Monday, October 14, 2024
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!

-

அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் – இடிந்தகரை மக்களுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்வதையும், மிரட்டுவதையும் மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்  எனக்கோரி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் – இடிந்தகரையில் அமைந்துள்ள அணு உலையை மூட வேண்டுமெனக் கோரி கடந்த 1988லிருந்து போராடி வரும் அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டங்களை தீவிரப்படுத்தி தொடர் உண்ணாவிரதம், சாலை மறியல், அணு உலை முற்றுகை என வீரியத்தோடு போராட்டத்தில் முன்னேறி வருகின்றனர். மக்களின் நியாயமான கோரிக்கையை நேர்மையாகப் பரிசீலிக்க மறுக்கும் மத்திய அரசு போராட்டத்தை ஒடுக்குவதற்கு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் அணு உலைகள் தொடர்பான பொய்களைப் பிரச்சாரம் செய்வது, போராட்டக் குழுவில் பிளவை உண்டாக்குவது, மதரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என அவதூறு செய்வது எனப் பல தவறான முயற்சிகளைச் செய்து வருகிறது.

இதற்கு ஆதரவாக கைக்கூலி எதிர்போராட்டக்காரக் குழுவினர், மக்கள் ஆதரவின்றி வாய்ச்சவடால் அடித்து வருகின்றனர். காங்கிரசு, பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்., அப்துல் கலாம், துக்ளக் சோ, சுப்பிரமணியசாமி, சேதுராமன், கிருஷ்ணசாமி போன்றோர் இதற்கு துணை நிற்கின்றனர். கூடுதலாக போராட்டக் குழுவினர் மீது 66 வழக்குகள், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும், முப்படை பாதுகாப்பு என மிரட்டுகிறார்கள்.

மத்திய அரசின் மிரட்டல்களும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர், சட்ட மற்றும் தார்மீக ரீதியாக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் ஆதரவு கோரியுள்ள நிலையில், இப்பிரச்சனை குறித்து ஆராய்ந்த நாங்கள் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வருகிறோம்.

1. மக்களின் மின்சாரத் தேவைக்காக அணுஉலை என்பது பொய். நேர்மையான சமூக நோக்குடைய இந்திய விஞ்ஞானிகளின் கருத்துப்படி மக்களையும், சுற்றுச் சுழலையும் பாதிக்காத நமது நாட்டில் அதிகம் கிடைக்கக் கூடிய சூரியஒளி மூலம் போதுமான மின்சாரம் தயாரிக்க முடியும். இதே போல் காற்று, நீர், கடல்அலை என சுயசார்பு மின் திட்டங்களை உருவாக்கலாம்.

2. அணு உலைகள் கட்டுவதென்பது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க, ரசிய, ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை இந்திய அரசு தாரை வார்ப்பதாகும்.

3. இந்திய அணுசக்தித் துறை 1970ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை 2000மாவது ஆண்டில் அணு உலைகள் மூலம் 43,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியுமென்றது. ஆனால் 2010 ஆம் ஆண்டில் கூட 2720 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதும் 1970ல் சொன்னது போன்ற தவறான தகவல்களை இந்திய அணு சக்தித்துறை பரப்புகிறது.

4. வெளிநாடுகளில் வாங்கப்படும் யுரேனியத்தைச் சார்ந்தே இந்திய அணுஉலைகள் செயல்படும் என்ற நிலையில் 2008ல் போடப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி 36 அணுஉலைகள் அமைக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் மின்சாரத்தின் விலையும், பெட்ரோல் விலை போல உயரும். மின்சாரத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டியது வரும். நாட்டின் சுயசார்பு அழியும்.

5. இயற்கைச் சீற்றங்கள் தவிர சாதாரணமாக மனிதத் தவறினால் அணுஉலை விபத்து ஏற்பட்டால் கூட தமிழகத்தின் தென்பகுதி அழியும் அபாயம் உள்ளது.

6. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகள் அணு உலையை மூட முடிவெடுத்துள்ளனர். மேற்குவங்கம், கேரள மக்கள் அணு உலைகளை தங்கள் மாநிலத்தில் அமைக்கவிடாமல் தடுத்துள்ளனர். உச்சநீதிமன்றம் சுகாதாரமாக வாழும் உரிமை மக்களின் அடிப்படை உரிமை. என அங்கீகரித்துள்ள நிலையில் தமிழக மக்களுக்கும் அரசியல் சட்டப்படி அணு உலையை மூடக் கோரும் உரிமை உண்டு. இடிந்தகரையில் பெண்களும், குழந்தைகளும், முதியோரும் வெயில், மழை பாராது தொடர்ந்து போராடி வருவது பொழுதுபோக்குக்கு அல்ல. போபால் விபத்து போல அணு உலையால் தங்கள் வாழ்க்கை அழிக்கப்படும் எனக் கருதி மக்கள் போராடுகிறார்கள்.

7. அணு உலை கழிவுகளைப் பாதுகாப்பதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகளே திணறிவரும் நிலையில் இந்திய அரசு பெரும் பொருட் செலவில் அணுக் கழிவுகளை பாதுகாக்கும் செலவையும் அணுமின் உற்பத்தியோடு சேர்த்தால் யூனிட்டுக்கு மின் கட்டணம் ரூ.25- வரும். பொதுமக்கள் தான் இத்தொகையை செலுத்த வேண்டி வரும். அணு உலை கழிவுகளை பாதுகாக்கும் செலவுகளை அணுமின் உற்பத்தி செலவுடன் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8. சமூகப் பொருளாதார வளர்ச்சியடைந்தவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் கூட அதற்கு எதிராக மேல் தட்டு வர்க்கத்தினர் போராடும் சூழலில் அணுமின் கதிரியக்க பேராபத்தின் நடுவே வாழும் உழைக்கும் மக்கள் தங்கள் நியாயமான எதிர்ப்பை காட்டுவதைக் கூட வெளிநாட்டு சதி, மத அமைப்புகளின் பணம் எனக் கொச்சைப்படுத்துவது ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை இழிவுபடுத்துவதாகும். போராடுவது மக்களின் அடிப்படை உரிமை.

மேற்குறிப்பிட்ட காரணங்களோடு இன்னும் பல காரணங்களால் இடிந்தகரை சுற்றுப்புற மக்களின் போராட்டம் சரியானது எனக் கருதுகிறோம். ஆகவே மக்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்க முயலும் மத்திய அரசின் சதிகளை முறியடிக்க, போராடும் மக்களுக்கு சட்ட ரீதியான உதவிகளைச் செய்ய மதுரை உயர்நீதிமன்றத்தில் கீழ்க்காணும் வழக்கறிஞர் குழு அமைக்கப்படுகிறது.

குழு உறுப்பினர்கள்:

திருவாளர்கள். தி. லஜபதி ராய், எம். திருநாவுக்கரசு, எம். இமாம் உசேன், எஸ். தமிழரசன், ஆர். காந்தி, ஜி. பகத்சிங், எஸ். அருணாச்சலம், எம்.எம். இக்பால், அ. ஜான் வின்சென்ட், வி. ராஜீவ் ரூபஸ், ஆர். அழகுமணி, எஸ்.எம்.ஏ. ஜின்னா,. சே.வாஞ்சி நாதன், வி. ராஜேந்திரன், எஸ். லூயிஸ், டி. அன்பரசு, டி.எஸ். மெல்ட்யூ, ஜெ.லாரன்ஸ், இ.ராபர்ட், ஆர்.கருணாநிதி, தி. திருமுருகன், ஆர். விஜயலட்சுமி, இ.பினேகாஸ், அ. வல்லரசு, எம். மாறன், எஸ். சதீஸ்

