Friday, September 20, 2024
முகப்புசெய்திசு.சாமி, சோ ராமசாமி - இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!

சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!

-

செய்தி -43

சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!
சோ ராமசாமி

ரண்டு சாமிகளும் காங்கிரசு எதிர்ப்பு, பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் ஆதரவு, மறைந்த சந்திரசேகர் பஜனை, ஜெயா விசுவாசம், நரேந்திர மோடியை போற்றுதல், ராமர் பாலம் என்று பல்வேறு சமாச்சாரங்களில் ஒரே மாதிரி கருத்துடையவர்கள். அதில் அண்ணா ஹசாரே குழுவை இருவரும் எதிர்க்கிறார்கள், ஏனென்று தெரியுமா?

மத்தியப் பிரதேசம் சட்னாவில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி பேசும் போது, ” நான் பாபா ராம்தேவுக்கு ஆதரவாக உள்ளேன். ஆனால் அண்ணா ஹசாரே குழுவில் நக்சல்கள் இருப்பதால் அவரை ஆதரிக்கவில்லை. அவர் எனது ஆதரவைப் பெறவிரும்பினால் நக்சல்களின் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் ” என்று கூறியிருக்கிறார். அதே போன்று அண்ணா ஹசாரே மீது கொஞ்சம் மரியாதை உள்ள சோவும் அவரது குழுவை கடுமையாக எதிர்க்கிறார்.

சமீபத்திய நிலக்கரி ஊழலை எதிர்த்து “ஊழலுக்கு எதிரான இந்தியா” நூறு பேரை வைத்து முற்றுகை போராட்டம் நடத்தியபோது அது காங்கிரசுக்கு எதிராக மட்டும் இருக்க வேண்டுமென்று கிரண்பேடி விரும்பினார். பா.ஜ.கவை எதிர்ப்பதை அவர் விரும்பவில்லை. இதில் கிரண்பேடிக்கு வருங்கால டெல்லி முதல்வர் பதவியை அளிக்க பா.ஜ.க முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அரவிந்த் கேஜ்ரிவால், சாந்தி பூஷன் போன்றோர் பா.ஜ.கவை எதிர்க்கின்றனர். இந்த மேலோட்டமான இந்துத்தவ எதிர்ப்புதான் சோவுக்கும், சு.சாமிக்கும் ஆகவில்லை.

முன்பு கூட மோடிக்கு ஆதரவாக அண்ணா ஹசாரே பேசி பின்னர் அவரது குழுவால் மறுக்க வைக்கப்பட்டது போன்ற நாடகத்தையும் இவர்கள் ரசிக்கவில்லை. பா.ஜ.கவை வெளிப்படையாக அண்ணா குழு ஆதரித்திருந்தால் இவர்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் வீக் எண்ட் ஜாலி புரட்சியாளர்களைக் கூட நக்சல்கள் என்று சு.சாமி பயமுறுத்தும் காமடிதான் சகிக்கவில்லை. ஒருவேளை அண்ணா குழுவின் முதல் கட்ட போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்ததை வைத்து அப்படி ஒரு கருத்தை சு.சாமி முன்வைக்கிறார் என்றால் அப்படி இல்லை.

அவரைப் பொறுத்த வரை மேலோட்டமான அமெரிக்க எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு இருந்தாலே போதும், சம்பந்தப்பட்டவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார். பாபா ராம்தேவை சு.சாமி ஆதரிப்பது போல சோ ஆதரிக்கவில்லை. இந்துத்தவ அணியில் பாபா ராம்தேவ் தனி ஆவர்த்தனம் வாசிப்பது சோவுக்கு உடன்பாடில்லை என்றாலும் சு.சாமி ராம்தேவின் மத ரீதியான நிலையை மனதில் கொண்டு ஆதரிக்கிறார். பா.ஜ.கவும் ராம்தேவும் கூட ஒருவித புரிந்துணர்வில்தான் இருக்கிறார்கள். அதனால் அண்ணா குழுவோடு ராம்தேவும் ஒரு இடைவெளியை கடைபிடிக்கிறார்.

இரண்டு சாமிகளும் அமெரிக்க ஆதரவில் ஆண்டாளைப் போன்று பெருங்காதல் கொண்ட அடிமைகள். ” ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்ன?” என்ற ஒரு துக்ளக் வாசகரின் கேள்விக்கு பதிலளித்த சோ, “அது என்ன சீனாவிடமிருந்து கற்றுக் கொள்வது? இந்த விஷயத்தில் இரண்டாவதாக வருபவர்களைத்தான் பார்க்க வேண்டுமா, என்ன? முதலாவதாக வருகிற அமெரிக்காவிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாமே? இதில் கூட அமெரிக்கா என்றால் வாய் சுட்டு விடுமா?” என்கிறார்.

சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!
சுப்ரமணியன் சுவாமி

எதார்த்தமான ஒரு கேள்வியில் கூட அமெரிக்க விசுவாசம் இப்படிக் கொப்பளிக்கிறது என்றால் அமெரிக்கா தொடர்பான குறிப்பான அரசியல் பிரச்சினைகளில் எப்படி வெடிக்கும்? இந்துமதவெறியர்களும் அமெரிக்கா மீதான அடிமைத்தனத்தில் முன்னணியாக இருக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்பின் போது ஒரு விசுவ இந்து பரிஷத் தலைவர் அதிபர் கிளிண்டனை கிருஷ்ண பகவான் போல உருவகித்து நமஸ்கரித்து கடிதமே எழுதியிருக்கிறார்.

பார்ப்பனியம் என்றால் என்ன, பார்ப்பனியத்தின் அரசியல் திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியாதவர்கள் சு.சாமி, சோ ராமசாமியை நெருக்கமாக கண்காணித்தால் எளிமையாக புரிந்து கொள்ளலாம். அதே நேரம் பார்ப்பனிய பாசிசத்தின் கோமாளி வேடத்தை மட்டுமல்ல, புரோக்கர் வேலைகளையும் இருவரும் செய்து வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. சோ ராமசாமி ஒரு நடுனிலையாளர் ! எதையும் தைரியமாக துணிந்து எழுத விமர்சிக்க ,நக்கலடிக்க வல்லவர்.

    அதே போல சு.சாமி தான் 2G, 3G எல்லாம் தைரியமா வெளிய கொண்டு வந்தார் !

    அவர்கள் அரசை சமரசம் பாராமல் கண்காணித்து விமர்சிக்கிறார்கள் !

  2. சோ நடு நிலையாரா? நல்ல தமாஷ். சசிகலாவை விரட்டியபோது பாராட்டிய சோ, சசிகலாவை மீண்டும் சேர்த்த போது வாயை மூடி கொண்டார்.

    அலை வரிசை ஊழல் வெளியானதிற்கு காரணம் சன் டிவி. மாறன் குடும்ப சண்டை காரணமாக அந்த ஊழல் வெளியானது. பின்பு அதுவே மாறனை தாக்கியது வேறு கதை.

  3. சோ நகைச்சுவை ததும்ப கருதுக்களை சொல்பவர்.நுட்பமாக கவனித்தால், பார்பனர் சார்ந்து கருதுக்களை நியாயப்படுத்தியே பேசுவார். பார்ப்பன அரசு அமைவது நாட்டுக்கு நல்லது என்ற தொனியில் கருதுக்களை சொல்லுவார். அதற்காக, சோனியாவின் தலைமை காங்கிரசுக்கு கூடாது என்றும், தி.மு.க.- வே முழுமையாக அழிவது நாட்டுக்கு நல்லது என்றும் கருதுக்களை சொல்லுவார். இதுபோல சுயநல அறிவாளிகள் தோன்றி தோன்றியே இந்தியா இன்னும் சமூக விடுதலை பெறாம்ல் 2000 ஆண்டுகளாக ஒரு சமுதாய்த்துக்கு இன்னொன்று என்று கீழ்நிலையில் உள்ளது.

    • எந்த ஒருவரையும் சாதியை வைத்து judge செய்வது என்பதை நான் கண்டிக்கிறேன் .
      அவர்களுடைய செஇயலில் குற்றம் குறைகளை கூறலாம் ஆனால் இன்ன சாதியை சேர்ந்த நீ , இப்படிதான் இருப்பே எனபது , பார்ப்பனீய எதிர்ப்பு அல்ல , பார்பனீயத்தை அங்கீகரிப்பது.

      சோ ஜே ஜே வை எதிர்த்து ரஜினி-மூப்பனார் -கலைஞர் கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர். அவர் பத்திரிக்கையாளர் என்ற வகையில் கருத்துகளை மட்டும் கூறுவதோடு சரி , பெரிய சட்ட போராட்டம் எதையும் நடத்தியது இல்லை

      சுப்பிரமணிய சாமி ஜே ஜே வை எதிர்த்து வழக்குகள் போட்டவர் ( சட்டமன்றத்திற்கே போகாத கருணாநிதி வழக்குகள் போடாவில்லை ) . 2G வழக்குகளை வெற்றிகரமாக வெளியே கொண்டுவந்தவர். அதே ஜே ஜே விற்கு பிரதமராகும் பா ஜா கா ஆட்சியை கவிழ்த்தவர்.

