Saturday, August 20, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா அமெரிக்க சொர்க்கத்தில் ஆறில் ஒருவர் ஏழை!

அமெரிக்க சொர்க்கத்தில் ஆறில் ஒருவர் ஏழை!

-

ஹாலிவுட் படங்களில் டெக்னாலாஜியை வைத்து மிரட்டுவதாக இருக்கட்டும், பின்லேடனை பறந்து போய் கொன்ற ஆக்சன் த்ரில்லராக இருக்கட்டும், மென்பொருள் துறையில் ஆதிக்கம் செய்வதாக இருக்கட்டும், உலகெங்கும் கடன் வாங்கி தின்று தீர்ப்பதாக இருக்கட்டும்…. எல்லாவற்றிலும் விண்ணைத் தொடும் அமெரிக்காவில்தான் ஏழைகள் அதிகமாம்! அதாவது வளர்ந்த நாடுகளில் அதிகம் ஏழைகள் வசிக்கும் நாடு அமெரிக்கா!

அமெரிக்க சென்சஸ் துறையின் வருடாந்திர அறிக்கை சென்ற செவ்வாய்க்கிழமை 13.09.2011 அன்று வெளியிடப்பட்டது. அமெரிக்க அரசுத்துறையே வெளியிட்டிருப்பதனால் ஆதாரம் கேட்கும் அம்பிகள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.

முதலில் இரண்டாவது வருடமாக வேலையில்லாத் திண்டாட்டம் ஒன்பது சதவீதத்திற்கும் மேல் தொடருகிறது. அதாவது வேலை செய்யும் திறன் கொண்டவர்களில் பத்தில் ஒருவருக்கு வேலை இல்லை. அமெரிக்க அளவுப்படி ஏழ்மை அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் வருடத்திற்கு 22,314 டாலர் அல்லது 10,26,444 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள். பத்து இலட்சம் சம்பாதித்தும் ஏழையா என்று கேட்காதீர்கள். அமெரிக்க வாழ்க்கைத் தரப்படி இந்த பத்து இலட்சம் என்பது அங்கே ஒரு இலட்சத்திற்கு சமம். இந்த அளவு கோலின்படி அமெரிக்காவில் இருக்கும் ஏழைகள் 4 கோடியே 62 இலட்சம் பேர். அல்லது அமெரிக்க மக்கள் தொகையில் 15.1% விழுக்காடு. அதாவது ஆறில் ஒரு அமெரிக்கன் ஏழை!.

இந்த ஏழைகளின் சதவீதம் சென்ற ஆண்டில் 14.3% ஆக இருந்தது. இந்த வருடம் ஏறியிருக்கிறது. 1980க்குப் பிறகு ஏழைகளின் சதவீதம் இவ்வளவு வேகத்தில் ஏறியிருப்பது இப்போதுதானாம். வேலை இன்மை, பணவீக்கம், என்று பல்வேறு காரணங்களால் ஏழைகள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறார்கள். இப்படி வருட சென்சஸ் ஆரம்பித்த பிறகு 1959-ம் வருடத்திற்கு பின் இந்த அளவு அதிக எண்ணிக்கையை இப்போதுதான் தொட்டிருக்கிறார்களாம். வாழ்த்துக்கள்!

மிசிசிபி மாநிலத்தில் மட்டும் 22.7% பேர் ஏழைகள். இந்த மாநிலத்தை தொடர்ந்து லூசியானா, கொலம்பியா மாவட்டம், ஜார்ஜியா, நியு மெக்சிகோ, அரிசோனா போன்ற மாநிலங்களிலும் அதிக ஏழைகள் வாழ்கின்றனர் இல்லை வாழ முடியாமல் வதைபடுகின்றனர்.

அமெரிக்க ஏழைகளில் கருப்பர்களும், ஹிஸ்பானியர்களும் சேர்ந்து 54% இருக்கிறார்கள். வெள்ளையர்கள் 9.9%மும், ஆசியர்கள் 12.1% பேரும் ஏழைகள். இதைக்கேட்டால் நமது மிடில்கிளாஸ் மாதவன்கள் கருப்பர்கள் ஒழுங்காக பள்ளிக்கு சென்று படிக்காததன் விளைவு என்று கூசாமல் உபதேசிப்பார்கள்.

