ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு, முகமது பின் துக்ளக்கே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பு மருத்துவமனை என்ற அறிவிப்பு; அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக்கப்படுமென்ற ஹிட்லர் பாணி உத்திரவு; ஆயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வக்கிர முடிவு; பரமக்குடியில் போலீசு கயவாளிகளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கி ஏழு தலித்துக்களை கொன்று குவித்த பிசாசு ஆட்சி; மாதம் இரண்டு லாக்கப் கொலைகளைச் செய்யும் போலீசுத் துறைக்கு அளவிலா சலுகைகள்.
ஆனாலும் ஜெயலலிதா விடுவதாக இல்லை. முந்தைய முறை தன்னை முதலமைச்சராக தெரிவு செய்யாத மக்களை இந்த முறை வேறு வழியின்றி தெரிவு செய்திருந்தாலும் பழிவாங்க நினைக்கிறார் போலும்.
பால், மின்சாரம், பேருந்து என்று அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் ஒரு மூச்சிலேயே விலையையும், கட்டணத்தையும் உயர்த்தி தான் ஒரு பாசிஸ்ட் என்று ஓங்கி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் எந்த ஒரு முதலமைச்சரும், மாநிலமும் செய்திராத முன்னுதாரணமிது.
சுருங்கக் கூறின் இந்த விலை உயர்வினால் ஆவின், அரசுப் போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம் ஆகியவை கடும் கடன் சுமையிலிருந்து விடுபடும் என்பதெல்லாம் சும்மா ஒப்புக்கு தெரிவிக்கப்படும் சாக்கு. உண்மையில் இவற்றை ஒழித்து தனியார் துறையை விரிவுபடுத்தி கொள்ளையடிப்பதற்குத்தான் இவை உதவப் போகின்றன.
ஆவின் பால் தரமானது, சீக்கிரம் கெட்டுப் போகாது, சத்து விவரம் அறிவிக்கப்பட்ட அளவிலேயே இருக்கும். தனியார் பால் இவைகளுக்கு நேரெதிரானது. பொது மக்கள் அனைவரும் ஆவின் பாலையே விரும்புகின்றனர் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக தனியார் பால் முதலாளிகள் பெருகி வருவதற்கு அரசே மறைமுகமாக உதவி செய்கிறது. ஆவின் வலைப்பின்னலை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் முதலாளிகள் கைப்பற்றி வருகின்றனர். ஆவின் பால் கிடைக்காது என்ற தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் பால் முதலாளிகள் சந்தையில் கணிசமான அளவை பிடித்திருக்கின்றனர்.
தனியார் பால் முதலாளிகள் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பினாமிகளாகக் கொண்டும், இல்லையேல் லஞ்சத்தால் குளிப்பாட்டியும் இதைச் செய்து வருகிறார்கள். ஆவினுக்கு பால் கொடுக்கும் விவசாயிகளையும் தனியார் பால் முதலாளிகள் வேண்டுமென்றே அதிக விலை கொடுத்து கைப்பற்றுவதும் நடக்கிறது. ஆவின் ஒட்டு மொத்தமாக இழுத்து மூடப்பட்டாலோ, இல்லை கணிசமான சந்தையை இழந்தாலோ கொள்முதல் விலை என்பது தனியார் முதலாளிகள் நிர்ணயிக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். மேலும் சிறு அளவில் கால்நடை வைத்து பராமரிக்கும் விவசாயிகளை ஒழித்து விட்டு பணக்கார விவசாயிகள் பெரும் பண்ணைகளை வைத்து நடத்துவதையே தனியார் பால் நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன்மூலம் பல இலட்சம் சிறு விவசாயிகள் ஒழிக்கப்படுவார்கள். இது ஒரு தனிக் கதை.
இந்நிலையில் பால் விலை உயர்வு என்பது தனியார் முதலாளிகளை நோக்கி மக்கள் திரும்பவதையே நீண்ட கால நோக்கில் செய்யும். மேலும் ஆவின் முகவர்களுக்கும் குறைவான கழிவு வருமானம், பால் பொருட்கள் போதிய அளவில் தராமல் இருப்பது என்ற பிரச்சினையும் தமிழகம் முழுவதும் உண்டு. இறுதியில் ஆவின் பாலை வைத்து தனது குடும்ப பட்ஜெட்டை போடும் சாதாரண மக்கள் அனைவரும், இனி மாதம் 200 முதல் 400 ரூபாயை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு பெரும் சுமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அது போல பேருந்து கட்டண உயர்வு. தற்போதைய கட்டண உயர்வு மூலம் விரைவுப் பேருந்துகளின் கட்டணம் என்பது ஏறக்குறைய ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நெருங்கி விட்டது. ஏற்கனவே அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வந்தாலும் கட்டணம் குறைவு என்ற ஒரே காரணத்திற்காக மக்களால் விரும்பப்பட்டு வந்தன. இப்போது அதற்கும் ஆப்பு வைத்திருக்கிறார்கள். இலாபகரமான பேருந்துப் பாதைகள் முழுவதும் தனியாருக்கு திறந்து விடப்பட்டிருக்கும் நிலையில் இலாபம் இல்லாத பாதைகளுக்கு சேவை அளிப்பது அரசு பேருந்துகள் மட்டும்தான்.
ஆனால் இலாபம் தரும் பாதைகளை வைத்து தனியார் முதலாளிகள் சம்பாதிப்பதால் அந்த பணம் அரசுக்கு வருவதில்லை. ஆகையினால் மொத்தத்தில் நட்டம் ஏற்படுகிறது. மேலும் அரசு போக்குவரத்து கழகத்தை பொதுத்துறை அதிகாரவர்க்க முதலாளிகளும், அமைச்சர் பெருச்சாளிகளும் 90களில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே கொள்ளையடித்து வருகின்றனர். பாடி கட்டுவது, உதிரிப் பாகங்கள் வாங்குவது, ஏன் பயணச்சீட்டு அடிப்பது வரை இந்தக் கொள்ளை விருட்சமாய் வேர் விட்டிருக்கிறது.
