ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 100 சதவீதமும், பல்வேறு வணிகமுத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அந்நிய
நேரடி மூலதனத்தை அனுமதிப்பது எனக் கடந்த மாதம் மைய அமைச்சரவை முடிவெடுத்தது. இந்த முடிவை பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திருணாமுல் காங்கிரசும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவே ஓரடி பின்வாங்கியிருக்கிறது, ஐ.மு.கூ. அரசு.
அனைத்துக் கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வரும் வரை, தனது முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும், தற்போது ஒரு இடைத்தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என்பதுதான் முடிவைத் தள்ளி வைக்க காரணம் என்று வெளிப்படையாகக் கூறினார், பிரணாப் முகர்ஜி. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தைப் போல, இதுவும் ஒரு வாக்கெடுப்புக்குப் போனால், எம்.பி.க்களைக் கொள்முதல் செய்து தந்துவிட்டு, சிறைக்கும் போவதற்கு இன்னொரு அமர்சிங் இல்லையென்பதுதான் இந்தப் பின்வாங்கலுக்குக் காரணம்.

இம்முடிவைத் தள்ளிவைத்த சில நாட்களுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மன்மோகன் சிங், உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, எல்லாக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி அதன் பின்னர் இதனை அமல்படுத்துவோம் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார். தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் விசயத்தில், ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் மாறி மாறி நடத்தும் நாடகங்கள் அவர்களுக்கே புளித்துப் போகும் அளவுக்குப் பழகிவிட்டதால், ஒளிவுமறைவுக்குக்கூட இடமில்லாமல் போய்விட்டது. எனவேதான், தேர்தல் முடிந்தவுடன் அமல்படுத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னாலேயே அறிவிக்கிறார், மன்மோகன் சிங்.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் அந்நிய மூலதனத்தைச் சில்லறை வணிகத்தில் அனுமதிப்பதன் சாதகங்கள் குறித்த பிரச்சாரம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்த விவாதமே பொருளற்றது. சாதக பாதக அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அந்நிய மூலதனத்தை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவை அரசு எடுக்கப் போவதில்லை. அந்நிய நேரடி முதலீட்டினால் நன்மையை விடத் தீமைகள்தான் அதிகம் என்பதை நிறுவிவிட்டால், மன்மோகன் சிங் இதனை நிறுத்திவிடப் போவதும் இல்லை. உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு இந்த முடிவு அமல்படுத்தப்படுகிறது என்பதுதான் இப்பிரச்சினையின் மையப்பொருள். அது குறித்த கேள்வியை எழுப்பாமல் தவிர்த்துக் கொண்டே, பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதைத் தனியொரு பிரச்சினை போல விவாதிக்கின்றனர். இது மிகப்பெரும் மோசடியாகும்.
மைய வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவே சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளார். “இந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினராக உள்ளதால், அதன் முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும். அதுமட்டுமின்றி, இது போன்ற கேந்திரமான தொழில்களில் மேலை நாட்டு நிறுவனங்களை இந்தியா அனுமதிக்காவிட்டால், பொருளாதாரச் சிக்கலிலிருந்து அவர்கள் விடுபட முடியாது. அவர்களுடைய பொருளாதாரத்தைச் சார்ந்திருக்கும் நாமும் வளர முடியாது. சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பது குறித்த முடிவை ஏற்கெனவே எடுத்தாகி விட்டது. எந்தத் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்துவது என்பதில் மட்டுமே ஒத்த கருத்தை எட்டவேண்டியிருக்கிறது” என்று விளக்கினார், ஆனந்த் சர்மா.
உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்நிய முதலீட்டைத் தடுப்பவர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால், தாராளமயக் கொள்கையில் பா.ஜ.க.வின் யோக்கியதையை ஊரறியும். 1998இல் இருந்து 2004 வரை ஆறாண்டுகள் அக்கட்சி ஆட்சி செய்தபோதுதான், இந்தத் தாராளமயத்துக்கான வலுவான அடித்தளங்கள் எல்லாம் போடப்பட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி தருவதற்கு முன்னோடியாக இருந்தது. அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக மாபெரும் “மால்கள்” உருவாக்கப்பட வேண்டி, அதற்குத்தக்கபடி நகர்ப்புற நில உச்ச வரம்பை தளர்த்தியதும் பா.ஜ.க.தான்.
பா.ஜ.க.வின் அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சராயிருந்த முரசொலி மாறன் சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை 100 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார். 2004 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையிலேயே, சில்லறை வணிகத்தில் 26% அந்நிய மூலதனத்தை அனுமதிக்க இருப்பதாகக் கூறியது பா.ஜ.க. ஒருபக்கம் எதிர்ப்பு நாடகம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட மோடியும், பா.ஜ.க. வின் கூட்டாளியான நவீன் பட்நாயக்கும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குத் தமது ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
பா.ஜ.க. இன்று அந்தர்பல்டி அடித்தாலும், நடித்தாலும் அக்கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது காங்கிரசு கும்பலுக்கு நன்றாகவே தெரியும். “சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனம் என்பது நீங்கள் பெற்ற குழந்தை. நாங்கள் அதை வளர்க்கிறோம். அவ்வளவுதான்” என்றார் பிரணாப் முகர்ஜி.
அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்றாலும், பா.ஜ.க. கொஞ்சம் வரம்பு மீறிச் செல்வதாக ஆளும் வர்க்கங்கள் கருதுவதால், ஊடகங்கள் பா.ஜ.க.வை ‘கொள்கை இல்லாத கட்சி’ என்றும், ஓட்டுக்காகத் தேசத்தின் நலனை அடகு வைப்பதாகவும், தொலைநோக்குள்ள சிந்தனையை இழந்துவிட்டதாகவும் வசைபாடுகின்றன. பா.ஜ.க. தலைவர்களிடம் அவர்கள் கடந்த காலங்களில் தாராளமயத்துக்கு ஆதரவாகப் பேசியதையெல்லாம் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்கின்றன. ஊடகங்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கி பா.ஜ.க.வினர் திணறுகிறார்கள். ஆளும் வர்க்கத்தை அதிகமாகப் புண்படுத்திவிட்டோமோ என்ற அச்சமும் பா.ஜ.க. வைப் பிடித்தாட்டுகிறது. அதனால்தான் ‘வால்மார்ட்டைக் கொளுத்துவேன்’ என்று உமாபாரதி கொக்கரித்ததும், அதில் தமக்கு உடன்பாடில்லை என்று பா.ஜ.க. தலைமை அவசரமாக தனது நிலையைத் தெளிவுபடுத்தியது.
காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திருணாமுல் காங்கிரசின் யோக்கியதையோ தனிக்கதை. எஃப்.ஐ.சி.சி.ஐ. என்ற தரகு முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தீவிரமாக ஆதரித்தவருமான அமித் மித்ராவை நிதி அமைச்சராக வைத்துக்கொண்டு, மேற்கு வங்கத்தில் தாராளமயத்தைத் தாராளமாக அனுமதித்து வரும் மம்தா, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தீவிரமாக எதிர்ப்பதாக நடிக்கிறார். ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியிருப்பதால், விருப்பமில்லாத மாநிலங்கள் தடை செய்து கொள்ளலாம். ஆனால், அந்நிய மூலதனத்தை விரும்பும் மாநிலங்களும் அதனைப் பெற முடியாமல் தடுப்பது என்ன நியாயம் என்று வாதாடுகிறது காங்கிரசு கட்சி.
