Thursday, May 30, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசங்கப் பரிவாரம் வழங்கும் ""இதுதான்டா ராமாயணம்!''

சங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்!”

-

சங்கப் பரிவாரம் வழங்கும் இதுதான்டா ராமாயணம் !

“”வரலாறு  சொல்லித்தர வாரியாரு வருவாரு”  இது, இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் இருந்தால் கல்வித்துறையில் என்ன நடக்கும் என்பதை நையாண்டி செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல் வரி.  இந்த நையாண்டி வெறும் கற்பனையல்ல, உண்மை என்பதை அண்மையில் டெல்லியிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகமான டெல்லிப் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

அப்பல்கலைக்கழகத்திலுள்ள வரலாற்றுத் துறை இளங்கலை பட்டப்படிப்பில், “” முன்னூறு விதமான இராமாயணக் கதைகள் இந்தியா, தெற்காசியா, கிழக்காசியாவைச் சேர்ந்த மக்கள் மத்தியில் பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன” என்பதனை வரலாற்று ஆதாரங்களோடு நிரூபிக்கும் ஏ.கே. இராமானுஜன் என்ற வரலாற்றாசிரியர் எழுதிய “”முன்னூறு இராமாயணங்கள்:ஐந்து உதாரணங்களும் மொழிபெர்ப்புப் பற்றிய மூன்று கருதுகோள்களும்” என்ற கட்டுரை பாடமாக வைக்கப்பட்டிருந்தது.  “”இக்கட்டுரை மதத் துவேஷத்தோடு எழுதப்பட்டிருக்கிறது” என்ற பச்சை பொய்யைத் திரும்பத்திரும்பக் கூறி, இக்கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென இந்து மதவெறி பாசிசக் கும்பலைச் சேர்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தும், அப்பாசிசக் கும்பலுக்கு ஆதரவான ஆசிரியர் சங்கங்களும் டெல்லிப் பல்கலைக்கழகத்தை மிரட்டி வந்தன.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்த கும்பல் 2008 ஆம் ஆண்டு இக்கட்டுரையை எதிர்ப்பது என்ற பெயரில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை கட்டிடத்திற்குள் நுழைந்து ரவுடித்தனத்தில் இறங்கியதோடு, அப்பொழுது வரலாற்றுத் துறை தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.இசட்.ஹெச். ஜாப்ஃரியைத் தாக்கவும் முனைந்தது.  இக்கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச  நீதிமன்றம் தனது விசாரணையின் கீழ் கொண்டு வந்து, “”நான்கு வரலாற்று அறிஞர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு, அக்குழு இக்கட்டுரை பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டும்; அதன் அடிப்படையில் டெல்லிப் பல்கலைக்கழகம் அக்கட்டுரையைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

நான்கு பேர் கொண்ட அக்குழுவின் மூன்று உறுப்பினர்கள், “”அக்கட்டுரை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடும், மதிநுட்பத்தோடும் எழுதப்பட்டிருப்பதால் அதனை நீக்கத் தேவையில்லை” எனக் கருத்துத் தெரிவித்தனர்.  ஆனாலும், டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு இப்பெரும்பான்மை கருத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அக்கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது.  டெல்லிப் பல்கலைக்கழகத்தின் இக்காவித்தனமான முடிவை எதிர்த்து, அப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை ஆசிரியர்களும், மாணவர்களும் போராடத் தொடங்கியுள்ளனர்.  அப்போராட்டத்திற்குப் பல்வேறு இடதுசாரி இயக்கங்கள் மட்டுமின்றி, ஜனநாயக உணர்வுமிக்க வரலாற்று அறிஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சங்கப் பரிவாரம் வழங்கும் இதுதான்டா ராமாயணம் !அகில பாரதிய வித்யார்தி பரிஷத் கும்பலைச் சேர்ந்த ஒருவன், “”நான் டி.வி.யில் ராமாயணம் பார்த்திருக்கிறேன்.  அதைத் தவிர வேறு எந்த ராமாயணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்ற “ஆழ்ந்த’ கருத்தை இப்பிரச்சினை தொடர்பாக முன்வைத்திருக்கிறான். இதனை ஒரு முட்டாளின் கருத்தாக ஒதுக்கித் தள்ளமுடியாது.  ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கொள்கையே புராணக் கட்டுக்கதைகளை இந்தியாவின் வரலாறாகத் திணிப்பதுதான்.

