செய்தி-45

தட்பவெட்பநிலை மாற்றத்துக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்குள் 22,000 மெகாவாட் அளவிலான சூரிய எரிசக்தியை (solar power) உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது இந்திய அரசு. உள்நாட்டில் சோலார் பேனல்களைத் தயாரிக்கும் முயற்சியிலும் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்டவகைத் தொழில்நுட்பத்தின் மூலம் சூரிய எரிசக்தியை உற்பத்தி செய்ய தொழில் முனைவோருக்கு அரசு மானியமும் வழங்கி வருகிறது.
இந்த துறையிலும் நம் சுயசார்பைத் தகர்க்கிறது அமெரிக்கா. சோலார் தகடுகளிலேயே காலாவதியாகிவிட்ட தொழில்நுட்ப வகையைச் சேர்ந்த அமெரிக்க தயாரிப்புகளை இந்தியாவின் தலையில் கட்டுகிறது.
2009 கோபன்ஹேகன் மாநாட்டில் வளரும் நாடுகள் பசுமைக்குடில் எரிவாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி தட்பவெப்ப நிலை மாற்றங்கள் உருவாக்கும் தாக்கத்தை சீராக்குவதற்கென, ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு 30 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை எடுத்து, காலாவதியாகிப்போன தனது நாட்டு சோலார் தகடுகளை வாங்கும் இந்தியர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி அளிப்பதாக அமெரிக்கா மடை மாற்றி விட்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க தகடுகளுக்கு ஆர்டர்கள் குவிந்து விட்டதெனவும் உள்நாட்டு சூரிய ஒளி மின்கலத் தகடு உற்பத்தியாளர்களில் 80 சதவீதம்பேர் தொழிலை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் என்றும் கூறுகிறது விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம்.
சீனாவின் தகடுகள் விலை குறைவு என்பதால், அமெரிக்கர்கள் விரும்பி வாங்குகின்றனர். சீனா தன் தகடுகளுக்கு கணிசமாக மானியம் அளிக்க்கிறது என்று கூறி, சீனத்தகடுகளுக்கு அதிக அளவில் இறக்குமதி வரி (anti dumping duty) விதித்துள்ளது அமெரிக்க அரசு. அதே சமயம் காலாவதியாகிப் போன தனது தயாரிப்புகளை இந்தியர்களின் தலையில் கட்டுவதற்கு, ஊரான் வீட்டு நெய்யை எடுத்து நமக்கு விநியோகிக்கிறது.
காயலாங்கடை அணு உலைகளும் இந்தியாவுக்குத்தான். பேரிச்சம்பழ சூரிய ஒளித்தகடுகளா .. .. அதுவும் நமக்குத்தான்.
இதையும் படிக்கலாம்
______________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்: