Friday, September 20, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் - ஒரு ஆய்வு!

சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

-

மச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.

பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்.

பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.

பாட வாரியாக அவற்றில் நான் கண்ட நிறை குறைகளை இனி பார்ப்போம்.

அறிவியல்பாடம்:

1) ஐந்தாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: லயோலா கல்லூரி பேராசிரியர், சென்னை புனித பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர், மதுரை எஸ் பி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்.

  • பசுமை உலகம் பற்றிய பாடம், உரையாடல் வடிவில் உள்ளது. விதை பரவுதலின் வகைகள் வண்ணப்படங்களால் மனதில் பதியும்வண்ணம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
  • நாம் இன்று உண்ணும் சில காய்கறிகளின் பூர்வீகம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. (தர்பூசணி, வெண்டை- ஆப்ரிக்கா, தக்காளி,கொய்யா – தென் அமெரிக்கா)
  • விலங்குகளின் வாழ்விடமான காடு சுருங்குவதே விலங்குகள் ஊருக்குள் வரக்காரணம் என்பதை ஆழ நெஞ்சில் பதியவைத்துள்ளனர்.
  • எளிதில் அனைவரும் செய்து பார்க்கும் சோதனை: பாட்டில் ஒன்றில் முட்டையுடன் கூடிய எருக்கிலையைப் போட்டு அது புழு,கூட்டுப்புழு, பட்டாம்பூச்சி என வளர்ச்சியடவதைப் பார்க்கச் செய்தல்.
  • விண்வெளிப்பயணம் கட்டுரையில் அண்மையில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திராயனும் இடம்பெற்றுள்ளது.
  • நீர் எந்த ஒரு தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. அது பொது உடமையானது என ஒரு பாடம் வலியுறுத்துகிறது.

2) ஏழாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: பெரியார் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர், எத்திராஜ் கல்லூரி இயற்பியல் பேராசிரியர், சென்னை புனித ஜான் மெட்ரிக் பள்ளி ஆசிரியர், மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்.

  • முன்பு +1 இல் இடம்பெற்றிருந்த வகைப்பாட்டியல், சுற்றுச்சூழலியல் இப்போது 7ஆம் வகுப்பில்.
  • விலங்குகளால் மனித சமூகத்துக்குக் கிட்டும் பயன்களோடு விலங்கியல் பாடம் ஆரம்பமாகிறது.
  • லெக்ஹான் முட்டைக்கும் நாட்டுக்கோழிக்கும் உள்ள வேறுபாடு, நல்லமுட்டையை அழுகிய முட்டையில் இருந்து வேறுபடுத்தும் எளிய முறை ஆகியவை படிப்பை சுவாரசியமாக்குகின்றன.
  • நீரின் வணிகமயமாக்கம், ஆற்றுமணல் கொள்ளை போன்றவற்றால் நீர்வளம் சிதைக்கப்படுதல் விளக்கப்படுகிறது. கடல்நீர் எவ்வாறு குடிநீராக்கப்படுகிறது என்பதும் விளக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு பாட முடிவிலும், கூடுதலாக வாசித்துத் தெரிந்துகொள்ள உசாத்துணை நூல்கள், பதிப்பக விவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இணையதள முகவரிகளும் தரப்பட்டுள்ளன.
  • அணுக்கள்->மூலக்கூறுகள்->செல்கள்->திசுக்கள்->நுண்ணுறுப்புகள்->உறுப்புமண்டல்லங்கள்->உயிரினம் என்று விளக்கும் காட்சிப்பட விளக்கம், செல்களைப்பற்றிய புரிதலை எளிதாக்குகிறது.
  • மனிதன் ஓடும்போது அவனுடைய எலும்புகள் எந்த நிலையில் இருக்கும் எனும் படமும் அறிவியலோடு அன்றாட நிகழ்வை இணைத்து சிந்திக்க வைக்க உதவும்.
  • சித்தவைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, நீரிழிவு நோய் பற்றிய அறிமுகம் புதிதாக 7ஆம் வகுப்பிலேயே இடம்பெற்றுள்ளது.
  • வண்ணப்படங்களாலும் விளக்கச் சித்திரங்களாலும் வாசிப்பைத் தூண்டுகிறது, லே அவுட்.

3) எட்டாம் வகுப்பு:

ஆசிரியர் குழு:

அண்ணா பல்கலை இயற்பியல் பேராசிரியர், கோவை எஸ் ஆர் எம் வி கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள், சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி, சென்னை டொன் போஸ்கோ, புனித பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்

  • நெல்சாகுபடி ஆரம்பம் முதல் அறுவடை வரை விளக்கப்பட்டுள்ளது.நெல் சந்தைப்படுத்தப்படுவதும் உணவு பதப்படுத்தும் முறைகளும் விளக்கப்படுகின்றன.
  • கூடுதல் வாசிப்புக்குத் தரப்பட்டுள்ள ஒரு இணையதளம்: எம் எஸ் சுவாமிநாதன்.காம்
  • நாளமில்லாச்சுரப்பி, ஆண் பெண்கள் வளரிளம்பருவம் அடைதல், பால் நிர்ணய குரோமோசோம்கள், ஹார்மோன் குறைபாட்டால் வரும் முன்கழுத்துக் கழலை, குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதிலிருந்து எவ்வாறு தற்காத்தல், புகைத்தல், குடி போன்றவை உருவாக்கும் சீர்கேடுகள், நச்சுக்காளான்களை இனம் காணும் முறை – நன்கு எழுதப்பட்டுள்ளன.
  • சைகஸ், பைனஸ் ஆகிய மரங்களை 20 ஆண்டுகளுக்கு முன் +2 பாடத்தில் பார்த்தபோது கறுப்புவெள்ளைப் படத்தில் அது என்ன மரங்களென்றே தெரிந்துகொள்ள இயலவில்லை. இப்போது தெளிவான வண்ணப்படங்களால் 8ஆம்வகுப்பிலேயே அவற்றைப் பார்க்கமுடிகிறது.
  • எலுமிச்சை கேன்கர், வெள்ளரி பலவண்ணநோய் – வைரஸ்களால் உருவாகின்றன என அப்போது படித்தபோது அது என்ன நோய் என ஆசிரியரால் விளக்க முடிந்ததில்லை. இந்நூலில் அந்நோய் பாதித்த எலுமிச்சை, வெள்ளரிக்காய்கள் படங்களோடு தரப்பட்டுள்ளன.
  • வலசை போகும் ஆமை, உயிப் பன்மத்திற்கு அச்சுறுத்தல்கள், நமது பாரம்பரிய அறிவு இப்பன்மத்தைப் பாதுகாத்த தன்மை, காற்று நிலம் நீர் மாசுபடுதல் பற்றிய பாடங்களும் செறிவாக உள்ளன.
  • கழிவுநீர் சுத்திகரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பது 8ஆம் வகுப்பில் விளக்கப்படுகிறது. இதனை எஞ்சினியரிங் கெமிஸ்ட்ரியில் கல்லூரியில்தான் முன்பு படித்தார்கள்.
  • உயிரி பிளாஸ்டிக் தயாரிக்கும் முறை இடம்பெற்றுள்ளது. இது உணவில் இருந்து பிளாஸ்டிக் போன்ற பொருள் தயாரிக்கும் முறை. இது உணவுப்பற்றாக்குறைக்கு இட்டுச் செல்லும் என்ற விழிப்புணர்வு இங்கே இடம் பெறவில்லை.

4) ஒன்பதாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்றியல் துறையின் தலைவர், கோவை ராமகிருஷ்ணாமிஷன் கல்லூரி இயற்பியல் துறை தலைவர், சென்னை புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள்.

  • நகர்மயமாதலைப் படத்துடன் (ஒப்பீடு 1990 & 2010 ஒரே நிலப்பரப்பு எவ்வாறு மாறியுள்ளது எனப் புலப்படுத்தும் படம்) புரியவைத்து, இந்நகர்மயமாதல் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஆனதென்றும், இதனால் விளைச்சல் நிலம் குறைந்ததென்றும், மக்கள் மீதே பழிபோடும் விளக்கம் இடம்பெற்றுள்ளது J
  • பயிர் மேம்பாட்டுப்பாடம், இயற்கை உரங்களின் அவசியத்தையும் பேசுகிறது. பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப் பரிந்துரைக்கும் இப்பாடம் உதாரணமாக டி.டி.ட்டி ஐ பரிந்துரைக்கிறது  (இது பல ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நஞ்சாகும்)
  • முன்னரெல்லாம், பயிர்களுக்கு வரும் நோய் பற்றிய குறிப்புகள் வெறுமனே எழுத்தில்தான் இருக்கும். இப்பாடநூலில் நிலக்கடலைக்கு வரும் இலைப்புள்ளி நோயை விளக்க வண்ணப்படம் இடம்பெற்றுள்ளது.
  • பயிர்ப்பாதுகாப்புப் பாடத்துக்கான உசாத்துணையில் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் இணையதள முகவரி இடம்பெற்றுள்ளது.
  • புகைத்தல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு அடிமையாவதற்கான காரணிகள், அவை உருவாக்கும் நோய்கள் ஆழமாக விளக்கப்பட்டுள்ளன.
  • அதேபோல உடல்பருமன், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுபட வழிமுறைகளும் சொல்லித்தரப்பட்டுள்ளன.
  • எலும்புமண்டலம், நரம்புமண்டலம் போன்றவற்றில் கண்டுபிடிப்பாளர்களின் படங்களுடன் அவர்கள் செய்த ஆய்வு, ஆய்வு முடிவுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இதே போல அனைத்துத் துறைகளிலும் பின்பற்றப்பட்டுள்ளன. (உதாரணம் பெஞ்சமின் ப்ராங்ளின் சாவிக்கொத்தை பட்டத்தின் நூலில் கட்டி இடிதாங்கியைக் கண்டுபிடித்தது படத்துடன் உள்ளது)
  • மாசுபடுதலும் ஓசோன் படல ஓட்டையும் எவ்வாறு நிகழ்கின்றது எனும் பாடம் உள்ளது. இதில் சென்ற ஆண்டு மெக்சிகோ வளைகுடாவில் நடந்த எண்ணெய்க் கசிவு உட்பட பல ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • வேதியியல் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள விளக்கப்படத்துடன் கூடிய சமன்பாடு உதவுகிறது. கந்தக ட்ரை ஆக்சைடு எவ்வாறு கந்தக டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜன் ஏற்றமுறுகிறது என்பதை யாவரும் எளிதில் புரியும்படி சமன்பாடு புதுவகையில் தரப்பட்டுள்ளது.
  • தனிமவரிசை அட்டவணை உருவாக்கிய மென்டலீபின் புகைப்படத்தை முதன்முறையாக இப்புத்தகத்தில்தான் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
  • நேனோ தொழில்நுட்பம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
  • வேதிப்பிணைப்புகள் முன்பெல்லாம் +1இல் சொல்லித்தரப்பட்டது., இப்போதோ அது 9ஆம் வகுப்பில்.
  • கெல்வின், ஜேம்ஸ் வாட், டாப்ளர் போன்றோரின் வரலாறும் அறிவியலில் இவர்கள் செய்த பங்களிப்பும் இதற்காக ஊலகில் இவர்கள் பெயர் நிரந்தரமாக்கப்பட்டமை எல்லாம் சொல்லப்பட்டுள்ளது (திறனின் அலகு வாட், வெப்பநிலையின் அலகு கெல்வின்)
  • ஒன்பதாம் வகுப்பில் இருந்து செய்முறைப்பயிற்சி இடம்பெறுகிறது.

5) பத்தாம் வகுப்பு:

ஆசிரியர் குழு: சென்னை டியின் இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர், சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, சென்னை செயின்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்

  • · மரபியல் 10ஆம் வகுப்பில் ஆரம்பமாகிறது.
  • · கிரிகர் ஜோஹன் மென்டல், டார்வின், ஜென்னர் எனப்பலரின் ஆய்வுகளோடு விவாதிக்கும் இப்பாடம் இரட்டைக்குழந்தைகள், குளோனிங் ஆட்டுக்குட்டி, ஸ்டெம் செல் சிகிச்சை வரை விளக்குகிறது.
  • · நோய்த்தடுப்பு முறை எனும் பாடம் சமகால நோய்களையும் பேசுகிறது. (இன்புளுயென்சா, ஊட்டக்குறைவு நோய்கள், ஹெச்1என்1 )
  • · செடி,மரங்களின் தாவரப்பெயர் அட்டவணை, அத்தாவரப்பெயரின் வட்டாரவழக்கிற்கும் ஒரு இடம் கொடுத்துள்ளது. உதாரணமாக ‘ஆர்டோகார்பஸ் இன்டக்ரிபோலியா’ என்பது பலாவைக் குறிக்கும். பலாவை சில வட்டாரங்களில் சக்கை என்றே அழைப்பது வழக்கம்.
  • · விலங்குகளின் நடத்தை பற்றிய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து செந்நாய்களின் கூட்டு வேட்டைப்பழக்கம் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. (இவற்றைப்பற்றி சிறுபத்திரிக்கைகளில் தியோடர் பாஸ்கரன் ஏற்கெனவே எழுதி இருந்தார்)
  • · ரயில் பயணங்களின்போது தேநீரை தூக்கி எறியும் குவளைகளில் வழங்குகின்றனர். முன்பு மண்குவளையில் வழங்கிப் பார்த்தனர். இதனால் வளமான மண் வீணானது..இப்போது லட்சக்கணக்கில் தூக்கி எறிகிறோம்..இது நல்ல முறையா? சிந்தித்துப் பார் என்கிறது ஒரு பெட்டிச் செய்தி.
  • · கழிவுநீர் மேலாண்மை எனும் பாடம் இடம்பெற்றுள்ளது.
  • · சந்திராயன் திட்டம் பற்றிய பாடம் மயில்சாமியின் பங்களிப்போடு விளக்கப்பட்டிருக்கிறது.
  • · செய்முறைப்பயிற்சி இடம்பெறுகிறது.

ஆங்கிலப்பாடம்:

1) வகுப்பு 5:

பாடத்திட்டத்தை வகுத்தவர்களில் மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவரும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்வர்கள் இருவரும், பொறியியற்கல்லூரியைச் சேர்ந்தவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

  • · ஆங்கிலத்தை வாசிப்பதற்கும், கேட்பதற்கும், எனத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்திலும் பேச்சுவழக்கு ஆங்கிலம் (ஸ்போக்கன் இங்கிலீஸ்) இடம் பெற்றுள்ளது. வார்த்தைகளை வைத்து விளையாடுதலும், அகராதியில் இருந்து கொடுக்கப்படும் பொருள்களும் அக்கம் பக்கமாக பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பயிற்சியும் ஒவ்வொரு பாடத்திலும் தரப்பட்டிருக்கின்றன. வொக்கபுலரியை மேம்படுத்தவும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மனப்பாடம் செய்து கற்பதைத் தவிர்த்து படங்கள், உரையாடல்கள் மூலமும் வார்த்தை விளையாட்டுகள் மூலமும் நடைமுறை ஆங்கிலம் பயில வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
  • · படங்கள் மூலம் ஆங்கில இலக்கணப் பயிற்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக சில பயிற்சிகள்:

Supply the missing letters:

1) C_nso_e 2) mo_es_ly

3) F_n_ly

4)Con_ra_ul_te

2) ஏழாம்வகுப்பு:

பாடத்திட்டத்தை வகுத்தவர்களில் இடம்பெற்ற ஆசிரியர்கள், தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி, சென்னை ஹோலி ஏஞ்ஜெல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். மாநிலக்கல்லூரியின் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியரும் இதில் அடக்கம்.

