பாயில் நம் இனத்தவர் இறந்த போது என்னாயிற்று உங்கள் முற்போக்கு ? கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு ஒரு இரங்கலாவது தெரிவித்தீரா ?

        ஒரு பக்க இறப்புகளை மட்டும் காட்டி இன்னொரு பக்கத்தை மொத்தமும் நல்லவர்களாக சித்தரிப்பது தான் முற்போக்கா?

  3. //சோபோரில் நடந்த அமைதியான ஊர்வலத்தில் ராணுவத்தின் துப்பாக்கிச்சூடால் தன்மகனை இழக்கக் கொடுத்த அந்த தந்தை சொன்னதை நினைவு கூர்கிறேன், ஒமர். அவர் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துவிட்டார், டீத்தூள் வாங்கச் சென்ற தன் மகன் அமைதியான வழியில் எதிர்ப்பைக் காட்ட நடத்தப்பட்ட ஊர்வலத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொண்டிருக்கிறான். இடையில் புகுந்த ராணுவம் நிராயுதபாணியாய் நின்றவர்களை – அப்பாவி பொதுமக்களை அதிரடியாய் சுட்டிருக்கிறது. அப்படிக் கொன்றவர்களிடமிருந்தே என் மகனின் தியாகத்துக்கு விலை பேச மாட்டேன் என்று அவர் இழப்பீட்டுத் தொகையை பெற மறுத்துவிட்டார், ஒமர்!//

    இந்தக் கடிதம் ஒன்றே போதும் காஷ்மீரின் துயரத்தை உலகிற்கு உணர்த்த . டெண்டுல்கர் ,தோனி, ஜாகிர்கான் போன்ற பன்னாட்டு முதலாளிகளின் அடிமைகளின் ரசிகர்களுக்கு , கய்யாமின் பதில் கூனி குறுக வைக்கும்

  4. மக்களை கொன்று விட்டுதான் காஷ்மீரை காப்பாற்றுவதாக ஏமாற்றி கொண்டுள்ளனர்… தினமலம் பொது புத்தியில் இப்படியே முஸ்லீம்களை விட்டால் பாகிஸ்தானுக்கு வசதியாக போய் விடும் என பேசும் ஹிந்திய மூடர்களுக்கு எத்தனை ஓமர் உயிர் போனாலும் புரியாதே…

  5. நான்
    ஓமர் கையாம் எழுதுகிறேன்…

    என்
    இதயமும் மூளையும்
    சிதைக்கப் பட்டுவிட்டதால்
    இந்தக் கடிதத்தை
    சிந்தனையேதுமின்றி,
    என் விரல்களே
    வரைந்துவிடுகின்றன.
    அனிச்சையாய்.

    இந்தக் கடிதத்தின் வார்த்தைகள்
    அனிச்சையானவை.
    தீச் சுட்டுவிடின்
    வெடுக்கென இழுப்பதுபோல…
    புலித் துறத்தலில்
    ‘அட்ரினல்’ சுரந்து
    தலை தெறிக்க ஓடுவது போல…
    கொல்லக் குறி பார்ப்போரை
    திருப்பித்தாக்க
    அதே ‘அட்ரினல்’ சுரந்து
    எங்கள் கரங்கள்
    கற்களைத் தேடுவது போல…
    என் இந்த வார்த்தைகளும் கூட
    ‘அட்ரினல்’ கலந்ததுதான்.
    மிகவும் அனிச்சையானது.

    உங்களின் அனைத்து
    கேள்விகளுக்கும்
    என்னிடமிருப்பது
    ஒரே பதில்தான்:
    நான் யார் என்று
    எனக்குச் சொல்லப்படாமலே
    நான் கொல்லப்பட்டு விட்டேன்.
    தீர்ப்புக்கு முன்னமே
    மரண தண்டனை.

    பாடப் புத்தகத்தில்
    ஜனகணமன படித்து
    ஒரு இந்தியன் என்கிற
    இறுமாப்பிலில் நான் இருந்தபோதும்
    சந்தேகப்படப் பட்டேன்.

    சிறுவர்களின் விளையாட்டையும்
    சந்தேகப்பட்டு,
    ராணுவத் தோரணையில்
    எங்கள் காதுகள்
    திருகப்பட்டன.
    அந்தத் திருகலில்தான்
    நாங்கள் தனிமைப்பட்டதை
    உணர்ந்து கொண்டோம்.
    கோலியாடும் சிறுவர்களைக் கொன்று
    வீரம் பயின்றது இராணுவம்.

    சித்ரவதையில்,
    விசாரணைக் கூடத்தில்,
    என் உயிர் பிரியும் தருணத்தில்,
    நான் என்னை உணர்ந்தேன்.
    நான் இந்தியன் அல்ல;
    வெறும் காஷ்மீரி என்று.
    வெறும் காஷ்மீரியும் அல்ல;
    வெறும் பிணமென்று.

    விசாரணையின் பேரில்
    கொல்லாதீர்கள் என்பது
    எங்கள் கோரிக்கை.
    ஆனால்
    விசாரிக்காமலேயே
    என்னைக் கொன்றுவிட்டார்கள்.

    அதனால் நான்
    என்னை இவ்வாறு
    புரிந்துகொண்டேன் :
    ‘நான் இந்தியன் அல்ல;
    பாகிஸ்தானியனும் அல்ல;
    காஷ்மீரியனுமல்ல.
    விடுதலை விரும்பிய
    மனிதன்.’