ஒருங்கிணைப்பாளர்: சே.வாஞ்சி நாதன்

மேற்க்கண்ட வழக்கறிஞர் குழு சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு 17.11.2011 காலை 10 மணிக்கு கடும் மழை பெய்து கொண்டிருந்தபோதும் மனித குல விரோத கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், தொடர்ந்து அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்களின் மீது ஏராளமான பொய் வழக்குகள் போட்டு வருவதுடன், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயுமென மத்திய, மாநில அரசுகள் மிரட்டி வருவதைக் கண்டித்தும், அரசின் அவதூறுப் பிரச்சாரங்களை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் லஜபதிராய், திருநாவுக்கரசு,தமிழரசன், சுப்புராஜ், ஜான் வின்சென்ட், பகத்சிங், அருணாசலம், வாஞ்சிநாதன், ராஜேந்திரன், ஜின்னா, புனிததேவகுமார், வெங்கடேசன், இராபர்ட், திருமுருகன், கருணாநிதி, விஜயலட்சுமி, இனியன், வல்லரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுச்சி முழக்கங்கள்:

இழுத்து மூடு! இழுத்து மூடு!
மக்கள் விரோத அணு உலையை
கூடங்குளம் அணு உலையை
மத்திய அரசே இழுத்து மூடு!
மின்தேவைக்கு அணு உலை
என்பது மோசடி

இத்தாலி ஜெர்மனியெல்லாம்
அணு உலய மூடுறான்!
திறக்கிறான்! திறக்கிறான்!
36 அணு உலைய
மன்மோகன் திறக்கிறான்!
பன்னாட்டு கம்பனிக்கு
ஆதரவாத் திறக்கிறான்!
3 லட்சம் கோடிகொடுத்து
அணு உலையத் திறக்கிறான்!

மானக்கேடு வெட்கக்கேடு
மன்மோகனே வெட்கக்கேடு

விற்காதே விற்காதே
பன்னாட்டு முதலாளிகளுக்கு
தாய் நாட்டை விற்காதே
அமெரிக்க வல்லரசிற்க்கு
ரசிய வல்லரசிற்க்கு
நாட்டை விற்காதே

மிரட்டாதே மிரட்டாதே
போராடும் மக்களை
என்.எஸ்.ஏ என்றுசொல்லி
மிரட்டாதே மிரட்டாதே
மத்திய அரசே மிரட்டாதே

கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்
போராடும் மக்களை
கொச்சைப்படுத்தும் நாராயணசாமியை
வன்மையாகக் கண்டிக்கின்றோம்

கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்
மத்திய அரசுக்கு துணைபோகும்
துக்ளக் சோ,சு.சாமி
ஆர்.எஸ்.எஸ். காங்கிரசு
அப்துல்கலாம் கும்பலை
மக்கள் விரோத கும்பலை
வன்மையாகக் கண்டிக்கின்றோம்

உரிமை உண்டு உரிமை உண்டு
அணு உலைக்கு எதிராக
போராட உரிமை உண்டு
இடிந்தகரை மக்களுக்கு
போராட உரிமை உண்டு
அரசியல் சட்டப்படி
போராட உரிமை உண்டு

ஆதரிப்போம் ஆதரிப்போம்
இடிந்தகரை மக்களின்
போராட்டத்தை ஆதரிப்போம்
தமிழக மக்கள் ஆதரிப்போம்

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
மனித குல விரோத
மக்கள் விரோத
அணு உலைகளை விரட்டியடிப்போம்
உலகை விட்டே விரட்டியடிப்போம்

என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 21.11.2011 மாலை 5 மணிக்கு மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் கேரள விஞ்ஞானி திரு.வி.டி.பத்மநாபன் அவர்கள் அணுமின்சக்தி தொடர்பாக உரை நிகழ்த்த உள்ளார்.இவ்வாறாக தொடர்ந்து அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வழக்கறிஞர் குழு எடுத்துச் செல்ல உள்ளது.

_________________________________________________________________________

வழக்கறிஞர் குழுவிற்காக

சே.வாஞ்சி நாதன், ஒருங்கிணைப்பாளர், மதுரை உயர்நீதிமன்றம்

தொடர்புக்கு.9865348163.