இப்புராணக் கதைகளையும், அதன் கதைமாந்தர்களையும் யாரும் விமர்சனரீதியாகப் பார்க்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். கட்டளை போடுவதும், “மதச்சார்பற்ற’ காங்கிரசு கூட்டணி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லிப் பல்கலைக்கழகம் அப்””ஃபத்வா”விற்குப்  பணிந்து போவதும் சகிக்கமுடியாத வெட்கக்கேடு.  சமச்சீர் கல்வி தரமற்றது எனக் கூப்பாடு போட்டுவரும் கும்பலைச் சேர்ந்த ஒரு “அறிவாளி’கூட, இந்த வெட்கக்கேட்டை எதிர்த்து இதுவரை வாய் திறக்கவில்லை என்பதும் தற்செயலானதல்ல.

____________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் 2011

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

 1. ங்கொய்யால கூந்தல் இருக்கிறவன் அள்ளி முடிஞ்சிகிறான், உங்களுக்கேன்யா வயறு எரிகிறது..

  உனக்கெல்லாம் கூலி அள்ளி போடுற சீனாக்காரனே மோடிய கூப்புட்டு விருந்து வைக்கிறான். .. மூடிகினு போவியா..

  • அய்யா தரகரே, அப்படியே சீனாகாரனுங்ககிட்ட எவ்வளவு வாங்கிகொடுத்தீங்கனு சொல்லீட்டா பரவாயில்லை, என்னவோ நேர்ல பார்த்தமாதிரியே பீலாவுடறீங்களே,நல்ல ஆளுங்கய போங்க…

 2. பத்திரிகைகளில் வந்த சற்றே பழைய செய்தி இது. ஏ.கே. ராமானுஜன் வரலாற்றாசிரியர் இல்லை. குறைந்த பட்சம் இந்து பத்திரிகையில் வெளி வந்த இது தொடர்பான ரொமிலா தப்பாரின் பேட்டியையாவது பிரசுரித்திருக்கலாம்.

 3. click below to read

  >>>>>> அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

  இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
  Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.
  The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

  இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

  ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.

  இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார். >/b>

  .
  .

  • ஏன்பா,நாட்டுக்கு அவசியமான இந்த புனித கதைகளையெல்லாம் ரகசியமா வச்சிக்கனும், இந்த அரக்கனுங்கபத்தி மட்டும் சொல்லுங்க, அப்பதான் உங்கள ஜனநாயகவாதினு சொல்லுவாங்க…

  • குதிரை மூலம் குழந்தையா?
   கொள்ளு தாத்தா குதிரையா?(ராமனுக்கு)

 4. There are so many versions of Ramayana throughout Asia. The one projected in Doordharshan is popular in India. But there are different stories of the same Ram among Tribals of India, Thailand, Combodia, Indonasia, Malaya etc.

 5. ஏ.கே.ராமானுஜனை யார் கொண்டாடுகிறார்கள்- காலச்சுவடு கும்பலும், எம்.டி.முத்துகுமாரசாமி போன்ற பின் நவீனத்துவவாதிகளும். இதிலிருந்தே தெரியவில்லையா அவர்களின் நோக்கம் என்னவென்று. இந்துமதம் பற்றிய பிரச்சாரம்
  இப்படி மறைமுகமாக நடக்கிறது என்பது உங்களுக்கு புரியவில்லையா.

  மதச்சார்பற்ற நாட்டில் பல்கலைகழகங்களில் ராமாயணம் பற்றிய கட்டுரைகள் பாடத்திட்டத்தில் இருப்பதை எதிர்க்க வேண்டும்.அதை யார் எழுதினால் என்ன.ராமனையும்,ராமயணத்தையும்,இந்து மதத்தையும் எதிர்க்கும் இடதுசாரிகள்,முற்போக்காளர்கள் ராமாயண புகழ் பரப்பும் கட்டுரை நீக்கப்பட்டதை வரவேற்க்க வேண்டும். சங் பரிவார்கள் செய்துள்ள நல்ல செயலை நாம் வரவேற்ப்போம்.ராமனுக்கும்,புராண குப்பைகளுக்கும் பாடத்திட்டத்தில் இடமில்லை என பெரியார் வழியில் உரத்துச் சொல்வோம்.பெரியார் கம்பனையும் கொண்டாடவில்லை,
  கம்பராமாயணத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.எனவே கம்பனை கொண்டாடும் ராமனுஜனின் கட்டுரை நீக்கப்பட்டது சரியானதே.இதே கட்டுரை தமிழகப் பல்கலைகழகங்களில் இடம் பெற்றால் அதையும் எதிர்க்க வேண்டும்.

  • //ஏ.கே.ராமானுஜனை யார் கொண்டாடுகிறார்கள்- காலச்சுவடு கும்பலும், எம்.டி.முத்துகுமாரசாமி போன்ற பின் நவீனத்துவவாதிகளும். ///

   உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். ஏ.கெ.ராமானுஜம் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை அறியாதவரின் கூற்று. முக்கியமாக சங்க பாடல்களை மிக அருமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். சிகாக்கோ பல்கலை கழக தமிழ் துறை பேராசியராக இருந்து, பெரும் பணியாற்றி, காலமானவர். அவரை பற்றி அறிந்தவர்களுக்கு அவரது அகால மரணம் பெரும் துயரச்செய்தி.

