செய்தி-11
புது தில்லி – இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த 35 வயது கே. முத்து வேலை பார்த்து வருபவர். அவரைக் கொடுமைப்படுத்திய உயர் அதிகாரிகளைக் கண்டித்தும், 5 ஆண்டுகளில் 5 முறை இடமாற்றம் செய்துள்ள அநீதிக்கு எதிராகவும், டெல்லி அஜ்மீரி கேட் பகுதியில் உள்ள 200 அடி செல்பேசி கோபுரத்தில் ஏறி தனது போராட்டத்தை கடந்த 17.8.12 அன்று துவக்கினார் முத்து.
அவரை கீழே இறக்க இராணுவம், போலீசு, தீயணைப்பு படையினர் முயற்சி செய்தாலும் அதை நிராகரித்து கடந்த ஐந்து நாட்களாக சாப்பிடாமலும் போராட்டம் நடத்தினார். இதனால் அவரது உடல்நிலை பாதிப்படைந்து மயக்க நிலைக்குச் சென்றார். கூடவே அடைமழையும் பெய்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை மீட்பு எந்திரம் மூலம் கீழே இறக்கி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது உடல்நிலை தேறியதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணவ அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனாலும் முத்துவின் 94 மணிநேரப் போராட்டம் இராணுவத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வைப் போலவே இராணுவத்திலும் சிப்பாய்கள், அதிகாரிகள் என்று வர்க்க வேறுபாடு துலக்கமாகவே இருந்து வருகிறது. அதிகாரிகளுக்கென்று நட்சத்திர விடுதிகளைப் போன்ற தங்குமிடங்கள், உணவகங்கள், விளையாட்டு மையங்கள், அதிக ஓய்வு, நீண்ட விடுமுறை போன்றவற்றை இந்திய அரசு அள்ளித் தருகிறது. ஆனால் கடைநிலையில் இருக்கும் சிப்பாய்க்கு இவையெதுவும் கிடையாது என்பதோடு அதிக பணிச்சுமை, விடுமுறை மறுப்பு, குடும்பத்தை பிரிந்து பல மாதங்கள் போர்க்காலச் சூழலில் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அதிகம்.
இதன் வெளிப்பாடாக சில வீரர்கள் தங்களது மேலதிகாரிகளை சுட்டுக் கொன்றிருக்கின்றனர். பலர் தற்கொலையும் செய்திருக்கின்றனர். இராணுவ வீரர்களது மன அழுத்தத்தின் விகிதம் அதிகமென்று பல புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இவற்றையெல்லாம் இந்திய அரசும், இராணுவமும் மறைப்பதற்கு முயற்சி செய்கின்றன. இந்தி சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்களை அழைத்துக் கொண்டு போய் காஷ்மீரிலும், எல்லையிலும் குத்தாட்டம் போட்டு தணிக்க முயல்கின்றன. ஆனால் இந்திய ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறைக்கு பயன்படும் இராணுவம் தன்னளவில் ஒரு போதும் நிம்மதியாக இருந்து விடமுடியாது.
சமூகத்தில் நடக்கும் போராட்டத்தின் வீச்சு இராணுவத்தையும் பாதிக்கவே செய்யும். தமிழக வீரர் முத்துவின் போராட்டம் அதை உரக்கத் தெரிவித்திருக்கிறது. இனி அவரை வேலை நீக்கம் செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனாலும் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களை உலகறியச் செய்த அந்த வீரனை நாம் வாழ்த்துவோம்!
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
//சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வைப் போலவே இராணுவத்திலும் சிப்பாய்கள், அதிகாரிகள் என்று வர்க்க வேறுபாடு துலக்கமாகவே இருந்து வருகிறது. அதிகாரிகளுக்கென்று நட்சத்திர விடுதிகளைப் போன்ற தங்குமிடங்கள், உணவகங்கள், விளையாட்டு மையங்கள், அதிக ஓய்வு, நீண்ட விடுமுறை போன்றவற்றை இந்திய அரசு அள்ளித் தருகிறது. ஆனால் கடைநிலையில் இருக்கும் சிப்பாய்க்கு இவையெதுவும் கிடையாது என்பதோடு அதிக பணிச்சுமை, விடுமுறை மறுப்பு, குடும்பத்தை பிரிந்து பல மாதங்கள் போர்க்காலச் சூழலில் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அதிகம்.//
This is 100% true, The low grade soldiers are not even respected as humans..while in service or after after retirement the discrimination continues in Hospiitals, army canteen, army run schools everywhere. My father-in-law is one of such low level employee my wife says after living there and now living with me she says atleast u people live with little diginity and now she do not want anyone to go there to work in low grade positions.
