கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக ஜனநாயக முறையில் தீவிரமாக போராடி வருகிறார்கள். இதை முறியடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், பார்ப்பன ஊடகங்கள், காங்கிரசு – பா.ஜ.க முதலான ‘தேசிய’க் கட்சிகள் என அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
இதில் போராடும் மக்களின் அச்ச உணர்வை போக்கிய பிறகு மின் உற்பத்தியை தொடங்கலாமென்ற நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இதன்படி முத்து விநாயகம் தலைமையிலான மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இதுவரை மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையின் போது கூடங்குளம் போராட்டக்குழுவினர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து வரும் நிபுணர் குழுவினர் நான்காவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர்.
அதன்படி நேற்று 31.01.2012 செவ்வாயன்று நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிபுணர் குழுவும், கூடங்குளம் போராட்டக் குழுவினரும் வருகை தந்தனர். அப்போது இந்து முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் ரவுடி ஜெயக்குமாரின் தலைமையிலான குண்டர்கள் கூடங்குளம் போராட்டக்குழுவினரை வெறி கொண்டவாறு தாக்கியிருக்கின்றனர். தாக்குதலை வேடிக்கை பார்த்த போலிசார் பின்னர் இந்து முன்னணி குண்டர்கள் பத்து பேரை வேறு வழியின்றியும், போராட்டக் குழு பெண்களது போராட்டம் காரணமாகவும் கைது செய்திருக்கின்றனர்.
ஜனநாயக முறையில் போராடுவதைக்கூட இவர்கள் அனுமதிக்கவில்லை, இந்து முன்னணி போன்ற மதவெறி குழுக்களின் வெளிப்படையான தாக்குதலை வைத்து பார்க்கும்போது இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தையை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நிபுணர் குழுவிடம் மனுக் கொடுக்க வந்ததாகவும், போராட்டக் குழுவினர் தேச விரோதிகளென்றும், 140க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் உதயக்குமாரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்றும் ரவுடி ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டி கொடுக்கின்றான். இந்து முன்னணி காலிகள் தாக்கிய இந்த சம்பவத்தைக்கூட இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாக பொய்ச்செய்தியிட்டு அதற்கு ரகளை என்றும் தலைப்பிட்டு மகிழ்கிறது பார்ப்பன தினமலர்.
கூடங்குளம் போராட்டக்குழுவினரை அன்னிய சதி, வெளிநாட்டு பணம், தேச துரோகிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க வந்த நாசகார சக்தி என்றெல்லாம் பொய்ச்செய்தியை வெளியிட்டு தனது வாசகர் வட்டத்தை உசுப்பி வந்ததும் இதே தினமலர்தான். கூடங்குளம் பிரச்சினைக்காக தனிப்பெரும் வெறுப்பு இயக்கத்தையே பல்வேறு முனைகளில் தினமலர் எடுத்து வருகின்றது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது தேசத்துரோக சட்டங்கள் பாயும், பாயப்போகிறது என்று பீதியூட்டியதோடு, அரசவைக் கோமாளி அப்துல் கலாமின் உளறல்களை மிகப்பெரும் விளம்பரத்தோடு பரப்புரை செய்தது, உதயகுமாரின் செல்பேசி எண்ணை வெளியிட்டு அனைவரும் அவரை செல்பேசியில் அழைத்து மிரட்ட வேண்டுமென்பது வரை தினமலர் தனது விசமப் பிரச்சாரத்தை தொடர்ந்து கட்டவிழத்து வருகிறது.
இடிந்தகரை மக்கள் கிறித்தவ மீனவர்களாக இருப்பதை வைத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் மதவெறி ஊட்டி குளிர்காய நினைக்கிறது. இந்தியாவை சீர்குலைக்க கிறித்தவ பாதிரியார்களின் சதியாக மக்களிடம் வன்மத்தை விதைத்து ஆதாயமடையவும் நினைக்கிறது இந்தக் கும்பல். கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் இருக்கும் தமிழக காங்கிரசோ தனது ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை நிலை நாட்ட அன்னிய நாட்டுப் பணம் கூடங்குளம் போராட்டக்குழுவினருக்கு வருகிறது என்று கிடைக்கும் காசுக்கு மேல் கூவுகிறது.
இடிந்தகரை மக்களுக்கு சொந்தமான தேவாலய இடத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், ஏனைய சில்லறை செலவுகளுக்கும் முதலில் பெரும் பணம் எதுவும் தேவையில்லை. மேலும் அத்தகைய செலவுகளுக்கும் அப்பகுதி மக்களே குறிப்பாக மீனவர்கள் தங்களது வருமானத்திலிருந்து நிதியுதவி அளிக்கின்றனர். இதை போராட்டக்குழுவினர் பலமுறை விளக்கியபிறகும் அப்படி ஒரு அபாண்டத்தை காங்கிரசு, காவி, தினமலர் காலிகள் தொடர்ந்து ஊளையிடுகின்றனர். கார்ப்பரேட் மீடியாவின் டார்லிங்காக இருந்த அண்ணா ஹசாரேவின் உண்ணா விரதக்கூத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தது போல கூடங்குளத்தில் நடக்க வில்லை, நடைபெறவும் முடியாது.
சரி காங்கிரசு கயவாளிகள் சொல்வது போல இந்தப் போராட்டத்திற்கு அன்னிய நாட்டு பணம் வந்தால் அது எந்த அன்னியா நாடு என்று பகிரங்கமாக அறிவிக்கலாமே? அமெரிக்காவா, ஜெர்மனியா, இத்தாலியா, பிரான்சா, ஜப்பானா என்று அந்த நாட்டைக் கண்டுபிடித்து தூதரக உறவை துண்டித்துக் கொள்ளலாமே? அதை விடுத்து பொதுவாக அன்னிய நாட்டுப் பணமென்று நாடகமாடுவதன் நோக்கமென்ன? ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் இங்கு அன்னியப்பணம் சட்டப்பூர்வமாக எப்படி வர முடியும்?
உண்மையில் மக்களது போராட்டங்களை சீர்குலைப்பதற்கு இலட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு காசு வரவழைத்து குளிப்பாட்டுவதெல்லாம் காங்கிரசு, பா.ஜ.க அரசுகளே தரகர்களாக முன்னின்று செய்யும் நடவடிக்கைகள்தான். அதிலும் வெளிநாட்டிலிருந்து அதிக பணம் பெறும் நிறுவனங்களாக விசுவ இந்து பரிஷத்துதான் முதலிடத்தில் இருக்கிறதென்பது பல வருடங்களுக்கு முன்னரே நிரூபிக்கப்பட்ட விசயம். அதிலும் கணக்கு வழக்கில்லை என்பதும் ஆதாரத்துடன் தோலுரிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது.
இதற்கு மேல் இந்த நாட்டின் அன்னியக் கைக்கூலிகளாக நடந்து கொள்வது யார்? தற்போதைய காங்கிரசு கூட்டணி அரசும், முன்னர் இருந்த பா.ஜ.க கூட்டணி அரசும்தான் முதன்மையான அன்னியக் கைக்கூலிகள். பாரத மாதாவை பன்னாட்டு நிறுவனங்கள் கதற கதறக் கற்பழித்து வருவதற்கு மாமா வேலை பார்த்தது ஆதாயமடைந்தவை இந்தக் கட்சிகள்தான். மன்மோகன் சிங்கை விட ஒரு சிறந்த அன்னியக் கைக்கூலியை இந்தியாவில் யாரும் சொல்லிவிடமுடியுமா என்ன?