இது போக மினிபஸ், ஷேர் ஆட்டோ, கால்டாக்சி, கேப் முதலான தனியார் சேவைகள் மூலம் பொதுப்போக்குவரத்து சேவையிலிருந்து அரசு மெல்ல மெல்ல கழன்று கொண்டு வருகிறது. விரைவுப் பேருந்து மட்டுமல்ல, நகரப் பேருந்துகளின் கட்டண உயர்வும் சாதாரண மக்களை அச்சுறுத்தும் வண்ணம் இருக்கிறது. ஆவடி, பூந்தமல்லியிலிருந்து பாரிமுனைக்கும், பாரி முனையிலிருந்து தாம்பரத்திற்கும் வேலை நிமித்தமாக சென்று வரும் மக்கள் இனி கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். தோராயமாக 500 முதல் 1000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
5000, 10,000 ரூபாய் சம்பளத்தில் வாழும் மக்களின் மொத்த செலவு திட்டத்தில் போக்குவரத்து மட்டும் 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளும். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் அல்லறும் மக்களுக்கு இது பேரிடியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மத்திய அரசு டீசல் விலையேற்றத்தினால் நட்டம் என்பதில் ஒரு உண்மையை மறைத்து வருகிறார்கள். மொத்த விலையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை வரியாகச் செல்கிறது. இது மாநிலங்களுக்குத்தான் செல்கிறது என்றாலும் அதை குறைக்க யாரும் தயாரில்லை.
மேலும் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு, விவசாயம் அழிக்கப்பட்டு வேறு வழியின்றி மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இந்த செயற்கையான நகரமயமாக்கத்தின் விளைவுதான் எல்லா இடங்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கும் இந்த அரசுதான் காரணம். கிராமப்புறங்களையும், விவசாயத்தையும் வாழ வைத்திருந்தால் இந்த அசுர போக்குவரத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இனி பேருந்து கட்டண உயர்வால் மக்கள் ரயில்களை மொய்க்கப் போவது உறுதி. ஏற்கனவே அப்படித்தான் நடந்து வருகிறது. ஆக ரயில்வே நிறுத்தங்களில் இனி வன்முறை, சண்டையில்லாமல் மக்களை திணிப்பதற்கு ஏகப்பட்ட போலீசு தேவைப்படும். அல்லது ரயில் கட்டணங்களையும் ஆம்னி பேருந்து அளவு உயர்த்தி விட்டால் பிரச்சினை இல்லை. அதையும் செய்தாலும் செய்வார்கள்.
அடுத்து மின்சார கட்டண உயர்வை அரசு அறிவிக்காது, ஒழுங்குமுறை ஆணையமே அறிவிக்கும் என்று தனக்கு சம்பந்தமில்லாதது போல ஜெயலலிதா தெரிவிக்கிறார். ஏற்கனவே கிராமங்களில் 5 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு, நகரங்களில் 3 மணி நேரத்திற்கு குறையாத மின்வெட்டு, மின்சாரமில்லாமல் ஓட முடியாத விவசாயிகளின் பம்பு செட்டுக்கள், சிறு – நடுத்தர தொழில்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் போது பட்ட காலிலே படும் என்பது போல கட்டண உயர்வு. இந்தக் கட்டண உயர்வும் ஏறத்தாழ 30 முதல் 40 சதவீதம் இருக்குமென்று தெரிகிறது. அதன்படி 500 ரூபாய் கட்டியவர்கள் இனி 700 ரூபாய் கட்ட வேண்டும். 1000 ரூபாய் கட்டியவர்கள் இனி 1400 ரூபாய் கட்ட வேண்டும்.
பெரு நகர குடித்தன வீடுகளில் யூனிட் ஒன்றுக்கு 7, 8 ரூபாய் வைத்து வாடகைக்கு விடுபவர்கள் இனி பத்து ரூபாய் என்று மாற்றப் போவது உறுதி. அதன்படி 100 யூனிட் மட்டும் பயன்படுத்தும் மக்கள் அதற்கென ரூ.1000 கட்ட வேண்டும். இது வீடுகளில்லாமல் வாடகைக்கு இருக்கும் சாதாரண மக்களுக்கு எத்தகைய துயரமென்பது விளக்காமலேயே புரியும். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தடையின்றி சலுகை விலையில் கொடுக்கப்படுவதும், ஷாப்பிங் மால்கள் முதலான பேரங்காடிகளுக்கு விரயமாக்கப்படும் மின்சாரமும்தான் இன்றைய தட்டுப்பாட்டிற்கு காரணம்.
இவர்களுக்கு உரிய விலை வைத்தாலே மின்சார வாரியம் நட்டமின்றி செயல்பட முடியும். இது போக ஆளும் கட்சி பொதுக்கூட்டங்களுக்கும், கோவில் விழாக்களுக்கும் கொக்கி போட்டு திருடப்படும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை வசூலிக்க முடியும். இதையெல்லாம் விடுத்து சாதாரண மக்களது மடியில் கை வைக்கிறார் ஜெயலலிதா.
தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று நாடகமாடும் ஜெயலலிதாவின் நரித்தனத்திற்கு தினமலர், தினமணி, ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊடக மாமக்கள் விளம்பரம் கொடுத்து அது உண்மை போல செய்திகளை வெளியடுகின்றனர். இலவச லாப் டாப், மிக்சி, பேன், கிரைண்டர், ஆடு மாடு போன்றவை கொடுப்பதற்கு மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டுமாம்.
எனில் இதை தேர்தலின் போது தெரிவித்திருக்கலாமே? இத்தகைய இலவச திட்டங்களை மத்திய அரசு நிதி கொடுத்தால் மட்டும் அமல்படுத்துவோம் என்றல்லவா அறிவித்திருக்க வேண்டும்? தி.மு.கவிற்கு போட்டியாக ஏதாவது செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் பாசிச ஜெயாவின் திட்டம். உண்மையில் இத்தகைய இலவசத் திட்டங்களெல்லாம் கொடுக்க கூடாது என்பதுதான் அவரது உட்கிடை. முதலாளிகளின் உலகில் வாழும் அவருக்கு சாதாரண மக்களது நலனைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்? உண்மையில் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னால் எதுவும் பிடுங்க முடியாது என்று ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு போகவேண்டியதுதானே?
நட்டமடையும் பொதுத்துறைகளுக்காக கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக கூறும் ஜெயா அது போல ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் வருமானத்தை அள்ளித் தரும் மற்றொரு ‘பொதுத்துறையான’ டாஸ்மாக்கிற்கு கட்டண குறைப்பை அறிவிப்பாரா? இல்லை அந்த வருமானத்தைக் கொண்டு பால், பேருந்து விலை உயர்வை செய்யமாட்டோம் என்றுதான் சொல்லுவாரா? முக்கியமாக அவரது பல இலவசத் திட்டங்களுக்கு அமுத சுரபி இந்த டாஸ்மாக்தான். அதனால்தான் ஏழை குடிகாரர்களின் வாந்திகளுக்கிடையே குடிக்க விரும்பாத பணக்காரர்களுக்காக எலைட் டாஸ்மாக்கை திறக்கப் போகிறார்.
