தனியார்மயமும் தாராளமயமும் மக்களை நாட்டின் குறுக்கும் நெடுக்கும் வீசியெறிந்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு பெருமளவு பேருந்தைத்தான் நாட வேண்டியிருக்கிறது.
கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே தொடர்வண்டியில் இடம் நிச்சயம். மேலும், வேண்டிய நேரத்தில் கிடைக்கின்றன, கொண்டு செல்கின்றன என்ற காரணங்களாலும் பேருந்துகளே மக்களுக்கு பெருமளவு கை கொடுக்கின்றன. இதில் அரசுப் பேருந்துகள் அதிகரிக்கப்படாமல் அதே எண்ணிக்கையிலிருந்தாலும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகளைவிட சொகுசாகவும், வசதியாகவும், முக்கியமாக சரியான நேரத்துக்குக் சென்றுவிடும்படியாகவும் இருக்கின்றன என்பதே பெருமளவு சொல்லப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.
இன்று எல்லா முக்கிய நகரங்களுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள், ஏசி, ஸ்லீப்பர் போன்ற வசதிகள், இணையத்தில் பதிவு செய்துக்கொளளும் வசதி, குடிநீர் பாட்டில், முகந்துடைத்துக் கொள்ள கைக்குட்டைகள் என்று வாடிக்கையாளர்களை பலவகைகளில் ஈர்க்கின்றன. அதோடு, எவ்வளவு தொலைவாக இருந்தாலும் பயண நேரத்தை மிகக்குறுகிய நேரத்தில் சென்னையிலிருந்து மதுரையையோ ஏன் கன்னியாகுமரியைக்கூட எட்டிவிடுகின்றன இப்பேருந்துகள்.
சான்றாக, சென்னையிலிருந்து மதுரைக்கான சராசரி தூரம் 592 கிமீ என்றால், தனியார் பேருந்துகள் 7.30 மணிநேரத்துகுள்ளேயே சென்றடைகின்றன. மாறாக அரசுப்பேருந்துகள் பத்து மணிநேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கின்றன.
எனில், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம்? இந்தியாவில், சட்டப்படி நகர்ப்புறத்தில் சராசரி மணிக்கு 50 கிமீ வேகமாகமும்,புறநகரில் சராசரியாக 80கிமீ வேகமும் செல்லலாம். ஆனால், இந்த ஆம்னி பேருந்துகள் இவ்விதிகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. இதற்கு அவ்வப்போது நிகழும் விபத்துகளே சாட்சி.
இப்பேருந்துகள் சராசரியாக, மணிக்கு 110 கிமீ மேல் அல்லது திடீரென்று கட்டுக்குள் கொண்டுவரமுடியாத அளவு வேகத்தில்தான் தான் செல்கின்றன. அதோடு, அரசுப் பேருந்துகளைவிட இதில் கட்டணமும் பலமடங்கு அதிகம். சராசரியாக, 900ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும் இக்கட்டணங்கள், பஸ்சைப் பொறுத்து 2000ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுவதுண்டு.
நேரம், வசதி போன்ற காரணங்களால் தனியார் பேருந்துகளை மக்கள் பெருமளவு விரும்புவதாகச் சொல்லப்பட்டாலும் தனியார் பேருந்துகளின் வருமானம் அதில் பயணம் செய்பவர்களனால் மட்டுமல்ல பொருட்கள் ஏற்றிச்செல்லப்படுவதாலும் வருகின்றது. சீட்டுக்குக் கீழாக இருக்கும் தளம் பொருட்களை வைக்கத்தான் என்றாலும் முறைகேடாக பல்வேறு பொருட்களை வைத்து ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதில், வேதிப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் அடங்கும்.
இப்படி அளவுக்கதிகமான பாரத்துடன், கட்டுக்கடங்காத வேகத்தில் பேருந்துகள் ஓட்டிச் செல்லப்படும்போது விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதோடு, ஒரு பேருந்துக்கு ஒரே டிரைவர் மற்றும் கிளீனர்தான் இருக்கின்றனர். தனியார் பேருந்துகள் வந்த புதிதில் இரண்டு டிரைவர்கள் மாறி,மாறி ஓட்டுவதை கண்டிருக்கலாம். தற்போது நிலைமை மாறிவிட்டது. எவ்வளவு நீண்ட தூர பயணமென்றாலும்,ஒரு வண்டிக்கு ஒரே டிரைவர் மற்றும் ஒரு கிளீனர்தான்.