இப்படி இருக்கும் போது பீஸ் போன பல்புகளான இளங்கோவும், தங்கபாலுவும், ஞானசேகரனும், கோபண்ணாவும், அன்னிய சதி என்று பேசினால் அவர்கள் பல் இருக்க வேண்டுமா இல்லை உடைக்கப் படவேண்டுமா?
அடுத்து தினமலர் முதலான பார்ப்பன ஊடங்கள் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடுவதற்கு உதவி செய்யும் என்றொரு பொய்யை விரித்து நடுத்தர வர்க்கத்தையும், ஏன் பொது மக்களையும் உசுப்பி விடுகின்றன. ஏதோ கூடங்குளத்தில் தயாரிக்கப் போகும் மின்சாரம் வராததினால்தான் தமிழக கிராமங்களில் ஐந்து மணி நேர மின்தடை இருப்பதாக இவர்கள் கூசாமல் பொய்யுரைக்கின்றனர்.
தற்போதைய மின்தடைக்கு காரணமென்ன? பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பட்டணத்து பேரங்காடிகளுக்கும் தடையின்றி அளிக்கப்படும் மின்சாரம்தான் மக்களுக்கு மின்தடையாக மாறுகின்றது. சிறு, நடுத்தர தொழில்கள் செய்யும் முதலாளிகள் உட்பட பாமர மக்கள் வரை இந்த மின்தடையினால் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் மின் உற்பத்தி பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தாலும் இன்னும் 40 இலட்சம் கிராமங்களில் மின்சாரமில்லை. எனில் உற்பத்தியாகும் இலட்சக்கணக்கான மெகாவாட் மின்சாரம் எங்கே போகிறது?
வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார தேவை என்பது இத்தனை இலட்சம் மெகாவாட்டுகளாக இருக்குமென்று பட்டியல் போடுகிறார்களே, அந்த தேவையில் நாம் இல்லை. ஆக பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளது தேவையை இந்தியாவின் தேவையென்று மடை மாற்றிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இது தெரியாத சிறுமுதலாளிகளெல்லாம் கூடங்குளம் மின்னுற்பத்தி ஆரம்பித்தால் தங்களது அவலம் மாறுமென்று அப்பாவியாக நம்புகிறார்கள். மக்களின் இந்த மூடநம்பிக்கைதான் தினமலரின் பலம். இந்தியா வல்லரசானால் முதலாளிகளுக்குத்தான் ஆதாயமே அன்றி ஏழை மக்களுக்கு அல்ல. அவர்களது வல்லரசு வளர்ச்சியில் பெரும்பான்மை மக்கள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
இதற்கு மேல் அணுமின்சாரத்தில் சில பத்து மெகாவாட்டுகளைக்கூட தாண்டும் நிலையில் உற்பத்தி இங்கில்லை. வெளிநாடுகளில் காலாவதியான ரியாக்டர்களை பெரும் செலவில் நமது தலையில் சுமத்தும் கொள்ளைதான் கூடங்குளத்திலும், மற்ற இடங்களிலும் நடக்கப் போகிறது. அதுதான் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். தானே புயலால் நிலை குலைந்த கடலூர் மக்களைக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசா அணு விபத்தால் அழியும் நமது மக்களை காப்பாற்றும்?
ஆகவே கூடங்களும் அணுமின்நிலையத்திற்காக பொதுக்கருத்தை ஆதரவாக பல முனைகளில் உருவாக்கிவிட்டு பின்னர் போராட்டக்குழுவினரையும், மக்களையும் ஒடுக்கும் பாசிச தந்திரம்தான் இவர்களிடம் இருக்கிறது. அதன்படி வரும்நாட்களில் இவர்களது பாசிச தர்பார் படம் விரித்து ஆடும். அதன் முன்னோட்டம்தான் இந்துமுன்னணியின் ரவுடி தாக்குதல். இந்தபடிக்கு போனால் இவர்கள் உதயகுமாரை கொல்வதற்கு கூட முயல்வார்கள். அத்தகைய தாக்குதலை உளவுத்துறைகளே கூட வடிவமைத்தால் கூட ஆச்சரியமில்லை. கைது, சிறை, வழக்குகள் என்று மிரட்டினால் எந்த மக்களையும் பணியவைக்க முடியுமென்பது ஆளும் வர்க்கத்தின் பாலபாடம்.
ஆயினும் இந்த பாடத்தை நாம் உடைக்க முடியும். போராடும் மக்களுக்கு நமது ஆதரவை கருத்திலும், களத்திலும் தெரிவித்து இந்த வேடதாரிகளை முறியடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும்தான் கூடங்குளத்திலும் மக்களது எதிரிகளாக வலம் வருகின்றன. ஏற்கனவே முள்ளி வாய்க்கால் படுகொலைக்கு காரணமான இந்த காங்கிரசு கயவாளிகள் தண்டனை பெறாமலேயே தெனாவட்டாக திரிகிறார்கள். ஆக பழைய கணக்கு, புதுக்கணக்கு எல்லாவற்றையும் பைசல் செய்ய வேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரசு என்றொரு கட்சி இனி இருக்கக் கூடாது.
அதே போல காவி வெறிக் கும்பலையும் தகுந்த பாடம் புகட்டி தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும். எல்லாப் பிரச்சினையிலும் மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ரத்தவெறி பிடித்த ஓநாய்கள்தான் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. ஆரம்பத்திலேயே இந்த ஓநாய்களை வேட்டையாடி அழிப்பது நமது கடமை. இல்லையென்றால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.
தினமலம் புறக்கணிக்க படவேண்டிய பத்திரிகை. மக்கள் போராட்டம் வெல்க.
அண்டை நாடுகளிடமிருந்தும், குறிப்பாகச் சைனாவிடமிருந்தும் மின்சாரத்தை இறக்குமதி செய்ய வழி இருக்கிறதா? அணு உலைகளை இரக்குமதி செய்வதற்குப் பதிலாகப் பேசாமல் சைனாவிடமிருந்து மின்சாரத்தையே நேரடியாக இறக்குமதி செய்துவிட்டால் என்ன? சுற்றப்புறம், பாதுகாப்பு பிரச்சினையெல்லாம் அவர்களுக்கே! நமக்கு மின்சாரம் மட்டும்!
முரண்பாட்டைக் கொண்ட நடுவண் அரசு என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது? ஏவிவிட்டுக் கொண்டு எதுவும் அறியாததைப் போல் இருக்கும் அரசின் போக்கு சின்னத்தனமாக உள்ளது.மயிலே! மயிலே இறகு போடு என்றால் போடுமா? இனி பொறுத்திருப்பது என்பது உணர்வற்ற நிலைக்குரிய பிணத்திற்கு ஒப்பானதே!கூடங்குளம் வாழ் மக்களுக்காக அனைவரும் ஒன்று கூடுவோம்.அணு உலை வேண்டாம் எனக் கூக்குரலிடுவதை விட ஊர்தோறும் அணு உலை எதிர்ப்பாளர்கள் யாவரும் அரசைக் கண்டித்து உரிய நம் உறவைக் காப்பாற்ற முன் வருவோம்.மின்சாரம் வேண்டாம்.எங்களின் சம்சாரிகளே வேண்டும்.மத வெறியைத் தூண்டும் தினமலரை ஓடஓட விரட்டுவோம்.
பழைய கணக்கு, புதுக்கணக்கு எல்லாவற்றையும் பைசல் செய்ய வேண்டுமென்றால் தமிழகத்தில் காங்கிரசு,அந்து முண்னனி,அந்துமலர் எதுவுமே இல்லாமல் செய்வதற்குஉழைக்கும் மக்கள் ஓரணியில் திரள வேண்டிய கட்டாய நேரம் வந்தவிட்டது.
