Wednesday, October 16, 2024
முகப்புமறுகாலனியாக்கம்சூழலியல்கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!

-

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்!

_______________________________________________

 கருத்தரங்கம்

நாள் : 26.11.2011 சனிக்கிழமை  நேரம் : காலை 10.00 முதல் 1.00 மணி வரை

 இடம் : ஜெபமாலை திருமண மண்டபம், ஆர் வி.புரம், நாகர்கோவில்

(மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் அருகில்)

_____________________________________________

அன்பார்ந்த பொதுமக்களே!

தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்று கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நெல்லை மாவட்டம், இடிந்தகரையில் நடத்தி வரும் உறுதியான தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜப்பானின் புகுசிமா அணு உலையைில் ஏற்பட்ட விபத்தால் உணவு, குடிநீர், பால், காற்று, கடல்நீர், விசமாகி 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிலுந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கதிர்வீச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது.

புகுசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வு உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தூண்டியுள்ளது. இதனால் சுவிட்சர்லாந்து, ஜெர்மனியில் அணுமின் உலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் அணுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.

ஆனால் மன்மோகன்சிங் அரசு இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் படி 3 லட்சம் கோடிக்கு 36 அணு உலைகளை அமெரிக்க, ரசிய பிரான்ஸ் நிறுவனங்களிடம் வாங்கி இந்திய கடற்கரைகள் முழுவதும் நிறுவும் முடிவிலிருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது.

அணு உலைகள் பாதுகாப்பானது, மின்சார தட்டுப்பாட்டை நீக்கக் கூடியது, நாட்டின் வளர்ச்சிக்கு  அவசியமானது, அணு உலைக்கு எதிராகப்போராடுவோர் தேச விரோதிகள், அந்நிய கைக்கூலிகள் என்று தொடர்ந்து தமிழக மக்கள் மத்தியில் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், அப்துல் கலாம் போன்ற நபர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, சிவசேனா, காங்கிரஸ், சாதி சங்கங்கள் போன்ற மக்கள் விரோத கும்பல் பன்னாட்டு அணு உலை முதலாளிகளுக்கு ஆதரவாக பொய் பிரச்சாரத்தை விஷமாக மக்கள் மத்தியில் கக்குகின்றன.

இரத்தம் சிந்திய மக்கள் போராட்டத்தால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தாப்பூர் அணு உலை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அணு உலை கட்டும் திட்டத்தை மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார். கேரளாவில் மக்களும் அனைத்து கட்சிகளும் அணு உலைகளை எதிர்த்துப் போராடி தடுத்துள்ளனர். இந்த உரிமை தமிழக மக்களுக்கு இல்லையா? மக்களின் வரிப்பணம் கொள்ளை போவது, கதிர்வீச்சால் உயிர் இழப்பு, நோய்கள் அணுக் கழிவுகளை பாதுகாப்பது, விவசாய  நிலங்கள், கடல் வளம் பாழாவது, காற்று மாசு படுவது, என பல்வேறு இழப்புக்களை நேரடியாக எதிர்கொள்ளும் கூடங்குளம் இடிந்தக்கரை  மக்கள் போராடக்கூடாதா?

1988-ல் கூடங்களத்தில் நடந்த போராட்டதினால் ராஜுவ் காந்தி அணு உலைக்கு அடிக்கல் நாட்ட முடியாததுடன் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை ஒடுக்கியதை மறக்க முடியுமா? மக்கள் கருத்துக் கணிப்பு, சுற்று சூழல் ஆய்வு என அணு உலை அமைப்பதற்கான சர்வதேச விதிமுறைகளை கூடங்குளத்தில் அரசு பின்பற்றவில்லை.

உறுதியான இடிந்தக்கரை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு நாடு முழுவதும் பரவி வருவதை கண்டு அச்சமுற்ற, மத்திய, மாநில அரசுகள் தூதுக்குழு பேச்சு வார்த்தை என்று ஒருபுறம் இழுத்தடிப்பதும், போராடும் மக்களுக்கு பணம் ஏது? என அமைச்சர்  நாராயணசாமி மூலம் வக்கிரமாக பேசி திசை திருப்ப முயற்சிப்பதும், மறுபுறம் தேசியபாதுகாப்புச் சட்டம், முப்படை இராணுவம், போலீசு, பொய்வழக்கு, கைது என மிரட்டி ஒடுக்கிவிடலாம் என முயற்சிக்கின்றன.