  • · இப்பாடத்திட்டத்தில் ஆங்கிலம் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தப்படுகிறது. வாசிப்புக்கு நிறைய வரிகளும், படித்ததில் கவனித்தவற்றை எழுதவும், அகராதி பார்த்துப் படிக்கும் பயிற்சிகளும், சில ஆங்கில வார்த்தைகளை எந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் போன்ற விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இலக்கணத்தைப் பொறுத்தளவில் வாசகனுக்கு சுதந்திரம் தரும் போக்கில் கற்றுக்கொள்ள பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்னொட்டு பின்னொட்டு மூலம் ஆங்கில வேர்ச்சொல்கள் எவ்வாறு வெவ்வேறு வார்த்தைகளாகின்றன என்பதை படம் மூலம் விளக்கியுள்ளனர்.
  • · இறந்த காலம் / நிகழ் காலம் போன்ற இலக்கணவிதிகள் கற்பது எளிதில் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

3) எட்டாம் வகுப்பு:

பாடத்திட்ட ஆசிரியர்கள் : சென்னை லயோலா கல்லூரி, சென்னை புனித பால் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பேராசிரியர்கள், கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி முதல்வர், ஆங்கிலோ இந்திய பள்ளிகள்: சென்னை புனித ஜோசப் பள்ளி, சென்னை ஹோலி ஏஞ்ஜெல்ஸ்.

நிபுணர் குழுத் தலைவர்: தி ஸ்கூல் சென்னை

  • · குழு விவாதங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் உரையாடுவதன் மூலம் மொழிப்பயிற்சி, இலக்கணவிதிகளும் கூட்டு விவாதம் மூலம் பயிலுதல், வார்த்தை விளையாட்டுகள், பெட்டிச் செய்திகள் மூலம் முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியவை, உரையாடல்கள் நடித்துக் காட்டுதல். சமீபத்திய இந்தியக் கவிஞர் கமலாதாஸின் ஆங்கிலக் கவிதை பாடமாக உள்ளது. கேள்விக்குறிய பதில்கள் ஆப்ஜெக்டிவ் டைப் வகையில் தரப்பட்டுள்ளன.
  • · தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சி உள்ளது.

4) ஒன்பதாம்வகுப்பு:

ஆசிரியர் குழு: சென்னை கிறித்துவ கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர், ராணி மேரிக் கல்லூரி பேராசிரியர், எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளி முதல்வர், அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முதல்வர்.

  • · ஒன்பதாம் வகுப்பின் பாடத்திட்டத்தின் இலக்கு மாறுகிறது. வளரிளம்பருவ மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தும் வண்ணம் பாடங்களும் துணைப்பாடங்களும் அவர்களின் இலக்கு, இலட்சியம் போன்றவற்றை வரையறுக்கும்படி சிறப்பான மேடைப்பேச்சுக்கள், சிறுகதைகள், உரைநடைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை காக்கும் விழிப்புணர்வை மையப்படுத்தியும் பாடம் உள்ளது. எட்டாம் வகுப்பை விட இந்த வகுப்பில் பாடத்தின் செறிவு அதிகரிப்பு. அதே நேரத்தில் துணைப்பாடங்கள் இலக்கிய ரசனையை உருவாக்கும் வகையில் உள்ளன. ஆங்கிலத்தில் மேடைப்பேச்சு நடத்தவும், சுயமாகக் கட்டுரை எழுதவும் பயிற்சிகள் உள்ளன.
  • · ஆங்கிலப்பிழைகளைக் கண்டறியும் மொழிப்பயிற்சி நன்கு உள்ளது. ஆங்கிலத்தில் விளம்பரம் / நிகழ்ச்சி நிரல் தயாரிக்க / சுலோகன் உருவாக்கி போஸ்டர் தயாரிக்க என ப்ராஜெக்ட் ஒர்க் களும் உள்ளன. க்ராஸ் வோர்ட் பஷில்ஸ் இருக்கிறது.
  • · வாசிக்கவும் கேட்கவும் பயிற்சிகள் உள்ளன. (இதில் அரசியலும் உள்ளது. சுய உதவிக்குழுக்களைப் பற்றிய அறிமுகம். களஞ்சியம் சின்னப்பிள்ளை பற்றிய வாசிப்புப் பயிற்சி இருக்கிறது).
  • · பேச்சுப் பயிற்சியில் கல்பனாசாவ்லா பற்றி பேசச் சொல்கின்றனர்.
  • · ‘பெண்களுக்கு கல்வி தரவேண்டுமா?’ எனும் பொருளில் ஆங்கில விவாத மேடைப் பயிற்சி உள்ளது.
  • · இறந்த பின் உடல் உறுப்பு தானம் செய்த ஹிருதயனின் அம்மா கொடுத்த பேட்டியை அனைவரும் வாசிக்கச் செய்யும் பயிற்சி உள்ளது.
  • · ஆங்கிலப் பத்திரிக்கைக்கு செய்தி எழுதுதல் எனும் பயிற்சி உள்ளது. ஈ மெயில் எழுதி அனுப்பும் பயிற்சி உள்ளது.
  • · மாணவர் தன்னை பீர்பாலாகக் கருதிக் கொண்டு தன் கதையை அனைவர் முன்னிலையிலும் நடிப்போடு சொல்லும் பயிற்சி.

5) பத்தாம் வகுப்பு:

சென்னை டி வளாகத்துள் இருக்கும் வனவாணி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் தலைமையில் மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பள்ளி, மாம்பலம் அஹோபில மடம் ஓரியன்டல் பள்ளி ஆசிரியர்கள் எழுதிய பாடநூல்.

  • இப்பாடநூலில் தனியொரு மாணவன் தனது கற்பனை வளத்தை, சிந்திப்பதை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தவும், கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் வளர்க்கவும் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
  • புகுந்திருக்கும் அரசியல்: வாரன் பப்பெட்டையும் பில்கேட்ஸையும் புகழ்ந்து சில பாராக்கள் எழுதப்பட்டுள்ளன.
  • கேட்கும் பயிற்சி & குழுவிவாத நடவடிக்கைகள் பாடத்திட்டத்தில் உள்ளன. ஆங்கில சொலவடைகளும் பழமொழிகளும் பயன்படுத்த வேண்டிய இடங்கள் விளக்கம். சூழ்நிலையைச் சொல்லி அச்சூழலில் இடம் பெற வேண்டிய ஆங்கில உரையாடல்களை எழுதுதல்.
  • உலக இசை மேதைகள் பற்றிய பாடம் ஒன்றில் இளையராஜாவின் சிம்பனி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. இரட்டை கோபுர தாக்குதல், நாசி வதை முகாம்கள் பற்றிய பத்திகள் இடம்பெற்றுள்ளன.
  • பிரிட்டிஷ் ஆங்கிலத்துக்கும் அமெரிக்க ஆங்கிலத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
  • ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பயிற்சி. (அரசு இசைக்கல்லூரி, சென்னை குறித்த கட்டுரை) அதே போல தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பயிற்சியும் உள்ளது.
  • உலகளாவிய தண்ணீர்ப்பிரச்சினை பற்றிய பாடம் உள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் தொழிலில் இருப்பது பற்றிய பாடம் உள்ளது.

தமிழ்பாடம்

1) 5ஆம்வகுப்பு:

  • · குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கடவுள் வாழ்த்து யாவர்க்கும் பொதுவாக்கப்பட்டு வெறும் வாழ்த்தாக மாற்றப்பட்டுள்ளது. கவிமணி பாடிய ‘திருவடி தொழுகின்றோம்’ என்ற சமதர்ம வேட்கைப்பாடல்தான் இனி இறைவணக்கம்.
  • · காட்டின் வனப்பையும், சுற்றுச்சூழலையும் மய்யப்படுத்தி ஒரு பாடம். தமிழின் தொன்மை குறித்த பாடம் ஒன்றில் நடுகல் கல்வெட்டுகளின் வண்ணப்புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது.
  • · செயல்திட்டம்: மாணவர்களே கூடி பள்ளிவிழாவிற்கு அழைப்பிதழ் உருவாக்குதல்
  • · உங்கள் ஊரில் வழங்கும் கதைப்பாடல் (விளையாட்டுகள்) தொகுத்துத்தா..சிறுவர் இதழ்களின் கதைகளைத் தொகுத்துத்தா..
  • · பேச்சுத்திறனை வளர்க்கும் பயிற்சிகளும் உள்ளன.
  • · கலைவாணர் பற்றிய பாடம், தலைவாரிப் பூச்சூட்டி உன்னை எனத் தொடங்கும் பெண்கல்வி குறித்த பாரதிதாசன் பாடல், பாரம்பரிய உணவுகள் பற்றிய கட்டுரை (கம்பு, கேப்பை) உணவுத்திருவிழா பற்றிப் பேசுகிறது..அது நடைபெறும் இடம் பாரதிதாசன் குடியிருப்பு J
  • · பாரதியின் ‘பட்டங்கள் ஆள்வதும்’ பெண்கல்வி குறித்த பாடல்,
  • · *விளம்பரங்கள், அறிவிப்பு பலகைகள், வரைபடங்கள் போன்றவற்றை வாசித்து உள்வாங்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • · *குடும்பம் பற்றிய பாடங்களுக்கு வரையப்பட்டுள்ள படங்களில் அனைவரும் வீட்டில் மேசையில் அமர்ந்து உண்கின்றனர். ஷூ மாட்டியபடி தாத்தா பேரனோடு வாக்கிங் போகிறார். (இப்படங்கள் ஏழை மாணவர்களின் மனதில் என்ன விளைவை உருவாக்கும்?)
  • · பெரியார், புராணக்கதைகளை சிறுவயது முதலே விமர்சித்த விசயம் எழுதப்பட்டு அது பயிற்சிக்கேள்வியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • · நூல் முழுக்க வரும் சிறுவர் சிறுமியர் பெயரெல்லாம் தூய தமிழ்ப்பெயர்களாக உள்ளன. (யாழினி, எழிலரசன், பாவை)
  • · அகரமுதலி என்பதை அறிமுகம் செய்யும் பாடம் அருமையாக உள்ளது. அதில் அபிதான கோசம் பற்றியும் அபிதான சிந்தாமணி பற்றியும் குறிப்பு உள்ளது. பெ.தூரன் தொகுத்த சிறுவர் கலைக்களஞ்சியத்தில் இருந்து சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன. அகரமுதலியில் இருந்தும் சில பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

2) ஏழாம்வகுப்பு:

  • இந்த வகுப்பிலும் எம்மதத்தையும் சாராத ஒரு வாழ்த்துப்பாடல் திருவிக வால் எழுதப்பட்டுள்ளது.
  • ஊர்ப்பெயர் ஆய்வு எனும் நுட்பமான பாடம், மதிப்புக் கல்வி எனும் தலைப்பில் ஆளுமைத்திறனை மேம்படுத்தும் பயிற்சி (முடிவெடுக்கும் திறன், சுயகட்டுப்பாடு), பெருஞ்சித்திரனாரின் ஒரு பாடல், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றிய பாடம், கணிதமேதை ராமானுஜன், தாய் மொழிக்கல்வியை வலியுறுத்தும் காந்தி பற்றிய பாடம், அதில் காந்தியின் தமிழ்க் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
  • இலக்கணம் பற்றிய பாடங்கள் அனைத்தும் உரையாடல் வடிவில் எளிதில் புரியும்படி எழுதப்பட்டுள்ளது.
  • சிறுபத்திரிக்கையில் மட்டும் பேசப்படும் ந.பிச்சமூர்த்தியின் கவிதை இடம்பெற்றுள்ளது.
  • சுயமரியாதை இயக்கத் தலைவி ராமாமிர்தம் பற்றிய வரலாறு,
  • ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும் தொலைக்காட்சி உரையாடலைப் பிரசுரித்து அதைக் கண்டித்து தமிழிலேயே பேசுவோம் என்பதை உணர்த்தி உள்ளனர்.
  • கழியூரன் தொகுத்த ‘தாத்தா பாட்டி சொன்ன கதைகள்’ தொகுப்பில் இருந்து ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
  • வீட்டுக்குள் தந்தை மகன் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் சித்திரத்தைத் தந்து அதனை எவ்வாறு களைவது, தனித்தமிழில் பேசுவதன் அவசியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

திட்டம்: ஏழாம் வகுப்பு மாணாக்கர் கூடி ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரித்தல் (அரும்பு கையெழுத்துஇதழ்)

3) எட்டாம் வகுப்பு:

  • செம்மொழி மாநாடு பற்றிய விவரணை ஒரு பாடமாக உள்ளது. தமிழறிஞர் ஜி.யு.போப் பற்றிய கட்டுரை, ஈழக்கவிஞர் சச்சிதானந்தனின் பாடல், தமிழ் அகராதிகளின் வரலாறு, கணினி உருவாக்கப்பட்ட வரலாறு பல அபூர்வமான படங்களுடன் பிரசுரமாகி உள்ளது. வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழச்சிகளின் சுதந்திரப்போராட்ட வரலாறு புது முயற்சி. அதில் கதர் கோஷ்டி பார்ப்பனப் பெண்களும் கூச்சம் ஏதுமின்றி இடம்பெற்றுள்ளனர்.
  • பிறமொழிச்சொற்களுக்குரிய தமிழ்ச்சொல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (பஞ்சாயத்து என்பது உருதாம். அதன் இணைச்சொல் ஐம்பேராயம். பதில், கச்சேரி, பேட்டி, குமாஸ்தா அனைத்தும் உருதுச்சொற்களே. ஜமீன், பஜார் – பார்சி; பேட்டை, கில்லாடி – மராட்டி, மிட்டாய் – அரபு)
  • தன்னை குற்றவாளியைப் போலத்தூக்கிலிடாமல் போர்க்கைதியைப் போல சுட்டுக்கொல்லச் சொன்ன பகத்சிங் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து அறிமுகமாகி உள்ளது.
  • தேவநேயப்பாவாணர் பற்றிய பாடம் நன்கு அமைந்துள்ளது.