இன்றும் கூட கல்பாக்கத்தில் 5 மணி நேரம் மின் வெட்டு இருக்கிறது என்ற உண்மையை எந்த ஊடகமும் சொல்லாமல்… மின் வெட்டை தடுக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் அணு உலைகள் தேவை என பொய்களை மட்டுமே… இந்த சன் டிவி, கலைஞர் டிவி, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் மக்களிடம் சொல்லி கொண்டுள்ளன…
முல்லை பெரியாறு பிரச்சனையாக இருந்தாலும், ஈழ தமிழின படுகொலையாக இருந்தாலும் சரி… காங்கிரஸ், பாஜக, ஜெ. கட்சி, திமுக, சிபிஎம், சிபிஐ, இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ்., பாமக, சாதி சங்கங்கள் என அனைவரும் இந்திய பாசிசத்திற்கு ஆதரவாக வேலை செய்து கொண்டுள்ளன… இவர்கள் அனைவரையுமே மக்கள் எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தில் உள்ளனர்… ஆனால் மக்கள் இந்த கயவாளி கட்சிகள் மற்றும் சாதி சங்கங்கள் பின் சென்று ஏமாற்ந்து கொண்டு இருக்கின்றனர்…
[…] : வினவு பகிர்ந்துகொள்ள […]
[…] https://www.vinavu.com/2012/02/01/koodankulam-trash-congress-saffron-criminals/ Share this:TwitterFacebookLike this:LikeBe the first to like this post. By தமிழக மீனவர்கள் Posted in தமிழக மீனவர் 0 […]
கூடங்குளம் போராட்டகுழுவுக்கு காசு வெளிநாட்டில் இருந்து வருதாம்… எந்த நாடு(கள்)? ஏன் இந்தியா அந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிடவில்லை? ஏன் அந்த நாடுகளின் தூதர்களை அழைத்து கண்டிக்கவில்லை? இன்னும் ஒரு படி மேலே போய் ஏன் தூதரக உறவை துண்டிக்கவில்லை? …ரீல் சுத்துறதுக்கும் ஒரு அளவு இல்லையா? கூடங்குளம் நிலையத்தில் இருந்து இதுவரை எத்தனை பேர் டிரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடிருக்காங்க என்ற தகவல் சென்ற வார தினத்தந்தியில் வெளியானது. அதை ‘இந்து முண்ணனி’ கண்மணிகள் படிக்கலியோ?
கடலில் காப்பாதுங்கன்னு கூப்பிட்டப்ப ஒரு நாயும் வந்து எட்டி பாக்கல… கரையில் வேண்டவே வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் போது மட்டும் இந்த இந்து முண்ணனி, காங்கிரஸ் களவாணிகளுக்கு காது கேக்குதா?
இந்தக் “கதர்” சொறிநாய்களையும், “காவி” சொறிநாய்களையும் கண்ட இடத்தில் அடித்துத் துவைப்போமென்று உறுதியெடுத்துக் கொள்வோம்.. கூடங்குளம் மக்கள் போராட்டம் வெல்ல களத்திலும், கருத்திலும் துணை நிற்போம்.
இது பெரிய மதகலவரமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது
எப்படின்னு சொன்னா தேவலை? ‘இடிந்தகரையை’ சேர்ந்த பெரும்பான்மையான கிருத்துவர்களும், ‘கூடங்குளத்தை’ சேர்ந்த பெரும்பாலான ‘இந்து’க்களும் தான் போராட்ட களத்தில் நிற்கிறார்கள் என்பதை உங்களுக்கு தெரியப் படுத்த விரும்புகிறேன்.
அருமையான பதிவு. கூடாங்குளத்துக்கு ரவுடிகள அனுப்பியது யாரா இருந்தாலும் அவுங்களையும் தண்டிக்க வேண்டும். இது கையாலாகாத அரசு. மக்களின் நியாயமான போராட்டம் நிச்சயம் வெல்லும்.
கூடம்குளம் அணு உலைக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியிருக்கும் சில சாதி அமைப்புகளால் இந்த பிரச்சினை சாதி பிரச்சினையாகவும் வெடிக்கக் கூடிய அபாயம் இருக்கிறது.
பிஜேபிக்கும், காங்கிரசிற்கும் எந்த வேறுபாடுகளும் இல்லையென்பதற்கு கூடங்குளம் நிகழ்வுகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
Dear Vinavu
Right Article at right time. there is a danger coming in the form of BJP and Congress. they are together in this. some thing danger is coming on the way to our state from this two parties. we have to think how to protect the people from this dangers. atleast now the minorities should join VInavu and support the cause. other wise the south India’s gujarat is in the cards. we have to act Now or never we can raise.
Regards
GV
1. சமச்சீர் கல்வி வேண்டுமென்று நாம போராடினால் இவன் வேண்டாம் என்பான்.
2. செங்கொடியின் வீர மரணத்துக்கு நாம் கண்ணீர் விட்டுக் கதறும்போது, செங்கொடியின் இறப்பு காதல் தோல்வியால் என்பான்.
3. தமிழிழீழத்துக்காக தன்னுயிரீந்த முத்துக்குமார் மரணத்தை நையாண்டி செய்வான்.
4. மூவர் தூக்குக்காக தமிழகமே அல்லோலகல்லோலப்படும்போது, வேலூரில் தூக்குமேடை சரி செய்யும் காட்சியை விவரிப்பான்.
5. கலாமின் கயமைத்தனத்தால் தமிழகமே அவரை விமர்சிக்கும்போது, அவரை வைத்து ஒரு பக்கக் கட்டுரை எழுதுவான்.
6. தமிழ் தமிழென நாம் தவித்துக்கொண்டிருக்கையில், டமால், டிமீல், டுமீல், பணால், அவுட் என்று விபத்துகளுக்குக்கூட தலைப்பிடுவான்.
7. ஆளும் கட்சிகளுக்கு மட்டும் விழுந்து விழுந்து ஜால்ரா அடிப்பான்.
8. கூடங்குளம் குறித்து மாணவ மாணவிகள் உண்ணாவிரதமிருந்தபோது, அவர்கள் பள்ளிக்கு ‘கட்’அடித்துவிட்டு வருபவர்கள் என்று எழுதுவான்.
9. தார்ச் சாலையில், ஏழை விவசாயிகள் கம்பு, கேழ்வரகு காயவைத்திருந்தால், போகும் வரும் கார்களுக்கு ஆபத்து என போட்டுக்கொடுப்பவன்.
10. இப்போது, கூடங்குளம் பிரச்சினையில் சாதிப்பிரச்சினையைக் கலந்து, கிருத்துவர்க்கும், இந்துக்களுக்குமிடையில் கோள்மூட்டி விடுகிறான்.
இவனை யாரென்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?