1986 ரஷ்ய செர்னோபில் அணு உலை விபத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 50 மைல் சுற்றளவுப் பகுதி பொட்டல் காடாக மாறியது. இன்னும் அணுக்கதிர் வீச்சு அப்பகுதியில் நீடித்து வருகிறது. செர்னோபில்லின் அதே தொழில் நுட்பத்தில் இன்று கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் நான்கு உலைகள் கட்டப்பட இருக்கின்றன. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான வி.வி.இ.ஆர்.1000 என்ற இந்த அணு உலையின் ஆயுட்காலம் 35 ஆண்டுகள் மட்டுமே, அதன்பின் இயக்க முடியது.

ரஷ்ய சுற்றுசூழல் விஞ்ஞானிகள் இவ்வாண்டில் ரஷ்ய பிரதமர் மெத்வதேயிடம் அளித்த அறிக்கையில் வி.வி.இ.ஆர் 1000 தொழில் நுட்ப அணு உலைகளில் 31 குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர். அணு  உலை கழிவுகளை 3000 அடிக்கு கீழ் புதைக்கு குறைந்தது 24000ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் கதிர்வீச்சின் தாக்கம் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும்.

இன்று நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 97% மக்களுக்குப் பாதிப்பின்றி அனல், நீர், காற்று, கடலலை, சூரிய ஒளி, குப்பையிலிருந்து எடுக்கப்படுகிறது. யூனிட்டுக்கு 2 ரூபாய்  மட்டுமே உற்பத்தி செலவாகிறது. அணு உலைதான் ஒரேவழி என்பது போல பேசுவது மோசடியானது. பன்னாட்டு கம்பெனிகளின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஷாப்பிங் மால்கள், தொழில் நுட்ப பூங்காக்களுக்கு, 24 மணி நேர ஏ.சிக்கு வழங்கப்படும் தங்கு தடையற்ற மின்சாரத்தை, சிக்கனப்படுத்தினாலே அணு உலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை ஈடுகட்ட முடியம். இலவசங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் சி.எப்.எல் பல்புகள் கொடுத்து மின் பயனீட்டு அளவை  குறைக்கலாம்.

அணு உலையை இயக்க யுரேனியம் வெளிநாடுகளில் தான் வாங்க வேண்டும். பெட்ரோல் விலை போல அதுவும் உயரும். இதனால் உற்பத்தி செலவு யூனிட்டுக்கு 10 ரூபாய்க்கு மேலாகும். ஒருவேளை வெளிநாடுகள் யுரேனிய விற்பனையை நிறுத்தினால் அணு உலைகள் என்னவாகும்? இந்திய மொத்த மின்சார தேவையில் தற்போது இயங்கி வருகின்ற 18 அணு உலைகள் மூலம் 2.8%  மட்டுமே கிடைக்கிறது. 2005-ல் 3310 மெ.வா உற்பத்தி செய்ய அணு உலைகளை இயக்க பயன்படுத்த பட்ட மின்சாரம் 4000 மெகாவாட் என்கிறார்   பேராசிரியர் தீரேந்திர சர்மா. ஆனால் காற்றாலைகளால் மட்டும் ஆண்டுக்கு தமிழகத்திற்கு 2040 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

அணு மின் உலையினால் ஏற்படும் தலைமுறைகள் கடந்த மிகப் பெரிய அபாயம் அணுகழிவுகளைப் பாதுகாப்பது. ஏற்கனவே தாராப்பூர் அணு உலைக் கழிவை திரும்ப பெறும் பொறுப்பை அமெரிக்கா நிராகரித்ததால், 20 ஆண்டுகளாக இந்திய அரசு பெரும் பொருட் செலவில் அதை பாதுகாத்து வருகிறது. தற்போது கூடங்குளம் அணு கழிவுகளை எடுத்துச்செல்ல ரசிய அரசு மறுத்துள்ளது.

பொதுவாக அணு உலைகள், அணு குண்டு தயாரிப்புடன் பிணைக்கப்பட்டு, இராணுவம், பாதுகாப்புடன் தொடர்பு படுத்தப்படுவதால் இதில் நடக்கும் விபத்துகள், ஊழல்கள், தொழில் நுட்ப தோல்விகள், துரோகம், இரகசியம் என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அணுசக்தி துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் விவாதிக்க நீதிமன்றத்தில் வழக்குப்போட உரிமைகள் மறுக்கப்படுகிறது.

இதனால் இந்திய மக்களின் 3 லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம், லட்சகணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு, உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க – இந்திய முதலாளிகள், சில அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்யும் அவலம் உள்ளது.