   மற்றபடி உங்கள் வாதம் ‘விஞ்ஞானபூர்வ’மானதல்ல. அக்கட்டுரை அவசியம் வேண்டும். மதசார்பற்ற நாடு என்பதாலே, இது போன்ற ஆய்வுகள் பல்கலைகழகங்களில் கூடாது என்பது பேதமை. மூடநம்பிக்கைகளை தான் பரப்பகூடாது. ஆய்வுகளை அல்ல.

  • பெரியார் செம காமெடியன்!!அவரை நாத்திகன் என்று சொல்ல கூடாது!உதாரணம் கீழே!!
   16-11-1930 ஆம் ஆண்டு ‘குடியரசு’ இதழில் கேள்வி-பதில் வடிவில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதுகிறார்:-

   வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?
   விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.
   வினா: மகமதியனாவதில் என்ன கெடுதி?
   விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.
   வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?
   விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. அதனால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும்.

   25-08-1929 -’குடியரசு’ இதழில் எழுதுகிறார்:-

   ‘‘இன்று நாம் கொண்டாடும் திரு. மகமது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது நான் முன் சொன்ன முறையில் கொண்டாடத்தக்க ஒரு ஒப்பற்ற பெரியாரின் கொண்டாட்டம் என்றே சொல்லுவேன். இன்னமும் விளக்கமாகச் சொல்வதானால், இப்போது நம்மால் மதத்தலைவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களில் எல்லாம் திரு. மகமது நபி அவர்கள் மேலானவர்கள் என்றும், எல்லா மக்களும் பொதுவாகப் பெரிதும் அவரைப் பின்பற்ற உரியார் என்றும் கூட தைரியமாகச் சொல்லுவேன்’’.

   23-08-1931 ‘குடியரசு’ இதழில் கூறுகிறார்:-

   புத்தர், கிறிஸ்த்து, மகமது நபி ஆகியோர்கள் சீர்திருத்தகாரர்களாயத் தோன்றினார்கள்… மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும் என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.

   21-02-1935 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

   ‘‘தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது.
   … பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றப் படிப்பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்.’’

   26-06-1943 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

   ‘‘இந்து மதத்தைத்தான் மானமுள்ள ஆதிதிராவிடனும், தமிழனும் வெறுத்து அதிலிருந்து விலக வேண்டுமே ஒழிய, அதைவிட்டு இஸ்லாம் மதத்தைப் பற்றியோ, வேறுமதத்தைப் பற்றியோ வெறுத்துப் பேசுவது மதியற்றதும், மான உணர்ச்சியற்றதுமாகும்.’’

   26-12-1948 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

   அறிவான தெய்வமே (ராமலிங்கம்) அன்பான தெய்வமே (கிறிஸ்து) அருளான தெய்வம் (மகமதுநபி) சத்யமான தெய்வமே (காந்தி).

   31-12-1948 ‘குடியரசில்’ எழுதுகிறார்:-

   ‘‘… ஆனால் கிருஸ்துவையோ, மகமது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை ஏன்? அவர்களெல்லாம் லட்சிய புருஷர்களாக ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்’’

   04-06-1959 ‘விடுதலையில்’ எழுதுகிறார்:-

   ‘‘கடவுளை கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லிம்கள் மாதிரி கும்பீடு’’

   25-12-1958 ‘விடுதலை’யில் எழுதுகிறார்:-

   ‘‘கிறிஸ்தவர், முகமதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறார்கள். அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன்?’’

  • Dear friend,
   It seems that you are not aware of the importance of A.K.Ramanujan’s contributions to Tamil literature. What he has done through his translation works to make Sangam Tamil literature reach international audience stands exclusively at very high pedestal which might not be easy to comprehend for mean and irrational critics. (I expect you should not be one among them)

   India declares itself a secular country. But if you analyse the socio -cultural fabrics, secularism in India is always understood only with the presence of religion not the other way round. You can not understand ‘Indian secularism’ without understanding its religions and its dogmas. In India, secularism does not necessarily mean the absence of religions. It is improbable.

   If it is true that religion and associated literary works do have impact on common man’s thought process we can simply escape telling that studying religion and religious characters are not secular. This escapism has so far resulted in many unpardonable social evils. Thus critically analyzing the veracity of the applicability of those puranas and histories, stories do deserve deep scrutiny. It is the need of the hour. For example, when we find the ideals we cherish in our day to day life are not embodied by our Gods and religions, deification of those mythological characters in it becomes utterly unwarranted and questionable.