\\ஆளும் கட்சிகளுக்கு மட்டும் விழுந்து விழுந்து ஜால்ரா அடிப்பான்.\\
நீங்கள் போட்டிருக்கும் மற்ற 9 விவரனங்களுக்கும் காரணம் இந்த ஒன்று தான்… இவன் ஒரு ஜால்ரா… கடந்த ஆட்சியில் கருணாநிதியை ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டு இப்ப படு கேவலமா அவரை விமர்சிப்பதிலிருந்தே இவனின் பச்சோந்தித்தனம் புலப்படும்…
பழி வாங்கும் மிருக குணமும் கொண்டவன் இவன்.. இராமதாசு, உதயகுமார், சினிமா சங்கங்கள், தினகரன், சன் டிவி, ஆகியன இவனை எதிர்த்ததால் இவர்களை பற்றிய சிறு செய்திகளையும் மிகைப்படுத்தி பூதாகரமாக திரித்து எழுதி பழி வாங்கும் குணம் உடையவன்… இந்த பழிவாங்கல் செய்திகள் மட்டும் தான் நான் படிப்பேன் ஒரு நகைச்சுவை துணுக்கு போல இருக்கும்…
கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கார்பரேட் செய்தியாளர்கள், காசுக்காக செய்திகளை வாங்கி, காசுக்காக செய்திகளை விற்கிறார்கள். கூட்டிக்கொடுக்கும் வேலையை விபச்சாரம் செய்யுமிடத்தில் மட்டும்தான் பார்க்கமுடியும் என்று எண்ணிவிடாதீர்கள், நண்பர்களே!
அருமை தோழா!!! நல்ல கருத்துக்கள்… பாய்ந்து வரட்டும் வெள்ளமென……
தினமலம் என்ற நச்சு கிருமியை தமிழகத்தில் இருந்து விரட்டுவதை பற்றி விரிவாக மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Eyaa ella thiryareenga ! minsaaram illamal thavithu kondirukkira namadhu maanilathirkku naalu ayal naatu kaasai vaangi pizhaippu nadathi kondirukkira nabargalukku aadharavaga vinavu en poga vendum? adakki vaassiyinga
அண்ணன் ஏரியாவுக்கு புதுசு போல….
தோழர் பொன்!!!! வரட்டும்… வரவேற்போம்…. பயந்து ஓடிவிட போகிறார்கள்….
இந்த துரோக கும்பலிடமிருந்து நம் மக்களுக்கு என்றுதான் விடிவோ…?
தினமலர் ஒரு தலைபட்சமாக கருத்து தெரிவிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது !. பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிந்து அதே நாளில் ஏன் இந்து முன்னணியினர் மனு கொடுக்க ஆட்சியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் ? இதில் இருந்தே தெரிகிறது யார் திட்டம் தீட்டி இந்த வன்முறையை உருவாக்கினர் என்று . இன்னொரு விஷயம் . பெண்களே வந்து போராடுகிறார்கள் என்றால் இந்த பெண்கள் எல்லாம் தங்கள் நிலங்கள் ,தங்கள் வாழ்வாதாரங்கள் , தங்கள் சந்ததியினர் நாசமாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் . ஆனால் இந்து முன்னணி இது வரை உருப்படியாக எந்த காரியத்தையும் செய்ததில்லை வன்முறையில் ஈடுபடுவதைதவிர .தினமலரின் தரம் தாழ்ந்து வருவதை இதை போன்ற செய்திகள் விளக்கமாக கூறுகின்றன
இந்தியா வல்லரசாகக் கூடாது என்று அமெரிக்க சதித்திரட்டம் தீட்டி உள்ளது. அமெரிக்காவின் உளவாளிதான் இந்த உதயகுமார். இவன் பேச்சு வார்ததைக்கு வரும்பொது 50 பெண்களை உடன் அழைத்துவந்துள்ளான். ஆண்கள் இவனுக்கு பிடிக்காது போலும். மின் வெட்டால் தமிழகம் தல்லாடிக்கொன்டு உள்ளது. திருப்பூர் போன்ற ஊர்களில் குடியேரியுள்ள பல ஏழை மக்கள் மின்வெட்டால் வருவாய் இல்லாமல் தவிக்கிரார்கள். உங்களுடைய இந்த பதிவு ஒரு தலைப்பச்சமாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக உள்ளது. தொடர்பு பலமாக இருக்கும் போல் தெரிகிறது!!! இந்தியாவிற்கு எதிராக செயல்படும் இந்த “உதவாத குமார் மற்றும் கிருத்துவ பாதிறிகளை” நாட்டைவிட்டு துரத்தவெண்டும். கிருத்துவ பயங்கர வாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் நீங்களும் ஒரு பயங்கரவாதியே. எதர்க்கெடுத்தாலும் ஜாதியை முன்நிருத்துவது சரியல்ல! உங்கள் பதிவு அணுமின் உலைக்கு எதிராக செயல்படும்போது மற்ற பத்திரிக்கைகள் ஆதரவு தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஜனநாயக அமைப்பில் மாற்றுக்க்ருத்துக்கும் இடம் உண்டு.
which means you do not care how the hell your neighbor is suffering as long as you can enjoy freebie? i would say you are a selfish. first ask kerala to give mullai periyar water. then we can talk about koodan kulam nuke planet. double standard bastards ruling India, why in the blue hell you are blabbering like an Idiot?
I accept your fitting answer . Really great. Congrats.
நட்டுன ராயன் அவர்களே!இந்தியா வல்லரசாகக் கூடாது எனும் அமெரிக்காவுக்கெதிராக உங்கள் கூட்டத்தை வைத்து எதிர்ப்பைக் காட்டுங்களேன்! அமெரிக்காவுக்கு காவடி தூக்குவதற்கு உங்கள் கூட்டமும் சளைத்தது அல்ல என்பதைத்தான் உங்கள் பீஜேபி ஆட்சியில் நாங்கள் பார்த்தோமே! உதயகுமார் உளவாளி என்பதை இந்திய உளவுத்துறைக்கு ஆதாரப்பூர்வமாக தெரிவியுங்களேன்.
பார்த்தீர்களா!! பெண்களுக்கு மத்தியில் கூத்தடிக்கும் உங்கள் சாமியார்களின் வாசம். பெண்கள் என்ற வார்த்தையைப் பார்த்ததும் உங்களுக்கும் வந்துவிட்டது.
ஒன்று செய்வோம். எங்கள் சனமெல்லாம் பிழைப்புக்காக திருப்பூர் போன்ற ஊர்களுக்கு செல்வதைப் போல, அணுமின் உலையை சுற்றி வாழும் பாவப்பட்ட மக்கள் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வரட்டும். நீங்கள் உங்கள் கூட்டத்தை அழைத்துக்கொண்டு, அணுமின் உலைக்கு பாதுகாப்பாக சுற்றிலும் குடியமறுங்களேன்.
ஐயா நாட்ராயன் அவர்களே,
இந்திய சுதந்திரப் போருக்குப் பின் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம் கூடங்குளம் மக்களின் போராட்டம் தான். நீங்கள் தூக்கிப் பிடிக்கிற வல்லரசு கனவு எங்களுக்கு வேண்டாம். இது வரை வல்லரசானவர்கள் யாருக்கான வல்லரசாக நடந்து கொண்டார்கள் ? இந்தியா வல்லரசானால் இங்கிருக்கிற சாமானியனுக்கு என்ன பலன் ? அண்டை நாடுகள் விஷயத்தில் தலையிடுவதும் அவர்களை மிரட்டுவதும் அவர்கள் வளங்களை கொள்ளையிடுவதும் தான் வல்லரசு என்றால் அந்த வல்லரசு எங்களுக்கு வேண்டாம். அணுமின் உலைக்கு எதிராக செயல்படுவது என்பது கோடானுகோடி மனித உயிர்களைக் காப்பாற்றவும் எதிர்கால சந்ததிகள் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். உலகில் அணுக்கழிவும் அணுக்கதிர் வீச்சும் தான் வாழும் என்றால் நீங்களும் நானும் கரப்பான் பூச்சிகளாகத் தான் மாற வேண்டும். அணுக்கதிர் வீச்சில் இருந்தும் அணுக்கழிவுகளிலிருந்தும் உலகைக் காப்பாற்ற எந்த மாற்றுத் தொழில் நுட்பமும் நீங்கள் கொண்டாடும் வல்லரசு நாடுகளிடம் இல்லாததால் தான் அவர்கள் அதைக் கை விட்டு நம் தலையில் கட்டப் பார்க்கிறார்கள். அணு உலைகளை இங்கு நிறுவ வருவது தான் வல்லரசுகளின் சதி. அதை எதிர்ப்பவர்கள் தான் நாகரீக சமூகத்தை நிறுவ முன்வருபவர்கள். அணு உலைகளை ஆதரிப்பவர்கள் அதைப் பற்றி அறியாதவர்கள். அறிந்தும் செய்பவர்கள் மனித குலத்தின் அழிவை விரும்புபவர்கள். அணுக்கழிவு பற்றியும் கதிர்வீச்சு பற்றியும் அறிந்து கொண்டு விவாதிக்க வாருங்கள்.