திட்டம்: குருத்து கையெழுத்து இதழ் தயாரித்தல்

4) ஒன்பதாம் வகுப்பு:

  • இதில் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்தும், ஆசிரியர் பற்றிய குறிப்பில் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக எனும்குறட்பாவுக்கு சான்றாக இவரைக் காட்டலாம்’ எனக் கரைந்துள்ளனர்.
  • தெருவில் பொருட்களை எப்படிக் கூவி விற்கின்றனர் என ஆசிரியர் கேட்கிறார். மாணவர்கள் ‘பூவோஒ பூவு’, பழமோ ஒபழம்’ எனக் கூவி விற்பதைச் சொல்கின்றனர். சொல்வதை அழுத்தமாகச் சொல்லி மனதில் பதியவைக்கும் இம்முறைதான் அளபெடை என மிகவும் எளிதில் விளக்கியுள்ளனர்.
  • மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி இதழ்கள் புதுக்கவிதை இயக்கம் போன்ற விசயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் பற்றிய கட்டுரை அந்நாட்குறிப்புகளின் அருமையை சிறப்புறப் பேசுகிறது. அக்குறிப்பிலிருந்து சில பகுதிகளும் தரப்பட்டுள்ளன.

திட்டம்: கையெழுத்து இதழாக ‘உடல்நலச் சிறப்பிதழ்’ தயாரிக்க வேண்டும். அதில் சிறுகதைக்கான தலைப்பு “108காப்புந்து அல்லது கலைஞர் காப்பீட்டு திட்டம்”.J

  • ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான பழமொழிகளைக் கண்டறியும் பயிற்சி உள்ளது.
  • மீனவர்கள் பாடும் தொழிற்பாட்டு ‘ஐலசா’வுடன் பிரசுரமாகி இருப்பது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
  • ராணி மங்கம்மாவின் வரலாறும் சிறப்பாகவே உள்ளது.
  • பொங்கல் பண்டிகையைப் புகழ்ந்து ஒரு கட்டுரை. அதில் வண்ணப்படத்தில் பொங்கல் பானையை ஒரு வெள்ளைக்காரி கும்பிட்டபடி இருக்கிறாள். வெள்ளைக்காரி சொன்னாத்தானே பொங்கலின் மகிமை நம்மவங்களுக்குப் புரியும்னு நினைத்தார்களோ என்னவோ?
  • உழைப்பால் உயர்ந்த உத்தமர் கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் (என்பீல்டு) கதை இடம் பெற்றுள்ளது J
  • பெருஞ்சித்திரனாரின் சுயமுன்னேற்றப் பாடல் ஒன்று உள்ளது
  • புவி வெம்பலுக்கு காரணிகளை விளக்கி ஒரு கட்டுரை நன்றாக உள்ளது. அதில் ஏ.சி. சாதனங்கள் உமிழும் நச்சுக்கள் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

5) பத்தாம் வகுப்பு:

  • பல பக்கங்களில் அபூர்வமான புகைப்படங்கள் – உதாரணமாக 1812இல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறளின் முகப்புப் படம் – இடம்பெற்றுள்ளன.
  • இதுவரை பெரியார் என்றால் பள்ளிப்பாட நூல்களில் 500 தென்னைமரங்களை வெட்டிய செய்தியைத் தாண்டி ஏதும் சொல்லப்பட்டதில்லை. இந்நூலில் பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்’ எனும் நல்லதொரு கட்டுரை உள்ளது. அதேபோல அம்பேத்கரின் வரலாற்றிலும் அவரின் வட்டமேசை மாநாட்டுப் பங்களிப்பு கூட இடம் பெற்றிருக்கிறது.
  • வங்கி, அஞ்சலகம், ரயில்வே நிலையங்களில் விண்ணப்பங்கள் நிரப்பும் பயிற்சி முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.
  • பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்வை விளக்குபவர் கருணாநிதிதான் J படித்தல் திறனை மேம்படுத்த கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியும் அவருடையதே..இதைப் போன்ற நயமிக்கஉரைகளைத் தேடிப் படித்து, அவற்றைப் போன்று எழுதவும் பேசவும் பழகினால் உலகம் உங்களைநோக்கி வரும்’ என்று அறிவுரை வேறு இலவசமாகக் கிடைக்கிறது J
  • சுவீடிஷ் மொழிக்கதை ஒன்றின் மொழிபெயர்ப்பு துணைப்பாடத்தில் இடம்பெற்றுள்ளது.
  • தாழ்த்தப்பட்டோர் நலனுக்குப் பாடுபட்ட அயோத்திதாசப் பண்டிதர் வரலாறும் உள்ளது. அதில் அவர் நடத்திய ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையின் புகைப்படமும் உள்ளது.
  • சிலி தங்கச்சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

சமூக அறிவியல் பாடம்

5ஆம் வகுப்பு:

உருவாக்கியவர்கள்: யுனிசெப்பிற்கான ஆலோசகர் ஒருவர், சென்னை குட்ஷெப்பர்டு மெட்ரிக் பள்ளி ஆசிரியர், எஸ் பி ஏ, சங்கரா வித்யாலயா ஆகிய மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் இடம்பெற்றிருந்தனர்.

  • இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகள் பற்றிய பாடம் அவர்களின் படங்களுடன் இடம்பெற்றுள்ளது.
  • வாசிக்க ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் லே அவுட் பல வண்ணங்களில் ஏராளமான படங்களுடன் அமைந்துள்ளது. தீபகற்பம், வளைகுடா, பாலைநிலம், தீவு போன்றவற்றிற்கு சரியான படங்கள் வைத்து புவியியல் விளக்கப்பட்டுள்ளது.
  • இந்திய நிலப்பரப்பின் மண்வகைகள், சுரங்கங்கள், கனிமங்கள் போன்றவை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
  • செயற்கைக்கோள்கள் கட்டுமானத்தில் இருந்து ஏவுதல் வரை தக்க படங்களுடன் இடம்பெற்றுள்ளன.
  • இந்திய அரசமைப்பு, சார்க் நாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய பாடம் 5 ஆம் வகுப்பிலேயே தொடங்குகிறது.

திட்டம்: வகுப்பில் மாதிரி தேர்தல் நடத்திடுதல்.

  • சாலைப்போக்குவரத்து விதிகள் பாடமாக உள்ளது.

7ஆம் வகுப்பு:

  • ராஜபுத்திரர்கள் என்பவர்கள் எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தனர் என்பதும் அவர்களின் வரலாறும் தனியாக விளக்கப்பட்டிருப்பது தமிழக வரலாற்றுப் பாடத்தில் புதிய விசயம்.
  • சூஃபி இயக்கம் பற்றிய பாடமும் புதிதுதான்.
  • புவியில் மாறிக்கொண்டிருக்கும் மேற்பரப்பு பற்றியும், நிலநடுக்கத்தின் காரணிகள் பற்றியும் உயிரோடு இருக்கும் எரிமலைகள் பற்றியும் தெளிவான கண்ணோட்டம் கிடைக்கின்றது.
  • அருவி இதிலும் நீர்வீழ்ச்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது J

8ஆம் வகுப்பு:

  • காரன்வாலிஸ் பிரபு அறிமுகப்படுத்திய நிலச்சீர்திருத்தம் – ஜமீன் தாரி முறை எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.
  • சிப்பாய்க்கலகம் இதில் மாபெரும் புரட்சி எனக் குறிக்கப்பட்டுள்ளது.
  • முன்பெல்லாம் இல்லாதிருந்த ‘தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி’ இதில் இடம்பெற்று, அப்பாடம் தெளிவாக அக்காலகட்டத்தை விளக்குகிறது. அதேபோல தஞ்சை மராட்டியர் ஆட்சியும் தனியாக விளக்கப்பட்டிருக்கிறது.
  • மருதுபாண்டியரும் தென்னிந்திய லீக் பற்றிய வரலாறும் வேலூர் புரட்சியும் இடம் பெற்றிருக்கிறது.
  • பொருளாதாரம் சமூக அறிவியலில் தனி அலகாக எட்டாம் வகுப்பில் இருந்து சொல்லித் தரப்படுகின்றது. தொழில்வகைகளும் பல்வகைத் தொழிலாளர்களும் பற்றிய வரையறைகள் உள்ளன.
  • பல்வகைப் பயிரிடல்களும், பலவகை தொழிற்சாலைகளும் பகுதிவாரியாக விளக்கப்பட்டுள்ளன.
  • வணிகத்தை கட்டுப்படுத்தும் காரணிகள் விளக்கப்பட்டுள்ளன.
  • குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, காரணிகள், சாதியப் பிரிவினை, மனித உரிமைகள் குறித்த ஐ.நா. தீர்மானங்கள், இந்திய மனித உரிமை அமைப்புகள் போன்றவை அலசப்பட்டுள்ளன.
  • பணம் சேமிப்பு முதலீடு பண்டமாற்று போன்ற அடிப்படை வரையறைகள் விளக்கப்பட்டுள்ளன.

9ஆம் வகுப்பு:

  • ரோமானியப் பேரரசு வீழ்ந்து போப்பாட்சி வந்ததும், அதற்கான பொருளாதார சமூகக்காரணிகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
  • ஐரோப்பாவில் நடந்த தொழிற்புரட்சியின் விளைவாக உருவான வர்க்கப் பிரிவினை, அத்துடன் விளைந்த வேலை இல்லாத்திண்டாட்டம், முதலாளித்துவ வளர்ச்சி, ராபர்ட் ஓவன் போன்றோரின் அரசியல், மார்க்சியக் கோட்பாடுகள் உருவாதல், எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
  • பிரெஞ்சுப் புரட்சிக்குத் தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • புவியியலில் தமிழகத்தின் மழைப்பரவலும் காடுகளின் பரவலும் மண்பரவலும் மேப் மூலமாக விளக்கப்பட்டிருப்பது எளிதாக இருக்கிறது.
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் இருப்பிடங்கள் குறித்த மேப் உள்ளது.
  • சூழல் மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வுக்கட்டுரை உள்ளது.
  • தமிழால் அறியப்படும் பல்வேறு பறவை, விலங்குகளின் ஆங்கிலச் சொற்கள் பட்டியலில் தரப்பட்டுள்ளன.
  • குடிமையியலில் நாம் எவ்வாறு ஆளப்படுகிறோம், அரசியல் சட்டம் நமக்கு வழங்கி இருக்கும் உரிமை & கடமைகள், நாடாளுமன்றம் நீதிமன்றம் அமைச்சரவை, மாநில அரசு ஆகியவற்றின் அதிகாரங்கள் விளக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் தற்கால சமூகச் சிக்கல்கள் எனும் பாடத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, பிராமணர் ஆதிக்கம், நீதிக்கட்சி வரலாறு போன்றவை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.
  • இடம்பெயரும் தொழிலாளர், திருநங்கையர் நிலைமை விளக்கப்பட்டிருக்கின்றது.
  • பொருளாதாரம்: சப்ளை, டிமான்ட் (அளிப்பும் தேவையும்), மார்ஷலின் தேவை விதி விளக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு:

  • ஏகாதிபத்தியத்தின் தன்மை என்ன? ராணுவ ஏகாதிபத்தியம், பொருளாதார ஏகாதிபத்தியம், 1870 வரை கடைப்பிடிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் தன்மை, காலனி ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும், ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படை விளக்கப்பட்டுள்ளன.
  • முதல் உலகப்போர், ரஷ்யப் புரட்சி, அதனை அடுத்து வந்த பொருளாதாரப் பெருமந்தம், பாசிசம் நாசிசம் தோன்றி வளர்ந்தது..இரண்டாம் உலகபோர் போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருப்பதை விளக்கி நேர்க்கோட்டில் விளக்கி உள்ளனர்.
  • சீனாவில் ஏகாதிபத்தியங்கள் நடத்திய அபினிப்போர்கள், சன்யாட்சென்னின் புரட்சி, வரை விளக்கப்பட்டுள்ளன.
  • ஐரோப்பிய ஒன்றியம், யூரோ நாணயம், போன்ற அண்மைய வரலாறுகளும் விளக்கப்பட்டுள்ளன.
  • நீதிக்கட்சி ஏன் தோன்றியது? தியாகராயர், டி எம் நாயர் போன்றோரின் பங்களிப்புகள், நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கம், அதன் நோக்கங்கள், சாதனைகள், பெரியார் நீதிக்கட்சித்தலைவராகி திராவிடர் கழகமாக்கியது, அண்ணா, முத்துலட்சுமி ரெட்டி, தர்மாம்பாள், ராமாமிர்தம் போன்றோரின் தொண்டுகள் என விரிவாக திராவிட இயக்கத்தின் தேவையையும் பங்களிப்பையும் அலசியுள்ளனர்.
  • இமயமலை உருவான புவியமைப்பு வரலாறு சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
  • ஜிபிஎஸ், செயற்கைக்கோள் பயன்பாடு, இணையம், மென்பொருள் பூங்கா, விளக்கப்பட்டுள்ளன.
  • ஒருகட்சி ஆட்சிமுறை, இருகட்சி ஆட்சிமுறை, பலகட்சி ஆட்சிமுறை ஆகியவற்றின் சாதக பாதகங்கள் விளக்கப்பட்டுள்ளன.
  • நுகர்வோர் உரிமை ஒரு பாடமாக உள்ளது.
  • பொருளாதாரத்தில் நாட்டின் வருமானம், நிகர நாட்டு உற்பத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், இவற்றைக் கணக்கிடும் முறை, 1947க்கு முன்னும் பின்னும் பொருளாதார நிலைகள், தனியார்மயம், தாராளமயம் – விளக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக

சமச்சீர் கல்விப் பாடங்களில் திருமதி பார்த்தசாரதி போன்ற கல்வியாளர்கள் கண்டறிந்த தவறுகளை, அச்சிடப்பட்டிருக்கும் சமச்சீர் கல்விப் புத்தகங்களில் தேடினோம். அறிக்கை கூறுவதை கருப்பு எழுத்துக்களிலும் நமது குறிப்புகளை நீல எழுத்துக்களிலும் தந்திருக்கின்றோம்.

1) Touching on factual incorrectness of the content, the committee cited the example of Social Science textbook for class VII. In the lesson on “Changing face of Earth’s surface” (pg no 75), a statement is given as “the continuous freezing and melting of water.” It is a factual error because water cannot melt, only ice can, the report said.

 உறைபனி சிதைவு பற்றிய இந்தப் பத்தி:

 சிலநேரங்களில் விரிசல் உள்ள பாறைகளின் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது. இரவு நேரங்களில் நிலவும் வெப்பநிலை காரணமாக இந்த நீரானது உறைந்து பனிக்கட்டியாக மாறும் மற்றும் பகல் நேரங்களில் உருகும்.பனிக்கட்டியானது திடப்பொருளாக இருப்பதால் பாறைகளின் உடைபட்ட பகுதிகளில் அது அதிக அழுத்தத்தை உருவாக்கும்.

 
SCIENCE

2)   Content is too heavy. In Class 8, unit 10 of the book deals with atomic structure and concepts such as laws of chemical combination, electrical nature of matter, discovery of fundamental particles, properties of cathode rays and discovery of protons

 இதெல்லாம் ரொம்ப ஓவர்..1980களில் படித்தபோதும் இதே பருண்மைமாறாவிதியையும், டால்ட்டனின் அணுக் கொள்கையையும் 9ஆம் வகுப்பில் இதே அளவுதான் படித்தோம்..இப்போது அவை 8ஆம் வகுப்பில்..

