சாய்பாபா செத்துவிட்டார். அவரது பக்தர்களுக்கோ, ‘கடவுள் இறந்துவிட்டார்’! கடவுளின் மரணம் நிச்சயம் ஒரு வருந்தத்தக்க இரங்கல் செய்திதான். ஆனால் நமக்கோ கடவுளை விடவும், பக்தர்களைப் பற்றியே அதிக கவலை!
பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்த சாயிபாபா அந்தப் பணத்தில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், இலவச மருத்துவமனைகள் என கட்டி வைத்துள்ளார். இப்போது அவருக்கான ஆதரவு சக்திகள் தங்களின் தர்க்கத்துக்கு பயன்படுத்தும் பாய்ண்ட்டும் இதுதான். ‘எப்படியோ சம்பாதிச்சுட்டுப் போகட்டும்ங்க.. எவ்வளவு சேவை செய்யிறாரு. கொள்ளையடிக்கிற மத்த எவனும் இதை செய்யிறானா?’ என்பது பக்தர்களுடையது மட்டுமின்றி, பொதுவான மிடில் கிளாஸ் மனநிலையின் வாதமும் கூட.
’எப்படியோ சம்பாதிச்சுப் போகட்டும்’ என்ற சொற்களின் மூலம் மிகப் பெரிய மோசடித்தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் மிக எளிமையாக இவர்கள் கடந்து செல்கின்றனர். சாயிபாபாவுக்கு மட்டுமல்ல.. இன்று ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கும், குவைத் ராஜாவுக்கும் கூட இதே தர்க்கத்தைதான் பொதுப்புத்தி பொருத்துகிறது. தேர்தல் களத்தில் தி.மு.க.வின் ஊழல்கள் எல்லாம் வாக்குக்கு எதிரானதாக மாறாது எனச் சொன்ன டீ கடைக்காரர் ஒருவர், ‘நாட்டுல எவன் சார் கொள்ளை அடிக்கல.. ஏதோ அவன் பத்து காசு பார்த்தானா… நமக்கு ரெண்டு காசு தந்தானா.. ரைட்டு ஓ.கே.ன்னுட்டுப் போக வேண்டியதான்’ என்று பெருந்தன்மையாக ஊழலை அங்கீகரித்தார்.
நாட்டின் மிகப் பெரும் கொள்ளைகளுக்குதான் இப்படி என்றில்லை. பன்னெடுங்காலமாக இந்த சிஸ்டம் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக Corrupt செய்து வந்திருக்கிறது. அதன் விளைவு… ஊழல் என்றில்லை… எல்லாமே இப்படித்தான் நடக்கும், ஏற்றுக்கொண்டு அனுசரித்துதான் வாழ வேண்டும் என மக்களின் மனங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. ‘போலிஸ்னா அடிக்கத்தான் செய்வான். அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான். அதிகாரின்னா லஞ்சம் வாங்கத்தான் செய்வான்’ என சீரழிவுகள் அனைத்தையும் சமூகத்தின் இயல்புகள் என ஏற்றுக்கொண்டிருக்கிறது பொதுப்புத்தி. ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’ என வடிவேல் கேட்பது வெறும் நகைச்சுவை அல்ல, இந்த சமூகத்தின் மனசாட்சி!
அனைத்தையும் அனுசரித்துப் போவதும், ஊழலையும், பொறுக்கித்தனத்தையும், நேர்மையின்மையையும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களாக கொள்வதும் தனிப்பட்ட நபரின் விருப்பத் தேர்வாக இருக்கும் வரை அது ஓர் தனிநபரின் ஆளுமைப் பிரச்னை மட்டுமே. ஆனால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்துபோவது ஒரு சமூக மனநிலையாக மாற்றப் பட்டிருக்கிறது. அதனால்தான் தேர்தலில் போட்டியிடும் யாரும் உத்தமர் இல்லை என தெரிந்தும் மக்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் மட்டுமல்ல.. வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் சமரசத்தால்தான் எல்லோரும் எதிர்கொள்கின்றனர்.
இன்று கல்வி என்பது கொழுத்த பணம் புரளும் வர்த்தகம். தனியார் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ். சீட் ஒரு கோடி ரூபாய் விலைபோகிறது. இந்த அநீதியை எதிர்த்து ‘கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை’ என உரிமையை போராடிப் பெற யாரும் தயாரில்லை. மாறாக, கிடைத்த படிப்பைப் படிக்கவும், ‘பணத்தைக் கொடுத்தாலும் வேலையை முடித்துத் தரும்’ நீரா ராடியாக்களைத் தேடவுமே விரும்புகின்றனர்.
ஆனாலும் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்துகிறது. தங்களின் அட்ஜஸ்ட்மெண்ட் வாழ்க்கையை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். மாறாக, தங்களுக்கென ஒரு முற்போக்கு அடையாளத்தை சூடிக்கொண்டவர்களோ… அனைத்தையும் அனுசரித்துச் செல்லும் பச்சோந்தித்தனத்தையே கொள்கையாகப் பேசத் தொடங்குகின்றனர். முற்காலத்தியில் முற்போக்குப் பேசி தற்போது ஓட்டரசியலின் லாபங்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் (ML to MLA) ரவிக்குமார் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சந்தர்ப்பவாத அரசியலுக்கு கொள்கை சாயமடித்து… விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டும் வேலையை ரவிக்குமார் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.
இந்த மோசமான சிஸ்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக இதற்குள் சாமர்த்தியமாக வாழ்வது எப்படி என அனுதினமும் மக்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது. தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களுக்கான காரண சக்தியை கண்டறிந்து அகற்றுவதற்குப் பதிலாக… அதன் தாக்குதலை சமாளித்து தற்காத்து வாழ்வது எப்படி என்றே சனங்களுக்குப் போதிக்கப்படுகிறது. ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவன் புருஷன். நாலு அடி அடிச்சாலும் வாங்கிக்கிட்டு சேர்ந்துதான் வாழனும்’ என்பது அப்பத்தாக்களின் அறிவுரை மட்டுமல்ல… அரசாங்கத்தின் அருளாசியும் இதுதான். ஈஷா தியான மையம், வாழும் கலை… எல்லாம் இந்த கும்பல்தான். நோய் நிவாரணிக்குப் பதில் வலி நிவாரணியும், மயக்க மருந்துமே இவர்களின் பரிந்துரை.
இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா யார்? அவர் சாதாரண மனிதன். அதனால்தான் இப்போது செத்தும்விட்டார். இத்தனை நாட்கள் தன்னை தெய்வம் என சொல்லிக்கொண்ட சாய்பாபா, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உலகம் முழுக்க பக்தர்களை வளர்த்துக்கொண்டு, பல லட்சம் கோடி ருபாய் சொத்துக்களையும் சேர்த்துவிட்டார். அந்த வித்தைகளின் செய்முறை விளக்கம், Working stills வரை வெளியான பின்னும் அவரும் கைவிடவில்லை, மக்களும் அவரை கைவிடவில்லை. இந்த மோசடிகளைப் பேசினால், ‘அவர் தனி மனிதனாக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கு பல லட்சம் பேர் மருத்துவ வசதி பெருகின்றனர். கல்வி வசதி பெருகின்றனர்’ என பேச்சை மடை மாற்றுகின்றனர்.
இவ்வளவுப் பேருக்கு இலவசமாக அனைத்தையும் செய்வதற்கு உண்டான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? மாய மந்திரத்தில் கொண்டு வந்தாரா? ரிசர்வ் பேங்க் ஆபீஸர் வந்து ஒவ்வொரு நோட்டிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரா? ‘எல்லாம் பக்தர்கள் கொடுத்தது’ என்பார்கள். ’பக்தர்கள் ஏன் கொடுத்தார்கள்?’ என்றால், ‘இது என்ன கேள்வி? அவர் பகவான், இவங்க பக்தர்கள். குடுக்குறாங்க’ என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆக, தான் இறைவன் அல்லது தெய்வீக சக்தி படைத்தவன் என சாய்பாபா தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட இமேஜ்தான் இத்தனைக்குமான அடிப்படை. அந்த அடிப்படையே பொய்களாலும், மோசடிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதுதான் பிரச்னையின் மையம்.
உங்கள் மகனோ, தம்பியோ, தங்கையோ தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அலுவலகப் பணம் 10 லட்சத்தைத் திருடிவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். திருடியப் பணத்தில் நான்கு அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். இப்போது ‘ஏன் திருடினாய்?’ என கேட்டால் ’அதான் அனாதைப் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்ல’ என பதில் சொன்னால் அது யோக்கியமானதா? ‘ஏதோ தெரியாத்தனமாகத் திருடிவிட்டான். அதை உணர்ந்து பிராயச்சித்தமாக அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்’ என்று சொன்னால் கூட அந்த தர்க்கம் புரிந்துகொள்ளக் கூடியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறைந்தப்பட்ச நேர்மையேனும் அதில் உண்டு. ஆனால் பாபாவின் பக்தர்களோ திருட்டையே ஒரு தெய்வீகத்தன்மையாகப் பார்க்கின்றனர்.