மக்கள் போராட்டம் பற்றி,மடத்தனமாக மாங்கு மாங்கு என்று கமெண்ட் எழுதியுள்ள மங்குனி மாங்கா நட்டுராஜன் வணாக்கம்..
மேலோட்டமாக ஆங்கில ஊடகங்கள் மற்றும் டுபாக்கூர் பத்திரிக்கைகளை படித்து விட்டு, கடந்த தேர்தலில் அ தி மு க உக்கு , அவசர புத்தியில் ஓட்டு போட்டுவிட்டு, பல் இளித்து கொண்டிருக்கும் ராஜா!!!!!
யோவ்..திருந்துங்கப்பா…
ஆர் எஸ் எஸ் என்ற ஒரு தேச துரோக கும்பலின் அடியால் வேலை பார்க்கும் இந்து முன்னணி என்ற விஷமிகள், மக்கள் போராட்டத்தை மதத்தின் பெயரால் ஒடுக்க நினைத்து பார்பன வஞ்சக கும்பலின் நரிதனதிர்க்கு பலியாகி விட்டார்கள்..என் தமிழர்கள்..
அது சரி..அப்துல் கலாம் அணுகுண்டு வெடித்தால் இப்போ சீனா கரன் சும்மா போத்திகிட்டு இருக்கான? இல்ல பாகிஸ்தான் காரன் தூங்கிகிட்டு இருக்கான??? சும்மா டகால்டி விடதின்கப்பா..
அணுகுண்டு என்ற பெயரால் நடுத்தர மக்களை, வல்லரசு என்ற கனவில் மிதக்க விட்டு, அவர்களின் கோவணத்தை உருவும் வேலை இங்கே நடக்கிறது.. நாமும் நம் கோவணம் போவது தெரியாமல், அவர்களின் அங்க வத்திரம் போவதை பற்றி பேசுகிறோம்…
கூடங்குளம் அணு உலை எப்படியாவது தொடங்க, வேண்டும் என்று தமிழ் நாட்டில், ஆறு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடுவது , காங்கிரஸ் மற்றும் பி ஜே பி யின் சதி..
அமெரிக்காவிடம் தான் பொந்தியா அணு ஒப்பந்தம் போட்டுள்ளதே? அப்புறம் ஏன் அவர்கள் இங்கு பணம் அனுப்ப வேண்டும்! 1960 களில் அணு ஆட்டம் இந்தியாவில் ஆரம்பித்த போது 2000க்குள் நாம் 50000 மெகா வாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்வோம் என்று உதார் விட்டார்கள்…இப்ப 2011 இல் உற்பத்தி செய்வது 5000 மெகா வாட்டுகள்! அதுக்கும் அமெரிக்கா தான் சதி செய்தது என்று தான் கூறுவீர்கள்! அப்படியென்றால் சொந்த் மூளையில் ஒரு மயிரும் இதுவரையில் நாம் அணுமின்சக்தித் துறையில் புடுங்க வில்லை என்றுதானே அர்த்தம்?
புதிய தலைமுறை டிவி, அணு உலைக்கு ஆரதவானவர்கள் தாக்குதல் நடத்தினர் என்றுதான் கூறியது. இந்து முன்னணி என்று ஏன் சொல்லவில்லை?
அதன் செய்தி ஆசிரியர் யார் – அவர் எந்தப் பக்கச் சார்புடையவர் – என்பது தெரிந்தால் இக்கேள்விக்கான விடை கிடைக்கலாம்.
பார்ப்புகள், வார்ப்புகள். வேறென்ன சொல்ல…
காங்கிரஸ் கட்சி கிருஸ்தவர்களுக்கு ஆதரவான கட்சி என்று பொதுவாக அம்பி கும்பல்கள் சொல்லிக்கொள்ளும். அதனைக் கொண்டு பார்பனிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கேட்க்கும். ஆனால் கூடன்குள பிரச்சனையில் காங்கிரசு காலிகளும் , பொந்து மத பொறுக்கிகளும் சேர்ந்து கொள்கின்றன, காரணம் சுரண்டும் வர்க்கம் என்ற அடிப்படையில் இருவரும் ஒன்றே. ஒடுக்கப்படும் மக்களாகிய நாமும் வர்க்கமாக ஒன்று சேர வேண்டிய நேரமிது.
அனைத்து நண்பர்களுக்கும் வேண்டுகோள், நமக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் தினமலரை புறகணிக்குமாறு கோரிக்கை வைப்போம்.
நம்ம ஊர்ல தான் வெய்யில் கொளுத்துதே. அணுமின் நிலையத்துக்கு பதிலா சூரிய ஒளியில் இருந்து மின்சரத்த எடுங்கப்பா. இல்லேன்னா இருக்கவே இருக்கு natural gas.
கல்பாக்கத்துக்கு அருகில் வசிக்கும் சென்னை மக்கள் மட்டும் அணு உலை வெடித்து சாகலாமா ??? கூடங்குளம் திட்டம் ஆரம்பித்து 14 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்தபேதெல்லாம் எந்த ஒரு போராட்டமும் நடந்த மாதிரிதெரியவில்லை, எல்லாம்முடிந்து மின்உற்பத்தி ஆரம்பிக்கும்போது எதிர்த்து போராடுவதென்பது (14ஆயிரம் கோடி திட்டத்தை அப்படியே கைவிடசொல்வது) ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகப்பட சொல்கிறது.
// 14 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்தபேதெல்லாம் எந்த ஒரு போராட்டமும் நடந்த மாதிரிதெரியவில்லை//
இது வடிகட்டிய பொய். பார்க்கவும் ()
// (14ஆயிரம் கோடி திட்டத்தை அப்படியே கைவிடசொல்வது) ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகப்பட சொல்கிறது.//
கல்யாண நேரத்துல மாப்புள அயோக்கியன்னு தெரியவந்தா,’நிறைய செலவு செஞ்கிருக்கோம்னு’ கண்ணை மூடிகிட்டு பொண்ணை அவனுக்கு கட்டி வைப்பீங்களா? இல்லை, ‘காசு போனா போகுது பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம்’னு சொல்லுவீங்களா?… அதென்ன உள்நோக்கம்? கொங்ஜ்சம் சொன்னா நாங்களும் தெரிஞ்சுகுவோம்ல?
பொன்ராஜ்,
இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி எய்ட்ஸ் மாப்பிள்ளை, அயோக்கிய மாப்பிள்ளைன்னு உதாரணம் காட்டிகொண்டிருக்கப்போகிறீர்கள்?