அணு உலை விபத்து இழப்பீட்டு சட்டத்தின்படி விபத்து நடந்தால் எத்தனை ஆயிரம் பேர் இறந்தாலும் அணு உலைகளை விற்ற, பன்னாட்டு நிறுவனம் ரூபாய் 1,500 கோடி கொடுத்தால் போதும். மீதி பணத்தை இந்திய அரசே மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்க வேண்டும். அமெரிக்காவில் பிரைஸ் ஆன்டர்சன் சட்டத்தின் படி அதே அணு உலை நிறுவனங்கள் ரூ.49266 கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். ஏனென்றால் அமெரிக்கன் உயிரைவிட இந்திய உயிர் 33 மடங்கு கீழானது. அணு சக்தி ஒழுங்கு வாரியம் – அணு உலை விபத்தை முக்கியத்துவம் இல்லாத விபத்து என அறிவித்தால் நட்ட ஈடு வழங்க தேவையில்லை.

24000 ஆண்டுகள் கதிர் வீச்சு உள்ள விபத்திற்கு 10ஆண்டுகளில் இழப்பீடு கோராவிட்டால் அதன் பின் சட்டப்படி கோர முடியாது. சுனாமி, நிலநடுக்கம், போர், பயங்கரவாத நடவடிக்கைகளால் விபத்து ஏற்பட்டால் மத்திய அரசு நட்ட ஈடு வழங்க வேண்டியதில்லை.

அணு உலையில் விபத்தே ஏற்படாது 100% பாதுகாப்பானது என்று  சொல்லும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வல்லரசு கனவு காணும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, காங்கிரசு என அணு உலையை ஆதரிக்கும் நபர்களிடம் மட்டுமே கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று பேசுகிறார். பல மாதங்களாக போராடும் மக்களை சந்திக்க அஞ்சுகிறார். பூகம்பத்தால் அணை உடைந்துவிடும் என நினைத்தால் காவேரி ஆற்றில் கரிகாலன் கல்லணையை கட்டியிருக்க முடியாது. ஆயிரம் ஆண்டு தஞ்சை பெரியகோவில் இருக்காது என லூசு தனமாக நம்மிடம் பேசுகிறார்.

இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தப்படி அனைத்து அணு உலைகளும் இயங்கினால் கூட இன்னும் 15 வருடங்களுக்குப் பின்பும் இந்திய மின்  தேவையில் 7% மட்டுமே அணு மின்சாரத்தால் கிடைக்கும். பன்னாட்டு அணு உலை முதலாளிகளை பாதுகாக்கும் அணு சக்தி இழப்பீட்டு சட்டத்தை நீக்குவதற்கு மன்மோகன்சிங்கிடம் பேசுவாரா? மின் தேவைக்கு அணு உலைதான் ஒரே வழியா? என கேட்பாரா?

இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு போபாலில் அமெரிக்க யூனியன் கார்பைடு ரசாயன தொழிற்சாலை ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டு 1984ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரே இரவில் 20 ஆயிரம் மக்கள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டனர். இன்றளவும் அதன் பாதிப்பு தொடர்கிறது. விசக்கழிவுகள் அகற்றப்படவில்லை. முறையாக இழப்பீடும் வழங்கப்படவில்லை. வழக்கின் முதல் குற்றவாளி ஆன்டர்சன் மீது இன்னும் விசாரணையே துவங்கப்படவில்லை. மற்ற குற்றவாளிகளுக்கு டி.வி.எஸ். 50 இடித்தால் என்ன தண்டனையோ அதுதான் வழங்கப்பட்டது. அன்றைய தினமே ஜாமீனில் விடப்பட்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் மீதான வழக்கில் இந்திய அரசு நீதிமன்றங்களின் யோக்கியதை இதுதான். ஆனால் கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் வழக்கே தொடுக்க முடியாத படி இந்திய அரசுக்கும் ரசிய அரசுக்கும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அணு உலைகளை கட்டுவது மக்களின் மின்சாரத் தேவையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவல்ல. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய-அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், இந்திய-பிரான்ஸ், இந்திய-ரஷ்ய வர்த்தக உடன்பாடுகள் இந்திய முதலாளிகளின் நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

இதில் மக்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு, துளியுமில்லை. விவசாயம், பொது விநியோகம், கல்வி, சுகாதாரம், சமூக நல திட்டங்கள், சுயசார்பு விஞ்ஞான வளர்ச்சி, சுற்று சூழலை பாதிக்காத மின்சார தயாரிப்பிற்கென தேவையான நிதியை ஒதுக்காமல், பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காகவும், இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தின் வல்லரசு கனவுகளுக்காகவும் லட்சக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணத்தை பல ஆண்டுகளுக்குபின் கிடைப்பதாக கூறும் 7% அணு சக்தி மின்சாரத்திற்காக முதலீடு செய்வதன் ஒரு பகுதியே கூடங்குளம் அணு உலை. 40 ஆண்டுகள் கூட ஆயுளற்ற அணு உலைகளுக்கு, 400 தலைமுறை மக்களின் உயிரை, வாழ்க்கையை பணையம் வைக்கம் இக்கொடூரத்தை நாம் அனுமதிக்கலாமா?