மாநிலங்களின் உரிமை மீது காங்கிரசுக்கு எழுந்துள்ள இந்த திடீர்க்காதல், மாநிலப் பட்டியலில் இருந்த பல அதிகாரங்களையும் மத்திய அரசு பிடுங்கிய போது எழவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை எனக் கூறும் இவர்கள்தான், சில்லறை வணிகப் பிரச்சனையில் மாநிலங்களுக்கு உரிமை வழங்கியிருப்பதாகப் பேசுகிறார்கள். ஒட்டகம் தலை நுழைக்க இடம் கொடுத்துவிட்டால், அது உடலை நுழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இந்த உரிமைக்கு அடிப்படையாகும்.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இடுப்பொடிந்து போய்க் கிடக்கையில், அவற்றைத் தூக்கி நிறுத்த வேண்டுமானால் அந்நாடுகளின் நிதிமூலதனத்தை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில் தடையின்றி அனுமதிக்க வேண்டும். அதற்காகத்தான் வால்மார்ட்டின் கையாளான ஹிலாரி கிளிண்டன் நேரடியாக இங்கு வந்து இந்திய அரசையும், ஆளும் வர்க்கத்தையும் நிர்பந்தித்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு இந்த ஆண்டு 49 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும் என வால்மார்ட் நினைத்திருந்தது. ஆனால், அவர்களேகூட எதிர்பார்க்காத வகையில் மன்மோகன் அரசு 51 சதவீதமாக அதனை உயர்த்தியது. அமெரிக்கப் பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் இந்தியப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் என ஆண்டையின் நலன் குறித்துக் கவலைப்படும் அடிமையாக இந்திய ஆளும் வர்க்கம் இருப்பதால்தான் அந்நிய முதலீட்டை இவ்வளவு மூர்க்கத்தனமாக ஆதரிக்கிறது.
சட்டமன்றத் தேர்தல்கள் முடிவதற்காகத்தான் எல்லோரும் காத்திருக்கின்றனர். பா.ஜ.க., தான் பெற்ற பிள்ளையை கைவிட்டு விடுமா, என்ன?
வினவின் போலி கம்யுனிசம மீண்டும் வெளிப்பட்டு உள்ளது.மோடி சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதளிடுக்கு ஆதரவளித்தார் என்று கிறித்துவ தொலைகாட்சிகலான டைம்ஸ் நொவ்,ந்ட்ட்வ் போன்றவை பொய் பிரசாரம் செய்தன. அதற்க்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
பாஜக ஆட்சியில் அதை கையில் எடுத்தது திராவிட கட்சியை சார்ந்த மாறன். அதற்க்கு சில பாஜக தலைவர்கள் விலை போனதும் உண்மை. அது சரி இங்கு இந்துத்துவம் எங்கு இருந்து வந்தது. அடுத்து சங்க பரிவர் இதை எதிர்த்தார்கள் என்று தெரியாத? சும்மா லூசு தனமா ஏதாவது பேசி கொடு இருப்பதே போலி கம்யூனிஸ்ட் கார்களுக்கு பிழைப்பு. சரி மதமாற்ற கும்பல் போடும் காசுக்கு நன்றாக வாழ் ஆட்டி தானே ஆகா வேண்டும்…
கதோலிக கிறித்துவ ஆட்சியை காட்டிலும் பாஜக பல மடங்கு நன்று. அதுவும் தவிர கம்யுனிச பர்மா, சீனா போன்ற நாடுகளை காணும் பொழுது சுதந்திரம் நமது நாட்டில் அதிகம். தவறான விசயத்திலும் சரி…. சரியான விசயத்திலும் சரி….
சரியான பதில்!பதில்கள் அளிக்கபடவில்லைஎனில் இவர்கள் இந்த புளுகு மூட்டைகளையே வேறு தளத்துக்கு எடுத்து செல்வர்!
