Wednesday, October 9, 2024
முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்காமராசர் அரங்கத்தில் காளமேகம் அண்ணாச்சி!

காமராசர் அரங்கத்தில் காளமேகம் அண்ணாச்சி!

-

அம்மணக்காரன் ஊருல கோவணன் கட்டுனவன் டீஜன்டுனா, போலீசு லத்திய  பாத்தாலே மூச்சா போறவன் ஊர்ல, கம்பு கட்டி துணி காயப்போடுறவன் கொம்பனா?

சாரு நிவேதிதா எக்ஸைல் வெளியீட்டு விழாவேல வெட்டி இல்லாத புயபுள்ளகளுட்ட 1000, 2000ம்னு வாங்கி கடவுள காட்டுவேன்னு வடிவேலு அண்ணன் வசூல் பண்ண கத தெரியுமாலே? பெறவு அல்லா புயபுள்ளகளயும் மலையண்ட கூட்டிபுட்டு, கடவுள பாத்தா மேறி ஆக்ட் குடுப்பாறு நம்ம அண்ணாத்தே! கடவுளயைம் காணோம், காசும் வேஸ்ட்டுன்னு அந்த பயபுள்ளங்க அண்ணன் சட்டையக் கோத்து கேப்பாய்ங்க! அப்போ நம்ம அண்ணாத்தே ஒன்னு அடிச்சு விடுவாறு, யாரு பொண்டாட்டிங்கல்லாம் பத்தினியோ அவுகளுக்கு மட்டும் கடவுள் தெரிவாருன்னு சொன்னப்புறம், அவனவன் துண்டக் காணோம் துப்பட்டாவக் காணோம்னு கன்னத்தில் போட்டுக்கினு மானத்தை பாத்து சாமி தெரியுதுன்னு உருகுவானுக!

அப்படித்தாம்லே இந்த சாநிய (சாரு நிவேதிதா) நம்ம பதிவுலகத்துல இருக்குற சில பயலுவ அதுவும் சேட்டு பையனுகிட்ட ஐஞ்சு பானி பூரியை முழுங்கினு நாலுதான் லபக்குனேன்னு சண்டை போடுற காலரைக்கால் டிக்கட்டுங்க கொண்டாடுறானுவ! சாமிய பாக்கலேன்னா சொன்னா கற்பு காத்துல கரைஞ்சிரும்ங்கிற மேறி என்னா ஒரு பக்தி!

ஏலேய் மளிகை லிஸ்ட் போட்டாலும், மங்காத்தா டிக்கெட்டு புக் பண்ணினாலும் புள்ளையார் சுளி போட்டு ஆரம்பிக்கிறதுதான் நம்ம மரபுலே! அதுமேறி இலக்கியக் கட்டுரைன்னா நம்ம குருஜி இல்லாமலாடே! மொகரம் பண்டிகைக்கு ஆபிசுல லீவு, அம்பத்தூர்ல இருந்து வர பேஜாரா இருக்கும்ணு குருஜி இந்த பங்ஷனுக்கு வரலேன்னு சொன்னதுமே நமக்கு கொஞ்சம் டல்லுதான். என்ன இருந்தாலும் பதிவுலகுல சாநிய ராக்ஸோ ராக்குஸூன்னு எழுதி நம்ம பயலுகள பத்தி விட்டவராச்சே! அதுவும் போன தபா குஷ்பு வரலேன்னு துக்கத்துல இருந்தவருகிட்ட, இந்த வாட்டி ஜோதிர்மயி வருவாக வாங்கப்புன்னு துக்கம் விசாரிச்சாரு நம்ம ராம்ஜி யாஹூ.

ராம்ஜி யாருடே புதுசுன்னு வாயப்பெளக்காதீக. அவுரு அதுக்கு ஒர்த்தான ஆளு! கடவுள்னா தூணுல, துரும்புல, இருப்புல, மப்புல இருப்பான்ங்குற மேறி, இலக்கியம்னா அது ராஜேஷ் குமார் பாக்கெட் நாவல்லயும் இருக்கும், ஜெயமோகனது தண்டியான விஷ்ணுபுரத்துலயும் இருக்கும்னு ஒரு திரியை கொளுத்திப்போட்டு அந்த அதிர்ச்சியில சுயமோகத்துக்கு கிடைச்ச அடியில ஜெயமோகானந்தா பின்னூட்ட பெட்டியை தூக்கிட்டாருல்ல! இவருதாம்லே பதிவுலக பின்னூட்ட பில்லா!

சீரோ டிகிரியையே கொஞ்சம், நஞ்சமாக மாத்தி மாத்தி தேகம், எக்சைல்னு காத்தால வெடிக்கிற அடிவயத்து கேசு மாதிரி ரிலீஸ் பண்றாரு சாநின்னு குருஜிக்கு தெரிஞ்சாலும் அதே நாத்தத்தை மொகத்தை சிரிச்சாப்புல வச்சிகிட்டு சுவாரசியமா புடிக்கிறாரு. அந்த பீலிங்லதானோ என்னவோ மாலையோரத்து மப்புக்கு குட்டி உருளைக்கிழங்கு ரோஸ்ட், பால்கனி கட்டிங்குல தேன்கனி மூன் ரெய்சிங்கினு எழுதி இம்சிக்கிறாரு? பெறவு நம்மளோட சேந்தா வாழ்க்கையில இருந்து இலக்கியத்தை கண்டுபிடிக்கலாம், சாநியோட சேந்தா அது கட்டிங்கை வுட்டு நகறாது! விடுலே, என்ன இருந்தாலும் மொகரத்துக்கு ஆபிசை லீவுன்னு வுட்டுறுக்காறு, அந்த பாய்மாபிமானாத்துக்கு மட்டும் ஒரு நன்னிய சொல்லிக்கினு மேட்டருக்கு வருவோம்.

குருஜியும் வரல, ராம்ஜியும் வரலயேன்னு போகலாமானு ரோசிச்சிப்ப நம்ம கூட்டுக்காரன், சும்மா டைம் பாசுக்கு போலாம்டேன்னு இழுத்தான். சரி மக்கான்னு சொல்லி வெச்சேன்.

அடியில வெட்டாகுதான்னு பொறுக்கி சாநி சாட் ஸ்கேண்டல் வெளியான பிறகு நடக்குற புக் பங்ஷன்ங்குறதுனால மட்டும் நான் அங்க போகல! சாநியோட ஜால்ராக் கூட்டம் எத்தன பேரு வருவானுக, அதுல எத்தன பேரு வூட்டுக்காரிகளை கூட்டிட்டு வருவானுக, அதுல எத்தனை பேரு வூட்டம்மாக்கள சாநிகிட்ட இன்ட்ரடியூஸ் பண்ணுவானுகன்னு ஒரு கணக்கு போடலாம்னு பாத்தா, ஏலே சொன்னா டெரரா இருக்கும், எல்லா பயலும் உசார்டே, ஒருத்தனும் கூட்டிட்டு வரல, ஒன்னு இரண்டுன்னு கூட்டிட்டு வந்தவனுகளும் ஏதோ சில ஐயோ பாவம் கேசு! அதுவும் அந்த சாட் மேட்டரு தெரியாத அப்பாவி பயலுவ!

ஆறு மணி பங்சன்னு சொன்னாப்லயா.. எதுக்கும் ஒரு அஞ்சரைக்கே போலாமேன்னு போய் பாத்தா சுத்துவட்டாரத்துல ஒரு குஞ்சு குளுவானக் கூட காணோம். என்னடா இது காமராசருன்னு சொன்னாப்லயா ராமராசருன்னு சொன்னாப்லயான்னு ஒரே சம்சயமாப் போச்சுங்க.

உள்ளுக்குள்ள போனா மண்டவத்துக்குள்ள நொழஞ்சதுமே லெப்ட் சைடுல நம்ம கெழக்கு கம்பேனிக்காரங்க அந்த புக்கை லோடு லோடா எறக்கி  அடுக்கி வச்சிருந்தாங்க. எண்ணிப்பாக்கல. எப்புடியும் ஒரு ஆயிரங்காப்பி அடிச்சிருப்பாகன்னு தெரிஞ்சுது. அல்லாத்தையும் வுத்துப்புடனும்னு ஒரு லச்சிய வெறிய கிழக்கு தம்பிமாருங்கிட்ட பாத்தேணுங்க! அடோ சாமீ… நம்மூர்ல இத்தினி படிப்பாளிங்களான்னு பக்குன்னு ஆயிருச்சு. அனேகமா இன்னிக்கு டாஸ்மாக்குல யாவாரம் படுத்திருக்கும்னு சாநிய பத்தி நெனச்சிட்டே மண்டவத்துக் கதவத் தொறந்தா திரும்பவும் பக்குன்னு ஆயிருச்சு. பின்ன அத்தினி பெரிய மண்டவத்துக்குள்ள எண்ணி பத்தே பேருன்னா எப்புடி இருக்கும்? எனக்கென்னவோ பேய் பங்களாவுக்குள்ள பூந்துட்ட மாதிரியே இருந்துச்சு.

முப்பாத்தம்மன நெனச்சிட்டே ஒரு ஓரமா போய் உக்காந்தேன். அப்புறம் ஒவ்வொருத்தரா வந்தாங்க. ஒருவழியா பங்சனு ஆறரைக்குத் தொடங்கிச்சு, நம்ம கூட்டுக்காரணும் வந்தாச்சு!

எங்கள மேறி பந்திக்கு முந்துன கேசுகளை குஜாலாக்குற படி கொலைவெறி, இச்சு இச்சு குத்துப்பாட்டைப் போட்டு தாளிச்சாணுக! இந்தபடிக்கு போனா அடுத்த தபா ரிக்கார்டு டான்ஸ் நிச்சயம். அதுக்கு கூட்டம் வருங்குறதும் சத்தியம். இதெல்லாம் யூத்தா காட்டிக்கிறதுக்காவாம்! ஏலே போக்கத்தனுவுகளா அதுல என்ன யூத்து, இன்னம் பேபி யூத்துக்கு போகணும்மான டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் போடலாம்லே, போட்டா அல்லாரும் பால்குடிக்கிற பாப்பான்னு காட்டலாம்லா? இந்த டைமுல பதிவுலகத்தின் யூத் கேபிள் சங்கர் உள்ளேன் ஐயான்னு ஆஜர் வைச்சாரு. இந்த யூத் அக்கப்போருங்கள பாத்தா கே.பி.சுந்தராம்பாள் மேறி நாமளும் கிழடுதட்டி வரம் வாங்கிட்டு போறது மேல்!

மேடையில மூணு நாக்காலிங்கள போட்டுருந்தானுவ. அதுல ஆர்டர் படி சாநி, இந்திரா பார்த்தசாரதி, வாலி மூம்மூர்த்தி மேறி குந்திக்கினாங்க.அல்லாம் 60, 70, 80வயசு கேசுங்க. அதைப்பாத்தா நாகேஸ்வரராவ் பூங்காவுல கிழடு கெட்டைங்கல்லாம் நடந்த டயர்டுல அங்ககீற பெஞ்சுல குந்துண மாதிரி ஒரு காட்சி. இவுகதான் யூத்துக்கு அத்தாரிட்டின்னா அது சிம்புவோட தம்பி குறளரசனுக்கே அடுக்காதுடே.

பங்சன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஜிகு ஜிகு சட்டையில் சாநி அங்கன இங்கன நடந்து, போஸ் கொடுத்து, கை குலுக்கி, சிரிச்சிகிணு உலா வந்தாரு. இதைப்பாத்தா தஞ்சாவூர் பெரிய கோவில் ஆனை அம்மாம் பெரிய கோவிலுல நின்னுக்கிணு வர பக்தமாருங்களுக்கெல்லாம் ஆசிர்வாதம் கொடுத்து தும்பிக்கையில தட்சிணையை அமுக்கின மாறி இருந்துச்சு. அம்மாம் பெரிய ஹாலுல கால்வாசி கூட ரொம்பாத கூட்டத்துல என்னா ஒரு எஃபக்ட்டு!

இதுல சாநி சட்டைக் கலருக்கு செமத்தியா டஃப் கொடுக்குற மேரி மச்சி சார் கண்ணைப்பறிக்கிற பச்சை டீ சர்ட்டுல சும்மா அந்தக்காலத்து ராமராஜன் மேறி என்ட்ரி குட்தாரு. அவரைப்பத்தித்தான் எக்சைலு நாவலோட 323ம் பக்கம் வருதுன்னு நம்ம கூட்டுக்காரன் அந்த புக்கை புரட்டி காண்பிச்சான். இந்த உலகத்துல பலரும் ரசிக்கிற மாதிரி நாமளும் ஒரு துணை நடிகன் கணக்கா இருக்கோம்ங்குற ஆனந்தத்துல அவரும் இதெல்லாம் ஒண்ணுமில்லைனு போகலாம். இருந்தாலும் நமக்குத்தான் மனசு திக்கு திக்குனு அடிக்குது. யாரு பெத்த புள்ளையோ பாவம்!

சாரு நிவேதிதா எக்ஸைல் வெளியீட்டு விழா

பெறவு எல்லாரும் செட்டானதும், “‘அஜால் குஜால் பாட்டெழுதும் வாலிப கவிஞர் வாலி வந்திருக்காக, மார்கெட் போன சமஸ்கிருத வித்துவான் இ.பா. வந்திருக்காக, குண்டூசி முதல் கிசுகிசு வரை அல்லாத்தையும் புக் போடும் கார்ப்பரேட் பதிப்பாளர் பத்ரி வந்திருக்காக, மற்றுமுள்ள வாலிப – வயோதிக நண்பர்கள் எல்லாம் வந்திருக்காக… வாம்மா மின்னல்…’ என சாநி சொம்பு தூக்கி வட்டத்துக்காரனுக குரல் எழுப்பனதும் கோட் – சூட்டுல சாநியை கையப்பிடிச்சு ஒருத்தரு அவரும் சூட்டு கோட்டு போட்டுகிணு இருந்தவரு கூட்டிட்டு வந்தாரு. கூட்டிட்டு வந்தவரு கலருல கருப்புங்கிறதானலயோ என்னமோ அவரு கோட்டு சூட்டு போட்டதை ஒத்துக்கிறதுக்கு முடியலடே. நம்மள மேறி உள்ள கருப்புதமிழனுக்கு கோட்டு சூட்டு எப்புடிலே ஒத்துக்கும்?

இதுல அவருதான் சாநிக்கு டை கட்டி விட்டாருன்னு சாநியே மேடையில சொன்னப்போ உண்மையிலேயே புல் அரிச்சிருச்சு. இதுல இன்னோரு ஃபுல்லையும் கேளுடே, மேடைக்கு வந்தவுக அல்லாத்தையும் சாநி சொம்பு தூக்கி காரனுவக கைத்தாங்கலாத்தான் கூட்டிகிணு வந்தானுக, அட ஙொக்கமக்கா என்னா ஒரு ‘யூத்’தாபிமானம்!

அமெரிக்கன் ஜாக்கிக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுன இந்த சாநி இன்னைக்கு வாடகைக்கு எடுத்த கோட்டு சூட்டு போட்டது எதுக்காம்? ரசியல் கல்சுரல் அகாடமியில உலக நாவல பத்தி நம்ப பண்டிதர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு வாரம் உபன்யாசம் பேசுனப்போ சாநி அங்கன போனாராம். அதுல ஒருத்தரு குர்தா போட்டுக்கிணு வர, மாமா சாநி ஏனுன்னு கேக்கப் போய், இதுதான் இலக்கியத்துக்கு டிரஸ் கோடுன்னு சொல்ல, சாநிக்கு தூக்கம் வரலயாம். அப்பத்தான் விட்டலச்சார்யா கம்பெனி ஆர்ட்டிஸ்டு காந்தாராவ் கணக்கா ஒரு சங்கல்பம் போட்டு, எக்சைலை ரிலீசு பண்றப்போ கோட்டு சூட்டு போடுவேன்னு மங்கம்மா சபதம் போட்டாராம்.

இதுக்கு மிஷல் ஃபூக்கவ கூப்பிட்டு அவரோட Discipline and Punishment புக்குல டிரெஸ்ங்குறது எப்புடி அதிகாரத்தோட குறியூடு, யூனிஃபார்ம பாத்தா மக்களுக்கு எப்படி கதி கலங்குதுன்னு பல் விளக்குண மாறி விளக்கிட்டு, அவருதான் இந்த யூனிஃபார்மிட்டிய ஒடைக்க வந்த அம்புலிமாமான்னு ஆர்ப்பாட்டம் பண்ணுனாறு. அடிங், யூனிஃபார்மிட்டியை உடைக்கணும்மான கோவணத்த கட்டிக்கிணு வா, இல்லை ஜாக்கி ஜட்டியோட வா, அத வுட்டு கோட்டு சூட்டு போட்டா அது கலகமா இல்லை பிரிஞ்சால் காயா? பேண்டு சட்டை போட்டுகிணு வர கெவர்மண்டு ஆபிசருமாரை பாத்தா கன்னத்துல போட்டுகிணு சாமிண்ணு கும்பிடுற நாட்டுல கோட்டு சூட்டு போட்டா நம்ம மக்கமாறு காலுலேயே வுழுவான். அந்த படிக்கு அந்த டிரெஸ் மேலே இந்த ஊருக்கு அவ்வ்வளு டெரரு இருக்குணு இந்த கஸ்மாலத்துக்கு தெரியாத இன்னா?

இப்புடி சாநி குர்தாவ கிழிச்ச போது பத்திரிகையாளர் ஞாநி குர்தா இல்லேனா ஜிப்பாவோடு செல்போன்ல பாம்பு கேமை ஆடிக்கிட்டிருந்தது அவருட பின்னாடி இருந்து எட்டிப்பாத்த எனக்கு தெரிஞ்சுது. இது என்னன்னா, கூட்டம்னா அதை கம்னு கேட்கணும்ணு இருந்த யூனிஃபார்மிட்டிய ஞாநி கலாய்ச்சு கலகம் பண்ணுராருன்னு எடுத்துக்கலாம்.

பெறவு சாநியோட இந்த புக்கை ஒரு பய 50,000யிரத்துக்கும், இரண்டுபய 25,000த்துக்கும், சிலரு 5, 10 ஆயிரத்துக்கும்னு எடுத்தானுகளாம். அதுல அவனுக யாரும் பேரை சொல்லக்கூடாதுன்னு கண்டிசனா போட்டுட்டுனாகளாம். பெறவு சாட் மேட்டர் போலீசுக்கு போனா, ஸ்பான்சரு ஆருன்னு என்கொயரி வருமே? இது ஏலமா, இல்லை வசூலான்னு உங்களுக்கு தோணுணாலும், அதெல்லாம் தேவமாரு இரகசியம்டே, உள்குத்து என்னண்ணு எவனுக்கு தெரியும்?

பெறவு ஒரு இருபது பேரைக்கூப்பிட்டு சாநி ஜால்ரா போட்டுக்கிணு புக் கொடுத்தாரு. அதுல சீனிவாசன்ங்கிறவரை ஃபிரெண்டு, பிலாசபரு, கைடு ன்னு தூக்கி வுட்டாரு. இந்த கைடுதான் சாநிக்காக பிச்சாவரத்துல மப்போட மான்கறி போட்ட மகான்னு சொல்லுதாக. உண்மையான்னு எங்கிட்ட கேக்காதீக. ஆனா இது போலீசுக்கு போயிரும்னு பயந்து சாநி அந்த பார்ட்டி போஸ்ட்டுகளை தூக்குனது தனிக்கதை. அப்பாலிக்கா வந்த டாக்டர் ரமேஷ், இவரு பங்காரு அடிகளோட கனைக்ஷன் உள்ளவரு. நித்யானந்தா மேட்டருல சந்தி சிரிச்சாலும், சாநியோட ஆஸ்ரம கனக்சனுங்க இன்னும் முடியல. அடுத்து சங்கர மடத்து மேனேஜர் மஹாதேவன் ஐயர் 2012ல வந்தாலும் வரலாம். ஆரு கண்டா?

விவேக் நாராயணன்னு ஒரு அமெரிக்க அம்பி, அதுவும் தமிழ் தெரியாத அம்பியைக் கூப்பிட்டு மத்த தமிழ் பயலுவுகளுக்கு இரண்டு செகண்டுல முடிச்ச சாநி இவரை மட்டும் கூரையில் வைச்சு கொண்டாடுன கணக்கா ஆர்டிக் ஐஸ் பொழிஞ்சாரு. அதுமேறி இங்கிலாந்து எம்பசியிலிருந்து ஒரு கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரனும் வந்தாரு. என்ன இருந்தாலும் ரஸ்ஸலுக்கே விலை வைச்சு கம்யூனிச எதிர்ப்புல கல்லா கட்டுன நாட்டுக்காரனுக்கு இந்த சாநியை ஆட விட ஒரு பீரு போதுன்னு தெரியாதா?

இது போக அதிமுக பெரும்புள்ளிங்க, அந்துமணி ரமேஷின் தம்பி புதுச்சேரி தினமலர் வெங்கடேஷ்ன்னு ரூலிங் கிளாசின் அல்லா தூண்களும் வந்தானுங்க. அந்துமணி ரமேஷ் மட்டும் ரொம்ப பவ்யமா ஒரு ஓரத்துல இந்தப்பூனையும் பால் குயிக்குமாங்குற கணக்கால குந்தியிருந்தாரு. இவருதான் மேல்மட்டத்து கிசுகிசு கதங்களை பைவ்ஸ்டார் ஓட்டல் பார்ட்டியில சாநிக்கு கொடுக்குற சோர்ஸ். பெறவு அந்த சோர்ஸ் மெட்டீரியலை வைத்து சாநி ஏதாவது எழுதி மண்டபத்துல இருக்குற அந்துமணிக்கு டைம் பாஸ் கொடுப்பாரு. அந்தக் காலத்துல இருந்து மன்னர்மாரு இப்புடி மண்டபத்துல இருக்குற பரதேசி புலவனுங்களெயெல்லாம் தூக்கிப்போட்டு கொண்டு வந்து பால் பாயாசத்தோட சாப்பாடு போட்டு ஜால்ரா பாட்டு  கேடு ரசிப்பானுக. இங்க பாயாசத்துக்கு பதில் ஷேம்பைன், அம்புட்டுதான் வித்தியாசம். ஆனா சாநிக்கு வாழ்நாள் சந்தா கட்டுன நல்லி குப்புசாமியும் அவரோட நிழலான தூர்தர்ஷன் நடராஜனும் மிஸ்ஸிங். ஒருவேளை அவுகதான் பிகைண்ட த ஸ்பான்சரோ என்ன எழவோ.
சாரு நிவேதிதா எக்ஸைல் வெளியீட்டு விழா

மேடையில பேசுன பெருசுங்க, கூட்டத்த பாத்து ஆயிரம், 700ன்னு கணக்கு சொன்னதுங்க. பாக்கிறது எல்லாம் ரெண்டா தெரிஞ்சா அதுக்கு என்ன காரணமுன்னு அல்லா பயலுகளுக்கு தெரிஞ்சிருக்கும். எதுக்கு வம்புனு கூட்டம் ஆரம்பிக்கையில இருந்து முடியற வரைக்கும் மூணு தபா அம்புட்டு தலைங்களயும் எண்ணிப் பாத்தேன். மேடையில இருந்தவுங்களுயும் சேத்து 340க்கு மேல மீட்டர் போகல. அடப்பாவிங்களா இதுக்கா இத்தனை பில்டப்பு! தினமலருல வெளம்பரம், பத்ரியோட புரொமோ, யூடியூபுல புரமோ, சாநி தளத்துல தொடர்ந்து கீறல் ரிக்கார்டு டயலாக், கெழக்கு கம்பெனியின்  வெளம்பரம்… இத வுட தி.மு.க மீட்டிங்குல குமரி முத்துவுக்கு ஆயிரக்கணக்குல கூட்டம் சேருமேடே? அங்கன போனா உருப்படியா நாலு கருத்தையும், காமடியையும் கேட்டுகிணு ராத்திரி அம்சமா உறங்கலாமடே?

கூட்டத்துக்கு வந்த பெரபலங்கள சாநி கூவிக் கூவி வித்துக்கிணு இருந்ததைப் பாத்தா அவுகளுக்கே வெக்கத்துல அட்டாக்கே வந்திருக்கும். ஆடுகளம் இயக்குநர் வெற்றி மாறன், ஞாநி, மதனுன்னு டி.வி சீரியல் ஹமாம் சோப்பு விளம்பரம் போல பீத்துனது போதாதுன்னு அதுக்கு அல்லக்கைங்க கைதட்டுனத பாத்தா தமிழ்நாடு எம்புட்டு பெரபல மோஸ்தர் வறட்சியில இருக்குதுன்ணு தெரியுது. இவனுகதான் செக்ஸ் வறட்சியப் பத்தி பேசுதானுக!

