ஏனாமில் நடந்தது முன்னோட்டம்,
அதை புரிந்துகொள்வதற்கு தேவை பாட்டாளி வர்க்க கண்ணோட்டம்.!
இந்தியாவிலேயே செராமிக் மற்றும் டைல்ஸ் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் 5 பெரும் கம்பெனிகளில் ஒன்றான ரீஜென்ஸி செராமிக் லிட். என்ற தொழிற்சாலையில் 1500 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால் இத்தொழிற்சாலை நிர்வாகம் வெறும் 300 பேரை மட்டுமே நிரந்தரப் படுத்தியுள்ளது. மீதம் உள்ள 1200 தொழிலாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களாகவே வைத்துள்ளது. இக்கம்பெனியின் குறைந்தபட்ச வருடாந்திர வருமானம் 250 கோடி. ஆனால் நிரந்தர தொழிலாளர்களுக்கே கூட நிறுவனம் கொடுக்கும் சம்பளம் ரூ.8000 மட்டுமே.
இந்த கம்பெனியின் கேடுகெட்ட சுரண்டலை தட்டிக்கேட்கவோ, தடுக்கவோ தொழிலாளர் ஆணையமோ, புதுச்சேரி அரசோ இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் உரிமைகளை நிலைநாட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் படி 2011ல் ’ரீஜென்சி தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கத்தை கட்டினார்கள்.’ சங்கம் அமைத்த உடனே சங்கத்தின் முன்னனியாளர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்தது மட்டுமின்றி. இரண்டு மாதகால ஊதியமும் கொடுக்க மறுத்தது நிர்வாகம். தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் மீது மின்விசிறி திருடியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி பணிநீக்கம் செய்தது.
அதுமுதல், பணிநீக்கம் செய்யப்பட்டோரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும், ஊதிய உயர்வு கோரியும் சட்டபூர்வமான முறையிகளில் தங்களது போராட்டங்களை தொடர்ந்தனர். தங்களது நியாயமான கோரிக்கைகளை எல்லாம் சட்டபூர்வமான முறைகளில் தெரிவித்த போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நிர்வாகத்திற்கும் அரசிற்கும் உறைக்கும் வகையில் தொழிற்சாலையின் உற்பத்தியை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை அறிவித்தனர். மிரண்டு போன நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டி அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி உற்பத்தியை தொடர திட்டமிட்டது. நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பலியான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதும் அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்துள்ளது. இப்படி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தடுப்பதை நிறுத்த, 27-1-2012 அன்று நிர்வாகிகளை போலீசை வைத்து மிரட்டியது நிர்வாகம். போலீசு மிரட்டலுக்கு தொழிலாளர்கள் அஞ்சாததால், ஆத்திரம் அடைந்த போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் செயலர் முரளி மோகன் உட்பட 10 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியிருக்கின்றனர். போலீசாரின் கொலைவெறி தாக்குதலுக்குள்ளான சங்கத் தலைவர் முரளி மோகன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
சங்கத் தலைவரின் இறப்புச் செய்தியைக் கேட்ட தொழிலாளர்களும், ஏனாம் பகுதி மக்களும் இணைந்து வாகனங்களை எரித்தும், ரீஜென்ஸி ஆலையை அடித்து நொறுக்கியும் நிர்வாகத்தின் மேலாளர் சந்திரசேகரனைக் கொன்று பழிதீர்த்தனர். அரசின் உதவியுடன் தொழிலாளர் வர்க்கத்தை பயமுறுத்தி ஒடுக்கிவிடலாம் என்று கனவுடன் வாழும் முதலாளி வர்க்கத்தின் கபாலத்தில் ஓங்கி கத்தியை செருகியிருக்கின்றனர் ஏனாம் பகுதி தொழிலாளர்கள். தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக பன்மடங்கு எதிர்த் தாக்குதலை தங்களாலும் தொடுக்கமுடியும் என்பதை முதலாளி வர்க்கத்திற்கு புரிய வைத்திருக்கிறார்கள்.
நம்முடைய உழைப்பைச் சுரண்டி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்க தொழிலாளர்களாகிய நாம் சாதி, மதம், இனம் என்பதை மறந்து ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம் என்ற முழக்கத்துடன் போலீசின் கொலை வெறிச் செயலைக் கண்டித்து 1-2-2012 அன்று பாண்டிச்சேரியில் புஜதொமு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பாண்டிச்சேரி
ஆந்திர ஊடகங்கள் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த செய்திகளை உடனடியாக ஒளிபரப்பினார்கள். ஜகன்மோகன் ரெட்டியின் சாக்ஷி குழுமம் இச்செய்தியை கவர் செய்த உடன் ”கே.டி” பிரதர்சின் ஜெமினி குழுமம் உட்பட அத்தனை சேனல்களும் தொழில் போட்டி காரணமாக இது குறித்த செய்திகளை ஒளிபரப்பினர். ஆனால் தமிழகத்தில் இந்த நிகழ்வு 5 நாட்களுக்குப் பிறகு லாக்கப் மரணம் அதையொட்டிய கலவரம் என்ற ரீதியில் கே.டி. பிரதர்சின் செய்திச் சேனலில் ஒளிபரப்பானது. கேடு கெட்ட ஊடகங்களும் இங்கே கண்டிக்கப்பட வேண்டியவை.
புதுவை இரீசென்சி தொழிலகத்தில் உழைப்பாளர்கள் வழங்கிய பதில் தாக்குதலின் விளைவான அதன் மேலாளருக்குக் கொடுக்கப் பட்ட இத் தண்டனைச் செய்தியானது, நம் தமிழகத்திலுள்ள எல்லா தொழிற்சாலைகளிலுள்ள அறிவிப்புப் பலகைகளிலும் பெரிதாக ஒட்டப்பட வேண்டும். இந்தச் செய்தியானது, தொழிலாளி வர்க்கத்துக்கு ஒரு தெம்பையும் பாதுகாப்பு உணர்வையும் வழங்கும். அதே நேரத்தில் இதைக் கண்ணுறும் தொழிற்சாலை உரிமையாளருக்கோ சற்று கிலி ஏற்படுவதோடு, சற்றேனும் அறத்துடன் (நியாயத்துடன்) தொழிலாளர்களை அணுகவும் தூண்டும்.
தலைகள் இன்னும் பல உருளட்டும். இந்த பணத்தாசை பிடித்த நயவஞ்சகர்களின் காலம் முடிவுறும் நேரம் வரட்டும். பாடம் புகட்டுவோம் இவர்களுக்கு.