சொல்லான் அவர்களே ! உங்களுடைய சுதேசி போலித்தனம்தான் அம்பலப்பட்டு உள்ளது. திராவிட பெயரில் முர்சொலி மாறன், கருணாநிதி, எம்ஜிஆர்,ஜெயலலிதா ஏன் அண்ணாவே செய்த தில்லுமுல்லுகளை எல்லாம் வினவு அம்பலப்படுத்தி உள்ளது. ஏன் முரசொலிமாறன் ஒரு காபினெட் அமைச்சர் – வாஜ்பாயின் மனமொத்த வழிகாட்டுதலோடுதான் அதனை அவர் செய்தா. பாஜகவின் ஆட்சி நடந்த போது அவர்கள் நாடாளுமன்றத்தில் வைத்த பட்ஜெட், அரசு கொள்கைக்களில் இது தெளிவாக உள்ளது. கொலைகாரன் மோடி ஆதரவளிப்பெதென்ன, முழு வீச்சில் அமல்படுத்தியதால்தான் அவர் பன்னாட்டுக் கம்பெனிகளின் செல்லப்பிள்ளையாக உள்ளார்.ஆமாம் பர்மாவில் எப்போது கம்பியினிசம் வந்தது ? சீனாவில் போலி கம்பியுனிஸம் போலியானது என்று எவ்வளவோ முறை சொல்லி ஆகி விட்டது – ஆதவன்
FDI in Retail is a very good decision.It ll give us much better supply chain technology and proper cold storage.We can also avoid unnecessary hoarding by middle men who cause fluctuations in prices.Soemthing like Walmart/Carrefour with their buying power ll bring price efficiency into the market and the consumers ll benefit the most.Not to forget the farmers ll also get a good market driven price instead of relying on random MSP from the government.
என்ன சுப்பிரமணி,நா ரொம்ப பிசி,எக்கசக்கமா பணம் பண்றவ உங்கள மாரி வேலை இல்லாதவன் இல்ல முட்டாள்களா அப்டி இப்டின்னு சொல்லி திட்டிட்டு போயிட்டு திரும்ப வந்துருக்க.சரி வா.
\\.It ll give us much better supply chain technology and proper cold storage //
இப்ப அந்த சங்கிலி எங்கேயும் அந்து தொங்குதா சுப்பிரமணி,உங்க தயிர்சாதமும் நாரத்தங்கா ஊறுகாயும் செய்யுறதுக்கு எல்லா பொருளும் அண்ணாச்சி கடையிலேயே கெடைக்குதே. t.v.பொட்டியும் வாசிங் மெசினும் வாங்கணும்னா அதுவும் உங்க திருநெல்வேலிகாரர் வசந்த் அண்ணாச்சிகிட்ட கெடைக்குதே.ஊர்ப்பாசம்னு வாய் கிழிய கத்துதீரே,உங்க ஊர்க்கரவுக அண்ணாச்சிமாறு வயித்துல அடிக்கலாமா.
இந்த cold storage வசதிய அரசாங்கமே செஞ்சு தரலாமே.அத வுட்டுட்டு இதுக்கு அமெரிக்காகாரன கூப்புடுதீரே.அப்புறம் எப்படி நீங்கல்லாம் வல்லரசு என்று மத்த நாட்டுக்காரன் பயப்படுவான்.
\\.We can also avoid unnecessary hoarding by middle men who cause fluctuations in prices //
இன்னும் நீ சின்னப்புள்ளையா இருந்த காலத்துலேர்ந்து வெளிய வரலையா,இன்றைய ஆன்லைன் வர்த்தக உலகில் விலையேற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.பதுக்கல் மட்டும் காரணமல்ல.மேலும் அந்த அந்நிய நிறுவனங்களே பதுக்கி வைத்துக் கொள்ள அளிக்கப்படும் சட்டபூர்வ அனுமதிதான் cold storage வசதிகள்.