மேலும் காப்பீடு இல்லாமல் வாழும் அமெரிக்கர்களின் சதவீதம் 16.3 ஆகும். இதன்படி கிட்டத்தட்ட ஐந்து கோடி அமெரிக்கர்கள் காப்பீடு இல்லாமல் வாழ்கின்றனர். அமெரிக்காவில் மருத்துவம் பார்ப்பதற்கு இந்தக் காப்பீடு கண்டிப்பாக வேண்டும். அந்தபடிக்கு பார்த்தால் இந்த ஐந்து கோடி அமெரிக்கர்களுக்கும் நோய் வந்தால் எமலோகம் நிச்சயம்.

தற்போது சோமாலியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி இருக்கம் மக்களுக்காக மேற்குலக ஊடகங்கள் மக்களிடம் காணிக்கை போடுமாறு கேட்டு வருகின்றன. இனி அந்த கோரிக்கை அமெரிக்க மக்களுக்காகவும் இருக்குமோ? மைனர் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்!

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 1. வினவு,

  அமெரிக்க ஒரு ‘சொர்க பூமி’ என்று நீங்க தான் தொடர்ந்து சொல்லிக்கிட்டு வர்ரீக. உண்மையில் அது அப்படி அல்ல என்று தான் நான் சொல்லி வந்திருக்கிறேன். ஆம். அங்கு தற்போது வறுமை அதிகரித்துள்ளது. வேலை இல்லாதிண்டாட்டமும் தான். இன்னும் அவர்கள் ‘திருந்தவில்லை’ ; உலக போலிஸ்காரன் வேலை பார்த்தல், தேவையில்லாத வெட்டி செலவுகளை அரசு தொடர்ந்து செய்து, கடன் மிக அதிகம் வாங்கினால் இப்படி தான் ஆகும். எதிர்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாக வாய்ப்பு உண்டு. தற்காலாகமாக சீரடைந்து, பிறகு எதிர்காலத்தில் மீண்டும் மோசமாகும். பொருளாதார விதிகளை யாரும் மீற முடியாது.

  அய்ரொப்பாவில் கிரிஸ், ஸ்பெயில் போன்ற நாடுகளும் தான். யூரோ உருவானது முட்டாளதனம். அதாவது monetary union without fiscal and poltical union. அதன் நிகர விளைவுகள் இன்னும் தொடரும்.

  சொர்க பூமி என்று ஸ்டாண்டினேவிய நாடுகளை, நெதர்லாந், நீயுசீலேந், கனடா போன்ற நாடுகளை ஓரளவு சொல்லாம். அமெரிக்காவை அல்ல. ஓகே.

  • வினவு, ‘மன்மோகனும் சிதம்பரமும் ஓய்வு ஒழிவின்றி வேலை பார்த்து சம்பளம் வாங்குகிற சொர்க்கத்தில்’ என்று மாற்றிவிடுங்களேன்!

  • ””ஸ்டாண்டினேவிய நாடுகளை, நெதர்லாந், நீயுசீலேந், கனடா””

   இந்த நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது துபாய், கத்தார் போன்ற நாடுகளை சொர்க்க பூமி என்று சொல்லலாமா ?..

   ”சரி கிரீஸ் நாடு என்று உலக போலீஸ்காரன் வேலை பார்த்தது?..” அது திவாலானதே ?. அது எப்படி ..

   ஐரோப்பிய ஊனியனில் பல நாடுகளின் நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக அடி வாங்கியே இருக்கின்றன .. அது ஏன் ?..

 2. அமெரிக்காவின் நிலை பற்றி நண்பர் செல்வனுடன் பண்புடன் விவாத குழுமத்தில் ஒரு நீண்ட விவாதம் தொடர்கிறது. அதில் கடந்த மாதங்களில் நான் எழுதியது :

  அமெரிக்காவின் கொள்கைகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் பற்றி அங்கு neo
  conservativesகளுக்கும் neo Liberals என்ப்படும் Libertariansகளுக்கும்
  தொடர்ந்து முரண்பாடு இருக்கிறது.