அறிவார்ந்த, தேசப்பற்றார்களே, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுரிமையை தகர்க்கும் அணு குண்டு-அணு உலை அரசியல், ஆதிக்க வல்லரசுக் கனவு-அமெரிக்க அடியாள் அரசியலை நாம் அனுமதிக்கக் கூடாது. கூடங்குளம் மட்டுமல்ல இப்புவிப்பரப்பிலிருந்தே மனித குலத்திற்கு எதிரான அனைத்து அணு உலைகளையும் அகற்றும் வரை போராடுவோம். வாரீர்!

 

மத்திய, மாநில அரசுகளே!

பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடாதே!

அனல், நீர், காற்று, கடல் அலை, சூரியஒளி போன்ற சுயசார்பு மின்சார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடு!

தமிழக மக்களே!

இந்திய அரசு, .ர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ், சிவசேனா, கும்பலின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிப்போம்!

நம் அனைவருக்காகவும் போராடும் கூடங்குளம்இடிந்தகரை மக்களின் போராட்டத்தில் இணைவோம்!

மனித குல விரோத அணு உலைகளை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்!.

 

கருத்தரங்கம்

நாள் : 26.11.2011 சனிக்கிழமை  நேரம் : காலை 10.00 முதல் 1.00 மணி வரை

இடம் : ஜெபமாலை திருமண மண்டபம், ஆர் வி.புரம், நாகர்கோவில்

(மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் அருகில்)

வரவேற்புரை :
திரு.சிவராச பூபதி, வழக்கறிஞர்
மாவட்டச் செயலர், ம.உ.பா.மையம். மதுரை

தலைமை :
திரு.சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர்
மா.துணைச்செயலர், ம.உ.பா.மையம். மதுரை.

முன்னிலை :
திரு.சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர்

கருத்துரை :
கூடங்குளம் அணு உலையும் இடிந்தகரை மக்கள் போராட்டமும்.
முனைவர்.சுப.உதயகுமார்
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், நாகர்கோவில்.

அணு மின்சாரம் பாதுகாப்பனது, அவசியமானது – பொய்யும் புரட்டும்
திரு..முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர், மதுரை.

அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் ஓர் அடிமைச்சாசனம்
திரு.தி.லஜபதிராய், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

பன்னாட்டு அணு உலை அரசியலும் – காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்.பி.ஜே.பியின் வல்லரசுக் கனவும்
தோழர்.காளியப்பன், இணை பொதுச் செயலாளர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

இடிந்தகரை மக்கள் போராட்டம் இந்தியா முழுவதும் பரவட்டும்
திரு.சி.ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர்.
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழச்சி நடைபெறும்.

நன்றியுரை : திரு.சு.ப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்
மாவட்டச் செயலாளர், ம.உ.பா.மையம். தூத்துக்குடி.

அனைவரும் வருக!

_________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம்தமிழ்நாடு
கன்னியாகுமரி மாவட்ட கிளை
18ஆ, 2-வது தளம்,தங்கையா கட்டிடம் பொதுப்பணித்துறை சாலை நாகர்கோவில்.

தொடர்பு : 9486643116,9443527613.

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. மனித உரிமை பாதுகாப்பு மைய கிளை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ம.க.இ.க.வின் தோழமை அமைப்பின் கருத்தரங்கம் நாகர்கோவிலில் என்றதும் கூடங்குளம் போராட்டம் வெற்றி அடைந்துவிட்டது போன்றதொரு மகிழ்ச்சி உணர்வு! கையறு நிலையில் வாழ்த்து சொல்ல எனக்கு தகுதியில்லை என்றாலும் கருத்தரங்கம் முழு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  2. […] https://www.vinavu.com/2011/11/23/koodankulam-seminar/ GA_googleAddAttr("AdOpt", "1"); GA_googleAddAttr("Origin", "other"); GA_googleAddAttr("theme_bg", "ffffff"); GA_googleAddAttr("theme_text", "333333"); GA_googleAddAttr("theme_link", "222222"); GA_googleAddAttr("theme_border", "dddddd"); GA_googleAddAttr("theme_url", "346ba4"); GA_googleAddAttr("LangId", "1"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d"); GA_googleFillSlot("wpcom_sharethrough"); Share this:TwitterFacebookLike this:LikeBe the first to like this post. Posted in: தமிழக மீனவர் ← உள்நாட்டு மீனவர் Be the first to start a conversation […]

  3. அருமையான கட்டுரை. அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் வெல்லட்டும்.