அரசு வரிவருவாயைப் பெருக்க வேண்டுமானால் கார்களை வைத்திருப்போருக்கு வரி உயர்த்த வேண்டும், மாளிகைகளில் குடியிருப்போருக்கு வரி விதிக்க வேண்டும், பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகள் இவர்களுக்களல்லவா அதிகம் வரி விதிக்க வேண்டும்? இத்தகைய வசதிகளெதுவும் இல்லாத வாழ்வை நடத்துவதற்கே அல்லும் பகலும் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மடியில் கை வைக்க வேண்டுமென்றால் என்ன காரணம்?
கல்வி, போக்குவரத்து, மருத்தவம் என அனைத்து துறைகளிலும் அரசை ஒழித்து விட்டால் அளப்பறிய பணம் தனியார் முதலாளிகளுக்கு போகும். அதற்காகத்தான் இந்த விலை உயர்வு. இது பாசிச ஜெயா மட்டுமல்ல, கருணாநிதி இருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும். என்ன தி.மு.க ஆட்சியிலிருந்தால் அது சத்தமில்லாமல் நடந்திருக்கும். பாசிச ஜெயா என்பதால் ஊரறிய பறையடித்து அறிவித்திருக்கிறார்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் இனி உழைக்கும் மக்கள் தமது மாத செலவில் 2000 ரூபாய் வரை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த சுமையை அவர்கள் அடிமைகளைப் போல சுமந்து கழிக்கப் போகிறார்களா? இல்லை தளையை அறுத்து போராடப் போகிறார்களா?
ஓட்டுப் போடாதீர்கள், அதில் தீர்வில்லை, இந்த சமூக அமைப்பை மாற்ற புரட்சி நடத்த வேண்டுமென்று பேசினால் இதெல்லாம் வேலைக்காகாது என்று எல்லாம் அறிந்தவர் போல புறந்தள்ளும் நடுத்தர வர்க்கம் இனியாவது தனது முட்டாள்தனத்தை உணருமா?
பாசிச ஜெயா அறிவித்திருக்கும் இந்த உத்திரவுகள் ஒரு முன்னோட்டம்தான். நாடும், மக்களும் மொத்தமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசப்படும் அங்கமாகத்தான் இந்த அறிவிப்புகள் பட்டவர்த்தனமாக வருகின்றன. என்ன செய்யப் போகிறோம்?
___________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்:
- 7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!
- பரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!
- வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!
- ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி!
- விவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி!
- மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!
- ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”
- இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !
- ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!
- ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
- ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!
- சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!
இன்னும் இந்த மக்கள் இதை புரியாமல் கருணாநிதி இருந்திரிந்தால் இந்த மாதிரி வந்திருக்காது என்று சொல்லுவதை கேட்டால் கோபம் தான் வருகிறது
என்ன இப்படி சொல்லிட்டேல் ஜெயா is a perfect administrator ன்னு நான்தானே certificate கொடுத்தேன்.அதெல்லாம் நன்னா ஆண்டுண்டு இருக்கா!!என்ன கோரி சொல்ல?இந்த பாழாப்போன ஏழை ஜனம் எதனா சொல்லிண்டே இருக்கும் அதெல்லாம் காதுல போட்டுக்க பிடாது!ஐ டி கம்பெனியில் இருக்கும் மக்கள் வாழ்ந்தால் போதும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்தும் எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
Whatever people desire, they get as desired
if only they have firmness of mind.
This is from Speech of Thiru O.Panneerselvam, Minister for Finance, Government of Tamil Nadu, presenting the Revised Budget for 2011-2012 to the Legislative Assembly on 4th August, 2011.
பொது மக்களின் சாபம் சும்மா விடாது…. ரிஷ்வன்
ஆனந்தவிகடன், தினமலம் போன்ற —————- இதற்கு பெரும் சப்போர்ட் செய்வதுதான் கொடுமை, அந்த—————- ஜாதி வெறியில் எல்லா கர்மத்துக்கும் சப்போர்ட் செய்யும் வாசகனை என்ன சொல்லி ஏசுவது?
தினமலம்,தினமுனி,போன்ற நாய்களை எல்லாம் தமிழ் நாட்டை விட்டே விரட்ட வேண்டும்
பெரியார் பஸ்கள் தான் நட்டத்தில் இயங்குகின்றன என்று பொய் நாடகம் ஆடி விலைவுயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது… ஆனால் தனியார் பேருந்துகள் ஓரு மாதம் முன்பு தான் டிக்கட் விலையை ஏற்றினார்கள்… ஆனால் இப்பொழுது அரசு பஸ்கள் equal ஆக அவர்களும் விலையை அதிரடியாக ஏற்றிவிட்டார்கள்… அவர்களுக்கு எந்த நட்டம் ஏற்படுகின்றது என்று தெரியவில்லை????? எங்கள் மாவட்டங்களில் (கடலுர்) அதிகமாக தனியார் பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன…. ஆக மொத்தம் முதலாளிகள் லாபம் சம்பாதிக்க வழிவகை செய்து கொடுத்துள்ளது இந்த மக்கள் விரோத ஜெயா அரசு….
நம்மூரா?இருக்கட்டும்!நீங்க சொல்றது உண்மை!மொதலாளிகள் பெட்டியை இந்நேரம் கொடுத்திருப்பார்!பாண்டி கடலூர் இடையே தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன(கமிஷன் வாங்கி கொண்டு அரசு பஸ் இயக்குவதில்லை) செம வருமான் இந்த ரூட்டில்!
//உண்மையில் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னால் எதுவும் பிடுங்க முடியாது என்று ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு போகவேண்டியதுதானே?//
சூப்ப்ர் !!!
[…] பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வ… […]
ஏண்டா அம்பி நன்னாதனே ஆள்ரா அம்மா!!என்ன கொறை வந்துடுத்து?மக்கள் சுபீக்ஷமா இருக்கா!பாலாரும் தேனாறும் ஓடறது!இத விட என்னடா வேணும் அம்பி?
அரசு,அரசாங்கம்,அரசியல்,உரிமைகள் அற்ற மக்கள் மீள் வாசிப்பு செய்யலாம்.
[…] பதிவு: வினவு இவைகளில் […]
வழக்கமா வந்து ஏதாவது பேசி (பொழுதுபோக்க) அம்பிகலே எங்கடா போனிங்க….
பால் விலை உசந்தா தயிர், நெய் விலையும் ஏறும். அதிகமா பாதிக்கப் பட்டவனை ஏனய்யா நோண்ட்றீர்? சுனாமி வந்தாக்கூட அம்பிகளைத் தேடுவீர் போலருக்கே.