மதனோட ஏற்கனவே பேசி வச்சமாறி அவர பேசக் கூப்பிட்டாரு சாநி. மதனும் ஏதோ பெரிய அறிவாளி மாதிரி இந்த நாவலு இன்டர்நேஷனல் தரம்னு அடிச்சிவுட்டு அதுக்கு ஆதாரமா அவரும் இ.நேஷனல் ரீடருன்னு சொன்னாரு. என்சைக்ளோப்பீடியாவையும் விக்கிபீடியாவையும் மேயுறவனெல்லாம் இ.நே ரீடருன்னா நம்ப நமீதாவையும் அறிவாளியா ஒத்துக்கலாம். அடுத்து இவரு சாநியை ஒளிவு மறைவு இல்லாம எழுதுற கலகக்காறனா பலூன் ஊதுற மேறி உப்ப வைச்சாரு. ஆ.விகடன்ல ஆரையும் பகைச்சுக்காம, சூடு, சொரணை, காரம், கசப்பு இல்லாம மொக்கை காட்டூன் போடுற ஒரு பயந்தாங்கோளி சாநியை தைரியசாலின்னு உச்சிமோருத பாத்தா, நம்ம ஊருல கோழைக எவனுமே கிடையாதுடே.

இதுல இந்த சூராதி சூரன் சாநியோட எக்சைல் நாவல யூலா போகாம வாசிச்சாராம். சாநியும் இந்த புக்க செய்ஞ்ச போது அதாம்டே எழுதுன போது பலநாளு மூச்சா போலயாம்.  ஜெயமோகனும் இப்புடித்தான் மூச்சா போகாம எழுதுனாத பலவாட்டி எழுதிக்கிறாரு. இப்புடி மூச்சா புராணத்தை சாநியும், மதனும் விலாவாரியா விளக்குண கேப்புலயும், பெறவும் நானே ரெண்டு முறை மூச்சா போனேன். இவனுக பேச்சைக் கேட்டு அடிவயிறு கலங்கி பீச்சாம இருந்த வரைக்கும் சர்தான்.

பெரிசு இ.பா பேசுற போது ஒருஉண்மைய ஒத்துக்கிட்டாரு. இந்த நாவலு மைல்டு ஃபோர்னா இல்ல ஓய், இது ஹார்டு ஃபோர்னோன்னு வழிஞ்சாரு, என்ன இருந்தாலும் அவரும் தன்னை யூத்துனு காமிச்சிக்கிணும்லா? அதுலயும் ஒரு வேவ் லென்த் இருக்கு. வெண்மணி கொலையை வைச்சு குருதிப்புனல்னு நாவல் எழுதுன இந்த இ.பா. அதுல கோபாலகிருஷ்ண நாயுடு அந்த கொலையை செஞ்சதுக்கு காரணம் அவனோட செக்ஸ் வறட்ச்சின்னு ஒரு கண்டுபிடிப்பை போட்டாரு. நாமளும் இது தெரியாம அமெரிக்காகாரன் ஈராக்கை ஆக்கிரமிச்சதுக்கு ஏதோ ஏகாதிபத்தியம் அது இதுன்னு பினாத்திக்கிட்டு கிடக்கோம். சாநியும் அவரது சொந்த வாழ்க்கையில செக்ஸ் வறட்சி உள்ளவருங்கிறதுனாலே இந்த உலகமே காமத்துல காய்ஞ்சி போனதா கண்டுபிடிச்சிருக்காரு. இரண்டு பேரும் மேச்சுதானடே?

அடுத்து சமைஞ்சது எப்புடின்னு பாட்டு எழுதுன வாலி பேசுறப்போ, ஆறு மாதத்துக்கு முந்தி சாநிய தெரியாதுன்னு சொல்லிட்டு, அடுத்த வரியிலேய்யே அவரு எழுத்த எதையும் படிச்சதில்லேன்னுட்டு, பெறவு அகஸ்மாத்தா ஒன்னு ரெண்டு படிச்சேன்னு சொல்லி இவரும் சாநியை கலககாரன்னு தூக்குனாரு. சாநி வாலியை பத்தி ரீலுறப்போ வாலி எப்போதும் சமரசம் செய்ஞ்சதில்லேன்னு அடிச்சு வுட்டாரு. கேக்குறவன் கேனயன்னு நெனைப்பா, தெரியல. கருணாநிதி ஜால்ரா கவியரங்குத்துல இந்த வாலி போட்ட ஆட்டமென்ன, பெறவு ஜெயா மாமி வந்தப்புறம் அவரை ரெங்கநாயகின்னு தொழுததென்ன, மண்டபத்துல இருந்த ஒரு பயலும் நியூஸ் பேப்பர் கூட படிக்கிறதில்லேன்னு தெரியுது.

சாரு நிவேதிதா எக்ஸைல் வெளியீட்டு விழா

கடைசியா சாநி பேசுனது எல்லாம் புதுசு இல்லை. எழுத்தாளன தமிழகம் வாழ வைக்கல, சித்த மருத்தவத்தின் பலன், சபரிமலையின் புனித அனுவபம், கிராமத்து உணவு, பாரத மரபுன்னு காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை உள்ள அத்தனை சமாச்சாரத்தையும் கலந்து காக்டெயில்ல அடிச்சு பேசுராறு. அதுல ஒரு உண்மையை பாத்தீகன்னா அல்லாம் அவரு சொந்தப் பிரச்சினையில இருந்து குன்சாவாக கத்துகிட்ட தீர்வுங்கள வைச்சு அல்லாருக்கும் அட்வைசு மழைய பொழிதாரு. ஊர் பிரச்சினையை பாக்க கூட வக்கில்லாதவன் சொந்த பிரச்சினைய எலக்கியமாக்கப் போறேன்னு ஆரம்பிச்சா அது ஆண்மைக்குறைவயும், கைமுட்டியயையும் தாண்டுமாடே?

பர்கர், பிசா, கே.எப்.சி, ஐஸ் காஃபின்னு காசு உள்ள யூத் போற நாட்டுல சுக்குமிளகுதிப்பிலின்னு கஷாய கிளாசு எடுக்கிறவரு எப்படிடே யூத்தா இருப்பாரு? சாநியோட செக்ஸ் கதங்களுக்காகவும், கிசுசிசு மேட்டருக்காவும் படிக்க வரவன்கிட்ட சாமியே ஐயப்பான்னு முழங்கச் சொல்லுறவரை எவன்டே மதிப்பான்? ஆனா பாத்துக்கிடுங்க பட்டையும், கொட்டையுமா பக்திப் பழமா இருக்கிறவன்தான் பொறுக்கியாவும் இருப்பான்ங்குறது நமக்கு தெரிஞ்ச விசயம்.

இதுல இவரு பப்பு தமிழுல வேகலேங்குறதால இனி இங்கிலீசுல நாவல் எழுதி அடுத்த வருசம் வெளியிடப் போராறாம். இங்கிலிசுல இந்த பொறுக்கி சமாச்சாரங்கள்ளாம் டிரிபிள் எக்ஸ் மேட்டரா இலவசமா கிடைக்கிற நேரத்துல இவரு என்னத்த எழுதி என்னத்த கிழிக்க? வேத மரபை ஏத்துக்கிற தயானந்த சரஸ்வதி, சித்த மரபையும் ஏத்துக்கிடணும்னு இந்த சாநி பேசுற போது எவனுக்காவது உரைச்சுச்சா? வேத மரபை மறுத்து வந்ததுதான் சித்த மரபு, அது பாப்பனிய எதிர் மரபுன்னுகூட இந்த லூசு மாமாவுக்கு தெரியல இதுல மத்தவனெல்லாம் எதையும் படிக்கிறதில்லேன்னு இவரு வருத்தப்பட்டதை என்னன்னு சொல்ல? ஒன் யோக்கியதையை கண்ணாடியில பாருயா வெண்ணை!

காரல் மார்க்ஸ் இந்தியருங்களை காட்டுமிராண்டின்னு சொன்னதா சாநி அடிச்சு வுட்டதைப்பாத்தா இவனெல்லாம் புஷ்பா தங்கதொரையைத்தாண்டி எதையும் படிச்சவனில்லைன்றது தெரியுது.

இதுல இவருக்கும் ஜெயமோகனுக்கும் நடக்குற குழாயடிச் சண்டையை ஏதோ மாபெரும் தத்துவ சண்டைன்னு சொன்னதைக் கேட்டு ஜெயமோகன் அவரோட பார்வதிபுரத்து வூட்டு சுவத்துல முட்டி முட்டி அழுவுறாராம். அவரை தேத்துறதுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்துக்காரனுவ நாகர்கோவிலுக்கு பஸ் ஏறியிருக்கானுகன்னு ஊர் பூரா பேச்சு.

சாநியோட வூட்டுக்காரம்மா வாலி, இ.பா காலுல வுழுந்து கும்பிட்டதும்தான் ஒரு உண்மை தெரிஞ்சிது. அந்த அம்மா, வாலி, இ.பா, மதன், பத்ரி அல்லாரும் அவாளுங்குற சேதியப் பாத்தா என்ன தோணுது? அய்யங்காரு ஆத்துல ஐயரைக்கூட்டி பூணூல் கல்யாணத்துக்கு விருந்து வெச்சா மேறி ஒரு எஃபக்ட்டு.

ஏலேய் போக்கத்த மூதிகளா இதுக்கு மேலயும் இந்த எக்சைலு புக்க வாங்கி காசை விரயமாக்காதிகடே! அந்தக் காசுல பாய் கடையில பத்து பிளேட் பீஃப் வாங்கித் துன்னா ஆண்மைக்குறைவும் வராது, ஆய் குறைவும் வராதுடே! இப்ப சில பதிவருமாரு அந்த புக்குல இருக்குற சமாச்சாரத்தை காப்பி பண்ணி போட்டிருக்காக. அதுல பாத்தா, பத்து பக்கத்துக்கு ஆண்மைக்குறைவுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியம், பத்து பக்கத்துக்கு ஐயப்பா சரணம், பத்து பக்கத்துக்கு பாட்டி வைத்தியம், மீதிப்பக்க்த்துக்கு செக்ஸ் மேட்டருன்னு இருக்குறத நம்ப அண்ணாச்சி உண்மைத்தமிழன் தொட்டு சுரேஷ் கண்ணன் வரைக்கும் காறித் துப்புதாக. மீறி வாங்கின்னா அதுக்கு எச்சில் இலையை பொறுக்கி துன்னலாம்.

இதுல சாநியோட புக்கை ஆயிரக்கணக்குல வித்துரலாம்னு தப்புக்கணக்கு போட்டு அம்புட்டையும் மண்டபத்துல இறக்கி, அதுல நூறு வித்தா அதிகம், மிச்சத்தை அள்ளிக்கட்டி கிழக்கு பாய்சை துன்புறுத்திய பத்ரி, வசந்த மாளிகை சிவாஜிகணேசன் துக்கத்துல சிரிச்சது பாக்க சகிக்கலன்னாலும் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. இதுல ஜெயமோகனோட ரைட் ஹேண்ட் ஹரன் பிரசன்னாவுக்கு சாநி தனியா தாங்ஸ் சொன்னத நாம குறிச்சு வச்சக்கணும்டே!

ஜெயமோகனோட விஷ்ணுபுரத்து சொம்பு தூக்கிங்க வேட்டி கட்டிகிணு, ரசவடை போட்டு விருந்து வைச்சு கூட்டம் நடத்துறானுவ. சாநி சொம்புங்க கோட் சூட்டு வாடகைக்கு எடுத்துக்கிணு, சரக்கு பார்ட்டியோட கூட்டம் நடத்துராணுவ. ஒருத்தன் ஆச்சாரம், இன்னொருத்தன் அல்ட்ரா மாடர்னு பாத்து ஏமாறீதிக. ரெண்டுபெரும் ஒண்ணுதான். தெரியாதவன் வாயில மண்ணுதான்.

ஒரு பச்ச புள்ளைக்கு ஆபாசமா சாட் அனுப்பி ஆசைக்கு வக்கிரமா வற்புறுத்திய ஒரு பொறுக்கி ஒரு நாவல் எழுதுவானாம். அதை ஒருத்தன் புக்கா போடுவானாம். அதுக்கு விழாவாம். அதுல சில விஜபி வருவானுங்களாம். வந்தவனுங்க அந்த பொறுக்கிய தைரியசாலின்னு பாராட்டுவானுகளாம். அதுக்கு வூட்டம்மாவை வூட்டுல வுட்டுட்டு வந்தவனுங்க கைதட்டுவானுகளாம். வெளங்குமாடே இந்த நாடு?

_____________________________________

காளமேகம் அண்ணாச்சி

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. ##ஒரு பச்ச புள்ளைக்கு ஆபாசமா சாட் அனுப்பி ஆசைக்கு வக்கிரமா வற்புறுத்திய ஒரு பொறுக்கி ஒரு நாவல் எழுதுவானாம். அதை ஒருத்தன் புக்கா போடுவானாம். அதுக்கு விழாவாம். அதுல சில விஜபி வருவானுங்களாம். வந்தவனுங்க அந்த பொறுக்கிய தைரியசாலின்னு பாராட்டுவானுகளாம். அதுக்கு வூட்டம்மாவை வூட்டுல வுட்டுட்டு வந்தவனுங்க கைதட்டுவானுகளாம். வெளங்குமாடே இந்த நாடு?##\

    செருப்படி!

  2. /மேடையில மூணு நாக்காலிங்கள போட்டுருந்தானுவ. அதுல ஆர்டர் படி சாநி, இந்திரா பார்த்தசாரதி, வாலி மூம்மூர்த்தி மேறி குந்திக்கினாங்க.அல்லாம் 60, 70, 80வயசு கேசுங்க. அதைப்பாத்தா நாகேஸ்வரராவ் பூங்காவுல கிழடு கெட்டைங்கல்லாம் நடந்த டயர்டுல அங்ககீற பெஞ்சுல குந்துண மாதிரி ஒரு காட்சி. இவுகதான் யூத்துக்கு அத்தாரிட்டின்னா அது சிம்புவோட தம்பி குறளரசனுக்கே அடுக்காதுடே./

    -செம காமெடி டே !

  3. ஒரு இலக்கியக்கூட்டத்துக்கு 350 பேர் வந்தார்கள் என்பது அதிசயமே. வினவையும் சேர்த்து 351 பேர். அதிகமான கூட்டம்.

    நாவலை வினவு குழுமம் படிக்காது. படிக்காமலேயே அந்நாவல் படிக்கக்கூடாதவொன்று என்ற முடிவு சிறுபிள்ளைத்தனமானது.

    ஒருவன் நற்குணங்கள் அமைந்தவனாக இருந்தால் மட்டுமே இலக்கியவாதியாக இருக்கவேண்டும் என்று எந்த வரைமுறையையும் எவரும் போட்டு எவரும் ஏற்கவில்லை. இலக்கியத்தின் கோட்பாடுகள் விசேடமானவை.

    ஊருக்கு ஒரு வைப்பாட்டி வைத்து அலைபவனும், நித்தம் குடித்துப்போட்டு பார்யாளை உதைப்பவனும் பெண்ணின் உயர்வைப்பற்றிச் சித்திரிக்கும் புதினங்கள் எழுதலாம். எழுதியிருக்கிறார்கள்.

    தனிநபர் வேறு; இலக்கியவாதி வேறு. கண்ணதாசன் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    வினவுவின் கட்டுரையை எழுதியவருக்கு நல்ல வன்மையான, வலிமையான எழுத்து நடை இருக்கிறது. இருந்தென்ன செய்ய? அது தவறாகப்பயன்படுத்தப்படுகிறதே !
    ஒரு புதினம் எப்படிப்பட்டது? என்பதை வாசகர்தான் சொல்லவேண்டும்
    படித்த்ப்பார்த்துவிட்டு.

    வினவால் எப்படி முடிகிறது ? விட்டலாச்சாரியார்யாவின் காந்தாராவோ ?

    • ////ஒருவன் நற்குணங்கள் அமைந்தவனாக இருந்தால் மட்டுமே இலக்கியவாதியாக இருக்கவேண்டும் என்று எந்த வரைமுறையையும் எவரும் போட்டு எவரும் ஏற்கவில்லை. இலக்கியத்தின் கோட்பாடுகள் விசேடமானவை.//////

      கரீட்டா சொன்னபா …. இன்னா மேட்டரு சொல்லிகிற …

      மவுண்ட் ரோடு சப்வே வாசல்ல போட்டு விக்கிற சரோஜாதேவி புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி கேட்டு நாங்களும் விண்ணப்பிக்கிறோம்.. இந்த கம்னாட்டிபசங்க கொடுக்கமாட்றானுங்க …

      நீ கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணேன் …

      • நல்ல கருத்து. அந்தநூலகள் இலக்கியத்தரத்தில் எழுத்ப்பட்டால் அவைகளுக்கும் பரிசுகளும் பாராட்டுக்களும் தரும் இலக்கிய உலகம். தமிழில் இதுகாறும் இல்லை. பிற மேற்கத்திய மொழியிலக்கியங்களில் உண்டு.

        ஒரு புதினத்தின் இலக்கியத்தரம் அதில் சொல்லப்படும் கருத்தால் இல்லை எப்படி சொல்லப்படுகிறது என்பதைப்பொறுத்தே.

        சொல்லப்படும் கருத்தால் மட்டுமே தரம் என்பது இலக்கியம் சாரா துறைகளுக்கு உருவாக்கப்படும்நூல்களுக்காக மட்டுமே. எ.கா இரயில்வே கால அட்டவணை.

        • காமத்தை இலக்கிய உலகம் தள்ளி வைப்பதில்லை. அது நன்றாக இலக்கியத்தரத்துடன் சொல்லப்பட்டால்.

          வியாபாரிகள் இலக்கியத்தின் பக்கமே வரக்கூடாது. வந்தால் இப்படி வினவு போல எழுதவேண்டியதிருக்கும் அவர்களுக்கு

          • காமத்தை இலக்கியமாக்குறதுல எது இலக்கியம், இது இலக்கியமல்லங்குறதுக்கு நீங்கதான் அத்தாரிட்டியா? நீங்க இப்படி அத்தாரிட்டி போஸ்ட்டை எடுத்துக்கிறதுக்கு உங்க்கிட்ட என்ன குவாலிபிகேஷன் இருக்கு? அப்படி ஒரு குவாலிபிகேஷன் இருந்தால் அது பாசிசம்தானே?

        • //ஒரு புதினத்தின் இலக்கியத்தரம் அதில் சொல்லப்படும் கருத்தால் இல்லை எப்படி சொல்லப்படுகிறது என்பதைப்பொறுத்தே.//

          இரயில்வே கால அட்டவணையை தனியாகச் சொன்னால் இயக்கியம் கிடையாது. அத எக்சைலில் ஒரு பகுதியா சொன்னா இலக்கியமா? சரோஜா தேவி புத்தகங்களை இலக்கியம் இல்லைங்குறத்துக்கு உங்க்கிட்ட வெயிட்டான பாயிண்ட் இல்லையே? இருந்தால் சொல்லுங்க! சரோஜா தேவி கதைங்களுக்கும், சாநியோட கதைங்களுக்கும் வேறுபாடு எங்கிருக்கு?

          சாநி இலக்கியம், சரோஜா தேவி இலக்கியமில்லேங்குறது உங்களோட மேட்டிமைத்தனங்குறதுதான் உண்மை.

    • // தனிநபர் வேறு; இலக்கியவாதி வேறு. கண்ணதாசன் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.//

      யாரெல்லாம், எதற்கெல்லாம் தன்னை எடுத்துக் காட்டுவார்கள் என்பது தெரிந்தே எப்படி வாழக்கூடாது என்பதை தன்னைப் பார்த்துக் கற்றுக்கொள்ளச் சொன்னார் கவிஞர் தன்னுடைய ’வனவாசத்தில்’.

      // வினவுவின் கட்டுரையை எழுதியவருக்கு நல்ல வன்மையான, வலிமையான எழுத்து நடை இருக்கிறது. இருந்தென்ன செய்ய? அது தவறாகப்பயன்படுத்தப்படுகிறதே ! //

      தன் எண்ணத்தை எழுத்திலும் கொண்டுவருவது தவறா ?

      // ஊருக்கு ஒரு வைப்பாட்டி வைத்து அலைபவனும், நித்தம் குடித்துப்போட்டு பார்யாளை உதைப்பவனும் பெண்ணின் உயர்வைப்பற்றிச் சித்திரிக்கும் புதினங்கள் எழுதலாம். எழுதியிருக்கிறார்கள். //

      தன் எண்ணத்திற்கு நேர் எதிராக எழுதி ஊரை ஏமாற்றுவது சரியா ?

      • கண்ணதாசன் தன் இறுதி காலக்கட்டத்தில்தான் வனவாசம் என்ற தன் வரலாறு எழுதினார். அவரின் பெரும்பாலான இலக்கியப்படைப்புக்கள் அதற்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டன. அப்போதெல்லாம் அவர் ஒரு பெண்பொறுக்கியாகத்தான் இருந்தார். அதையும் வெளிபடையாகச்செய்தார். தான் மாபெரும் கவிஞன்; தான் செய்வதெல்லாம் செல்லும் என்ற் மப்போடுதான் செய்தார்.

        தமிழ் கூறும் நல்லுலகம் அவரின் படைப்பபுக்களை தள்ளி அவரின் பொறுக்கித்தனத்துக்காகத் தள்ளி வைக்கவில்லை. அவ்வுலமகம், தனிநபர் வாழ்க்கைக்கோட்பாடுகள், இலக்கியக்கோட்பாடுகள் வெவ்வேறானவை என்ற தெளிவுடன்தான் இருந்தது.

        அப்படியே ஓரிருவர் இரண்டையும் போட்டுக்குழப்பி அவரின் படைப்புக்களை வெறுப்பவர்களாயிருந்திருபாரேயாயினும், அவர்கள், வனவாசத்தில் இப்படிச்சொல்லி விட்டார்; எனவே இவர் நல்லவர் என்றோடோடி வந்து இவரின் படைப்புக்களைப் புரட்டவில்லை.
        சாரு நிவேதிதா பொறுக்கி; எனவே அவர் நூல்களைப்படிக்க மாட்டேன்; என்பவர்கள் இலக்கியம் படிக்கவரக்கூடாது; மெரீனாவில் சுண்டல் விற்கப்போகலாம்.

        • // கண்ணதாசன் தன் இறுதி காலக்கட்டத்தில்தான் வனவாசம் என்ற தன் வரலாறு எழுதினார். அவரின் பெரும்பாலான இலக்கியப்படைப்புக்கள் அதற்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டன. அப்போதெல்லாம் அவர் ஒரு பெண்பொறுக்கியாகத்தான் இருந்தார். அதையும் வெளிபடையாகச்செய்தார். தான் மாபெரும் கவிஞன்; தான் செய்வதெல்லாம் செல்லும் என்ற் மப்போடுதான் செய்தார்.

          தமிழ் கூறும் நல்லுலகம் அவரின் படைப்பபுக்களை தள்ளி அவரின் பொறுக்கித்தனத்துக்காகத் தள்ளி வைக்கவில்லை. அவ்வுலமகம், தனிநபர் வாழ்க்கைக்கோட்பாடுகள், இலக்கியக்கோட்பாடுகள் வெவ்வேறானவை என்ற தெளிவுடன்தான் இருந்தது.

          அப்படியே ஓரிருவர் இரண்டையும் போட்டுக்குழப்பி அவரின் படைப்புக்களை வெறுப்பவர்களாயிருந்திருபாரேயாயினும், அவர்கள், வனவாசத்தில் இப்படிச்சொல்லி விட்டார்; எனவே இவர் நல்லவர் என்றோடோடி வந்து இவரின் படைப்புக்களைப் புரட்டவில்லை.

          //

          வனவாசம் எழுதாமலே போயிருக்காலாம், எழுதிய நேர்மைக்காகவே இன்று விமர்சனங்களில் சிக்கி சீரழியாமல் இருக்கிறார் கவிஞர். அவர் ‘செய்வதெல்லாம் செல்லும் மப்போடு செய்தார்’ எனில் கவிஞனாகச் செய்தாரா இலக்கியவாதியாகச் செய்தாரா? கவிஞனை கொஞ்சம் கூடுதலாகவே பொறுப்பது உலகளாவிய புரிதல். எந்த எழவென்றாலும் அன்று டவுசரைக் கழட்ட காளமேகம் அண்ணாச்சியும் internet-ம் இல்லாததாலும் இருக்கலாம்.