சாய்பாபா சம்பாதித்தது = திருட்டுப் பணம் என்ற இந்த ஒப்பீட்டில் பொருந்தாப் புள்ளி ஒன்று உண்டு. ஓர் எல்லைக்குப் பிறகு சாய்பாபா தானாக சென்று யாரிடமும் திருடவில்லை. பக்தர்கள் தானாக வந்து கொட்டிய பணம் அது. ’பக்தர்கள் மனமுவந்து கொடுத்ததை அவர் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டார். அது தப்பா?’ என்று கேட்கிறார்கள். வேறு சிலரோ, ’அவர் பணம் சம்பாதிப்பதும், அதற்கு கையாளும் வழிமுறைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறுதியில் அந்த பணம் முழுவதையும் சமூகத்துக்குத் தொண்டு செய்யத்தானே பயன்படுத்துகிறார்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?’ என கேட்கிறார்கள். அதாவது குடியிருக்குறது குடிசையா இருந்தாலும் போய் சேர்ற இடம் கோயிலா இருக்கனும். காரணம் முக்கியம் இல்லை, விளைவுகளே முக்கியம் என்கிறார்கள். ஆனால் காரணமின்றி செயல் இல்லை. சாய்பாபாவின் மாய மந்திரத்தையும், அவர் நடத்தும் இலவச மருத்துவமனையையும் ஒன்றுடன் ஒன்று பிரித்துப் பார்க்க முடியாது. மந்திரம்தான் மருத்துவமனையின் அஸ்திவாரம்.
இன்று சாயிபாபாவின் பிராண்ட் அம்பாசிடர்களாக இருக்கும் அப்துல் கலாம் முதல் மானா மூனா சிங் வரை, சச்சின் டெண்டுல்கர் முதல் மு.கருணாநிதி வரை சகலரும் பாபாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தனி விமானத்தில் புட்டபர்த்தி விரைகிறார் ஸ்டாலின். இவர்கள் எப்போதேனும் மக்கள் பிரச்னைக்காக இத்தனை விரைவாக செயல்பட்டதுண்டா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் தவிட்டுத் தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வட மாநிலத் தொழிலாளர்கள் இறந்துபோனார்கள். ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேலாக கேட்பாரின்றி கிடந்த அந்தப் பிணங்களை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏனெனில் அவை வி.ஐ.பி.களின் பிணங்கள் அல்ல.
அதிகாரத்துடன் ஒத்துப்போவது, அதிகாரத்துக்கு ஒத்து ஊதுவது, எது பொதுப்புத்தியோ, எது பெரும்பான்மை கருத்தோ, எதற்கு சந்தையில் மவுசு இருக்கிறதோ, எது விலைபோகிற பண்டமோ… அதன் பக்கம் நின்றுகொள்வது்… இதுதான் இந்த சந்தைப் பொருளாதாரம் மக்களிடம் கொண்டு வந்திருக்கும் மனநிலை. இதில் நியாயம், நீதி, அறம் என்பவை எல்லாம் பொருளற்ற வெறும் சொற்கள் மட்டுமே. சுருங்கச் சொன்னால் டிரெண்ட்டுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும். அவன்தான் சாமர்த்தியசாலி. இப்படி சுயநலமாகவும், ஒட்டுண்ணியாகவும், பச்சோந்தித்தனமாகவும் இருப்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு தகுதியாகவே கணக்கிடுகின்றன. இதை ஊடகங்கள் தெரிந்தே செய்கின்றன.
சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது மனைவியை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்த கதைதான். இதனால் அவரது வியாபாரத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஊடகங்களில் ஊருக்கு உபதேசித்து அறுவடை செய்த இமேஜை அடியுரமாகப் போட்டு இப்போது ஊர், ஊருக்கு ஈஷா யோகா மையம் நடத்திக்கொண்டிருக்கிறார் சத்குரு. இதேபோல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீதும், நித்தியானந்தா மீதும் ஏராளமான சர்ச்சைகள் உண்டு. ஆனாலும் ஊடகங்கள் இவர்களை ஐகான்களாக முன்னிருத்துகின்றன. இதன் மறுகோணம், இவர்கள்தான் இந்தியாவின் இந்துத்துவ சாரத்தை தக்க வைத்துக்கொள்கிற குவி மையங்கள். ’ஏன் டி.ஜி.எஸ்.தினகரன் செய்யவில்லையா?’ என்றால், ஆம் அதுவும் இதற்கு இணையான அயோக்கியத்தனம்தான். ஆனால் எந்த மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையும் டி.ஜி.எஸ்.தினகரனை வைத்து தொடர் எழுதுவது இல்லை என்பதை நாம் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
சாய்பாபாவைப் பொருத்தவரை கடைசியில் எல்லோரும் வந்து முட்டி நிற்கும் இடம் மனிதநேயம். ’இதையாவது செய்யிறாருல்ல.. மத்தவன் யாரும் செய்யலல்ல’ என்ற புள்ளியில் வந்து நிற்பார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனிதநேயம் என எதுவும் இங்கு இல்லை. தமிழ் மக்களின் உள்ளன்போடு கூடிய மனிதநேயத்தை சுனாமி சமயத்தில் நாம் எல்லோருமேப் பார்த்தோம். சுனாமியில் இறந்துபோனவர்களுக்கு வீடும், வாழ்வாதார வசதிகளும் செய்து தருவதாகக் கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி உதவி வாங்கின பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இன்றுவரை அதில் பாதிப் பணம் கூட செலவிடப்படவில்லை. பல தன்னார்வ நிறுவனங்கள் மீது சுனாமி நிதி முறைகேடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இதை எப்படி மதிப்பிடுவீர்கள்? ‘என்.ஜி.ஓ. காரன் என்னவோ பண்ணிட்டுப் போறான். எங்கேயோ வெளிநாட்டுல பணம் வாங்கி யாரோ நாலு பேருக்காவது வீடு கட்டி தந்தானா, இல்லையா?’ என இதை நியாயப்படுத்துவது சரியானதா? சாய்பாபாவின் ‘எப்படியோ நல்லது செய்தாருல்ல’ லாஜிக்கும் இப்படித்தான். அவை, ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்தவன் தன் ஏமாளி பக்தர்களுக்கு வீசி ஏறியும் பிஸ்கட் துண்டுகள். அதற்குள் நல்லனவற்றைத் தேடுவது என்பது, பெரியாரின் மொழியில் சொல்வதானால், ‘மலத்துக்குள் அரிசி பொறுக்கும் வேலை!’
இது யாவற்றையும் கடந்து பிறந்தால் இறந்துதானே ஆக வேண்டும்? இதை எழுதிய நான் தொடங்கி வாசிக்கும் நீங்கள் வரை ஒருநாள் சாகத்தான் போகிறோம். அதுபோல் இப்போது சாய்பாபாவும் இறந்திருக்கிறார். வடிவேலு வசனத்தைதான் நானும் சொல்கிறேன், ‘சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?’!
_________________________________________________
வினவு பின்குறிப்பு:
சாயிபாபா ட்ரஸ்ட்டின் மொத்த சொத்து 40.000 கோடி ரூபாயிலிருந்து 1,45,000 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதில் கூட சரியான கணக்கை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. போகட்டும். நாம் குத்து மதிப்பாக ஒரு இலட்சம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். இதில் சாயிபாபா செலவழித்தது எவ்வளவு? தண்ணி டேங்க் கட்ட 100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு கொஞ்சம் கருணை உள்ளத்தோடு கணக்குபோட்டாலும் மொத்தம் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை. எனில் மிச்சம் 99, 000 கோடி எங்கே யாரிடம் இருக்கிறது?
அது பிரச்சினையே இல்லை. தற்போது சாய்பாபா ட்ரஸ்ட்டை நிர்வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஆதினத்தை கைப்பற்றும் போட்டி ஆரம்பித்து விட்டது. சூடு பிடிக்கும் போது இந்த ஆன்மீகக் கொள்ளையர்களின் கொள்ளையை புரிந்து கொள்ளலாம்.
அடுத்து சாய்பாபவின் பக்தராக இருப்பவருக்கு எதாவது தகுதி வைத்திருக்கிறார்களா? இல்லை. நன்கொடை கொடுக்கப்படும் பணத்தின் ரிஷிமூலத்தை ஆய்வு செய்து தணிக்கை செய்திருக்கிறார்களா? அதுவும் இல்லை.