பெரும்பாலான தனியார் பேருந்து டிரைவர்களுக்கு போதுமான ஓய்வு இல்லாத நிலையில்தான், தொடர்ந்து வண்டியோட்டிக்கொண்டு வருகிறார்கள். எப்படியும் சொன்ன நேரத்திற்குள்ளாக இலக்கை அடைந்துவிட விரட்டிப்பிடித்து ஓட்டுகிறார்கள். இதில் கொஞ்சம் அசந்தாலும் அது அடுத்தநாள் செய்தியாகிவிடுகிறது. சமீபத்தில், வேலூருக்கு அருகில் நிகழ்ந்த பொள்ளாச்சி பேருந்து விபத்து கூட இந்த காரணங்களை உள்ளடக்கியதுதான். கட்டணமும் விபத்துக்கான சாத்தியங்களும் அதிகமென்றாலும் ஏன் தனியார் பேருந்துகளையே நாடுகிறார்கள்?
முதலாவதாக, அரசுப்பேருந்துகள் இன்றைய தேவைக்கேற்றபடி எண்ணிக்கையில் இல்லை என்பது ஒரு காரணம். சமயங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அவை மாற்றுப்பேருந்துகளே. அதன் இயக்கமும் சரியாக இருப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசுப்போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்குவதாக அரசுத் தரப்பில் சொல்லப்படுவதும் நாம் அறிவோம்.
எனில் தனியார் பேருந்துகள் மட்டும் நாளுக்குநாள் வளர்ந்து வருவது எங்ஙனம்? தமிழக அரசுப் போக்குவரத்துறை பயணித்த தனியார்மய பாதையை சற்றுப் பார்ப்போம்.
2000-க்கு முன்புவரை தமிழகத்தில் மட்டும் 21 போக்குவரத்து கழகங்கள் இருந்தன. இன்று அவற்றில் பல கழகங்கள் நாடு பயணித்த ‘முன்னேற்ற’ப்பாதையில் காணாமல் போய்விட்டன. 2002-இல், சென்னையிலும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஓடிக்கொண்டிருந்த 12,905 பேருந்துகளில் 7,742 பேருந்துகளை அன்றைய அம்மா அரசு திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது.
28 மாவட்டங்களில் பாதிக்குப்பாதியாக அரசுப் பேருந்துகளை குறைக்கப் போவதாகவும், ட்ரிப்புகளையும் குறைக்கப் போவதாகவும் அவற்றை தனியாருக்கு விடப்போவதாகவும் அறிவித்தது. இறுதியில் போக்குவரத்துத் துறையை தனியாருக்கு விடப்போவதில்லை என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூட்களை மட்டும் தனியாருக்கு விடப் போவதாகவும் இதனால் ஊரகப் பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும் அறிவித்தார் ஜெயலலிதா.
அக்டோபர் 2001த்தில் போனஸ் கேட்டு வேலைநிறுத்தம் செய்த போக்குவரத்து ஊழியர்களிடம் தனது உண்மையான முகத்தை காட்டியது ஜெயலலிதா அரசு. தீவிர பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் சென்ற ஆண்டைப் போல் போனசை தரமுடியாதென்றும் கூறி ஊழியர்களின் வயிற்றில் அடித்தது. அதோடு, பயிற்சி பெறாத டிரைவர்களையும் தனியார் பேருந்துகள், வேன்களையும் களமிறக்கியது. வேறுவழியில்லாமல், போக்குவரத்துத் துறையினர் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இந்த தனியார் மயமாக்கத்தை எதிர்த்து பல எதிர்ப்புகள் கிளம்பியது நினைவிருக்கலாம். உண்மையில், இதில் எந்த பொருளாதார சிக்கலும் இல்லை.
போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்குதல் என்பது உலகவங்கி, மத்திய அரசு மற்றும் அதன் தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு அங்கமே. அதனை செயல்படுத்த ஜெயலலிதா போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை பயன்படுத்திக்கொண்டார். இன்றும் அதில் பெரிய மாற்றமில்லை. பல ஆண்டுகளாக புதிய ஊழியர்களை நியமனம் செய்வதில்லை. பெரும்பாலோனார் ஒப்பந்த தொழிலாளர்களாகவே நீடிக்கின்றனர். அதோடு, போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் கிடையாது. இது, அரசே திட்டமிட்டு பொதுத்துறையை ஒழிக்கிறது என்பதையே காட்டுகிறது.
இந்த தனியார்மயமாக்கம் போக்குவரத்துத்துறை ஊழியர்களின் குடும்பங்களையும், பொதுபோக்குவரத்தை நாடும் அன்றாடங்காய்ச்சிகளையும்தான் பெருமளவு பாதிக்கிறது. பலருக்கு விஆர்எஸ் திட்டங்கள் கொடுத்தாலும் அது நிரந்தர வேலை மற்றும் ஊதியம் ஆகாது. அது ஒரு ஆட்குறைப்பு நடவடிக்கை மட்டுமே. அதோடு, இது பொதுமக்களை பாரதூரமாக பாதிக்கும் ஒரு நடவடிக்கை.