 ரொம்ப கொஞ்சமா படிக்கிறாங்க ஸ்டேட் போர்டுல..அப்படின்னு சொல்லி மெட்ரிக் வியாபாரிகள் தங்கள் சரக்கை உயர்ந்ததென்று கடைகட்டிக் கொண்டிருந்தாங்க…பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாத இந்த அத்தியாயத்தை முன்வைத்து, சிலபஸ் ரொம்ப அதிகம்னு புளுகுறாங்க..

 

 

சமச்சீர் கல்வி
இவற்றில் என்ன பாடச்சுமை இருக்கிறது

 
3) Syllabus has no analytical activities. In Class 9, students could have been given the opportunity to study the unit ‘Matter’ through experiential learning rather than by rote

இது அப்பட்டமான பொய். பருப்பொருள் பற்றிய இப்பாடத்தில் இடம்பெற்றுள்ள செய்முறைகள் பின்வருவன. (பக்கம் 152 முதல்)

 சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்விசமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி

 4)  Syllabus does not integrate life skills with contents or activities. In Class 1, in the unit ‘Science in Everyday Life’,
everyday practices such as ‘not to spit or litter in public places’, ‘respecting others’ and ‘solving problems’ have not been considered

 இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்ல அவங்களுக்கே கூச்சமா இருந்திருக்காதா?

 
SOCIAL SCIENCE

5)   Syllabus deals with concepts that are too complex for a student of that age group. Ideas such as the Universe, stars and the solar system are dealt in the lesson ‘Wonders in the Sky’ in Class 3

 இதில் என்ன விந்தை இருக்க முடியும்? சூரியக்குடும்பம், விண்மீன்கள் பற்றி எல்லாம் சென்ற தலைமுறை மாணவர்கள் கூட 4ஆம் வகுப்பில் படித்தவைதானே..1980களின் ஆரம்பத்திலேயே இவை ஸ்டேட் போர்டில் இப்படித்தான் இருந்தன.. எவருக்கும் புரிதலில் சிக்கல் எல்லாம் இல்லை.

Instead of introducing chapters on the Union government and the state government before human rights and the United Nations, the chapters are introduced the other way round in Classes 8 and 9

எட்டாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பது மனித உரிமைகளும், மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களும். இவை தவிர பெண்கள் உரிமைகள் என பன்னாட்டு அமைப்புகள் வரையறுத்தவையும், மனித உரிமை ஆணையங்கள் இந்தியாவில் செயல்படுவதும், அவற்றின் அதிகாரங்களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

ஒன்பதாம் வகுப்பில் சொல்லித்தரப்பட்டிருப்பவையோ, எவ்வாறு மத்திய மாநில அரசுகள் இயங்குகின்றன, தேர்தல் முறை என்ன போன்றவைதான்.

மனித உரிமைகள் பற்றிய ஐ.நா.தீர்மானங்களுக்கும் மத்திய மாநில அரசமைப்புகளுக்கும் முன் பின் எனும் தொடர்ச்சி தேவையே இல்லை..

இந்த பாடங்களைப் படிக்காமலேயே, தலைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு மாநில அரசு->மத்திய அரசு -> ஐ நா சபை எனும் கற்பனைப் புரிதலோடு இந்த விமர்சனத்தை வைத்துள்ளனர்.

6) There is no meaningful link between the history units as they are not logically arranged. The Class 8 history syllabus begins with a unit on the ‘Advent of Europeans’ and ends with ‘Indian Independence’

இதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ராஜபுத்திரர்களின் வரலாறு தொடங்கி விஜயநகரப் பேரரசு வரை விளக்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 16ஆம் நூற்றாண்டின் முகலாயர் ஆட்சியில் தொடங்கி, மராத்தியர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி, அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போரை விளக்கி உள்ளனர். இதில் தொடர்ச்சி ஏதும் அறுபடவில்லை..அதுவரை மத்திய, வட இந்திய வரலாறு விளக்கப்பட்ட பின், தமிழ்நாட்டில் நாயக்கர், மராட்டியர் ஆட்சியும் அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் நடந்த வேலூர் புரட்சியும் தொடர்ச்சியாகத்தானே எழுதப்பட்டிருக்கின்றது?

________________________________________________________________________

– இரணியன்

________________________________________________________________

 

சமச்சீர் கல்வி குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்திரவுப்படி தமிழக அரசு அமைத்த ‘நிபுணர்’ குழு உயர்நீதிமன்றத்திடம் அறிக்கையை அளித்து விட்டது. சாரமாகச் சொன்னால் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தரமற்றது என்று கூறிவிட்டது. இந்த மூன்று வாரத்தில் அதிலும் நான்கு முறை மட்டும் கூடி 10,000த்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் பக்கங்களை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் ‘அம்மாவின்’ விருப்பத்திற்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதைதான். இனி இதை வைத்து சென்னை உயர்நீதிமன்றம் அம்மாவின் விருப்பத்தையே நடைமுறைப்படுத்த நிறைய வாய்ப்பிருக்கிறது.

உண்மையில் இந்த சமச்சீர் கல்வி எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். இதிலிருந்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று மூடநம்பிக்கை போல பரப்பப்படும் கருத்துக்களை வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

– வினவு

———————————————————————————————————————

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. நானும் இதை தான் ஆர‌ம்ப‌த்தில் இருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.என‌க்கு தெரிந்த‌வ‌ரை ச‌ம‌ச்சீர் க‌ல்வி பாட‌த்திட்ட‌ம் ப‌ழைய‌ பாட‌ புத்த‌க‌த்தை விட‌ மிக‌ த‌ர‌மான‌து. சிபிஎஸ்சி சில‌ப‌ஸ்க்கு நிக‌ரான‌து. நான் ஆசிரியை என்ற‌ முறையில் சொல்கிறேன். நான் சிபிஎஸ்சி சில‌ப‌ஸ் புத்த‌க‌ங்க‌ளை ப‌டித்து இருக்கிறேன். ஸ்டேட் போர்டு புத்த‌க‌ங்க‌ளையும் ப‌டித்து இருக்கிறேன். ஸ்டேட் போர்ட் சில‌ப‌ஸில் மாண‌வ‌ர்க‌ளின் அறிவுத் திற‌னை வ‌ள‌ர்க்கும் ப‌டியாக‌ பாட‌த்திட்ட‌ங்க‌ள் இல்லை. ந‌ல்ல‌ ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணும் திற‌ன் இருந்தால் போதும் அவ‌ர்க‌ள் மாநில‌த்திலேயே முத‌லாவ‌தாக‌ வ‌ந்து விட‌லாம். நான் ப‌டிச்ச்து ஒரு காண்வென்ட் (த‌மிழ் மீடிய‌ம்)தான். அங்க‌யே எங்க‌ளுக்கு எங்க‌ள் ஆசிரியைக‌ள் சொல்லும் அறிவுரை என்ன‌ தெரியுமா?

    முத‌ல் ப‌க்க‌த்துல‌ இருந்து க‌டைசி ப‌க்க‌ம் வ‌ரைக்கும் ஒன்னு விடாம‌ ந‌ல்லா ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணிக்கோங்க‌

    புக்குல‌ எப்படி இருக்கோ அப்ப‌டியே அச்சு பிற‌ழாம‌ல் எழுதினா தான் முழு ம‌திப்பெண் கிடைக்கும்.

    இப்ப‌டியெல்லாம் ப‌டித்தால் அவ‌ர்க‌ளால் என்ன‌ சாதிக்க‌ முடியும்?

    ச‌ம‌ச்சீர் பாட‌ புத்த‌க‌ங்க‌ளை வாங்கி ப‌டித்து பார்த்தேன். பார்த்துமே எவ்ளோ ந‌ல்ல‌ திட்ட‌ம் என்று தான் நினைத்தேன். இந்த‌ க‌ல்வி முறை ந‌ம்ப‌ ப‌டிக்கும் போது இல்லையே என‌ க‌வ‌லை ப‌ட்டேன்.

    சிபிஎஸ்சி சில‌ப‌ஸை ஒரு போட்டித் தேர்வுக்காக‌ ப‌டிக்க‌ ஆர‌ம்பித்தேன். சிபிஎஸ்சி சில‌ப‌ஸ்ல‌ மொட்ட‌ ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணா க‌ண்டிப்பா பெயில் தான்.

    அந்த‌ புத்த‌க‌த்தையும் வாங்கி ப‌டித்து பாருங்க‌ள். 1வ‌துல‌ இருந்து 5வ‌து வ‌ரை விளையாட்டு முறையில் தான் பாட‌ம் இருக்கும். மாண‌வ‌ர்க‌ளை க‌வ‌ரும் வ‌ண்ன‌ம் தான் பாட‌த்திட்ட‌ம் அமைத்து இருக்கிறார்க‌ள்.

    • http://www.ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm

      இங்கு சிபிஎஸ்சி புத்த‌க‌ங்க‌ள் 1 முத‌ல் 12ம் வ‌குப்பு வ‌ரை கிடைக்கும்.

      http://www.textbooksonline.tn.nic.in/

      இங்கு த‌மிழ்நாடு பாட‌நூல்க‌ள் 1 முத‌ல் 12ம் வ‌குப்பு வ‌ரை கிடைக்கும்.

      இர‌ண்டையும் ப‌டித்து விட்டு ச‌ம‌ச்சீர் ப‌த்த‌க‌த்தை ப‌டித்து பார்த்தால் உண்மை தெரிந்து விடும்

  2. மிக அருமையான ஆய்வு கட்டுரை. சமச்சீர் கல்வி என்பதை உட்பொருளையே புரிந்து கொள்ளாமல், அவசியமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி, கல்வியை காலதாமதம் செய்ததை தவிர அரசின், சமச்சீர் கல்விக்கான் தடை ஆணை வேறு எதையும் சாதித்திருக்கவில்லை.

    ஆய்வு குழுவில், மாணவர்களின் பிரதினிதிகளோ, பெற்றோர்களொ, பொது மக்களொ, அரசு கல்வி பள்ளியின் தலைமை ஆசிரியரோ, யாருமே இடம் பெறாமல் இருப்பது, மெட்ரிக் கல்வி மட்டுமே தரமானவை என்பதை நிலை நிறுத்துவதற்கான செயல் என்பது எல்லோரும் தெள்ளென அறிந்த ஒன்றே.

    இந்த கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களும் தரமான கல்வி பெற துவங்க வேண்டும் என்கிற அரசின் பொது நோக்கத்தினை தேவையற்ற கருத்து பரிமாற்றங்களாலும், தனியார் பள்ளிகளின் நன்மைக்கான தவறான ஆலோசனைகளாலும், பாழ் செய்துவிட்டோமோ என அஞ்சுகிறேன்.

    எனது ஆய்வில் சமச்சீர் கல்வி புத்தகங்களில், சிற்சில சிறு பிழைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டாலும்,என்னை பொறுத்த வரை, அவை கல்வி தரத்தை தாழ்த்தி விட்ட்தாக கருத இயலவில்லை.

    ஒரு தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு இப்போது எடுத்து இருந்தாலும், உயர்நீதி மன்றம் நீதியை தரும் என்றும், தமிழக அரசு, மேல் முறையீடு என்றெல்லாம் காலம் கட்த்தாமல் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கிறேன்.

  3. கட்டுரையை பார்த்தபொழுது ஒன்று தெளிவாகத்தெரிகிறது சமச்சீர்

    கல்வி பாடநூல்களை தயாரித்தவர்கள் பெரும்பாலும் மெட்ரிக், ஆங்கிலோ-இந்திய

    பள்ளிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.அந்த தரம் போதவில்லையெனில் மெட்ரிக்

    பள்ளிகளையெல்லாம் மூடிவிடலாம்தானே.இவர்களின் நோக்கம் தெளிவாக,கல்வியில்

    வர்ணாஸ்ரம தர்மத்தை, மனுதர்மத்தை நுழைப்பதுதான்.இதை அனுமதிக்கமுடியாது.

  4. Excellent ! Superb work. At least now who are all against this should come to one conclusion. We can’t deny some parts may be needed to remove. But, not the entire thing. We all forget one thing, all the syllabuses are made by some experts. Not by Vetrikondan, Sarav etc… But, look at the committee formed now.

  5. அப்துல் கலாம் தலைமையில், திருவள்ளுவரும், ராமானுஜரும், ஷேக்ஸ்பியரும், தாமஸ் ஆல்வாவும், நாசா விஞ்ஞானிகளும், பதினாலு வருடம் நிலவில் அமர்ந்து, மண்டையை இடித்துக்கொண்டு, ஆய்ந்து, சமச்சீர் கல்விக்கு ‘சிலபஸ்’ எழுதினால்கூட, அது குப்பைத்தொட்டிக்குப் போயிருக்கும்.

    அதற்கு ஒரு குழு அமைத்து, ‘தரம் சரியில்லை’ என்று மிகச் சுலபமாக எடை(க்கு) போடப்பட்டிருக்கும்.

    காரணம், கருணாநிதின் கண்பார்வை அந்தப் புத்தகங்களின் மேல் பட்டுவிட்டது.

    குறை புத்தகங்களின் தரங்களில்லை. ஆள்பவர்களின் தரத்தில் இருக்கிறது.

    இதில் வியப்பென்ன வினவு?

    • //குறை புத்தகங்களின் தரங்களில்லை. ஆள்பவர்களின் தரத்தில் இருக்கிறது.//
      எதார்த்தம் மற்றும் உண்மை.

    • அப்துல் கலாம் என்ன பெரீஈஈஈஈஈஈய்ய்ய்ய அப்பாட்டக்கரா. அந்தாளு விட்ட ராக்கெட்ட விட நாங்க காலேஜிலநல்லா ராக்கெட் உடுவோம். அந்த மரமண்டைக்கு சமச்சீரும் தெரியாது. கல்வியும் தெரியாது

  6. இந்த ”ஒண்டவந்தபிடாரி”முதல் இருண்டகாலத்தில் ஈழத்தமிழரை விரட்டி அடித்தார்.ஆதரித்தவர்களை உள்ளே தள்ளினார்.இரண்டாவது இருண்டகாலத்தில்
    மதமாற்ற தடை சட்டம்,ஆடு,மாடு,கோழி வதை தடைச்சட்டம்.கறிதின்னும் உரிமை
    வேலை வாய்ப்பு உரிமையை பறித்தார்.மூன்றாவது இருண்ட காலத்தில் கல்வி கற்கும் உரிமையையும் பறித்தார்.இவர்ஆளும் ஒவ்வொரு காலமும் தமிழகம் இருண்டு கொண்டே வருகிறது.இவர மாதிரி ஒண்டவந்து ஸ்டாரா இருக்கிறவர் சொல்றமாதிரி.தமிழகத்த ஆண்டவனாலக்கூட காப்பாத்த முடியாது்.ஆண்டவனையும் சேர்த்து அநியாயக்காரர்கள் பெரும்பாண்மையாஇருக்கிறார்கள்.நல்லவர்கள்,புரட்சியாளர்கள் சொற்பமாக இருக்கிறார்கள்.ஒரு கெட்டபழமொழிதான் ஞாபத்திற்கு வறுகிறது.ஊம்ப கணாக்கண்டால் வெளிய சொல்லக்கூடாதாம்.