அதாவது தொழிலில் மோசடி செய்து அபகரிக்கப்படும் பணம், கருப்புப்பணம், இலஞ்சம் பணம், ஊழல் பணம், இன்னபிற கொள்ளைப் பணங்களும், அதன் உரிமையாளர்களான ஃபிராடு பேர்வழிகளும் தாராளமாக சாயிபாபாவை சந்தித்தார்கள். நன்கொடையும் கொடுத்தார்கள். சாயிபாபாவும் அவர்களை பரந்த உள்ளத்தோடு ஏற்று, ஒரு இலட்சம் கோடியில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையும் கட்டிக் கொண்டார். இடையில் செக்ஸ் மோசடி, கொலை என்று எல்லா மர்மங்களும் கொண்ட திரில்லரில் மறைந்து விட்டு இன்று ஒரே அடியாக போய்ச் சேர்ந்தார். ஆக இந்த வள்ளலின் பின்னணி இதுதான் என்று தெரிந்தால் கைகூப்பி தொழுவீர்களா, காறித் துப்புவீர்களா?
தொடர்புடைய பதிவுகள்:
- சாய்பாபா மரணம்: பக்தர்களுக்கு விடுதலை இல்லை! – டாக்டர் ருத்ரன்
- யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?
- ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !
- கட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள் – டாக்டர் ருத்ரன் !
- ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!
- தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!
- சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
- அடங்கமாட்டியா நித்தியானந்தா?
- சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா தோழர் மருதையன் !
- செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்? – தோழர் மருதையன்
- கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் ! – தோழர் மருதையன்
ஆசிரம சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்!
நான் காறித்துப்புவேன்
Hi
I follow sai baba, i never heard any wrong news how sai earned money. Person who wrote this article is not aware of sai baba or other saints. (wrote this articles)He doesn’t know what is compassion. How can he express it? They are not sold by any scientists or teachers. Only a guru/saint can show a route map to god.
I have attended class of sri sri,nithyananda, jaggi. They have transformed my life to a large extent. Not only me, many are transformed.
God has given you good writing skills. Please use it to write valid news.
Thanks
Balu
I am not Sure why you need this many Gurus? Why they want money that too this much?
to Balu I dedicate this article,
https://www.vinavu.com/2011/04/24/saibaba-dies/
I found that my thoughts are too much which is a barrier for my life. I consulted allopathy doctors, no help. Then i attended courses from the these gurus. My life changed. My mental freq came down. I understood that all(vivekanda,ramkris,ramanar,vallalar,….) saints say one thing in common. GOD IS IN YOU in the form of uyir. goal of life is to realize self. The barrier is our mind/ego and karma. My ego and mind are so strong to stop progress in life. To break out this in this life i understood that i need to meet many saints. I don’t simply dont goto a saint. I read their books and hear speech. If i like i’ll go otherwise NO.
All the places i went brought huge changes. I feel more compassionate on people.
Money is needed for service. If govt functions properly they would have concentrated only in devotion. Don’t see only negative news about baba.
See what he has done to society, we have to learn from it. Other than saints
no one can this kind of free service. All money are donated by his followers.
There are many problems in Tamil nadu.
1. No proper rain, we beg for water from other states
2. No govt hospitals are functioning properly
3. Many People are behind TASMAC.
4. We became slave for cinema/TV.
5. We dont have proper TV channel to bring valid news.
6. Political system is totally unethical
7. We don’t have awareness about our own body mind health.
8. Education/hospital became business.
What we have done to overcome this. Can you as single person can do this?
We cant do this even if we have 1 lak crore. Because we don’t have compassion.
We have to learn compassion from all our saints. Unless compassion we cant do any kind of SERVICE to society.
to start off, I am not a communist. I am agnostic.
I cannot understand where all your discussion leads to. Do you say an insitution like what Baba was handling is an alternate for a democratic governance system ?
How does one justify the huge amount of money these institutions have garnered. As rightly pointed out by this article, all/most of this have come as contributions.
Mind/Body health, Corrupt political system, ineffective governance are all different issues and should be handled from a different perspective. With the compassion that he(BABA) supposedly had, the gap in the wealth that has been accumulated and that was spent on these development activities is still baffling.
Normal man focus is on money. Saints focus will be on welfare of others. They are not bound/attached to money.
They realized that god is omnipresent. People who realized god can server better than normal human. They consider all as same.
BABA’s institution is developed for welfare of human. So rich people who are benefited(cure diseases/solve problems)by baba will donate money. We pay income tax but its eaten by our great politicians most of the time. But here it will reach people suffer.
So people trust BABA and donated money. They get money from rich give to poor. They don’t eat money. They are mode of transfer.
I can list out some good work from baba
1.University (so many colleges)
2.Super specialty hosptials in bglre/puttaparuthi
3.4200kms of drinking water pipeline
4.Water project for chennai and tribal area in AP
…
He might have many projects in mind. To do that he needs MONEY.
These money are donated from rich.
These kind of Institutions are better replacement for GOVT offices.
People who are actually suffering will get benefit.
My good sir,
You have listed 4 projects. These are the only major works he did in about 50 years of rolling in filthy-fuckin-loads-of cash. The fact that you are running to all the famous saints in the city speaks volumes about you. You dint have an ego problem, you had to trust yourself and your individuality better and open your mind eyes to the world around you. If these guys truly had the solution you need not have run around from one person to other.
Money is needed for service. //
இதுதான் நாம் ஏமாறுவது.. சினிமாவும் அதையே சொல்லும்.. ரவுடி கொள்ளையடித்து ஏழைகளுக்கு தருவான்.. அவன் ஹீரோ..
சக மனிதரிடம் அன்பு செலுத்த , அரவணைப்பு கொடுக்க ஊக்கம் தர பணம் எதற்கு?..
அது அரசின் கடமை.. தனிமனிதனை கடவுளாக்கி பணத்தை கொட்டும் வித்தையல்ல..
அன்னை தெரசா தெருவிலுள்ள தொழுநோயாளிகளை கடவுளாக பார்த்தார்.. பல்லக்கில் போகவில்லை.. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண சொன்னார்.. வாயிலிருந்து சிலுவை வரவழைக்கவில்லை..
மதுரை கிருஷ்ணன் தெருவிலுள்ள மனநோயாளிக்கு உணவூட்டுகிறார்.
திருச்சி செந்தில் ஒரு கிராமத்தையே தத்தெடுத்துள்ளார், அமெரிக்காவிலிருந்து வந்து..
இப்படி நாம் நம்மை சுற்றியுள்ளவருக்கு செய்தாலே போதும்.. மன அமைதி மகிழ்ச்சி கேரண்டி..
( உடனே அல்லேலூயா கோஷ்டின்னு ஒரு அனானி அண்ணாச்சி வருவாகளே..:) )
நான் ஆத்திகனுமில்லை, நாத்திகனுமில்லை..
Each one is unique in servicing others. We don’t need another Teresa. There are so many of them already. Baba has done many good things which may not have done by the government or any other philanthropist.
For our welfare of life it’s better to learn good from others. There is no use in talking bad about someone.
I think magicians have good future as religious hypocrites..
Let us start to educate our kids in Magic like the evil eye, black magic, demonic possessions and to serve people with those tricks..
All problems may be solved with these kinds of social ills , but with the support of Businessmen, the ruling classes and the innocent poor..Right?..
Can you name a magician who solved the problems of common people?
These are to attract people to teach about god.
Currently we have become slave to culture of western nation.
People like pizza, pub …
There is no tolerance, so many divorces, murder… if people get issues in life they don’t know what to do. It leads to suicide and all..
only change within can change people. Even if we get whole world its impossible to bring the change. These changes can only brought by saints. who has realized god with in.
People need not go and fall in the feet of saint. They are not expecting it. They want people to get rid of worldly sufferings.
Please google the benefits of following.
1. Sudarsankriya
2. Nithya dyan
3. Inner engineering.
…
After that read about vallalar. Read this book.
http://www.vallalyaar.com/?p=409
These people are not normal magicians. They deterministic about
welfare of the normal/unaware people.
PLEASE DONT COMPARE WITH MAGICIANS 🙁
Thanks
Yes Vinavu… Please don’t compare these babas with magicians.
Magicians accept that they have no special power. They only do it as an art just to make their living. Their aim is to entertain people with tricks and get reasonable money for that.
But these babas cheat people saying that they truly have power. They cheat people not just to satisfy their money needs. They build corrupt empires with public money. They throw a very small percent back to public and make them believe that they are good.
This baba compared himself with Jesus, Buddha, Muhammad etc. Please tell me whom of the above lived a luxurious life like this Baba? Who was accused of homo-sexual charges like this baba?
Mr.Sai earned 1460Billion rupees and spent to public just 1 billion rupees. Great Social Service man.
on mother teresa, we definitely dont need more of her.
http://www.slate.com/id/2090083/
only GOvt needs money why do god need money ?………….
instead of providing moeny to fraud like him you can directly serve people or provide your money to some valid oaphanage who are providing true service
instead of going to doctor for your mental health please go to some orphanage and try to provide lunch to them then see your mind will be free you don’t need some broker’s for your service
he is in service for more than 25 years
what are his services
he is stealing money from publicin name of GOD
there are some other words i need to say about him if you wanna hear it
my mail ID (kalaihi4u@yahoo.co.in)
and (ranjithtjth@yahoo.co.in)
I will be available to you untill you are cure from this disease (sai baba)
hi the above comment to Balu
Balu have u ever stayed with Nithy in night…have u ever seen what nithy does after closing the eyes during meditation session…he has molested my close friend.. come out of loop.. god bless u..