தோராயமாக, 25 லட்சம் பள்ளி/கல்லூரி மாணவர்கள் இலவச பஸ் பாஸ்களை பயன்படுத்துகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் , உடல்நலக்குறைபாடு உள்ளோர், வயதானவர்கள் என்று பலருக்கும் பேருந்தில் சலுகைகள் உண்டு. தனியார் மயமாக்கல் இதனை பாதிப்பதோடு அவர்களுக்குள் இருக்கும் தொழில் முறை போட்டியால் சாலை விபத்துகளையும் அதிகரிக்க காரணமாகிறது. தனியார் பேருந்து முதலாளிகளுக்கு லாபம்தான் முக்கியமேயொழிய லாபமற்ற ரூட்களை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்வது நோக்கமல்ல. அதோடு பேருந்து கட்டணங்களும் அவ்வப்போது அதிகரிக்கும். போக்குவரத்துத்துறையை முற்றிலும் அரசே எடுத்து நடத்தினால் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை.
தனியார்பேருந்து முதலாளிகள் வருடா வருடம் புதிய புதிய பேருந்துகளை சொகுசான பேருந்துகளை வாங்கிய வண்ணம் உள்ளனர். எப்படி?
எ.கா-ஆக, சென்னையிலிருந்து மதுரை செல்லும் ஒரு பேருந்தின் விவரம் கீழ்வருமாறு:
வரவு:
சராசரி இருக்கைகள் 34
சராசரி கட்டணம் ஒரு நபருக்கு ரூ.600
ஒரு நாள் சராசரி வருமானம் ரூ.20,400
சுமை ஏற்றுவதால் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.10,000
சாராசரி நாள் வருமானம் ரூ. 30,400
சராசரி மாத வருமானம் ரூ.9,12,000
சராசரி ஆண்டு வருமானம் ரூ.1,09,44,000
செலவு:
ஓட்டுநர் ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.300
உதவியாளர் ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.200
டீசல் செலவு ரூ.5,100
பழுதுபார்க்கும் செலவு ரூ.1,500
ஒரு நாள் சராசரி செலவு ரூ.7,100
ஒரு மாத சராசரி செலவு ரூ.2,13,000
ஒரு ஆண்டு சராசரி செலவு ரூ.25,56,000
சராசரி பேருந்தின் மதிப்பு ரூ.45,00,000
சராசரி பேருந்து பயண வரிச் செலவு ரூ.20,00,000
சராசரி மொத்த செலவு ரூ.90,56,000
சராசரி ஆண்டு லாபம் ரூ.18,88,000
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் போக்குவரத்து இதே போல் தனியாரிடம் விடப்பட்டது. அந்த மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை எம்.கே தாமஸின் Urban Bus Transport in India: Half a Century’s Stride புத்தகத்தில் அறியலாம். அரசாங்கத்தைவிட நல்ல சேவையை மக்களுக்கு அளிப்பதாக கூறி தனியாரிடம் ஒப்படைத்தாலும் இம்முடிவு எவ்வளவு தவறானது என்பதை அவர்கள் ஒரு கட்டத்தில் உணர்ந்தார்கள்.
தனியார்முதலாளிகள் லாபநோக்கோடு செயல்பட்டதில் பொதுமக்களின் பாதுகாப்பை கண்டு கொள்ளவில்லை. இந்த மாநிலங்களில் மக்கள் போக்குவரத்துத் துறையை அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியதாக கூறுகிறார் அவர்.
எனில், தமிழ்நாட்டிலும் அது சாத்தியமே. போக்குவரத்து ஊழியர்களும், மக்களும் கரம் கோர்த்து போராடவேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அரசியலற்ற தொழிற்சங்கங்களாக பிரிந்து அடித்துக்கொள்ளாமல் ஊழியர்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்கவேண்டும், அதோடு, மக்களும் தங்களது பொதுச்சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தை தட்டிக் கேட்க வேண்டும். தனியார் பேருந்து முதலாளிகள் தங்களது லாபத்துக்காக பொதுமக்களின் உயிரை பணயம் வைப்பதை உணர்ந்து ஒன்றாக திரள வேண்டும்.
இந்த கோர விபத்துகளை, சுரண்டலை தடுக்க இது ஒன்றுதான் வழி.
______________________________________________________
– வினவு செய்தியாளர்கள்
_____________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
- On the route to privatisation- Frontline
- அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
- தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
- பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?
- மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!
- இந்தியாவில் தனியார்மயம்! ஒரு ஊழலின் வரலாறு!!
- 2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!
- கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!
- “இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – நேரடி ரிப்போர்ட்!
- நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!
- உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்!
- 108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??
//அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகளைவிட சொகுசாகவும், வசதியாகவும், முக்கியமாக சரியான நேரத்துக்குக் சென்றுவிடும்படியாகவும் இருக்கின்றன என்பதே பெருமளவு சொல்லப்படுகின்ற காரணங்களாக இருக்கின்றது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.//
நீங்கள் சொல்ல வந்தது மாற்றி சொல்லப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். சரி செய்யுங்கள்.
பொள்ளாச்சி விபத்து மாதிரி பல சிறியளவிலான விபத்துக்கள் கேபிஎன் டிராவல்ஸால் நடந்துள்ளன. அவையெல்லாம் பத்திரிகைகளால் மறைக்கப்பட்டுவிட்டன. பொள்ளாச்சி விபத்தில் கூட தட்ஸ் தமிழ் தவிர வேறெந்த பத்திரிகையும் கேபிஎன் டிராவல்ஸ் பெயரை வெளியிடவில்லை. பெயர் குறிப்பிடாமல் செய்தி வருவதற்கே பத்துக் கணக்கில் ஆட்கள் சாவ வேண்டியிருக்கிறது.
//பொதுப்போக்குவரத்தை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசின் நடைமுறையால் மக்கள் இழப்பது என்ன?//
இதற்காக தனியார் துறைகளே இல்லாமல் எல்லாவற்றையும் அரசே செய்துகொண்டிருப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாது. அரசின் கடமை தனியார் நிறுவனங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதேயாம். அரசு லாபம் ஈட்டும் துறைகளில் ஈடுபட்டால் பின் நாம் எதற்காக வரி செலுத்தவேண்டும்.
நல்ல கட்டுரை. கட்டுரையின் இறுதி வரிகளில் வினவின் தொலை நோக்கு பார்வையும் தெரிகிறது.
மாறி வரும் கால சூழ்நிலைகள் மற்றும் மக்கள்தொகை பெருக்கம் இதன் காரணமாக தனியார் பேருந்துகளின் தேவை தவிர்க்க இயலாதது.
அரசு போக்குவரத்து கழகங்கள் லாபம் ஈட்டுவது குறைவதற்கு இன்னும் சில காரணங்களும் உண்டு.. நஷ்டத்தில் இயங்குவதாக கூற மாட்டேன்..
பெரும்பான்மையான அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஏதேனும் ஒரு சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள். தவறு ஏதும் செய்து விட்டால் சங்கம் நம்மை காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் ராஜ்ஜியம் கொடிகட்டி பறக்கிறது. . தட்டி கேட்க யாரும் இல்லை.சங்கங்களும் எங்கே இவனை ஆதரிக்காமல் விட்டு விட்டால் இவன் அடுத்த சங்கத்தில் போய் சேர்ந்துவிடுவானோ என்று கண்மூடித்தனமாக தவறு செய்யும் தொழிலாளியை ஆதரிக்கின்றன.
வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் மாத சம்பளம் வந்து விடுகிறது. பயண படி கிடைத்து விடுகிறது. அப்புறம் என்ன?
மாறாக தனியார் பேருந்து தொழிலாளர்கள் நிலை அவ்வாறு அல்ல. முதலாளியிடம் கலெக்சன் காட்டினால் தான் பயண படியிலிருந்து சம்பளம் வரைக்கும். எனவே உண்மையாக கடுமையாக உழைக்கிறார்கள்.
அடுத்து மரியாதை, அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் பயணிகளிடம் பழகும் முறை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த பேருந்தே ஏதோ இவர்கள் மாமனார் வீட்டு சொத்து போல நடந்து கொள்வர். பயணி அசதியில் கண்ணயர்ந்து விட்டாலோ, அல்லது சில்லறை பிரச்சினை வரும் போதோ இவர்களின் பேச்சை யாராலும் காதுகொடுத்து கேட்க முடியாது. யாரேனும் எதிர்த்து கேட்டால் கேவலமான பதில் வரும். இதற்கு பயந்தே பெரும்பாலோனோர் அரசு பேருந்தை தவிர்கின்றனர். மேலும் இலவச பயண அட்டையில் பயணிக்கும் மாணவ மாணவியரை நடத்தும் முறை கொடுமையானது.
வேண்டுமென்றே பேருந்தை தாமதமாக இயக்கி தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து மாதா மாதம் கையூட்டு பெரும் ஓட்டுனர் நடத்துனர்களும் உண்டு.
பல கோடி செலவழித்து வாங்கப்பட்ட சொகுசு பேருந்துகளை பராமரிக்க பணிமனை தொழிலாளர்கள் தயாராய் இல்லை.
வாகன உதிரிபாகங்கள் வாங்குவதில் நடக்கும் ஊழலோ ஆண்டவனுக்கே அடுக்காது.