மாப்பிள்ளை சீக்காளிஇல்லைன்னு பத்து டாக்டர்கள் ப்ளட்டெஸ்ட், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, எம்.ஆர்.ஐ ஸ்கான், எல்லாம் எடுத்துபாத்துட்டு,சர்டிபிகெட் கொடுத்தாலும் நான் நம்ப மாட்டேன். பக்கத்துஊட்டு உதயகுமார் நல்ல நாட்டு வைத்தியர், அவர் சொன்னால்தான் நம்புவோம்னு அடம் பிடிக்கிற உங்களை என்னா சொல்லறது?
தொடர்சியான போராட்டங்கள் பத்தி எதுவும் தெரிய முயற்சி பண்ணாத கிணத்து தவளை எல்லாம் உள்நோக்கனு பொலம்புது.இதே அணு உலை மேட்டர்ல ஏற்கனவே பொன்ராஜ் கிட்ட மோதி மூக்குடைபட்ட ராம் காமேஸ்வரன் மறுபடியும் வந்து சவுண்டு கொடுக்கிறாரு.ஆஸ்திரேலிய ”அணு உலைகள்” பத்தி பொன்ராஜோட பண்ணுன விவாதம் மறந்து போச்சா ராம் காமேஸ்வரன்.நீங்க மட்டும் சொன்ன பொய்யையே திரும்ப திரும்ப சொல்லலாம்.அவரு உண்மைய சொல்ல ஏற்கனவே சொன்ன உதாரணத்தை திரும்ப சொல்ல கூடாதா.
ஆதரவுக்கு நன்றி அன்பு.
சற்று நேரம் ஒதுக்கு இதை வாசிச்சிட்டு வாங்க ராம்… (http://keetru.com/index.php?option=com_content&view=article&id=18241). அதுக்கு அப்புறமும் மீதி கதையை பேசுவோமே?
இந்திய அரசின் மின்சாரப் பொய்கள் என்றநற்றமிழன் கட்டுரையில் கூடங்குளத்துக்கு எதிரான வாதங்கள்என்ன என்று பார்ப்போம்:
1)நெய்வேலி அனல் மின் நிலைய உற்பத்தி முழுவதும் தமிழ்நாட்டுக்கே கிடைத்தால் கூடங்குளமே தேவையில்லை.
அப்போ கேரளாவிலிருந்து வருகிற முல்லைபெரியாறு தண்ணீர் வேண்டாம் என்று விட்டுவிடுவீர்களா? இந்திய ஒருமைப்பாடு fedaralism எல்லாம் நமக்கு சாதகமாக இல்லையென்றால் வேண்டாம், அப்படித்தானே?
2) Transmission & Distribution Loss 19%. இதை 10% ஆக குறைத்தாலே கூடங்குளம் தேவையில்லை.
நற்றமிழனுக்கு T&D Loss பற்றி சரியாக தெரியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. மின்கசிவு வேறு, மின்திருட்டு வேறு. Aggregate Technical & Commercial (AT&C)Loss என்று சொல்லப்படும் மொத்த இழப்பு தான் 19%. இதில் டெக்னிகல் இழப்பு எவ்வளவு, கமர்ஷியல் இழப்பு எவ்வளவு என்பது தமிழ்நாடு மின் ஒழுங்கமைப்பு ஆணையத்திற்கே தெரியாது. தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிசைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் meter செய்யப்படுவதில்லை. Technical விரயத்தை power factor capacitor bank, transformer improvements, HVDC, conductor size changes,போன்றவற்றின்மூலம் குறைக்கலாம். ஆனால் திருட்டுப் போகும் மின்சாரம், இப்பொழுதும் பயன்படத்தான் செய்கிறது, அரசுக்கு வருமானம்தான் இல்லை. Technical loss ஐ 2 அல்லது 3 % குறைப்பதற்கே பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவு பிடிக்கும். அதற்காக இந்த நல்ல விஷயங்களை செய்யவேண்டாம் என்பதல்ல என் வாதம். ஆனால் peak demand க்கும் installed capacity க்கும் இன்னும் இடைவெளி அதிகம் உள்ளது என்பதே இன்றைய நிலை. கீற்றில் வெளியான மற்றொரு கட்டுரையில் கேரளத்தில் CFL பல்புகள் மூலம் மின்சேமிப்பது பற்றியும் சொல்கிறார்கள். இவை அனைத்தும் செய்யப்பட வேண்டியது அவசியம். Base Load capcityக்கு அனல்,புனல்,அணுமின் திட்டங்களும் அவசியம். நிலக்கரி, நாப்தா, எரிவாயு ஆகிய fossil fuel price fluctuation களை சமாளிக்க இந்த diversity அவசியம் தேவை.
http://tnerc.tn.nic.in/TNEB%20Directions/Directives%20to%20TANGEDCO-06-04-2011.pdf
http://www.powermin.nic.in/distribution/apdrp/projects/pdf/Presentation_on_AT%26C_Losses.ppt
3)சோலார், காற்றாலை, உயிர்ம எரிவாயு ஆகியவற்றிலிருந்து பல லட்சம் மெகாவாட் மின்சாரம் எடுக்கலாம். மற்ற நாடுகளுக்கு விற்பனை கூட செய்யலாம்.
பல லட்சம் மெகாவாட் எல்லாம் வேண்டாம், வெறும் 2000 மெ.வாட்டை 14,000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்வதற்கு (24 மணிநேரமும் கரண்ட் வேணும்) ஒரு உள்நாட்டு கம்பெனியையோ வெளிநாட்டு கம்பெனியையோ நற்றமிழனை காட்டச் சொல்லுங்கள். அணுசக்தி வேண்டாம்.
4) வெற்றுக் குழிகள், சுனாமி, நிலநடுக்கம், எரிமலை அபாயங்கள்….
இந்த பூச்சாண்டிகள் பற்றித்தான், பல டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாப்பிள்ளை சீக்காளி அல்ல என்று சர்டிபிகெட் கொடுத்திருக்கிறார்கள், என்றேன்.
///// 14 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்தபேதெல்லாம் எந்த ஒரு போராட்டமும் நடந்த மாதிரிதெரியவில்லை//
இது வடிகட்டிய பொய். பார்க்கவும் ()//// தெருவுல 10 பேர் நின்றுக்கொண்டு உண்டியலதூக்கிக்கிட்டு கோசம் போடுற போங்கு போராட்டத்த நான் சொல்லவில்லை. இப்ப நடக்குற மாதிரி பெரிய அளவு போராட்டம் அந்த காலகட்டத்தில் நடக்கவில்லையேன்னுதான் சொன்னேன். ////தொடர்சியான போராட்டங்கள் பத்தி எதுவும் தெரிய முயற்சி பண்ணாத கிணத்து தவளை எல்லாம் உள்நோக்கனு பொலம்புது.//// உங்க தொடர்ச்சியான அந்த மாபெரும் போராட்டங்களை போராட்ட வரலாற்றை எப்படி தெரிஞ்சிக்கனும்தான்னு கொஞ்சம் சொல்லுங்களேன் அறிவாளிஅன்பு.
உதயா வாழப்பழத்த கூட உரிச்சு குடுத்தாதா சாப்புடுவார் போல.நெட் வசதியோட கம்ப்யூட்டர் முன்னால தான உக்காந்துருக்காரு. ஏதாவது ஒரு சர்ச் எஞ்சின்ல தேடாம ”அறிவாளி”ன்னு கிண்டல் பண்ணி கேட்குறாரு.