[…] நன்றி : வினவு […]
விலை உயர்வு சிறுது சிறிதாக அவ்வபோது உயர்த்தி வந்தால் சுமை தெரியாது. ஆனால் அரசியல் காரணமாக பல வருடங்களுக்கு உயர்த்தாமல் இருந்து விட்டு திடீரென அதற்கெல்லாம் சேர்த்து வைத்து உயர்த்தினால் இவ்வாறே நடக்கும்.
மக்களின் வாழ்கை தரம் உயரும் போது கட்டணங்களும் உயரும் என்பது நிதர்சனம். அவ்வாறில்லையெனில் அரசு கொடுக்கும் சேவைகள் சுதந்திர காலத்து கட்டணத்திலேயே தான் இருந்திருக்க வேண்டும்?
அரசு நிறுவனத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கும் ஒரு சிறு வித்தியாசம் தான். அரசு நிறுவனங்கள் சேவை நோக்குடன் இயங்குபவை – தனியார் நிறுவனங்கள் லாப நோக்குடன் இயங்குபவை. சேவை நோக்கம் என்பதற்காக நட்டத்தில் இயங்க வேண்டும் என்பதில்லை.
அவ்வாறு நட்டம் ஏற்படின் மக்களின் பணமே அவற்றிக்கு செலவிடப்படும்.
மின் கட்டண உயர்வும் பேருந்து கட்டண உயர்வும் தேவை என்பதாகவே தோன்றுகிறது. இரண்டு நிறுவனங்களும் மஹா நட்டத்தில் உள்ளதென்பது கண்கூடு. ஆனால் நாது முழுவதும் வெள்ளை புரட்சி நடகின்றது. பால் உற்பத்தி பல மடங்கு உயர்கிறது. அது பால் விலையினை குறைக்க வேண்டும். அதன் விலையேற்றம் என்பது நெருடலாக உள்ளது.
மக்களின் வாழ்கை தரம் உயரும் போது கட்டணங்களும் உயரும் என்பது நிதர்சனம். ////……அய்யா எங்க உயர்ந்திருக்கு?முதல்வன் படத்தில் ரகுவரன் டயலாக் பேசாதீங்க!புள்ளி விவரங்கள் சொல்ல இயலுமா?ஐ நா சபை இந்தியாவில் நாப்பது கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர்னு சொல்லுது!நீங்க இப்படி சப்பை கட்டு கட்ரீங்க?துக்ளக் தவிர பிற புத்தகங்களையும் படிங்க!
>> அய்யா எங்க உயர்ந்திருக்கு?
>> புள்ளி விவரங்கள் சொல்ல இயலுமா?
உயரலைன்னு சொல்றீங்களா? புள்ளி விவரமெல்லாம் வேண்டாம். புள்ளி விவரம் தான் ஒரு ஆளுக்கு ஒரு நாள் செலவு ரூ.32 போதும் என்று சொல்கிறது.
நடைமுறையை பாருங்கள். கட்டிட வேலை செய்பவர்கள் இன்று தினக்கூலியாக ரூபாய் 300 வாங்குகிறார்கள். வீட்டு வேலை செய்பவர்கள் ஒரு வீட்டிற்கு ருபாய் 1000. அவ்வாறே வேறு வேலை செய்பவர்க்கு கூலி உயர்ந்தே உள்ளது.
>> துக்ளக் தவிர பிற புத்தகங்களையும் படிங்க!
துக்ளக் நான் படிப்பதில்லை.
ஒரு மானங்கெட்டவன் சொன்னான் 32 போதும் என்று, 32 ரூபாயை வைத்து நாலு நாள் செலவு செய்து பார் தெரியும்.
சாதாரண பேருந்துகளில் exp என்று சிறிய எழுத்துகளில் எழுதிவிட்டு இரு மடங்கு வசூலிக்கிறார்கள், இங்கு பேருந்தின் தரம் எங்கு உயர்ந்தது? நட்டதிர்க்கு முக்கிய காரணம் நிர்வாக கோளாறு மற்றும் பெருமளவு ஊழல்கள். சிறிதளவு உயர்த்தலாம், 70 – 90 % உயர்த்தப்பட்டுள்ளது ஏற்றுகொள்ள முடியாதது.
என் கருத்தும் இதுவே. மக்களுக்கு பளு தெரியாமல் சிறுது சிறிதாக உயர்த்தாமல் இன்று அதற்கெல்லாம் சேர்த்து வைத்து உயர்த்துவதே பிரச்சனை.
சரிதானுங்க, கருணாநிதி ஆட்சிக்காலத்திலேயே சிறிது சிறிதாக ஏற்றி மக்களை மெல்ல மெல்ல சாகடித்திருக்க வேண்டும்.இப்படி மொத்தமாக ஏற்றி ஒரேயடியாக சாகடிக்கும் அபாக்கிய நிலைக்கு புரட்டு தலைவியை தள்ளிய கருணாதான் உண்மையான குற்றவாளி.இந்த விலை உயர்வை அறிவிக்க அந்த பேயுள்ளம் எவ்வளவு வருந்தியிருக்கும்னு நெனச்சி பாருங்க.யாரும் அம்மாவ கொற சொல்லாதீங்க.இதுக்கே அசந்துட்டா எப்படி,இன்னும் நாலு ஆண்டுகளுக்கு மேல் பாக்கி இருக்கு.
இன்னும் நாலு வருசமா…………….?
i will not accept this. how the private buses are running with profits…
the management is the problem in government and this price rise is only for private owner’s profits. Even if they rise the price also the goverment will tell still in lose…
we need to eradicate privatism and we need to give goverment to private management onlyu.
not for rising the price or control fully….
இவ்வலவு விலை உயர்த்தியும் கருணாநிதி கல்லாவை காலி பன்னிட்டாரு ஜெயலலிதா
வந்து என்ன செய்யும் அப்புடினு நடுத்தர கார பயளுக பேசுரத கேட்ட கடிச்சி கொதரனும்போல இருக்கு…
கருணாநிதி காலி பண்ணினா, அவர் வீட்டு சொத்துக்கள பறிமுதல் செய்யவேண்டியது தானே. யாரு வேண்டானு சொன்னது.
மாதம் இரண்டாயிரம் கூடுதல் செலவீனம் வரும்போது அதை சம்பாதிக்க நாம் ஓடுவதும், அதைப் பிடித்துவிட்டு சாதித்த மிதப்பில் நாம் இருக்கும்போது, மேலும் விலைகளை ஏற்றிவிட்டு அதைப் பிடிக்க நம்மைத் துரத்துவதும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளுக்கும், கொள்ளை முதலாளிகளுக்கும் ஏகப் பொருத்தம்! அப்படி நம்மை சிந்திக்க விடாமல் வைத்திருப்பதுதான் அவர்கள் மூலதனமே! இதில் திருக்குவளை தீயசக்தியாக இருந்தால் என்ன.. மன்னார்குடி மாஃபியாவாக இருந்தால்தான் என்ன..! எல்லோருக்கும் ஒரே இலக்குதான். அது…??