ஆக அரசுபேருந்து கழகங்களின் வருவாய் இழப்பிற்கு அரசு மட்டும் காரணம் அன்று. அதன் தொழிலாளர்களும் தான். .
—
மாக்ஸிமம்
தனியார் பேருந்துகள் அனைத்தும் சிறப்பாக இயங்குவதாக நினைப்பது அறியாமைதான்.
எனது நண்பர், சென்னை ஆவடியில் இருந்து புறப்படும் ஒரு தனியார் பேருந்தில், வழக்கமாக திருமுல்லைவாயிலில் ஏறி ஸ்ரீவில்லிபுத்தூர் செல்பவர். ஒரு நாள் இரவு பயணத்தினூடே ஓட்டுனருக்கும் பயணிக்கும் இடையிலிருக்கும் கதவு திறந்திருந்ததால் எதேச்சையாக மூட சென்ற அவருக்கு திடுக்கிட்டது. காரணம், ஓட்டுனர் தனது காலுக்கு பதிலாக பெரிய செங்கல் ஒன்றை Accelerator-ல் வைத்திருந்தார். கால் மடக்கப்பட்டு ஓய்வு நிலையில் இருந்தது.
காரணம் ஒரு ஓட்டுனர் மட்டுமே. அவரே இறுதிவரை ஓட்டி செல்ல வேண்டிய கட்டாயம்.
கண்டிப்பாக இதை முதலாளிகள் கண்டிப்பர்களா? இதனால் அவருக்கு ஏதேனும் ஆதாயம் இருந்தால், மேலும் நாலு செங்கலை கொடுத்தனுப்ப வேண்டுமானால் வாய்ப்புண்டு.
இன்னொன்று,
எல்லா அரசு பணியாளர்களும் மோசம் என்ற கருத்தே திணிக்கப்படுகிறது.
வார இறுதி நாளில், நான் பெங்களூரில் இருந்து சென்னை சென்ற சமயம். அரசுப் பேருந்தில்தான். மிகக்கூட்டம். வேலூரில் பஸ் ஸ்டாண்டில், ஒரு தாய் மற்றும் ஒரு சிறுமி கூட்டத்தில் எந்த பேருந்தில் ஏறுவது? எப்படி சென்னை சேர்வது? என்ற குழப்பத்தில் நின்றிருந்தனர். கண்டக்டர் அவர்களின் நிலை அறிந்து, தன் இருக்கையை அவர்களுக்குக் கொடுத்து என் மனதில் நிரந்தர இடம் பிடித்தார்.
தனியார் பேருந்தில் நடத்துனர்கள் மனிதாபிமானம் கொண்டு சிந்தித்தாலும் அதை முதலாளிகள் வேரறுத்துவிடுவார்கள்.
மேலும் அரசு, போக்குவரத்து துறைக்கு சரியான நிதி ஒதுக்குவது இல்லை. தனியாருக்கு போட்டியாக பல நல்ல பேருந்துகளை இயக்குவதற்கு முயற்சி எடுப்பது இல்லை. அரசு பேருந்து ஏற்படுத்தும் விபத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை என்று பல பேருந்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கையும் தொடர்கிறது. இதன் மூலம் அரசு போக்குவரத்து துறையை மூடுவதற்கான வேலையை மறைமுகமாக செய்து வருகிறது.
பாதி பேருந்துகள் தற்போது கோர்டில் நிற்கின்றன. திருவாரூர் கோர்டில் நான்கு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு நிற்கின்றன
http://unmai-sudum.blogspot.com/2011/05/apt-travels.html
ABT TRAVELS – இன் அராஜகம்!
தனியார் பெரூந்துகளின் அராஜகம் பற்றி மேலே உள்ள சுட்டியில் பல கருத்துக்கள் உள்ளன.
//
blogpaandi said…
சங்கீதா travels இதை விட பயங்கர மோசம். மதுரை பெரியார் நிலையத்திலிருந்து இரவு பத்து மணிக்கு பெங்களூர் பேருந்து என்று முன்பதிவு பயண சீட்டில் (http://www.sangitatravels.in/ சங்கீதா travels website ல் புக் செய்தது) குறிப்பிட்டிருந்தார்கள் . பயண கட்டணம் Rs.800. பெரியார் நிலையத்திலுள்ள ஜெயம் travels ல் பேருந்து நிற்கும் என்று கூறினார்கள்.
பேருந்து 11 மணிக்கு வந்தது. ரெட்பஸ் website ல் புக் செய்தவர்களை மட்டும் அனுமதித்தார்கள். சங்கீதா travels website ல் ல் புக் செய்தவர்களை அனுமதிக்கவில்லை. ஏன் என்று கேட்டால் ஜெயம் travels ரௌடிகளை கொண்டு மிரட்டினார்கள். கடைசியில் ஒரு ஆறு பேர் மட்டும் டிரைவர் இருக்கைக்கு பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தோம். இந்த பயணம் ஒரு மோசமான அனுபவமாக அமைந்தது.