    நள்ளிரவில்,
    இளம்பெண்ணின்
    நகை போட்ட நடமாட்டம்தான்
    காந்தி கோரிய
    இந்தியாவின் சுதந்தரம்.
    அதையே
    நாங்கள் கோரியிருந்தால்
    நகைப்புக்குறியது என்பீர்கள்.
    எம் பெண்கள்
    பகலிலேயே நடமாடும்
    சுதந்திரம்தான் கோருகிறோம்.
    சிறுவர்கள் ‘டீத்தூள்’ வாங்கி,
    திரும்பவும் பத்திரமாக
    வீட்டுக்குள் வந்துவிடும்
    சுதந்திரம் கோருகிறோம்.
    இரவிலல்ல,
    பட்டப் பகலில்.

    ஜீலம் நதிக்கரையில்
    பதிந்த என் கால் தடங்கள்;
    என் வீட்டு முற்றத்தில்
    ஒட்டடை படிந்து கிடக்கும்
    எனது புத்தகப் பை;
    என் இரத்தக்கறையில்
    தோய்ந்த துணிகள்;
    நான் எதற்காகவோ
    எடுத்து வைத்த
    கற்குவியல்கள்;
    இவைகள் யாவையும்
    எமது விடுதலை வேண்டியே
    அங்கேயே விட்டு வந்தேன்.

  6. Indian என்ற பெயரில் வந்திருக்கும் ஒரு வெறிநாயின் எச்சில் தான் இந்த பின்னூட்டம். சில வார்த்தைகளை obscured பண்ணிய வினவு, அந்த மொத்த எச்சிலும் obscured பண்ண தகுந்ததே!

  7. ”இந்தியன்” என்ற பெயர் சொல்லவும் தகுதியற்ற வெறியனே…ஹ்ம்..உனக்கு முஸ்லீம்கள் குறித்து கற்பிக்கப்பட்டவற்றை கண்,காது,வாய் மூடி கேட்டுவிட்டு வந்து வாந்தியெடுக்கிறாய் உன் குரோதத்தை…

    //The muslims in india should learn to behave themselves, else, we don’t mind erasing them out of the population.//

    “we”..யாருடா நீங்கள்ளாம்…

    //Globally these [obscured] creat lot of trouble and no one wanted them to be on this universe.//

    அப்டியா????

    //Even muslims women and girls wanted their men to die.//

    ஆமா…முஸ்லீம் ஆண்கள் வேணாம்..முஸ்லீம் பெண்களை கற்பழிக்கவும்,கருவை கிழித்து அவர்களை எரிக்கவும் செய்பவர்களான உன்கிட்ட வந்து சொன்னாங்க பாரு..

    //Islam is the very last religion founded by the [obscured] muhammed and this is the time to wipe out islam from this beautiful world.//

    உம்மை போன்ற கோடிப்பேர் காலாகாலமும் மாய்ந்து மாய்ந்து முயன்றும்,ஒரு —–கூட பிடுங்க முடியவில்லை…போ…..

    //JAI HIND//

    இதைச்சொல்ல தகுதியில்லை உனக்கு,…மதவெறியனே…

  8. ஆமாம், ஒமர், உங்கள் சுயநிர்ணய உரிமையை இந்த அரசாங்கம் பறித்திருக்கிறது. எங்கள் கண்களால் நாங்கள் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    • ஆமாம் காஷ்மீர மக்களே, உங்கள் பேச்சுரிமையை சிந்தனைத் தெளிவை தீவிரவாதிகளும் பாகிஸ்தானிய ஊடுருவல்களும் தடை செய்து விட்டன. அதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  9. இந்தியா சுதந்திரம் அடைந்த போது இணக்கப் பட்ட பல பிரதேசங்களில் காஷ்மீரும் ஒன்று. காஷ்மீரின் ப்ரு பகுதியான ஆசாத் காஷ்மீர் பாகிஸ்தானுடன் உள்ளது.காஷ்மீரின் ஒரு பகுதி,சில வட கிழக்குப் பிரதேசங்களும் போராட்டம் நட்த்தி வருகின்றன.ஊடகங்கள் இப்பிரச்சினை ப‌ல்விதமாக சித்தரிக்கின்றன.இராணுவம் ஒரு பகுதியில் நடந்தால் மனித உரிமை மீறல்கள் நடக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
    உலக் முழுவதும் அரங்கேறி வரும் கொடுமை.

    இந்தியாவில் இருக்கும் காஷ்மிரில் 80% முஸ்லிம்கள் 20% இந்து,புத்த சீக்கிய சமயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.இப்பொழுது காஷ்மீரிகள் எதற்காக போராடுகிறர்ர்கள்?

    அ) மதச் சார்பற்ற ,ஜனநாயக தனி நாடு அமைக்க‌
    ஆ) இஸ்லாமிய தனி நாடு அமைக்க (20%..?)
    இ) பாகிஸ்தானுடன் இணைவது.
    ஈ) இந்தியாவில் சுய நிர்ணய உரிமை

    ஒருவேளை தனியாக பிரிந்தால்

    அ)மத சார்பற்ற அரசாக,அனைத்து மதத்தினரையும் பார பட்சமில்லாமல் நடத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு.பாகிஸ்தானில் உள்ள இந்து சீக்கியரின் நிலைமைதான்.