Dear Balu
God is Love,God is Mother,Truth is God.All spiritual Guru’s are with sophisticated atmosphere.You must understand onething, Mother is our only
connecing soul to all divine power.Artificial preaching is not required for the
Gen-Next.We will work for our country,love family.Dont be in search of fake Guru.
Mother is our first Guru.Please accept Karma.Do not find salvation thru magical happennings.
அரசியல்வாதிகளிடம் எப்போதாவதேனும் சொத்துக் கணக்குக் கேட்கப்படுகிறது.
வணிக நிறுவனங்களும் சட்டப்படி கணக்குக் காட்ட வேண்டும்.
மத நிறுவனங்கட்கும் ஆன்மிகவாதப் பிழைப்புக்கும் மட்டும் ஏன் விலக்களிக்க வேண்டும்?
ஓட்டுக் கட்சிகள் ஏன் இதைப் பற்றி எதுவுமே செய்ய மாட்டார்கள்?
அவங்க கறுப்பு பணம் தானே சாமியார்களிடம் இருக்கு
நடு மண்டையில நச்சுன்னு அடிச்சு புரிய வெச்சீங்க .
ரவுடியா இருந்தாலும் நாலு பேருக்கு நல்லது செய்யுற சினிமா ஹீரோக்களை காட்டியே ஊட்டி வளர்க்கப்பட்ட மக்களல்லவா நாம்..?.
சாய் பாபா – ஒரு மாறுபட்ட அனுபவம்
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html
அருள்,
தலைப்பினை தந்திரமாய் தப்பாய் வைத்திருக்கிறீர்கள்! சரியான தலைப்பு
சாயிபாபா: ஒரு பக்தனின் புலம்பல்! என்று இருந்திருக்க வேண்டும்!
அப்படியே , பங்காரு அடிகளார் பற்றி ஒரு பா.ம.க பக்தனின் பாராட்டு பீனிக்ஸ் பறவையாய் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள்! என்ற இடுகைகளை எப்போது போடுவீர்கள்?
சாய் பாபா உயிர்த்தெழுந்தார் – மருதன்
http://marudhang.blogspot.com/2011/04/blog-post_24.html
சாயிபாபா இறந்துவிட்டார். அவரின் பக்தர்கள் கலங்குகிறார்கள். கண்ணீர்விடுகிறார்கள். அதை விட பத்திரிகைகளும், சானல்களும் கலங்குகிறார்கள். கண்ணீர்விடுகிறார்கள்.
சாயிபாபாவை போற்றுகிற பஜனைப் பாடல்கள் பிரபலமானவை. அதைப்போலவே சாயிபாவை அம்பலப்படுத்துகிற இந்த பாடலும் மிகப்பிரபலமானது.
புரட்சிகர அமைப்பான மக்கள் கலை மன்றம் அமைப்பால் எழுதப்பட்ட பாடல். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் வேளையில், மேடையில் மக்கள் கலைஞன் கத்தார் இந்த பாடலை பாடும் பொழுது, மக்களும் சேர்ந்து பாடுவார்கள்.
காலையில் தொலைபேசி செய்து ஒரு தோழரிடம் கேட்டேன். அவர் சில வரிகளை நினைவுப்படுத்த, என் நினைவுகளில் இருந்து சில வரிகளை சேர்க்க பாடல் தயார். இந்த பாடல் இன்னும் இது போல பல சரணங்களை கொண்டது.
சாயிபாபா பக்தர்களுக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்..
****
சாயிபாபா! சத்ய சாயிபாபா!
உன் சங்கதியெல்லாம்
தெரிஞ்சு போச்சு சாயிபாபா!
(சாயிபாபா)
யுத்தம் ஒண்ணு வரப்போகுதாம் சாயிபாபா!
பயமாத்தான் இருக்குதே சாயிபாபா!
வண்டி வண்டியா திருநீறு தர்றோம் சாயிபாபா! – எல்லையில
ஊதிக்குன்னு உட்கார்ந்திரு சாயிபாபா!
(சாயிபாபா)
மந்திரமெல்லாம் போட்டு சாயிபாபா!
லிங்கமெல்லாம் கக்குகிறேயே சாயிபாபா!
எங்களுக்கு அதெல்லாம் வேணாம சாயிபாபா!
பெரிய பூசணிக்காய் கக்கி கொடு சாயிபாபா!
(சாயிபாபா)
ஒரு நாள் காரில் போனே சாயிபாபா!
பெட்ரோல் தீர்ந்து போச்சு சாயிபாபா!
மந்திரத்தில பெட்ரோல் வரவச்சயே சாயிபாபா!
பெட்ரோல் விலை கூடிப்போச்சு சாயிபாபா! – உன்னை
பெட்ரோல் பங்குல உட்கார வைக்கப்போறோம் சாயிபாபா!
(சாயிபாபா)
வயசான பாட்டி வந்தா சாயிபாபா
முகத்தை திருப்பிக்கிற சாயிபாபா!
குமரிப்பெண்ணு வந்தா சாயிபாபா
ஓரக்கண்ணால் பார்க்கிறியே சாயிபாபா!
(சாயிபாபா)
http://socratesjr2007.blogspot.com/2011/04/blog-post_25.html
காறித்துப்புவேன்!
http://www.youtube.com/watch?v=DF9Q8GocgHo&feature=related
kanna ithu chumma trailer thaan main picture innum pakkalaye.pakkathe paaththe nonthuduve
// அவை, ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்தவன் தன் ஏமாளி பக்தர்களுக்கு வீசி ஏறியும் பிஸ்கட் துண்டுகள். //
இந்த ஒரு வரி – ஒட்டுமொத்த இடுகையின் சாரத்தை நச்சென்று புரிய வைத்தது…
One should learn how to do service.. This discussion will not solve the problems of normal human.
Though there are many incidents which may not be able to understood by normal person
we should consider him for his selfless services.
Those who dont know about BABAs projects please follow this link
http://www.ndtv.com/video/player/news/rare-footage-of-sai-baba-s-early-years/197577
Have you seen an interesting documentary released 20 years or so ago titled “God Men of India”
Some of the cheap tricks played by Sai Baba were thoroughly exposed in it by video camera. (There are several more before and after that which have exposed his ‘miracles’).
The point is that a devotee in high place prevented the documentary from being shown on Doordharshan, (That was no miracle, of course). The deal was that the ‘Bhaghvan’ will not perform his ‘miracles’ in public after that.
.
This ‘supernatural’ creature who predicted his own death at the age of 96, could not foresee his demise –ten years sooner than predicted– even days before nature got the better of his ‘supernatural’ powers.
.
No right thinking person with some knowledge of the laws of nature will believe that matter can be produced out of nothing and that except for radioactive substances, atomic matter is not mutable. I doubt if Sai Baba was ‘radioactive’.
What he perpetrated was fraud.
.
Sadly India has the most stupidly superstitious collection of people in the world.
“தேனை எடுத்தவன் புரங்கையை நக்காமல் இருக்க மாட்டான்” இதுவும் ஊழல் குரித்த பொது அரிவு.
திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
அவன் இவன் என்ரு புரம் சொல்வதை தவிர்த்து மனசாட்ஷிக்கு பயந்து செயலை செய்தாலே…
மாட்டுச்சாணத்திலிருந்து தயாரிக்கும் விபூதியை ஏழை பக்தர்களுக்கும், தங்கச்சங்கிலியை பணக்காரர்களுக்கும் மந்திரத்தால் வரவழைத்துக்கொடுத்தாரே…..என்ன பயன்…?வறுமையினால் நாடு முழுதும் எத்தனையோ ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களே.. அவர்களுக்கு உணவை மந்திரத்தால் உண்டாக்கிக்கொடுக்காவிட்டாலும் அளவான மழையை வரவழைத்துக்கொடுத்திருந்தாலாவது கடவுளென்று ஏற்றுக்கொண்டிருக்கலாம்…
இந்த வரிகளுக்கே கோடி கொடுக்கலாம்.. பாபு போன்றவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.. ஏழைகளுக்கு உதவ வருகிறார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்.. ஏழைகள் உருவாகக் காரணமே இவர்கள் தானே..
எத்தனை கறுப்புப் பணம் இவர்களிடம் பதுங்கிக் கிடக்கிறது.. அவை எல்லாம் உருப்படியாக வெளியே வந்தாலே போதும்.. இவர்கள் ஒன்னும் கிழிக்கத் தேவை இல்லை.. ஏழை என்ற வர்க்கம் இருக்கும்வரை தான் இவர்கள் பிழைப்புத் தனம் பண்ண முடியும் நண்பர்களே..