   Periyar rejected kamban for other reasons. That is not the issue. The issue is the interpretation of mythological characters and their hidden histories in between lines in the whole narrative of a work of literature. Ramanujan neither does celebrate Kamban nor his literary prowess. He simply provides multifarious versions of a puranaic/historical narrative which has only very few to be studied at present. Opposing such contribution to literature is nothing but an act of ignoramuses.It is a kind of vandalism. If Pulavar Kuzhanthai celebrates Ravanan as a hero, try to get into the details based on which he tries to justify his stand. If Pudhumaippiththan asks Ahalya to remain stone even after her redemption by Rama in ‘Saaba Vimochanam’ try to comprehend the reasons and logic behind such propositions. Leaving it aside, insulting a work of art and condemning an artist do not qualify intellectual perfection. I hope you agree with me.

   Saravanan.k

   • The term Indian Secularism is a paradox. If you start giving such acceptance you will have to end up with Chinese Secularism, Sinhalese Secularism, Tamil Secularism and so on. It messes up the whole situation once you give a regional colour. Could we appreciate any term like ‘Indian Human Rights’ and say we Indians have a special meaning for it? It seems to be ridiculous and precarious of giving way to such thoughts in our mind. The term Indian Secularism stems up from the fact that the term mere Secularism is a foreign ‘import’. And also the exponents of ‘Indian Secularism’ suffer from an unwarranted fear that people who are already religious won’t accept an extreme Secularism. Actually by promoting such paradoxical thoughts like Indian Secularism one is giving himself into the hands of Hindutva fanatics who claim ‘all religions are equal, yes, we agree, but we are more equal since Hindus are large in numbers’. Then they make such a hullabaloo in the media that the secularists are pseudo-secularists.

    • Read Indian secularism as secularism understood in Indian context in the given religious milieu and not as a term in itself. It is not a paradox. What I meant to say is that one religious context of one society can not be replicated or adopted blindly without appreciating the ground realities of the latter.. A society where caste, creed, religion do not play vital role in deciding people’s thought process in their interaction with their fellow men, can not not be compared with the society where all these said factors play exponential role in making of its people’s social interaction. That is why I deliberately coined ‘Indian secularism’.

     No body is promoting such dubious concepts…rather I am not afraid of nonacceptance of extreme secularism by deeply religious people in India. Let us not live in fools’ paradise. If you try to understand secularism in India as a state where there is no religion in public affair, you are like an ostrich putting its head deep in side sand thinking that she is safe from wild animals as she does not see anything. This complexity has warranted the scrutiny of Indian religious literature. After all they are some efforts towards healthy understanding of secularism in the whole unfinished project of religious intolerance. Pseudo secularism does not have space whether it is equality among religions or absence of religions. I think both are not possible in India. Different versions of Ramayana does not aim to deconstruct the epic superstructure…it is an effort to have better understanding of Indian society.

     Saravanan.K

     • See, I haven’t disputed the importance of re-reading Ramayana like primitive texts. In fact all of us have to read, re-read and interpret them so that we can understand the kind of politics that determined the fate of our people from ancient times. But we need to understand the myths as myths and proper enlightening is required for that. Unfortunately we didn’t undergo such a period of enlightenment in the monotonous and dull nature of our society until the intervention Periyar’s movement. He successfully filled up the vacuum and common men accepted that. The strong opposition came from people in the top of the social ladder who found Periyar’s movement was shaking their very existence. So Periyar also had to expose the benificiaries[read parppanars] of the ideology propounded by those primitive texts.

      The British ever since the Renaissance Period made attempts to re-read and interpret the ancient Greek literature. It reached an all-time high during the Victorian Period when Shelley gave a new insight to a Greek mythical hero Prometheus who was banged in the Greek text that he had stolen fire from god and gave it to people. Alfred Owen treatised Homer’s great epic ‘Iliad’ in a completely different form. But the Hindutva fanatics see all interpretations of ancient texts as denigrating their religion. Problem creeps in there. Say, for an example if I compare the resilience of Prometheus with Ravanan, I appear to be a villain to these Hindutva hooligans who think I am venerating a persona from Ramayana who is condemned to death by their god Ram.

      Given this context I still strongly stand by my view that your term Indian Secularism is misleading and paradoxical.

  • Periyaar yaaru kambaraiyum kamba ramayanathai angeegaripathurkku. Avan enna tamilku contribute pannan. Avan vazhkai kathaiye sakadai mathiri ithula aduthavangala pathi vimarsanam

   • Mr Seppu sattai,first tell us your qualifications and contributions to the society.Vinavu should not have allowed this downright silly comment from this anonymous person.Are the Vinavu moderators are sleeping?

