privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விசாதி, சமயம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்க முடியும்!

சாதி, சமயம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்க முடியும்!

-

எமது தோழர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளியில் சாதி, மதமற்றோர் என்று சேர்க்கும் போது அநேக பள்ளி நிர்வாகங்கள் – அரசு பள்ளிகளையும் உள்ளிட்டு – மறுத்து விடுவது வழக்கம். பின்னர் தோழர்கள் அப்படிச் சேர்க்க முடியுமென்ற அரசாணையை நகலெடுத்து நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்லி சேர்ப்பது வழக்கம். இது போக தோழர்கள் கைதாகி காவல் நிலையத்திற்கோ, சிறைக்கோ செல்லும் போதும் சாதி குறிப்பிடச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவது வழக்கம். அங்கேயும் ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் மூலமே சாதி அடையாளங்களை மறுத்து தமது விவரங்களை தோழர்கள் பதிவிடுகிறார்கள்.

பள்ளிகளில் சேரும் போது மட்டுமல்ல, பள்ளிச் சான்றிதழ், இடமாற்ற சான்றிதழ் ஆகியவற்றிலும் சாதி, மதம் இல்லை என்றோ, வெற்றிடமாக விட்டோ தர இயலும். இதற்க்காக அரசு வெளியிட்டுள்ள ஆணையை இங்கு படமாகவும்,  பிடிஎஃப் கோப்பாகவும் இணைத்திருக்கிறோம். தோழர்கள், நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 1. இது போன்ற அரசாங்க அறிவிப்புகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறை எதார்த்தம் தான் கண்களை குத்துகின்றது. எங்கள் ஊரில் உள்ள அரசாங்கப்பள்ளியில் ஆங்கில பாடத்திட்டம் என்று தனியாக தொடங்கி இருக்கிறார்கள். தனியார் கொள்ளையை விட அதிகமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லக் கேட்டு நொந்து போக வேண்டியுள்ளது.

  மக்களும் மாற விரும்புவதில்லை.
  வாய்ப்பு இருப்பவர்களும் சம்பாரித்துக் கொண்டேதானிருக்கிறார்கள்.

 2. நண்பர்களே. மதம், ஜாதி பின்பற்றாமல் திருமணம் செய்து இந்நாட்டில் சட்டப்படி வாழ ஏதாவது வழி உள்ளதா?

  பி.கு: தவறான இடத்தில இந்த கேள்வியை கேட்டு இருந்தால் வருந்துகிறேன்

  • பிரவீண்,
   இரு வேறுபட்ட மதங்களைச் சார்ந்தோர் திருமணம் செய்யும் போது ஸ்பெஷல் மேரேஜ் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். சாதி, மதம் குறிப்பிடாமல் திருமணம் செய்வோர் சுயமரியாதை திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். எனினும் சுயமரியாதை திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டத்தின் ஒரு பிரிவாகத்தான் வருகிறது. அதிலும் தமிழகத்தில் மட்டும்தான் இந்த சட்டம் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் விவரம் தெரியவில்லை.

  • Dear sir,
   If you presume that a Utopian society will blossom after this government order, you are miserably wrong. Truly speaking this is not going to serve any purpose. Only a minuscule section of the society which is not affected by the incongruent socio- economic equations might feel that caste and religion is not necessary but not the majority one.

   In a country where educational opportunities both in state and central institutions and employment avenues are not distributed evenly, such orders will pose a serious problems if it is implemented as a mandatory ones. For example, one student from a remote village gets to know about central universities, IIMs, IITs and Cicil services exam only when he gains some understanding about them in his late graduation period , that too if he studies in colleges in urban areas. If he studies, say in Usilampatti college, he may not be aware of all these even if he is post graduate. I know personally what are their standard. I have seen post graduates from such little known colleges asking me where IAS and IPS degrees are given and in which colleges.

   In given situation, if he wants to compete with other students who are primarily from cities and having enormous knowledge about their further career path, he has to be given a special space to place himself amidst those people. There lies the importance of reservation policy. It is a reality of our society. Whether you feel bad or good that some meritorious students get affected by reservation, it does not matter; it will remain a reality. Level playing field is set only after ensuring that players have been brought to one particular standard. Continuation or discontinuation of reservation policy even after the up liftment of one section depends upon the various factors. The government can be judicious in its approach in this regard if it is needed.

   As long as our society suffers from such situation, such orders should be confined within personal preference. If it is mandated and made compulsory in the public domain, it will become a very serious issue and the repercussions will be beyond redemption.