ஜெயம் travels , சங்கீதா travels இரண்டிலும் பயணம் செய்யாதீர்கள் . முடிந்தவரை தவிர்க்கவும். ///
தொகுப்பாக இந்த அராஜகங்கள் தொடர்வதன் காரணம் என்னவென்று ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார்.
###
எண்ணத்துப்பூச்சி said…
வைகை,
நியாயத்தை கேட்க மக்கள் தயாரில்லை.
கேட்பவன் கேவலமாகத்தான் பார்க்கப்படுகிறான்.
நம்மக்கள் சுயநலனில் தான், அக்கறை கொண்டுள்ளனர்.
எகிப்து,துனிசியா,ஏமன் மாதிரி துப்பாக்கிகளுடன் போராடச் சொல்லவில்லை.
எதிர்ப்புக் கூட காண்பிக்க இங்கு யாருமில்லை.அப்பட்டமாய்
தெரிந்தது,பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட போது நாம் தொலைக்காட்சி
“சீரியலில்”தொலைத்த போது.
###
மேலே உள்ளதுதான் பிரச்சினையே. அரசுப் பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் குறைப்பாடுள்ளதெனில் அது மக்கள் தட்டிக் கேட்காமல் இருப்பதுதான் காரணம். ஆனால் தனியார்மய தாசர்களோ இந்த விச்யத்தை வசதியாக மறந்துவிட்டு பேசுகிறார்கள்.
கேபி என் பஸ் அனுபவம்
http://www.cpraveen.com/suvadugal/the-death-fear-that-kpn-travels-showed-me/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+praveen%2Fsuvadugal+%28%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%A6%29
தண்ணியடித்து மட்டையாகிப் போன கேபிஎன் டிராவல்ஸ்:
http://praison.blogspot.com/2009/08/is-all-kpn-buses-safe-to-travel.html
all bus drivers and conductors are working properly…..But the Govt. bus may not be clean. in Common, Ultra Deluxe bus very worst….
Politician and other higher official make Govt. Transport corporation as worst….they are highly corrupted….(this is the only reason y Govt. transport corporation running under loss…
need to recruit enough people…
the driver and conductor always keep their bus clean……
அரைவேக்காட்டுதனமான கட்டுரை. ஆம்னி பஸ்களின் வரவு செலவு பட்டியலை பார்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது. தினமும் எல்லா சீட்டுகளும் நிரம்பி வழிவது போல் ஒரு பட்டியல். வருடத்தில் எத்தனை நாட்கள் இப்படி எல்லா சீட்களும் நிரம்பும் என்று தெரியுமா ? மேலும் வரிகள் (compound tax on per seat basis per quarter, income tax, etc) எத்தனை சதம் / அளவு என்ற விவரம் இல்லை. தேய்மானம், மற்றும் வட்டிக்கான தொகைகள் ? எல்லாத்தையும் விட மாதம் தோறும் அளிக்க வேண்டிய கப்பம் (லஞ்சம்) ? எனெனில் இவை chartered trips என்ற பொய்யான தோற்றத்தில் தான் இயங்குகின்றன. டிக்கட் போட்டு ஓட்ட முடியாது. பெரிய கேலி கூத்து. கெ.பி.என் தான் தெரியும் உமக்கு. சிறு நிறுவனங்கள் பலவும் அடிக்கடி கைமாறும் அளவு ரிஸ்க்கான தொழில் இது.
சரி, இவைகளை எல்லாம் அரசுடைமையாக்கி, தனியார்களையே முற்றாக ஒழித்துவிட்டு, இயக்கினால் என்ன ஆகும் ? நிலைமை படு மோசமாக ஆகும்.
மிக வேகமாக செல்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அரசு பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளை பற்றி பேசவில்லை. (per km, per trip ratio அடிப்படையில் தான்).
60களில் பஸ் போக்குவரத்து துறையை தேசியமயமாக்கியதால் தான் இத்தனை அவலம், ஊழல். லாரி போக்குவரத்தில் இப்படி இல்லை. பற்றாக்குறையும் இல்லை.
சரி, குறுகிய தூரம் செல்லும் நகர பேருந்துகள், மினி பஸ்கள் பற்றி பேசலாமே ? சென்னையில் கடும் பற்றாக்குறை. 6000 பஸ்கள் தேவைபடும் நிலையில், 3000த்துக்கும் குறைவான பஸ்கள் தாம் இருக்கு. peak hour demand மிக மிக அதிகம். தொங்கிக்கொண்டும், பிதிங்கிக்கொண்டும் மக்கள் படும் பாடு கொடுமை. என்ன தீர்வு சொல்கிறீர் ? அரசு போக்குவரத்து கழகங்களுக்குள் நடக்கும் ஊழல், பொறுப்பற்ற தன்மை, அதிகாரிகள், அமைச்சர்களின் பெரும் கொள்ளை, சங்கங்களின் ஊழல் மற்றும் சுயநலம் : இவை பற்றி எல்லாம் பேச மாட்ட்டீர்கள். தனியார் நிறுவன ’கொள்ளை’ தான் பேசுவீர்.
1997இல் மினிபஸ்கள் பல இடங்களில் அனுமதிக்க்பட்டன. ஏன் ? அதற்க்கு முன்பு பல கிராமங்களுக்கு செல்ல பஸ்களே இல்லா நிலை. ஏன் ?
எஸ்.சி.டீ.சி பேருந்தில் பயணம் செய்த என் அனுபவங்கள்:
தடம்: பெங்களூர் – திருச்சி
1. பெங்களூரில் கிளம்பி, கிருஷ்ணகிரிக்கு இரண்டுகிலொ மீட்டர் தூரம் உள்ள ஒரு மோட்டலில் (பெயர்: ஜெயசூர்யா) அனைத்து எஸ்.சி.டீ.சி பஸ்களும் உணவுக்காகநிற்கும்.
2.இடைப்பட்ட 100 கிலோமிட்டர் தூரத்துக்குக்கும், பயணிகள் யாரும் தூங்க கூடாது. ஒன்று அதிக சத்தத்துடன் படம் ஓடும். இல்லை என்றால் மின்விளக்குகள் எரியும்.
3.அந்த மோட்டலில் டிரைவர்,கண்டக்டர்களுக்காவே தனி இலவச உணவகம் உண்டு. அங்கு பறிமாரப்படும் உணவு, பிரயாணிகளுக்கான உணவகத்தில் பறிமாறப்படுவதை விடநன்றாக இருக்கும்.
4.வழக்கம்போல மோட்டலில் விற்கும் பொருள்கள் தரம் குறைவாகவும், விலை அதிகமாகவும் இருக்கும். இங்குநிலைமை இன்னும் மோசம்.
5.வண்டி கிளம்பியதும், அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப் படும். படமும்நிறுத்தப் படும்.
Vinavu Team
I am eagerly waiting for your ‘sensible’ answers to Mr. Adhiyaman. There are few other articles in OPEN state similar to this without final answer from Vinavu Team. Can you try to answer his questions? That would make this article complete
தமிழக தொடர் வண்டி திட்டங்கள்:
தோழர்களே,
இந்திய தொடர்வண்டி துறை வருமானம், சரக்கு போக்குவரத்தில் வருவாயாகவும், பயணிகள் போக்குவரத்தில் நட்டமாகவும் உள்ளதாக கணக்கு சொல்கிறது.
இந்திய வட மாநிலங்களில் அதிக அளவு தொடர்வண்டி தடங்கள் உள்ளன. அதிக தொடர்வண்டிகள் உள்ளன. தென் மாநிலங்களில், குறிப்பாக, தமிழகத்தில் அதிக தொடர்வண்டி தடங்கள் ஏன் இல்லை என்று கேட்டால், இங்கு சரக்கு போக்குவரத்து தேவை இல்லை, ஆனால் வட மாநிலங்களில் தாது சுரங்கங்கள் உள்ளதால் அங்கு அதிக அளவு தொடர்வண்டி தடங்கள் தேவை, அதனால் வருவாயும் வருகிறது என்று சொல்லப்படுகிறது.
தென்னகத்தின் அனைத்து தடங்களும் இருவழித் தடங்களாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், சென்னை – கன்னியாகுமரி வழித்தடம், இரு வழித்திட்டம், பல ஆண்டுகளாக ஆகியும், இன்னமும் செங்கல்பட்டு – விழுப்புரம் தடம் முடிக்கப்படவில்லை. விழுப்புரம் – திண்டுகள் இன்னும் பல வருடங்கள் ஆகும்.
ஏன் தாமதம் என்று கேட்டால், பண ஒதுக்கீட்டிற்கு ஏற்ப வேலை நடப்பதாக செய்தி. இந்த ஆண்டு 500 கோடி ரூபாய் தேவை எனில் 10 கோடி ரூபாய் மட்டும் அளிக்கபடுகிறது (?!?).
தமிழகத்தின் தொழில் மாவட்டங்களான, மேற்கு பகுதியிலும் இதே நிலை.