\\ Soemthing like Walmart/Carrefour with their buying power ll bring price efficiency into the market and the consumers ll benefit the most.Not to forget the farmers ll also get a good market driven price instead of relying on random MSP from the government.//
வாங்கும் ஆற்றலால் விலையை குறைத்து வாங்குவார்கள் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.பிறகு எப்படி அது சிறு உற்பத்தியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நன்மை தருவதாக இருக்கும்.அதுவும் உங்க ஆசைப்படி MSP யும் இல்லாமல் போனால்.அந்த விலை குறைப்பு வாடிக்கையாளர்களான நமக்கு மலிவு விலையாக மாறி பயன்தரும் என்று தப்புக் கணக்கு போடுகிறீர்கள்.ஆம் எவன் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன. கல்யாணம்னா என்ன கருமாதின்னா என்ன நமக்கு தட்சிணை வந்தா சரிதான் என்ற உங்கள் பார்ப்பன புத்தி வேலை செய்கிறது.
”வாங்கும் ஆற்றலால்” விவசாயிகளையும் சிறு உற்பத்தியாளர்களையும் போட்டியாளர்களையும் ஒரு வழி பண்ணுவதே அடுத்து ”விற்கும் ஆற்றலால்” உம்மை போன்ற வாடிக்கையாளர்களை ஒரு வழி பண்ணுவதற்குத்தான்.
@Anbu
Vasanth & Co is there for many normal people,only high end customers go for perhaps Carrefour/Walmart and moreover it is not easy for these international retailers to eat our market or penetrate well.Many people still have loyalties to their nearby mom n pop stores,so this ll largely be an urban phenomenon.
Online trading is fine and yeah it encourages hoarding but one thing we forget here is that more often local hoarders/middle men will be connected to the government/administration and it ll be easy for them to hoard as they do no retail business.Whereas an international retailer will always be seen upon with suspicion as exploiters of economies of scale and hence they ll be hard pressed to be righteous and correct instead of trying to dominate.They also know that it ll be easy for them to be removed from the country if there are too many price hikes and also this causes anti incumbency feeling.
Third,dont u think today we have too many buyers and asymmetrical information as a result of which too many marginal farmers get exploited.If the end buyer is a huge corporate like Reliance/Walmart,then the farmers also ll collectivize themselves and hence this ll create pressure on the buyer to negotiate fairly.
It is also in the interest of the buyer as if ur seller goes bankrupt then ur business goes bust.This is not the case with those lazy middlemen,whom u guys hate for their inability to make a living out of physical work who can exploit a farmer to his ruin and the move on to the next or even worse move onto some other business.Walmart/Carrefour cant take that risk and jeopardize their investment and profits.
Government is an inefficient organization which doesn’t manage itself fiscally well and neither does it provide good cold storage.If it did then all those middle men ll go out of business and the parties run out of their money.Obviously we all want a welfare government which takes care of these essentials but if it is not happening why should we let the crops/vegetables rot which helps neither the farmer or the consumer,only the pests/rats which eat them.
And Vasanth & Co is fraud man,we used to shop at Vivek’s.if i want to help my native fellows,i ll much rather give an interest free loan to my samsaari for the next crop,that ll do more good than helping these fraudulent guys.
Basically u r saying these big corporates are too strong and dominating and they ll take us for a toss but i dont think India is that easy or simple to dominate.Letting them in ll do us more good than them.
எதெற்கெடுத்தாலும் “இந்துத்துவா கட்சி” என்று முத்திறை குத்துவது சரியல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகலுக்கும் எந்த கொள்கையும் கிடையாது. சந்தர்ப்பத்திற்கெற்ப்பநடந்து கொள்கின்றன. அவ்வளவே. கருனானிதி என்ன சொல்லுகிறாறோ அதுதான் தி.மு.க.வின் கொள்கை. முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள்நடத்தும் கட்சிகளிலும் இதேநிலைதான். உலக பயங்கரவாத அமைப்பான இஸ்லாம் பற்றி உங்களைப் பேன்றவர்களுக்கு தெரியாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.
சிறந்த பதிவு! ஆனால் தலைப்பு பொருத்தமானதாக இல்லை.