__________________________________________________________________________

 

மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 16-11-11 புதன் காலை 10-00 மணிக்கு விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தலைவர் குணசேகர் தலைமை தாங்கினார். எழுத்தாளர் கரிகாலன், புலவர் கருப்பையா, வழக்கறிஞர் புஷ்பதேவன், செல்வக்குமார், கதிர்வேல், பாலாஜி, செந்தாமரைக்கந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜீ சிறப்புரையாற்றினார்.

3 சதவீத அணுஉலை மின்சாரத்திற்கு எதிர்கால சந்ததியினரின் உயிரை பணயம் வைக்கவேண்டுமா? 35 ஆண்டுகள் ஆயுட்கால அணு உலையை மூடியபின் எத்தனை தலைமுறைக்கு செலவு செய்து பாதுகாக்கவேண்டும். 3 லட்சம் கோடியில் இந்திய கடற்கரை முழுவதும் 36 அணு உலைகளை கட்டியே தீருவேன் என மன்மோகன்சிங் அரசு கர்ஜிக்கிறது. பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்காக அணு ஒப்பந்தம் போட்டு நாட்டை திவாலாக்க பார்க்கிறது. அணுகுண்டு வல்லரசு கனவிற்கு சொந்த நாட்டு மக்களை பணயம் வைக்க மத்திய அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.? என பல்வேறு விஷயங்களை விளக்கி பேசியதை மக்கள் கவனமாக கேட்டனர்.

–    மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாசலம்.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. இவ்வளவு நான் தூங்கீனீர்களா?.உதயகுமார் தலைமையில் போராட்டம் நேற்றா துவங்கியது?.என்ன திடீர் அக்கறை.ம.க.இ.க தலைமையில் அப்போராட்டம் இல்லை. இப்போது ஆதரவு தெரிவித்தாலும் உங்களால் போராட்டத்தை கைபற்றி
    கடத்தி செல்ல முடியாது. திருச்சபையும்,தன்னார்வ குழுக்கள்,உள்ளூர் அமைப்புகளும் அதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.வேறு வ்ழியில்லை, எதிர்த்தாக வேண்டும் என்பதால் சவுண்டு விடுகிறீர்கள்.

    • இந்தியன் தாத்தா நீங்க இப்ப என்ன சொல்ல வர்றீங்க ? போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காதீங்கன்னு சொல்றீங்களா ?

      போராட்டத்தை கைப்பற்றுவது தான் எங்களுடைய நோக்கம் என்கிறீர்கள், சரி இருக்கட்டும் அதனால் என்ன இப்போது ?

      நாட்டுப்பற்றுள்ள யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாமே ? தேசபக்தியை குத்தகைக்கு எடுத்துள்ள அக்மார்க் பார்ப்பன மதவெறியர்களும் கூட களத்தில் இறங்கி வேலை செய்யட்டுமே யார் வேண்டாம் என்று சொன்னது ? ஏன் இது நாள் வரை இந்துமதவெறி கும்பல் இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை ? ஏனென்றால் பார்ப்பன இந்துமதவெறி பா.ஜ.க கும்பல் தான் இந்தியாவிலுள்ள கைக்கூலி கும்பல்களிலேயே மிகப்பெரிய தேசத்துரோக கைக்கூலி கும்பல்.

  2. ஏனக்கு ரொம்ப குலப்பமாவே இருக்கு. இத ஆதரிக்கிரதா வேண்டாமான்னு.நிறைய நாடுகள் இத பயன் படுத்திராங்க. வளரவும் செய்றாங்க . இத எதிர்க்கிற கூடத்தில அறிவியல் துரை சர்ந்தவங்க இருக்கிற மாதிரி தெரில. பிறகு எப்பிடி இது சரிவராதின்னு சொல்ல முடியும். ஒன்னும் புரில.