    • ஜெய்தாப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லை மகாராஸ்ட்ரா மாநிலத்தில் உள்ளது.கூடன்குளம் அணுமின் நிலையம் செர்னோபில் வகையை சேர்ந்தது அல்ல.

  4. “இரத்தம் சிந்திய மக்கள் போராட்டத்தால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தாப்பூர் அணு உலை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது”

    ஜெய்தாபூர், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்தினகிரி மாவட்டம் மதுபன் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ராஜஸ்தானில் அல்ல.

  5. “1986 ரஷ்ய செர்னோபில் அணு உலை விபத்தில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு…”

    செர்னோபில் விபத்தில் நேரடி கதிர்வீச்சின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 50. விபத்து நடந்து 25 ஆண்டுகளில் கதிரியக்கத்தினால் ஏற்பட்ட புற்று நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5000. சர்வதேச அணுசக்தி கழகம் வெளியிட்ட அறிக்கை.

    http://www.iaea.org/NewsCenter/Focus/Chernobyl/pdfs/pr.pdf

    இந்தியாவில் சாலை விபத்தில் ஆண்டுதோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகம்.

    http://www.who.int/violence_injury_prevention/road_safety_status/country_profiles/en/index.html

    நூற்றுக்கும் அதிகமான அணு உலைகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி கட்டப்பட்ட அணு உலைகளை பாதுகாப்பாக இயக்குவது எப்படி என்பதை ஆராயாமல், மூடுவதே தீர்வு என் முரண்டு பிடிக்கும் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு குறைந்து வருகிறது என்பதே உண்மை.

  6. இந்த கட்டுரை மூலம் அணுமின் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி வினவு! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!

    • கூடங்குளம் அணு உலை அணுமதித்தால் 3 லட்சம் கோடிக்கு 36 அணு உலைகள் இந்திய கடற்கரை முழுவதும் கட்டப்போகிறார்கள் மீனவர்கள் கடலிலிருந்து அப்புறப்படுத்துவதை தவிர்க்கமுடியாது.காடுகளை பழங்குடிமக்கள் எப்படி பாதுகாக்கிறார்களோ அது போல் மீனவர்கள் கடலையும் கடல் வளத்தையும் பாதுகாக்கிறார்கள்.17000 கோடி கூடங்குளம் அணு உலை என்று பேசினால் 35 ஆண்டுகளுக்கு பிறகு பிணத்தை சோறு போட்டு மருந்து கொடுத்து பாதுகாப்பது போல் கூடங்குளம் அணு உலையை 20 ஆயிரம் கோடி செலவு செய்து பாதுகாக்க வேண்டும். 3 லட்சம் கோடியை மக்கள் வரிப்பணத்தை 7 சதவீத மின்சாரத்திற்காக பன்னாட்டு அணு உலை முதலாளிக்கு கொட்டி கொடுத்தால் பால் கேஸ் கல்வி மருத்துவத்திற்கு பேருந்து கட்டணம் பெட்ரோல் விலை இதைவிட தாறுமாறாக போகும். அணு உலைகைளை விஞ்ஞானிகள் நீதிபதிகளே ஆபத்தானது என எதிர்க்கிறார்கள்.கூடங்குளம் இடிந்தகரை போராட்டத்தை அனைவரும் ஆதிரிக்க வேண்டும்.பகத்சிங் கட்டபொம்மன் மருது சகோதரர்கள் வ.உ.சி போன்ற தேசப்பற்றாளர்கள் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்தார்கள் இன்று நாம் பல பன்னாட்டு கம்பெனிகளை எதிர்க்கிறோம்.இடிந்தகரை மக்கள் முன்னனியில் இருக்கிறார்கள்.நாம் யார் பக்கம்?

  7. “செர்னோபில்லின் அதே தொழில் நுட்பத்தில் இன்று கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டுள்ளது”

    தவறான செய்தி.
    செர்நோபில் அணு உலைகள் RMBK எனப்படும் கிராஃபைட் தணிப்பான்கள் (moderator) கொண்டது. மேலும் containment எனப்படும் உறுதியான வெளிப்புற கட்டிடம் கிடையாது. கூடங்குளம் அணு உலைகள் VVER எனப்படும் தண்ணீரை தணிப்பானாக பயன்படுத்தும் வகையைச் சேர்ந்தது. விபத்து நிகழ்ந்தாலும் கதிர்வீச்சு வெளியே பரவாது தடுக்க முடியும்.

    இக்கட்டுரை தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

    • அணு தயாரிக்கும் முறையைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் ?.. காமேஸ் …

      வளர்ந்த நாடுகள் அணு உலைகளை மூடிவருவது குறித்து மவுனம் சாதிப்பது ஏன் ?..