  கேட்டோ இன்ஸ்டியுட் இவை பற்றி அருமையான ஆய்வு கட்டுரைகளை தொடர்ந்து
  வெளியிடுகின்றன :

  Rand Paul Is Right about Israel
  http://www.cato.org/pub_display.php?pub_id=12773

  Israel’s Post-American Future
  http://www.cato.org/pub_display.php?pub_id=12675

  இதில் ஒரு பாரா :

  But after a prolonged “recognition lag” – extending from the military
  fiasco in Iraq to the financial meltdown in Wall Street – it’s
  becoming clear to policymakers in Washington that the U.S. is facing
  the prospects of geostrategic decline. The military is overstretched
  in unwinnable wars in Iraq and Afghanistan and a decaying economic
  base financed by Chinese loans is making it difficult to sustain
  expansive global commitments. The Unipolar Moment is coming to an end
  and rising global powers are creating the conditions for the evolution
  of multipolarism.

  இது தான் மிக முக்கிய விசியம் :

  a decaying economic base financed by Chinese loans
  எதிர்காலத்தில் அமெரிக்கா திவாலாக சாத்தியம் பலமாக உள்ளது. இந்தியாவில்
  சொத்து வாங்குங்க. அமெரிக்காவில் இப்ப வேண்டாம் என்பதே எம் அபி. மேலும்..

 3. இப்போதைக்கு சமாளித்துவிடுவாக. 2008வை விட இப்ப நிலமை எவ்வளவோ மேம்பாட்டுள்ளது.

  ஆனாலும் structural weakness and defict spending தொடர்ந்து அப்படியே
  தான் இருக்குது.

  Drastic corrective measures செய்தால் தப்பலாம்.

  1.totally dis mantle the ‘military-industrial comples’ within US and
  cut the defence spending massively.
  2.Close down ALL the US military bases around the world and pull out
  of Iraq, Afghanistan and middle east
  ASAP.
  3. Cut and slash many many unwanted or wnwarrented spending programs
  within US and balance the budget
  ASAP.
  4.Stop ALL financial and other aids to the rest of the world ASAP.
  first learn to live within their incomes.

  one day if the Chines and other Asian Central banks decide to dump the
  US dollar, then it will sink like a stone
  to Rs.5 or less.

  http://www.cato.org/pub_display.php?pub_id=12880
  Bankrupt: Entitlements and the Federal Budget
  The U.S. government is about to exceed its statutory debt limit of
  $14.3 trillion. But that actually underestimates the size of the
  fiscal time bomb that this country is facing. If one considers the
  unfunded liabilities of programs such as Medicare and Social Security,
  the true national debt could run as high as $119.5 trillion.
  Moreover, to focus solely on debt is to treat a symptom rather than
  the underlying disease. We face a debt crisis not because taxes are
  too low but because government is too big. If there is no change to
  current policies, by 2050 federal government spending will exceed 42
  percent of GDP.
  Adding in state and local spending, government at all levels will
  consume nearly 60 percent of everything produced in this country.
  Whether financed through debt or taxes, government that large would be
  a crushing burden to our economy and our liberties.
  Driving this massive increase in the size and cost of government are
  so-called “entitlement programs,” in particular Social Security,
  Medicare, and Medicaid. Indeed, by 2050, those three programs alone
  will consume 18.4 percent of GDP. If one assumes that revenues return
  to and stay at their traditional 18 percent of GDP, then those three
  programs alone will consume all federal revenues. Therefore any
  serious attempt to balance the federal budget and reduce our growing
  national debt must include a plan to reform entitlements.
  It may well be politically convenient to continue ducking entitlement
  reform. But doing so will condemn our children and our grandchildren
  to a world of mounting debt and higher taxes……

 4. உண்மைதான். ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது பிற உலக நாடுகள் இந்தியா உள்பட மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும். வளரும் நாடுகளுக்கு கவலை தரக் கூடிய விடயம் தான்…