    ஆ)வாய்ப்பு இருந்தாலும்,பாகிஸ்தான் விட்டு வைக்காது.

    இ) இதுதான் நடக்கும்.பாகிஸ்தானின் இப்போதைய நிலைமையை
    பார்க்கும் போது இது நடக்க வேண்டுமா!!!!!!!!!!!!!!!

    ஈ) இந்தியாவில் சுய நிர்ணய உரிமை என்றால் பல மாநிலக் கட்சிகளுக்கு இந்த எண்ணம் உண்டு.ஒத்த எண்ணம் கொண்ட சக்திகளோடு தோழமை கொண்டு சாதிக்க் இயலும்.
    ____________

    முதலில் யாராவது சொல்லுங்கள்.காஷ்மீரிகளுக்கு என்ன வேண்டும்?…

    • //முதலில் யாராவது சொல்லுங்கள்.காஷ்மீரிகளுக்கு என்ன வேண்டும்?…//

      அத எப்படிங்க நாம சொல்ல முடியும்? காஷ்மீரிகளுக்கு என்ன வேணும்னு காஷ்மீரிகளிடம்தான் கேக்கனும். அப்படிக் கேக்குறதத்தான் கட்டுரையும் சொல்லுது.

  10. அவர்களுக்கு என்ன தேவையோ அதை கொடுத்துவிட்டு போங்கள், அது இந்தியாவிடம் இருந்து சுதந்திரமாக இருந்தாலும் சரி.

    முதலில் காஷ்மீரை தனியே விட்டுவிடுங்கள். இந்தியாவும் நல்லா இருக்கும், காஷ்மீரும் நல்லா இருக்கும். எல்லாருக்கும் புண்ணியமாகப் போகும்.

    • வணக்கம்
      நான் உண்மையாகவே கேட்கிறேன்.உங்களின் கருத்துப்படி காஷ்மீரிகள் இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.

      அதில் வாழ்ந்து வரும் பிற மதத்தினரை என்ன செய்வது?.

      ஒரு மத சார்பற்ற நாட்டில் மத சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக வாழும் ஒரு மாநிலம் அங்கமாக இருக்க கூடாதா?

      வாழும் இடத்தில் இருந்து துரத்தப்படுதல் என்பது யாருக்கும் நடக்க கூடாது.

      இங்கு காஷ்மீருக்காக பரிந்து பேசும் வினவு தோழர்கள் உட்பட பலர் இஸ்லாமியர் அல்ல.பாகிஸ்தான் பிரிவினையில் பலன்களையே இன்னும் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.காஷ்மீரில் உள்ள பிற மதத்தினரை துரத்திவிட்டு பாகிஸ்தானுடன் சேர்வதுதான் அவர்கள் உரிமைகளை பாதுகாக்கும் என்றால் இது நியாயமில்லை. பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவில் இருந்து சென்ற முஜாகிர்கள் நிலைமை,பங்களாதேஷின் பீஹாரி முஸ்லிம்கள் நிலைமை ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.பாகிஸ்தானில் முஜாகிர்களுக்கு பரிந்து பேச (வினவு மாதிரி) யாரும் இல்லை.

      http://www.mohajir.com.pk/

      http://www.mqm.org/

      http://en.wikipedia.org/wiki/Stranded_Pakistanis

      • நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இரண்டு நாடுகளும் சிறுபான்மை மக்களை அடிமை போலத் தான் நடத்துகிறார்கள்.

        சிறுபான்மையினரின் நலனுக்காக பெரும்பான்மையினரின் கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது.

        காஷ்மீர் மக்களின் ஆதரவு இல்லாமல் அங்கு இந்திய தேசியக் கொடி கூட ஏற்ற முடியாது.
        அப்படி இருக்கும் போது, காஷ்மீரிகள் ஒருமித்த கருத்தோடு தனியாகவோ அல்லது பாக். உடனோ இருந்துவிட்டு போகட்டுமே!

        • சரிங்க‌
          இந்தியாவில பல் இன,மொழி ,மத மக்கள் வாழ்கிறார்கள்.எந்த ஒரு பிரிவினையும் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

          இதுவரை ஏதாவது காஷ்மீரில் போராடும் அமைப்பு இத்னை பற்றி என்ன கூறுகிறது?

          1. பிரிந்து போக விரும்பும் காரணம்.

          2. பிரிந்து போனால் அங்கு வாழும் சுன்னி பிரிவு இஸ்லாமியரல்லாதோரின் நிலைமை.

          http://india_resource.tripod.com/kashmir.html

          Jammu and Kashmir: A Multi-Ethnic State
          Contrary to most reports in the media, Jammu & Kashmir (J&K) is not a state where only Kashmiri Muslims live. It is a multi-ethnic, multi-religious state with 64% Muslims, 33% Hindus, and 3% Buddhists, Sikhs, Christians and others. There are three distinct geographical regions – Ladakh (with 58% of the area, and 3% of the population), Jammu (26% area, 45% population) and Kashmir (16% area, 52% population: of which over 90 % of the region’s minorities, i.e. 3% of the state’s total population have been driven out). The primary languages of Ladakh are Ladakhi and Balti, of Jammu: Dogri, and of Kashmir: Kashmiri. In addition, Gujari, Pahari, Punjabi, Shina and various dialects and mixed languages are also spoken by different ethnic groups within the state.