    • அப்ப உங்க தாத்தா ஆண்டப்ப தமிழ்னாடென்ன ஒளி வெள்ளத்தில் மிதந்ததா?

    • தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை சுரன்டி மானம் ரொசம் இல்லாத உன்டு கொழுத்த கருனாவை விட அம்மா எவ்வலவோ உசத்தி.. வினவு பொய் விமர்சனம் பன்னாதேர்கல்..

    • சரியா சொன்னீங்க தோழரே. பண்ணிகளை விரட்டியடிப்போம். அல்லது அடித்து விரட்டுவோம்

  7. மிக மிகத் தேவையான கட்டுரை வினவு. புத்தகம் படிக்காமலேயே தரம் சரியில்லைன்னு சொல்ற கூட்டம்

  8. Dear Vinavu
    What a deep analysis ? good + hard analysis work.
    This is what is the need of the day.as far as my knowledge .. this subject has not been discussed this much elaborately in internet media . congrats to the author.

  9. தயவு செய்து சாருநிவேதிதா ‘சாட்’-ஐ மேலிருந்து எடுத்து விடுங்களேன். சமச்சீர் கல்வி பற்றிய பதிவை நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்துள்ளேன். வினவு தளத்தைப் பற்றி அறியாதவர்கள் மேற்கொண்டு படிக்கத் தயங்கக் கூடும்.

  10. மிகவும் அருமையான பதிவு.

    இரணியன் அவர்களுக்கும் வினவு குழுவிற்கும் நன்றி!

    பலரும் படிக்கும் வண்ணம் அனைவரும் பகிரவும்.

    எனது தளத்தில் பகிர்ந்துள்ளேன்.

  11. சிறந்த பதிவு. 12ஆம் வகுப்பு கணிதம் மட்டும் ஒப்பிட்டு பார்த்தேன் .தமிழ்நாட்டு அரசு பாடத்திட்டம் நான் 20 ஆண்டுகளுக்கு முன் படித்த அதெ பாடத்திட்டத்தில் இருந்து பெரிய மாற்றம் ஒன்றுமில்லை.இதை படித்து பொறியியல் சேர்ந்த பொழுது ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக அப்போதே( 1992) இருந்தது. இன்னும் அப்படியே!!!!!!!!
    *************
    சிபிஎஸ்சி புத்தகம் இப்ப்போதும் அரசு பாடத் திட்டத்தை விட விளக்க்மாகவும்,பல விஷயங்களை தெளிவாக சிந்திக்கும் முறையில் எழுதப்பட்டுள்ளது.இப்பாடத்திட்டம் படித்த மாணவன் உயர்கல்வியில் அர்ரசு பாடத்தில் படித்தவனை விட நன்றாக படிப்பது இயல்பே!!!!!!!
    நமது அரசு கொஞ்சம் பாடத்திட்டங்களை சம்சீராக மாற்ற வேண்டும் என்பது அடிப்படை தேவை
    நன்றி இரணியன்.

    • நன்றி,,சங்கர்
      சமச்சீர் கல்விப் பாடம் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். மெட்ரிகுலேசன், ஓரியன்டல், ஆங்கிலோ இந்தியன் முறைகளும் 10 ஆம் வகுப்பு வரையில் மட்டுமே..எனவே +2 பாடத்தில் சமச்சீர்தான் ஏற்கெனவே உள்ளது (சி பி எஸ் சி தவிர)

  12. ஆயிரம் பேர் கொண்டு செய்த மண்டபம் ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் , இத்தனை பேராசிரியர்கள் , கல்வியாளர்களின் உழைப்பு வெறும் பூஜ்யமா ? நன்றி வினவு.

  13. //இந்த மூன்று வாரத்தில் அதிலும் நான்கு முறை மட்டும் கூடி 10,000த்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் பக்கங்களை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை.//
    //இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார்//
    அடடா.. ஒரு முழு குழுவால செய்ய முடியாதத தனி ஆளா தோழர் இரணியன் செஞ்சுட்டாருனு சொல்றீங்க.. இது மட்டும் கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சுருந்தா இவர் ஒருத்தரையே அந்த குழுவோட one man armyஆ அனுப்பி வெச்சுருக்கலாம் தமிழக அரசு

    • அட இது தோணலயே. இங்கு பிரச்சனை இரணியனின் ஆய்வில் இல்லை வினவு அவ்வப்போது அடிக்கும் மட்டையடிகளை பற்றியது.

    • மனிதன்,
      ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.ஆனாலும் இரணியன் விரிவாகவே ஆய்ந்து எழுதியுள்ளார்.மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ”நிபுணர்”குழு நடத்த வேண்டிய ”முழுமையான” ஆய்வுக்கும் ஒரு வலைத்தளத்தில் கட்டுரை எழுத இரணியன் மேற்கொண்ட ”விரிவான”ஆய்வுக்கும் வேறுபாடு இல்லையா.குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதாமல் முடிந்தால் பதிவு குறித்து உங்கள் விமரிசனத்தை எழுதுங்கள்.

      10,000த்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் பக்கங்களை படித்து முந்தைய பாடத்திட்டங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய மூன்று வார அவகாசம் போதாது எனபது மகாகனம் பொருந்திய நீதி மான்களுக்கு தெரியாதா.நடப்பது கண்துடைப்பு நாடகம்.ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட தீர்ப்புக்கு நியாய தீர்ப்பு முண்டாசு கட்டப்படுகிறது.

    • ஆமான்டா , வாடா ,ரொம்ப கோவாகாறனா இருக்கானே , எங்கடா இருந்த இவோலவுநாலா.

      • வினவு,
        இந்த மட்டரகமான கருத்தற்ற பின்னூட்டத்தை எப்படி அனுமதிக்கிறீர்கள்.வாதத்திற்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள் இது போன்ற வசவுகள் மூலம் எதிராளிகள் வாதத்தை முடக்க முயற்சிப்பது அனுமதிக்கத்தக்கதல்ல எனபது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.நீங்களே இப்படி உறுதி அளித்துள்ளீர்கள்.
        \\ கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்//

  14. மிக ஆழமான அலசல்…தேவையானதும் கூட..அரசியலுக்கு அப்பாற்பட்டு மிகவும் ஈர்க்கப்பட்டு வாசித்தேன்..வாழ்த்துக்கள் இரணியன்…

  15. மிகத் தெளிவான கட்டுரை வினவு. தயவு செய்து தற்போது நடைபெற்றுவரும் நீதிமன்ற விசாரனையில் உங்கள் அமைப்பு மூலமாக சேர்க்கவும்

  16. மிகத் தெளிவான கட்டுரை வினவு. தயவு செய்து தற்போது நடைபெற்றுவரும் நீதிமன்ற விசாரனையில் உங்கள் அமைப்பு மூலமாக சேர்க்கவும்.

    சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடைத்த தளத்தின் முகவரி எனக்கு கிடைக்குமா.

  17. இதை போன்ற விளக்கமான ஆய்வை நான் கண்டதில்லை.நன்றி ஆனால் இது ஆட்சியாளர்களுக்கும் தமிழே தெரியாத ஆய்வுகுழுவுக்கும் மண்டையில் உறைக்குமா?

  18. மிக மிக அற்புதமான அலசல்! ஒரு அற்புதத்தை அற்பமாக்க விழையும் கல் நெஞ்சக்காரர்களையும், கல்விக் கொள்ளையர்களையும் என்னவெனக் கூறுவது? நெஞ்சுப் பொறுக்கவில்லை… அரசியற் காழ்ப்புணர்விற்காக மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்திலும் கொள்ளாமல் இப்படியொரு முடிவை எடுக்க எப்படி மனம் துணிகின்றது?! என்னவென்றே புரியாமல் அதற்கு தலையாட்டும் கும்பலையும் என்னவெனச் சொல்வது?! – இப் பதிவினை என் வலைப்பூவினிலலும் பிரசுரிக்கலாமா? இரணியன் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்! வினவின் சமூக / அரசியற் ஆய்வுகள் வளைகுடா வாழ் தமிழர்களிடையேயும் மகத்தான வரவேற்பினை பெற்றுள்ளன. சிறப்புடன் சேவை தொடர வாழ்த்துக்கள்!

  19. இரணியன்! அற்புதமான பதிவு.. அதன் பின் இருக்கும் கடின உழைப்பு!
    தரமற்ற பாடத்திட்டம் என்று கூச்சலிடுபவர்களுக்கு சாட்டையடி!!
    வாழ்த்துகள்!

  20. சரியான விளக்கத்துடன் வந்த கட்டுரை. பல சந்தேகங்கள் தீர்ந்தது. இவ்வளவு அருமையான பாட திட்டத்தை ஜெயலலிதா ஏன் எதிர்க்க வேண்டும்? கருணாநிதி கொண்டு வந்ததுதான் பிரச்னை என்றால் அவர் சம்பந்தப்பட்ட பாடங்களை நீக்கி விட்டு மற்றவற்றை வெளியிடலாமே!

  21. நண்பர் சுவனப்பிரியன், இதை கருணாநிதியே சொல்லி விட்டார் இருந்தும் அம்மாவுக்கு விருப்பமில்லை. ஏனெனில் இதை கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணம் தவிர வேறொண்றும் இல்லை. தோழர் இரணியன் அவர்களுக்கு மிக்க நன்றி இவ்வளவு தெளிவாக விளக்கிய தங்களையும் வினவு குழுமத்தையும் சமச்சீர் ஆதரவாளர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இதுவே சமச்சீர் கல்விப் புரட்சியாக உருவெடுக்கும் நிலை உறுவாகும். மாணவர்கள் நினைத்தால் நடத்திக் காட்டலாம்.எதிர் பார்ப்போம் வெற்றி நமதே.

  22. அட,மக்குப் பன்டாரமெ, சமச்சீர் கல்வில எந்தக் குரையும் இல்லை. அதில் உல்ல கருனானிதி, கனிமொலி வரலாரும் தா தப்பா இருக்கு. அப்புரம், அம்ம குடுக்குர சமச்சீர் கல்விக்கும் , இந்த ஆலு கொன்டு வந்த சமச்சீர் கவியையும் ஒப்பிட்டு பார்த்து பெசு. அரிவில்லாதவன் எல்லம் ப்லொக் எலுதுர காலாமா பொஷு

  23. வினவு!

    சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடைத்த தளத்தின் முகவரி எனக்கு கிடைக்குமா?

    வலைத்தளத்தின் முகவரி பகிரமுடிந்தால் பலருக்கும் பயனுடையதாயிருக்கும்.

    பதில் தரவும்.நன்றி.

    • இல்லை த‌ற்போது ச‌ம‌ச்சீர் க‌ல்விக்கான‌ இணைய‌த‌ள‌ம் இல்லை. ஆர‌ம்ப‌த்தில் கொடுத்தார்க‌ள். அப்ப‌ற‌ம் எடுத்து விட்டார்க‌ள். நீங்க‌ள் பார்க்க‌ வேண்டும் என்றால் ப‌ள்ளியில் ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ளிட‌ம் வாங்கி தான் பார்க்க‌ முடியும்.

  24. ————

    பெரியார், புராணக்கதைகளை சிறுவயது முதலே விமர்சித்த விசயம் எழுதப்பட்டு அது பயிற்சிக்கேள்வியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    சுயமரியாதை இயக்கத் தலைவி ராமாமிர்தம் பற்றிய வரலாறு,

    இதில் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்தும், ஆசிரியர் பற்றிய குறிப்பில் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக எனும்குறட்பாவுக்கு சான்றாக இவரைக் காட்டலாம்’ எனக் கரைந்துள்ளனர்.

    பிசிராந்தையார் வடக்கிருந்து உயிர்நீத்த நிகழ்வை விளக்குபவர் கருணாநிதிதான் J படித்தல் திறனை மேம்படுத்த கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியும் அவருடையதே..’இதைப் போன்ற நயமிக்கஉரைகளைத் தேடிப் படித்து, அவற்றைப் போன்று எழுதவும் பேசவும் பழகினால் உலகம் உங்களைநோக்கி வரும்’ என்று அறிவுரை வேறு இலவசமாகக் கிடைக்கிறது J

    ராஜபுத்திரர்கள் என்பவர்கள் எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தனர் என்பதும் அவர்களின் வரலாறும் தனியாக விளக்கப்பட்டிருப்பது தமிழக வரலாற்றுப் பாடத்தில் புதிய விசயம்.
    சூஃபி இயக்கம் பற்றிய பாடமும் புதிதுதான்.

    ரோமானியப் பேரரசு வீழ்ந்து போப்பாட்சி வந்ததும், அதற்கான பொருளாதார சமூகக்காரணிகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தின் தற்கால சமூகச் சிக்கல்கள் எனும் பாடத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, பிராமணர் ஆதிக்கம், நீதிக்கட்சி வரலாறு போன்றவை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.

    நீதிக்கட்சி ஏன் தோன்றியது? தியாகராயர், டி எம் நாயர் போன்றோரின் பங்களிப்புகள், நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கம், அதன் நோக்கங்கள், சாதனைகள், பெரியார் நீதிக்கட்சித்தலைவராகி திராவிடர் கழகமாக்கியது, அண்ணா, முத்துலட்சுமி ரெட்டி, தர்மாம்பாள், ராமாமிர்தம் போன்றோரின் தொண்டுகள் என விரிவாக திராவிட இயக்கத்தின் தேவையையும் பங்களிப்பையும் அலசியுள்ளனர்.

    ——-

    அது சரி. 🙂

    ஒவ்வொரு ஆட்சியிலும் அவருக்கேற்ற மாதிரி பாட புத்தகங்களை மாற்றுவதால் வரும் பிரச்சினை.
    அனைத்து கட்சி கூட்டம் கூட்டி அனைவருக்கும் உகந்த மாதிரி பாட புத்தகத்தை எழுதினால் இந்த மாதிரி பிரச்சினைகள் எதிர் காலத்தில் வராது.

    பாட திட்டத்தை இயற்றியவர்கள் பெயரையும் குறிப்பிட்டால் நல்லது.

    • என்ன இந்த மாதிரியா ? History subject will be divided in the following basis to describe about their family and their achievements.

      1. 25% pages for Kalaignar family and DMK
      2. 25% pages for Jaya, Sasikala and family
      3. 10% pages for Sonia and her family
      4. 10% pages Viyakanth and his family
      5. 5% Ramadas and his family
      6. reamining all other family

      i sincerly ask, will any of you who is supporting these useless people will make your daughter or son to be like these people.

      atleast tonight in dream, assume your daughter is like Jaya starting from her film days and similarly your son as Kalaignar from days he started having multiple wifes. If you wakeup tomorrow also as their followers, then come back and see what we can do.

      • கலைஞர் குடும்பத்த பத்தி போட்டா புரட்சி தலைவி ஒத்துக்க மாட்டாங்க. புரட்சி தலைவி பத்தி போட்டா கலைஞர் ஒத்துக்க மாட்டார். அதனால மாணவர்கள் இந்த தொல்லை இல்லாம படிக்க வாய்ப்பு இருக்கு.