இந்த விலையேற்றம் மக்களுக்கு பெரும் சுமை என்பது, ஜெ பலனேரங்களில் ஃபாசிஸ்ட் போல் தான் செயல்படுகிறார் என்பதும் சரிதான். ஆனா உங்க conspiracy theoryதான் சகிக்கவே முடியவில்லை. (இதில் பின்னூட்டம் போட வேண்டுமா என்றும் யோசிக்க வைக்கிறது. எத்தனை முறை எடுத்தியம்பினாலும், தான் பிடித்த முயலுக்கு முணு கால் தான் என்பவர்களிடம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம்)
///ஆவின் பால் கிடைக்காது என்ற தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் பால் முதலாளிகள் சந்தையில் கணிசமான அளவை பிடித்திருக்கின்றனர்.//
எப்படி இது ? ஆவின் தட்டுப்பாட்டுக்கு இவர்கள் எப்படி காரணம் ?
//தனியார் பால் முதலாளிகள் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பினாமிகளாகக் கொண்டும், இல்லையேல் லஞ்சத்தால் குளிப்பாட்டியும் இதைச் செய்து வருகிறார்கள். //
நிருபியுங்களேன்.
///ஆவினுக்கு பால் கொடுக்கும் விவசாயிகளையும் தனியார் பால் முதலாளிகள் வேண்டுமென்றே அதிக விலை கொடுத்து கைப்பற்றுவதும் நடக்கிறது. ////
இது உண்மைதான். ஆனால் அரசு கொள்முதல் விலையை (விலைவாசி உயர்வை ஒட்டி) அவ்வப்போது உயர்த்த மறுப்பதால் தான் தனியார்களிடம் ‘சந்தை’ விலையில் விற்க்க விவசாயிகள் முயல்கிறார்கள். this is the basis of price mechanism which depends of costs, demand vs supply, inflation ,etc.
மேலும், பேருந்து துறை பற்றியும் உங்க theory இதே பாணியில் தான் உள்ளது. இந்த ’திட்டமிட்ட சதி’ என்ற theoryஅய் நீங்க மட்டும் தான் சொல்லிகிட்டே இருக்கிறீக. வேறு யாரும் ஏற்பதில்லை.
இத்துறையில் பணிபுரியும் நண்பர் சித்தரகுப்தன் அவர்களே : நீங்க விளக்குங்களேன். யதார்த்தம் உங்களுக்கு தான் தெரிந்திருக்கும். மேலும் இந்த விலை உயர்வு உங்க சகாக்களுக்கு ஒரு விதத்தில் நிம்பதியே அளித்திருக்கும். இல்லாவிட்டால் சம்பளம் வராத நிலை உருவாகும் என்பதால் ?
மின் துறை : ஏ.சி வைத்திருப்பவர்களுக்கும் அரசு மான்யம் அளித்தால் (அதாவது அடக்க விலையை விட குறைவாக மின்சாரம் அளிப்பது) இப்படி தான் நடக்கும். இன்று ஏ.சி சர்வசாதாரணமாக முழங்குகிறது. ஒரு காலத்தில் இது ஆடம்பரம். ஏ.சி வைத்திருபவர்களுக்கு, கமர்சியல் ரேட்டில் மின்சாரம் அளித்தால், சிக்கனம் செய்வார்கள். ஏ.சிகளும் இத்தனை பரவாது. இதே போல் தான் பணக்கார விவசாயிகளுக்கும் : மீட்டர் பொருத்தி, யூனிட்டுக்கு வெறும் பத்து பைசா மட்டும் போடலாம். அப்பதான் உபயோகம் உண்மையில் எவ்வளவு என்ற கணக்காவுது தெரியும். over irrigation and depletion of ground water due to indiscriminate borewells aided by free current plays havoc.
இது எப்ப
// தான் பிடித்த முயலுக்கு முணு கால் தான் என்பவர்களிடம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம்)
உங்களை பற்றி சொல்லுகிறீர்களா?
////(இதில் பின்னூட்டம் போட வேண்டுமா என்றும் யோசிக்க வைக்கிறது. எத்தனை முறை எடுத்தியம்பினாலும், தான் பிடித்த முயலுக்கு முணு கால் தான் என்பவர்களிடம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம்)/////
இவ்வளவு யோசித்து வருத்தப்பட்டு உங்களை யார் ஐயா இங்கே வந்து வாதாடச்சொன்னது ?
///ஆவின் பால் கிடைக்காது என்ற தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் பால் முதலாளிகள் சந்தையில் கணிசமான அளவை பிடித்திருக்கின்றனர்.//
///எப்படி இது ? ஆவின் தட்டுப்பாட்டுக்கு இவர்கள் எப்படி காரணம் ?///
BSNL ஐ ஒழித்துக்கட்டுவதற்கு டாட்டாவும், அம்பானியும், மிட்டலும் எப்படி எல்லாம் உழைத்திருப்பார்களோ அப்படி, அந்த தரகு முதலாளிகள் கொள்ளையடிக்க BSNL லில் இருந்த அதிகாரிகள் எல்லாம் எப்படி கைக்கூலி வேலை செய்திருப்பானோ அப்படி இதையும் புரிந்து கொள்ளுங்கள் அதியமான்.
////தனியார் பால் முதலாளிகள் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பினாமிகளாகக் கொண்டும், இல்லையேல் லஞ்சத்தால் குளிப்பாட்டியும் இதைச் செய்து வருகிறார்கள்.////
///நிருபியுங்களேன்.///
இதற்கெல்லாம் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா ? சோம்பேறிக் கூட்டமான முதலாளிகள் அனைவரும் செய்வது தான் இது. இந்தாங்க தேசிய ஆதாரம். டாடா & ரீரா ராடியா. முதலாளி கொள்ளையடிக்கும் வழிமுறையின் அரிச்சுவடி கூட தெரியாமல் முதலாளிக்கு ஆதரவாக ஆஜராகிக்கொண்டிருக்கும் அதியமானோட பேசுறது நல்ல தமாஷா கீது !