      இங்கே தயாராகும் மின்சாரம் பன்னாட்டு நிறுவனங்களுக்காக தயாரிக்கப்படுவதை குறித்து பேச மறுப்பது ஏன் ?..

      விவாதிக்கலாமா ராம்?..

  8. நாம் என்ன போராட்டம் செய்து என்ன? மங்கூசு மன்டையர் மன்னு மொகன் வாய் மூடியே இருப்பார்.

    வினவிர்க்கு ந்யானியை பிடிக்காது என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு அருமையான கட்டுரையை எழுதி உள்ளார். அவரது புள்ளியியல் விவர்ங்கள் நேர்த்தியாக உள்ளன. வினவு வாசகர்கள் அதையும் படித்து பாருங்கள்.

  9. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்டக்காரர்களின் கோரிக்கை வெற்றி பெற்றுவிடுமானால், அது இந்தியாவில் உள்ள அனைத்து அணூலைகளுக்கும் ஆபத்தாக முடியும் என எச்சரிக்கிறேன்..

    கூடங்குளம் போராட்டக்குழுவினரின் கோரிக்கைகள் நிறைவேறினால், இந்தியாவில் உள்ள மற்ற அணூலைகளையும் மூடக்கோரி போராட்டம் நடத்தப்படும், இது இந்தியாவிற்கு பேரிழப்பாக மாறும்.

    • ஆமாம், உண்மையிலேயே பன்னாட்டு முதலைகளுக்கான இந்தியாவுக்கு பேரிழப்பாக மாறும். அணு ஆய்வாளர், மக்கள்நல ஆய்வாளராக மாறினால் நன்றாக இருக்கும்

  10. உலகிலெ யெ அனு உலைகலை ஆத்ரிகும் மெதாவி கல் இருகும் ஒரெ நாடு நம் இந்திய தான். மட்ர நாடுகல் அனைதும் முட துவஙி விட்டன. இப்படி பட்ட நாடில் பிரக்க என்ன தவம் செஇதொமொ நாம் எல்லம். வாக்ழ்க நம் நாடு.

  11. கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டும் என்று வாதாடும் சுயநலவாதிகளுக்காக ஒரு செய்தி….

    SINGAPORE: Singapore’s food watchdog, the Agri-Food and Veterinary Authority (AVA), said it hasn’t imported Meiji brand milk powder to the country since March 2011.

    Dairy products and infant formula, including baby food containing milk, were suspended from four prefectures – Fukushima, Ibaraki, Tochigi and Gunma.

    This was in response to Japan’s recall of 400,000 cans of powdered milk after traces of radiation from its crippled nuclear plant were detected.

    Dairy products from other prefectures are subject to AVA’s sampling programme.

    AVA also said that dairy products from Japan that are in the market are safe for consumption.

    – CNA/fa

    Thanks,
    ChannelNewsAsia

    http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/1169971/1/.html

  12. Chernobyl nuclear disaster: 25th anniversary
    Posted by feww on April 26, 2011

    1 Million Killed in Chernobyl Disaster

    Ukraine marks the 25th anniversary of Chernobyl nuclear disaster
    On 26 April 1986 Reactor 4 at Chernobyl NPP in Ukraine, then in the Soviet Union, exploded releasing about one hundred times more radiation than the atom bombs dropped over Hiroshima and Nagasaki in 1945.

    Ukrainian city of Chernobyl had managed to live for 793 years… that is until the Chernobyl nuclear power plant underwent a core meltdown on April 26, 1986 at about 1:00am local time. This image was taken by authorities in the former Soviet Union

    Remembering Chernobyl Victims

    The sarcophagus covering the damaged fourth reactor at the Chernobyl nuclear power plant is seen behind a building decorated with a graffiti in the abandoned city of Prypiat April 4, 2011. Belarus, Ukraine and Russia will mark the 25th anniversary of the nuclear reactor explosion in Chernobyl, the place where the world’s worst civil nuclear accident took place, on April 26. Engineers are still struggling to regain control of damaged reactors at the Fuskushima plant after last month’s earthquake and tsunami, in the worst nuclear crisis since Chernobyl in 1986, with the government urging the operator of the plant to act faster to stop radiation spreading. REUTERS/Gleb Garanich. Image may be subject to copyright. Reuters images …

    Birth defects and cancer were the norm for many years following the Chernobyl disaster. By the time residents of Pripyat, a town located near the plant, were ordered to evacuate, about two days after the Chernobyl core meltdown had occurred, many had already been exposed to varying doses of radiation poisoning.

    The Incident: A meltdown of the reactor’s core in the Chernobyl power plant killed thirty people in 1986. About 135,000 people were evacuated. It is believed that about one hundred times more radiation was released in the accident than by the atom bombs dropped over Hiroshima and Nagasaki in 1945.