        அது மட்டும் இல்லாம முக்கியமா அவங்கவங்க அரசியல் கொள்கைய பாடத்துலே புகுத்தாம பாத்துக்கிட்டாலே போதும்.

  25. தோழர் வினவு/ தோழர் இரணியன்

    //•ராஜபுத்திரர்கள் என்பவர்கள் எங்கிருந்து இந்தியாவுக்கு வந்தனர்//– அறிய ஆவலாய் உள்ளேன். விளக்குவீர்களா?

    • சாகர்கள், ஹூணர்கள், குஷானர்கள், கூர்ஜரர்கள் போன்ற வெளிநாட்டு மரபினைச் சேர்ந்தவர்கள் என சமச்சீர் கல்விப் பாடம் சொல்கிறது. அம்பேத்கர் இவர்களின் பூர்வீகம் பற்றி மிக ஆழமாக ஆராய்ந்துள்ளார்.. படை எடுத்து வந்த வெள்ளை ஹூணர்கள் இங்கே தங்கிவிட்டனர்.. இவர்களே ராஜபுத்திரர்கள் என்பது அம்பேத்கரின் ஆய்வு முடிவு..

  26. //•சீனாவில் ஏகாதிபத்தியங்கள் நடத்திய அபினிப்போர்கள், சன்யாட்சென்னின் புரட்சி, வரை விளக்கப்பட்டுள்ளன// எந்த மசுராண்டி எழுதுனாலும் சன்யாட்சன்னோடு நிப்பாட்டிரு்வாங்கே, இல்ல 1949-தோட நிப்பாட்டிருவாங்கே

    • கலாச்சாரப் புரட்சியோட நிறுத்தினா ஓக்கேவா, இல்ல 80களின் பொருளாதாரப் புரட்சி வரை வரலாமா? அதையும் சொல்லிடுங்களேன்.

      • சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்தாமல் ஏழை மாணவர்களிடமிருந்து தரமான பள்ளிக்கல்வி பறிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை உடனே அமுல் படுத்தக்கோரியும், அதை நிறுத்திவைப்பதற்காக தமிழக அரசால் வெளியிடப்பட்ட கல்விக்கொள்ளைக்கான அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டங்களை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்த தருணத்திலும் சொல்கிறேன், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டாலும் அது எந்த வர்க்க நலன் சார்ந்திருக்கும்?

        பாட்டாளி வர்க்க சிந்தனை சிறிதும் இல்லாத லும்பனுகளுக்குத்தான் கலாச்சாரப்புரட்சி என்றால் கலவரமும், French educated traitor Deng Xiaoping ஆல் அமெரிக்க ஆசிர்வாதத்துடன் செய்த எதிர் புரட்சி துரோகங்கள் பெரிய பொருளாதாரப் புரட்சியாகத்தோன்றும். தாங்கள், வினவின் தனியார்மய, தாரளமய, உலகமய மற்றும் மறுகாலனி ஆதிக்க எதிர்ப்புக் கட்டுரைகளைப்படித்தது இல்லையா? படித்து இருந்துமா, 80 களில் நடந்தது உமக்கு பொருளாதாரப்புரட்சியாக தோன்றுகிறது? அப்படி தோன்றினால் தாங்களை இந்தியா ஓளிர்கிறது என குதூகலிக்கும் அணுகுண்டு அப்துல்கலாமின் சீடன்களில் ஒருவனாகத்தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
        தற்போதைய ஆளும் வர்க்கங்களினால் கொண்டுவரும் பாடத்திட்டங்களால் ( அது என்ன CBSCய்யோ இல்ல செருப்புSCய்யோ)மக்களுக்கோ அல்லது ஒடுக்கப்பட்டுள்ள ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்திற்கோ மயிரளவேனும் பயன் உண்டா? ஆனால் பன்னாட்டு நிருவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் மலையளவு பயன் உண்டு.

        அதனாலதான மெத்தப்படிச்ச ரீடர், எந்த மசுராண்டி எழுதினாலும் ஆளும் வர்க்க நலனோடு தான் எழுதுவாங்கே. அதற்கு சிறிய உதாரணம் தான் சன்யாட்சன்னோடு
        நிப்பாட்டுவது.

    • சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்தாமல் ஏழை மாணவர்களிடமிருந்து தரமான பள்ளிக்கல்வி பறிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே சமச்சீர்கல்வி பொதுப்பாடத்திட்டத்தை உடனே அமுல் படுத்தக்கோரியும், அதை நிறுத்திவைப்பதற்காக தமிழக அரசால் வெளியிடப்பட்ட கல்விக்கொள்ளைக்கான அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டங்களை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்த தருணத்திலும் சொல்கிறேன், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டாலும் அது எந்த வர்க்க நலன் சார்ந்திருக்கும்?

      பாட்டாளி வர்க்க சிந்தனை சிறிதும் இல்லாத லும்பனுகளுக்குத்தான் கலாச்சாரப்புரட்சி என்றால் கலவரமும், French educated traitor Deng Xiaoping ஆல் அமெரிக்க ஆசிர்வாதத்துடன் செய்த எதிர் புரட்சி துரோகங்கள் பெரிய பொருளாதாரப் புரட்சியாகத்தோன்றும். தாங்கள், வினவின் தனியார்மய, தாரளமய, உலகமய மற்றும் மறுகாலனி ஆதிக்க எதிர்ப்புக் கட்டுரைகளைப்படித்தது இல்லையா? படித்து இருந்துமா, 80 களில் நடந்தது உமக்கு பொருளாதாரப்புரட்சியாக தோன்றுகிறது? அப்படி தோன்றினால் தாங்களை இந்தியா ஓளிர்கிறது என குதூகலிக்கும் அணுகுண்டு அப்துல்கலாமின் சீடன்களில் ஒருவனாகத்தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
      தற்போதைய ஆளும் வர்க்கங்களினால் கொண்டுவரும் பாடத்திட்டங்களால் ( அது என்ன CBSCய்யோ இல்ல செருப்புSCய்யோ)மக்களுக்கோ அல்லது ஒடுக்கப்பட்டுள்ள ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கத்திற்கோ மயிரளவேனும் பயன் உண்டா? ஆனால் பன்னாட்டு நிருவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் மலையளவு பயன் உண்டு.

      அதனாலதான மெத்தப்படிச்ச ரீடர், எந்த மசுராண்டி எழுதினாலும் ஆளும் வர்க்க நலனோடு தான் எழுதுவாங்கே. அதற்கு சிறிய உதாரணம் தான் சன்யாட்சன்னோடு
      நிப்பாட்டுவது.

  27. […] இதில் என்ன தவறு இருக்க முடியும்? ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் ராஜபுத்திரர்களின் வரலாறு தொடங்கி விஜயநகரப் பேரரசு வரை விளக்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக 16ஆம் நூற்றாண்டின் முகலாயர் ஆட்சியில் தொடங்கி, மராத்தியர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி, அதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போரை விளக்கி உள்ளனர். இதில் தொடர்ச்சி ஏதும் அறுபடவில்லை..அதுவரை மத்திய, வட இந்திய வரலாறு விளக்கப்பட்ட பின், தமிழ்நாட்டில் நாயக்கர், மராட்டியர் ஆட்சியும் அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் நடந்த வேலூர் புரட்சியும் தொடர்ச்சியாகத்தானே எழுதப்பட்டிருக்கின்றது? ________________________________________________________________________ – இரணியன் ________________________________________________________________ சமச்சீர் கல்வி குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்திரவுப்படி தமிழக அரசு அமைத்த ‘நிபுணர்’ குழு உயர்நீதிமன்றத்திடம் அறிக்கையை அளித்து விட்டது. சாரமாகச் சொன்னால் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தரமற்றது என்று கூறிவிட்டது. இந்த மூன்று வாரத்தில் அதிலும் நான்கு முறை மட்டும் கூடி 10,000த்திற்கும் மேற்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் பக்கங்களை இவர்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் ‘அம்மாவின்’ விருப்பத்திற்கேற்ப எழுதப்பட்ட திரைக்கதைதான். இனி இதை வைத்து சென்னை உயர்நீதிமன்றம் அம்மாவின் விருப்பத்தையே நடைமுறைப்படுத்த நிறைய வாய்ப்பிருக்கிறது. உண்மையில் இந்த சமச்சீர் கல்வி எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். இதிலிருந்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று மூடநம்பிக்கை போல பரப்பப்படும் கருத்துக்களை வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும். – வினவு முதல் பதிவு: வினவு […]

  28. அருமையான பதிவு. தமிழக அரசு அமைத்த ‘நிபுணர்’ குழு அறிக்கை எங்கே கிடைக்கிறது?

  29. Taking choice away from parents on deciding the method of education/syllabus is terrible. If you are not good enough to decide what is good for your kids, you are not good enough to make even more important decisions in life – like whom we get married to & which career to choose? Why not have a government department to take those decisions for us too? This universalization of education syllabus is going to have terrible long term effects. All rational people should oppose it.

    • ஏதோ துணிக்கடையில் போய் தேர்ந்தெடுக்க நிறைய ரகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது போல கல்வியிலும் எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்வது.அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்,கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்பதற்காக சமச்சீர் கல்வி வேண்டும் என்கிறார்கள் சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள்.உங்களை போன்றோர் காசுக்கேத்த கல்வி வேண்டும் என்கிறார்கள்.எது நியாயம்.

      ஒரு மாணவனுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டப்படி அரசு வெளியிடும் புத்தகங்களை வாங்க ஓரிரு நூறு ரூபாய்கள் போதும்.பதின்ம [matric] பள்ளி பாடத்திட்டப்படி புத்தகங்கள் வாங்க சில ஆயிரங்கள் வேண்டும்.தமிழகத்தில் எத்தனை இலட்சம் மாணவர்கள் பதின்ம பள்ளிகளில் படிக்கிறார்கள் என்ற பின்னணியில் இதை எண்ணிப் பார்த்தால் இந்த கொள்ளையின் பரிமாணத்தை புரிந்து கொள்ளலாம்.இந்த மாதிரி கொள்ளை தடைபட்டு விடக் கூடாது என்பதற்காக கல்வி கொள்ளையர்கள் நடத்தும் கள்ளப்பரப்புரைக்கு துணை போகின்றன இது போன்ற பின்னூட்டங்கள்.

      சமச்சீர் கல்வியை தரத்தின் பெயரால் எதிர்க்கும் பதின்ம,ஆங்கிலோ-இந்தியன் பள்ளி நடத்தும் கல்வி கொள்ளையர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அரசு பாடத்திட்டத்தை [கிட்டத்தட்ட அது சமச்சீர் கல்விதானே ] ஏற்று அமுல் படுத்துகிறார்கள்.அதில் மட்டும் Indianhayek போன்றவர்கள் தேர்ந்தெடுக்க ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்பு இல்லையென்றாலும் வாயை மூடிக்கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்கிறார்களே .அது எப்படி.

    • கல்லூரிப் படிப்பு என்றால் அது சார்ந்த பல்கலை வகுத்துத் தரும் சிலபஸ்-சில்தான் படிக்கின்றனர். அங்கும் இந்தப் பெற்றோர்கள் எங்களுக்குப் பிடித்த சிலபஸ்-ஐ நாங்களே எடுத்துக் கொள்வோம் என ஏன் கோருவதில்லை? என் மக்கள் ஏழை மக்களோடு சமமாகக் கற்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனும் மனப்பான்மைதானே இது? இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர ஏனைய மாநிலங்களில் எல்லாம் ஒரே பாடத்திட்டம்தானே உள்ளது? அங்கெல்லாம் என்ன குடியா முழுகிப்போனது?

      • Is the objective to improve the standards of education or to use one universal standard no matter what parents & teachers think?

        If experts decided the standards 100 years back, you would be riding a faster horse today than your parents & not an automobile. The words market, profit, competition, meritocracy & innovation are considered dirty words in India and our living standards show the result. More than half the population living on subsistence & abject poverty all around us.

        We should stop relying on the government for anything & everything. Government fundamentalism should stop for our lives to get better.

  30. கல்வி வணிகருக்கும், கல்வியாளருக்கும்நடக்கும் யுத்தம். அம்மா எந்த பக்கம் என்று காட்டி விட்டார். தமிழகமெ உன் தலை எழுத்து அவ்வளவு தான்.

  31. Why should setting educational standards & curicullum be a function of goverment at all?. The standards are best dictated by the market. Let’s face it. The reason Karuna wanted unfiorm syllabus was not with the benefit of the “poor” & “backward” in mind. And the reason why Jaya doesn’t want it is NOT because she thinks it is not a function of the govt either. Both of them to a large degree want to concentrate as much power as they can in their hands & keep the masses of TN poor with their idiotic economic policies. I hope Jaya proves me wrong in the next few years.

    As it is, govt intervention in education (with a central committee “deciding” the fee for everyone, “69% reservation even in private institutions” & what not?) has made the quality of educational standards in TN abysmal. More intervention is going to make the situation even worse.

    Universalization of education would only stifle innovation & competition in education (as though govt schools haven’t done enough damage already). Do you really want to go back to the 1980s & 1990s when only VIPs could afford a telephone connection with BSNL the universal provider?

    Universalization of curriculum also provides a ripe “indoctrination platform” for the next “Hitler” or “Mussolini” or “Stalin” to emerge out of TN. We don’t want that. Our lives are already miserable enough. Just imagine what Karuna would have done if had won the elections. Your kids would be eulogising him & his family as the best thing to have happened to TN.

    Govt should have no role in deciding what the schools teach & how much the schools charge. Instead of spending croresly wastefully on building govt schools & paying teachers, govt should subsidize education by providing “education vouchers” that poor can use in any of the private schools. Now that will set off the much needed competition in the education sector leading to better schools with superior standards/teaching methods & smarter kids at an affordable cost.

    • நீங்க சொல்ல வர்ரது என்னன்னா அரசு கல்வியில இருந்து முழுசா கழன்டுக்கணும்..அப்பதான் தரம் உயரும்..அப்படிங்கிறீங்க? இன்னிக்கு கணிசமா வேலை வாய்ப்பு வழங்கும் மென்பொருள்துறையில் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், சிடிஎஸ் போன்றவை கேம்பஸ் இன்டெர்வியூவில் முதன்மையாக அண்ணா பல்கலை, அரசு/அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரி மாணாக்கரைத்தானே தேர்ந்தெடுக்கின்றனர்.. ஏ.சி.சன்முகம் / ஜெகத் ரட்சகன் போன்ற தரம் வாய்ந்த கல்வி தரும் தனியார் கல்லூரிகளுக்கு மிகவும் சொற்ப வாய்ப்புகளைத்தானே தருகின்றனர்..அது ஏன்?

      தரம், போட்டி என்ற வார்த்தை விளையாட்டுகளை எல்லாம் விட்டு விட்டு இப்பதிவில் தரப்பட்டிருக்கும் பாடங்களை விட தனியார் முதலைகள் எந்த வகையில் தரமான பாடங்களைத் தருகின்றனர் என்பதை விளக்கினீர்கள் என்றால் சவுகரியமாக இருக்கும்..