          Fifteen per cent of the state’s Muslims live in the provinces of Jammu and Ladakh . They are non-Kashmiris, and by and large, they stand behind J&K’s association with India. (There are a few small exceptions in some towns of Doda district). Of the state’s 49% who reside in the Kashmir province, about 13% are Shia Muslims. Shia Muslims do not wish to have anything to do with Sunni-dominated Pakistan, knowing full well the fate that awaits them there. (Just recently, an Oct 4, Hindustan Times report cited Pakistan’s Shoora Wahdat-i-Islami who condemned what it called the genocide of Shias in Pakistan.) This is especially true of the Shias of Kargil who know of the poverty and degradation experienced by their ethnic siblings in Baltistan, a part of Pakistan occupied Kashmir referred to as the “Northern Areas”. 14% of the people in Kashmir province are the pastoral nomadic Gujar and Bakarwal people. They are strong supporters of association with India and have demonstrated this by organizing Militancy Mukhalif Morcha (Anti-Militancy Front) to assist the security forces in surveillance of terrorist activity. As far as non-Muslim groups are concerned there is no reason for them to even think about living outside multi-religious and secular India. [Ref. 1]
          _____________

          பொதுவாக பேசுவோம்

          இது காஷ்மீருக்கு மட்டுமா!!!!

          இல்லை ஒவ்வொரு ஊரிலும் இந்தியா பிடிக்காத மக்கள் எந்த நாட்டுடன் இணைய விரும்புகிறார்களோ வாழும் இடங்களை கொடுத்து விடலாமா?

          ஈழத் தமிழர் பிர‌ச்சினையில் என்ன சொல்வீர்கள்?

          • நித்ய கல்யானி – சாமுராய்,

            காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் சேர நினைக்கிறார்கள் என்பது ஆர்எஸ்எஸ்சினுடைய விஷப் பிரச்சாரம். அடுத்து காஷ்மீர் இந்தியாவில் ஒரு பகுதி என்பது அதைவிட மிகப்பெரிய மோசடி. காஷ்மீரின் விடுதலைப்போராட்ட வரலாற்றை படித்தவர்கள் அவர்கள் இரு நாட்டுடனுடன் சேர விரும்பாமல் தனியாக இருந்ததையும், இந்திய அரசு வஞ்சகத்தால் அதை தன்னகத்தே இணைத்துக்கொண்டதையும் புரிந்து கொள்ளலாம்.

            எல்லாவற்றுக்கும் மேல் காஷ்மீரிகள் என்ன விரும்புகிறார்கள் என்பதே இங்கு முக்கியம். அவர்கள் தனிநாடாக இருக்க விரும்பினால் அதை அம்மக்கள் முடிவு என்று விட்டுவிடுவதுதான் சரியானது.

            இது ஏதோ காஷ்மீர் என்றில்லை வடகிழக்கு மாநிலங்களையும் இந்தியா இப்படித்தான் ஆக்கிரமித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

          • நித்யகல்யாணி அவர்களே-

            காஷ்மீரில் அப்படி அவர்கள் முடிவுக்கு விட வேண்டுமானால் முதலில் அங்கு பாகிஸ்தானின் தலையீடு இல்லவே இல்லை என்று முதலில் நிரூபிக்கவேண்டும். இரண்டு, அங்கே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக குடியிருக்கும் (அதாவது ஜம்முவில் பெரும்பான்மையாகவும் ஸ்ரீநகரில் சிறுபான்மையாகவும்) மற்ற மதத்து நிலை என்ன? விரட்டியடிக்கப்பட்ட இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் நீதி கிடைக்குமா?

            காஷ்மீரோ வடகிழக்கோ – சுயநிர்ணயம் என்பது ஒரு குழுவுக்கு மட்டும் கிடைப்பதல்ல – அங்கு ஜனநாயக முறையில் நடக்க வேண்டும்.

          • காஷ்மீரி என்பவர்கள் காஷ்மீரின் பூர்வீக குடிகள் மட்டுமே. காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு அங்கு குடியேறிய இந்தியர்கள் அல்ல. எனவே அங்குள்ள குடியேறிகளின் கோரிக்கைகளை பற்றி கவலைப்பட தேவை இல்லை. பூர்விக குடிகளின் விருப்பத்தை பொறுத்து அவர்கள் தனி நாடாகவோ அல்லது இந்திய அல்லது பாக் உடனோ இணைகப்படலாம். அது சரி, பூனைக்கு யார் மணி கட்டுவது?

          • காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் இந்துக்களே பூர்வகுடிகள் – இசுலாம் அங்கு வந்தேறிய மதம். இதை உங்களால் மறுக்க முடியுமா ?

          • இசுலாமியன் இந்தியாவுக்கு வந்திரங்கும் முன்பாக இங்கே இந்து மதம் என்ற சொல்லே இல்லை – இதை மறுக்கமுடியுமா உங்களால்?

          • எவனெவென்ல்லாம் முஸ்லிமில்லையோ, கிறுத்துவனில்லையோ அவனெல்லாம் இந்துன்னு சொன்னதே வெள்ளைக்காரன் – இதை மறுக்கமுடியுமா உங்களால்?

          • அப்படியானால், ஈழ விசயத்தில் இலங்கையை போல் ( ஒரு இனத்தை அழித்து அமைதியை நிலைநாட்டுவது), காஷ்மீர் விசயத்தில் இந்தியா செயல்படுகிறது என்பதை ஏற்றுகொள்கிறீர்களா?