///இத்துறையில் பணிபுரியும் நண்பர் சித்தரகுப்தன் அவர்களே : நீங்க விளக்குங்களேன். யதார்த்தம் உங்களுக்கு தான் தெரிந்திருக்கும். மேலும் இந்த விலை உயர்வு உங்க சகாக்களுக்கு ஒரு விதத்தில் நிம்பதியே அளித்திருக்கும். இல்லாவிட்டால் சம்பளம் வராத நிலை உருவாகும் என்பதால் ?///
வக்கிரம் !
கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் அடிமடியில் கையை வைத்திருக்கும் பார்ப்பன பாசிச ஜெயாவை ‘பச்சை’ யாக ஆதரிக்கும் அதியமான் அதை பளிச்சென்று பச்சையாக சொல்ல முடியாமல் தொழிலாளிகளை துணைக்கு அழைத்துக்கொள்கிறார். ஜெயா கும்பலை ஆதரிப்பதற்காக ஏதோ தொழிலாளிகளுக்கு ஆதரவாக பேசுவதை போல நடிக்கிறார்.
வக்கிரம் வக்கிரம் !
பேயின் ஆட்டம் ஓயாது தொடரும். புாசாரிகளை நம்பினால் துன்பம் ஒழியாது.
”இந்த விலையேற்றம் மக்களுக்கு பெரும் சுமை என்பது, ஜெ பலனேரங்களில் ஃபாசிஸ்ட் போல் தான் செயல்படுகிறார் என்பதும் சரிதான்”
ஃபாசிஸ்ட்க்கு வக்காலத்து வாங்கும் அதியமான் அவர்களே! போக்குவரத்துக் கழகங்கள் கடும் நட்டத்தில் இயங்குவது உண்மை என்பது யாவருக்கும் தெரியும் தான். பல முறை டீசல் கட்டணம் உயர்த்தப்பட்டும் பேருந்துக் கட்டணம் வெளிப்படையாக உயர்த்தப்படாமல் எக்ஸ்பிரஸ் என்றும் பாயின்ட் டூ பாயின்ட் என்றும் கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்டுவந்தது. இருப்பினும் நகரப் பேருந்துகளில் கட்டண உயர்வு முழுமையாக இல்லாமல் இருந்து வந்தது.
ஆனால் தற்போது எந்த வித வாய்ப்பும் இல்லாமல் அனைத்து வகைப் பேருந்துகளுக்கும் 90 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. நட்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக சீர்கேட்டினைக் களைவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கட்டண உயர்வு தவிர்த்து பிற வகையில் வருமானத்தை உயர்த்தும் திட்டங்கள் ஏதுமின்றி தடாலடியாக கட்டணத்தை உயர்த்துவது எந்த வகையில் நியாயம். இந்த கட்டண உயர்வு பேருந்துகளை அதிகம் பயன்படுத்தும் ஏழை நடுத்தர மக்களையே அதிகம் பாதிக்கும் என்பதை 1 ரூபாய் சம்பளம் பெற்று கோடீஸ்வரியான ஜெ க்கு தெரியபோவதில்லை. இப்படிப்பட்ட ஃபாசிஸ்ட்க்கு வக்காலத்து வாங்கும் உங்களை என்ன சொல்ல????
//நட்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக சீர்கேட்டினைக் களைவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்///
எப்படி என்று விளக்கமாக சொல்ல முடியாமால், சும்மா பொத்தாம் பொதுவாக பேசினால், பேசிக்கிட்டே இருக்கலாம். மேலும் நான் ஒன்னும் ‘ஃபாசிஸ்ட்’ ஜெய்வுக்கு வக்காலுத்து வாங்கவில்லை. தெளிவாக படிக்கவும்.
//இது போக மினிபஸ், ஷேர் ஆட்டோ, கால்டாக்சி, கேப் முதலான தனியார் சேவைகள் மூலம் பொதுப்போக்குவரத்து சேவையிலிருந்து அரசு மெல்ல மெல்ல கழன்று கொண்டு வருகிறது. ///
அப்ப மக்கள் என்னதான் செய்வது ? அரசும் போதுமான பஸ்களை இயக்காது. மக்கள் அப்ப என்ன செய்வதாம் ? இக்கட்டுரை எழுதியவர் மக்கள் விரோதி எனப்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. போய் இதை ‘பிரச்சாரம்’ செய்து பார்க்கவும். பிறகு விளங்கும்.
பொய்யாவே தொடர்ந்து வினவு பேசுவதால், அதற்க்கு இங்கு ஜால்ராக்கள் வேறு, ஏன் வீணாக வெட்டி வாக்குவாதம் ? என்னமோ உலக வங்கி, சி.அய்.ஏ, இந்திய பெரு முதலாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தாரளவாதிகள் எல்லாம் ரகசியமாக மாநாடு நடத்தி, சதி செய்து, திட்டமிட்டு, இந்திய பொதுதுறை மற்றும் மருத்துவம் / கல்வி துறையை சீரழித்துது போலவே தொடர்ந்து புலம்பல்கள். இதை மார்க்சிய பாணி விஞ்ஞான முறை என்றும் கருதிகொள்வது.
சரி, பேருந்து போக்குவரத்து துறை பற்றி தமிழ்பேப்பரில் சமீபத்தில் நான் எழுதிய கட்டுரை :
http://www.tamilpaper.net/?p=4130
அரசாங்கம் விலகிக்கொள்ளட்டும்!
மருத்துவம் மற்றும் கல்வி துறைக்கு ஆண்டு தோறும் அதிக நிதி ஒதுக்கீடு தொடர்கிறது. (30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட). ஆனால் பலன் தான் சரியாக இல்லை. பொது மருத்துவ துறையை தனியார்மயமாக்க யாரும் கோரவில்லை. அதை செயல்படுத்தும் அரசு ஊழியர்களை ஒழுங்கா, நேர்மையா வேலை செய்யும்படி தான் கோரிக்கை. இதை செய்ய தூண்டாமல், போராடாமல், அவர்களை திருத்த முயலாமல் தொடர்ந்து கீரல் விழுந்த ரிக்கார் போல் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுவதால் பயன் இல்லை. ஊழியர்கள், அதிகாரிகள், அமைச்சர்களில் ஊழல் மற்றும் பொறுப்பற்ற தனம் பற்றி பேசுங்க. இத்தனைக்கும் பொது மருத்துவத்தில், தமிழகம் முதல் இடங்களில் உள்ளது. அப்ப வட மாநிலங்களில் நிலை எப்படி இருக்கும். உ.பி தான் கொடுமையிலும் கொடுமை. போலியோ இன்னும் மிக அதிகம் உள்ளது. இதை பற்றி பேசலாம்.
மம்மியின் காலடியிலேயே கிடக்கும் போயஸ் தோட்டத்து அடிமைகளுக்கு கூட ஆத்திரப்படத்தான் தெரியும் இப்படி பாசிச ஜெயலலிதா மாதிரியே விளக்கமளிக்க தெரியாது. வாழ்த்துக்கள் அதியமான்.