இன்னும் ராணுவத்தில் நடக்கும் அட்டூழியங்களை பற்றி பாதுகாப்பு படையில் வேலை செய்யும் ஒருவரின் வலைதளத்தை பார்க்கவும்
http://tamilmottu.blogspot.com
மிகவும் நன்றி முபாரக்…உங்களின் ஆதரவு எனக்கு நம்பிக்கை தருகிறது…
http://www.tutyonline.net/view/31_36475/20120820105227.html
ராணுவத்தில் கட்டுப்பாடு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நாடு என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். ராணுவத்தை வைத்து குழப்பி குளிர் காய நினைக்கிரீர்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோன்ற செயல் கண்டிக்கத்தக்கது. ஜனாதிபதி பிரதமருக்கு இருக்கும் அளவிற்கு சிப்பாய்களுக்கும் அதிகாரம் மற்றும் பிற பலன்களும் இருக்க வேண்டும் என்பதுபோல் உள்ளது உங்களது செயல்.
இங்கே வினவு என்ன குழப்புகிறது? கடை நிலை ஊழியருக்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்டு அவர் போராட வில்லை, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகளை அவர்களின் மேலதிகாரிகள் மறுப்பதால் போராடுகிறார்
ரகசியத்தன்மையும்… கீழ்படிதலும்… இராணுவத்தில் இன்றியமையாத ஒழுக்கநெறி யாக ஒவ்வொரு இராணுவனின் மூளையிலும் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து தைரியமாக வெளியில் வந்து தனக்கு நிகழ்த அநீதிக்கு எதிராக போராடியிருக்கிறார் முத்து அவருக்கு நம் வாழ்த்துகள்.
எப்படி ரசியாவில் ஜார்மன்னருக்காக ஏந்திய துப்பாக்கிகள் ஜாரை நோக்கி திரும்பியதோ, அதேபோல் முத்துவை போல் பல முத்துக்கள் இந்த போலி ஜனநாயகத்தை நோக்கி திரும்பு ம் காலம் வெகு தொலை வில் இல்லை.
வினவு !
இந்திய ராணுவத்தை எதிர்த்து இந்திய ராணுவ வீரர் போராடுராப்புடி !
இதுல எங்க ” தமிழ் ” வீரர் வர்றாரு !
ஒரு வேளை உங்களுக்கும் மணியரசன் காய்ச்சல் அடிக்குதோ ! இல்ல ஒரு ட்ரிக்சா ?
இங்கு சிலர் பின்னூட்டத்தில் ராணுவத்தின் ஒழுக்க முறைகளை பேசியுள்ளனர்.ஒழுக்கம் அவசியமே…அதன் பெயரில் கீழ் நிலை வீரர்களை அடிமைகளாக நடத்துவதை எதிர்ப்பது என்பது தன் எதிர்காலத்தை தொலைப்பதுக்கு சமம.இனி அவர் பல இடங்களில் பந்தாடப்படுவார்…கூட உள்ள சிப்பாய்களே உன்னால நாங்களும் கஷ்டப்படுறோம் என்று திட்டுவார்கள்.ஏனென்றால் இது ஒரு வீரனின் போராட்டம் என்பதை விட ஒட்டு மொத்த வீரர்களின் எதிரொலிப்பே.எனவே அனைத்து வீரர்களும் ஏதேனும் ஒரு வகையில் கஷ்டப்படுத்தபடுவர்.உள்ளே உள்ளவனுக்குதான் கஷ்டம் தெரியும்….வினவுக்கு இதே விஷயத்தை பற்றி நான் சற்று கூடுதல் தகவலுடன் எழுதிய பதிவை வினவில் பிரசுரிக்க வேண்டுகிறேன்.இது கடைகோடி போலி தேசபற்றாளர்களுக்கு சேர வேண்டும்.எங்களை அரச்ப்பயங்கரவாதிகள் என்ற நிலையோடு கொத்தடிமை தொழிலாளர்களாகவும் கணக்கில் எடுக்க கேட்டுக்கொள்கிறேன். இதில் தமிழ் வீரன் வருவதுதான் இயல்பு..ஏனென்றால் வடக்கே உள்ளவர்கள் அடிக்கும் பாரபட்சமும்,காக்கா பிடித்தலும்,தமிழ் வீரர்களிடம் குறைவே…எவ்வளவு ஒட்டி வைத்தாலும் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் அநியாயங்கள் வேறு வேறு இடங்களில் வேறு வேறு நிலையில் எதிரொலிக்கும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமே.http://tamilmottu.blogspot.in/2012/08/blog-post_20.html
வினவின் இந்த கட்டுரைக்கு மாபெரும் நன்றியை தெரிவிக்கிறேன்..