          // சாரு நிவேதிதா பொறுக்கி; எனவே அவர் நூல்களைப்படிக்க மாட்டேன்; என்பவர்கள் இலக்கியம் படிக்கவரக்கூடாது; மெரீனாவில் சுண்டல் விற்கப்போகலாம். //

          இலக்கியத்தின் ஏகபோக கொள்முதல், விற்பனை உரிமையையும் WAL-MART வந்து வளைத்து போட்டு இன்னார்,இன்னாரைத் தவிர வேறு யாருடைய படைப்புக்களும் எங்கும் கிடைக்காது என்றாட்டம் போட்டால் உங்களை மெரீனாவிலோ மண்டபத்திலோ சுண்டலோடு சந்திக்கிறேன்.

          • எழுதிய நேர்மைக்காக அன்று; அவரின் கவிதைகளுக்காகவே அவரின் தனிநபர் ஒழுக்கமில்லா நடத்தையைத் தமிழக மக்கள் பொறுத்துக்கொண்டு கவிதைகளை இரசித்தார்கள்.

            கவிஞனைக் கொஞ்சம் கூடுதலாக பொறுப்பது உலகளாவிய புரிதல் என்று எப்படிக் கற்பனை பண்ணிவிட்டீர்கள்? உலக இலக்கியத்தில் கவிஞனைக்காட்டிலும் மக்களால் போற்றப்படும் இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.

            இலக்கியத்துக்கு ஏக போக உரிமை என்றெல்லாம் சொல்லிவிட்டால் நான் சொல்லும் கருத்தை விரட்டிவிட முடியுமா? நான் சொன்ன கருத்தென்ன?

            இலக்கியத்தின் கோட்பாடுகள் தனியாக நிற்பவை அவை “இலக்கியம்” என்ற வட்டத்துக்குள்ளேயேயிருந்து மட்டும் பார்க்கப்படும்போது.
            அப்படி அக்கோட்பாடுகளை அவ்வட்ட்த்துக்கு வெளியே இழுத்துப் போட்டு வைத்துக்கொண்டு பார்க்கும்போது இப்படி இடக்குமடக்கான கருத்துக்கள் அண்ணாச்சியின் கட்டுரைகளாக இடத்தையடைக்கும்.

            அண்ணாச்சிக்கும் இலக்கியத்துக்கும் தூரம்.

            • // எழுதிய நேர்மைக்காக அன்று; அவரின் கவிதைகளுக்காகவே அவரின் தனிநபர் ஒழுக்கமில்லா நடத்தையைத் தமிழக மக்கள் பொறுத்துக்கொண்டு கவிதைகளை இரசித்தார்கள். //

              சாருவும் கவிதை எழுதினால் தமிழக மக்கள் ரசிப்பார்களா என்று தெரியவில்லை, ஆனால் கண்ணதாசனை விமர்சிக்காதவர்களெல்லாம் சாருவையும் விட்டுவைப்பார்கள் என்று சொல்லமுடியாது.

              // கவிஞனைக் கொஞ்சம் கூடுதலாக பொறுப்பது உலகளாவிய புரிதல் என்று எப்படிக் கற்பனை பண்ணிவிட்டீர்கள்? உலக இலக்கியத்தில் கவிஞனைக்காட்டிலும் மக்களால் போற்றப்படும் இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். //

              கவிஞனைவிட அதிகமாக பொறுக்கப்பட்ட இலக்கியவாதி இருக்கிறாரா?

              // இலக்கியத்துக்கு ஏக போக உரிமை என்றெல்லாம் சொல்லிவிட்டால் நான் சொல்லும் கருத்தை விரட்டிவிட முடியுமா? நான் சொன்ன கருத்தென்ன?

              இலக்கியத்தின் கோட்பாடுகள் தனியாக நிற்பவை அவை “இலக்கியம்” என்ற வட்டத்துக்குள்ளேயேயிருந்து மட்டும் பார்க்கப்படும்போது.
              அப்படி அக்கோட்பாடுகளை அவ்வட்ட்த்துக்கு வெளியே இழுத்துப் போட்டு வைத்துக்கொண்டு பார்க்கும்போது இப்படி இடக்குமடக்கான கருத்துக்கள் அண்ணாச்சியின் கட்டுரைகளாக இடத்தையடைக்கும். //

              நிஜ உலகையும் இலக்கிய உலகையும், பெரிய வீடு சின்ன வீடு பாணியில் தனித்தனியா மெய்ண்டெய்ன் பண்ணச் சொல்றீங்க. எதற்காக விமர்சனம் என்பது இன்னமும் புரியலையா?

              • சாருவும் கவிதையெழுதினால்…..என்பது ஹிப்போதட்டிக்கல். (Hypothetical situation) வாதங்களின் ஹிப்போதட்டிகல்கள் கூடாது. முதலில் சாரு கவிதைகள் புனையட்டும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் அவற்றின் விளைவுகளைப்பற்றி.

                //கவிஞனைவிட அதிகமாக பொறுக்கப்பட்ட இலக்கியவாதி இருக்கிறாரா?//

                என்ன தமிழ் இது? கொஞ்சம் புரியும்படி எழுதக்கூடாதா ?

                //நிஜ உலகையும் இலக்கிய உலகையும், பெரிய வீடு சின்ன வீடு பாணியில் தனித்தனியா மெய்ண்டெய்ன் பண்ணச் சொல்றீங்க. எதற்காக விமர்சனம் என்பது இன்னமும் புரியலையா?//

                ஆப்சல்யூட்லி. அதைத்தான் சொல்கிறேன். ஏன் தனியாக என்கிறேன் என்று நன்றாகச் சொல்லிவிட்டேன். இலக்கியவாதி அதைச்செய்கிறான். அவன் அதைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறான். என் படைப்புக்களை படி; அதை எப்படியும் போட்டுத்தாக்கு. அல்லது தூக்கு. ஆனால் நான் எப்படி சாப்பிடுகிறேன்; தூங்குகிறேன்; என்றெல்லாம் ஏன் ஆராய்கிறாய்? அப்படியெ அவை உனக்குப்பிடிக்காவிட்டால், அதாவது என் தனிநபர் நடத்தைப் பிடிக்கவிட்டால் அதை என்படைப்புக்களோடு இணைக்காதே. என்பதுதான் இலக்கியவாதி சொல்கிறான். A writer can have duality of self. He can use the self which all of us see, in his literature as he likes. Still, his self outside his books i.e. in the practical life is a separate entity which when you want to criticise,should not be got mixed with his literary self. Not in this forum; in a number of for a I have been harping on the same theme.

                பின்னர் ஏன் உங்களுக்கெல்லாம் குழப்பம்?

                இந்தக்கட்டுரையையே எடுத்துக்கொள்வோம்.

                எக்ஸல் என்பதுதான் அப்புதிய புதினம். அதை நானும், நீங்களும் படிக்கவில்லை. அதன் வெளியீட்டு விழா. ஆங்கு சென்று எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்? எவர் என்ன பேசினார்கள்? எவருக்கும் எவருக்கும் போட்டி?என்ற ஆராய்ச்சிகளுக்கும் அப்புதினத்துக்கும் என்ன தொடர்பு?

                அதே வேளையில் அப்புதினத்தை அண்ணாச்சி படித்துவிட்டார். அவருக்குப் பிடிக்கவில்லை. கார சாரமாக அப்புதினத்தை விமர்சனம் பண்ணுகிறார். இது சரிமட்டுமல்ல. இது தேவை. படைப்புக்கள் படிக்கத்தானே? படித்த பின் விமர்சிக்கத்தானே? படைத்தவன், தன் படைப்புக்கள் குப்பைகளில் எறியபப்டுவதைவிட படித்து விமர்சிக்கப்படுவதை உள்ளூர விரும்புவான் கண்டிப்பாக. There is no cruelty than indifference. A bad criticism is far preferable to complete indifference.

                அண்ணாச்சியின் கட்டுரை எதில் சேர்த்தி என்று இப்போது புரிகிறதா ?

                • அய்யா கூமுட்டை சார்,

                  ஆர்.எஸ்.எஸ்ஸூக்குன்னு ஒரு வரலாறு இருக்குது. அந்த வரலாத்துல இருந்து ஒரு அனுபவத்தை தெரிஞ்சுகிட்டு அவனோட அடுத்த ஆக்சன் அறிவிப்பு ஏன்னு தப்புன்னு சொல்றது சரியில்லேன்றது ஒங்க வாதம். ஆர்.எஸ்.எஸ் ஒரு போராட்டத்தை அறிவிச்சு அதை நடத்தினப்பிறவுதான் அத விமரிசிக்கணும்கிறது ஒங்க பாயிண்ட.

                  சாநியோட முழு பொறுக்கித்தனமும் இலக்கியத்தைசும் சேத்துத்தான் எக்போசான பிறகஅ அவரு என்ன எழுதுவாறுன்னு தெரியாதா? இதுவரைக்கும் அவரு எழுது ஐஞ்சு நாவலும் ஒரே மேட்டர்தான், ஒரே செட்டப்தான். இத பல மெத்தப்படிச்ச இல்க்கியவியாதிங்களே சொல்லியிருக்காங்க, அதெயெல்லாம் படிக்கிலயா சார்?

                  • கூமுட்டைத்தனமென்றால், ஒரு நாவலைப்படிக்காமல் விமர்சனம் செய்வதே.

                    ஒரு எழுத்தாளர் தன் வாணாளில் நூற்றுக்கணக்கான நாவல்களை, கவிதைகளை, நாடகங்களை எழுதுவார். அனைத்தையும் அவர் அப்படித்தான் எழுதுவார் என்று முடிவு கட்டுவதே கூமுட்டைத்தனமாகும்.

                    சிவாஜி கணேசன் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்தார். கண்ணதாசன் நூற்றுக்கணக்கான கவிதைகளைப் புனைந்தார்; பாரதியாரும் அப்படியே. இப்படி எத்தனையோ படைப்பாளிகள். அத்துணை பேரையும் அவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள் என்று ஒரே கட்டாக க்கட்டி, அவர்களின் படைப்புக்களுக்கு பொறுக்கித்தனம் என்ற முத்திரை போட்டு, ஒரேயடியாகத் தூக்கியெறிவதை விட கூமுட்டைத்தனம் என்ன இருக்க முடியும்?

                    சாருவின் புதிய நாவல் படிக்கப்படவில்லை. நானும் படிக்கவில்லை. நீங்களும்தான். ஆனால் நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள். அஃது அப்படித்தான் இருக்குமென்று. இஃது கூமுட்டைத்தனமில்லாமல் வேறென்ன ? சொல்லுங்கள்.

                    ஒரு நூலைப்படிக்காமல் அதை விமர்சனம் செய்யமுடியும் என்பதை உலகில் மாங்காய் மடையன்கூட ஏற்றுக்கொள்ள மாட்டான்.

                    பொறுக்கித்தனமும் இலக்கியப்படைப்பும் இணைய வேண்டுமென்பது கட்டாயமல்ல. பேர்பெற்ற இலக்கியம் பொறுக்கிதனத்தையும் கருவாக வைத்து உருவாக முடியும். இதையெல்லாம் கொள்ளை இலாபம் ஒன்றே குறிக்கோள் என வாழும் ஒரு கேடுகெட்ட வணிக உள்ளத்தை வைத்துக்கொண்டு எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? இலக்கியத்தைப் பற்றிப் பேச ஒரு தகுதி வேண்டும். கட்டுரை எழுதி அண்ணாச்சிக்கும் எனக்குப் எதிர்பின்னூட்டம் போட்ட உங்களுக்கோ தகுதியே இல்லை. .

                    என் அடிப்படை வாதம் சாருவைப்பற்றியன்று எனப்தைக்கூட புரியமுடியவில்லை. என் வாதத்தின்படி

                    – அவர் நூலை படிக்காமல் விமர்சனம் பண்ணமுடியாது.
                    – தனி மனித பொறுக்கித்தனத்தால் ஒரு படைப்பாளியின் படைப்புக்கள் உயரவோ தாழவோ முடியாது.
                    –அவன் படைப்பு தனியாக நிற்கும். அதை அப்படித்தான் படிக்க வேண்டும்.
                    –கண்ணதாசனை எப்படிப் படிக்கிறீர்கள் ? அங்கு தனியாக நின்றதா? இல்லையா?
                    — ஒழுக்கசீலர்கள்தான் இலக்கியம் படைக்கவேண்டும் என்றால் இலக்கியம் படுத்துவிடும். காந்தியும் பாரதியாரும் கூட இலக்கியம் எழுத தகுதியில்லதவர்களாகிப்போவார்கள்.

                    என் வாதத்தை ஒத்துக்கொள்ளவியலவில்லை என்றால் சொல்லிவிட வேண்டியதுதானே? மாற்றுக்கருத்தை வைப்பவனை கூமுட்டை என்று சொல்லும் நாகரித்தை வைத்துகொண்டு ஒரு பதிவு மேடையா ?

                    விவாதமேடை என்பது பல்வேறுபட்ட கருத்துக்கள் ஒன்றுக்கொன்று உரசுமிடம். படிப்போர் அப்பலகருத்துக்களைப் படித்து அவற்றில் எது சிறந்தது என அவர்களே முடிவுகட்டுக்கொள்ள உதவும் மேடைதான் விவாத மேடையாகும். அம்மேடையிலேறிக்கொண்டு தனக்கு ஒவ்வா கருத்தைச் சொல்பவர்களைத் தடியால் அடிப்பேன் அவச்சொற்களா விளாசுவேன் என்று ஊழையிடுவது உங்களுக்கு வெட்கமாகத் தெரியவில்லையா?

                    கருத்தைச்சொல்லுங்கள். பிறர் கருத்தையும் மதிக்கக்கற்றுக்கொள்ளுங்கள் அதை ஏற்றாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ! இது வளர்ந்த சமூகத்தின் வாழ்பவருக்கு வேண்டிய‌ அடைப்படை நாகரிகமாகும்.

                • // சாருவும் கவிதையெழுதினால்…..என்பது ஹிப்போதட்டிக்கல். (Hypothetical situation) வாதங்களின் ஹிப்போதட்டிகல்கள் கூடாது. முதலில் சாரு கவிதைகள் புனையட்டும். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் அவற்றின் விளைவுகளைப்பற்றி. //

                  கவிஞர் கண்ணதாசனை சப்பைக் கட்டுக்கு விவாதத்தில் இழுத்தால் அவருடைய தகுதியில் கொஞ்சமாவது இருக்கவேண்டாமா? Hypocritical bunch whines about hypothetical question!

                  // இலக்கியவாதி அதைச்செய்கிறான். அவன் அதைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறான். என் படைப்புக்களை படி; அதை எப்படியும் போட்டுத்தாக்கு. அல்லது தூக்கு. ஆனால் நான் எப்படி சாப்பிடுகிறேன்; தூங்குகிறேன்; என்றெல்லாம் ஏன் ஆராய்கிறாய்? அப்படியெ அவை உனக்குப்பிடிக்காவிட்டால், அதாவது என் தனிநபர் நடத்தைப் பிடிக்கவிட்டால் அதை என்படைப்புக்களோடு இணைக்காதே. என்பதுதான் இலக்கியவாதி சொல்கிறான். //

                  கிக்குக்காகவும், நடைக்காகவும் படித்து புளகாங்கிதம் அடையக்கூடியவர்களுக்கு எழுதியவன் யாராக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் இதுதான் எலக்கிய மரபு என்று பேத்திக்கொண்டு திரியக் கூடாது. அது சரி, உங்களுக்கு படைப்பை மட்டும் தனியாகப் படித்து பரவசம் அடையும் பக்குவம் இருக்கே, பிறகு ஏன் படைப்பாளியின் சொந்த வாழ்க்கையை விமரிசித்தால் கோவம் வருது?

                  // A writer can have duality of self. He can use the self which all of us see, in his literature as he likes. Still, his self outside his books i.e. in the practical life is a separate entity which when you want to criticise,should not be got mixed with his literary self. Not in this forum; in a number of for a I have been harping on the same theme. //

                  Duality of self as ‘practical self’ and ‘literary self’ is understood in fantasy & comic literature. If you want to raise above this stuff, you cannot avoid looking for the integrity of the writer.

                  • ////கவிஞர் கண்ணதாசனை சப்பைக் கட்டுக்கு விவாதத்தில் இழுத்தால் அவருடைய தகுதியில் கொஞ்சமாவது இருக்கவேண்டாமா? Hypocritical bunch whines about hypothetical question! ….//////

                    கண்ணதாசனுக்கும் சாருவுக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை அவர்களிருவரும் படைப்பாளிகள். இருவரும் பொம்பிளைப்பொறுக்கித்தனமுடையவர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள். இவ்வளவுதான் சில ஃபண்டமென்டல்ஸ்.
                    அவருக்குத் தகுதி இருக்கிறது. இவருக்கு தகுதி இல்லை என்று எந்த தகுதியைச் சொல்கிறீர்கள் ?

                    ஒருவேளை கண்ணதாசனின் படைப்புக்கள் சிறந்தவை; சாருவின் படைப்புக்கள் மட்டமானவை என்று சொல்ல வருகிறீர்கள். இல்லையா ?

                    இங்கு நீங்கள் ஒரு பெரிய தவறைச்செய்கிறீர்கள். கண்ணதாசன் கவிதைகளுக்காக பாரட்டாப்பட்டவர். சாரு கவிஞரல்ல. கண்ணதாசன் நாவல்கள் எழுதவில்லை. அப்படியே ஓரிரண்டு இருப்பினும் அவை படிக்கப்படவில்லை. பேசப்படவில்லை. எனவே அவர் கவிஞர் மட்டும்தான். எப்படி ஒரு கவிஞரின் படைப்புக்களையும் ஒரு நாவலாசிரியரின் படைப்புக்களையும் ஒப்பீடு செய்ய முடியும்.

                    நான் அவர்களை ஒப்பீடு அவர்களின் படைப்புக்களுக்காகன்று. ஒரு இலக்கியக்கோட்ப்பாட்டைச் சுட்டிக்காட்டவே. அதை மீண்டும் சொல்ல விரும்பவில்லை. இலக்கியக்கோட்பாடு என்பது பொதுவானது. எல்லா படைப்பாளிகளுக்கும் பொது. உலகமெங்கும் உள்ள எல்லா மொழிகளின் இலக்கியத்துக்கும் பொதுவானது.

                    சாருவைக் கவிஞனாக்கி கண்ணதாசன் என்ற கவிஞரோடு ஒப்பிட முனைந்தது திருத்தப்படவேண்டிய தவறு/

                    //கிக்குக்காகவும், நடைக்காகவும் படித்து புளகாங்கிதம் அடையக்கூடியவர்களுக்கு எழுதியவன் யாராக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் இதுதான் எலக்கிய மரபு என்று பேத்திக்கொண்டு திரியக் கூடாது. அது சரி, உங்களுக்கு படைப்பை மட்டும் தனியாகப் படித்து பரவசம் அடையும் பக்குவம் இருக்கே, பிறகு ஏன் படைப்பாளியின் சொந்த வாழ்க்கையை விமரிசித்தால் கோவம் வருது?////

                    கோபம் தாபமெல்லாம் கிடையாது. நான் சுதந்திரமானவன். எனக்கு அஜன்டா கிடையாது. எனக்கு எந்த எழுத்தாளனும் நடிகனும் அரசியல்வாதியும் ஹீரோ கிடையாது. சாரு ஃபேன் என்ற பாவனைப்பெயர் ஒரு நகைச்சுவையான சீண்டலே. சாருவின் எந்த நாவலையும் நான் படித்தது கிடையாது. இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட மனதில் இருத்தியபிறகே என்னைப்படிக்கவேண்டும்.

                    “கிக்குக்காகவும், நடைக்காகவும் படித்து புளகாங்கிதம் அடையக்கூடியவர்களுக்கு எழுதியவன் யாராக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் இதுதான் எலக்கிய மரபு என்று பேத்திக்கொண்டு திரியக் கூடாது” இங்கு போட்டதும் ஒரு தவறு.

                    “கிக்குக்காக நடைக்காகவும்” புளகாங்கிதம் சிலர் அடையலாம். அனைவரும் அவைகளுக்காகத்தான் படிக்கிறார்கள் என்று எப்படி முடிவு கட்டிவிட்டீர்கள்? எது இலக்கிய மரபு என்று உங்களுக்குத் தெரிந்தது? எங்கிருந்து அம்மரபைப் படித்துத் தெரிந்து கொண்டீர்கள்? அப்படியே உங்கள் சொந்தகற்பனையில் தெரிந்தாலும், அது என்ன மரபு?

                    இந்த கேள்விகளுக்கெல்லாம் நானே உங்கள் எண்ணங்களாக விடைகளை ஊகித்துக்கொள்ளலாம். உங்கள் மரபு, புதினங்கள் சமூகத்தில் உங்களுக்கு வழிவழியாகச் சொல்லப்பட்ட நீங்கள் உள்வாங்கி வாழும் வாழ்க்கை மரபுகளைப்போற்றும் பட்டயங்களாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவனுக்கு ஒருத்தியென்ற வாழ்க்கை மரபு உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. அம்மரபை மீறி, ஒரு எழுத்தாளர் ஒரு நாவல் எழுதிவிட்டால், அந்நாவல் இலக்கிய மரபை மீறிவிட்டது; அல்லது அந்நாவலை இலக்கிய மரபு என்போர் பேத்துகிறார்கள் என்று சொல்ல வருகிறீர்கள் இல்லையா?

                    நண்பரே நான் ஏற்கனவே சீனிவாசகனுக்குச் சொல்லிவிட்டேன். அதன்படி, இதுதான் இலக்கியம் என்றே கிடையாது. எதுவும் இலக்கியமாகலாம்.

                    உங்கள் மரபுகளை நார் நாறாகக்கிழித்துத் தொங்கப்போடுவது, அம்மரபுகளைப் போற்றிப்பூசனை செய்வது – இரு எதிர் மறைகளும் தனித்தனியாக, அல்லது ஒன்றோடொன்று விரவி படைக்கப்படுவதுவே இலக்கியமாகும்.

                    நான் இரண்டையுமே ஏற்றுக்கொள்ள உங்களால் ஏன் முடியவில்லை?

            • இலக்கியக் கோட்பாடு தனியா நிக்குமா? ஆசிரியன் செத்துவிட்டான், வாசகன் அவனது தனித்துவமான படிப்பு காரணமாக படைப்பை கட்டுடைப்பான்ன்னு ஏக்கப்பட்ட பின்னவீனத்துவ மேட்டர் இருக்கிற காலத்துல இன்னமும் க.நா.சு வாந்தி எடுத்ததையே சொல்லிக்கிட்டு, சார் கொஞ்சம் தற்கால இலக்கிய மேட்டரை படிங்க சார்?

              • நிற்கும். பின் நவீனத்துவம் என்பது ஒரு சிலரால். அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது இலக்கியத்தில் கிடையாது. மற்ற துறைகளில் வரலாம். தற்கால இலக்கியத்தைப் படித்தால், அதை ஏற்றுக்கொண்டே தீரவேண்டுமா ?

        • அடப்பாவி மனுசா, மெரினாவுல சுண்டல் விக்கிறது அவ்வளவு கேவலமாவா இருக்கு உங்களுக்கு? அந்த சிறுவருங்கிட்ட பேசிப்பாருயா, அவங்கெல்லாம் அன்றாடம் உழைச்சு வாழ்ற கூட்டம். அவுங்கள போய் இத்தனை வன்மாக பேசுறுதுததான் இதுவரை நீங்க படிச்ச இலக்கியத்தோட தரம்னா, அந்த இலக்கியம் நாசமா போகட்டும்.

          • ரியல் என்கவுண்டர்!

            என் வாழ்க்கை அதைவிட கீழான வாழ்க்கையிலிருந்தே தொடங்கியது. சுண்டல் விற்கும் பையமார்களுக்குக்கூட கூலியும் சாப்பாடும் இரவில் உறங்கவும் இடம் கிடைக்கும். எனக்கு கிடைக்கவில்லை. சென்னையிலும் பம்பாயிலும்.

            சுகவாசிகள் எனக்குச் சொல்கிறார்கள் வறுமையை இழிமையையும் பற்றி.

            எழுத்து வேறு. தனிநபர் வாழ்க்கை வேறு.