Twenty years of resistance at Koodankulam
பார்க்க;http://infochangeindia.org/environment/rethinking-nuclear-energy/twenty-years-of-resistance-at-koodankulam.html
1989 லேயே 10000 பேர் கூடி போராடி அவர்கள் மீது போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு சென்றிருக்கிறது.
கமென்ட் போடு முன் சற்று நிதானித்து விவரங்களை தெரிந்து கொண்டு விவாதிக்க வாருங்கள்.
•
//// அப்போ கேரளாவிலிருந்து வருகிற முல்லைபெரியாறு தண்ணீர் வேண்டாம் என்று விட்டுவிடுவீர்களா? இந்திய ஒருமைப்பாடு fedaralism எல்லாம் நமக்கு சாதகமாக இல்லையென்றால் வேண்டாம், அப்படித்தானே?//////
மின்சார உற்பத்தியையும், இயற்கையாக உற்பத்தியாகும் ஆறுகளையும் எப்படி ஒப்பிட முடியும் என்பதை நண்பர் குறிப்பிட வேண்டுகிறேன்….
இந்திய ஒருமைப்பாடு வெங்காயமெல்லாம் தமிழனுக்கு மட்டுமே எப்போதும் போதிக்கப்படுகின்றது. .
மொத்த இழப்பீடு 19% என்பதை ஒப்புக்கொண்டுள்ளீர்கள். ஒழுகுகின்ற வாளியில் நீரை எவ்வளவு சேர்த்தாலும் வாளியை நிரப்ப முடியாது என்பத்
சிறு குழந்தைக்கு கூட தெரியும். மேலும் சில விழுக்காடு குறைப்பதற்கே பல ஆயிரம் கோடிகள் செலவாகும் என்று கூறி அது ஒரு பிரம்மாணடமான செயல் என்று பெரிதுபடுத்த முயல்கின்றீர்கள். என்னமோ அணு உலையால் கிடைக்கும் மின்சாரம் மட்டும் உங்களுக்கு இனாமாக வருவதைப் போல… மரபு சாரா மின்னுற்பத்தி பற்றியும், கூடங்குளத்தினால் தமிழகத்திற்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதையும் இக்கட்டுரை தோலுரித்து காட்டுகின்றது படிக்கவும்…http://www.dianuke.org/power-benefits-for-tamil-nadu-from-kknp/
////பல லட்சம் மெகாவாட் எல்லாம் வேண்டாம், வெறும் 2000 மெ.வாட்டை 14,000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்வதற்கு (24 மணிநேரமும் கரண்ட் வேணும்) ஒரு உள்நாட்டு கம்பெனியையோ வெளிநாட்டு கம்பெனியையோ நற்றமிழனை காட்டச் சொல்லுங்கள். அணுசக்தி வேண்டாம்/////
கூடங்குளத்தில் 2000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கு வெறும் 14,000 கோடி ரூபாய் தான் ஆகும் என்று முழுபூசணிக்காயை ஏன் கையளவு சோற்றில் மறைக்கின்றீர்கள்? அணு உலை கட்டுமான செலவு மட்டும் இதுவரை 14,000 கோடி, இந்த அணு உலை 40 ஆண்டு காலம் இயங்கிய பின்னர் அப்படியே காங்கீரீட் போட்டு அப்பொழுது மூட ஆகும் செலவு தோராயமாக இன்றைய காலத்திலிருந்து மூன்று மடங்கு என்று எடுத்துக்கொண்டால் 32,000 கோடி, மொத்தம் 46,000 கோடி வெறும், கட்டுவதற்கும் , மூடுவதற்கும் மட்டுமே, பின்னர் இந்த அணு மின் நிலையம் செயல்பட ஆகும் செலவு, யுரேனியம் என்ற எரிபொருளுக்கான செலவு, அணு உலையை குளிர்விக்க கடல் நீரை எடுத்து நன்னீராக மாற்றுவதற்கான செலவு, அணு உலை கழிவை பராமரிப்பதற்கான செலவையெல்லாம்(மொத்தம் 34,000 கோடி தோராயமாக) சேர்த்தால் குறைந்த பட்சம் 80,000 கோடி – 2000 மெகாவாட் மின்னுற்பத்திக்கு…
தமிழ்நாட்டில் ஏற்கனவே 4500 மெகாவாட் மின்னுற்பத்தியை காற்றாலையிலிருந்து செய்து வருகின்றது தனியார் நிறுவனங்கள், தனக்கு இலாபம் இல்லாத எதையும் தனியார் செய்யாது என்பது உங்களுக்கு தெரியும், அப்படி நட்டமானால் அந்த நிறுவனத்தை மூடி விடுவார்கள். இன்றளவும் செயல்படும் காற்றாலைகளே சாட்சி. மேலும் சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கான செலவு முன்பு இருந்ததை விட 50% குறைந்துவிட்டது. கூடிய விரைவில் சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தி செய்வதற்காக ஆகும் செலவும், மற்ற நிலக்கரி, நீர் மின்சாரத்திற்காக ஆகும் செலவும் ஒன்றாக ஆகிவிடும் வாய்ப்புள்ளது என சூரிய ஒளி மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
• //// 4) வெற்றுக் குழிகள், சுனாமி, நிலநடுக்கம், எரிமலை அபாயங்கள்….
இந்த பூச்சாண்டிகள் பற்றித்தான், பல டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாப்பிள்ளை சீக்காளி அல்ல என்று சர்டிபிகெட் கொடுத்திருக்கிறார்கள், என்றேன்.///////
கூடங்குளத்தில் அணு மின் நிலையம் கட்டக்கூடாது என இரசிய விஞ்ஞானிகள் ஏன் முதலில் தெரிவித்தார்கள்? நீங்கள் கூறும் மருத்துவர்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டாராக இருப்பது ஏன்?, நடுநிலையான ஒரு மருத்துவரை கூடவா உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை….
தோழமையுடன்.
நற்றமிழன்.ப
Dear kamae,
Maapilaikku Aidsnu than engaloda complaint. Ana Parisothanai pannina International Dokterunga ellam Maapilaikku vikkal illa, thummal illa, Eappam illanu than solrangalae thavira, aids illainu yarumae sollalayae.
kalpak is juz 235 MW only, but Koodan Kulam is 1000 x2 and 2 more to come? can you compare the radiation levels? i really do not understand educated people act like an idiots.
இந்த மதவாத அமைப்பும், காங்ரஸ்சும்தான் தஞ்சை விவசாய்கள் ஒரு சிலரை உசிப்பிவிட்டு. கூடங்குளம் அணுமின் நிலையம் வந்து விட்டால் விவசாயத்திற்க்கு தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் கிடைக்கும் என்று கூறி அவர்களை போராட தூண்டிவிட்டனர். உண்மையை மறைத்து, அன்னியர்களுக்கு அடிபணியும் இவர்களை………………….
தோழர் வேணி… பொறுமை… மக்களை திரட்டோவோம்… மக்களுக்கு விஷயங்களை சொல்லி கொடுப்போம்.. இவர்கள் யானையை போன்றவர்கள்… ஒன்று திரட்டி, ஓங்கி அடிப்போம்… பரப்புவோம் நம் கருத்துகளை
I hate RSS and BJP. I vote for congress though. In my view, we need nuclear power. I live in chennai, some what near nuclear plant. I have two healthy kids. Also, think about China, Russia, USA, Korea. All have nuclear power. And please consider this.
Left wing (communists) accuse America for pushing nuclear bill on us.
Right wing (RSS) accuse Christians (funded by West, they say)
Really we Christians never behave violent like Shiks or Muslims or even like Hindus.