 6. உடுங்க அல்லாருக்கும் சுன்னத்து பண்ணி இலவச குரான் கொடுத்து இதாண்டா குரான்னு ஒரு கட்டுரை எழுதிடுவோம்!!

  • பண்ணி எல்லாம் அப்புறம் பண்ணலாம் .. உன் மதத்தோட வர்ணாசிரம யோக்கியதையைப் பற்றி பேசலாமா ?..

   • பண்ணி எல்லாம் அப்புறம் பண்ணலாம்..////ஏன் நீ அதை தின்குரதுல பிசியா இருக்கியா?சரி முடிச்சிட்டு வா!!
    *
    *
    உன் மதத்தோட வர்ணாசிரம யோக்கியதையைப் பற்றி பேசலாமா ?..////…என் மதம்னு நான் எதையும் இங்கு சொல்லவில்லையே!!உன் கண்ணை டாக்டரிடம் காட்டு!

 7. பாட திட்டங்களில் இராமாயணம் எதுக்கு? இராமனை பரப்பி பிழைப்பவன் செய்வது தவறெனில், இராமனை எதிர்த்து ப்ராச்சரிப்பவன் செய்வதும் தவறுதான்… இன்று இந்த இராமயண விமர்சனத்தை அனுமதித்தால், நாளைக்கு டாவின்சி கோடு நூலை பாடமாக்க நிச்சயம் முயலுவர்… அப்புறம் தோழர் சாகித்தின் கட்டுரைகளை பாடமாக பார்க்க வேண்டி வரும்… ஏன் வீண் மத வியாபாரம்… மீண்டும் மீண்டும் ஒரே தவறுதான் செய்கிறோம். இராமாயண எதிர்ப்பு என்பது இராமயண விமர்சன ஆதரவு என்ற அளவில் இருக்க கூடாது… இராமாயணத்தையே நம்பாத போது, அதன் விமர்சனத்துக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்… பெரியார் தமிழன் சொல்வது போல விமர்சனம் என்ற பெயரில் இராமாயணம் மீண்டும் நுழைகிறது என ஏன் உங்களுக்கு புரியவில்லை?

 8. பெரியார் தனக்கு வசதியானதை பற்றியே பேசினார்.பார்ப்பனரை காட்டியே மற்ற சாதிகளிடம் தலித் விரோதத்தை தூண்டி விட்டார்.அதனால் தான் முத்துராமலிங்கம் என்ற சாதி வெறியனுக்கு எதிராக மூச்சு கூட விடாமல் இருந்தார்.அவரை பின்பற்றியே அவரது பிள்ளைகள் [அண்ணா ,கருணாநிதி ] வெண்மணியில் சாதிவேறியரோடு கூட்டணி வைத்தார்கள்.பார்ப்பானை காட்டி மற்றவர்களின் பாவங்களை எல்லாம் மறைத்தார்.அம்பேத்காரிடம் இருந்த தெளிவு நேர்மை பெரியாரிடம் எப்போதும் இருந்ததில்லை.அவரது உற்ற நண்பன் தான் ராஜாஜி . இறுதி வரை.

  • வரலாறெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி ,அதை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம். ராமகோபாலன் மாதிரி கோவணத்தை இருக்கி கட்டிகிட்டு வந்து உளற கூடாது.

 9. // அதனால் தான் முத்துராமலிங்கம் என்ற சாதி வெறியனுக்கு எதிராக மூச்சு கூட விடாமல் இருந்தார். //

  கோபாலகிருஷ்ண நாயுடுவை முத்துராமலிங்கம் என்று எழுதிட்டீங்களோ?

  • paiya அதையெல்லாம் நம்புற ஆளான நீ இங்கெல்லாம் வரக்கூடாது அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று நீ படித்த படிப்பு உனக்கு கூறவில்லை என்றால் உன் போன்றோர் வாயையும் …..தையும் மூடிகொண்டிருப்பது சமூகத்திற்கு நல்லது.புள்ள குட்டிகளையாவது அர்த்தத்தோடு படிக்கவை கடம் அடிக்க சொல்லாதே.