   Addressing the problem from its roots is the need of the hour. Just chiseling the branches of a rotten tree will not make it healthy one. Vinavu should publish on the possible hidden socio political upheaval of such proposal.

   Regards,
   Saravanan.k

 3. உபயோகமான தகவல். இந்த கேள்விக்கு பதில் தெரிந்தால் பரவாயில்லை. சாதியை சொல்லாவிடில் இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில்?

  • இளங்கோ,

   சாதி, மதம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் கிடைக்காது. அவர்கள் பொதுப்பிரிவில்தான் கோர முடியும்.

 4. எனது வினா இதனோடு தொடர்புடையதல்ல என்றாலும் சாதியம் குறித்து கேட்கப்பட வேண்டிய வினா. அயல் நாடுகளைச் சேர்ந்த கிருத்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள் போன்ற பிற மதத்தினர் இந்து மதத்திற்கு மாற விரும்பினால் அவர்களை எந்தச் சாதியில் சேர்ப்பது?
  சாதியற்றவர்கள் என்று சொல்லி இந்துவாக மாறிக் கொள்ள முடியுமா? இது பற்றியதொரு தர்க்கம் தேவை எனக் கருதுகிறேன்.

  • இதே விடயத்தை பற்றி ஒருமுறை என் நண்பனிடம் விவாதித்தபோது அவன் சொன்னது “முதலில் கொஞ்சம் கடினமாயிருக்கும் நிறைய பேர் மதமாற்றம் பெற்றால் அதை ஒரு தனியான சாதியாக உருவாக்கிவிடலாம், பிறகு பிரச்சனையில்லையென்று”.இந்துமதம் பிறப்பை அடிப்படையாக கொண்டது, எனவே இந்துவாக பிறக்க மட்டுமே முடியும் என நினைக்கிறேன்.

  • இந்து மதத்தின் அடிப்படையான சாதியில்லாமல் ஒருவர் இந்துவாக முடியாது, சாதி ஒழிய இந்து மதம் ஒழியவேண்டும். இந்து மதம் ஒழிய சாதி ஒழியவேண்டும்.

 5. ஜாதியை சொல்லி தன்னை அடையாளபடுத்தி கொள்ள விரும்பாத வறுமை கோட்டுக்கு மேல உள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு கொடுக்க இயலும்.எனக்கும்………சமூக அந்தஸ்த்து உயர்ந்துவிட்டது ஆனால் தாழ்த்தப்பட்டவன் என்ற சாதி அடையாளம் மட்டும் அசிங்கமாக இருக்கிறது என்று கருதும் நல்ல உள்ளங்கள் வேண்டுமானால் அசிங்கமான ஜாதி பெயர் எதற்க்கு என்று பெருந்தன்மையுடன் போடாமல் விடுவார்கள் என்று நினைக்கிறேன்……

 6. ஜாதி மதம் என்ற அடையாளம் இல்லை என்று போட்டுக் கொள்ளும் உங்களுக்கு எதற்கு கம்யுனிஸ்ட் என்ற அடையாளம்? தேசிய அடையாளம் எதற்கு.. பேசாமல், அனாதைகள் என்று போட்டுக் கொள்ளுங்கள்.. பரதேசிகள் என்று போட்டுக் கொள்ளுங்கள்..

  ஜாதி என்பது ஒரு உண்மையான வன்முறையில்லாத பாரதிய சமுதாயத்திற்கு அடித்தளம்.. கம்யுனிஸ்ட காட்டுமிராண்டிகள் வந்து இந்த சமூகத்தை தாக்காத வரையில் ஜாதிகள் ஒன்றுக்கொன்று அனுசரித்து போய் கொண்டு இருந்தது.. அதை அழிக்கிறேன் பேர்வழி என்று உங்களை போன்ற கற்பனை உலகத்தில் இருப்பவர்கள் கனவு கொண்டிருக்கிறார்கள்.. அது என்றைக்கும் நடக்காது..

  உங்கள் காட்டுமிராண்டிய சர்வாதிகார அடக்குமுறை கம்யுனிஸத்தை ஜாதிகள் மட்டுமே ஒழிக்கும்..

  • செந்தில், “ஜாதி என்பது ஒரு உண்மையான வன்முறையில்லாத..”. அருமை! அருமை!

   மனசாட்சியோடுதான் எழுதுனிங்ல!! உருப்பட்ட மாதிரி தான்!!

 7. // சாதி, மதம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் கிடைக்காது. அவர்கள் பொதுப்பிரிவில்தான் கோர முடியும். //

  இப்படி செய்தால் ஈ வெ ராவின் ‘வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்’ என்னாவது ? புறப்படுங்கள் போராட

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க