Please see this also..
how-sathya-sai-baba-transformed-puttaparthi
http://www.ndtv.com/video/player/news/how-sathya-sai-baba-transformed-puttaparthi/197510
puttaparthi-a-global-village
http://www.ndtv.com/video/player/news/puttaparthi-a-global-village/197585
sathya-sai-baba-the-saint-who-built-puttaparthi
http://www.ndtv.com/video/player/news/sathya-sai-baba-the-saint-who-built-puttaparthi/197588
சாய்பாபவை அம்பலப்படுத்தி எழுதிய வினவுக்கு நன்றிகள்.
சாய்பாபாவைப்பற்றிய பி.பி.சி யின் டாக்குமெண்டிரி படம் தமிழில் கீழே:
1)http://www.dailymotion.com/swf/x4y3iy
2)http://www.dailymotion.com/swf/x4y4n1
3) http://www.dailymotion.com/swf/x4y5vb
கருப்பு பணம் அனைத்தும் இங்குதான் வெள்ளையாகிறதாம்!
தவறுகளை மறைக்க சில நல்ல விசயங்களை செய்ய வேண்டியதாய் இருக்கிறது. என்ன செய்ய?
எனக்கு ஒன்று புரியவில்லை, கடவுளாக இருபவர்க்கு எதற்கு பணம் வேண்டும், ஒரு சொடக்கில் அனைத்தையும் மாற்றிவிடலாமே???? (வாயில் இருந்து தங்கம் எடுப்பவர், ஒருவேளை அவர் வாய் தங்க சுரங்கமோ!!!!!) இது தன்னை கடவுளாக காட்டிக்கொள்ளும் அனைவருக்கும் பொருந்தும்.
பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றபோது அவருக்கு கிடைத்த பணத்தை நூலகங்களுக்கும், ஏழை மாணவர்களின் கல்விக்கும் தானமாக கொடுத்துள்ளார். நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் எது சிறந்தது என்று!!
நான் பாபாவின் பக்தை இல்லை. ஒரு சாலையோர மரத்தில் மஞ்சள் பூசப்பட்டிருந்தாலும் கன்னத்தில் போட்டுக் கொண்டு போகுமளவு பொதுவான கடவுள் பக்தி உண்டு. குறிப்பிட்டு சொல்லும்படி எந்த தனி நபரிடமும் பக்தி இல்லை. ஆனாலும் பாபாவை எதிர்த்து செய்யப் படும் பகுத்தறிவு பாடம் பற்றி சில கேள்விகள் உள்ளன.
பால் தினகரன் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் இல்லை, அதனால் கடும் விமர்சனம் தேவையில்லை என்கிறீர்கள், சரி. அன்னை தெரஸாவையும் சாய்பாபாவை விமர்சிக்கப் பயன்படுத்தும் அதே அளவுகோலில் மதிப்பிடுவீர்களா?
அன்னை தெரஸா மாயவித்தை காட்டவில்லை என்ற ஒரு விஷயம் தவிர – தெரஸா, பாபா இருவருக்கும் என்ன வித்தியாசம்?
அன்னை தெரஸாவுக்கு சக்தி வாய்ந்த மத நிறுவனம் பின்புலமாக இருந்ததால அவருக்கு மாயாஜாலம் தேவைப்படவில்லை. பாபாவுக்கு தன்னை நிறுவிக் கொள்ள அது தேவைப்பட்டது.
அன்னை தெரஸாவின் சேவைகள் பற்றியும் இது போலவே விமர்சனம் செய்வீர்களா?
அன்னை தெரஸாவுக்கு வந்த நன்கொடைகள் மீதும் நாம் இதே போன்ற விமர்சனம் வைப்பது தானே நியாயமாக இருக்க முடியும்?
உங்களிடம் வாதம் புரிவதற்காக இதைக் கேட்கவில்லை. எந்த விதத்தில் அன்னை தெரஸா பாபாவை விட மேம்பட்டவர் ஆகிறார் என்று தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம்.
1. பாபாவின் மீதான செக்ஸ், கொலை போன்ற குற்றச்சாட்டுகள் அன்னை தெரஸாவிடம் இல்லை.
2. அன்னை தெரஸா அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இல்லை, அந்த நிறுவனத்தில் ஒரு ஊழியர் மட்டுமே. பாபா தான் தோற்றுவித்த நிறுவனத்தின் முதலாளி.
அன்னை தெரஸாவை விமர்சிக்காமல் புகழ, நான் மேலே குறிப்பிட்ட 2 காரணங்கள் போதுமா?
வாழ்வின் எல்லா பலகீனங்களுக்கும் ஆட்பட்ட கண்ணதாசன் போன்றவர்கள் “அர்த்தமுள்ள இந்து மதம்” என்று புத்தகம் எழுதுகிறார்கள். அன்னை தெரஸா போல ஒரு ஆர்த்தடாக்ஸ் மத நிறுவனத்தில் இருந்து கொண்டு, அகோபிலம் தத்தாச்ச்சாரியார் போன்ற பார்ப்பனர் “இந்து மதம் எங்கே போகிறது” என்று வார இதழ்களில் எழுதுகிறார்.
அன்னை தெரஸாவுக்கு அந்திமக் காலத்தில் எழுந்த கடவுள் மீதான அவநம்பிக்கையை பற்றி ஏன் பொது வெளியில் பகிரங்கமாக பேச முடியவில்லை? தன் நண்பருக்கு ரகசியக் கடிதம் தான் எழுதினார். ஏன்?
கோதை,
இந்தக் கட்டுரையை https://www.vinavu.com/2008/12/29/mteresa/ யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா ! படித்து பார்த்து விட்டு நீங்கள் எழுதிய விமரிசனத்திற்கும் கேள்விகளுக்கும் நீங்களே பதிலளிக்க இயலும். நன்றி
நன்றி. நான் உங்கள் பழைய கட்டுரையை படித்ததில்லை. இப்ப தான் படித்தேன். என் கேள்விகளுக்கு முழுமையான பதில் கிடைத்தது. மீண்டும் ஒரு முறை நன்றி.
ஒரு நாத்திகர் (எந்த மதம் சார்ந்தவராய் இருந்திருந்து பின் நாத்திகராக ஆகியிருந்தாலும்) அன்னை தெரஸா பற்றி உங்கள் கட்டுரை போலவே கருத்து கொண்டிருக்க வேண்டும். அதுவே நேர்மையான பார்வையாக இருக்க முடியும்.
1. பாபாவின் மீதான செக்ஸ், கொலை போன்ற குற்றச்சாட்டுகள் அன்னை தெரஸாவிடம் இல்லை.
2. அன்னை தெரஸா அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இல்லை, அந்த நிறுவனத்தில் ஒரு ஊழியர் மட்டுமே. பாபா தான் தோற்றுவித்த நிறுவனத்தின் முதலாளி.//
நன்று..
மந்திர, தந்திரம் செய்யவில்லை..
பல்லக்கில் அமர்ந்து ஊர்வலம் வரவில்லை..
முக்கியமா ஏழை எளியவரோடான எளிமை..
இவரல்லவோ வழிகாட்டி..
முடிஞ்சா வாழ்வில் வாழ்ந்து காட்டுங்கள் யாராவது அன்னை தெரசா மாதிரி..( என்னால முடியாது )
சாய்பாபா, நித்தி , போல வாழலாம் யாரும்.. ( நம்மால் முடியும் , கொஞ்சம் மேஜிக்+ வேதம் )
சென்னையிலுள்ள முதியோருக்கான மிஷனரீஸ் சேவையை நேரில் பார்த்துவிட்டு எனக்கும் சொல்லுங்களேன்.. அங்கு மருந்து கொடுக்கிறார்களா, கவனிக்கிறார்களா என…
கண்டிப்பா பணம் வேணும்தான் எந்த சேவைக்குமே..
ஆனால் அது மக்களை மந்திரத்தால் பயம்காட்டி எடுக்கப்பட்ட பணமாக இருக்க கூடாது..
ஒருவேளை ஒருவனிடம் ஒரு குரு , எனக்கு மந்திர சக்தி இருக்கு , உன் வாழ்வை உயரவோ, தாழவோ செய்ய முடியும் என்றால் சாதாரண மனிதனுக்கு பயம் , பேராசை வரத்தான் செய்யும்..அவன் பணத்தை காலடியில் கொட்டத்தான் செய்வான்..