  ஆனா பாருங்க… 30 கோடி பேர்ல ஒரு 4 கோடி பேரு ஏழையா இருக்குறது ஒன்னும் பெரிய விடயமே இல்லை அமெரிக்கா போன்ற ஜாம்பவான்களுக்கு… பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது… அத்தனை பேரும் கறுப்பினத்தவர் அல்லது ஸ்பானிக்ஸ் இனத்தவர்… அமெரிக்கா ராசங்கம் வேண்டும் என்றே இந்த மக்களை ஏழையாக வைத்திருக்கிறது… அப்போதுதான் லேபர் மார்க்கெட் ஸ்கேர்சிட்டி இருக்காது என்பதால்..

  அமெரிக்காகாரனை லேசாக எடை போட முடியாது… அவன் நினைத்தால் உலகத்தையே பொருளாதார நெருக்கடியில் தள்ளும் பலம் பொருந்தியவன்… என்னதான் கடன் குறியீடு குறைக்கப்பட்டாலும் அவனை அசைக்க முடியவில்லையே…

  பொருளாதார நெருக்கடி என்பதின் சுவிட்ச் அமெரிக்கா அதிபரிடம் தான் உள்ளது… தேர்தல் முடியும் வரை அதை அமுக்க மாட்டார்…தேர்தல் முடியட்டும், பொத்தான் அமுக்கப்படும்.. உலகம் நெருக்கப்படும்… ஓரிரு வருடங்கள் கழித்து தன் கடன் குறியீட்டை உயர்த்திக்கொண்டு அமெரிக்கா மீண்டு வந்தது போல ஒரு சீன போட்டு.. பொருளாதார நெருக்கடி வாபஸ் பெறப்படும்…

  ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் அமெரிக்கா செய்வது தான் இது… உலக சக்கரம் அமெரிக்கா என்ற அச்சில் சுழலும் வரை பொருளாதார நெருக்கடி என்பது ஒரு சீதோஷ்ண நிலை போல மாறி மாறி வரத்தான் செய்யும்…

 5. ஒலக நாட்டோட குடுமி அண்ணே கையிலா.அப்போ அண்ணே இலேசா டாஸ்மக்
  போதையில தள்ளாடினா.ஒலக நாட்டோட மூஞ்சி பேந்துடும்மா? எப்போ ரிலீசாகப்
  போகுதுன்னு சொன்னிங்கன்னா?…நானும் பாத்துகிருவேன்லுல…….

 6. We want eradicate Dollar as international currency….Second..Stop all American investment over Stock exchanges of other country (including India)….and Third return all Loan Paper (kadan Pathirangal) including China and India….

  Fourth make Unite all anti American Country against America and step down him from the image of international police and finally we can beat him….

  Sivappu Vanakkam….!

  • @ஏபிசிடி.. அந்த நிலை வர வெகு நாட்கள் ஆகும். டாலருக்கு பதிலாக வேறு ‘ஸ்ட்ராங்’ கரன்சி வேண்டும். யுரோ வை நம்பி ஏமாந்தாயிற்று 🙁

 7. //இப்படி வருட சென்சஸ் ஆரம்பித்த பிறகு 1959-ம் வருடத்திற்கு பின் இந்த அளவு அதிக எண்ணிக்கையை இப்போதுதான் தொட்டிருக்கிறார்களாம். வாழ்த்துக்கள்!//

  மேலே சொல்லப்பட்ட வாழ்த்துக்கள் யாருக்கென்று படிப்பவர்களுக்கு குழப்பம் வரும். அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கா? அந்த வார்த்தையை எடுத்துவிடலாம் என கருதுகிறேன்!

  • குருத்து, ‘வாழ்த்துக்கள்’ என்பது அமெரிக்கா பிடுங்கிய மயி….மன்னிக்கவும்… ஆணிகளை நையாண்டி செய்வதற்காக. அதாவது, எள்ளி நகையாடுதல். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று இருமாப்புக்கொள்பவன், புல் தடுக்கி கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டும்போது எள்ளி நகையாடுவதென்பது புதிதல்ல! இக்கட்டுரையின் ‘ஹைலைட்’ வார்த்தை அது. அது அப்படியே இருக்கட்டும்!!