    Legacy: More than 4,000 cases of thyroid cancer were diagnosed among children and adolescents between 1992 to 2002 in Belarus, Russia and Ukraine. Victims under 14 years were most severely affected by the elevated concentrations of radioiodine found in milk.

    Incidents of skin lesions, respiratory ailments, infertility and birth defects were readily found among the more than five million people who inhabit the affected areas of Belarus, Russia, and Ukraine for many years following the accident.

    The Poisoned land. Up to 5 million people continue to live on radioactive contaminated land. About 85% of the children who live in contaminated areas of Belarus today are ill, a near 6-fold increase compared to the time before the explosion (15%), according to The Belarusian National Academy of Sciences.

    Disputed Facts: The above facts, however, have been disputed by a number of individuals including the author of a recent WHO report, and the retired “nukophile” British academic, James Lovelack. Local and international experts, however, have dismissed the WHO report findings. A UN report released in 2005 estimated the number of victims at just 4,000. Their figure is hotly disputed by NGOs and independent experts.

    “A report by Alexey Yablokov, Vassily Nesterenko and Alexey Nesterenko which appeared in the Annals of the New York Academy of Science showed that by 2004, there were 985,000 additional deaths worldwide caused by the nuclear disaster, including 212,000 of them within Western Russia, Belarus and Ukraine.”

    Chernobyl fallout covers the entire Northern Hemisphere
    Consequences of the Catastrophe. Authors Alexey Yablokov (Center for Russian Environmental Policy in Moscow), Vassily Nesterenko and Alexey Nesterenko ( Institute of Radiation Safety, Minsk, Belarus) studies about 5,000 reports and scientific papers mostly published in Slavic languages and compiled their finding in the book “Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment,” which was published last year on the 24th anniversary of the Chernobyl reactor core meltdown.

    “For the past 23 years, it has been clear that there is a danger greater than nuclear weapons concealed within nuclear power. Emissions from this one reactor exceeded a hundred-fold the radioactive contamination of the bombs dropped on Hiroshima and Nagasaki.” They wrote.

    “No citizen of any country can be assured that he or she can be protected from radioactive contamination. One nuclear reactor can pollute half the globe,” the authors said. “Chernobyl fallout covers the entire Northern Hemisphere.”

    According to the book, a total of about 830,000 people, referred to as the “liquidators,” were responsible for various emergency works at the Chernobyl site including fire extinguishing, decontamination and cleanup.

    The authors say between 112,000 and 125,000 of the liquidators had died by 2005. The authors also estimate that between 1986 and 2004 some 985,000 people died as a result of Chernobyl fallout {2011 estimates are well over a million deaths.]

    “Official discussions from the International Atomic Energy Agency and associated United Nations’ agencies (e.g. the Chernobyl Forum reports) have largely downplayed or ignored many of the findings reported in the Eastern European scientific literature and consequently have erred by not including these assessments.” The authors said last year.

    Chernobyl and Other Nuclear Stats

    •More than 95% of the radioactive material (180 metric tons with a radioactivity of about 18 million curies) still remains inside the Chernobyl reactor.
    •The core meltdown at Chernobyl was said to have released radiation estimated at 50 million curies. Committee on the Safety of Nuclear Installations said in 1995 that the meltdown had released about 140 million curies. [Researchers Alexey Yablokov, Vassily Nesterenko and Alexey Nesterenko say the radiation released from Chernobyl may have been up to 10 billion curies. In comparison, the Hiroshima bomb released about 3 million curies.]
    •Immediately after the accident, 237 people suffered from acute radiation sickness, and 31 died within the first 90 days of the disaster.
    •About 135,000 people were evacuated from the area surrounding the plant, including 50,000 from the town of Pripyat.
    •The Academy’s estimate for the number of casualties are more than 90,000 deaths and more than a quarter of a million cancer cases.
    •The Ukrainian National Commission for Radiation Protection calculates the number of radiation casualties at half a million deaths so far.
    •In a book published by the New York Academy of Sciences last year on the 24th anniversary of the reactor core meltdown, the researchers maintain that about one million people have died from exposure to radiation released by the Chernobyl reactor so far [as of 2010.]
    •“In the former Soviet Union at least 9 million people have been effected by the accident; 2.5 million in Belarus; 3.5 million in Ukraine; and 3 million in Russia. In total over 160 000 Km2 are contaminated in the three republics.” source
    •Some 441 commercial nuclear power reactors are operating in 31 countries ( total capacity of 376 gigawatts) each of which is potentially as lethal as Chernobyl, if not worse. [This item, updated here, was written before the Fukushima nuclear disaster began unfolding.]
    •An estimated 56 countries operate more than 250 research reactors.
    •At least 220 nuclear reactors power military ships and submarines.
    Fukushima NPP
    Fukushima NPP is said to contain about 4,277 tons of nuclear fuel, about 24 times as much as Chernobyl (~ 180 tons).