 10. இதை எல்லாம் படிக்கும் பொழுது விரைவில் சீன கம்யூனிஸம் போன்ற ஒரு கட்சி வளர வேண்டும்… மோடி சீனா சென்றுள்ளது ஒரு நல்ல எதிர்ப்பார்ப்பு. அடுத்த தேர்தலில் அமெரிக்க ராஜ தந்திரம் சீன ராஜ தந்திரத்தால் முறியடிக்கப்படவும், மோடி பிரதமராகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல தொடக்கம். விரைவில் சீன கம்யூனிஸ அரசாங்கத்தின் வழியில் இங்கு மோடி தலைமையிலான ஒரு அரசாங்கம் அமையும். விரைவில் சீனாவை போனறோ அல்லது பர்மாவை போன்றோ இந்தியாவிலும் கருத்து சுதந்திரம் ஏற்பட வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  எல்லா மக்களும் வர்ணாசிரம் கீழ் தான் வருகிறார்கள் என்று பல கம்யூனிஸ்டுகள் பிதற்றுவதை படிக்கும் பொழுது எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரிவதில்லை… பழங்குடியினர்களும் வர்ணாசிரமத்திற்குள்ளே வரமாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அதிபுத்திசாலிகளிடம் என்னவென்று சொல்வது… இன்று SC வகுப்பில் இருக்கும் பெரும்பானமையாக மக்கள் வனவாசிகள் தானே?
  வர்ணாசிரமத்திற்குள் வராதவர்கள் நீச்சர்கள் என்றால் ரிஷிகளும் வர்ணாசிரமத்திற்குள் வராதவர்கள் தான். அப்படி என்றால் அவர்கள் எல்லாம் நீச்சர்களா? அரை குறையாக படித்து விட்டு உளறுவதே வேலையா போய் விட்டது?

  வனத்தை அழித்து அங்கு காப்பி எஸ்டேட்டை போட்டது என்ன பார்பண் சத்ரியர்களா? அல்லது கிறித்துவ கபோதிகளா? கோயிலாக வழிபட்ட வனத்தை அழித்தது ஹிந்துக்களா? அல்லது செக்யூலரிசம் பேசும் அறிவு ஜீவிகளா? செக்யூலரிசம் பேசி கொண்டு ஒரு புறம் MNC க்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு மற்றொரு புறம் கம்யூனிஸம் பேசும் காட்டிமிராண்டிகள் யார் என்பது மூளை உள்ளவர் அறிவான்… எவனோ ஒரு செக்யூலர் பரதேசி போலி ஹிந்து செய்யும் அத்தனை அயோக்கிய தனத்திற்கும் ஒட்டு மொத்த ஹிந்துக்கள் பொருப்பு ஏற்க வேண்டும். ஆனால் கம்யூனிஸ்டுகள் செய்யும் கற்பழிப்பு, கொலைகளுக்கு அவர்கள் பொருப்பு ஏற்க மாட்டார்கள்…… http://www.satp.org/

  எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்த பொழுதும் வனங்கள் பாதுகாப்பாக தானே இருந்தன. கிறித்துவ காலனிய செக்யூலரிச பரதேசிகள் வந்த பின்பு தானே நகரமும் சாக்கடையும் உருவானது. மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிப்பது யார் என்பது கம்யூனிஸ் அறிவு ஜீவிகளுக்கு தெரியாதா? அல்லது கூட்டாளியை காட்டு கொடுக்க கூடாது என்ற களவாணி தொழில் தர்மமா?

  ஒரு சில முஸ்லீம் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு முஸ்லீம்கள் எல்லோரையும் குற்றம் சொல்வது தவறு என்று வ்சனம் பேசிவிட்டு. மறுபுறம் ஹிந்துக்கள் என்றவுடன் அந்தர் பல்டி அடிப்பது….

  http://psenthilraja.wordpress.com/2011/11/16/varnashrama-dharma-is-not-totalatarian/

  போலி கம்யூனிஸ்டுகளும் கிறித்துவ அடிவருடிகளுக்கும் அடுத்தவர் இதிகாசங்களை இரட்டிப்பு செய்வது என்பது வழக்கமான ஒன்று தானே?

  பேகன்களுக்கும் மாயன்களுக்கு நடந்தது இப்பொழுது ஹிந்துக்களுக்கு…..எங்கே நேரடியாக மோத முடியாது என்பதற்கு பதிலாக சிகப்பு சட்டையில் பாகனீய சிலுவைகளை திருடிய கலாச்சார திருட்டு கூட்டம் மற்றவர் மீது சேற்றை வாரி இரைக்கிறது.

  http://freetruth.50webs.org/A4c.htm#India

  ஆங்கில அடிவருடி கெம்மாரி பார்ப்பணர்கள் எழுதிய புத்தகத்தை வைத்து கொண்டு இங்கு வாயில் அளக்கும் அதிபுத்திசாலி போலி கம்யூனிஸ்டுகளுக்கு சமஸ்கிரதம் பற்றி படிக்கவும் தெரியாது எழுதவும் தெரியாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் கொண்ட உச்சரிப்பில் ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும் வேறு கருத்தை குறிக்கும் மொழியில் தனது தவறான கருத்தை திணிக்கும் கோழைகளை என்று சொல்வதை விட வென்று சொல்வது?