    • அப்ப ஒன்னு செய்யிங்க மகேசு, உங்கள் வீட்டை கூடங்குளத்திற்கு மாத்திக்குங்க. அணு கழிவுகளை உங்கள் வீட்டில் பாதுகாக்க இடம் கொடுங்கள்.

      • உங்களுடைய அறிவயல் சார்ந்த அழகான பதிலுக்கு நன்றி.. கேட்ட கேள்விக்கு மிக்க தெளிவாக பதில் தந்தமைக்கு நன்றி.. பயங்கரம் குமணன்..

  3. அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானது. இது உண்மையானால், தமிழகத்தின் தலைமை செயலகத்தை திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளதுக்கு மாற்றுங்கள்.

    அதனை சுற்றி நமது அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகளுக்கு வீடு களை கட்டி தாருங்கள்.

    எந்த எந்த மாநிலம் இதனை வேண்டும் என்கிறதோ, அவற்றின் தலைமை செயலகம் அருகில் புதிய அணுமின் நிலையத்தை அமைக்கவும்.

    நல்ல பாம்பு ஒன்றை படுக்கை அறையுள் வைத்து கொள், அது கடிக்காது, என்று சொல்வது போல் உள்ளது.

  4. சுற்றுச்சூழல் மாசடைதல் மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றிய எதிர்காலக் கவலையினால்தான் இன்று உலகெங்கும் இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் போராட்டங்களும் வலுத்து வருகின்றன. இதற்காக குரல் கொடுப்பதும் போராடுவதும் நியாம் என்றால் கூடங்குளத்தையும் அப்படித்தானே பார்க்க வேண்டும். கூடங்குளம் அணு மின் திட்டம் தற்போதைக்குத் தரவிருக்கும் உடனடிப் பலனா அல்லது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பேராபத்தா இதில் எது முக்கியம் என்றால் தொலைநோக்குப் பார்வையில் எதிர்காலம் பற்றிய அக்கரையே முக்கியமானது எனக் கருதுகின்றேன். இதில் குழப்பமடைய என்ன இருக்கிறது? கூடங்குளம் போராட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் சிவசேனா, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்டவர்கள் இதனை அரசியல் உள்நோக்கத்தோடு பார்க்கிறார்களேயொழிய மக்கள் நலனிலிருந்து பார்க்கவில்லை.

    எனவே மக்கள் விதோதிகளை அம்பலப்படுத்துவதும், போராடும் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் பக்கம் நிற்பது மட்டுமே நியாயமாக இருக்க முடியும். அத்தகைய முயற்சியை தானே முன்வந்து மேற்கொண்டிருக்கும் மதுரை கிளை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களுக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

  5. இடிந்தகரை மக்களொடு இனைந்து போராடவேன்டும் .அதற்கான ஆதரவு பிறச்சாரத்தை தொடங்கவேன்டும்

  6. யார் எப்போது போராடினார்கள் என்பது இருக்கட்டும் .
    அணு உலைக்கு ஆதரவாக வரும் குரலுக்கு சொந்தகாரர்கள் யாரேனும் அவ்வனுவுலைக்கு அருகில் வசிப்பவர்களா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
    அணுஉலை என்பது அதன் அருகில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைக்கு வைக்கப்படும் ஓர் உலையே.
    போராடும் மக்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
    [பி.கு ]
    நாம் போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் அதனை கொச்சை படுத்த வேண்டாமென வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

  7. இப்போதாவது செய்கிரார்கள் என்று வாழ்த்தாமல் இவ்வளவு நாள் என்ன செய்து கொன்டிருந்தார்கள் என்ற கேள்வி அர்த்தமற்றது.

  8. “நேர்மையான சமூக நோக்குடைய இந்திய விஞ்ஞானிகளின் கருத்துப்படி…”

    ஹோமி பாபா தொடங்கி அப்துல் கலாம் வரை அணு சக்தி ஆதரவு விஞ்ஞாநிகளின் நேர்மையையும் சமூக நோக்கத்தையும் சந்தேகிக்கும் இந்த “வழக்கறிஞர்களின்” சமூக நோக்கு மட்டும் சரியானது என்று எதை வைத்து முடிவு செய்வது?