        • நித்யகல்யாணி

          காஷ்மீரில் அழிக்கப் படுவது இந்து இனம். அதை அழிப்பது இசுலாமிய தீவிரவாதிகளும் பாகிஸ்தானிய எஜமானர்களும். அந்த அநியாயத்தைக் பதுக்கி கண்டுகொள்ளாமல் இங்கு ஒரு பக்கத்தை பார்த்து பேசுவது முற்றிலும் நேர்மையற்ற செயல்.

      • சரி எங்கள் மதத்திற்கு பெயரே தேவை இல்லை, அதைப் பற்றி உங்களுக்கென்ன?

        இசுலாமியர் அல்லாதவர்களுக்கு காஷ்மீரில் இடைஞ்சல் இருக்கும் வரை, பாகிஸ்தானின் ஊடுருவல் ஓயும் வரை இந்த சுயநிர்ணயப் பேச்சே செல்லாது.

        • இந்து இனம் என்றோ இந்து மதம் என்றோ எதுவும் இல்லையே.
          ஒரு இனந்த்துக்கோ மதத்துக்கோ பொதுவாக இருக்கக் கூடிய எதுவுமே இந்த ‘இந்துக்கள்’ என வசதிக்காக அழைக்கப்படும் மக்களுக்கு இல்லையே.

          வடக்கின் பண்பாடு என மெச்சப் படுவதில் முக்கியமான பகுதி முகலாயர் வழங்கியது.

          இந்தியா உலகிற்குத் தந்த உருப்படியான ஒரே மதம் பவுத்தம். அதைக் கூடப் பார்ப்பனியம் அழித்துச் சிதைத்து விட்டது.

          இப்போது இந்தியா எனப்படுவது கூட, பிரிட்டிஷ்காரனின் காலனிய சாம்ராஜ்யத்தின் ஒரு எச்சமே!

          • /*வடக்கின் பண்பாடு என மெச்சப் படுவதில் முக்கியமான பகுதி முகலாயர் வழங்கியது */

            இந்நாட்டின் பண்பாடும் சுயத்தோற்றமும் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் முகலாயர் கொடுத்தது, ஆங்கிலேயர் கொடுத்தது மட்டுமே உங்களுக்கு பிடிக்கும் என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.

            அதற்காக நாட்டின் எல்லா பிரிவினரும் அப்படித் தான் சிந்திக்க வேண்டும் என்று சொல்ல முற்படாதீர்கள்.

          • சொல்லப்படும் 5000 அல்லது 50,000 வருடப் பாரம்பரியத்தில் இன்று நடைமுறையில் உள்ளவை எவை?
            சாதியம் மெச்சப்படும் ஒன்றாகத் தெரியவில்லை. நமது மூட நம்பிக்கைகள் மெச்சப்படுவனவாகத் தெரியவில்லை.

            இன்றைய வட இந்திய உணவில் எது இந்த 5000 வருடப் பாரம்பரியத்திற்குரியது?
            இன்றைய வட இந்திய உடை எந்தப் பாரம்பரியத்திற்குரியது?
            இன்றைய வட இந்தியக் கட்டிடக் கலையின் உச்சம் எந்தப் பாரம்பரியத்திற்குரியது?
            இந்துஸ்தானி இசை கூட, முகலாயப் பாதிப்புக்கு உட்பட்டே இன்றைய வ்டிவைப் பெற்றது.

            சிலர் பேசும் பழைய பெருமைகளில் மிஞ்சி இருப்பனவற்றை முகலாயர் விட்டுச் சென்றவற்றுடன் ஒப்பிட்டுப்பார்துத் தான் மெச்சப் படுவதில் முக்கியமான பகுதி முகலாயர் வழங்கியது என்று சொன்ன்னேன்.

            பார்ப்பனியம் இந்தியப் பண்பாட்டில் மேலானவை பலவற்றையும் அழித்து விட்டது.

            வேண்டுமான அளவுக்கு நாங்கள் நம்மையே மெச்சிக் கொள்ளலாம், அதனால் நாங்கள் மேல் நிலை எய்த்ல் இயலாது.

  11. Dear Santhanamullai,

    Sitting in a air conditioned room you can write what ever you want. Have you ever write about anything about the Kasmir Pandits and their positions now ? Do you ever ready to write an article about their conditions ?

    what is your opinion about the law, the law of Islam in Saudi that compels every lady irrespective of her religion and beleives force to wear burga ?

    What is your opinion about the millions of people killed by communits governments in the world ?

    When you write always try to see the second side of the coin also.

    Chandran

    • I am not sure where the author’s abode or office is air-conditioned.
      Why are you personalising matters?

      Here is a article whose contents deserve comment.
      Why do you want to divert attention from it?

      The kind of things that you like to hear are said elsewhere by many a campaigner for imperialism and reaction. Vinavu is by and large a truth-based platform.
      What is it that scares you?

      • hiiii, hiiiiii, What a truth, what a base. never reported any positive development. When a death will occur, where a destruction will take place, what story can be manipulated………waiting for seconds, minutes and hours.

      • This Vinavu platform is comedy track of the larger film of Red flag mafia man. You are entertained by Vinavu comedy track. words spread that this comedy is super, slowly real film will unfold, if you buy their argument. Then what happened in Tianenmen square will happen to your sons & daughters. At least we have redressal system with media. Under the set advocated by Vinavu platform, only supreme leader will be there and what ever the platform promised in the comedy track will be taken away.

