‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!

-

ஜார்கண்ட் மாநிலம்  ஹஸாரிபாக் மாவட்டத்தில் தற்பொழுது வசித்து வரும் ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.  10 து 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் செல்லும் சுரங்கத்திற்குள் சென்று, நிலக்கரியை வெட்டியெடுத்து வரும் குழந்தைத் தொழிலாளி ஜாவிர் குமார்.

எலி வளையைப் போலப் பூமிக்குள் செல்லும் இச்சுரங்கத்தை மரணக் குழி என்றுதான் சொல்ல முடியும்.  அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டியெடுத்து வருவது உடலை வருத்தக்கூடியது மட்டுமல்ல, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும்.  சுரங்கத்திற்குள் பரவிக் கிடக்கும் இருளை விரட்டுவதற்கு ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும், நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கு ஒரு இரும்புக் கம்பியையும், வெட்டிய நிலக்கரியை வெளியே எடுத்துவருவதற்கு ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், தனது வேலையை முடித்துக்கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியே வரும்பொழுது, பொழுது சாய்ந்து இருட்டிவிடும்.  ஒரு இரும்புக் கம்பி, ஒரு கூடை, ஒரு விளக்கு ஆகியவற்றைத் தவிர, வேறெந்த பாதுகாப்புச் சாதனமும் இன்றிச் சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், “சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டால், உயிரோடு புதைந்து இறந்து போவோம்” எனத் தெரிந்தேதான் இந்த வேலையைச் செய்து வருகிறான்.

ஹஸாரிபாக் மாவட்டத்தில் மட்டும் இது போன்று நூற்றுக்கணக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருகின்றன.  ஜாவிர் குமாரைப் போன்று ஆயிரக்கணக்கான சிறுவர்களும், சிறுமிகளும், பெண்களும் சுரங்க வேலை என்ற பெயரில் தினந்தோறும் மரணத்தோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  இச்சுரங்கங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய ஒரிசா, பீகார், சத்தீஸ்கர், அசாம் ஆகிய வறிய மாநிலங்களிலிருந்து சிறுவர்கள் பிடித்து வரப்படுகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தின் அமைச்சர்கள், போலீசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்துதான் இச்சட்டவிரோதச் சுரங்கங்கள் நடந்து வருகின்றன.  இச்சுரங்கங்களை நடத்தி வரும் மாஃபியா கும்பல் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் “கவனித்து’’விடுவதால், அச்சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களை, சிறுவர்களின் மரணங்களைப் பற்றி பதிவு செய்யவும், விசாரிக்கவும் அரசு முன்வருவதேயில்லை.  அச்சுரங்கங்கள் சட்டவிரோதமாக இயங்கிவருவதைக் காரணமாகக் காட்டியே, இறந்து போகும் சிறுவர்களின் குடும்பத்திற்கு நட்ட ஈடு தரவும் அரசு முன்வருவதில்லை.

வசந்தி தேவி என்ற தாயிடம், “உங்கள் மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்காமல், அபாயமிக்க சுரங்க வேலைக்கு ஏன் அனுப்பியிருக்கிறீர்கள்?” எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “வறுமை” என எந்தவிதமான உணர்ச்சியு மின்றிப் பதில் அளித்தார், அவர்.

தனியார்மயத்தின் பின் அம்பானியும் டாடாவும் உலகக் கோடீசுவரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள்.  ஜாவிர் குமாரும் வசந்தி தேவியும் அஞ்சுக்கும் பத்துக்கும் தினந்தோறும் மரணத்தோடு போராடுகிறார்கள்.  இந்தியா வல்லரசாகிறது எனப் பல்லைக் காட்டுகிறார், மன்மோகன் சிங்.

_____________________________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2011
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. இது குறித்து ” SAVE THE KID ” க்கு எழுதுறேன்..

  ஆங்கில செய்தி ஏதாகிலும் இருப்பின் பகிரவும்..

  குழந்தை தொழிலாளர்கள் குறித்து தீவீர நடவடிக்கை எடுக்கணும்..

  மிக வருத்தமான செய்தி..

 2. ஏப்ரல் 5ம் தேதி ஹிந்து நாளிதழில் வெளியான இந்த கட்டுரையின் அடிப்படையில் தேசிய மனித உரிமைக் கழகம், சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்களைப் பற்றியும், சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவதைப் பற்றியும் ஜார்கண்ட் அரசு நான்கு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

  http://www.thehindu.com/news/national/article1599973.ece
  http://www.thehindu.com/news/national/article1609490.ece
  http://www.nhrc.nic.in/disparchive.asp?fno=2249

 3. எங்கிருந்தாவது செய்திகளையோ, விவரங்களையோ “சுட்டால்” ஒரு அக்னாலட்ஜ்மெண்ட் குடுங்க சார்!
  பாருங்க JMMS கேட்கிறாங்க.

  • ராம், As a Doctor , நான் உங்களுக்கு ஒரு நல்ல கண் டாக்டரை உடனடியாக பார்க்க பரிந்துரை செய்கிறேன், ஏன்னா கட்டுரைக்கு கீழேயே புதிய ஜனநாயகம்னு கொட்டை எழுத்துல போட்டது உங்க கண்ணுக்கு தெரியல. பட் இது உங்களுக்கு ஏற்பட்டுள்ள மனநோயின் வெளிப்பாடாக இருந்தால் நீங்கள் மனநல மருத்துவரை கூட அணுகலாம். ஏன்னா முத்திப்போச்சுன்னா நெம்ப கஸ்டம்ம்ம்

   • இப்ஸிதா பதி என்ற ஹிந்து பத்திரிகையின் நிருபர் (ஆமாங்க – நம்ம பார்ப்பண பத்திரிகை ஹிந்து தான்) எழுதிய கட்டுரையை சுட்டு பு.ஜ வில் வெளியானதைத் தான் இப்ப வினவுல போட்டிருக்காங்க. அதற்கான சுட்டிகள் தான் மேலே நான் கொடுத்தது.