            • சுண்டல் விற்கும் வேலைக்குக் கூட ஜாதி வேண்டும். ஊர் வேண்டும். ஒரு முதலாளி அவர்கள் ஊர்க்காரர்களையும் அவர்கள் ஜாதிக்காரர்களையும்தான் வேலைக்கு வைத்துக்கொள்வான்.

              கம்யூனிசம் எழுதும் ஆசாமிகள் கனவுலகத்தில் வாழ்வது ஒரு சோகமான வேடிக்கை.

      • //தன் எண்ணத்தை எழுத்திலும் கொண்டுவருவது தவறா ?

        //

        புதினங்களைப் படித்துவிட்டுத்தான் விமர்சனம் எழுதவேண்டும். வந்த கூட்டம் அந்த் ஒரு புதினத்தின் வெளியீட்டுக்காக.

        இரசிகர்கள் வேறு; வாசகர்கள் வேறு. அக்கூட்டத்தில் இரசிகர்கள் இருக்கலாம். என்னைப்போன்ற வாசகர்களும் இருக்கலாம்.
        வினவு கட்டுரை எழுதியவருக்குச் சரியான சிந்தனைத் திறன் இல்லை. அவர் செய்வது வெறும் வார்தை ஜாலமே. ஆனால் எழுத்துத்திறன் இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டினோம்.

        • எழுத்துத் திறனை வைத்து என்ன செய்வது என்பதை அண்ணாச்சி விருப்பத்துக்கே விட்றலாம்.

      • //தன் எண்ணத்திற்கு நேர் எதிராக எழுதி ஊரை ஏமாற்றுவது சரியா ?

        //

        புதியதாக ஒரு புதினம் வெளியீட்டு விழா. அப்புதினமும் அவ்வாசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கையைப்போல அசிங்கமாக இருக்குமென எதிர்பார்ப்பது கற்றறிந்தொர் செயலன்று. அறியாக்குழந்தைகளில் தெரியா நடத்தை.

        வினவுவின் கட்டுரையே குழந்தைச்செயலைப்போன்றது.

        தனிநபர் நடத்தைக்கு முற்றிலும் மாறாக ஒரு எழுத்தாளர் எழத முடியும்.

        மாதங்களில் அவள் மார்கழி. பெண் ஒரு தெய்வம் என்றெல்லாம் எழுதிவிட்டு, ஊருக்கொரு வைப்பாட்டி வைத்துக்கொள்ள முடியும் என்று எத்தனை முறை சொல்வது பைரவன்?

        • மார்கழி, தெய்வம் என்று எந்த வைப்பாட்டியை சொல்றாருன்னு மனக்கண்ல வரிசை கட்டுதே சாரு ஃபேன் !!

          • எழுத்தாளர் என்ற பேரை வைத்துக்கொண்டு குழப்பமாக எழ்தினால் எப்படி? புரியவில்லையே !

            • புரியல்லைன்னா விட்றுங்க. மாலினிக்கே லேட்டாத்தான் புரிஞ்சுது.

              • என் வழி தனி. என் வழிக்கு வராதீர்கள் என்று சொல்கிறிர்கள். அப்படின்னா ரொம்பச் சரி.

                இப்படிப்பட்ட ஜகா வாங்குதல் வினவு தளத்தின் பின்னூட்ட விவாதங்களைச் சீப்பாக்குகிறது.

                • // இப்படிப்பட்ட ஜகா வாங்குதல் வினவு தளத்தின் பின்னூட்ட விவாதங்களைச் சீப்பாக்குகிறது. //

                  புரியாத பச்சப் புள்ளகிட்ட என்னத்த விவாதிக்க.

        • தம்பி. கொஞ்சம் இலக்கியம் படிச்சுட்டு வா. மாசத்தில மார்கழி வசனம் ஒன்னும் அந்த கழிசடையோட சொந்த வாந்தியில்ல. பகவத்கீதையிங்கிற சாக்கடையில விழுந்து எதையோ தின்னுட்டு எடுத்த வாந்தி. (பகவத்கீதை 10:35)

      • பைரவன், சாரு ஃபேன் எல்லாரும் ஒரே கம்பெனி ஆர்டிஸ்ட்டுங்குறா மாதிரி ஒரு டவுட்டு, உண்மையா?

        • இதுக்கு முன்னால மன்னார் & கம்பேனியிலதானுங்க ’சோலி’. ஆர்டிஸ்ட் இல்லீங்க, ’மானேஜர்’. வீட்ல ஆர்டிஸ்ட்டாத்தான் இருந்தேன், எப்டி கண்டுபுடிச்சீங்க??

    • நீ தண்ணி அடி காசு கொடுத்துட்டு விபச்சாரியிடம் போ அது தனி விஷயம் ரசிக வட்டத்தில் ஒரு இளம் பெண்ணை எழுத்தால் காம வலை வீசினால் உன் குடும்ப பெண்களும் தானே காயப்படுவார்கள்?

      • ஒரு இலக்கியக்கூட்டதுக்கும் விபச்சாரியிடம் போவதற்கும் என்ன தொடர்பு கைத்தான்?

        • நீங்கள் இன்னும் அடிப்படை விஷயத்துக்கே வரவில்லை சாறு fan பொம்பிளை பொறுக்கி என்று பொதுவாக சொல்லிவிட்டு போகாதீர்கள்.கண்ணதாசன் அவருடைய ரசிகைகளிடமா அப்படி நடந்துகொண்டார்?வனவாசத்தில் மிக மிக தெளிவாக அவர் விலைமகளிருடன் உள்ள தொடர்புகளைதான் எழுதியிருக்கிறார்.அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அவரின் மதுப்பழக்கதையும் அவர் மறைக்கவில்லை.

          • கண்ணதாசன் என்பது ஒரு உவமைக்குத்தான் இங்கு எடுத்தாளப்படுகிறது.” கண்ணதாசனைப்போல” அவரின் வாழ்க்கையை வரிக்குவரி படித்து அஃது உண்மையா பொய்யா என்று பேச அன்று.

            கண்ணதாசன் என்ற உவமை பிடிக்கவில்லையென்றால் ஆங்கில ஆசிரியர்கள்; அல்லது ப்ரென்சு ஆசிர்யர்களில் எவரையாவது பற்றிப்பேசலாம். அப்படி நான் பேசிவிட்டால், படிப்பவ்ர்களில் சிலர் அய்யோ ரொம்ப மேதாவித்தனத்தைக்காட்டுகிறான் என்பார்கள்.

            அடிப்படைக்கருத்தை மட்டும் நுகருங்கள்.

        • இலக்கிய மீட்டிங்குக்கு போறது புண்ணியம், உசத்தி, சுத்தபத்தம், விபச்சாரிகிட்ட போறது பாவம், அசுத்தம், பொறுக்கித்தனம்னு நீங்க எண்ணுறது கம்பன் காலத்துல இருந்து இருக்குற மேட்டராச்சே? கெரக்டா சொல்றதா இருந்தா, எவன் கற்பு குறித்து புலம்புறானோ அவன்தான் விபச்சாரத்தை ஆதரிக்கிறவனா இருக்கான். அது படி நீங்க சொலறது அந்த நாணயத்தின் இருபக்கம்தான். ரெண்டும் ஒண்ணுதான்.
          அடுத்து இலக்கிய கூட்டத்திற்கும், விபச்சாரிகிட்ட போறதுக்கும் தொடர்பில்லைன்னு நீங்க சொல்றது அக்ரகாரத்து புனிதம்தான்.

          • This appears to be out of context. Discussion will drag the subject far away from the context of the essay by annachi. Let off.

            You can put up a separate essay on the misconduct of Tamil authors, or Charu in particular. where I will explain to you.

  4. வேணாம், வேணாம் ன்னுட்டு ஏழு ஆப்ப களி தின்னானாம் ஒருத்தன், இந்த சொலவட போல, சாணி அடிக்கிறேனுட்டு அங்க எல்லாத்தையும் ஒன்னு விடாம பாத்துட்டு இங்க வந்து பேண்டு வச்சிட்டீய……..நாத்தம் தாங்கலண்ணோவ் !

  5. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் வேறு ஒரு காட்சியை எதிர்பார்த்து போயிருந்தேன். சாரு ஒரு பெண்ணை சாட்டிங்கில் மிக கேவலமாக, பொறுக்கித்தனமாக நடந்த கொண்டது, ஆதாரபூர்வமாக பலரும் அறிந்த செய்தி. அந்த நிகழ்வுக்கு பிறகு, பொது மேடையில் இப்பொழுது தான் வருகிறார். ஆகையால், சில பெண்களோ அல்லது பெண்கள் அமைப்போ அல்லது சில சமூக அக்கறை கொண்ட மக்களோ வந்து, செய்த செயலுக்கு ‘தகுந்த மரியாதை செலுத்துவார்கள்” என எதிர்பார்த்து போயிருந்தேன். குறைந்தபட்சம் சில செருப்புகளாவது பரிசாக தரப்படும்! என தமிழ்மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஏமாற்றிவிட்டார்கள். சாருவே சொல்வது போல, ஆயிரம் பேருக்குள் தான் வாசிக்கிறார்கள். அதைவிட முக்கிய விசயம். மக்கள் எந்த கேவலமான செயலையும், விரைவில் மறந்துவிடுகிறார்கள் என்பது!

    சாருவுக்கு தன் புத்தகம் 10 லட்சம் விற்க வேண்டாம், 1 லட்சம் கூட விற்கவில்லையே என தீராக்கவலை. எனக்கு பொறுக்கித்தனத்தை கண்டித்து, மரியாதை தரவில்லையே என்ற கவலை. அவரவர்களுக்கு அவரவர் கவலை. அடுத்த மேடையிலாவது ‘தகுந்த மரியாதையை’ தருவார்கள் என்ற நம்பிக்கையில், சோகமாய் வீட்டிற்கு நடையை கட்டினேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!

    http://socratesjr2007.blogspot.com/2011/12/blog-post_06.html

  6. சாணி பின்நவீனத்துவ அருஞ்சொற்பொருள் பத்து

    இலக்கிய உலகம்- சொம்பு தூக்குவோர்களின் கூட்டம்

    அதிர்வலை – செருப்படி

    கலகக்காரன் – பெண்களிடம் வக்கிரமாய் பேசி செருப்படி வாங்குபவன்

    ஆட்டோபிக்சன் – எத்தனை மொள்ளமாரித்தனம் செய்தாலும் வீட்டுக்கு ஆட்டோ வராது எனும் தைரியத்தில் எழுதப்படுவது

    எக்சல்- காத்தால வெடிக்கிற அடிவயத்து கேசு(நன்றி- வினவு)

    வாசகன் – சொம்பு தூக்குபவன்

    எழுத்தாளன் – குப்பி காட்டுபவன்

    நாவல் – சரோஜாதேவி கதை

    சிறப்புரை- சுய சொறிதல்

    மதியாதோர் – தமிழக மக்கள்

    மதிப்போர் – மலையாள,பிரெஞ்ச்,இலத்தீன் அமெரிக்க மக்கள்

  7. சரோஜாதேவி புத்தக ரசிகன் – உங்கள் பதிலை ரசித்தேன். வினவின் எழுத்துநடை கவலையை மறக்க வைக்கிறது.
    நன்கு ரசித்துச் சிரித்தேன்.
    ஒரே கவலை இவங்கள் வாழ்வு இப்படி சிரிப்பாகச் சிரிக்கிறதே!! இதுக்கா இந்த எடுப்பெடுத்தாங்க…தூ

  8. வர வர வினாவை பாத்தா பாவமா இருக்கு!அவுரு முன்னேருகிறாரா?உடனே கண்டன கட்டுரை அஜித் முன்னேருகிறாரா?உடனே ஒரு கிண்டல் கட்டுரை!பாவம்யா நீரு!நல்ல ஒரு கிளாஸ் ஐஸ் வாட்டர் குடிங்க!

    • *** வர வர வினாவை பாத்தா பாவமா இருக்கு! ***

      இப்பதானா பாவமா இருக்கு? புரட்சி என்ற ஒன்று எப்போதும் வரப்போவதில்லை என்ற சுடுகிற உண்மையும், ‘வித்தவுட்டில்’ பயணம் செய்வதையெல்லாம் ‘போர்க்குணமாக’ காட்டி ஒப்பேற்ற வேண்டியிருக்கும் அவலமும் தரும் மனச்சோர்வு கொஞ்சநஞ்சமல்ல…விட்டுத்தள்ளுங்க பார்வையாளன்.

  9. ரகசியமா வந்து விழாவை கண்டுகளித்த வினவுக்கு நன்றிகள்!உங்க நண்பர்களையும் உடன் கூட்டி வந்திருக்கலாமே!

    • சாரு எழுதுறது பிடிக்குதோ இல்லையோ – ஒன்ன வினவு ஒத்துக்கணும்…சபரிமலையோ, சந்நியாசி மடமோ, நெம். 10 டௌனிங் தெருவோ சாரு முக்காடு போட்டுக்கொண்டு போவதில்லை. தைரியமாக, வெளிப்படையாகவே போகிறார்.

      • சோவும், சு.சாமியும், ஜெயா மாமியும் கூடத்தான் முக்காடு போட்டுக்கிட்டு போறதில்லை. அல்லாம் ஒபனாத்தான் செய்யுராங்க! ஹிட்லரும் ஓப்பன்தான். சாநியும் ஓப்பன்தான். ஹிட்லரு அரசியல் பாசிஸ்ட்டுன்னா, சாநி பாசிஸ்ட்டு இலக்கிய பொறுக்கி, ரெண்டுக்கும் என்னா வேறுபாடு? அல்லாம் ஒண்ணுதான்.

      • முக்காடு போடாத சாரு விவகாரமான அந்த சாட்டிங் -ல் உரையாடல் அனைத்தையும் அழித்து விடுமாறு அந்த பெண்ணிடம் கெஞ்சுவது ஏன்.

  10. //அவுரு முன்னேருகிறாரா?உடனே கண்டன கட்டுரை //

    இது சாருவில் இயல்பாச்சே!- ஜெமோவைக் கனடாவுக்கு அழைத்ததற்கு அடித்த கும்பியை நீங்கள் வாசிக்கவில்லையா?
    ரசிகன் ரஜனி, கமல், விஜய் கட்டவுட்டுக்கு பால் ஊத்துகிறானாம், இவர் குத்தி முறிந்தாரே ஆனால் இவர் தேகம் கட்டவுட்டுக்கு பியர் ஊத்தக் குதூகலித்தது வேறு.
    நாஞ்சில் நாடன் – சாகித்திய அகதமி விருதை வாங்கக் கூடாதெனக் கொக்கரித்தது; அன்பா?
    அய்யா, சாரு நான் பச்சப்பிள்ளை என்று கூறி எல்லாக் கசடும் ஏமாற்றும் உள்ள சாதாரண மனிதனே!
    கண்னதாசன் இவர் போன்றோருக்குச் சொன்னது தான்!
    மூடனுக்கும் மனிதனைப்போல் முகம் இருக்குது, அதை வைத்துச் சாரு மோசம், நாசம் எல்லாம் செய்யும்
    சாதாரண பிறவியே!

  11. ரொம்ப நாளா ஒரு சந்தேகம்… மாமல்லனை ஏன் மச்சி சார் அப்படின்னு எழுதறீங்க? யாராவது சொல்லுங்க ப்ளீஸ்..தலை வெடிச்சிடும்போல இருக்கு.

  12. இத வுட தி.மு.க மீட்டிங்குல குமரி முத்துவுக்கு ஆயிரக்கணக்குல கூட்டம் சேருமேடே? அங்கன போனா உருப்படியா நாலு கருத்தையும், காமடியையும் கேட்டுகிணு ராத்திரி அம்சமா உறங்கலாமடே?—-அதுஅதுக்கும் கொடுத்து வச்சருக்கனுமுங்கோ!

    • கூட்டம் பலவேறிடங்களில் பலருக்காக கூடுகிறது. சாலையோரத்தில் சிட்டுக்குருவி லேகியம் என்ச்சொல்லி ஊரை ஏமாற்றி வணிகம் செய்பவனுக்கும் கூடுகிறது. அரசியலவாதியின் பொய்களைக்கேட் கவும் கூடுகிறது.

      கூட்டத்தின் குணம்,நோக்கம் இடத்துக்கு இடம் மாறும்.

      இவ்விழாவுக்கு வந்த கூட்டத்தின் நோக்கம், குணம், ஒரு அரசியல நகைச்சுவையாளருக்கு வந்த கூட்டமும் ஒன்றா ?

      ஷகிலாவின் படங்களுக்கும் சதயஜித்ரேவ் படங்களுக்கும் வரும் கூட்டத்தின் குணம் ஒன்றா?

      • சாநி கூட்டத்த ‘ஷகீலா’ கூட்டம்னு சொல்றீங்களா இல்ல ‘சத்யஜித்ரே’ கூட்டம்னு சொல்றீங்களா? நெசமாலுமே புரியல.

        • அவரவர் பார்வை அவரவருக்கு. உங்களுக்கு எப்படித் தோனுதோ அப்படி எடுத்துக்கொள்ளலாம்.
          வெஜிட்டேரியன் ஒரு மிலிடரி ஓட்டலுக்கும், நான் வெஜிட்டேரியன் ஒரு உடுப்பி ஓட்டலுக்கும் போய், ஓட்டல்காரனைத் எனக்கு ஏன் இதைப்போட்டாய் எனத்திட்டினால் சிரிப்புத்தானே? அதேதான் இங்கும். அண்ணாச்சி மளிகைக்கடையில் இருந்து போட்ட விலைக்கு மேலே இலாபம் பார்க்கும் வியாபாரி. எப்படி கொள்ளை இலாபம் அடிப்பது? என்று எழுதினால் ரசிக்கலாம். தனக்கு கிஞ்சித்தும் தொடர்பில்லா இலக்கியக்கூட்டத்துக்குப் போய் வந்து வயிற்றெரிச்சல் கட்டுரையைப் போட்டால் பரிதாபம்தான் படலாம்.
          யார் யார் எதை எதை செய்யவேண்டும் என ஒரு விவஸ்தை இருக்குதுவே!

          • இலக்கியம்ன்னா என்ன? சமையல் குறிப்பு,மளிகை கடை லிஸ்ட்டு,ரோடு மேப்பு,ஐய்யப்ப சரணம்,ஜோசிய எந்திரம் இதுக்கெல்லாம் பேர் இலக்கியமா?

            • சீனிவாசன்!

              அடைப்படைக்கேள்விகளை இங்கா கேட்பது? பள்ளி ஆசிரியர்கள்; கல்லூரி ஆசிரியர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.

              இலக்கியம் என்ன என்பதை ஓரளவுக்கு நீங்கள் எழுதியவற்றை வைத்தே சொல்லலாம்:

              வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் என்பதைப்போல, ஒரு தேர்ந்த இலக்கியவாதி “சமையல் குறிப்பு,மளிகை கடை லிஸ்ட்டு,ரோடு மேப்பு,ஐய்யப்ப சரணம்,ஜோசிய எந்திரம்” அனைத்தையும் விரவி ஒரு புதினமோ கவிதையோ நாடகமோ படைக்க முடியும். இலக்கியப்படைப்புக்கு எது வேண்டும் எது வேண்டாமென்ற எல்லையில்லை. எல்லாமே இலக்கியமாகும். கழுதை, குதிரை, அழுக்கு, சுத்தம், பயங்கரம், அமைதி, அன்பு, குரோதம், முள், மலர் என்றெண்ணிலடங்கா எதிர்மறைகளையும் நேர்மறைகளையும் தன்னுள் அடக்கி அவற்றுள் புதுப்புது நோக்குகளையும் அன்னோக்குகளைத் தெரியும் இன்பமும், அல்லது அன்னோக்குகள் வழியாக சில தெரியா உண்மைகளையும் புரியவைப்பதும் இலக்கியம். இலக்கியத்தின் எல்லை எங்கு தொடங்குகிறது எங்கு முடியும் என்று எவராலும் சொல்ல முடியாது மனிதனின் மனம் சிந்திக்கும் திறனையிழக்கா வரையில் அதாவது மனித குலம் இருக்கும் வரை இலக்கியம் இருக்கும் விதவிதமாக. இதுதான் இலக்கியம் எனவும் சொல்லமுடியாது. இதுவே சிறந்தது எனவும் இறுதிச் சொல் இல்லை. கிட்டத்தட்ட எல்லா கலைப்படைப்புக்களுமே இப்படித்தான். கலைக்கு எல்லையில்லை. ஓவியன் இதைத்தான் வரைய வேண்டுமென இருக்கிறதா ? இல்லவே இல்லை. இப்படித்தான் வரைய வேண்டுமென இருக்கிறதா ? இல்லவே இல்லை. இப்படி ‘இல்லைகளே’ கலைப்படைப்புக்களை மனிதனின் உயரிய உணர்ச்சிகளில் ஒன்றாக ஆக்குகிறது. சால்வடார் டாலியின் ஓவியங்கள் நீங்கள் சொன்ன ஒன்றுக்கொன்றொவ்வா பொருட்களையும் காட்சிகளையும் விரவிப்போட்டு வரைந்த ஓவியங்கள் ‘சர்ரியலிச’ ஓவியங்கள் என்று உலகத்துக் கலைஞர்களால் அமோகமாக வரவேற்கப்பட்டது. இதைப்போல பிக்காசோவின் க்யுபிசம் ஓவியங்கள். புதிய புதிய கருத்துக்கள், புதிய புதிய முறைகள், புதிய புதிய எண்ணங்கள். இவைகளின் வடிவங்களே கலைகள். புதுமைகள் நீர்த்துப்போனால் இலக்கியமோ கலைகளோ படுத்துவிடும்.

              இப்படி ஒரு மக்களின் பண்பாட்டை வளப்படுத்தும் கருவிகளில் ஒன்றான இலக்கியத்தை என்னாலோ உங்களாலோ வினவாலோ படைக்கமுடியாது. எனவே அப்படிச்செய்வோரை ஆதரிப்போம். உதவியில்லாவிட்டாலும் உபத்திரமில்லாமிலிருப்போம்.

              • இலக்கியயம்னா என்னண்ணு இப்புடி அலுப்பூட்டுற கிளாஸ் எடுக்கிற நீங்க சரோஜா தேவிய மட்டும் இலக்கியம்னு ஏத்துக்கமாட்டேங்குறீங்க? அத ஏத்துக்கிட்டாத்தான் உங்க லெக்சர் சரின்னு வரும்.

                சர்ரியலிச படங்களை நம்மூர் கோடீஸ்வர சேட்டு, அம்பானிங்கதான் அவங்க சமையலறையில அழகுக்குனு மாட்டி வச்சுருக்கான்ங்க. குடிசையில வாழுற குப்பனும் சுப்பனும் அதை மாட்டல, ஏன்னா அவுங்க இலக்கிய வாசம் தெரியாத மந்தைங்க. இதான நீங்க சொல்ற பாயிண்ட சாநி பேன்?

                எதிர்மறையையும், நேர்மைறையும் கலந்து புது நோக்கில் வரது இலக்கியம்னா பாபர் மசூதிய இடிச்சது இந்துவின் பெருமைன்னு ஒருத்தன் நாவல் எழுதினா கொண்டாடுவீங்களா?

                5 வயது சிறுமியை 50 வயது கிழவன் வன்புணர்ச்சி செய்ஞ்சதை ஒருத்தன் காமத்தின் காவியம்னு கவிதை வடிச்சா இரசிப்பிங்களா?

                இது இரண்டுக்கும் நோன்னா உங்க லெக்சர் உங்களையே காறித்துப்பும். துடைச்சுக்குவீங்களா?

                • விடிய விடிய இராமாயணமாம். முடிந்தபின், சீதைக்கு இராமன் யார் என்று கேட்டால் சித்தப்பா என்றானாம். அதைப்போலத்தான் ரியல் என்கவுன்டரும் சொல்கிறார்.

                  சரோஜாதேவி புத்தகம் என்று சொல்வது போர்னாகிராபி.

                  அப்புத்தகங்களில் விவரிக்கப்படும் போர்னாகிராபி இலக்கியம் ஆகாது. இலக்கியம் என்பது மறைத்து வைத்துப்படிக்கக்கூடிய புத்தகம் கிடையாது. அதே வேளையில் ஒரு இலக்கியப்படைப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏற்றுக்கொண்டாலே மட்டுமே இலக்கியம் என்று சொல்லமுடியாது.

                  பலருக்கும் பலதரப்பட்ட வகையில் இலக்கியம் புனையப்படுகிறது. அஃதாவது இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டது. அப்படி இருந்தாலே ஒரு மொழியில் இலக்கியம் ஆரோக்கியமானது என்பார்கள்.