        • ஒங்க ஜோக்குக்குச் சிரிக்கவா அழவான்னே தெரியல்லியே சாரு!

    • பண்டிட்களின் நிலை பற்றி தெரிய வேண்டும் அவ்வளவு தானே ?..

      அவர்கள் வழக்கம் போல மந்திரம் ஓதி திண்கிறார்கள் ..

      • நீங்களும் வழக்கம் போல பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் காசு வாங்கித் தின்றுவிட்டு பச்சையும் சிகப்புமாக ஆசனவாயுவை வெளியேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

  12. //எல்லாவற்றுக்கும் மேல் காஷ்மீரிகள் என்ன விரும்புகிறார்கள் என்பதே இங்கு முக்கியம். //
    காஷ்மீரிகள் என்பது யார் என்பதே பிரச்சினை.இப்போது ஆசாத் காஷ்மீர் தனிநாடு ஆகிவிட்டதா? ஐ.நா சபையில் அங்கத்தினராகி விட்டதா? ஐ.நா சபையில் அங்கத்தினராகி விட்டதா? இச்சுட்டி பாருங்கள் ,ஆசாத் காஷ்மீரில் அரசு மொழி உருது,கசுமீரிக்கு இடமில்லை.

    http://en.wikipedia.org/wiki/Azad_Kashmir

    நான் எழுப்பிய கேள்விகளுக்கு யாரும் பதில் தர்வில்லை.
    மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன்.

    1. பிரிந்து போக விரும்பும் காரணம்.
    2. பிரிந்து போனால் அங்கு வாழும் சுன்னி பிரிவு இஸ்லாமியரல்லாதோரின் நிலைமை.

    இதற்கு இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் மௌனம் சாதிப்பார்கள். இராணுவம் செயல்களை கூட கன்டிக்க மாட்டார்கள்.நீங்களோ நானோ விவாதிப்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.இந்திய காஷ்மிர்ரில் வாழும் ஒரு குஇன மக்களின்(60%) விருப்பத்திற்காக மட்டும் பிரிவது நடக்காது.காஷ்மீரின் பிற இன மக்கள்(40%),இந்தியாவின் பிற பகுதி மக்களின் ஆதரவு இல்லாமல் ஒன்றுமே நடகாது..சுய நிர்ணய உரிமை என்றால் அதற்கு பல மாநிலங்கள் குரல் கொடுக்கின்றன.ஒருவேளை நடக்கலாம்.நான் முடித்து விட்டேன். நன்றி

    • ////1.பிரிந்து போக விரும்பும் காரணம். /////

      அங்கு இராணுவம் இது வரை செய்து வந்த கொடூரங்களிலிருந்து நிரந்தர விடுதலை.

      /////2. பிரிந்து போனால் அங்கு வாழும் சுன்னி பிரிவு இஸ்லாமியரல்லாதோரின் நிலைமை. /////

      இப்பொழுது ஒட்டு மொத்த காஸ்மீரே இந்திய கொடுங்கோலின் அடியில் தீயில் வெந்து கொண்டிருக்கிறது. பிரிந்து போனால் அவர்களின் நிலைமை மோசமாகுமா ?.. ஆகாதா ?.. என்று ஜோசியம் பார்க்க வேண்டிய அவசியம் என்ன ?..

      ———————————————————————–

      ///// இதற்கு இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் மௌனம் சாதிப்பார்கள். இராணுவம் செயல்களை கூட கன்டிக்க மாட்டார்கள். /////

      மீறி கண்டித்தால் நீங்கள் தான் தேசதுரோகி என்று முத்திரை குத்தி எரித்துக் கொன்று விடுகிறீர்களே பாவிகளே …
      ————————————————————————

      /////////////நீங்களோ நானோ விவாதிப்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.இந்திய காஷ்மிர்ரில் வாழும் ஒரு குஇன மக்களின்(60%) விருப்பத்திற்காக மட்டும் பிரிவது நடக்காது.காஷ்மீரின் பிற இன மக்கள்(40%),இந்தியாவின் பிற பகுதி மக்களின் ஆதரவு இல்லாமல் ஒன்றுமே நடகாது..சுய நிர்ணய உரிமை என்றால் அதற்கு பல மாநிலங்கள் குரல் கொடுக்கின்றன.ஒருவேளை நடக்கலாம்.நான் முடித்து விட்டேன். நன்றி////////////////////

      அதாவது ஆதரவு ஆட்டுக் குட்டி என்று சுற்றி வளைத்து தாங்கள் கூற வருவது என்னவென்றால் சுயநிர்ணய உரிமை கொடுத்து வேண்டுமானால் எங்கள் கீழே காஷ்மீர் இருக்கட்டும் , தனியாக போக விடமாட்டோம் என்று ..

      இப்படியே நிலைத்திருக்கவும்., கற்கள் அங்கே தயாராகின்றன. அவை இனி மண்டைகளை நோக்கி எறியப்படக் கூடாது. இந்திய ஆளும் வர்க்கத்தின் [obscured] நோக்கி எறியப்படவேண்டும். அப்பொழுதாவது அடங்குகிறார்களா என்று பார்ப்போம் ?..