    “The Fukushima Dai-ichi site has a considerable number of fuel rods on hand, according to information provided Thursday by Toyko Electric Power Co., which owns the atomic complex: There are 3,400 tons of fuel in seven spent fuel pools within the six-reactor plant, including one joint pool storing very old fuel from units 3 and 4. There are 877 tons in five of the reactor cores. Officials have said that the fuel in Unit 4′s reactor vessel was transferred to its spent fuel pool when the unit was temporarily shut in November.” AP reported.

    On April 12, Japanese authorities raised the measure of severity of the Fukushima NPP disaster to the maximum level of 7 on INES. (See below for details.)

    The International Nuclear and Radiological Event Scale (INES)
    The INES, a logarithmic scale, which was introduced in 1990 by the IAEA to enable prompt communication, classifies the intensity of nuclear incidents as follows:

    7 – Major Accident [Chernobyl disaster, criticality accident, April 1986]

    6 – Serious Accident [e.g., Kyshtym incident, Mayak, former Soviet Union, steam explosion released up to 80 tons of highly radioactive material into the atmosphere, September 1957. ]

    5 – Accident With Wider Consequences [e.g., Three Mile Island accident Pen State, U.S., partial meltdown release radioactive gases into the environment, March 1979.]

    4 – Accident With Local Consequences [e.g., Sellafield, UK, at least 5 incidents reported between 1955 to 1979]

    3 – Serious Incident [e.g., Vandellos NPP, Spain, fire destroyed control systems; the reactor was shut down, July1989]

    2 – Incident [e.g., Forsmark NPP, Sweden, a backup generator failed, July 2006]

    1 – Anomaly [e.g., TNPC, France, 1,600 gallons of water containing 75 kilograms (170 lb) of uranium leaked into the environment, July 2008]

    0 – Deviation (No Safety Significance) — [e.g., Atucha, Argentina – Reactor shutdown caused by tritium increase in reactor encasement, December 2006.]

    What is a lethal dose of radiation from a single Exposure?
    Studies of the 1945 atomic bombing at Hiroshima and Nagasaki show that 100 percent of victims whose bodies were exposed to 600,000 millirems (6,000 mSv) died from radiation. About 50 percent of victims who received 450,000 millirems (4,500 mSv) of radiation also died.

    (Note: Rem is a unit of ionizing radiation equal to the amount that produces the same damage to humans as one roentgen of high-voltage x-rays. Source: MIT)

    1 rem = 10 mSv (1 Sv = 100 rem)

    Background Radiation in millirems per year (mrem/yr)
    •Average background radiation (US): 300
    •Higher altitudes (e.g, Denver): 400
    “Safe Levels” of Radiation (U.S.)
    Limits above natural background radiation levels (average 300 millirems per year) and medical radiation:

    •Occupation Limit: Maximum of 5,000 (the limit for a worker using radiation)
    •Average Natural Background: 300
    [Note: Lifetime cumulative exposure should be limited to a person’s age multiplied by 1,000 millirems, e.g., a 70-year-old person, 70,000 millirems.]

    Adults

    •Max single dose for an adult: 3,000
    •Annual total dose: 5,000
    Under 18

    •Max single dose for a person aged under 18 years: 300 millirems (whole body equivalent)
    •Annual total exposure: 500
    Fetal Exposure

    •Maximum limit for fetal exposure during gestation period: 50 millirems per month above background levels
    Medical

    •Single Chest X-ray (the whole body equivalent): 2 millirem
    Air Travel

    •Coast-to-coast US round trip flight: 12 millirems
    *Note: Radiation dose of about 2,000 millisieverts (200,000 millirems) cause serious illness.

    Half-life of some radioactive elements

    [NOTE: Half-life is the time taken for a radioactive substance to decay by half.]

    •Cesium-134 ~ 2 years
    •Cesium-137 ~ 30 years
    •Iodine-131 ~ 8 days
    •Plutonium-239 ~ 24,200 years
    •Ruthenium-103 ~ 39 days [Ruthenium is a fission product of uranium-235.]
    •Ruthenium-106 ~ 374 days
    •Strontium-90 ~ 28.85 years [Strontium-90 is a product of nuclear fission and is found in large amounts in spent nuclear fuel and in radioactive waste from nuclear reactors.]
    •Uranium-234 ~ 246,000 years
    •Uranium-235 ~ 703.8 million years
    •Uranium-238 ~ 4.468 billion years

    Thanks,
    http://feww.wordpress.com/2011/04/26/chernobyl-nuclear-disaster-25th-anniversary/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க