                  இப்போது போர்னாகிராஃபிக்கு வருவோம். எது போர்னாகிராஃபி என்பது கலாச்சாரத்துக் கலாச்சாரம் மாறுபடும். ஒரே நாட்டில் ஒருகாலத்தில் ஏற்றுக்கொள்ள முடியா போர்னாகிராஃபி, மக்களால் விரும்பா, அரசால் தடுக்கப்பட்ட போர்னாகிராபியுடன் கூடிய நாவல்கள் இன்று இலக்கியம் என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் படித்து ஆராயப்படுகிறது. எ.கா டி.ஹைச். லாரண்சின் ‘லேடி சார்டலிஸ் ல்வர்ஸ்”

                  சரோஜா தேவி புத்தகங்கள் ஏன் இலக்கிய ஆகவில்லை? ஒரு சிலவற்றை நான் படித்திருக்கிறேன். ஆராய்ந்தும் இருக்கிறேன். அந்த எழுத்தாளர்களுகளுக்கு கற்பனை வளமில்லை. நடை இலக்கியத்தரத்தில் இல்லை. கதை சொல்லும் போக்கு, மாந்தர்கள் இவர்கள் ஒரு சோம்பேறித்தனமான, அல்லது குழந்தைத்தனமான கற்பனையைக்காட்டுகின்றன. அதற்குக் காரணம் எழுத்தாளர்கள் குறிவைக்கும் வாசகர்கள் அவற்றை விரும்பமாட்டார்கள் என்ற உறுதியான முடிபே.

                  தமிழ் மசாலப்படங்களுகென்றே இரசிகர்கள் உண்டல்லவா? அவர்களுக்கென்றே தயாரிப்பாளர்களும் நடிகர்களும் உண்டல்லவா? அதே சமயம் , அம்மசாலாவையும் நல்ல சினிமாத்தரத்துக்கும் கொண்டுவரமுடியுமில்லையா? மணிரத்தினம், பாரதி ராஜா படங்களைச்சொல்லலாம்.

                  அதே போல போர்னோகிராஃபியையும் இலக்கியமாக்க முடியும். அது ஒரு தேர்ந்த படைப்பாளியால் மட்டுமே முடியும. அது மேலை நாட்டில் முடிந்தது. தமிழகத்தில் முடிவது கடினம்தான். நம் வாழ்க்கை மரபுகள் இன்றும் பழமையானவையே. இலக்கியத்தரத்துடன் எழுதப்பட்டாலும்போர்னோகிராபியை இலக்கியமாக ஏற்றுக்கொள்ள கலாச்சார முதிர்ச்சி நம்மிடம் இல்லை.

              • சால்வடார் டாலி?!?!?! எல்லையற்ற​ இலக்கிய​ மொக்கை?!?!?! இது சாரு fஆனா? இல்லை சாருவே கை(சை)த்தான் fஆனா வந்து பின்னூட்டம் போடுறாரா?

              • பண்பாட்டை செழுமைப் படுத்துவதே இலக்கியப்பணி.மாற்றுக்கருத்தில்லை .சா.நி.கதைகள் அப்படியானவையா.குடி,விபச்சாரம்,என ஆபாசமாக எழுதும் அவரது எழுத்துக்கள் இலக்கியம் என்றால் தமிழுக்கு இதைவிட கூடுதலாக அநீதி இழைக்க முடியாது.

                http://www.tamilstory.in/?p=100 இந்த சுட்டியில்

                இப்போதெல்லாம் ஏன் சிறுகதைகள் எழுதுவதில்லை என்று அவர் சொல்லியிருக்கும் விளக்கத்தை படித்துவிட்டு நண்பர்கள் உறவினர்களுடன் குறிப்பாக விட்டுக்கார அம்மாவுடன் விவாதித்து பார்க்கவும்.உங்கள் பண்பாடு மேலும் ”செழுமை”அடையும்.

                • First sentence is absolute nonsense.

                  ஏனென்றால்,

                  ஒரு மக்களின் பண்பாட்டை நல்வழிப்படுத்துதல் இலக்கியத்தின் பொறுப்பன்று. அது குழந்தை கதைகளுக்கு மட்டும்தான். அக்கதைகள் இலக்கியமாகா.

                  இலக்கியம் ஒழுக்கத்தைப் போதிக்கவும் செய்யலாம் போதிக்காமலும் இருக்கலாம். அதற்கென்று கடப்பாடு ஒன்றுமில்லை. படிக்கும் சுவை மட்டுமே இலக்கியத்துக்குப் போதும். அச்சுவை நடையாலும் கருத்தாலும் அல்லது இரண்டாலும் வரலாம். சுவையில்லாவிட்டால் அஃது இலக்கியமேயில்லை.

                  தேவாரம், திருவாசகம் தெய்வப்பாடல்கள். மக்களை நலவழிப்படுத்த.

                  இங்கு நீங்கள் உய்த்துணர வேண்டிய உண்மையென்றால், அவை இலக்கியம் என தமிழ் கூறும் நல்லுலகிலால் – அதாவது தமிழ்க் கிருத்துவர் தமிழ் இசுலாமியர் முதற்கொண்டு – ஏற்றுக்கொள்ளப்படுவது, அவற்றில் உள்ள மனதிற்கினிய தமிழாலே அன்றி, சிவனைப்பற்றி, முருகனைப்ப்ற்றிப் போற்றுகிறது; மக்களின் தேவ ப்ரீதியை வளர்க்கிறது என்பதற்காக.

                  எனவேதான், மு.மு. இசுமாயில் இராமாயணத்தைப்பற்றி நிறைய கட்டுரைகளை எழுதினார்; மேடையிலும் பேசினார்.

                  Teaching moral lesson is not the business of a writer. At the same time, there is no objection if you benefit from the morals inferred from a fiction.

                  இவ்வளவு எழுதியும் இலக்கியம் என்றால் என்னவென்று புரியவில்லை என்றால் வியப்பாகத்தானிருக்கிறது.

                  • \\First sentence is absolute nonsense.//

                    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நிரூபிக்கிறீர்கள்,எதிராளியை திட்டுவதாக நினைத்துக்கொண்டு ஆத்திரத்தில் தன்னைத்தானே திட்டிக் கொள்கிறீர்கள்.

                    \\மக்களின் பண்பாட்டை வளப்படுத்தும் கருவிகளில் ஒன்றான இலக்கியத்தை என்னாலோ உங்களாலோ வினவாலோ படைக்கமுடியாது. எனவே அப்படிச்செய்வோரை ஆதரிப்போம். உதவியில்லாவிட்டாலும் உபத்திரமில்லாமிலிருப்போம்.//

                    இது நீங்கள் எழுதியது.அதைத்தான் நான் சுருக்கமாக \\பண்பாட்டை செழுமைப் படுத்துவதே இலக்கியப்பணி.மாற்றுக்கருத்தில்லை // என்று குறிப்பிட்டிருக்கிறேன்.ஆகவே யார் எழுதுவது ”nonsense”.

          • ஓ நீங்கதான் ஜோ அமலனா, வேவ் லென்த் கரெக்டா மேச்சாகுது சார்!

            உடுப்பி ஓட்டல் உசத்தி, முனியாண்டி விலாஸ் தீண்டத்தகாததுன்னு இருக்குற விசயம்தான முக்கியம் அமலன் சார்.

            பள்ளன் பறையனெல்லாம் அக்ரகாரத்துக்குள்ள வரக்கூடான்னு இந்த 21ம் செஞ்சுரியிலும் உங்கள மாதிரி ஆளுங்க பேசுறது ஆச்சரியமில்ல.யார் எதை செய்யனும்னு விவஸ்தை இருக்கணும்கிறது, சக்கிலப் பய ஐ.ஏ.எஸ் ஆபிசரா வரலாமான்னு உங்கவா தெனாவெட்டோடு கேட்கிற மாதிரியே இருக்கு.

            வெவ் லென்த் கரெக்டா மேச்சாகுது அமலன் சார்வாள்!

          • // அண்ணாச்சி மளிகைக்கடையில் இருந்து போட்ட விலைக்கு மேலே இலாபம் பார்க்கும் வியாபாரி. எப்படி கொள்ளை இலாபம் அடிப்பது? என்று எழுதினால் ரசிக்கலாம். தனக்கு கிஞ்சித்தும் தொடர்பில்லா இலக்கியக்கூட்டத்துக்குப் போய் வந்து வயிற்றெரிச்சல் கட்டுரையைப் போட்டால் பரிதாபம்தான் படலாம்.
            யார் யார் எதை எதை செய்யவேண்டும் என ஒரு விவஸ்தை இருக்குதுவே! //

            கன்னா பின்னானு உளறாதீங்க சாரு ஃபேன் சாரே.

      • குமரி முத்து கூட்டத்துக்கு போனா இன்னின்ன மேட்டர் கேட்டனே, தெரிஞ்சுகிட்டேன், ரசிச்சேன்னு சொல்ல்லாம், சாநி கூட்டத்துல அப்படி ஒண்ணுபுதுசா, கரெக்டா கத்துகிட்டேன்னு ஒண்ணு சொல்லுங்களேன்

        ஷகிலா படத்துக்கு வர கூட்டத்தின் குணம் வேறு, சத்யஜித்ரே படத்திற்கு வர்ர கூட்டம் வேறன்னு பாகுபாடு பிரிக்கிறது இலக்கிய பாசிசம், ஒண்ணு உசத்தி,ஒண்ணு தாழந்ந்ததுண்டு சொல்றது தப்புன்னு பின்நவீனவத்துவம் சொல்றது. அம்பிக்கு தெரியாதா? இன்னும் நீங்க அக்ரகாரத்தையே தாண்டலை

  13. சாருவுக்கு தமிழகத்தில் கிடைக்கும் பிரபல அந்தஸ்து சிலரால் திட்டமிட்டு செய்யப்பட்டது. ஜெயமோஹனை ஆழ்மனதில் வெறுக்கும் மனுஷ்ய புத்திரன் போன்றோர் நேரடியாக ஒரு எதிர் நடவடிக்கையை தவிர்க்க சாரு என்ற ஒன்றுமில்லாத நபரை தூக்கி விட்டார்கள். எஸ்.எஸ்.சந்திரனை வைத்து கருணாநிதி பற்றி கேவலமாக பேச விட்டு மேடையில் குலுங்கி, குலுங்கி சிரிக்கும் ஜெயலலிதாவின் கிளுகிளு ரசிப்பை ஒத்தது சாருவை ரசித்த மனுஷ்ய புத்திரனின் செயல். இதற்காக சாருவுக்கு கலகக்கார பரிவட்டத்தை கட்டிவிட்டார். மற்றையோர் பேச தயங்கும் விஷயத்தை துணிச்சலாக பேசும் தைரியசாலி என்ற பம்மாத்து வேற சாருவுக்கு. உயிர்மையின் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார் சாரு. தமிழ் நாடு காங்கிரஸ் கோஷ்டிகளை விட கேவலமானது நமது இலக்கிய கோஷ்டிகள். நேற்று ஜெமோ ஆளாக கருதப்பட்டவன் இன்று மனுஷ்யபுத்திரன் ஆளாகவும், நாளை சாரு ஆளாகவும் பச்சோந்தித்தனம் கட்டுவதற்கு ஒரு இலக்கிய கொள்கையும், வெங்காயமும் இருப்பதில்லை. ஜெமோ விடமிருந்து தன்னை விடுவித்து கொண்டு பசுமை நிலத்தை தேடி அலைந்த ஒரு ‘ஆட்டுக் குட்டி’ மனுஷ்ய புத்திரனிடம் தஞ்சம் அடைந்தது. துரோகத்தின் ஆற்றாமையால் வெம்மிய ஜெமோ எழுதிய கட்டுரை இது. http://www.jeyamohan.in/?p=7081 .

    இன்னும் கூர்மையான மொழியில் இக்கட்டுரை அமைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இது ஏதோ வினாவிற்கு இலக்கியம் தெரியாது என்று சாரு கும்பல் பீற்றி திரிய பயன்படத்தக்க வகையில் இருப்பதாக தோன்றுகிறது.

    • சுகதேவ்

      எழுதுற போக்குல ஒண்ணு தப்பா சொல்லீட்டீங்க, சாநி கும்பலுக்கு இலக்கியம்னா தெரியும் கிற மாதிரி நீங்க கருதறது தப்பு. தெரியும்னா ஏதாச்சும் ஆதாரம் கொடுங்களேன்.

      • ரியல்,

        சாரு கும்பலுக்கு என்ன இலக்கியம் தெரியும் என்பதற்கு நான் தனியாக ஏன் ஆதாரம் காட்ட விரும்புகிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கு சாரு அபிமானி ஒருவரின் கருத்துக்களில் அதனை பார்க்கலாமே. என்னுடைய விமர்சனம் அக்கட்டுரையின் மொழியும், தரத்தையும் பற்றியதே. நிறைய வார்த்தைகள் எனக்கு புரியவில்லை. படித்து முடித்த பிறகும் அக்கட்டுரையின் கருத்தாக எதுவும் எனக்கு நினைவில் இல்லை. மேற்கொண்டு அதனை படிக்கவும் ஆர்வமில்லை.மற்றபடி, படைப்பாளியின் எழுத்தை மட்டும் பார்; படைப்பாளி என்ற தனி மனிதனைப் பார்க்காதே என்பதில் உடன்பாடு இல்லை. இந்த கருத்து எனக்கு தோழர்கள் மூலம் கிட்டியதே.

  14. சாரு நிவேதிதா!

    சுருக்கமாக, ‘சாரு‘ என வாசகர்களாலும், மீடியாவிலும் அழைக்கப்படுபவர்..அதைவிட்டு விட்டு வேண்டுமென்றே ‘சாநி’ என்று அழைத்து அவரை அசிங்கப்படுத்திவிட்டதாக அற்ப திருப்திப்பட்டுக்கொள்ளும் வினவின் அல்லக்கை காளமேகத்துக்கு…நி -க்கும், னி-க்கும் வித்தியாசம் கூடத்தெரியவில்லை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?!

    • ஜெயமோகன்.

      சுருக்கமாக, ‘ஜெமோ‘ என வாசகர்களாலும், மீடியாவிலும் அழைக்கப்படுபவர்..அதைவிட்டு விட்டு வேண்டுமென்றே ‘உ. த. எ’, ‘உத்தம தமிழ் எழுத்தாளர்’ என்று அழைத்து அவரை அசிங்கப்படுத்திவிட்டதாக அற்ப திருப்திப்பட்டுக்கொள்ளும் சாநிக்கும், சாநியை மூஞ்சியில் பூசிக்கொள்கிற சோனிப் பயல்களுக்கும் இதை கேட்கிற அருகதை இருக்கா?

      • அண்ணே அந்த அடிப்பொடிகள் உ.த.எ 2 ன்னு சொல்றாங்கோ!அது யாரு?ஊரில் உள்ள எழுத்தாளன் எல்லாம் முட்டாள்!அய்யா சாரு மட்டுமே புத்திசாலி!ஐயோ!

      • /// ‘உத்தம தமிழ் எழுத்தாளர்’ ///

        இதுல என்னங்கண்ணே அசிங்கப்படுத்தல் இருக்கு?! புரியலையே?

  15. மாமாவின் அல்லக்கைகள் விரைவில் இங்கே படைஎடுப்பர்!வினவு எச்சரிக்கை!

  16. @அனானி

    //ரொம்ப நாளா ஒரு சந்தேகம்… மாமல்லனை ஏன் மச்சி சார் அப்படின்னு எழுதறீங்க? யாராவது சொல்லுங்க ப்ளீஸ்..தலை வெடிச்சிடும்போல இருக்கு.//

    ’யார் பெத்த பிள்ளையோ’ யான, “மச்சி சார்” மாமல்லன், 14 வருட எளக்கிய வனவாசத்தில் தினமும் எழுதி கிறுக்கி எழுதி தனக்கு தானே கண்டுப்பிடித்த உயரிய இலக்கிய எளக்கிய எழுத்து வார்த்தை “மச்சி சார்”.

    • **** தனக்கு தானே கண்டுப்பிடித்த உயரிய இலக்கிய எளக்கிய எழுத்து வார்த்தை “மச்சி சார்”. ****

      இருந்தாலும் சரியாப் புரியலை…தொடர்புடைய சுட்டி தர முடியுமா? நன்றி.

  17. என்ன இருந்தாலும் நூல்- நூல்தான்!
    அதுசரி கூட்டத்தில்
    காரைக்கால் சினிமா தம்பி மதுமோகனும்
    இருக்காங்களே

  18. ஜெய நித்யானந்தம்!ஜெய மௌல்வி !!ஜெய சாய்பாபா!ஜெய மேரி மாதா!இப்படிப்பட்ட குழப்பமான மத நம்பிக்கை அய்யா சாருவுடையது!அவரின் கட்டுரைகளோ அல்லது புத்தகங்களோ செம காமெடியா இருப்பதுக்கு காரணமே அவரின் குழப்ப கொள்கை!
    80,90 களில் கம்யூனிஸ்ட் பின்னர் புத்த மதம் பின்னர் குழப்பவாத மதம்னு ஜம்ப் மேல ஜம்ப்!உஸ்..அப்பா கண்ண கட்டுது!

  19. அய்யா பின் நவீனத்துவ குருவாம்!பின்னவீனத்துவமே முதலாளித்துவத்தின் நீட்சிதான்!அதான் கார்பரேட் சாமிகளுக்கு ஜால்ரா தனது எழுத்து மூலம் பப்ளிசிட்டின்னு இருக்காரு!

  20. Vinavu group should function like a proper internet forum.

    A forum is run by a group. Or the essays are written by several persons who form a group.

    Vinavu group functions like that, as I know. You have a group of writers.

    You should allocate portfolios to them: to each person according to his ability.

    Thus, on economic issue, only writers who has some expert knowledge in economics, on social issues but that involve scientific matter like kuudangkulam or mullaiperiyaar, only writers with some technical knowledge in science, in politics by writers who have a vast archival knowledge of Indian political scene, on foreign affairs like defence, by writers who are interested and have wide readings – etc should be engaged to write such essays.

    That will make the essays good to read, to discuss and to be benefited by. Even if you want people in power to take note of, the readers will quote you in many fora and the leaders will be jolted thereby.

    Similarly, on literature matters – what happens today in modern Tamil lit – the literary quarrlers between established writers – can be alloted to only writers who have innate inclination to lit and have some literary taste and knowledge.

    Annachi is an unfit person to attend a literary meet where a new novel by a well known Tamil author is released.

    If you want to drag the author out and bludgeon to pulp, for his social misconduct, do it exclusively a social issue and never once talk about his books.

    Be clear what u want to be known for.

    • வினவு, முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்படும் பதில்களை வெளியிடாதீர்கள். ஓரிரு ஆங்கில வரிகள் தெளிவு கருதி இருக்கலாம்.

    • ஜோ அமலன்,
      எதனால இந்த சாரு பேன் அவதாரம்… சிம்மக்கல் கவுந்திடுச்சா?
      சொந்த பேருல வரலேன்னாலும் உங்க விவாதமும் இங்கிலிபீசும் உங்களை காமிச்சுக்குடுக்காதுன்னு நினைப்போ…. 🙂

    • அண்ணாச்சி மாரி ஆக்க​ வரப்படாத​​ அந்த​ மாரி மீட்டிங்கில​ நீங்க​ அப்பிடி என்னாத்த​ தான் பேசறியண்ணு நாங்க​ தெரிஞ்சிகிட திரிம்ப​ நாங்கள்ளம் அந்துமணி ரமேசோட​ மரண​ மொக்கைகள​ படிக்கணும், அப்பிடி தினமலத்தோடயும், தமிள்பேப்பறொடயும் சர்குலெசன கூடணும், உம்ம மாரி இன்னும் பல​ பானுங்க​ உருவாவணும். இதுதானே ஓய் உம்மோட​ திட்டம். கொஞ்ச​ வருசத்துக்கு மின்னால​ அந்த​ பிறம்போக்கு அந்துமணியோட​ ‘பா கே ப​’ வ​ படிசிட்டு, சீறோ டிகிரி வாங்கிப் படிச்ச​ ஒரு துர்பாக்கியசாலி நானு. வாசிச்ச​ பின்னால​ மூணு நாளு வாந்தி வந்திட்டே இருந்திச்சு. பஸ்ஸில​ பான்று ஜிப்ப​ கழட்டிட்டு நின்னு ஒரசி சுகங்காணுற​ அயொக்கிய நாய்களையும், லேடிஸ் காளேஜ் மின்னால​ நின்னு ஆட்டுற​ எக்ஸிபிஷினிஸ்ட் களையும் உச்சிமோந்து எளுதின​ உம்ம​ மவரசன் சா(நி)ணிப்பய வாயில​ …….
      இதுக்குமேல​ உமக்கு ஏதாவது தைரியம் இருந்தா, இந்த​ புக்கயெல்லாம் வாங்கி உன் சொந்தக்காரனுவளுக்கும், பங்காளியளுக்கும் கல்யாணப்பரிசாக் கொடும்.. அவுக​ கல்யாணங்களில​ சாநியக் கூப்பிட்டு இந்த​ புத்தகத்துக்கு வெளியீட்டு விளா வைய்யும்..உங்க​ குடும்ப​ பங்சனில​ எங்க​ அண்ணாச்சி வர​ வேண்டமுண்ணு நாங்களே தடுத்திர்ரோம். மித்தபடிக்கு, இப்பிடி கார்டு அடிச்சு, பிளக்ஸ் வச்சி வெளம்பரப்படித்தினாக்க​, அண்ணாச்சி மட்டுமில்லவே, நாங்கூட​ பீயெக்கரச்சு பக்கெட்டில​ எடுத்தாருவென். ஆமா பின்ன​ என்னா?

      • எல்லாப் படைப்பும் குடும்பத்தோடு படிக்கிற மாதிரி இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே! அப்படி நினைப்பது அப்பட்டமான சனாதனம். இடதுசாரி அப்படி சொல்ல மாட்டான்.

        • சரியா சொரிஞ்சீங்க மன்னிக்கணும் சொன்னீங்க அனானி.
          சரோஜா தேவி இலக்கியத்த தனியாத்தா படிக்கோணும்

        • யேய்யா அனானி, நீரு நா எளுதினத​ செரியா படிச்சப்புறம தானா ஓய் பதில​ சொல்லுதீரு? ஒம்மால​ ஒம்ம​ குடும்பத்தோட​ படிக்கமிடியாத​ எளவ​ நீரு என்னா மயித்துக்கு வே சமூகத்துக்கு பரிந்தொரைக்கீரும். ஒரு எடதுசாரிக்கு குடும்பத்த​ விட​ சமூகந்தான் வே உன்னதமேனது. ஆனா நீரு சொன்னப்பில​ ஒருத்தென் சனாதனியா இருந்தண்ணா அவங் குடும்பத்து பொம்மனாடிங்கள​ ஆச்சாரமா இருக்கணும்ணும், மித்தவன் வீட்டுக்காரியெல்லாம் விபச்சாரியா இருக்கொணும்ணும் ஆசப்படுவானுவொ. ​ அதெத்தேன் அண்ணாச்சியே சொன்னாரில்லவே.. வெளாவுக்கு ஒருபய​ பொண்டாட்டிய​ கூட்டியாரரெல்லெண்ணுட்டு… அப்பிடி இருக்கேல நீரு இடதுசாரிக்குங் சனாதனிக்குங் புதுசா ஒர​ எளுத​ கெளம்பிருக்கீரு?!?! மகஇக காறங்க​ கூட்டத்துக்கு நீரு இதுவரெ போவாட்டி, இனிமேட்டாவது போவும். அப்ப தெரியும் இடதுசாரி ஆரு சனாதனி ஆருண்ணு.. அல்ல​ பின்ன ம்

          • சமூகமென்றால், ஏழை – பணக்காரன், படித்தவன் – படிக்காதவன், உழைப்பாளி – முதலாளி என்று அனைத்து சார்பு மக்களையும் உள்ளடக்கியதுவே. வெறும் ஏழைகளையும் பாட்டாளி வர்க்கத்தையும் வைத்து ஒரு சமூகம் எங்குமே எப்போதுமே உலகில் தோன்றவைல்லை. இருக்கவும் இருக்காது. சமத்துவ சமுதாயம் என்பது ஒரு கற்பனை உலகம் மட்டுமே. எல்லாரும் வாழ்வதற்கு சமுதாயத்தைச்செம்மைப்படுத்தலாம். வலிமையுள்ளவன் நலிந்தோரை நசுக்குவதைச் சட்டம்போட்டுத்தடுக்கலாம். பாட்டாளி வர்க்கத்திற்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைத்தரத்தைக் கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் சமூகத்தின் அனைவரையும் சம்மாக்க முடியாது.
            ஒரு இலக்கியவாதியின் படைப்பு இப்படிப்பட்ட ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமூகத்து மக்கள் அனைவரையும் ஈர்க்கும் தன்மையுடையதாகவும் இருக்கலாம் அல்லது ஒரேயொரு சாராரை மட்டுமே ஈர்க்கும் தன்மையுடையதாகவும் இருக்கலாம். ஏனெனில் எழுதப்படும் சிலவிசயங்கள் எல்லாருக்குமே புரியாது. எனவே புரியாதவர்கள் அதைப்படிக்க முடியாது. முயன்றால் இஃதென்ன குழப்பமான நாவல்; நல்லாவேயில்லை எனத்தூக்கியெறிந்து விடுவார்கள்.