      • அதே அளவு கற்கள் இந்தியாவை துண்டாட நினைக்கும் உங்களைப் போன்றவர்களை நோக்கியும் திருப்பி அனுப்பப் படுமே, பாவம் நீங்கள்.

    • ஐ.நா சபையில் சேர வில்லை என்றால் அது நாடே கிடையாது என்று கூறும் உரிமையை உங்கள் வசம் யார் தந்தது ?.

      நல்ல பொது அறிவு உங்களுக்கு ..

  13. மேடம் சந்தனமுல்லை அடுத்து அண்மையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இரு இளம் பெண்களைப் பற்றி எழுதி,தீவிரவாதத்தினை கண்டித்தால் நீங்கள் உண்மையில் மனித உரிமையில் அக்கறையுள்ளவர் என்று ஏற்க முடியும்.

    http://www.tehelka.com/story_main48.asp?filename=Ws100211Sopore.asp
    On 31 January, armed militants kidnapped and gunned down Arifa, 17, and Akhtar, 20, in Muslim Peer, Sopore. Allegedly. Some claim they were punished for ‘unacceptable moral conduct’. Others believe they were targeted on suspicion of being police informants.

    As far as I am concerned, we have lost Arifa and Akhtar, like hundreds of our women – to everything that has and continues to happen in the name of the freedom movement in Kashmir – assassinations of our own leaders by our own people, extortion and harassment.

    http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne190211Sopore.asp
    IN A congested neighbourhood of old decaying houses, mourners arrive quietly through narrow muddy lanes. On the evening of 31 January, suspected militants dragged two teenaged sisters out of their home in Sopore, Jammu & Kashmir, and shot them dead in cold blood. This time, there were no cries of revenge from angry boys on the streets nor demands for investigations. In the silences and whispers, it seems as if something ominous — rather than horrendous — has happened.

    In Muslim Peer, where most of the residents are related to each other, the pauses and measured answers of the girls’ relatives are surprising. There is a palpable feeling of fear and also of an overnight alienation. The victims’ family suddenly feels out of place after rumours that the girls were not only “immoral” but also informers for the security forces.

    “Why else would militants kill them? Of course, they had a questionable character too for which they had been warned before,” is a common refrain in the town located 35 km northwest of Srinagar.

    Akhtara, 18, and Arifa, 16, were beautiful and poor and often it is a tragic mix, more so when they refused to conform to the accepted morality of Sopore, a Jamaat-e- Islami and militant stronghold.

    According to locals, the sisters used to roam around the market at dusk, laughing and chatting on their cell phones. “Akhtara was warned in April and asked to mend her ways but she continued to behave improperly,” says a shopkeeper.

    வினவில் ஏன் காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்செயல்களை கண்டித்து கட்டுரைகள் வெளியாவதில்லை.எப்போதும் ஏன் இந்திய அரசை மட்டும் குறை சொல்கிறீர்கள்.

    • இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு கொலை செய்யும் நேரத்தில் இந்திய இராணுவம் அங்கு 20 கொலை 10 கற்பழிப்புகளை அரங்கேற்றுவதால் தான் ..

      • இந்த கோழி வந்ததா- முட்டை வந்ததா பேச்சை எல்லாம் விட்டுவிட்டு உரிமையைப் பற்றி பேசுவோமா ?

      • stop watch வைச்சு பார்த்தாரா என்ன?? முஸ்லிம் தீவிரவாதி துப்பாக்கியை துடைச்சு குறி பார்க்கறப்போ இவர் மத்த விழயத்துக்கு போட்டி வைச்சு ஸ்டாப் வாட்ச் on பண்ணி வெயிட் பண்ணிருக்கார்!!! வினவு அண்ணா எடிட் பண்ணாமல் விட்டது அழகான கருத்து அண்ணா.

  14. இந்தியா என்ற ஒன்று வரைபடத்தில் இல்லாது போனால் உங்களை விட மகிழ்ச்சி அடைய போவது யாரும் இல்லை. ஆனால் இந்த தேசம் இருக்கும். இப்போது போன்று என்றும் இருக்கும். புதிய ஜனநாயகம் மாவோயிசம் புண்ணாக்கு அனைத்தும் தாண்டி அழகாக இருக்கும். உரிமைகளுக்காக போராடுகின்றோம் என்று கூறி தனி மனித உரிமைகளை ஒரு செங்கொடி காலி கூட்டத்தின் கையில் கொடுக்க யாரும் தயார் இல்லை. அந்த காஷ்மீர் தேசத்தில் கூட 70 % வாக்கு பதிவு உள்ளூராட்சி தேர்தல்களில் சென்ற வாரம் நடந்ததுள்ளது. இந்த நிக்கழ்வுகள் போல் அனைத்து உலக நாடுகளிலும் தினமும் நடந்து கொண்டு தான் உள்ளது. …. (எடிட் செய்யப்பட்டது- வினவு)

    • அரிய கண்டுபிடிப்புகள் பல தந்த அய்யா கும்பிடுறேன் சாமி அவர்களே …

      மேலும் இந்த தளத்தில் வந்து காவி நிற ஆசனவாய்வாயுவை விட்டுச்செல்லும் பிற (7*2)-8 அறிவு ஜீவிகளே !…

      தேர்தலில் காஷ்மீர் மக்கள் ஓட்டுப் போட்டது இருக்கட்டும், இந்தியக் கொடி அங்கு குண்டி துடைக்க மட்டுமே உபயோகப் படுத்தப் பட்டு கம்பத்தில் பறக்கவிடப் படாமல் இருக்கும் இரகசியம் என்ன ?..