      • Govt shouldn’t have any role in “delivering” education. Its only role, if at all, should be to subsidize the “consumers” (ie.,children) by providing school education vouchers and not build schools, aid schools & subsidize the producers (ie., teachers & schools). Govt schools or aided schools have no incentive to improve standards. Private schools with demanding consumers is the only way to improve standards.

        There are many more private colleges/univs with better teaching infrastructure & staff compared to these govt institutions. Engg student with same aptitude in private colleges like SRM, Crescent, SVN, Mepco,etc., stands a better chance of getting a job than someone from GCE Tirunelveli, Salem, etc.,

        Qn to be asked is why are there so few quality institutions. Govt has managed to completely distort the market system by heavy regulations (to get AICTE/NBA approvals, you have to have big political contacts or willing to pay big bribes), price controls (fixing fee, etc), caste based reservations, etc.,

        To answer you last question – Nobody is forcing people(or putting a gun to their heads) to join their kids into private schools. The fact is common people flock to private schools in droves and shun govt schools completely. Even people who are poor. Even people who can barely afford private schools. The universal truth is govt schools suck. Where is the question of govt coming in and “forcing” everyone to follow one standard – a standard it knows is the best for everyone ? If govt wants to attract people into public school system, let it “compete” with private sector. “Universal Syllabus” on one side Vs Private schools on the other side. Let parents decide. Let consumers decide. That’s what “freedom” is. India is a free country, is it not ?

        • excellent argument I.Hayek.

          Pls also see :

          http://www.accountabilityindia.in/accountabilityblog/2235-case-incentive-payments-teachers-government-schools

          There has been a long debate about paying the government teachers (and public sector employees, in general) as per their performance. It has been argued that problems like high absenteeism, lack of teaching when in school, and abysmal quality of teaching might be alleviated if the teacher salary is made conditional on outcomes reflecting their performance. Given the unionization among the government teachers, wider implications for payment policies in public sector, and some legitimate concerns, this policy has been opposed vociferously. Rigorous empirical evidence on this controversial question has started coming in only recently. This post summarizes results from some of the recent research papers analyzing the impact of making the teacher salary conditional on certain observable outcomes…

      • “Uniform Syllabus is better than any other current syllabus”. This is your “subjective” view on the matter. How do you expect me also to agree with your assesment. And millions of other parents, teachers & kids ? Let schools decide what syllabus they want to follow.

        If “uniform syllabus” is so much better as you suggest, those schools that opt for the current syllabus should lose “business” to the “uniform syllabus” schools because they are “substandard” and parents will be voting with their “wallets”. Private schools may then voluntarily opt for “uniform syllabus”. This seems like how civilized people run the affairs. “Forcing” your views on others is evil.

        There is no expert who knows everything in this world. Knowledge is widespread & you can’t have a “one size fits all” solution to everything. “Govt knows best” solutions belong in the “oppressive” soviet union not in the “free” india.

        • சமச்சீர் கல்வி முறையின் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது எனும் பிரச்சாரம் தவறானது என்பதை அப்பாடங்களை ஆய்வு செய்து கருத்தை சொல்லி இருக்கிறோம். இந்த ஆய்வினைச் செய்யாமல் கட்டாயமாக சமச்சீர் கல்விமுறை சரி என நான் கருதுகிறேன். அதனை நீ ஏற்கவேண்டும் என யாரும் உன்னை வலியுறுத்தவில்லை. சமச்சீர் கல்வி மீதான எரிச்சல் உனக்கிருப்பின் அதனை இப்பாடநூல்களை முன்வைத்து இன்னின்ன இடங்களில் இது தரம் தாழ்ந்துள்ளது எனச் சொல்வதுதான் அறிவு நாணயமாகும். அதை விட்டு விதண்டாவாதத்துக்குள் நுழைந்தால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்?

          ஒரு நாட்டில் கல்வி, மருத்துவம், நகர/கிராம கட்டமைப்பு, குடிநீர் போன்ற அடிப்படை விசயங்களில் அரசின் கட்டுப்பாடு இருந்துதான் தீர வேண்டும்.

          பயிற்றுமொழியையோ, பாடத்திட்டத்தையோ முடிவெடுத்திடும் உரிமையை எந்த நாட்டிலும் பெற்றோர்களிடம் தரமுடியாது. பிரான்சு நாட்டில் குடியேறி இருந்தால் உன் பிள்ளையின் பயிற்றுமொழி பிரெஞ்சுதான். அதனை பிரான்சு அரசுதான் முடிவு செய்கிறது. இல்லை..அதனைப் பெற்றோர் முடிவு செய்யணும் என்றெல்லாம் வாதிட முடியாது. குடிநீர் சுத்தமாக இருக்கவும், வீடுகள் இடைவெளி விட்டுக் கட்டிடவும் அரசுதான் விதிமுறைகள் வகுக்க வேண்டும். இல்லை..என் வீட்டை நான் என் இஷ்டப்படி கட்டிக்கொள்ள உரிமை வேண்டும் எனக்கோர முடியாது.

          இணையத்தில் புகுந்து விளையாடும் அளவிற்கு அறிவு பொங்கி வழியும் பெற்றோர்களுக்கே ‘இந்த சமூகத்தில் இட ஒதுக்கீடு ஏன் தேவையாக உள்ளதென்றோ’, ‘பாடத்திட்டத்தின் தன்மை என்ன’ என்றோ தெளிவில்லாத அளவிற்குதான் அறிவு உள்ளது எனும்போது அரசின் கட்டுப்பாட்டை நீக்கக் கோருவது அயோக்கியத்தனம் மட்டுமல்ல, அழும் பிள்ளையை அமர்த்த நரியின் கையில் பிள்ளையைக் கொடுப்பதற்குச் சமம் அது.

          புதிய கல்விக்கொள்கையை 1985 இல் ராஜீவ் காந்தி கொண்டு வந்ததில் இருந்தே எல்லாச் சீர்கேடுகளும் ஆரம்பித்து விட்டன. புதிதாக கல்லூரிகளை / பள்ளிகளைத் திறப்பதில்லை எனக் கொள்கை முடிவெடுத்த அரசு சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க ஊக்குவித்தது. எல்லாப் பெற்றோர்களும் தனியார் பள்ளிகளினை நோக்கிப் படை எடுக்கக் காரணமான உள்கட்டமைப்புச் சீர்கேட்டை அரசின் தனியார்மய/தாராளமயக் கொள்கைதான் உருவாக்கியது. காமராஜர் காலத்தில் 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் எனும் விகிதமாக இருந்தது. அதனை அரசாணையே 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என மாற்றியது. ஆனால் நடைமுறையோ இன்னும் மோசமாக்கப்பட்டது. அரசு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காமல் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மக்களிடம் கொள்ளையிட வழி செய்யப்பட்டது.

          நகர்மயமாக்கமும், வாடகை உயர்வும் உழைக்கும் மக்களை புறநகர்க்குத் தள்ளியது. ஆங்கே குவிந்த மக்களுக்குத் தேவையான பள்ளிகளை உருவாக்க அரசு மறுத்தது. ஆனால் கணக்கற்ற கொள்ளையர்கள் பள்ளிகளைத் திறந்து, பெற்றோர்களுக்கு வேறு மாற்று வழியே இல்லாமல் செய்து விட அரசே உதவியது.. இந்நிலையில் தனியார் பள்ளிகளின் முன் பெற்றோர் படை எடுப்பதை குற்றமாகப் பார்ப்பது நாணயமாகுமா?

          மேலும் ஆங்கில மோகத்தையும் திட்டமிட்டுப் பரப்பிய ஊடகங்களும் தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தைக் கிளறி விட்டது என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

          1990க்கு பின்னர் அதிகரித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் அதிகரிக்கப்படவில்லை. உலகவங்கியின் வழிகாட்டுதலின்படி 1991 முதல் 2007 வரை அரசு பொறியியல் கல்லூரிகளில் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமனத் தடையையும் அரசு ஏற்படுத்தியது.. எத்தனை ஆண்டுகள்தான் தொகுப்பூதியத்தில் பணிபுரிய ஆசிரியர்களால் இயலும்?

          பொதுப்போக்குவரத்தை ஒழித்து விட்டு ஆம்னி பஸ்களையும் கால் டாக்ஸிகளையும் அனுமதி.. பயணிகள் பயணிக்கும் வாகனத்தைத் தீர்மானிக்கட்டும் என நீ ஆலோசனை சொன்னால் அது எவ்வளவு பித்தலாட்டமோ அதே போலத்தான் கல்வியில் அரசின் தலையீட்டை நீக்கு என்பதும்..

          இன்னொரு விசயத்தையும் நினைவுபடுத்துவது அவசியம்.
          தாங்கள் அடிக்கின்ற கட்டணக் கொள்ளையையும், பாடத்திட்ட சுதந்திரத்தையும் அரசு கண்டுகொள்ளக்கூடாது எனக் கோரும் பள்ளிக் கொள்ளையர்கள் பெரும்பாலும் தாங்கள் நடத்தும் கொள்ளைக்கூடங்களுக்கு அரசிடம் இருந்துதான் புறம்போக்கு நிலங்களை அற்ப குத்தகைக்கு 99 வருடங்களுக்கு எடுத்துள்ளனர். அவர்களுக்கு சொத்து வரி, சேவை வரியில் இருந்து விலக்குக் கோருகின்றனர். அறக்கட்டளையின் கீழ் மெட்ரிக் பள்ளிகளை ஆரம்பித்திருப்பதால் வருமான வரிவிலக்கும் கோருகின்றனர்.. அதற்கு மட்டும் அரசு வேண்டுமா?

          இந்தப் பதிவின் விவாதம் சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் தரமானதா இல்லையா என்பதே. இந்தப் பதிவில் வந்து அதனைத் திசை திருப்ப முயலாமல் அறிவு நாணயத்தோடு இங்கே விளக்கப்பட்டிருக்கும் சமச்சீர் பாட நூல்கள் தரமில்லை எனக் கருதினால் எவ்வாறு அது மற்றைய பாடத் திட்டங்களில் இருந்து தரம் தாழ்ந்தது எனச் சொல்லவும்.

          • My world view is “We are born as free men into this world and a nation/state created by man is only to protect this freedom”. Your world view is “We are born as slaves of the nation/state into this world and we should just politely accept whatever freedom the nation/state deems fit to us”. That is slavery not freedom.

            My whole point is that analyzing this uniform syllabus based on your subjective values is futile & completely irrelevant. I have nothing to offer to say if uniform syllabus is better or worse than CBSE/matric. I respect your freedom to decide what is best for your kids. By all means go for a uniform syllabus school. But that does not mean you can decide for your neighbour’s kids though. And the state has no divine rights to decide this for anyone.

            Do you realize how many standards (dictated by market) went into manufacturing the computer/TV/phone you are using right now. Did you really analyze each & every standard like an electrical, electronics, communication engineer before deciding on this computer/TV/phone? That is the power of the market. Not respecting the markets & hanging onto this maai-baap government for everything does not solve any problems but only aggravates issues.

            • என்னய்யா வாதம் இது.உயர் நிலை பள்ளி வரை நான்கு வகையான பாடத்திட்டங்களும் இருக்கட்டும் என வாதிடும் உங்களிடம் மேல்நிலை பள்ளியிலும் கல்லூரியிலும் ஒரே பாடத்திட்டம் இருக்கிறதே என பொட்டில் அறைந்தாற்போல் கேட்கிறோம்.அதற்கு பதில் சொல்ல வக்கின்றி பாடத்திட்டத்தை ”market ” தீர்மானிக்கட்டும் என்ற பொருளற்ற வாதத்தை மீண்டும் மீண்டும் வைக்கிறீர்கள்.

              இன்று தமிழகத்தில் தனியார் பள்ளி முதலாளிகள் எத்தகைய கொள்ளை நடத்துகிறார்கள் என்பதை இங்கு சிறு குழந்தைகள் கூட சொல்வார்கள்.எந்த ஊரில் இருக்கிறீர்கள். அந்த கொள்ளை கும்பலிடமே பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை விட சொல்கிறீர்கள்.முயலுக்கு மூன்றே கால்கள்தான் என சாதிக்க தெரிந்த அந்த எத்தர்கள் தங்கள் ”business ” ஐ எந்த பாடத்திட்டத்திடமும் இழக்க மாட்டார்கள்.அதற்கான பரப்புரை வலுவும் தனியார் பள்ளிகளே சிறந்தவை என்ற மயக்கத்தில் மக்களை ஆழ்த்தும் ”தரமும்”அவர்களிடம் உண்டு.அந்த ”தரத்தை” எப்படி உருவாக்குகிறார்கள்.மழலையர் வகுப்பில் சேர்க்கவும் குழந்தைக்கு நேர்முக தேர்வு.பெற்றோர் பட்டதாரியாகவும்,ஆங்கிலத்தில் உரையாட வல்லவராகவும் இருக்க வேண்டும்.அவர்கள் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேறியிருந்தாலும் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தால் 11 ஆம் வகுப்பில் சேர்க்க மாட்டார்கள்.பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை வைத்து சிறந்த மாணவர்களை தெர்ந்தெடுத்து அந்த கல்வி ஆண்டு முடிவதற்குள் 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கையை முடித்து விடுவார்கள்.இப்போது மட்டும் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரிய வேண்டியதில்லை.காரணம் மாணவனின் மதிப்பெண் பேசுகிறது.இப்படிதான் ”தரம்” என்ற மாயை தோற்றுவிக்கப்படுகிறது. ஆகவே மக்களுக்கு பொறுப்பான அரசு பாடத்திட்டத்தை வகுப்பதே சரியானது.

              \\By all means go for a uniform syllabus school. But that does not mean you can decide for your neighbour’s kids though. And the state has no divine rights to decide this for anyone.//\\ I have nothing to offer to say if uniform syllabus is better or worse than CBSE/matric.//

              இது முன்பே விடையளிக்கப்பட்ட வாதம்.\\.அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்,கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்பதற்காக சமச்சீர் கல்வி வேண்டும் என்கிறார்கள் சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள்.உங்களை போன்றோர் காசுக்கேத்த கல்வி வேண்டும் என்கிறார்கள்.//.கவனிக்கவும்.பக்கத்து வீட்டு குழந்தைக்கும் சேர்த்துத்தான் அனைவருக்கும் தரமான கல்வி வேண்டுமென்கிறோம்.உங்களை போல் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கச் சொல்லவில்லை.அந்த வகையில்தான் தற்போது வகுக்கப்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி தரமானது என பதிவு நிறுவுகிறது.அது பற்றி எந்த ஒரு விமரிசனமும் வைப்பதற்கு உங்களால் முடியவில்லை எனும்போது சமச்சீர் கல்வி தேவையில்லை என தீர்ப்பு எழுதும் தகுதியும் உங்களுக்கு இல்லை.