//பொய்யாவே தொடர்ந்து வினவு பேசுவதால், அதற்க்கு இங்கு ஜால்ராக்கள் வேறு, ஏன் வீணாக வெட்டி வாக்குவாதம் ? என்னமோ உலக வங்கி, சி.அய்.ஏ, இந்திய பெரு முதலாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தாரளவாதிகள் எல்லாம் ரகசியமாக மாநாடு நடத்தி, சதி செய்து, திட்டமிட்டு, இந்திய பொதுதுறை மற்றும் மருத்துவம் / கல்வி துறையை சீரழித்துது போலவே தொடர்ந்து புலம்பல்கள். இதை மார்க்சிய பாணி விஞ்ஞான முறை என்றும் கருதிகொள்வது.
//அண்ணன் நீரா ராடியா டேப்பு பற்றீ வாயைத் திறக்காத மர்மம் என்ன? முதலாளிகள் தமக்கான துறைகளை சூறையாடி கொள்ளையிடச் செய்யும் தந்திரங்கள் பற்றி பூனைக் கண்ணண மூடியது போல அதிய்மான் நடிப்பது ஏன்? ஊருக்கே தெரிந்த இவை பற்றி பேசாமல் ஆயினும் தன்னை சிறந்த அறீவாளி போல காட்டிக் கொண்டு தானும் ஏமாந்து, சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றுவதாக கருதிக் கொள்ளும் மடத்தனம் ஏன்? விலை வாசி உயர்வால் இன்று ஒவ்வொரு குடும்பமும் தனது சம்பாத்தியத்தில் 40%க்கும் மேல் கூடுதலாக செலவழிக்க வேண்டியததகிவிட்டதே? இந்நிலையில் மக்களின் வாழ்க்கைத்தரம் கீழிறங்கி விடுமே இது பற்றி அதியமான் பதிலேதும் சொல்லாமல் வாலைச் சுருட்டி ஓடுவதேன்?
அதியமான் தனியாருக்காக பேசுறாரா அல்லது அரசுக்காக பேசுறாரான்னு ஒரே கன்ஃபியூசிங்.
சரிதானுங்க, கருணாநிதி ஆட்சிக்காலத்திலேயே சிறிது சிறிதாக ஏற்றி மக்களை மெல்ல மெல்ல சாகடித்திருக்க வேண்டும்.இப்படி மொத்தமாக ஏற்றி ஒரேயடியாக சாகடிக்கும் அபாக்கிய நிலைக்கு புரட்டு தலைவியை தள்ளிய கருணாதான் உண்மையான குற்றவாளி.இந்த விலை உயர்வை அறிவிக்க அந்த பேயுள்ளம் எவ்வளவு வருந்தியிருக்கும்னு நெனச்சி பாருங்க.யாரும் அம்மாவ கொற சொல்லாதீங்க.
[…] பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வ… […]
அய்யா அதியாமான் அவர்களே,
//பொது மருத்துவ துறையை தனியார்மயமாக்க யாரும் கோரவில்லை. அதை செயல்படுத்தும் அரசு ஊழியர்களை ஒழுங்கா, நேர்மையா வேலை செய்யும்படி தான் கோரிக்கை. இதை செய்ய தூண்டாமல், போராடாமல், அவர்களை திருத்த முயலாமல் தொடர்ந்து கீரல் விழுந்த ரிக்கார் போல் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுவதால் பயன் இல்லை.//
அவர்களை எப்படி தூண்டுவது என்று சொல்லுங்களேன்?
////பொது மருத்துவ துறையை தனியார்மயமாக்க யாரும் கோரவில்லை. அதை செயல்படுத்தும் அரசு ஊழியர்களை ஒழுங்கா, நேர்மையா வேலை செய்யும்படி தான் கோரிக்கை. இதை செய்ய தூண்டாமல், போராடாமல், அவர்களை திருத்த முயலாமல் தொடர்ந்து கீரல் விழுந்த ரிக்கார் போல் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுவதால் பயன் இல்லை.//
ஆடு நனைகிறது என்று ஓநாயின் அழுகையை பார்த்தீர்களா? இதே ஓநாயின் அழுகைதான் பிரியாணி சாப்பிட்ட சினிமா தொழிலாளர்களுக்கா நடிகர் ஆஜித்தின் உத்திரவாதமில்லா வாழ்க்கையை முன்வைத்து வருத்தப்பட்டு அழுதது. இதே ஓநாய் அழுகைதான் மல்லையாவுக்காகவும் அழுதது. இதே ஓநாய் அழுகைதான் ராஜீவ் கொலையில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தூக்குத்தண்டனை எதிர்நோக்கியுள்ள மூவரை அவமானப்படுத்திய தினமலத்திற்கு வக்காலத்து வாங்கி ராஜீவுட்ன் கொல்லப்பட்ட 15 பேருக்கு அழுதது. இந்த அழுகையின் நோக்கம் என்னவென்பது விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் அல்ல, பிரியாணி மட்டுமே கிடைக்கப்பெற்ற தொழிலாளர்களுக்காகவும் அல்ல, ஈழத்தில் கொல்லப்பட்டவர்களுக்கோ, அல்லது ராஜீன் பிணத்தால் கொல்லப்பட்டவர்களுக்காகவோ அல்ல என்பதை இவரின் கருத்துக்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கு எளிதில் புரியும். இதே ஓநாயின் அழுககதான் அய்யகோ மருத்துவ வசதி மக்களுக்கு கிடைக்கலையே அதை த்னியாருக்கு கொடு என்கீறது. ஆவின் பால் கிடைக்கலலயே அதை தனியாருக்கு கொடு என்கிறது. நோக்கம் மக்களுக்கு பால் கிடைப்பது அல்ல முதலலளிக்குக்கு பால் கிடைப்பதே அஅகும்
என்ன இருந்தாலும் அந்த 15 பேர்தான் அப்பாவி, மற்றவர்கள் எப்படி நாசமாபோனா எனக்கென்ன? கீழ வுழுந்தாலும் மீசையில ஸாரி குடுமியில மண் ஒட்டாது….எப்பூடி?
//அவர்களை எப்படி தூண்டுவது என்று சொல்லுங்களேன்?// good question.
to start with by changing their employment status :
1.they will NOT be paid for the days they take leave without permission or even illegal absence.
2.They shall be controlled by the local panchayath’s and the muncipalities instead of the remote DEO. the control and authority should be DECENTRALISED and let them be accountable to the local people.