  9. நீங்கள் என்ன சொல்ல வர்றீங்க … கூடங்குளம் அணு உலை உதயகுமார் போன்ற பெரிய பெரிய விஞ்ஞானிகளுக்கு தான் தெரியும்… அப்துல் களம் அணு உலை ஆய்வாளர்கள் போன்ற முட்டாள்களுக்கு தெரிய வைய்பில்லை எனவும் கூறுகிறீர்கள் .. உங்களிடம் ஒரு அட்யுதம் இருந்தால் அந்த ஆயுதத்தின் செயல் திறன் அறிந்து அதற்கேற்றார் போல் செயல் படுங்கள்… ஏனென்றான் பேனா நல்லவற்றையும் எழுதும் நல்லவற்றை கொல்லவும் எழுதும் … நாட்டில் போராடுவதற்கு எத்தனையோ ப்ரச்கனைகல் இருக்க நாட்டின் முகிய வல்ர்ச்கிஉக்கு உதவும் இந்த மாதிரியான திட்டஙகலில் தடை பொடுவது நாட்டுகு சஎஇயும் துரோகம்

    • தமிழக மீனவன் தினமும் சாவுறான், முல்லை பெரியாறு காவிரி பாலாறு என்று எல்லா மாநில காரனும் தண்ணி தரமாட்டேங்கிறான். அதுக்கு இந்திய அரசாங்கம் என்ன பண்ணுச்சு? “அப்படி யாரும் சாகலன்னு சொல்லிச்சு”. அதாவது உண்மைக்கு புறம்பா பதில் சொல்லுச்சு. ஆனா செத்தவன் குடும்பத்துக்கு தெரியும்.. அந்த 500 பேரும் எப்படி செத்தாங்கன்னு.நிற்க. இந்தியா, தமிழக மீனவன் செத்ததுக்கு முரணா மட்டும் பதில் சொல்லல, உண்மையை மறைச்சு புளுகியிருக்கு. இப்போ மட்டும் இந்த கூடம்குள பிரச்சனையில் இந்தியா உண்மையை தான் சொல்லுது,அது தமிழ்நாட்டோட வளர்ச்சிக்கு தான் இப்படி போராடுதுன்னு எப்படி நம்புறது? மேற்சொன்ன தமிழ்நாட்டோட பல பிரச்சனைகளை அது எழுப்பியும் கண்டுகாத இந்தியா, தானே முன்வந்து தமிழ்நாட்டுக்கு கரண்டு கொடுக்க இப்படி மூச்சை போடுதாம்… கேக்குறவன் கேனப் பயலா இருந்தா, மன்மோகனுக்கு ரெண்டு கொண்டைன்னு சொல்லுவீங்க போல இருக்கு ராஜேசு அண்ணே?

    • Koodan kulam anuulai thirantha nadu valarchi adainthu vidumnu dr.abdul kalam solraru ok, tamil natli evvalavu tasmac thiranthu vachirukkangalae athu enna nattin valarchikka? Dr.Abdu kalam ayyaviriku ithu theriyatha athai mooda solla vendiyathu thanae?

      Anna hazarze oruthar unna virutham irunthathu ennamo ulaga athisiyam mathiri intha mediyavirku therinthathu, yean ethani mathamaga evvalavu makkal unna virutham irukarathu theriyatha?

  10. இங்க யாருமே சரியான தகவலை தரமாற்றீங்க. சும்மா எதையுமே சொல்லம்மா எதாவது அறிவியல் சார்ந்த ஆதர பதிவுகளை தாங்க. போராட்டாம் நடத்தறவங்க க்கம் இருக்கிற நியாயம் மட்டும் சொல்ற நீங்க எதிர் தரப்பை எதாவது நியாயம் இருக்கான்னு பாருங்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க