We are the only peaceful minority. We keep silent when millions of us are killed in Egypt, Pakistan, China, India and all over the world.
We are the only religion attacked again and again for our mistakes in past, while violent cults and terroristic groups are treated “fairly”
If you really want to support the plight of the Christians, please let us live peacefully.
dont play the saint here.normal people belonging to any religion are peaceful largely,the idea is only about the powers that control the religion and people and money as a result of it.
no religion is a saint and certainly not marketing religions like Christianity and Islam.A true religion ll never offer money to convert,thats the cardinal rule of any true faith.
தம்பி சுப்பு… அப்போம் ஆர் எஸ் எஸ் எல்லாம் என்ன ? இந்து மதத்தை வைத்து, அப்பாவி மக்களின் வாழ்கையை அழிக்கும் இவர்கள் யார் ? இது என்ன மதம் ???
they r the reactionary force to the aggressive marketing of the other religions which is not preferable but unavoidable.
so finaly you are accepting that for reationary there is only way exists other than violation of behaving inhuman habitate!! is it??
Subbu.. Hindu will offer money to convert living human to deadbody…. Very good pa…
ur posts suit ur name.
தோழா… மதத்தில் பார்வையில் இருந்து வெளியே வந்து, மக்கள் கண்ணோட்டத்தில் சிந்திப்போம்…சிதறடிப்போம் இவர்களை..
மக்களின் பெயரால் ஆட்சியாளர்கள் அரங்கேற்றுகிற மக்கள் விரோத செயல்கள் இப்போது பெருகி வருகின்றன.இவர்கள் எந்த மக்களுக்காகக் கூடங்குளம் போன்றத் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள் என்பது மெல்லத் திரை விலகிவருகிறது.மூடி மறைக்காமல் அம்மணமாக பூனை வெளியே வருகிறது.மக்களின் அறியாமையை எவ்வள்வு தூரம் ஆளும் கும்பல் நம்பி இருக்கிறதோ அதற்குச் சமமாக ஆயுதங்களையும் அவர்கள் நம்பியிருக்கிறார்கள்.மக்கள் நிராயுதபாணிகள் கோழைகள் என்பது அவர்களது தென்பான கனவு.இந்து முன்னணி போன்ற காலிகளின் கால்கள் நீள்வதற்கும் அதுவே காரணம். இவர்கள் அரசு எந்திரத்திற்கு வெளியில் இருக்கும் கூலிப்படைகள்.எதிரியை யார் என்று அடையாளம் காட்டவும் அவர்களை வீழ்த்துவதற்கு எது தேவை என்பதையுமே சுட்டிக்காட்டுகிற வேலை நம்மிடம் இருக்கிறது.இணைய தளத்தில் மட்டுமல்ல,மக்கள் களத்திலும்தான்.செய்வோமே.
தமிழர்கள் மேல் தீராத வன்மத்தோடும் கொலைவெறியோடும் கொடூரக் கண்களைச் சுழற்றும் இந்திய அரசு, தமிழர்களின் தலைமுறைகளை புற்று நோயால் கொன்று அழிக்க கங்கணம் கட்டியதன் விளைவே இந்த அணுவுலைத்திட்டம். இந்தியாவின் கபடத்தனத்தின், தீராத இரத்தவெறியின் விளவே; தமிழர்களை ஏமாற்ற தினம் ஒரு அறிக்கையும் விளம்பரமும் வெளியிட்டு பொய்யும் புரட்டுமாக கேவலமாகச் சீரழிந்து, தமிழ் மக்களால் தினமும் காறி உமிழப்படுகிறது. இந்த ஊழல்வாதிகள் அணுகுண்டு செய்வதற்குரிய மூலப்பொருளைப் பெறுவதற்கு தமிழர்கள் தான் பலியாடுகளா? மின்சாரம் தயாரிக்கத்தான் அணுவுலை அமைக்கிறோம் என்னும் ஏமாற்றுத்தனத்தை, இந்திய ஊழல் அரசிடமிருந்து நக்கிப் பிழைக்கும் ‘தினமலம்‘ போன்ற ஒட்டுண்ணிகள் வேண்டுமானால் நம்பலாம். தமிழர்கள் நம்பமாட்டார்கள் இந்திய அரசை! ஏனென்றால் அது ஈழத் தமிழர்களை பூண்டோடு கொன்றொழித்து, இராமேசுவர மீனவத் தமிழர்கள் அய்ந்நூற்றுக்கு மேற்பட்டவர்களை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தில் கயிற்றை இறுக்கியும் கொலை செய்து கொண்டிருக்கிற ஒரு கொலைகாரக் கூட்டம், இவர்களே இந்திய நாட்டின், தமிழ்நாட்டின் விரோதிகள், இந்தியாவை அமெரிக்காவுக்கு கூட்டிக் கொடுக்கும் கயமைவாதக் காலிகள்!
pechula thaan veeran ellam,payanthangoli maadhiri pesura.
அணு உலைக்கு எதிறன மக்கள் போரட்டம் வெல்லட்டும்!
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
சிறுபான்மை மதம் என்ற போர்வையில் இவர்கள் சேயும் குள்ளநரி தனத்தை யாரும் பொறுத்துக்கொள்ள முடியாது …. வெளிநாட்டு நிதியில் நாடாகும் ஒரு போராட்டம் ஒரு தேச விரோத செய்யல் … இந்து முன்னணியை விமர்சிக்க இந்த தேச துரோகிகளுக்கு அருகதை இல்லை ..மோடியை விமர்சிக்கும் போதே இவர்களது மத வெறி வெளியே தெரிகிறது … வெளி நாடு நிதிக்காக அடிமையாய் கிடக்கும் இந்த கும்பல் யாரை விமர்சிப்பது ஒரு அருகதை வேண்டாம் ..காங்கிரஸ்யின் தலைவி கிருத்துவன் என்ற ஒரே காரணத்துக்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் உணர்வு சிறிதும் இல்லாமல் கை சின்னதாய் வெற்றி பெற வாய்த்த இந்த புண்ணாக்குகள் .. இன்று சிருபான்மைனர் என்று தன் போராட்டத்தை நியாய படுத்துவது இன செய்யல்
இந்த கட்டுரை சுத்த பொய் … அன்று இந்து முன்னநிரை தாக்கியது இந்த பெண் கும்பல் … மக்களுக்கான போராட்டத்தை ஏன் சர்ச்சுக்குள் நடத்த வேண்டும் .. இதில் எங்கிருந்து வந்தார் மோடி … இவர்கள் நடத்தும் போராடதிகான நிதி ஆதாரம் இன்று வரை யாருக்கும் தெரியாத விடை ..
மக்கள் உணர்ச்சிசமீபத்தில் ஜப்பான், புக்குஷிமாவில் நடந்த அணுமின் நிலைய விபத்து, உலக மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில், அணுகுண்டு வீச்சினால் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த மக்கள், அதைப் பெரிது பண்ணாமல், தங்கள் நாட்டின் மின் தேவையை அணுசக்தி மூலமாகவே பெற முடிவு செய்து, குறுகிய காலத்திலேயே, 25 சதவீதம் வரை நாட்டின் மொத்த உற்பத்தியில் பெறுமளவுக்கு உயர்ந்து, அதன் பலனாக உலகிலேயே பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக திகழ்கிறது.இன்று இந்த நாட்டில் கூட, அணுசக்தியை எதிர்த்து முழக்கங்கள் எழுந்துள்ளன. இது மிகவும் துர்ப்பாக்கியமானது; ஏனெனில், உண்மைக்குப் புறம்பான துர்ப்பிரசாரங்களால் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=333552