          • நன்றாகக் கூறினீர்கள் தோழர் இரணியன் அவர்களே. கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு இவையனைத்தும் நிச்சயம் சமூகம் தானே முடிவு செய்து தனக்குத்தானே வழங்கிக் கொள்ளப் படவேண்டியவை. இவையெல்லாம் சேவைகள். விற்பனைப் பொருட்களல்ல. இன்று தனியார் கல்விக் கூடங்களும் தனியார் மருத்துவ மனைகளும் ஊரை விற்று உலையில் போடும் கொள்ளைக் கூடாரங்களாகி விட்டன. இதில் முதலாளித்துவத்தின் போக்கான பெரிய மீன் சின்னமீன்களை விழுங்குவது இப்பொழுது நடைபெறுகிறது. உம். அப்போல்லோ மருத்துவமனை, ஃபோர்டிஸ் மருத்துவமனைகள் ஆகியன. இவை ‘வழங்கும்’ மருத்துவ சேவைகள் அப்படியொன்றும் தரம் மிகுந்தவை கிடையாது. அவை விற்கும் அதே மருத்துவ வசதிகள் பொது மருத்துவமனைகளிலும் கிடைக்கச்செய்யலாம்.நம் அரசாங்கம் என்றும் மக்களுக்கானதல்லவே. வேண்டுமென்றே பொருட்களை தவிர்ப்பது, தரங்குறைந்த பொருட்களை வாங்குவது, உள்ளவற்றை சரிவர பராமரிக்காதது, உபயோகப்படுத்தாதது இவையே நமது மருத்துவமனைகளை தரங்குறைந்ததாக காட்டச்செய்கின்றன. இதேநிலைதான் அரசு பொதுப்பள்ளிகளிலும். இதற்கு ஒரே தீர்வு தனியார் மருத்துவமனைகளையும், பள்ளிகளையும் அரசு கையகப்படுத்த வேண்டும். ஐரோப்பியநாடுகளில்நிலவும் விதமாக அனைத்துக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை சமூகத்தின் இப்போதைய பிரதிநிதியான அரசே நடத்த வேண்டும். ஆனால் இது இந்த முதலாளித்துவ அரசின் கீழ் நடக்காத ஒன்று.

  32. த‌ற்போது உள்ள‌ த‌மிழ்நாடு பாட‌த்திட்ட‌ம் த‌ர‌ம‌ற்ற‌து என்ப‌தில் எந்த‌ ஒரு ஐய‌மும் இல்லை. என் ஆசிரிய‌ர்க‌ளே நான் ப‌ள்ளி ப‌டிக்கும் கால‌த்தில் புல‌ம்பிக் கொண்டு தான் இருப்பார்க‌ள். என் வேதியிய‌ல் ஆசிரிய‌ர் த‌னியாக‌ மென‌க்கெட்டு முழு புத்தக‌த்துக்கும் நோட்ஸ் எழுதி அதைக் கொடுத்து தான் எங்க‌ளை ப‌டிக்க‌ வைப்பார்க‌ள்…….
    த‌ற்போது இந்த‌ பிர‌ச்ச‌னையை மாண‌வ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையாக‌ எடுத்துக் கொள்ள‌ மாட்டேன் என்கிறார்க‌ள். இதை அர‌சிய‌ல் பிர‌ச்ச‌னை ஆக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ளுக்கு ….
    ப‌ழைய‌ சில‌ப‌ஸ் உண்மையிலேயே ஒரு இத்துப் போன‌ சில‌ப‌ஸ். தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தயாராகிற மாணவர்களில் பெரும்பாலோனோர் தாங்கள் படித்த துறையில் எப்படியோ பாசாகிவிடுகிறார்கள்! ஆனால் வேலைக்குத் தேர்வு செய்யப்படுகையில் தோற்கிறார்கள்! unemployable! இது எதனால் என்பதையும் கொஞ்சம்சேர்த்து யோசிக்கலாமே! மேலும் என‌க்கு தெரிந்து இந்த‌ பாட‌த்திட்ட‌த்தை ஒரு ந‌ல்லா ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌க்கூடிய‌ எல்.கே.ஜி. ஸ்டூட‌ண்ட் கிட்ட‌ கொடுத்து ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ண‌ வ‌ச்சு எக்ஸாம் ஹால்ல‌ கொண்டு போய் விட்டால் அந்த‌க் குழ‌ந்தை ஸ்டேட் ப‌ஸ்ட் வ‌ந்தாலும் ஆச்ச‌ர்ய‌ப் ப‌ட‌ ஒன்னும் இல்லை. அப்ப‌டி தான் பாட‌த்திட்ட‌ம் வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. கேள்வித் தாள்க‌ளும். இதுவே நீங்க‌ள் முழு புத்த‌க‌த்தையும் ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணி போய் எழுதினாலும் சிபிஎஸ்சி சில‌ப‌ஸ்ல‌ க‌ண்டிப்பா பெயில் தான். அத‌னால் சிபிஎஸ்சி சில‌ப‌ஸ்க்கு இணையான‌ ஒரு பாட‌த்திட்ட‌த்தை கொண்டு வாருங்க‌ள் என‌ கேட்கிறோம். இதில் எதாவ‌து குறைபாடு இருந்தால் அதை நீக்கி விட்டு அத‌ற்கு இணையாக‌ ந‌ல்ல‌ பாட‌த்தை வையுங்க‌ள். வீட்டுல‌ மோட்டை புச்சி இருக்குங்க‌ற‌த்துக்காக‌ வீட்டையே கொளூத்த‌ற‌து அறிவுடைமையா?

    எல்லோரும் ப‌ள்ளிக்கு செல்கிறார்க‌ள். ஆனால் ப‌டிக்கிறார்க‌ளா?????????

    அ.தி.மு.க‌, தி.மு.காவுட‌ன் போட்டி போட‌ எண்ணினால் கூடிய‌ விரைவில் மாண‌வ‌ர்க‌ளுக்கு பாதிப்பு ஏற்ப‌டா வ‌ண்ண‌ம் அடுத்த‌ வ‌ருட‌த்துக்குள் இப்போது உள்ள‌ ச‌ம‌ச்சீர் க‌ல்வியை விட‌ சிற‌ப்பாக‌ ஒரு பாட‌த்திட்ட‌த்தை உருவாக்கி காட்டுங்க‌ளேன். அது போட்டி…அதை விட்டுட்டு யார் எக்கேடு கெட்டால் என‌க்கென்ன இவ‌ங்க‌ யாரும் உருப்ப‌ட‌வே கூடாது என்று எதையாவ‌து கார‌ண‌ம் காட்டி முழு திட்ட‌த்தையும் குளோஸ் ப‌ண்ற‌து எந்த‌ வ‌கையில் சார் நியாய‌ம்.

    ஒவ்வொரு ஆண்டும் குறைந்த‌து 10,00,000 மாண‌வ‌ர்க‌ளுக்கு மேல் 10ம் வ‌குப்பு 12ம் வ‌குப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்க‌ள். ஆக‌ ஆண்டுக்கு 20,00,000 வீத‌ம் 5 வ‌ருட‌ங்க‌ள் க‌ண‌க்கில் கொண்டால் ஒரு கோடி மாண‌வ‌ர்க‌ள்…

    ஒரு கோடி மாண‌வ‌ர்க‌ளின் வாழ்க்கை த‌ர‌ம் முக்கிய‌மா? இல்ல‌ உங்க‌ ஈகோ முக்கிய‌மா?ந‌ல்ல‌ முடிவு எடுக்க‌ப் ப‌ட‌ட்டும்.

  33. அட‌ப்பாவிங்களா? த‌மிழ்நாடு டெக்ஸ்புக் எதுவும் ஆன்லைன்ல‌ கிடைக்க‌ முடியாத‌ ப‌டி இழுத்து மூடிட்டாங்க‌. இதுல‌ இருந்தே தெரிய‌லையா பாட‌புத்த‌க‌த்தின் த‌ர‌ம்.

  34. They scraped Samacheer kalvi as a whole only because the Social Science books of all standards have one particular chapter something like “Social reforms in Tamilnadu” in all classes from 6th Std to 10 Std.

    This chapter talks about all the history of Dravidian movements, the braminical suppression and Periyar’s Struggle against them. Even those history is restricted only up to the period CN Annadurai and the erstwhile cadres and don’t even have a mention about karunanthi.

    If they remove only this one chapter from the one subject all through 6th to 10th Std then it will look very conspicous about their concern.

    So simple Scrap Samacheer Kalvi.

    Its not because it is created by Karunanithi but its will teach the younger generation all about the malpractices of the brahmins till today.

    For All our old generations never had a chance to learn anything else about Periyar except cutting down 500 Toddy trees.

    If the younger generation is taught about Braminical dominance in the school level itself everything will be gone. They say that it affect the Brahminical sentiments and feelings.

    So better we remove the whole Indian Independence chapters that will hurt the English men’s feelings

    We remove all the chapters of Muslim invasion that will hurt Muslim’s feelings.

    Better we’ll remove the whole history subject itself so that nobody’s feeling will be hurt and let our children grow as idiotic slaves

    • வரலாறு பாடத்துக்குப் பதிலாக கீழ்க்கண்ட ஒரே பத்தியை மட்டும் வாசிக்கச் சொல்லலாம்.

      “இந்தியா அல்லது பாரத நாட்டில் எல்லோரும் எப்போதும் சுகமாக வாழ்ந்தார்கள். அவர்களை யாரும் வெல்லவில்லை.அவர்களும் யாரையும் வெல்லவில்லை. அவர்களிடம் போதிய அளவிற்கு அலுமினியக் குவளைகள் இல்லாமல் இருந்ததுதான் அவர்களிடம் இருந்த ஒரே குறை. மானும் புலியும் ஒருங்கே நின்று நீரருந்திக் கொண்டிருந்த இந்தியாவின் தெருவெங்கும் கன்னாபின்னாவென்று ஓடிக் கொண்டிருந்த தேனாற்றை அள்ள குவளைகள் போதிய அளவில் இருந்திருக்கலாம்.”

      வரலாறு பாடத்தில் எல்லோருக்கும் 100 மதிப்பெண்கள்.

    • வரலாறு உள்ளவர்கள் தான் அதை பற்றி பேச முடியும். திராவிட இயக்கம் தோன்றிய காரணம், அதன் கொள்கைகள், அதன் போரட்டங்கள், அதன் சாதனைகள் அதற்கு இன்னும் உள்ள பணிகள் அகியவை குறித்து வரலாற்று பாடங்களில் மாணவர்களுக்கு போதிப்பது அவசியமானது.
      பிராமணர்கள் எவ்வாறு மக்களை மூடநம்பிக்கைகளில் மூழ்கடிதார்கள் என்பதை உணர்துவதும் அவசியம்.

    • ஹாய் எல்லா புத்த‌க‌ங்க‌ளையும் என‌க்கு இந்த‌ இணைய‌ முக‌வ‌ரிக்கு அனுப்ப‌ முடியுமா?ரெண்டையும் ஒப்பிட்டு ஒரு ப‌திவு போட தான். maha85web@gmail.com

  35. கல்வி திட்டத்தை ஆய்வு செய்த ஆய்வு குழு உரிப்பினர்களை கூப்பிட்டு, ஆளுக்கொரு விடைத்தாள் கொடுத்து, தத்தனியாக அமரவைத்து தேர்வு எழுதுவது போல் கேள்விகளை கொடுத்து பதில் எழுத சொல்லுங்கள் முதலில். பிறகு அவர்கள் படித்த விபரம் தெரிந்து கொண்டு அறிக்கை சமர்பிக்கலாம்.

  36. I have the 10th std Math Book, I downloaded long time ago had a brief looked at it.

    Based on my quick read, it was an excellent book, far better than what I learnt, I wish this was our book when we studied. I did feel jealous about the current kids when I was skimming through the book.

    I did tutor CBSC kids when I was in college, the proposed book is quite equivalent on the content (based on my tutoring days 10 yrs ago).

    and one more thing, some of contents in the book are taught in the Calculus I & II courses in the US (which students usually study in their second year undergraduate or so).

    Just in case if you are wondering, in what capacity I have the ability to comment, I did graduate from Iyer and Iyengar Institute, Madras…

  37. முட்டாள்களின் மனம் எப்போதும் அடிமையாய் இருக்கவே விரும்புகிறது.
    அம்மா சொல்லிவிட்டால் இந்த முட்டாள்கள் அதை மீறி சிந்திக்கப் போவதில்லை.
    பார்ப்பனியம் தனது வழியில் உறுதியாக நிற்கிறது.

    தேவையற்ற பாடங்களை பாடத்திட்டத்தில் இல்லை என்று அறிவித்துவிட்டாலே மாண்வர்கள் அதை விட்டுவிட்டு அடுத்ததை படிக்கப் போய்விடுவார்கள். ஆட்டை கொடுத்து மக்களை மந்தைகளாகவே வைத்திருக்க விரும்பும் தாயுள்ளம் நீதிமன்றம் ஆயிரம் சவுக்கடிகள் கொடுத்தாலும் அசராது என்றே தோன்றுகிறது

  38. மிக அருமையான ஒரு கட்டுரை வினவு குழுமத்திடம் இருந்து. வாழ்த்துக்கள் இரணியன் மற்றும் வினவு தோழர்கள். இதை அவசியம் இதை எல்லாம் படிக்காமலே படித்தது போல கருத்து சொல்லிவரும் நண்பர்கள் தங்கள் சிந்தனையை இனியாவது மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். மிக்க நன்றி வினவு குழுமத்துக்கு!

  39. eelaam vakuppu muttai sothanai inru irandaam vakuppu maanavan seithu viduvaan. kalviyin tharam enbathu manavanin munthaya nilaiyinai therinthu , aduththa nilaikku kondu sella unthuthal erpaduththa vendum ,aanaal pala idangkalil pinnukku thallum nilai ullathu.. samacheer puththakaththil maarram thevai.. nubunar kulu kondu alasinaal mudivu erpadum.. atharkkaaka samaachcheer kalviyai ethirkka villai… puththakam viraivil kodukka arasu muyala vendum…

    • உண்மையிலேயே நற்செய்திதான் ராம், இனிமேல் பிஎசுபீபீ லேருந்து டூன் ஸ்கூல் வரைக்கும் காசு அதிகமா கட்டினா புத்திசாலிஆகலாம்கிற பொய்யை ஒரே லிங்குல சுக்கு நூறாக்கிட்டீங்க… இனிமேலாவது பார்ப்புகள் மற்றும் கன்வர்டட் பார்ப்புகள் சமச்சீர் கல்வி பயின்று ஜெனியுவீனான அறிவை பெறட்டும்

  40. The issue is not the content,the issue is the skill of the teachers.Content is pretty much the same everywhere.Even CBSE is not some great application oriented syllabus,even though the content is slightly better.The best syllabus is ICSE/ISe and the students from there are the best at school education.

    Regarding Samacheer Kalvi,it is obviously apolitical war but these days after the adevent of the internet and consumerism in general,the students dont care much about studies due to bad teachers/no teachers.Regarding education being public private,who goes to public schools these days.The government instead trying to limit the autonomy pf the private schools should try and improve the public schools and get all those students back to government schools.Thats way more important than altering content and all that.

    I wouldn’t be surprised if many city based schools changed curriculum to CBSE and all those matric students start going to CBSE instead of state board syllabi schools.

    Doon school is an elitist school which has nothing to do with education but PSBB is a very good school.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க