      மக்களுக்கு இந்தியா மீது அவ்வளவு பாசம் என்பதால் தான் குண்டி துடைக்க பயன்படுத்துகிறார்களோ ?..

      • என் ஆசனவாயுவின் நிறம் கண்டுபிடிக்கும் பகத்சிங் அவர்களே – உங்கள் ஆசனவாயுவை பச்சை நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் அவ்வப்போது மாற்றி மாற்றி விடும் கலையை எங்கு கற்றீர்கள் ?

        அங்கு கொடி பறக்கவிடப்படாமல் இருக்கும் ரகசியம் இஸ்லாமாபாதிலும் கராச்சி தீவிரவாத பயிற்சி முகாம்களிலும் வெட்டவெளிச்சமாக உள்ளது. முதலில் அதைப் பற்றி பேசிவிட்டு அப்புறம் பேசலாம் சுயநிர்ணயமும் சுண்டைக்காயும்.

      • இதுக்கு வேணும்ன்னு உங்க கிட்டே சொல்லி வாங்கிட்டு போராக போலே இருக்கு!!! கடை எங்கேன வைசிருகீக அப்பு.

  15. ஹிந்தியாவுக்கு ஆண்மை இருந்தால்… 1948இல் ஐ.நா.வில் ஒப்பு கொண்டது போல்… காஷ்மீரில் அந்த மக்கள்

    1. இந்தியாவுடன் இருக்க வேண்டுமா?
    2. பாகிஸ்தானுடன் இருக்க வேண்டுமா?
    3. காஷ்மீர் விடுதலை பெற்று தனி நாடு அமைய வேண்டுமா?

    மக்கள் வாக்கெடுப்பு நடத்துமா? பேடிகளும், பொட்டைகளும் கொண்ட ஹிந்திய ஆதிக்க வர்க்கம் 63 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களையும், ஐ.நா.சபை போன்ற உலக சமுதாயத்தையும் ஏமாற்றி வருகிறது…

    தொடந்து பல தேர்தல்களில் 1989இல் வி.சிங் ஆட்சியில் 7 எம்.பி.களுக்காக காஷ்மீரில் தனியாக நடந்த தேர்தல் தவிர… மற்ற அனைத்து தேர்தல்களிலும்… தேர்தல் ஆணையத்தின் துணையும் ஹிந்திய வல்லாதிக்கம் படைகள் கொண்டு போலி வாக்கெடுப்புகளையே நடத்தி வந்துள்ளது…

    கேடு கெட்ட பார்ப்பன பண்டிட்களுக்கு ஊளையிடும் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளுக்கு சொல்லும் செய்தி… ஹிந்திய அரசில் கீழ் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும், கிருத்துவர்களுக்கும் நடக்கும் கொடுமை எல்லாம் காஷ்மீரிகள் சிறுபான்மையினருக்கு செய்ய மாட்டார்கள்…

    மக்கள் உடமைகளை பெருமுதலாளிகளாக ஆதிக்க செலுத்திய காஷ்மீரி பண்டிட்களில் அநியாயங்களுக்கு குரல் கொடுக்கும் ஹிந்திய பேடிகள்… எப்போதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஈனஸ்வரத்தில் முனக கூட மாட்டார்களே…

    • கேடு கெட்ட பண்டிட்டுகள் என்றால் என்ன ? உங்கள் பார்வையில் காஷ்மீரில் இந்துமதத்தினர் கேடு கெட்டவர்களா?

  16. இஸ்லாமில் உள்ள தவறுகளை எதிர்க்கும் செங்கொடியின் தைரியம் ஒனக்கு இல்லை.இதான் உண்மை.அதென்ன முர்போக்குன்னா முஸ்லீம தூக்கி புடிக்கனுமா?போங்கடா..,அப்புறம் எதுக்கு சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மேல படை எடுத்துது?

  17. There is no second thought that kashmir is forcibly merged with India. Now if they like to be ‘independent’ country let them. Only if they get beaten by pakistan after withdrawal of our army, they will understand the real pain !!

    We are spending at least 50,000 Crore every year to protect this ‘ugly’ kashmir. We can very well turn this fund, to move all folks who does not want to be part of ‘independent’ kashmir to near by state. From next year, this 50K can be utilized to improve our ‘agriculture’ !! Don’t worry what if other state start asking same type of ‘indepdence’ – people there are NOT fools, they know what kind of lifestyle they are enjoying now being with India. Even if asked by some very minor people, we can control them very easily in VERY EARLY stage. Now situation is kashmir is VERY LATE and everyone pointing to others – don’t know whether really Indian Military is culprit or the training Militants of Pak !!

    Then, entha Muslim culter than North Indiala erukuna oruthar solrar. Vera eppadi sir erukum if Muslims dominated more than 500 years the Hindu community and killed most of our culture. Even then Hinduism is living and will live EVER.

    finally, there is no second thought about these type of ‘assasinations’ – THEY SHOULD BE STOPPED even if Pak is trying to occupy kashmir.

    please give up kashmir and save life of both of Military brothers, appavi kashmiri’s in the hands of PAK trainied terrorists groups !!!! divert the ‘unncessaryily’ deployed funds towards growth in other parts of country…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க