கிழக்கு பகுதியான விழுப்புரம் – மயிலாடுதுறை பாதை அமைக்கப்பட்ட பின்னும், சோதனை ஓட்டம் முடிந்த பின்னும், தொடர் வண்டி இயக்கமால், மயிலாடுதுறை பொது மக்கள் சார்பாக, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டபின் தொடர்வண்டி இயக்கப்பட்டது. (எந்த ஒரு நாகரிக சமூக தேசத்திலும் இது போன்ற கொடுமை இருக்காது). மயிலாடுதுறையில் போராட்ட இயக்கத்தின் மூத்த பெரியவர் மேடையில் உணர்ச்சி வசப்பட்டு பேசி, மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். (என்ன கொடுமை ) .
ஆனால் தோழர்களே,
இதை கவனியுங்கள். சென்னையில் மெட்ரோ தொடர்வண்டி திட்டம் சுமார் 14 ,500 (பதினான்கு ஆயிரத்து ஆயிநூறு கோடி ) செலவில் கட்டப்படுகிறது. நல்லது. புதிய முதல்வர், தனது கனவு திட்டமான, மோனோ ரயில் திட்டம் வேண்டும் என்கிறார். திட்ட மதிப்பு சுமார் 11000 கோடி ரூபாய்.
ஆக, சென்னையில், சுமார் 25000 கோடி ரூபாய், இன்னும் சில ஆண்டுகளில், தொடர் வண்டிக்காக மட்டும் செலவு செய்யப்படுகிறது (!!!). தமிழகத்தின் பிற பகுதிக்கு ஒரு 500 கோடி ரூபாய் ஒதுக்க முடியாதா ?
தோழர்களே,
பதிவு செய்யப்படாத (unreserved ) பெட்டிகளில், கேரளத்துக்கு அனுப்பப்படும் அடிமாடுகளைப் போல, செல்லும் நமது மக்களைப் பார்க்கும்போது, கண்ணீர் வருகிறது.
கடன் கொடுக்கும் உலக வங்கிகள், கிராமம் மற்றும் சிறு நகரங்களுக்கு ஏதும் செய்யக்கூடாது. அரசுப் பள்ளிகள் கூடாது, அரசுக்கல்லுரிகள் கூடாது, அரசு மருத்துவமனைகள் கூடாது, ஆனால் எல்லா மக்களையும் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இடம் பெயரச்சொல்கிறது.
நான் படிக்கும் பொழுது, தமிழகத்தில் 11 அரசுப் பொறியியல் கல்லூரிகளும், 30 தனியார் பள்ளிகளும் இருந்தன. தற்போது அதே 11 அரசுப் பொறியியல் கல்லூரிகள் , ஆனால் 500 க்கும் அதிகமான தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
பல ஆண்டுகளாக உலக வங்கி சொல் கேட்கும் இந்திய தலைமை அமைச்சர் இருப்பார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக, உலக வங்கியின் நேரடி முகவர் (direct agent) இந்திய தலைமை அமைச்சராக இருக்கிறார்.
ஆனால் எல்லா மக்களையும் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இடம் பெயரச்சொல்கிறது. அப்பொழுதுதான், நுகர்வு கலாச்சாரம் என்கிற, உலக ஏகாதிபத்திய நுகர்வு கலாச்சாரம் நன்றாக வளரும். இவ்வாறு நடந்தால், மொழி, இனம், கலாச்சாரம் எல்லாம் அழிந்து போகும்.
இந்திய சாலைகள், விபத்தினால் கொல்லும் பாதைகளாக உள்ளன. உலகில் மிக அதிக சாலை விபத்துகள் இந்தியாவில் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் மிக அதிகமாக நடக்கின்றன. ஏன் என்று கேட்டால் தமிழகத்தில் சாலைகள் அதிகம் உள்ளன என்று சொல்லபடுகின்றது. அரசியல்வியாதிகள், தொடர்வண்டிகளில் (VIP) ஒதுக்கீட்டில் சுகமாக செல்கிறார்கள். எவன் சாலையில் செத்தால் நமக்கு என்ன ? நமக்குத்தான் தனியார் (Omni bus) முதலாளிகளிடம் இருந்து பணம் வருகின்றதே !
இன்னும் பத்து ஆண்டுகளில், சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை தாண்டும் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நடத்தால் மொழி, இனம், கலாச்சாரம் எல்லாம் அழிந்து போகும்.
வாழ்க உலக சிறுபான்மை ஏகாதிபத்தியம்.
-நெல்லைக்குமரன். —
பின் குறிப்பு:
சென்னை வளர்ந்தால், சென்னையில் இருக்கும் நமது குடியிருப்பின் விலை உயரும். வீட்டு மனையின் விலை உயரும். ஆனால், நமக்கு இது மட்டும் தான் தேவையா ?
நடைபாதையில், நகரசேரிகளில் வாழும் மக்கள் தொகை உயரும். காற்று மாசு, நீர் மாசு, நீர் தட்டுப்பாடு போன்ற கொடுமைகள் இருக்கும்.
-நெல்லைக்குமரன். —
[…] […]
[…] […]