ஆனால் அன்னை தெரசா போன்ற மிஷனரீஸ்களுக்கு அளிக்கப்படும் பணம் இத்தகைய மந்திர வேத உத்திகளால் வருவதல்ல என நேரில் பார்த்தவர் அனைவருக்கும் புரியும்..தொழுநோயாளியை தொட்டு பேச நம்மில் எத்தனை பேர் துணிவோம்.. தெருவோரத்தில் கிடப்பவரை தூக்க?.. அதை பாபாக்கள், நித்திக்கள் செய்தனரா?.. கார்ப்பரேட் சாமிக்களும் சேவை புரிவோரையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிக்காதீர்கள்..
மற்றபடி திருச்சபையையோ, அதன் கட்டமைப்பை பற்றியோ சொல்லிக்கொள்ளலாம்.. ஆனால் மக்களோடு மக்களாக இறங்கி சேவை செய்பவருக்கும், தன் பண, மந்திர பலத்தால் சேவை செய்பவருக்கும் எட்ட முடியா தூரம் இருக்குன்னாவது புரிஞ்சுக்கணும்..
இருப்பினும் கட்டாயமில்லை.. ஏற்பது அவரவர் விருப்பமே..
பாபா, அன்னை தெரஸா என்ற இரு தனிநபர்களைப் பற்றிய கருத்து முக்கியமில்லை. மதத்தின் பெயரால் செய்யப்படும் சேவைகளை, அப்படிப்பட்ட சேவைகளால் பயன் அடைபவர்களைக் காட்டி, ஆதரிப்பது நாத்திக நிலைப்பாட்டிற்கு அசெளகர்யம். பிரசாந்தி நிலையம் மற்றும் மிஷனரிஸ் ஆப் சாரிடீஸ் இரண்டும் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கேந்திரங்களாகவே ஒரு நாத்திகரால் பார்க்கப்பட வேண்டும்.
இதில் மக்களின் அறியாமை, மூடநம்பிக்கை, பாபா போன்றவர்களின் ஏமாற்றும் திறன் என்று பேசுவதை விட கவனிக்க வேண்டிய விஷயம் – பாபாவின் பின்னால் ஒரு பெரும் கூட்டமே திரள்கிறது. பாபாவினால் மக்கள் பணத்தை திரட்ட முடிகிறது. அவர் பின்னால் திரண்ட மக்களையும் அந்த மக்களின் பணத்தையும் வைத்து பல நல்ல விஷயங்களை தரமாக செய்ய முடிகிறது.
அதே மக்களையும், அந்த மக்களின் பணத்தையும் வைத்து ஏன் நம் அரசாங்கங்களால் தரமான கல்வி, மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்க முடியவில்லை?
பாபா கால்வாய் வெட்டினார் என்றால் அந்த காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்தவர் கமிஷன் அடிக்காமல் நேர்மையாக கால்வாய் வெட்டும் வேலையை செய்தாரா? நேர்மையாக காண்ட்ராக்டர் வேலை செய்தார் என்றால், பாபாவிடம் வேலை செய்யும் போது மக்களிடம் இருக்கும் நேர்மை அரசாங்கத்துக்கு வேலை செய்யும் போது இல்லாமல் போகிறதா?
/// சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது மனைவியை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்த கதைதான். இதனால் அவரது வியாபாரத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஊடகங்களில் ஊருக்கு உபதேசித்து அறுவடை செய்த இமேஜை அடியுரமாகப் போட்டு இப்போது ஊர், ஊருக்கு ஈஷா யோகா மையம் நடத்திக்கொண்டிருக்கிறார் சத்குரு /// சத்குரு மீது கொலை வழக்கு இருப்பதாய் சொல்லுகிறீர்களே எங்கே எந்த காவல் நிலையத்தில் உள்ளது என்று சொல்லமுடியுமா? மேலும் ஈஷா யோகா மையம் ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது பத்திரிகைகளிலும், தொலைகாட்சி மூலமாகவும் அவரது செய்திகளை சொல்லி அவரது இமேஜை வளர்க்கவேண்டிய தேவை அவருக்கு இல்லை. அவரது கருத்துக்களில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அதை பதிவு செய்யுங்கள். அதை விட்டுவிட்டு தவறான செய்திகளை சொல்லாதீர்கள்.இணையத்தில் யாரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதும்போக்கு நிலவுகிறது.தயவு செய்து உண்மையை மட்டும் எழுதவும். உங்கள் விளக்கத்தை எதிர்பார்கிறேன் .
Please see this talk by சத்குரு ஜக்கி வாசுதேவ்.
——YOU———-
@குருத்து
சாயிபாபா பஜனைப் பாடல்,’செம செம’
மனது எவ்வளவு இறுக்கமா இருந்தாலும் இந்த பாடலை படிக்கும் போது கண்டிப்பாக சிரிப்பு வராமல் இருக்காது, மேலும் இது சிந்திக்கவும் வைக்கும், மேலும் போலி முகங்களை கிழிக்கும் சிந்தனையுள்ள பாடல்.
இந்த பாடலை தங்களின் அனுமதியுடன், என் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்
இலங்கை தமிழினத்தின் எதிரி,
ஈன இந்தியா தமிழினத்தின் துரோகி.
எதற்க்காக அன்று இந்தியாவுக்கு இங்கிலாந்திடம் விடுதலை வேதவைப்பட்டதோ இன்று அதே காரணத்திர்க்காக தமிநாட்டுக்கு இந்திய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை தேவைபடுகிறது.
எழுவோம் வெல்வோம்(இது ஆகாது, முடியாது என்று சொல்கின்ற கோழைகளான ஈன பிறவிகளை புறம் தள்ளுவோம்)
How much ever you go around with “Undiyal” you or your Puratchi TholargaL cannot collect or even impact a single human being. Here is a man who gave peace of mind to so many people and food, education and medical help to crores of people. He achieved what communists could not do. He is the True Communist. You can write what ever you want to write, faith is what drives people. Why communism died? Because people lost faith in it. Tholars… Come out of your blined one sided view
It’s easy to rise finger on anyone. We have no rights to damage the beliefs of the people who were benefited by him that too at this point of time. We should not encourage the people who criticize anything & everything. I think he has earned the respect of many through the good things what he has done for poor and needy. It’s better to keep quiet…… give respect to others freedom to worship and freedom of faith.
Many points are based on speculation. Check what these saints done for society.
Don’t blindly complain. Many people are benefited by it. Visit the places established by these saints. Your life will also change.
If you are struck with body mind then its very much required to visit them. Your life will change.
All people who dont like saints…
NEED NOT SEE THEM NOW. AT LEAST VISIT THEM IF YOU FACE A IRRECOVERABLE PROBLEMS IN LIFE. DON’T SPOIL YOUR BODY MIND BY KEEPING QUITE.. THIS LIFE IS PRECIOUS.
There are no “saints” anywhere.
There are only honest and dishonest people, good and bad people, and wise and unwise people.
The good but unwise fall for the tricks of ‘god men’ who arer cunning and dishonest people.
[…] […]
Lets assume no one in this world no one know taste of sugar.
Without eating sugar its not possible explain how sugar tastes.
If i taste sugar and say its SWEET.. People will say i’m saying nonsense.
This is the situation here. Blindly rejecting all good things..
We are slaves of
1. Cinema
2. TV
3. Pubs,drink,smokes
4. Sex
We don’t understand problems of society, if someone try to fix we blame them.
This happens for ages…
Who is going to save this world???? 🙁
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே – VALLALAR
ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, அவனவன் தான் விட்ட சுத்தி இருக்க குப்பய விட்டுட்டு உருல இருக்க குப்பைஐ தொன்டாதிங்கப்ப.
Not home,,, lots of dusts are there within expressed in five senses. One need to clean within then only he can clean around home… I don’t think materialistic science has solution for it…
@Balu, though i dont trust baba and nithi, i think you are at the wrong place dude. u think baba nithi ravisankar atc are equivalent to ramanar, vallalar, jaggi and thats a huge mistake.
@ vinavu= you are a damn fool who always celebrate stalin, lenin and others but not gandhi theresa etc. you want to see every citizen of this country holding a gun in hand. vinavu writes articles that brainwash readers mind. if u dont believe in non violence get the hell out of this country and go to russia ukraine china cuba and whichevr place that has red govt and keep smoking cigar and speak abt marxism leninism etc.
@murugusamy = sir, these people write things that are not true. vinavu is always concerned about defaming jaggi vasudev and baba ramdev. it also calls them hindutuva fanatics and add them to list of ‘nithi mama’ and ‘baba thaatha’. these ppl do not know any thing apart from ”the opressed people”, ”red revolution”, ”kakkoos kaluvuravan’, ‘paarpanan’, ‘soothiran”, ‘puratchi”,etc. (Eppidiyo ivinga vandi oodudhu sir). i agree that they fight to eradicate inequality but their dream will always be a dream since they have half baked ideas that help nobody.
இந்த சுலபமான சரணடைவு என்னும் அபின் மக்களுக்குத் தேவைப்படும் வரை… பேராட்டம் தான் தீர்வு என்பது — வலிக்காத மாறியே நடிப்பதுதான் !