  எங்கெல்லாம் கெட்டு போன பாப்பாண்கள் இருக்கிறார்களோ அங்கு எல்லாம் கம்யூணிஸ நாற்றம் உருவாகியுள்ளது என்பது மறுக்க முடியாத உணமை….ஏன் என்றால் அந்த நாற்றத்தை உருவாக்குவதே கெட்டு போன பாப்பாண்கள் தானே? 35 வருட கம்யூனிஸ் ஆட்சியில் எனக்கு தெரிந்து ஒரு தலித முதலமைச்சராக மாறியுள்ளரா? ஒரு பெண் முதலமைச்சர் உண்டா? பெண்ணியம் பேசும் வாய் சொல் வீரர்கள் எப்படிபட்டவர்கள் என்பது சீன அமைச்சரவையை பார்த்தாலே தெரியும்….பெண் குழந்தை கொலைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது ABVP தானே (Ref: film title) தவிர கேப்மாரி கெட்டு போண பாப்பாணான் N RAM உருவாக்கிய SFI கிடையாது….

  இதை கேட்டால் தவறு செய்யும் எல்லோரையும் நாங்கள் அவர்களையும் திட்டுவோம் என்பது? எடியுரப்பா ஊழல் செய்தால் அதற்கு RSS மக்கள் பொருப்பு ஏற்க வேண்டும். ஆனால் இவர்கள் மட்டும் ஒரு கட்டுரை போட்டுவிட்டு நல்ல பிள்ளை மாதிரி நாங்கள் எதிர்கிறோம் என்று சொல்வது… உங்கள் நாடகம் தான் விக்கி லீக்சில் தெரிகிறதே……

  http://articles.timesofindia.indiatimes.com/2011-09-06/india/30118676_1_maoists-essar-group-essar-sets

  கடைசியாக…. நான் என்ன சொன்னாலும் அதற்கு ஒரு பூணுலையும் ஒரு டௌசரையும் போட்டு அதற்கு மத சாயம் பூசுவீற்கள் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் இதை படித்து யார் சாதி வெறியை தூண்டினார்கள் என்று அறிவு என்று ஒன்று இருந்தாள் யோசியுங்கள்….

  In the introductory essay to his edited volume on the construction of ethnicity in Southern Africa, Leroy Vail argues that European Christian missionaries played a crucial role in the development of ethnic ideologies in Africa. According to Vail,

  In addition to creating written languages, missionaries were instrumental in creating cultural identities through their specification of “custom” and “tradition” and by writing “tribal” histories . . . . Once these elements of culture were in place and available to be used as the cultural base of a distinct new, ascriptive ethnic identity, it could replace older organizing principles that depended upon voluntary clientage and loyalty and which, as such, showed great plasticity. Thus firm, non-porous and relatively inelastic ethnic boundaries, many of which were highly arbitrary, came to be constructed and were then strengthened by the growth of stereotypes of “the other” . . . .(15)

  Vail argues that missionaries “incorporated into the curricula of their mission schools the lesson that the pupils had clear ethnic identities,” and claims that they “educated local Africans who then themselves served as the most important force in shaping the new ethnic ideologies.”(16) Combined with the policies of colonial administrators and the popular acceptance of ethnic ideas as a means of coping with the disruptions of modernity, the actions of missionaries helped to create the deep social divisions that are at the root of ethnic conflict in many African countries.

  For more information: http://faculty.vassar.edu/tilongma/Church&Genocide.html

  சாதிய ஏற்றதாழ்வு என்ற கிருமியை உருவாக்கியது யார் அதை எரியவிடும் கயவர்கள் யார் அதில் குளிர் காயும் கபோதிகள் யார் அவர்களை எப்படி அழிப்பது என்பது எங்களுக்கு தெரியும். சாதியை பற்றி பேசும் முன்பு நீங்கள் உங்கள் யோக்கிதையை கொஞ்சம் திரும்பி பாருங்கள். உங்கள் காட்டுமிராண்டி தனம் தான் திபெத்தில் தொடங்கி பர்மா வரை நீல்கிறதே….உங்கள் தொல்லை தாங்க முடியாமல் சென்னையில் அடிமைகள் போல் வேலை செய்யும் வட கிழக்கு, நேபாள நாட்டு மக்களை கண்டாலே தெரிகிறது. உங்கள் நன்னடத்தை எப்படிபட்டது என்று……