      இருவருமே தங்களுக்கு சரி என்று பட்டதை சொல்லும் துணிவு கொண்டவர்கள்

  4. இந்த சோவை பற்றி ஒன்றை குறிப்பிட்டு ஆக வேண்டும்,அவர் நடத்தும் துக்ளக் என்ற பத்திரிக்கையில் தலையங்கம் கேள்வி-பதில் எங்கே பிராமணன்?இல்லை என்றால் ராமாயணம் மகாபாரதம் அப்புறம் நினைத்ததை எழுதுகிறேன் என்று பல தலைப்புகளில் ஒரு முழு பத்திரிக்கையும் ஒரு டேபிளில் உட்கார்ந்து கொண்டு தனி மனிதர் ஒருவரே எழுதுகிறார். எஞ்சிய பக்கங்களில் குருமூர்த்தி விஜயன் போன்ற பார்ப்பன மற்றும் பார்ப்பனீய ஆதராவளர்கள் கட்டுரை இருக்கும் அப்புறம் ஒரு பத்து ஆண்மைக்குறைவு லேகிய விளம்பரம்.இதில் செய்தி என்னவென்றால் இப்படி ஒரு பத்திரிக்கை நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக வெளி வருகிறது,ஒவ்வொரு எழுத்திலும் பார்ப்பனீயம் பல்லை காட்டுகிறது என்பதுதான்.

    • “அப்புறம் ஒரு பத்து ஆண்மைக்குறைவு லேகிய விளம்பரம்”, well said, for me it seems rest of the pages competing with that advertisement in terms of content.

    • நீங்கள் துக்ளக் படிக்கிறீர்களா?
      இப்போது அதில் எல்லா நிருபர்களின் படமும் போடுகிறார்கள்; பார்த்தீர்களா?

      துக்ளக் ஆண்டு விழாவிற்கு சென்று இருக்கிறீர்களா ? அல்லது வீடியோ பார்த்தீர்களா?
      அங்கு அணைத்து நிருபர்கள் அறிமுகம் நடந்தது. கவனித்தீர்களா?

      இதை எல்லாம் செய்தால் நீங்கள் இந்த கேள்வியை கேட்க மாட்டீர்கள்

    • சோ ராமசாமியின் துக்ளக் ஐயும் வாங்கிறவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் தான். அதை ஏன் தமிழ்நாட்டுத் தமிழரக்ள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. சோ. ராமசாமி நாசூக்காக, அவரது பாணியில் தமிழர்களை முட்டாள்களாக்கி, அவரது தமிழர் எதிப்பு பிரச்சாரத்தை நடத்துகிறார். ஆனால் சு. சுவாமி வெளிப்படையாக தனது தமிழின வெறுப்பைக் கக்குகிறார். இவர்கள் இருவரையும் ஆதரிக்கும் கோடிக்கணக்கான தமிழர்க்ள் உள்ளனர். இவர்கள் இருவரினதும் தமிழின வெறுப்பை, எதிர்ப்பை தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை, என்று நான் பலமுறை வியந்ததுண்டு.

  5. நாக்கில் நரம்பில்லாமல் விமர்ச்சனம் செய்பவர்களை என்ன என்று கூறுவது! ஒருவர் ஒரு கருத்து சொன்னால் அவரது ஜாதியை இழுப்பது எந்த வகையில் நியாயம். அவர்களை உங்களால் எதிர் கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள். புத்தியை மழுங்கடித்து கொண்டிர்கள் அவ்வளவுதான்! நாம் நமது திறமையை காட்ட வேண்டும்! இல்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும்!! எதெற்கெடுத்தாலும் ஜாதி!!!! இவர்கள்தான் ஜாதியை ஒழிக்கப் போகிறார்களாம்!!!!!!!! ஜாதியை ஒழிக்காமல் அப்படியே இருந்தால்தான் இவர்களது பிழைப்பு ஓடும்!! அதனால்தான் ஜாதியை மக்கள் மறக்காமல் இருக்க அரும்பாடு படுகிறார்கள்!!!!!

  6. இன்னும் எத்தனை காலம் ஜாதியை வைத்து பிழைப்பு நடத்த திட்டம் ?

    • நூல் மாட்டிக்கிட்டு ஆசாரம் பாக்கிரவன்கிட்ட போய் கேளுங்கள் “இன்னும் எவ்வளவு வருசத்துக்கு உனக்கு சாதி தேவைப்படும்” என்று. சாதியின் பெயரால் பாதிக்கப்படும் மக்கள் எதிர்த்து கேள்விகேட்டால் அது தவறா. வெட்கமாகயில்லை உங்களுக்கு……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க