            பிக்காசோவின் ஓவியங்களை நம்மிடையே மாடர்ன் ஓவியத்தை இரசிக்கும் திறனைப்பெற்றோரே புரியமுடியும்; இரசிக்கமுடியும். அத்திறனைப்பெறுவதற்கும் ஓவியக்கல்லூரி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மற்றவர்கள்ளெல்லாரும் அவ்வோவியங்களை கிறுக்கல்கள் என்று சொல்லி விடுவார்கள். பிக்காசோவின் ஓவியக்கண்காட்சி சென்னையில் நடந்தால் அதைப்பார்க்க வருவ்பவர்கள் சிலரே. இதனால், பிக்காசோவை ஓவியம் வரையத்தெரியாதவன் அவனுக்குக் கிறுக்கத்தான் தெரியுமென்பீர்களா ?

            வினவு குழுமத்தினர் இங்கு பின்னூட்டங்கள் போடுகிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் அடைப்படை வாதமே பிழையானது.

            • //ஒரு கதை, கவிதை அல்லது ஓவியத்தை கலைஞனின் உள்மன எழுச்சிதான் உருவாக்குகிறது என்பதை நாம் மறுக்கவில்லை. அப்படி ஒரு உண்மையான அக எழுச்சி இல்லாமலேயே மலர்விக்கப்படும் காகிதப்பூக்களும், சொற்களாலும் வண்ணங்களாலும் நிகழ்த்தப்படும் கழைக்கூத்துக்களும்தான் கலை, இலக்கிய உலகில் நிரம்பியிருக்கின்றன என்ற உண்மையையும் யாரும் மறுக்க முடியாது. எனினும், ஒரு கலை வெளிப்பாட்டை நோக்கி “அதன் பொருள் என்ன, அது வெளிப்படுத்தும் உணர்வு என்ன என்று கேள்வி எழுப்புவது அந்தக் கலையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பதும், சர்வாதிகாரம் என்பதும் அவர்கள் தரப்பு வாதம்.
              கலை இலக்கியம் ஓவியம் போன்ற துறைகளில் இத்தகைய சர்வ சுதந்திரக் கோட்பாட்டை குன்றின் மீது நின்று முழங்கிய பல சிங்கங்களுக்கு கறித்துண்டு போட்டு வளர்த்தவர்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வினர்தான் என்றொரு செய்தி நெடுநாட்களாகவே அடிபட்டு வந்தது எனினும், அது கம்யூனிஸ்டுகளின் அவதூறு என்றே இதுநாள்வரை புறந்தள்ளப்பட்டு வந்தது.

              பிரான்சிஸ் ஸ்டோனார் சாண்டர்ஸ் எழுதிய சி.ஐ.ஏ வும் பண்பாட்டுப் பனிப்போரும் என்ற நூல் (Wகொ பைட் ட்கெ பிபெர், Tகெ Cஈஆ அன்ட் ட்கெ சுல்டுரல் சொல்ட் நர்) இதனை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அப்ஸ்டார்க்ட் எக்ஸ்பிரஷனிசம் என்று வகைப்படுத்தப்படும் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை சி.ஐ.ஏ. உருவாக்கவில்லை. எனினும் அதனை அடையாளம் கண்டு தடுத்தாட்கொண்ட பெருமை நிச்சயம் சி.ஐ.ஏ.வுக்கே உரியது.//

              //படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிசத்தை எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த கலைஞர்கள், சி.ஐ.ஏ. வின் காசில்தான் தங்கள் கலை ‘உலக உலா’ வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை.//
              https://www.vinavu.com/2011/04/01/modern-art-cia/

              சாரு பேன் அவிங்க​ இந்த​ லிங்க​ சொடுக்கி பாத்தியண்ண விரிவா புரியும். அத்தோட​ நெறுத்திராம​, மேல​ நம்ம​ காறுமேகம் அண்ணாச்சி எளுதினதயும் சேத்து வாசிச்சியண்ண​ நறுக்கிணு உறுத்தும், நீரு பேசிற​ பிக்காசு படம் ஆருக்கேண்டி ஆரு காயிகுடுத்து வரெய்யெதிண்ணு.

              //அதுமேறி இங்கிலாந்து எம்பசியிலிருந்து ஒரு கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரனும் வந்தாரு. என்ன இருந்தாலும் ரஸ்ஸலுக்கே விலை வைச்சு கம்யூனிச எதிர்ப்புல கல்லா கட்டுன நாட்டுக்காரனுக்கு இந்த சாநியை ஆட விட ஒரு பீரு போதுன்னு தெரியாதா?//

        • நீ படிக்கிற இந்த மாதிரி கழிசடையின் படைப்பை உன் மனைவியும் படிக்க விரும்புனா, குடுப்பியா மாட்டியான்னு கொஞ்சம் சுய பரிசோதனை பண்ணு. முடிஞ்சா அடுத்த சாநி புத்தக வெளியீட்டு விழாவுக்கு உன் மனைவியோட போயிட்டு வா! நண்பா உன்மையான இடதுசாரி என்ன செய்வான், செய்ய மாட்டான்னு அதுக்குப் பிறகு பேச்சு வார்த்தை நடத்தலாம்.

  21. அனானி

    நான் எழுதிய ஆங்கிலமடலை சில வரிகளுக்குள் தமிழில் சொல்லலாம். பத்திரிக்கைகள் ஒவ்வொரு நிகழ்வையும் சென்று பார்த்து எழுத அந்நிகழ்ச்சி எப்பொருள் பற்றியதோ அதைப்பற்றிக் கொஞ்சமாவது ஞானமுள்ளவரைத்தான் அனுப்பும்.

    அதைப்போல வினவு செய்திருக்கவேண்டும். இலக்கிய ரசனையே இல்லா அண்ணாச்சி போன்றவரை ஆங்கு அனுப்பும்போது என்ன பிறக்கும்?

    விபரீதமான கட்டுரை.

    இப்படிப்பட்ட கட்டுரைகள் வினவுவின் ஃப்ரொபச்னலிசத்தைப் பாழ்படுத்துகின்றன என்பதே நான் ஆங்கிலத்தில் நீட்டி முழக்கியது.

    தமிழா…தமிழ் புரிந்ததா? இல்லாவிட்டால் மலையாளத்தில் எழுதட்டுமா ?

    • எனக்கு ஞானம் ஜாஸ்தி, உனக்கு இல்லேன்னு இந்த பார்ப்பனிய டயலாக்கை மனு காலத்திலிருந்து கேட்டுக்கிட்டுத்தான் இருக்கோம். அக்ரகாரமே உந்த உலகத்துல ஒஸ்தின்னு இன்னும் எத்தனை காலத்துக்கு டமாரமடிப்பாங்களோ?

      நைனா உங்களுக்கு இயக்கிய ஞானம் சாஸ்தி, வினவுக்கு நகின்னு சொல்றதுக்கு ஏதுனாச்சும் ஆதாரம் கொடுத்து பேசுங்க! அதவுட்டுப்போட்டு இப்புடி சாபம் கொடுத்தா எப்புடி?

      • அதவுட்டுப்போட்டு இப்புடி சாபம் கொடுத்தா எப்புடி?//
        .
        .
        அட இவுங்க எல்லா வழிபாட்டு தளங்களிலும்(மத வேறுபாடு இல்லை) பொய் சூன்யம் வைக்க இவுரோட தலிவரே சொல்லி கொடுத்திருக்கார்!பின் நவீனத்துவ முறையில் சூன்யம் வைப்பது எப்படி மந்திரிப்பது எப்படி எல்லாம் இவுரு புத்தகத்துல விளக்காம் இருக்கு!(வினவு அதை பிகாசோ ஆல்பமாக கொடுத்துள்ளார்)ஜெய நித்யானந்தா!ஜெய ரஞ்சிதா!

    • எந்தா சாரே ஏன் கோவிச்சிட்டிருக்கு?தமிழில் விவாதிப்பதுதான் இங்கு பொருத்தம்!அறிவாளி தனுசு உளறிய ஆங்கில பாடல் கேட்க நாங்கள் முட்டாள் இல்லை!

    • அண்ணாச்சி மாரி ஆக்க​ வரப்படாத​​ அந்த​ மாரி மீட்டிங்கில​ நீங்க​ அப்பிடி என்னாத்த​ தான் பேசறியண்ணு நாங்க​ தெரிஞ்சிகிட திரிம்ப​ நாங்கள்ளம் அந்துமணி ரமேசோட​ மரண​ மொக்கைகள​ படிக்கணும், அப்பிடி தினமலத்தோடயும், தமிள்பேப்பறொடயும் சர்குலெசன கூடணும், உம்ம மாரி இன்னும் பல​ பானுங்க​ உருவாவணும். இதுதானே ஓய் உம்மோட​ திட்டம். கொஞ்ச​ வருசத்துக்கு மின்னால​ அந்த​ பிறம்போக்கு அந்துமணியோட​ ‘பா கே ப​’ வ​ படிசிட்டு, சீறோ டிகிரி வாங்கிப் படிச்ச​ ஒரு துர்பாக்கியசாலி நானு. வாசிச்ச​ பின்னால​ மூணு நாளு வாந்தி வந்திட்டே இருந்திச்சு. பஸ்ஸில​ பான்று ஜிப்ப​ கழட்டிட்டு நின்னு ஒரசி சுகங்காணுற​ அயொக்கிய நாய்களையும், லேடிஸ் காளேஜ் மின்னால​ நின்னு ஆட்டுற​ எக்ஸிபிஷினிஸ்ட் களையும் உச்சிமோந்து எளுதின​ உம்ம​ மவரசன் சா(நி)ணிப்பய வாயில​ …….
      இதுக்குமேல​ உமக்கு ஏதாவது தைரியம் இருந்தா, இந்த​ புக்கயெல்லாம் வாங்கி உன் சொந்தக்காரனுவளுக்கும், பங்காளியளுக்கும் கல்யாணப்பரிசாக் கொடும்.. அவுக​ கல்யாணங்களில​ சாநியக் கூப்பிட்டு இந்த​ புத்தகத்துக்கு வெளியீட்டு விளா வைய்யும்..உங்க​ குடும்ப​ பங்சனில​ எங்க​ அண்ணாச்சி வர​ வேண்டமுண்ணு நாங்களே தடுத்திர்ரோம். மித்தபடிக்கு, இப்பிடி கார்டு அடிச்சு, பிளக்ஸ் வச்சி வெளம்பரப்படித்தினாக்க​, அண்ணாச்சி மட்டுமில்லவே, நாங்கூட​ பீயெக்கரச்சு பக்கெட்டில​ எடுத்தாருவென். ஆமா பின்ன​ என்னா?

  22. கொலைவெறி பாடல் எல்லா பப்புளையும் பப்பிகிட்டே ஒலிக்குது!நானே ஐநூறு தபா கேட்டுட்டேன்னு தனுசுக்கு ஊதுகுழலாகிபோன ஒரு எழுத்தாளர் இவுரு!
    இவரது சீடர்கள் இவர் என்ன சொல்லுராரோ அதை ஆமாஞ்சாமி போட்டு பின்பற்றுவர்!மூணு படத்தை முன்னூறு தபா பாத்தேன்னு அய்யா சாரு சொன்னாலும் இவர்கள் ஆமாம் போட்டு அதை மூவாயிரம் தபா பார்ப்பார்!

  23. மாமா ராமராஜன் கணக்கா பள பள கோட்டு போட்டுகினு நின்னது செம காமெடி!

  24. எல்லா எழுத்திலும் இவர் வழ்க்காமா ஒரே விசயத்தை எழுதுவார்!அவற்றில் சில:
    தமிழ்நாட்டில் எழுத்தலாய் மதிப்பதில்லை!கேரளாவில் இவருக்கு கடவுட் இருக்காம்!
    தமிழ்நாடு வாழ தகுதி இல்லாதது(மத்த ஸ்டேட் எல்லாம் சொர்க்கமாம்),ழான் ழாக் இப்படி பெயர் கொண்ட ஒரு ஆசாமியின் எழுத்தை போடுவார்!ஒரு ஸ்லோகம,தகடு வரைபடம்,ஜோசியம்,சூன்யம் வைப்பது எப்படி,ஒரு மசூதியில் யாரோ செய்த தில்லாலங்கடி(அதை இவுரு அருள்னு சொல்றாரு),சாய் பாபா படத்தில் விபூது கொட்டியது(எதுனா செவுத்து காரையா இருக்கும்)..இப்படி மேலும் தான் பெண்களுடன் செய்த ஆபாசமான அச்சில் ஏற்ற முடியாத செட்டுகளை கொண்டு மிச்ச பக்கத்தை நிரப்புவார்(ராச லீலா) மேலும் பண்ணிகளை பத்தி எழுதுவதை விடமாட்டார்!சூப்பர்

  25. தமிழ்நாட்டில் எழுத்தாளனைக் கொண்டாட மாட்டேன் என்கிறார்கள். எழுத்தாளன் தெருவில் இறங்கினாலே மக்கள் அவனைப்பார்த்து மகிழ வேண்டும். அவன் பேசும்போது விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். மேலும் எழுத்தாளன் இறந்தும் நீண்டநாள் ஆகிறது. செத்துப்போன எழுத்தாளர்களுக்கு பாரீஸில் அங்குள்ள மக்கள் சிறப்பாக திவசம் கொடுக்கிறார்கள் என்பதனால் அது பண்பட்ட நாடு. அங்குள்ள எழுத்தாளர்கள்எழுத்தாளர்களாக இருந்தாலே போதும், எழுதக்கூட வேண்டியதில்லை

    சாரு நிவேதிதா இந்தியாவை வெறுக்கிறார். அவருக்குப் பிடித்தமான நாடு பிரெஸில். அதேபோல அவர் எழுத விரும்பும் மொழி ஸ்வாஹிலி. பிரேஸில் போய் ஸ்வாஹிலி கற்றுக் கொண்டு எழுதி அதை பிரேஸில் மக்கள் ஸ்வாஹிலி கற்றுக் கொண்டு படிக்கும் வரை காத்திருக்க முடியாமல் அவர் தமிழில் எழுதி வருகிறார். தாய்லாந்தையும் அவருக்குபிடிக்கும். அங்கே பத்தாக் கிளாஸ் பெண் பிளஸ்டூபையனை காதலிக்கும் ஆபாச சினிமாக்களுக்கு பதிலாக ஆம்ஸ்டர்டாம் டிவிடிக்கள் மட்டுமே கிடைக்கின்றன. கைக்குழந்தையானாலும் உரிய மருத்துவச் சான்றிதழுக்குப் பிறகே அனுமதிக்கிறார்கள்.

    பின்நவீனத்துவக்கலைஞனான சாரு நிவேதிதா புனிதங்களைக் கட்டுடைக்கிறார். கட்டுடைக்கப்பட்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் திருப்பி உடைக்க வரக்கூடுமென்பதனால் எப்போதும் பவ்யமாகவும் பிரியமாகவும் விளங்குகிறார். பின்நவீனத்துவக் கலைஞன் சாமி, பூதம், மதம், சாமியார், ஆன்மீகம் போன்றவற்றைஅடிக்குமட்டில் ஏறி மிதிப்பதே அழகு. அதிலும் ஆங்கிலத்தில் புத்தகமெழுதும் மலையாளச் சாயார்களை புகழ்ந்து கட்டுரை எழுதும் இலக்கியவாதிகள் தோலுரித்து தொங்கவிட்டு தொடைக்கறி கிலோ நூற்றைம்பதுக்கு விற்கத்தக்கவர்கள்.

    பின் நவீனத்துவத்தின் ஒரு பகுதியே மாய யதார்த்தமாகும். மாயயதார்த்தத்தில் வெறும்கையில் லட்டு எடுத்து சாதாரண பக்தர்களுக்கும் சிவலிங்கம் எடுத்து பணக்காரர்களுக்கும் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்று கலியுக கிருஷ்ணாவதாரமான பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா சாருநிவேதிதாவின் கனவில் நேரில் அவ்ந்து சொல்லி வழிகாட்டியிருக்கிறார். கணிப்பொறி மேல் சாய்பாபா படம் வைத்தால் வைரஸ் தாக்குதல்மட்டுபப்டுவதோடு பின்நவீனக் கட்டுரைகளும் பின்நவீன சினிமா விமரிசனங்களும் நிறையவே எழுத முடிகிறது. தமிழ் சினிமா திடீரென பின் நவீனமயமாகி வருவதனால் சாரு நிவேதிதாவுக்கு வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன.

    பின் நவீனத்துவத்தின் தத்துவ சாதனை முரணியக்க இயங்கியலை மறுத்ததாகும். ஆகவே சாரு நிவேதிதா எப்போதும் முரண்பாடுகளே இல்லாமல் எழுதவும் பேசவும் செய்துவருகிறார் . சாரு நிவேதிதா வளமான கற்பனைத்திறன் கொண்டவர். ஆகவே தொடர்ந்து சுயசரிதை நாவல்களும் அனுபவக் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

  26. //இலக்கியவாதி அதைச்செய்கிறான். அவன் அதைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறான். என் படைப்புக்களை படி; அதை எப்படியும் போட்டுத்தாக்கு. அல்லது தூக்கு. ஆனால் நான் எப்படி சாப்பிடுகிறேன்; தூங்குகிறேன்; என்றெல்லாம் ஏன் ஆராய்கிறாய்? அப்படியெ அவை உனக்குப்பிடிக்காவிட்டால், அதாவது என் தனிநபர் நடத்தைப் பிடிக்கவிட்டால் அதை என்படைப்புக்களோடு இணைக்காதே. என்பதுதான் இலக்கியவாதி சொல்கிறான்//

    அதுசரி.ஈழத்தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டது தொடர்பாக சாரு ஓர் உருக்கமான இலக்கியம் வடிக்கிறார். அதன்பின் சாருவின் ஸீரோடிகிரிக்கு ராஜபக்சே இலக்கிய விருது வழங்கக் கூப்பிட்டு சாருவும் கோட்டு சூட்டோடு விருது வாங்கச் சென்றால் அந்தத் தனிநபர் நடத்தையை படைப்போடு இணைக்கலாமா?கூடாதா? சாரு பேனின் பதில் தேவை.

    • Social issue is a different matter.

      You have 2 points here:

      1. He wrote a novel about the tragedy of SLTs
      2. He is nominated for an award by the SL govt and he is invited to receive it.

      Can we link his melting heart in no. 1 to his act of going to Colombo in no.2

      அவரின் அப்படி அங்கு செல்வது செல்லாததும் அவரின் தனிநபர் நடத்தையை மட்டுமே காட்டும். ஒருவேளை சென்றால், அவர் விமர்சிக்கபபடுவார். ஆனால் அவரின் நடத்தையை அவரின் நாவலோடு இணைக்க முடியாது.

      ஒரு எழுத்தாளர் ஒரு புதினத்தின் பிற்புலமாக ஒரு உணமைச்சம்பவத்தை அப்புதினத்தைப்படைக்கத்தான் பயன்படுத்துகிறார். நாளை அதே சம்பவத்திற்கு எதிரான சம்பவத்தையும் அவரெடுத்து இன்னொரு புதினத்தையும் அவர் படைக்கலாம்.

      எனவே எழுத்தாளர்களின் தனிநபர் வாழ்க்கை வேறு. புதினங்கள் வேறு.

      உங்கள் கருத்துப்படியே அவை ஒன்றென்றென்றால். இலங்கைத்தமிழர் சோகத்தை மட்டுமே நீங்கள் எடுத்துப்பார்ப்பீர்கள். பார்க்கிறீர்கள். மற்றவர்கள் அவர்களுக்குப்பிடித்தவற்றை எடுப்பார்கள்: எ.;கா. இட ஒதுக்கீடு. அதை ஆதரித்து ஒருவர் பிற்புலம் வைத்து எழுதினால், அதற்கு ஒரு பரிசு கிடைத்தால், இட ஒதுக்கீடு எதிர்ப்போர் எழுத்தாளரை தாக்குவர். இப்படி எல்லாச்சமூகப்பிரச்சினைகளையும் எழுத்தாளன் பிற்புலமாக வைக்கும்போது பிர்ச்சினைக்குள்ளாவான். உங்களுக்கு எழுத்தாளன் பயந்துகொண்டு படைப்புக்களை உருவாக்கினால் இலக்கியம் நசுத்துவிடும்.

      எனவே படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் எழுதுவதை தனியே விட்டாலே இலக்கியம் வளரும்.

      • // You have 2 points here:

        1. He wrote a novel about the tragedy of SLTs
        2. He is nominated for an award by the SL govt and he is invited to receive it.

        Can we link his melting heart in no. 1 to his act of going to Colombo in no.2
        //

        Award by SL govt hardened his ‘melting heart’ ?
        Then his melting of heart was a lie.

        He went to receive SL Govt award with still melting heart ?
        Then he is a pig-1.

        If you find nothing wrong in his act ?
        Then you are pig-2.

  27. //. என் படைப்புக்களை படி; அதை எப்படியும் போட்டுத்தாக்கு. அல்லது தூக்கு. ஆனால் நான் எப்படி சாப்பிடுகிறேன்; தூங்குகிறேன்; என்றெல்லாம் ஏன் ஆராய்கிறாய்? அப்படியெ அவை உனக்குப்பிடிக்காவிட்டால், அதாவது என் தனிநபர் நடத்தைப் பிடிக்கவிட்டால் அதை என்படைப்புக்களோடு இணைக்காதே. என்பதுதான் இலக்கியவாதி சொல்கிறான்//

    அதுசரி.ஈழத்தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டது தொடர்பாக சாரு ஓர் உருக்கமான இலக்கியம் வடிக்கிறார். அதன்பின் சாருவின் ஸீரோடிகிரிக்கு ராஜபக்சே இலக்கிய விருது வழங்கக் கூப்பிட்டு சாருவும் கோட்டு சூட்டோடு விருது வாங்கச் சென்றால் அந்தத் தனிநபர் நடத்தையை படைப்போடு இணைக்கலாமா?கூடாதா? சாரு பேனின் பதில் தேவை

  28. சாரு எப்படி ஒரே விஷயங்களைத் திரும்பத்திரும்ப எழுதுகிறார் என்று குறிப்பிடுகிறீர்களோ அதே போலத்தான் திரு ஜோ அமலனும் ஒரே காரணத்தைத் தூக்கிக்கொண்டு எல்லா சபைகளுக்கும் வந்துவிடுகிறார். கண்ணதாசன் பல பெண்களுடன் சல்லாபம் செய்தவர், அவர் இலக்கியவாதியாகக் கொண்டாடப்படுகிறார். ஆகவே சாரு நிவேதிதா மிகப்பெரும் இலக்கியக்கர்த்தாவாகக் கொண்டாடப்படவேண்டும். அல்லது அவர் விமர்சிக்கப்படக்கூடாது என்பது மட்டும்தான் இவரது வாதம். ஜோ அமலன், சிம்மக்கல் என்று வந்துகொண்டிருந்தவர் இப்போது சாரு பேன் என்று வந்து அதே வாதங்களைப் புரிவது பரிதாபமாக இருக்கிறது. கண்ணதாசன் தமது கடைசிக்காலத்தில்தான் வனவாசம் எழுதினார் என்பதுபோன்ற தப்பும்தவறுமான தகவல்கள் வேறு. அவர் 1967 லேயே வனவாசம் எழுதிவிட்டார்.அல்லது அதற்கும் முன்பு என்பதாக நினைவு. ஒப்பிலிப்பிச்சானைப் பற்றிச் சொன்னதும் இணைத்துச் சொல்ல ஒபாமாவைக் கூட்டிவரும் போக்கினை அவர் நிறுத்திக்கொண்டு வேறு ஏதாவது விவாத ஆயுதங்களைக் கைக்கொள்வது நலம். பாவம் இந்த மனிதரைக் கண்ணதாசன் அளவுக்கதிகமாகப் பாதித்திருக்கிறார் என்பது பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது.