    • “நம்ம பார்ப்பண பத்திரிகை ஹிந்து தான்”
     அவனா நீயீ….. வினவு, இந்த நூலோட பிரச்சனையை பாத்தீங்களா? பாப்பார பத்திரிக்கையில வந்த எதுவும் இங்க வரப்பிடாதாம். அது ஒரு லூசுத்தனமான கருத்ஆ கூட இருக்கட்டும் அதே அளவுகோலை இவர் தனக்குக் கடைப்பிடிப்பாரா? ஒரு பார்பானோட கருத்தை நீங்க ஏன் வெளியிடவேண்டும். வினவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்னு இவர் ஏன் தன்னோட கருத்து இங்கே பதியப்படுவதைப் பற்றி பொங்கவில்லை.

     பாப்பார இந்துவில் வந்த செய்தியை வைத்து சூத்திர புஜவில் கட்டுரை எழுதியிருக்கிறார்கள் என்பதையே இந்த நூலால் தாங்கமுடியவில்லை என்பது மனுதர்மத்தை நவீன வடிவிலும் இந்த இணைய சில்லுன்டிகள் கடைபிடித்து வருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது.

     இது போன்ற சாதிவெறியர்களின் கருத்துரைகளுக்கு இடம் வழங்குவதுதான் உங்க ஜனநாயகமா வினவு?

 4. அட பாவிகளா!குழந்தை தொழிலாளிகளின் உயிர் அவ்வளவு மலிவா போச்சா!
  இந்தியா வல்லரசா ஆச்சுனா,இன்னும் என்னன்ன கொடுமைகள் வருமோ?

 5. ஆமா வினவு தோழர்களே ஆங்கில லிங்க் இருந்தா கொடுங்க ஐநா சபை குழந்தை தொழிலாளர் பிரிவுக்கு எழுதுறேன்.

  நான் எழுதினா உடனே எல்லா சுரங்கத்தையும் மூடிட சொல்வார் பான்மூன்

 6. ஐடி துறையில் மாதம் 40 ஆயிரம்,60 ஆயிரம் சம்பளம் வாங்கும் ‘புரச்சியாளர்’களும் வல்லரசின் மரணப் பொந்துகளில்தான் இருக்கிறார்களா.அங்கிருந்து கொண்டுதான் வினவில் எழுதுகிறார்களா.பிழைப்பிற்கு உலகமயமாக்கல் தரும் வேலை, பொழுது போக்கு புரச்சிவேடமா.இவர்களின் முந்தைய தலைமுறையில் எத்தனை பேருக்கு இப்படி சம்பளம் கிடைத்தது.உலகமயமாக்கலால் பலன் பெறுவது மத்தியதர மக்களில் பலர்.அவர்களில் சிலரின் பொழுதுபோக்கு வினவில் எழுதி, பின்னூட்டம் போட்டு தாங்கள் புரச்சி செய்கிறோம் என்று சொல்லிக் கொள்வது.உலகமயமாக்கத்தின் தீய விளைவுகளைப் பற்றியே எழுதும் வினவே உலகமயமாக்கலால் ஒரு நன்மையும் இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால்.இல்லை உங்களுடைய லட்சிய ஸ்டாலின்,மாவோ ஆண்ட சமூகங்களில் உழைப்பாளர்களுக்கு எல்லா உரிமையும் தரப்பட்டது என்று சொல்ல முடியுமா.தொழிலாளர் சட்டங்களை சரியாக நிறைவேற்று,
  குழந்தை தொழிலாளர் முறையை தடை செய் என்று எழுதுவது நியாயம். ஐரோப்பாவில்
  பல நாடுகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு பல பத்தாண்டு ஆகிவிட்டது.
  சார்லஸ் டிக்கன்சும், ஏங்கல்சும் காட்டிய இங்கிலாங்து சமூகமா இன்று அங்கு உள்ளது.
  அங்கு புரட்சி நடக்கவில்லை.ஆனால் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டது.
  அது எப்படி புரட்சி நடக்காமல் நடந்தது. கம்யுனிஸ்ட்கள் ஆட்சியில் இல்லாத பல நாடுகளில் குழந்தை தொழிலாளர் முறை இல்லையே. அங்கெல்லாம் வினவுதான் மாற்ற்த்தை கொண்டு வந்தாரா. இருக்கிற நிலை சரியில்லை, குழந்தைகள் படிக்க வேண்டும், உழைப்பு சுரண்டலுக்கு பலியாகக் கூடாது- இது சரி. அதற்கான தீர்வு என்ன.
  எத்தகைய மாறுதல் வர வேண்டும். அதற்கு நீங்கள் என்னப் போகிறீர்கள்.இப்படி எழுதிவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா.கேரளாவில் குழந்தை தொழிலாளர் முறை கிட்டதட்ட இல்லை. அது ஏன்.பதில் சொல்ல முடியுமா.கேரளாவில் வினவு,மருதையன்,துரை சண்முகம் இல்லை.எனவே நீங்கள் செயல்பட்டு அங்கே அதை ஒழிக்கவில்லை என்பதையாவது ஒப்புக் கொள்ளுங்கள் :).

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க