3.Promotion and increments shall not be automatic like now, but linked to productivoity and track record.
விலைவாசி உயர்வுக்கு தீர்வு வினவு சொல்கிறது. அவை தவறு எனில், அதை தீர்க்கும் வழிமுறைகளை திருவாளர் அதியமான் அவர்கள் கூறவெண்டும்.
அப்படி விலைவாசி ஏறித்தான் ஆகும் என்றால் அவர் மூடிக்கொண்டு போகலாம்.
1). பால் பூத்திலும், மளிகைக் கடைகளிலும், நெறித்துத் தெறிக்கும் பேருந்துகளிலும், பெட்ரோல் பங்குகளிலும் முணுமுணுப்பு ‘அரோகரா’ சத்தத்தைவிட அதிகமாகக் கேட்கிறது. மக்களின் தயக்கமெல்லாம் போலீசுக்கும் ஜெயிலுக்கும் பயந்துதான். இல்லையென்றால் அவர்களின் கோபம் கோட்டையை நொறுக்கிவிடக்கூடும்.
இதிலிருந்து ஒன்றை புரிந்துகொள்ளமுடிகிறது. போலீஸ் என்பது அரசுக்குச் சொந்தமானது. ஜெயில் என்பதுதான் மக்களுக்குச் சொந்தமானது!
2). நம் தமிழ் நாட்டு அடக்குமுறைகளை விட, இலங்கைத் தமிழர்களின் அடக்குமுறை ஒரளவுக்கு குறைவுதான் எனத் தோன்றினால், தமிழகத்து மக்கள் அனைவருமே இலங்கை அகதிகளாக ஆகிவிடுவதே சாலச் சிறந்தது!
3). மதிப்புமிகு கலாம் விஞ்ஞானியிடம் கள்ளிப் பாலிலிருக்கும் விஷத்தை முறிக்கும் தொழில் நுட்பம் இருக்குமானால், நாம் மாடு வளற்பதற்குப் பதிலாக கள்ளிச் செடி வளர்த்து, கள்ளிப் பாலிலேயே காப்பி போட்டு குடிக்கலாம்!
4). மூத்திரத்தால் ஓடும் மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், மூத்திரத்தின் விலை ஒரு லிட்டர் ரூபாய் 75க்கு விற்கப்படலாம். மொத்தத்தில் வாகனத்தின் டேங்கில் நிறப்பப்படும் பொருளின் விலை என்பது வாரத்துக்கு ஒருமுறை உயர்ந்துகொண்டே இருக்கவேண்டும். நான் சொல்வது சரிதானே மன்மோகன்?
5). நான், ‘டக்-இன்’ செய்து, ‘டை’ கட்டி முழுக்கண்ணாடியில் என்னை பார்த்தபோது… கண்ணாடியிலிருந்து என்னை விட்டு விலகிச்சென்றது என் பிம்பம். காரணம், நான் எதையுமே சகித்துக்கொள்ளும் மிருகமாம்!
6). பால் புட்டியில் நூறு எம்.எல் குறைந்ததற்காக எங்கள் குட்டிப் பாப்பா அழுது தீர்க்கும். நான் என்ன செய்ய? என் பட்ஜெட்டில் ரெண்டாயிரம் ரூபாய் துண்டு விழுகிறதே?
7). ‘நான், நீ என்று சொன்னால் உதடு ஒட்டாது. நாம், நமது என்று சொன்னல்தான் உதடு ஒட்டும்.’ ஹ்ம்… இந்த பொன் மொழியை(!) இனிமேலும் நான் என் பேருந்துப் பயணத்தில் பார்க்கக் கொடுக்கவில்லை!
8). ஜெயா டிவியில் கருணா நிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னால் எப்படி ஆச்சர்யப்படுவீர்களோ, அப்படித்தான், ஜெயா அரசு விலையேற்றம் செய்து ஏழைகளின் வயிற்றில் அடிக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யப்படலாம்!
9). பேருந்தில் ஏறி, சுருக்குப் பையிலிருந்து தேடி எடுத்த ‘எக்ஸ்ட்ரா’ ரெண்டு ரூபாவை குடுத்த பாட்டி, “படிக்காத பரதேசிங்க எதையுமே கேக்கமாட்டாங்கன்னுதானே உங்க இஷ்டத்துக்கு வெளையாடறீங்க,” அப்படீன்னு கேக்கும்போது, எனக்கு ஏன் சுருக்குன்னுது?
10). வாழ்ந்து கெட்டவன் நான். போன ராஜ்ஜியத்தில் அரை வயிறு. இந்த ராஜ்ஜியத்தில் முழு வயிறு…. நான் பட்டினியைச் சொல்லவந்தேன்!
11). பெண்களையும் கட்டாயப்படுத்தி டாஸ்மாக்கில் குடிக்கக் கத்துக்கொடுத்துவிட்டால், அம்மாவின் ஆட்சியில் தருத்திரம் நீங்கிவிடும் வாய்ப்புண்டு. இரவோடு இரவாக, டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு, ரேஷன் மூலமாகவே தலைக்கு ஒரு குவாட்டர் வீதம் ஆண் பெண் குழந்தைகள் எல்லாவற்றையும் கணக்கில் சேர்த்து ‘கம்பல்சரியாக’ வழங்கப்பட்டால், வருமானம் பிய்த்துக்கொண்டு கொட்டுமே?
அதியமான் அவர்கலே. அதிக கேல்வி கேட்டால் புத்திசாலி யென்ரு யென்னாதீர்கல்.நாஙகல் ஒவ்வொன்ரிர்க்கும் கேல்வி தொடுத்தால் உஙகல் குடுமி அவில்ந்துவிடும்
[…] பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வ… அரசு பேருந்துகளின் நஷ்டத்திற்கு காரணம் என்ன? […]
//போக்குவரத்துக் கழகங்கள் கடும் நட்டத்தில் இயங்குவது உண்மை என்பது யாவருக்கும் தெரியும் தான்.//
நட்டம் என்பது கட்டணம் குறைவாக இருந்ததினால் என்பது தவறான கருத்து. உயரதிகாரிகள், அமைச்ச்சர்களின் ஊழலினால்தான். நமக்கு அருகில் இருக்கும் அண்டை சிறிய மாநிலமான புதுவையில் 98% தனியார் பஸ்கள்தான் இயங்குகின்றன. அங்கும் 10 வருடங்களாக தமிழக பஸ்கட்டணம் தான் வசூலிக்கப்பட்டது. இவர்கள் நட்டத்திற்கா இத்தனை வருடம் இயக்கினார்கள்?
Private owner will pay peanuts as salary, Govt cannot run that way. And add job security to these people, they never work.