(Please forward this to your Tamil friends)
To pass Jan-Lok-Pal bill in Parliament
Date: May 01, 2011. (Sunday) Morning 7-8 AM,
Place: Chennai, Marina Beach:
Gandhi statue to Kannaki statue.
என்னடா இவன் சண்டே (1 மே, 2011 , Sunday ) அன்று காலையில் கடற்கரைக்கு மனித சங்கிலி போராட்டத்திற்கு வரும்படி மெயில் (மின்னஞ்சல்) செய்கிறானே என்று வருத்தப்படும் நண்பர்களுக்கு,
இது ஏப்ரல் 8 ம் தேதி 1929 ம் வருடம் நடந்தது. பகத்சிங் இந்திய விடுதலைக்காக சட்ட சபையில் வெடிகுண்டு வீசினார். நீதி மன்ற விசாரணையில் பகத்சிங்கிற்கு பிரிட்டிஷ் அரசு தூக்கு தண்டனை விதித்தது.
பிரிட்டிஷ் அரசு அவனை குற்றவாளி என்றது. ஆனால் பகத்சிங் உரக்க சத்தமிட்டான். என்னை தூக்கிலிடுங்கள். ஆனால் குற்றவாளி
என்று சொல்லாதே, தேச விடுதலை வீரன் என்று சொல்லுங்கள் என்று முழங்கினான்.
தூக்கில் போடும் முன்னர் பகத்சிங்கின் எடை பார்க்கப்படுகிறது. அவன் சிறைக்கு வரும் முன்னர் இருந்ததை விட 1.5 கிலோ எடை கூடுதலாக இருந்தான்.
சிறை அதிகாரி கேட்டார், தூக்கு தண்டனை கைதியின் எடை குறையதானே
செய்யும், எப்படி உனது எடை கூடியது என்று. அதற்கு பகத்சிங் சொன்னான்… எனது தேசத்திற்காக உயிர் கொடுக்கிறேன் என்ற மகிழ்ச்சியில் எனது எடை கூடியது என்று பகத்சிங் சொன்னான்.
23 மார்ச் 1931 அன்று காலை 7 மணிக்கு, ஒரு மணி நேரம் முன்னதாகவே, பகத்சிங் அவனது நண்பர்கள் ராஜகுரு மற்றும் சுகதேவ் உடன் தூக்கில் இடப்பட்டான். அவன் இறுதியில் இட்ட சத்தம் இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி
ஓங்குக).
அப்போது அவனது வயது 25.
இந்த தேச விடுதலைக்காக தனது 25 ஆவது வயதில் தூக்கில் தொங்கினான் பகத்சிங்.
ஆனால் நம்மால் ஒரு விடுமுறை (1, மே , 2011) அன்று காலையில் நமது தேசத்திற்காக 2 மணி நேரம் செலவு செய்ய மாட்டோமா ??
இந்த நாட்டின் கொள்ளை கூட்டத்திற்கு எதிராக இந்த இரண்டாவது விடுதலை யுத்தத்தில் தாங்களும் கலந்து கொண்டு, இன்னும் 10 பேரையாவது அழைத்து வாருங்கள்.
நமக்கு எல்லாம் முதுகு எலும்பு இல்லை என்று சொல்லும் அந்த கொள்ளை கூட்டத்தை விரட்டுவோம்.
ஜன லோக் பால் சட்டம் நிறைவேற பாடுபடுவோம்.
இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) !!!!!.
Sathish
I’m not comparing anyone with anyone. All these people are unique.
All have huge compassion towards people. I don’t any right/eligibility to critic them.
I’m trying to say what good things they are doing.
I have experienced many good things from srisri/nithyanada/jaggi. baba shown
good path to me. They were stepping stone to my growth.
Finally vallalar shown some grace. Please see if this book helps for you.
http://www.vallalyaar.com/?p=409
Thanks
Balu
ஆன்மிகம் ஒரு தொழில் என்கிற வகையில் சங்கரன் முதல் சாய்பாபா வரை அனைவரும் சாதனையாளர்கள்..இன்று நேற்றல்ல அரசர் காலம் தொட்டு அரசியலார்கள் ஆதீனங்களையும் மடங்களையும் ஆதரித்தும் வளர்த்தும் வந்துள்ளனர்…எத்தனை பெரியார் வந்தாலும் ஆன்மிகம் என்கிற தொழில் அழிய வாய்ப்பில்லை….இன்னும் சில நாட்களில் அம்பானிகளும், டாட்டாகளும் ஆன்மிக தொழிலில் கால் பதித்தாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை….
ஆன்மிகம் அனைவருக்கும் தேவையான ஒன்று. அம்பானிகளும், டாட்டாகளும் ஆன்மிக தொழிலில் கால் பதிக்க வேன்டும். அனைத்து மக்களுக்கும் தெரிந்துகொள்ள மகான்கள் பாடுபடுகின்றணர்.
If government is guided by a master then country will be very good. Only those people can give suggestion which will be helpful to all people.
Olden days kings sponsored money for saints. Now people in govt are filling their
pockets. Now a days people are sponsoring it.
ஆன்மிகம் is a science. You are not body and mind. you are beyond it.
http://www.vallalyaar.com/?p=409
@Kanian,
இந்திய விடுதலை விரர்கள் என்றாலே காந்தி, நேரு, சுபாசு சந்திரபோசு, பகத்சிங் ஏன் தமிழர்கள் யாரும் பாடுபடவில்லையா
எல்லோரும் ஒன்றாகதானே பாடுபட்டோம், பின்பு இந்திய உரிமையை மட்டும் அவர்கள் கொண்டாடுவது எந்த வித்தில் நியாயம்
/*பிரித்தானியாவிலிருந்து விடுதலை பெற்றபிறகு அரசியலமைப்பு சட்டமன்றத்தில் புதிய இந்தியக் குடியரசில் நிலவ வேண்டிய அலுவல்மொழி குறித்து நீண்ட விவாதம் நடந்தது. பற்பல உரையாடல்களுக்குப் பின்னர் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி அரசுப்பணி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது
இந்தி பேசாத மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது. */
நம் மேல் இந்தியை திணிக்கவும் அவர்களின் ஆதிக்கத்தை திணிப்பதற்காகவா நாம் விடுதலை அடைய போராடினோம்.
/*இந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்கள் “இந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள்.” என்று முழங்கினார்கள் */
தமிழர்கள் என்னமோ பிழப்பு தேடி இந்தியா வந்த மாதிரியும் இந்த இந்தி நாய்கள்தான் தமிழநாட்ட கொடுத்தமாதிரியும் கொக்கறிக்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள்.இருமொழிக் கொள்கையை (ஆங்கிலம் மற்றும் இந்தி)] கடைபிடிக்க உறுதி செய்தது,
ஆக என் தாய்மொழி தமிழ் ஆனால் என் தாய்நாடு என்று சொல்லபடும் இந்தியாவின் மொழி ஆங்கிலம், இந்தி இதை எவ்வாறு என் தாய்நாடு என்று சொல்வேன்.
மீண்டும், 1967ஆம் ஆண்டின் சட்டதிருத்தம், மும்மொழித் திட்டம் தீட்டினார்கள், இந்தியைப் பரப்ப தட்சிண இந்தி பிரசார சபை நிறுவபட்டது, போராட்டம் துவங்கியது, மும்மொழித் திட்டம் கைவிடப்பட்டு இந்தி முழுமையாக தமிழ்நாட்லிருந்து விலக்கப்பட்டது, தேசிய மாணவர் படையில் இந்தி ஆணைச்சொற்கள் விலக்கப்பட்டன.