    • எப்போது எழுதினாலும் அவருக்கு ஒரு பெண்டாட்டி; ஒரு வைப்பாட்டி. அதுவும் அவரிடம் இரசிகையாக வந்தவள்; பல வயது சிறிய பெண். விசயம் வெளியே தெரிந்த பின்னர் ஊரறிய திருமணம்.

      ஆக ஒரு மனைவி. ஒரு வைப்பாட்டி; பின்னர் இரண்டாவது மனைவி.

      இதை வனவாசத்திற்கு முன் செய்தாலென்ன பின் செய்தாலென்ன?

      எல்லாரும் மூன்று பெண்டாட்டி வச்சிருக்கான், கண்ணதாசன் இரண்டே இரண்டுதானே என்று அமுதவன் வழிந்தால் சரி. ஹீரோவின் மானத்தைக்காப்பாற்றுவது முட்டாள் இரசிகனின் கடமை.

  29. அமுதவன் !

    கண்ணதாசன் ஒரு உவமையாகத்தான் இங்கு எடுத்தாளப்படுகிறார். அவருக்குப் பதிலாக வேறு ஒருவரைப் போட்டுக்கொள்ளலாம். அதை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

    எவனோ ஒரு எழுத்தாளான் ஒரேயொரு பெண்ணைமட்டும் வைப்பாட்டியாக வைத்து பின் ஊரறிய மணந்து கொள்வான். அவனைத்திட்டி வினவு கட்டுரை போடும். அப்போது கண்ணதாசனை மட்டும் அவரின் படைப்புக்களோடு சேர்த்துப்பார்க்கவில்லையே என்று சொல்வேன். வந்து கண்ணதாசனைக்காப்பாற்றுங்கள்.

    இங்கே உங்கள் அதீதிய கண்ணதாசன் காதலில் நான் தடையிட விரும்பவில்லை. அவருக்கு இரண்டே இரண்டு பெண்டாட்டிகள்தான். உண்மையில்லையா? எனவே கண்ணதாசனைப்பற்றி நான் கதைக்கவில்லை.

    இங்கு சாரு ஒரு பெண் பொறுக்கி. அவரின் பொறுக்கித்தனமும் அவரின் எழுத்துக்களும் ஒன்றா என்பதே கேள்வி.

    பதில் சொல்லுங்கள். போதும்.

  30. குடிக்கிறான். கூத்தடிக்கிறான். கொள்ளையடிக்கிறான். இறுதியில் தன் வரலாறு எழுதி, நாந்தான் இப்படி வாழ்ந்துட்டேன். என்னை மாதிரி நீங்கள் வாழக்கூடாது என்று எழுதிவிட்டு மண்டையைப்போடுகிறான்.

    அவன் ரொம்ப நல்லவனாகிறான்.

    இது தமிழ் சினிமா ஓல்டி டெகினிக். Kannadaasan followed this technique.

    கற்பழிப்பு சீன் ரொம்ப நேரம் காண்பிக்கப்படும். எல்லாரும் அதற்காகவே படம் பார்ப்பார்கள். காட்சியில் முடிவில் கற்பழிக்க முயன்றவன், ‘எல்லாமே ஒரு நாட்கம். நீ என் தங்கச்சி’ என்பான்.

    இதை எப்படி விவரிப்பது? நகைச்சுவையென்றா? ஏமாற்றுவேலையென்றா?

    Read his poems. Why do you defend his nasty character?

    • கண்ணதாசனை ரொம்ப நல்லவர் வல்லவர் என்று யாரும் தூக்கிக் கொண்டாடவில்லை. கண்ணதாசன் மட்டும் நல்லவராககிவிட்டாரா என்று பொருமுவதை நிறுத்தி பின்னூட்டங்களை நிதானமாக மீண்டும் படிக்கவும். ”எந்த எழவென்றாலும் அன்று டவுசரைக் கழட்ட காளமேகம் அண்ணாச்சியும் internet-ம் இல்லாததாலும் இருக்கலாம்” என ஏற்கனவே நான் பின்னூட்டம் 4.2.1.1 ல் குறிப்பிட்டுள்ளதை படிக்காமல் திரும்பத் திரும்ப எல்லா இடங்களிலும் இதையே புலம்பிக் கொண்டிருப்பது எரிச்சலைத் தருகிறது.

      படைப்பை மட்டும் பார், படைப்பாளி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறுவது இலக்கியத்தையும் நுகர்பொருள் கலாசாரமாக்குகிறது. வாசகர்களுக்கு திருப்தி, எழுத்தை வெறும் தொழிலாகக் கொண்ட வியாபாரிகளுக்கு பணம், இதில் புகழ் தேடும் கூத்து வேறு. இந்தப் போக்கை எதிர்த்து விமர்சித்தால், எப்படி விமர்சிக்கலாம், அவனைப் பார், இவனைப் பார் இனிமேல் விமர்சிக்காதே, உனக்கு என்ன தெரியும் இலக்கியத்தைப் பற்றி, இலக்கியத்தை கண்டுபிடித்ததே நாங்கதான், இதுதான் இலக்கியமாக்கும் தெரிஞ்சுக்கோ என்று பக்கம் பக்கமாக பின்னூட்ட மொக்கை போடுவது… வேறு இடம் கிடைக்கவில்லையா?

  31. காளமேகம் அண்ணாச்சியின் கட்டுரையை விட பின்னூட்டங்களின் நீளமும் விவாதமும் அதிகம்.

    காளமேகம் அண்ணாச்சியை வினவு சாருவின் நிகழ்வைப் பற்றி விமரிசனம் செய்ய மட்டும் அனுப்பியுள்ளார்களே தவிர அவருடைய இலக்கியம் பற்றி வினவுத் தோழர்கள் அக்கறை கொள்ளவில்லை என்றே கட்டுரையிலிருந்து தெரிகிறது. ஏனென்றால் கட்டுரையில் நாவல் சம்பந்தமான விவாதத்தைவிட அரங்கில் நடந்த நிகழ்வுகளின் விவரிப்பே அதிகம். காளமேகம் அண்ணாச்சி எந்த நோக்கில் கட்டுரை எழுதினாரோ அது மட்டும் சரியாக நிறைவேறியுள்ளது.

    வினவின் பார்வை சமூக அளவில் சாருவும் அவருடைய இலக்கியப் படைப்புகளும் சமூக வளர்ச்சிக்கு உபயோகம் தராதவை என்பதோடு தவறான வழியில் இழுத்துச் செல்பவை என்கிற பார்வை.

    சாருவின் பேன் என்பவர் சொல்வதிலும் நியாயங்கள் உள்ளன என நான் கருதுகிறேன். சாரு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டால் அவருக்காக அவரைத் தேடிப்பிடித்து வீட்டின் முன் நின்று கண்டியுங்கள். இணையதளத்தில் அவரை அம்பலப்படுத்துங்கள். மேலும் நடவடிக்கைகள் எடுங்கள். அது நியாயம். வினவில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    ஆனால் தற்போது சாரு வெளியிடும் புத்தகம் என்னவென்று படிக்கக்கூடச் செய்யாமல் அதை விமர்சிப்பது தவறு. நானும் படிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் சாருவின் எழுத்துக்கள் மேல் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை. அவர் செய்யும் கட்டுடைத்தல்கள் போலியானவை என்றே எனக்கும் தோன்றுகின்றன. அதற்காக நாவலை படிக்காமலேயே குப்பை என்று கூற நான் தயாராக இல்லை அவருடைய ஜீரோ டிகிரியை படித்திருந்த போதும்..

    வினவு சாருவிற்கு எதிர்வினை செய்கிறது. அவருடைய படைப்புக்கு இன்னும் எதிர்வினை செய்யவில்லை. அதைச் செய்யுங்கள் தனியாக இன்னொரு கட்டுரையில். வழிப்போக்கன் (28) தனது பின்னூட்டத்தில் அதைச் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட அது நூல் பற்றிய விமர்சனம்.
    சாருவின் பேன் எழுதிய கருத்துக்களில் பின்வருவன நெருடல்கள்..

    >>
    ஒரு மக்களின் பண்பாட்டை நல்வழிப்படுத்துதல் இலக்கியத்தின் பொறுப்பன்று. அது குழந்தை கதைகளுக்கு மட்டும்தான். அக்கதைகள் இலக்கியமாகா.

    எனவே படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் எழுதுவதை தனியே விட்டாலே இலக்கியம் வளரும்.
    >>

    இலக்கியம் சமூகத் தொடர்பின்றிப் போகும் போது அது என்ன இலக்கியம்? பண்பாட்டை நல்வழிப்படுத்தல் அல்லது மேம்படுத்தல் அல்லது மாறுதலுக்குள்ளாக்குதல் இலக்கியத்தின் பொறுப்பன்று எனில் சரோஜாதேவி புத்தகமும் இலக்கியம் தான்.

    சாரு இலக்கியம் படைத்தல் இங்கு யாருக்கும் வருத்தம் தரும் செயலல்ல. அது உன்னதப் படைப்பு என்றும் அதை இங்கு புரிந்து கொள்ளாத எல்லாம் மடையர்கள் என்றும் அவர் சமூக வினையாற்றும் போது தான் வினவு போன்றவர்கள் வெளுத்து வாங்குகிறார்கள். அவர் எழுதுவது போர்னோ எழுத்தை இலக்கியமாக்கும் முயற்சி என்று அவர் கூறுவதோடு நிறுத்திக் கொண்டால் அது நியாயமானது. அவர் முயற்சி வெற்றியாவதும் ஆகாததும் அவருடைய கொள்கைகள், அவர் சமூகத்திற்கு கொடுக்க நினைக்கும் விழிப்புணர்வின் தேவை, தேவையின்மை ஆகியவற்றைக் கொண்டு வாசகர்களும், மக்களும் அவருக்கு காலப்போக்கில் பதில் தருவார்கள்.

  32. தமிழனின் தலைவிதி! தனது மண்டபத்தின் கால் இடிக்கப்பட்டதற்காக அறச்சீற்றம்! கொள்பவன் மக்கள் தலைவன்! தனது சுக்கில நீரை வெளியேற்ற புலம்புபவன் இலக்கியவாதி.

    • கான் எழுப்பியதும் ஒரு அடிப்படைக் கேள்வி. அஃது உலக இலக்கியத்தில் பரபரப்பான சப்ஜக்ட். இலக்கியம் என்பது எதற்காக ? வெறும் பொழுது போக்குவதற்கான இலக்கிய இன்பத்தைத் நல்குவது மட்டுமா? இல்லை, இலக்கியவாதிக்கு அறச்சீற்றமும் சமூகப்பிரக்ஞைகளும் இருந்து சமூகத்தைத் தட்டி எழுப்புவதுமா ?
      Art for Art’s sake? Or for moral’s sake?
      பதில்கள் இருபுறமுமிருந்து காரசாரமாக வீசப்படுகின்றன. தீராத பிரச்சினை இது. இக்கேள்விக்கான பதில்களை நாம் எந்தக்கட்சியை விரும்புகிறோம் என்பதைப்பொறுத்தே. இங்கு எழுதும் வினவு குரூப்பும் அதைச்சார்ந்து பின்னூட்டக்கருத்துகளை வைக்கும் கான் நித்தி போன்றோரின் கட்சியென்னவென்றால், இலக்கியவாதியின் ஒரே கடமை மக்கள் பிரச்சினைகள இலக்கியப்படைப்புக்களின் வழியாகக் காட்டி சமூகசேவை செய்ய வேண்டும். அல்லது அப்பிரச்சினைகளுக்குத் தலைமை தாங்க வேண்டும். அறச்சீற்றத்தை எழுத்திலும் செயல்களிலும் செய்யவேண்டும்.
      இதைப்பலர் செய்திருக்கிறார்கள். பாரதியார் சுதந்திர தாகத்தைத் தன் பாடல்களில் மூலம் எழுப்பினார். பல சமூக இழிவுகளைத் தாக்கி பாடல்கள் எழுதினார். பாரதிதாசனும் அவ்வாறே. நாமக்கல் கவிஞரும் அவ்வாறே.
      அதே வேளையில் இவர்கள் எழுதியவை எல்லாம் அப்பிரச்சினைகள் முடிந்த பின்னும் படிக்கப்படவேண்டுமெனில் அவை இலக்கியமாக இருந்தாலே சாத்தியம். சுதந்திரபோராட்டம் எப்போதே முடிந்துவிட்டது. இன்று பாரதியாரின் பாடல்களைத் தெருவெல்லாம் முழக்கமிட்டு சுதந்திரத் தாகத்தை எழுப்ப வேண்டியதில்லை. அப்பாடல்களுக்கு மிச்சமிருக்கும் ஒரே வேலை அவர் அப்போது அப்படிப்பாடினார் எனச்சொல்லி அவரின் நாட்டுப்பற்றைப்பற்றி வரலாறு எழுத மட்டுமே சுட்டிக்காட்டப்படுகின்றன. நாட்டைப்பற்றி அவர் பொதுவாக எழுதிய பாடல்கள் மட்டுமே இன்று பாடப்படுகின்றன. எவ்வளவுதான் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி ஒருவர் எழுதினாலும், அவை இலக்கியத்தரத்தில் எழுதப்பட்டால் மட்டுமே படிக்கப்படும். இல்லாவிட்டால் அப்பிரச்சினை முடிந்தபின் காணாமல் போகும். முள்ளப்பெரியார் பிர்ச்சினைபற்றி ஒரு இலக்கியவாதி அனல் பறக்கும் கவிதைகளை எழுதினார் என்று வைத்துக்கொள்வோம். அப்பிரச்சினை ஓரிரு ஆண்டுகளில் முடிந்துவிட்டதென்றால் அப்பாடல்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது கான்? எவரும் சீந்தமாட்டார்கள்.
      அறச்சீற்றம் என்பது ஒரு எழுத்தாளருக்கு இருப்பதும் ஒரு மக்கள் தலைவனுக்கும் இருப்பதும் வெவ்வேறு வகையானவை. எழுத்தாளனுக்கு இலக்கியம் தேவை. அவன் நிலைபெற; பேசப்பட; அறச்சீற்றத்தைக் காட்டி மொக்கையான பாடல்களை எழுதி பின்னர் அவர் தலைமை தாங்கினால், அவர் வெறும் மக்கள் தலைவனே. அவன் இலக்கியவாதியன்று. இலக்கியம் என்ற பேச்சுக்கேயிடமில்லை. அண்ணாச்சியும் கடையை வினவு தளத்தில் மூட வேண்டியதுதான்.
      வெறும் இலக்கிய இன்பத்துக்காகவும் பாடல்கள் எழுதப்படலாம். நாவல்கள் எழுதப்படலாம். உண்மையில் அவையே அவன் காலத்துக்கப்புறமும் படிக்கப்படும். பேசப்படும்.
      சங்கப்பாடல்கள் எல்லாம் சமூகப்பிரச்சினைகளைப்பற்றியா பேசின? அப்புலவர்கள் எல்லாம் மக்கட்தலைவர்களா ? இயற்கை அழகையும், பெண்ணைப்பற்றியும் காதலையும் காமத்தையும் வீரத்தையும் தமிழரின் அக்காலப்பண்பாடுகளையும் பற்றி மட்டும்தானே பேசினார்கள்? தேவாரம், திருவாசகம், மற்றும் திவ்யபிரபந்தம் எழுதிய, நாயன்மார்கள், ஆழ்வார்கள் மக்கட்தலைவர்களா ? அவர்கள் பாடல்களின் என்ன அப்போதைய் மக்கட்பிர்ச்சினை பேசப்படுகிறது? அவர்களை இன்றும் தமிழினிமைக்காக படிக்கிறோமே? இளங்கோ, சீத்தலைச்சாத்தானார், பெருந்தேவனார், திருத்தக்கத் தேவர் – இவர்கள் எழுதியவை இன்றும் இலக்கியம். இவர்களெல்லாம் என்ன அறச்சீற்றத்தைப் பற்றியா எழுதினார்கள்? அப்படியே சிறிது இருப்பினும் – எடுத்துக்காட்டு பாண்டியனுக்கு எதிராக எழுந்த கண்ணகி – அவை வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களின் கற்பனையான அறச்சீற்றங்களே. ஐம்பெருங்காப்பியங்கள், சங்க நூல்கள் எழுதிய புலவர்கள் மக்கள் தலைவர்களல்ல. ஒருசில மன்னர்களைத்தவிர மற்ற புலவர்கள் பாமரர்கள். அவர்கள் இலக்கியம் மட்டுமே படைத்தார்கள். அந்த மன்னர்களும் இலக்கிய இன்பத்துக்காகத்தான் எழுதினார்கள்.
      அவர்கள் இல்லாவிட்டால் – மீண்டும் சொல்ல வேண்டுமா ? – தமிழ் இலக்கியம் வெறும் காலி டப்பா! 
      இன்னொரு ஆபத்தும் இங்குண்டு கான். ஒரு புலவன் மக்கள்தலைவனாகவும் இருக்கிறான். மற்ற புலவர்களோ வெறும் ஆசாமிகள். இருவரும் இலக்கியம் படைக்கிறார்கள். அண்ணாச்சி நெல்லைத்தமிழில் மக்களும் முதல் ஆசாமியே சிறந்தவன். அவனை மட்டுமே படிப்போம். என்று சொல்லி இரண்டாவது ஆசாமியை வாங்கு வாங்கென்று வாங்குவார். இரண்டாது வகை எழுத்தாளனின் நிலையென்ன? அவன் எழுதமாட்டான்.
      ஆக, இலக்கிய வளர்ச்சியின் ஒரு காலை நாம் இங்கே உடைக்கிறோம் அதை வளரவிடாமல் தடுக்கிறோம்.
      எதை எப்படி எழுதவேண்டுமென்பது இலக்கியவாதிகளின் ஏகபோக உரிமை அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

  33. எழுத்தாளர் பைரவன்!
    உங்கள் கருத்தை இரண்டாவது பத்தியில் சொன்னதாக எடுத்துக்கொள்கிறேன்.
    நான் ஏன் சொன்னதைத் திரும்பிச்சொல்கிறேன் என்றால்.
    –ஒன்று நீங்கள் என் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது
    –என் கருத்தை மறுக்கலாம்.
    இரண்டையுமே செய்யாமல் நீங்களும் சொன்னதையே சொல்கிறீர்களே ஏன்?
    நான் மறுக்கிறேன். ஏனென்று பக்கம்பக்கமாக விளக்கித்தள்ளுகிறேன். சொல்வது புரியாமலிருப்பதாகத் தோன்றும்போது, எடுத்துக்காட்டுக்கள் வழியாகவா புரியவைக்கலாமென்றுதான் எடுத்துக்காட்டுக்கள் போடப்படுகின்றன.
    கண்ணதாசன் நல்லவரா கெட்டவரா என்பது தேவையில்லை. அவரை விட்டுவிடுவோம். அமுதவன் போன்ற கண்ணதாசன் பித்தர்கள் ஒரு அவரேஜ் தமிழனின் அடிமை மனப்பாங்கை வெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள். தமிழகம் முழுவதும் இரசிகமன்றங்கள் இவர்களால்தான் ஓடுகின்றன. அவர்களின் மனங்களைப் புண்படுத்தாமல், பிற எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.
    சங்கப்புலவர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தார்கள். அவர்களின் பாடல்களின் தொகுப்பே சங்கப்பாடல்கள். இவர்களின் வாழ்க்கை என்னவாக இருந்தன என்று எவராலும் சொல்லமுடியாது. இவர்கள் அனைவரும் ஒழுக்கசீலர்களாகத்தான் இருந்தார்கள் என்று அறுதியிடுவது பக்கா மடைமை.
    ஆனால் நாம் என்ன இவர்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொண்டா சங்கப்பாடல்களை உயர்ந்த இலக்கியம் என்கிறோம்? இல்லை அப்படியே இவர்களில் ஒருவன் பொறுக்கியென்று தெரிந்துவிட்டால் உடனே அவரின் பாடல்களை இலக்கியம் இல்லையெனத் தூக்கியெறிவார்களா ?
    செகப்பிரியரும் ஒரு பெண்பித்தர் என சிலவாண்டுகளுக்கு முன் ஒரு ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. அதற்கு முன்னரே பல வரலாற்று நூல்கள் அவரின் வாழ்க்கையப்பற்றி வெளிவந்தன.
    உடனே அவரின் நாடகங்களை உலகம் ‘சீ அசிங்கம் பிடித்தவன் எழுதியவை’ என்று தூக்கியெறிந்து விட்டதா ? எல்லாப்பல்கலைக்கழகங்களிலும் கற்றுக்கொடுக்கப்படுகிறதே?
    ஒரு ஐயங்கார் பாங்க் ஆஃப் பரோடாவில் அக்கவுண்டு ஓபன் பண்ணியிருந்தார். ஒரு நாள் அப்பாங்கில் கிளார்க் மாற்றலாகி இன்னொருவர் வந்தார். அவரிடம் இவர் கணக்கு போனபோது, ஐயங்கார் கேட்டார்: புதிதாக வந்திருக்கிறீர்களே! உங்கள் பெயரென்ன ?
    “இராவணன்’ என்று பதில் வந்த்து.
    மறுநாளே ஐயங்கார் தன் அக்கவுண்டை குளோஸ் பண்ணிவிட்டார்.
    உண்மையில் நடந்த சம்பவம்.

    ஆக, வெறும் பெயரே இவருக்கு எதையும் மாற்றுகிறது. அதைப்போலத்தான் இங்கும் வாதம் நடக்கிறது. எழுத்தாளரின் குணம் சரியில்லையெறால், அவர் புதின்ங்கள் படிக்கப்படக்கூடாது. அவர் புதினம் எழுதக்கூடாது. அதை வெளியிட கூட்டம் போடக்கூடாது? இப்போது புரிகிறதா ? இல்லையென்றால் மீண்டும் எழுத மாட்டேன்.
    எனவே உங்கள் வாதம் அடைப்படை பிழையானது.
    இலக்கியம் தனித்து நிற்கும். நின்றால்தால் இலக்கியம்.

    கண்ணதாசன் பாடல்கள் தனித்து நிற்கும். இதைச்சொல்வதற்கு அமுதவன் பக்கங்கள் தேவையில்லை. சாருவின் நூல்கள் தனித்து நிற்கும் அவற்றில் இலக்கியம் இருக்குமானால். ஒருவன் எவ்வளவு மகத்தான ஒழுக்கசீலனாக இருந்தாலும் அவன் எழுதிய புதினங்கள் இலக்கியமாக இல்லையென்றால், அவை படிக்கப்படா.
    இதுதான் இலக்கியம் என்று சொல்லி ஏமாற்றுவது, நூல்களை விற்க உபாயங்கள் தேடுவது; கூட்டம் கூட்டுவது எல்லாம் வேறான சப்ஜெக்ட்ஸ்.. அதை எது இலக்கியம்? என்று சப்ஜெக்ட்டோடு இணைத்துப்பேசக்கூடாது.

    • எழுத்தாளரின் குணம் சரியில்லையெறால், அவர் புதின்ங்கள் படிக்கப்படக்கூடாது. அவர் புதினம் எழுதக்கூடாது. அதை வெளியிட கூட்டம் போடக்கூடாது?///
      .
      .
      அய்யா ஒரு எழுத்தாளன் எப்பேர்பட்ட தற்குரியாகவும் இருக்கட்டும்!உங்கள் கையின் சுதந்திரம் அடுத்தவன் மூக்கில் படாத வரையே!அது போல இந்த ஆசாமியின் காம இச்சை தவறல்ல!அது அவரது உடல் சார்ந்த விசயம்!ஆனால் அதை அவர் வெளிப்படுத்த நாடும் வடிகால்தான் என்ன?இணைய செக்ஸ் அரட்டை!பெண்கள் கொஞ்சம் இவரிடம் நெருங்கி பேசினாலும் இவர் நடந்துகொள்ளும் முறை என்ன?அந்த பெண்மணியை வர்ணிப்பது அதற்கும் மேல் அவரது அந்தரங்க உறுப்புகள் பற்றி அந்த பெண்ணே கூசும்படி கேட்பது என நீள்கிறது!இது தவறில்லையா?உங்கள் வீட்டு பெண் இப்படி எந்த ஆசாமியிடமாவது மாட்டி கொண்டு மன நிலை அதிர்ச்சி அடைந்தால் நீங்கள் அந்த மனிதனை ஆ அது அவரது சுதந்திரம் என்று சொல்வீர்களா?