  அப்புறம் முக்கியமான விசயம், வடகிழக்கு மாநிலத்தவர்கள் இங்கு வருவதற்கு இராணுவம் தான் காராணம் என்று சில அறிவு ஜீவிகள் ஊறுகாய் போடுவார்கள். இராணுவம் அங்கு பல வருடங்களாக உள்ளது. ஆனால் கம்யூனிஸ் கிருமிகளின் வளர்ச்சியும், இவர்களின் இடம் பெயர்வும் ஒரு விகிதத்தில் ஏற்பட்டுள்ளது. நேபாள் மன்னர் ஆட்சியில் கூட இத்தனை பேர் இந்தியாவில் அடிமைகளாக இல்லை. ஆனால் கம்யூனிஸ் புனித ஆவிகளால் உருவாக்கப்பட்ட கெட்டு போன பாப்பானும் ஆங்கில அடிவருடியும் செக்யூலர் தலைவன் பெயரில் உருவான JNU வில் விஷவிதையை எடுத்து அதை நேபாளத்தில் தூவி ஆட்சியை பிடித்த பிரசண்டா வந்த பின்பு தானே இத்தனை பேர் அடிமைகளாக சுற்றுகிறார்கள்…

  அடுத்து மக்கள் தொகை சதவிகிதம் பற்றிய விசயம்…எந்த மாவட்டங்களில் மக்கள் தொகை அதிகம் அந்த பகுதிகளில் யார் MLA என்று பார்த்தாலே தெரியும்… நான் என்ன சொல்லவருகிறேன் என்று… அறிவு ஜீவிகளுக்கு இதை விட அதிகமாக சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்….

  http://en.wikipedia.org/wiki/File:India_population_density_map_en.svg

  வரதட்சனை என்ற உடன் சிலர் சேற்று வாளியுடன் காத்து இருப்பார்கள் என்று எனக்கு தெரியும் அவர்களுக்காக….

  http://en.wikipedia.org/wiki/Dowry

  (பேராசை கொண்டவனும் உழைக்காமல் சோம்பேரியாக உள்ளவனும் அதாங்க… ஆலை தொழிலாளர்கள் தலைவர்கள் மாதிரி ஆட்கள் எங்கு இருந்தாலும் இது போன்ற எதாவது ஒரு காரணம் சொல்லி அடுத்தவர் சொத்தை ஆட்டைய போட பார்ப்பார்கள். போலி கம்யூனிச்டுகள் எப்படி உண்டிகள் குழுக்குகிறார்களோ அதை போல போலி சாமியார்களும் உண்டியல் குழுக்குகிறார்கள்….அப்புறம் இன்னொறு விசயம் எல்லா சாதியிலும் வரதட்சணை கிடையாது…. செட்டியார்கள் சாதிகளில் பெரும்பாலும் பையன் வீட்டில் தான் அதிகம் கொடுப்பார்கள். குறிப்பாக மஹாராஷ்டிராவில் பையன் வீட்டில் தான் எல்லா செலவுமே…. கர்நாடகா தேவாங்க மற்றும் லிங்காயத்தில் ஒரு பகுதியிலும் இதே நிலை தான்….சரி உங்களுக்கு தெரிந்தது எல்லாம் போலி பாப்பாண்கள் மற்றும் மதம் மாறிய போலி தலித்துகள் தானே. உங்களுக்கு ஏது அந்த அளவுக்கு அறிவு… நான் எழுதுவதையாவது கொஞ்சம் படியுங்கள்…..)

  யூதன் பெற்று எடுத்த கம்யூனிஸத்திலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கும் பொழுது… இயற்கையாக உருவான பல பண்பாடுகளில் உலகம் முழுவதும் வேறுபாடுகள் இருக்க தானே செய்யும்…..

 11. // ராமர் பாலத்துக்கு எந்த நிலையிலும், எந்த சேதமும் வந்துவிடக்கூடாது என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது.- தினமணி-First Published : 05 Apr 2012 03:21:25 PM IST//

  //வருங்கால வாரிசுகள் நல்ல முறையில் வாழ என்ன வேண்டுமோ அதை இந்த அரசியல்வாதிகள் விட்டுவிட்டு உபோயோகமற்றதை பேசி பொழதை கழிப்பதே வேலயாபோச்சி யோசிங்க -Byஅண்ணாதுரை, KRISHNAGIRI//

  பிள்ளையார் இன்னும் குடிக்கிறாரா???

  இப்படி பேசிக் கொண்டே இருங்கள். ஆரம்பத்தில் கணினி மயமாதலை எதிர்த்த மாபெரும் தலைவர்களை கொண்ட நாடு நம் நாடு. மீடியா/ பத்திரிகைகளை ஜால்ரா கொட்டச் சொல்லுங்கள்.

  ஹி..ஹி..ஹி.. நாங்கள் அதைத் தானே செவ்வனே செய்து கொண்டுள்ளோம்.

  http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=577594&SectionID=164&MainSection

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க