மீண்டும் 1986 ஆண்டு இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார் இந்தக் கொள்கை நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவிட வழி செய்தது, போராட்டம் துவங்கியது போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது, நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே யாகும், இப்படியாக இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க பல வழியில் முயன்றார்கள் தமிழ்நாடு இந்தியா என்னும் ஆதிக்கத்தில் இருக்கும்வரை முயற்ச்சிபார்கள்
இதன் காரணமாகத்தான் விடுதலை கிடைத்த நாளை கருப்பு தினமாக கொண்டாடும்படி சொன்னார் பெரியார்
அது எவ்வளவு பெரிய உண்மை என்று இன்று விளங்குகிறது
அதுமட்டுமா தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் இந்திய நாட்டின் வரலாற்றில் ஒரு பக்கம்கூட ஒதுக்கவில்லை, எல்லாம் இந்தி மொழிக்கும், சமற்கிருத மொழிக்குமே எழுதி கொடுத்தாச்சு
அனைத்து நடுவண துறை அலுவலகங்களிலும் இந்தியும், ஆங்கிலமும் முதன்மையாக செயல்படுகிறது, ஏன்டா அப்படினு கேட்டா அதுதான் தமிழை முன்றாவதாக சேர்த்துயிருக்கோம்ல என்று நக்கல் வேற, தமிழகத்தில் தமிழ் முதன்மையாகவும் ஆங்கிலம் விருப்புரிமை/optional அடிப்படையில் இருக்கலாம் ஆனால் இன்றோ மக்களுக்கு புரியுதோ இல்லையோ வடநாட்டு இனத்தின் அடையாளமான இந்தி என்னும் ஆதிக்கம் தமிழகத்தில் திணித்துகொண்டுயிருக்கிறார்கள், மேலும் அனைத்து நடுவண அரசு தேர்வுகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே உள்ளது, இந்தி மக்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதலாம் ஆனால் தமிழன் இந்தியாவில் பிறந்ததற்கு தண்டனை, இதனால் தமிழ் மக்களின் மனதில் தமிழில் படித்தால் வேலை கிடைக்காது போன்ற மனநிலையை உண்டாக்கி இந்தியை தேவையான மொழியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்
அப்பறம் விருதகளின் பெயரை பாருங்கள்
பத்ம பூசன், பத்ம விபூசண், பத்மசிறீ, பாரத ரத்னா, ராவ் பகதூர், திவான் பகதூர்
தாதாசாஹெப் பால்கே விருது, துரோணாச்சார்யா விருது, அருச்சுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா
சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா
செயற்கைக்கோளின் பெயர்கள் ஆரியபட்டா, பாஸ்கரா, ரோகினி, சந்திராயன் ..
ஏவுகணைகளின் பெயர்கள் அக்னி, பிருத்தவி …
ஆக இந்தியா என்று சொன்னால் தமிழனுக்கு அடையாளம் இல்லை வடநாட்டுகாரனுக்குதான் உரிமையுள்ளது, உரிமையை கேட்டால் இந்திய இறையாண்மைக்கு எதிரானவன், இந்தியாவின் செயற்கைக்கோள், ஏவுகணை, இராணுவம் .. போன்ற பலவற்றில் தமிழர்களின் வரி பணம் பயன்படுத்தபடுகிறதல்லவா அப்பறம் என்னடா எங்க தமிழ் பெயர்களை வைத்தா குறைந்தாவிடும்,
அது சரி ஈன இந்தியா தமிழனின் பணத்தை சுருட்டி இலங்கைக்கு கொடுத்து தமிழனை அழிக்க உதவி செய்கிறது இது எப்படி என்நாடாகும்
இப்ப ஜன் லோக்பால்னு ஒரு புரியாத சட்ட முன்வரைவு கொண்டுவர ஒன்றாக கூடுவோம் என்கிறாராய், முத்துகுமார் மற்றும் பலர் தமிழ் இனத்திற்காக உயிர் துறந்தார்களே, அவனின் கேள்விக்கு இந்த ஈன இந்திய அரசு என்ன பதில் சொல்லும், தமிழ் மீனவர்களை நாயையை சுடுகிற மாதிரி சுடுகிறானே இலங்கைகாரன் அதை என்றாவது தட்டி கேட்டதா யாராவதுதான் போராடினார்களா, தமிழனின் உயிர் எல்லாம் மயிரு
பகத்சிங் ஆங்கிலேயேனை எதிர்த்து மாண்டால் அது விடுதலை போராட்டம் அதுவே விடுதலை புலிகள் செய்தால் அது தீவிரவாதம் பலே என்ன ஒரு முரண்பாடு
சாய்பாபா கடவுள் என்று நம்பும் மனிதர் அல்ல நான், இருந்தாலும் அவர் செய்யும் சேவைகளை மதிக்கிறேன்…… புட்டபர்த்தியில் தெரு தெருவாக சுற்றி அவர் பற்றி ஆய்வு செய்து இருக்கிறேன்,
என்னை கவர்ந்த விஷயங்கள் சில, உங்களிடம் பகிருந்து கொள்கிறேன்,
பிரசாந்தி நிலையத்தில் ஒரே ஒரு உண்டியல் கூட நான் பார்க்கவில்லை, அல்லது உங்கள் பணத்தை டிரஸ்ட் மட்டும் செலுத்தி ரசிது பெற்று கொள்ளுங்கள் என்ற பலகை கூட நான் பார்க்க வில்லை……
பிரசாந்தி நிலையத்தில் இரண்டு இட்லி வெறும் இருண்டு ரூபாய், இரண்டு சப்பாத்தி இரண்டு ரூபாய், மதிய வேலை உணவு ஆறு ரூபாய்……
புட்டபர்த்தி இரண்டு மருத்தவ மையங்கள் இவர்கள் நடுத்துகிறார்கள் இரண்டும் இலவசமாக, நம்மூர் அரசு மருத்தவ மையங்கள் போல் அல்ல அங்கு வரும் நோயாளிகளே மனித நேயத்தோட பார்க்கிறார்கள்…. அங்கு எல்லா மதத்தினர்க்கும் மருத்துவம் இலவசம்……
இவர்கள் பல கல்வி நிறுவங்கள் நடத்துகிறார்கள், இதில் கல்வி கட்டணம் மட்டும் தான், டொனடிஒன் , ரெசொம்மென்டடிஒன் என்ற பேச்சை அங்கு இல்லை, தரமான கல்வி ஏழைகளின் விலையில்….. உன்ன உணவு, இருக்க இடம் அங்கு இலவசம்……
தமிழ் நாட்டில் சுனாமி பாதித்த பொழுது முதலில் வந்து முதல் உதவி செய்தவர்கள் இவர்கள் தான்….
ஒரிசாவில் புயலில் சிக்கி விடு இழந்தோருக்கு 600 விடுகளை கட்டி தந்தது இந்த சாய்பாபா தான்….
புட்டபர்த்தி ஒரு வறண்ட கிராமம், அது இருக்கும் அனத்பூர் மாவட்டத்திற்க்கே தண்ணீர் தருவது எந்த டிரஸ்ட் தான்…. இவர்கள் தான் சென்னை க்கு தண்ணீர் தந்தார்கள் என்பது வேறு கதை….
மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஒரு நபரிடம் நான் பேட்டி எடுத்தேன் , எதனால் நீங்கள் சாய்பாபா நம்புகிர்கள் என்று, அவர் சொன்ன பதில் அவர் இங்கு சேவை(10 நாள் சர்வீஸ்) செய்ய வந்து உள்ளார், வந்த இடத்தில அவர்க்கு அம்மை போட்டு உள்ளது…. இதனால் சேவை செய்ய முடயாமல் அவர் சொந்த ஊருக்கு கிளம்பும் தருவாயில், அவர்க்கு அப்பெண்டிக்ஸ் வலி வந்து உள்ளது. மருத்தவர்கள் பரிசோதித்து ஆபரேஷன் செய்தது அதை அப்புற படுத்த வேண்டும் இல்லையில் அது வெடித்து உயிர் பிரிந்து விடும் ஆனால் அம்மை போட்டதால் ஆபரேஷன் பண்ண முடியாது என்று சொல்லி விட்டார்கள்,
அப்போழ்து சாய்பாபா மருத்தவ மணியில் வேலை செய்யும் ஒரு பெண் மருத்துவர் துணிந்து வந்து இந்த கேஸ் எடுத்து உள்ளார் , அந்த மருத்துவர் அம்மை முதலில் தீர்வு கண்டு உள்ளார், அதற்குள் அமெரிக்காவில் வந்த ஒரு சிறப்பு மருத்தவர் இடம் அனுமதி பெற்று இவர்க்கு அப்பெண்டிக்ஸ் க்கு அறுவை சிகச்சை செய்து இருக்கிறார்கள்….
இதற்காக அவர்கள் ஒரு ரூபாய் கூட அவனிடம் வாங்க வில்லேயாம், அவர் சொல்லும் பொது அவர்க்கு மட்டும் அல்ல எனக்கும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது…. ஆமாம் இவர் அவரை கடவுளாக வணங்குவதில் தவர் இல்லை என்று சொல்லி விட்டு விட பெற்றேன்……
இவை அனைத்திற்கும் மேலாக, நான் அங்கு பார்த்தது அமைதி, அன்பு, மரியாதையை, Dஇச்சிப்லினெ ,
அவரே கடவுள் என்று நான் பார்க்கவில்லை, மனித நேயம் மிக்க ஒரு நல்லவராக தான் பார்க்கிறேன்…. இவரே கொச்சை படுத்துவதை ஏனோ என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை
I just love the honesty and heat in the lines of this article . The psychology of a common Indian civilian is revealed perfectly in this article . Kudos to the writer . I just love the lines that said , people started to use painkillers rather than treating the disease that causes pain . Great work ! Really thought provoking !
// அவை, ஊரை ஏமாற்றிக் கொள்ளை அடித்தவன் தன் ஏமாளி பக்தர்களுக்கு வீசி ஏறியும் பிஸ்கட் துண்டுகள். //
இந்த ஒரு வரி – ஒட்டுமொத்த இடுகையின் சாரத்தை நச்சென்று புரிய வைத்தது…