    • // எழுத்தாளரின் குணம் சரியில்லையெறால், அவர் புதின்ங்கள் படிக்கப்படக்கூடாது. அவர் புதினம் எழுதக்கூடாது. அதை வெளியிட கூட்டம் போடக்கூடாது? இப்போது புரிகிறதா ? //

      அப்படி 144 போட்டது யார்? அடிவயத்து கேசை பின்பக்கமாய் வெளியேற்றுவது குற்றம் என்று சட்டம் எதுவும் இல்லை. ஆனா பாருங்க, அப்படி வெடித்துக்கொண்டு வெளியேறுவதை எட்டாவது இசை என்று நீங்கள் அடிமுகர்ந்து மகிழ்ந்து அடுத்த வெளியீட்டுக்கு கூட்டம் போட்டு கும்மியடித்தால், விளங்குமாடே இந்த நாடு என்று அண்ணாச்சி மட்டுமல்ல பெரும்பான்மையோர் கேட்கத்தான் செய்வார்கள். புரிகிறதா?

      // இல்லையென்றால் மீண்டும் எழுத மாட்டேன். //

      அப்படியே செய்ங்க. அடிவயத்து கேசு வெளியேறினால் ஒரு ஆசுவாசம் இருக்கத்தான் செய்யுது.

  34. கனிமொழி ஜாமீனில் வருவார்னு நான் சொன்னன குறி எப்படி பலித்தது பாத்தீங்களா?ஆனால் கூடங்குளம் பிரச்சனை பற்றி குறி சொள்ளளியான்னு கேட்ட குரு தக்சனை கொடுத்தால் சொல்றேன்னு சொல்லறார்!அப்போ கனிமொழி எவ்வளவு குரு தட்சணை கொடுத்தார்?ஒரு தனி arasiyal vaarisu செல்வ சீமாட்டி வருவதை சொல்வதுதான் ஒரு இலக்கிய வியாதியின் கடமையா?ஐயோ!
    ஜெயா சுயநலமற்றவர் என்று இன்னொரு காமெடி பீசு!ஐயோ என்னால முடியல!ஹீ ஹீ!

  35. சாரு பேன்,

    இங்கு யாரும் இலக்கியம் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற தர்ம கர்த்தா சிந்தனை கொண்டிருக்கவில்லை. ஆனால் ஒரு இலக்கியவாதிக்கு சில அடிப்படை தார்மீக நெறிகள் தேவையா இல்லையா என்பதே கேள்வி. இலக்கியவாதியை ஒரு சூப்பர் ஹ்யுமனாக சித்தரித்து அவன் கபட வேடத்துக்கு வக்காலத்து வாங்கும் இழி செயலை இங்கு செய்கிறீர்கள். 19 ஆம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் ஒரு இலக்கியவாதி என்பவன் ‘a man talking to another man’ போன்ற சிந்தனைகள் உருப்பெற்று விட்டன. அவனுக்கு பின்னால் ஒரு ஒளிவட்டம் இல்லை என்ற தெளிவுகள் உருவாயின. எப்படி மனித இயக்கத்துக்கு கை, கால், தசைகள், தலை முதலானவை தேவையோ அது போலவே சமூக இயக்கத்துக்கு அரசியல், பண்பாடு, இலக்கியம், மருத்துவம், கல்வி என்று அனைத்தும் தேவையாக இருக்கின்றது. சில தொழில்கள் தன்னளவில் சில ஒழுக்கங்களை கோருகிறது. ஒரு ஆசிரியன் குடித்து கொண்டு தன மாணவர்களை சந்திக்க முடியாது. உயிர் மேல் மரியாதை இல்லாதவன் மருத்துவத் தொழிலுக்கு லாயக்கில்லை. அது போலவே சமூகத்தைப் பற்றி, வாழ்க்கையை பற்றி பேசும் ஒரு எழுத்தாளன் சில வாழ்க்கை மதிப்பீடுகளையும், சமூக மதிப்பீடுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? இல்லை தேவையில்லை என்று வாதிடுவீர்கள் என்றால் உங்களை ஆர்.எஸ்.எஸ் பாணியில் தீர்த்துக் கட்ட மாட்டார்கள் தோழர்கள். மக்கள் மன்றத்தில் அம்பலபடுத்துவார்கள்.

  36. //Social issue is a different matter.

    You have 2 points here:

    1. He wrote a novel about the tragedy of SLTs
    2. He is nominated for an award by the SL govt and he is invited to receive it.

    Can we link his melting heart in no. 1 to his act of going to Colombo in no.2

    அவரின் அப்படி அங்கு செல்வது செல்லாததும் அவரின் தனிநபர் நடத்தையை மட்டுமே காட்டும். ஒருவேளை சென்றால், அவர் விமர்சிக்கபபடுவார். ஆனால் அவரின் நடத்தையை அவரின் நாவலோடு இணைக்க முடியாது.

    ஒரு எழுத்தாளர் ஒரு புதினத்தின் பிற்புலமாக ஒரு உணமைச்சம்பவத்தை அப்புதினத்தைப்படைக்கத்தான் பயன்படுத்துகிறார். நாளை அதே சம்பவத்திற்கு எதிரான சம்பவத்தையும் அவரெடுத்து இன்னொரு புதினத்தையும் அவர் படைக்கலாம்.

    எனவே எழுத்தாளர்களின் தனிநபர் வாழ்க்கை வேறு. புதினங்கள் வேறு//

    ஈழத் தமிழ் மக்களை சிங்கள இனவெறி ராஜபக்‌சே அரசு கொன்றொழித்தது. இப்படுகொலையைப் பற்றி எழுதும் எவரும் இனவெறியன் ராஜபக்‌சேவை உளமாற வெறுக்கவே செய்வர்.அந்த பாசிஸ்ட்டுக்கு உரிய தண்டணை கிடைக்க வேண்டுமென விரும்புவர்.ஆனால் ஒரு எழுத்தாளர் படுகொலையைப் பற்றி எழுதவும் முடியும்.படுகொலை செய்தவனோடு விழாவில் பங்கேற்க்கவும் முடியுமென்றால்,அவரை எழுத்தாளர் என ஏற்க முடியாது.எழுத்து வியாபாரி என்றுதான் கருத முடியும்.இரட்டை வேடமிடும் அந்த வியாபாரியின் எழுத்தை மனம் ஒப்பிப் படிக்க முடியுமா? அமைதிப்படை சத்தியராஜை நிஜவாழ்வில் நம்மால் ஏற்க்க முடியுமா? முகத்தில் காறித் துப்பத்தானே முடியும்?

  37. காறித் துப்பலாம். தவறேயில்லை. உங்கள் உணர்ச்சிகளின் வெளிப்பாடு அது. மற்றவர்கள் யாது செய்ய முடியும்?

    ஆனால், அச்செயல் ஒரு அரசியல் நிகழ்வின் அடைப்படையால் வந்தது. ஈழப்போராட்டம் ஒரு அரசியல் நிகழ்வு. எல்லா மனித உரிமைப் போராட்டங்களும் அரசியல் போராட்டங்களே.

    ஒரு எழுத்தாளர் உங்கள் போராட்டத்தைப் பற்றி எழுதவேண்டும். அதை நியாயப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை அது சரியான எதிர்பார்ப்பு. ஆனால், நீங்கள் அவரைக்கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயத்தினால் இலக்கியம் படைக்கப்படுவதில்லை. எழுத்தாளன் தன் வழியில் தனக்குத் தோன்றியபடி எழுதும்போதே இலக்கியம் உருவாகும்.

    எழுத்தாளர்கள் சமூகப்போராட்டங்களின் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் செய்யும்போது அது பிரபலமாகிறது. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே எழுத்தால் மக்களிடம் வாங்கிய புகழை இங்கே டிபாசிட் பண்ணுவது போல. அவர்களின் போராட்ட ஈடுபாடு ஒரு அரசியல் செயல். இலக்கியச் செயலன்று. நான் ஏற்கனவே சொன்ன தனிமனித வாழ்க்கை; கற்பனை வாழ்க்கை இரண்டும் எழுத்தாளனுக்குண்டு. தனிமனிதனாக அவன் இச்செயலகளைச் செய்கிறான்.

    தத்துவமேதைகள், நடிகர்கள், கல்வியாளர்கள், மற்றும் பலவித துறைகளில் பிரபலமானோர் இப்படி சமூகப் போராட்டங்களில் ஈடுபடுவதுண்டு. அவர்களுள் எழுத்தாளரும் சேர்ந்து கொள்வார். அவ்வளவுதான். Russel, Satre and Arundati Roy are some of them.

    விரும்பினால் எழத்தாளர் சமூகப்போராட்டங்களை நிலக்களனாக வைத்தும் எழுதலாம். அது மாபெரும் இலக்கியமாகலாம் அவர் அப்போராட்டத்தில் ஈடுபட்டோ, விலகி நின்று பார்த்தோ, அல்லது போராளிகளின் மனநிலையை செயல்களை உணர்ந்தவராகவோ இருப்பின்.

    டிக்கன்ஸின் ‘தெ டேல் ஆஃப் டு சிட்டீஸ்’ ஃப்ரென்சுப்புரட்சியை நிலைக்கலனாகக் கொண்ட நாவல்.

    எஃது எப்படியிருப்பினும் அஃது அவர்களின் தன் விருப்பம். நிர்ப்பந்தம் பண்ணமுடியாது. அவர்களுக்கு வேண்டிய எழுத்துச்சுதந்திரம் – எதை எழுதுவது ? எப்படி எழுதுவது ? என்றெல்லாம் தீர்மானித்து அதன்படி எழுதுவது – முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும்.

    உங்கள் ஈழப்போராட்டம் ஒரு அரசியல் போராட்டம். சாரு ஒரு நாவல் அதை வைத்து எழுதி, அதில் அப்போராட்டம் கற்பனையாக விமர்சிக்கப்பட்டு, சிங்களவர்கள் அதற்காக அவரைப் பாராட்டினால், அதை அவர் மறுப்பது செய்யவேண்டும்.

    ஆனால் அவர் அப்படி எழுதக்கூடாது என்பது இயற்கை இலக்கியம் படைக்க எவை வேண்டும்; எவை வேண்டா என்றிட்ட நியதிகளை மீறுவதாகும். இயற்கை நியதிகளை மீறவே முடியாது. மீறினால் இலக்கியத்தின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செயயப்பட்டதாகும்.

    Freedom to a creative writer to write novels, poems and plays as he wants is

    NON NEGOTIABLE.

  38. மக்கா சாரு பேன், சாணிப்பயலுக்கு மனம்போனபோல​ எலக்கியம் படைக்க​ உரிம உண்டுண்ண​, அவன​ ​ மக்களெக்க மின்னால​ உருத்தெரியாம அடிச்சி அம்பலப்படுத்த​ எமக்கும் உரிம​ இரிக்குவே. அப்பிடி இரிக்கேலெ, நீரு ஏம்வே இதுக்கேடேல​ கெடந்து டயத்த​ வேஸ்ட் பண்ணுதீரு. வெறெ சொல்லத்தக்க​ சோலி ஒண்ணுமில்லெண்ண​ சாருக்கு பேன் பாக்குற​ சோலியப் பாரும்.. போவும் ஓய்…

  39. என் டயம்தானே வேஸடு. உம்ம டயம்யில்லியே.

    உமக்கு அடிக்க உரிமையிரிக்கி. வாஸ்தவம்ட். அவுகளுக்கு எப்படி எழதுக்கனும்னு உரிமை இரிக்கின்னு பாத்தீளா?

    அதுதாம்லே உலகம். அவனவன் உரிமை அவனுக்கு. நீரடித்தால் அவனடிப்பான். அப்படித்தானே எல்லாச்சண்டை சச்சரவுகளும் நடக்குது.

    ஆமா நான் நணபன் என்ற ஈழத்தவருக்குத்தானே பதில் சொன்னேன்.

    உமக்கு இங்கிட்டு என்னா சோலிலே?

  40. //எழுத்தாளன் தன் வழியில் தனக்குத் தோன்றியபடி எழுதும்போதே இலக்கியம் உருவாகும்.//

    நல்லது. சாருவுக்கு என்ன தோணுது என்பதை விட அவருக்கு இருப்பது ஒருவித பாலியல் வியாதி. அந்த வியாதி முற்றி விட்டதின் வெளிப்பாடுதான் அவருடைய எழுத்தாக வெளிவருகிறது. இதெல்லாம் இலக்கியம்னா மவுண்ட் ரோடு சரோஜா புத்தகங்களை தூக்கி அண்ணா நூலகத்தில் வையுங்கோ.

    • இருக்கட்டும் கான். வியாதியாகவே இருக்கட்டும். ஒரு எழுத்தாளரைப் படிக்க அவருக்கென்று ஒரு கூட்டமிருக்கும்போது அவர் எழுதுவார். நீங்கள் ஏன் கிடந்து அடித்துக்கொள்கிறீர்கள்? நான் எந்த்த் தமிழ் எழுத்தாளனையும் படிப்பதில்லை. பழந்தமிழ் இலக்கியம் மட்டுமே என் பொழுதுபோக்கு. இங்கு நான் எழ்துபவை தியரிகள்.

      வியாதி என்றவுடன் ஒன்றைச்சொல்லியாக வேண்டும். பல எழுத்தாளர்கள் மனவியாதியுடைவரே. அவ்வியாதியே அவர்களின் எழுத்துக்களை உரமேற்றுகிறது அல்லது மூலகரணியாக மாறுகிறது!!
      எடுத்துக்காட்டுகள் ஏராளமானவை.

      நான் பொதுவாக பேசுகிறேன். நீங்கள் உங்கள் உணர்ச்சிக்கோவையின் வடிகாலாக அனைத்தையும் நோக்குகிறீர்கள். நான் சாருவின் மனவியாதியைச்சரியென்றே அல்லது புகழவோ செய்யவில்லை. அல்லது நீங்கள் செய்வதைப் போல இகழவோ செய்யவில்லை. நான் சொல்வதெல்லாம், வியாதியும் உதவும்.

      சில்லாண்டுகளுக்கு முன் நான் படித்த செய்தி: டிக்கன்ஸின் படைப்புக்களின் சிறப்பு அவரிடம் இருந்த மனோவியாதியினாலே என்பது அவரின் வாழ்க்கையையும் படைப்புக்களையும் ஆராய்ந்து பார்த்த உளவியலாளர் சிலர் முடிபு. எனக்கு வியப்பில்லை. ஏனென்றால், அம்முடிபை நான் என்றோ யூகித்திருந்தேன்.
      Dickens’ psychosis worked like a catalyst in creating his great novels. This is the conclusion which was arrived at by a group of Psychologists in London.

      உங்களிடத்திலிருந்து பார்க்கும்போது இவையெல்லாம் புரிய கஷ்டம். அல்லது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் பொய்யென்று எப்படிச்சொல்ல முடியும்? நான் ஏற்கனவே ‘நண்பன்’ என்பவருக்கு எழுதியதைப்போல, இயற்கை விதிகளை நம்மால் மாற்றவியலாது. இலக்கிய தியரிகள் இயற்கையே வரைந்தவை.

  41. Politics in a literary work, is like a gun shot in the middle of a concert, something vulgar, and however, something which is impossible to ignore.

    – Stendhal, French writer

    ஸ்டெந்தால் ஒரு பெண்பித்தர்; குடிகாரர். ஆனால் மாபெரும் படைப்பாளி. பிரென்சு ஆங்கில இலக்கியத்தில் இப்படிப்பட்ட குடிகாரர்கள். பெண் பொறுக்கிகள் நிறைய உண்டு. பிரெஞ்சில் ஒரு திருடனும் உண்டு. ஜீன். ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜியார்ஜ் கிஸ்ஸிங் பொழுதே விபச்சாரிகளுடந்தான் கழிந்தது. ஷெல்லியும் பைரனும் பெண்டாட்டிகளை மாற்றிக்கொண்டார்கள். அப்படி வாழ்வது சரியென்றார்கள்.

    ஆனால் அவர்களின் படைப்புக்கள் போற்றப்படுகிறது அம்மக்களால். படைப்புக்களை படைப்பாளியின் ஒழுக்கம் சரியில்லையென்ற காரணத்தால் திட்டவோ, விடவோ தயாராகவில்லை. அவர்கள் எழுத்தாளர்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென நினைப்பதில்லை.

    நம் கலாச்சாரத்தில் ஒரேயொரு சாருவையே தாங்கமுடியவில்லை. ஒரு பத்து சாருக்கள் இருந்தால் வினவு குழுமம், அவர்களின் பின்னூட்டப்பட்டாளம் என்னவாகும்? ஒரு வலைபதிவு தாங்குமா ?

    இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. நாம் வாழும் தளம் வேறு. நம் கலாச்சாரம் வேறு. இங்கு சாருக்கள் மாறத்தான் வேண்டும். இல்லாவிட்டால் எழுதுவதை விட்டுவிட வேண்டும்.

    தமிழ்ப்பெண்களுக்கு கற்பு எவ்வளவு இன்றியமையாததாகக் கருதப்பட்டு போற்றப்படுகிறதோ நம் கலாச்சாரத்தில், அவ்வாறே, தமிழ் எழுத்தாளர்களுக்குத் தனிமனித ஒழுக்கம் முதலில் தேவை.

    ஒழுக்கமில்லாவிட்டால் எழுத வராதீர்கள்.

  42. Charu fan,

    இந்த இலக்கிய விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். உங்களுடைய பார்வையில் வினவு தளம் எப்படி? அவர்கள் செய்ய நினைக்கும் பணிகளையும், கொள்கைகளையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? சமத்துவ சமுதாயம் நிலவ அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

    நான்கைந்து வரிகளில் பதிலளித்தால் கூட போதும்!

    • Charu fan,
      ஏதேனும் தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டுவிட்டேனா? அல்லது பதிலளிக்க விருப்பமில்லையா? அல்லது சாதாரண வாசகனான என்னிடமிருந்து இக்கேள்வி வந்திருக்கக் கூடாதா?

  43. Absolutely No. As a reader, Anbu requests your viewpoint. You have argued in this article based on a theory or a set of theories. Like that, Anbu wonders if you have any theory on which basis you proclaim your viewpoint about Vinavu. Nothing big serious. Just to know about your viewpoint. that’s all. Would you?

  44. திரு சாரு பேன் அவர்களே,
    உங்களிடம் ஒரு கேள்வி ஒரு மூன்றாவது மனிதனாக,

    எழுத்தாளர் சாரு நிவேதிதா விற்கு அந்த பெண்ணை அறிமுகபடுத்தியது அவரோடு எழுத்து தானே, அந்த எழுத்து தானே அவரோடு அறிமுகம்,
    அந்த எழுத்தை வைத்து அவர் எந்த ஒரு சமுக மாற்றத்தை எண்ணவோ, ஏற்படுத்தவோ முடியவில்லை என்றாலும் தனது வக்கிர ஆசையை நிறைவேற்றி கொள்ள துடித்தறேனில், அப்படி பட்ட எழுத்தை வெறுப்பதில் என்ன தவறு?

    • 1. கவிஞர் பல பாடல்கள் எழுதுகிறார். அவை மக்களை ஈர்க்கின்றன. புகழப்படுகிறார். பல பெண் இரசிகைகள் அவரைக்காணச் செல்ல அவர்களில் ஒருத்தியையோ சிலரையோ அவர் தன் காம இச்சைக்கு ஆளாக்குகிறார்.
      2. பேராசியர் நன்றாகப் பாடம் சொல்லித்தருகிறார். அவரின் அறிவை அதீதமாக நினைத்து மாணவிகள் அவரிடம் மையல் கொள்ள ஓரிருவர அவர் பயன்படுத்திக்கொள்கிறார்.
      3. ஒரு ஆன்மிக வாதி அல்லது சாமியார் மிகுந்த ஆன்மிக ஒலியை வீசுகிறார் தன் பேச்சில் வெளித்தோன்றும் நடத்தையில், பல பெண்கள் சென்று வணங்க சிலரை அவர் தன்னிச்சைக்குட்படுத்திக்கொள்கிறார்.

      நான் மேலே காட்டியவை கற்பனையல்ல. உண்மையில் வாழ்க்கையில் பார்ப்பது இல்லையா?

      இப்போது, அந்த கவிஞர் எழுதிய பாடல்கள்; அந்த பேராசிரியர் எடுக்கும் பாடம், அந்த சாமியாரின் மதம் – இவையென்னவாகும்? அவர்களால் அவை கறைபடியுமா ?

      Can we throw all his earlier books of the poet?
      Can we say Physics or Chemistry or Maths is bad as the prof taught them?
      Can the victim throw away all such books as stained?
      Can the Hindu religion, if the saamiyar is Hindu, can Islam if the monk is a maulana, can Christianity, if the priest is a padre, be rejected by the devotee?

      இதே போல, சாரு நிவேதிதாவின் ஒரு நாவலால் அன்றி, அவரின் மொத்தமான எழுத்துக்களாலேயே அப்பெண் அவரிடம் தனியே உரையாட விரும்பினாள். சாருவும் சந்தர்ப்பைப் பயன்படுத்த, வினவு, தமிழச்சியெல்லாம் பாய்ந்து விட்டார்கள்.

      இப்போது உங்கள் கேள்வி அவரின் எழுத்துக்கள் என்னவாகும்? அவை அப்படியேதான் இருக்கும்.

      ஏனெனில், ஒரு பெண் ஒரு நாவலைப்படித்து விட்டு அதை இரசித்துப் போற்றிவிட்டு, நாவலாசிரியர் ஒரு பெண்பொறுக்கி என்று தெரிந்தபின் அந்த நாவலை எப்படி வெறுக்க முடியும்? அந்த நாவல் மாறிவிடுமா ? அவள் எதற்காக இரசித்தாலோ அவை நாவலில் இருந்து காணாமல் போய்விடுமா ? அவள் பொய்யாக இரசித்தாளா? லாஜிக் உதைக்குமே இங்கே !

      நாவல் வெறுக்கப்படுவது என்பது நடக்கா விசயம். ஏனென்றால், நாவல் என்பது ஒரு எழுத்துக்கோவை. அஃது உயிருள்ள மனிதனன்று.

      அதை எழுதியவன் மோசம்; எனவே அதுவும் மோசம் என்பது தாய் விபச்சாரி; அவளுக்குப் பிறந்த ஒரு மாதக்குழந்தையும் அருவருக்கத்தக்கது எனபதைப்போல.

      • //இப்போது, அந்த கவிஞர் எழுதிய பாடல்கள்; அந்த பேராசிரியர் எடுக்கும் பாடம், அந்த சாமியாரின் மதம் – இவையென்னவாகும்? அவர்களால் அவை கறைபடியுமா ?//

        இங்கு, சாருவின் எழுத்தும் கூட அப்படிபட்டது என்பதுதானே மையமான விவாதம்.

  45. ஒரு இலக்கியப்படைப்பின் தரம் அப்படைப்பு எப்படி எழுதப்பட்டது என்பதைப் பொறுத்தே அமையும்.

  46. TACAAATTGGAAACATAATCTCAATATGGATTAGCCACTCAATTCAACTTGGGAATCAAAGTCAGATTGA
    AACATGCAATCAAAGCGTCATTACTTATGAAAACAACACTTGGGTAAATCAGACATATGTTAACATCAGC
    AACACCAACTTTGCTGCTGGACAGTCAGTGGTTTCCGTGAAATTAGCGGGCAATTCCTCTCTCTGCCCTG
    TTAGTGGATGGGCTATATACAGTAAAGACAACAGTATAAGAATCGGTTCCAAGGGGGATGTGTTTGTCAT
    AAGGGAACCATTCATATCATGCTCCCCCTTGGAATGCAGAACCTTCTTCTTGACTCAAGGGGCCTTGCTA
    AATGACAAACATTCCAATGGAACCATTAAAGACAGGAGCCCATATCGAACCCTAATGAGCTGTCCTATTG
    GTGAAGTTCCCTCTCCATACAACTCAAGATTTGAGTCAGTCGCTTGGTCAGCAAGTGCTTGTCATGATGG
    CATCAATTGGCTAACAATTGGAATTTCTGGCCCAGACAATGGGGCAGTGGCTGTGTTAAAGTACAACGG

    மரபணு, புரியவில்லையா? பதிவை காணுங்கள் புரியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க