   • புதிய பாமரன் அவர்களுக்கு!

    மைனர் அமெரிக்காவை பற்றி துவங்கிய கட்டுரை, பின்பு அமெரிக்க மக்களின் வாழ்க்கையின் துன்ப, துயரங்களை விவரிக்க துவங்குகிறது. அந்த குறிப்பிட்ட இடத்தில், வரும் பொழுது, என்ன புரிதல் வரும் என்றால், உலகத்தை ஒடுக்குகிற பொழுது, கொள்ளையடித்த காசில் குளிர் காய்ந்தீர்களே! இப்பொழுது ‘அனுபவியுங்கள்’ என்கிற அர்த்தத்தில் ‘வாழ்த்துக்கள்’ என்ற வார்த்தை புரிதலை தந்துவிடும். எழுதுகிற கட்டுரை ஆசிரியர் அந்த புரிதலோடு எழுதியிருக்க மாட்டார். அதனால் தான் நீக்கிவிடவேண்டும் என கூறுகிறேன்.

 8. தோழர் குருத்து அவர்களே! சரியாகச் சொன்னீர்கள்.
  “வாழ்த்துக்கள்” என்னும் வார்த்தை இன்னும் என்னுள் குழப்பத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
  தயவு செய்து வினவு அதை நீக்கி விடுமாறு வேண்டுகிறேன்.

 9. அமேரிக்காவ பத்தி நாம ஏன் யோசிக்கனும்???அவங்கள்லாம் எப்பவோ வளர்ந்தாச்சு.. நம்ம கதைய பார்ப்போம். நம்ம நாடு இந்த மாதிரி ஏழைகளின் பட்டியல் வெளியிட்டிருக்கா?இருந்தால் தெரிந்து கொள்ளலாம் என்றுதான்.

 10. அமெரிக்காவை விட இந்தியாவில் அதிக ஏழைகள் இருக்கிறார்கள்…..
  அமெரிக்காவை விட இந்தியாவில் அதிக பணக்காரர்கள் இருக்கிறார்கள்…

  இரண்டு வாகியங்கலுமே உண்மை… தப்பு எங்கே உள்ளது… இதை எப்படி சமன் செய்வது என்பது கம்யுனிஸ்ட்காரனுக்கு மட்டும் தான் தெரியும்…

  • நீங்க குறிப்பிடுவது வினவு போன்ற “உண்மையான” கம்யூனிசஸ்டுகளைத்தானே, “போலி” கம்யூனிசஸ்டுகளை இல்லையே? அவனுங்கள கண்டால் வினவுக்குத்தான் கோவம் அதிகம் வரும்.

   • இன்று கம்யுனிசத்தின் அடையாளமே போலித்தனம் என்று ஆகிவிட்ட பிறகு… உண்மை கம்யுனிஸ்டுகளுக்கும், போலி கம்யுனிஸ்டுகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும்?

  • சரி இப்போ கம்யூனிஸ்ட்டுக்குத் தான் தெரியலை… அறிவாளிகள் .. ஆட்டுப்புளுக்கையவே அகழ்ந்தாராயும் சர்வ வல்லமை கொண்ட சர்வேஸ்வரர்கள் என்ன தீர்வு சொல்லுறீக ?..

   அமெரிக்காகாரனின் காலை நக்கலாமா ?.. நரேந்திர மோடி காலை நக்கலாமா ?..

   சட்டுனு சொல்லிட்டு நாட்ட முன்னேத்துற வழியப் பாருங்க ..

   • ஏன், சீனான்னு ஒரு பூலோக சொர்க்கம் இருக்கே…அவங்க காலை நக்கலாமே. நாடு முன்னேறும் ஆனா உழைக்கும் மக்கள் சுரண்டல் மிகப் பெரிய அளவில் நடக்கும். ஓகே-வா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க