privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!

வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!

-

செய்தி -72

ஜெயலலிதா-சோ

5.9.12 தேதியிட்ட துக்ளக் இதழில் வந்த கேள்வி பதில் இது:

கேள்வி: ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வக்கீல் ஆச்சார்யா அலுத்துப் போய் ராஜினாமா செய்து விட்டது பற்றி?

பதில்: அவர் அலுத்துப் போய் ராஜினாமா செய்தாரா, வெறுத்துப் போய் ராஜினாமா செய்தாரா அல்லது வேறு ஏதாவது திட்டத்துடன் ராஜினாமா செய்தாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு விஷயம். பத்திரிகைகளில் அவர் தரும் பேட்டிகளைப் படிக்கும் போது, ‘ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை, தான் நடத்தினால்தான், அதில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வரும்’ என்று பொருள்படும்படியாக, பல விஷயங்களை அவர் கூறி வருகிறார். ஒரு பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி அவர் நடந்து கொள்வதாக எனக்குத் தெரியவில்லை.

பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவரின் விரோதி அல்ல. அவருடைய எதிரி அல்ல. குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமான சாட்சியங்களோ, வாதமோ அவர் கண்ணில் பட்டால், அதை முதலில் நீதிமன்றத்தில் முன் எடுத்து வைப்பது அவருடைய கடமை. ‘குற்றவாளிக்குச் சாதகமான விஷயங்களை அவர் தரப்பு வக்கீல் கவனித்துக் கொள்ளட்டும், எனக்கென்ன?’ என்று அவர் இருந்துவிடக் கூடாது. அவராக முன் வந்து, இன்னின்ன அம்சங்கள் குற்றவாளிக்குச் சாதகமாக உள்ளன’ என்பதை நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும். எப்படியாவது தண்டனை வாங்கித் தருவேன் என்று செயல்படுவது அவருடைய கடமை அல்ல. இது கிரிமினல் வழக்குகளைப் பொறுத்த அடிப்படை சட்டத் தத்துவங்களில் ஒன்று, சுப்ரீம் கோர்ட் பல்வேறு வழக்குகளில் இதை வலியுறுத்தியிருக்கிறது. இதை ஆச்சார்யா லட்சியம் செய்கிற மாதிரி தெரியவில்லை.

வாய்தா-ராணிஆச்சார்யா ஊடகங்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வெளிப்படையானவை. வாய்தா மேல் வாய்தா வாங்கி, நீதிபதி, வழக்கறிஞர் யாரும் ஜெயாவை விசாரிப்பதற்கு தகுதி இல்லை என்று புதுப்புது வழக்குகள் போடுவது, அதையும் உச்சநீதிமன்றம் வரை போய் இழுத்தடிப்பது, ஆச்சார்யா மேலேயே சில வழக்குகள் போட்டு மிரட்டியிருப்பது, நீதிபதியே களைத்துப் போய் ஜெய-சசிகலாவை நிர்ப்பந்தம் செய்யாமல் இருப்பது குறித்துத்தான் ஆச்சார்யா வெறுத்துப் போய் பேசியிருக்கிறார். இவை எவை குறித்தும் சோ பேசவில்லை என்பது அவரது அப்பட்டமான பூணூல் பாசமே அன்றி வேறல்ல.

அடுத்து ஜெயாவை எதிரியாக நினைக்கக் கூடாது என்று ஆச்சார்யாவுக்கு சோ உபதேசம் செய்கிறார். எப்படியாவது தண்டனை வாங்கித் தருவேனென்று செயல்படக்கூடாது என்று வழக்கறிஞர் தர்மம் பேசுகிறார். அதாவது ஆச்சார்யா கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டுமென்பதுதான் சோவின் விருப்பம். ஆனால் ஜெயாவின் மிரட்டல், நிர்ப்ந்தங்களால் விலகிப் போயிருக்கும் ஆச்சார்யாவை வழக்கறிஞர் தர்மம் தெரியாமல் நடந்து கொண்டிருப்பதாக வெட்கமே இல்லாமல் தூற்றுகிறார் சோ. நரித் தந்திரம் என்பதற்கு இலக்கணமே சோ தான் என்பதற்கு இந்தப் பதில் ஒரு சான்று.

ஆச்சார்யா விலகியிருக்கும் காரணங்கள் வெளிப்படையானவை. அந்தக் காரணங்களுக்கு பதில் சொன்னால் ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் சோ லீகலாக வேறு விசயங்களை இட்டுக்கட்டி பேசுகிறார். அதுவும் உப்புப்பெறாத விசயங்களை வைத்து. மணலில் கயிறு திரிப்பது என்பது இதுதான். நேற்று ஜெயலலிதாவின் திரையுலக நண்பர்களுக்கு போயஸ் தோட்டத்தில் விருந்தாம். அதில் பங்கேற்ற ஆண் நடிகர் சோ மட்டுமே. விருந்தில் மட்டுமல்ல ஜெயாவின் பார்ப்பன கிச்சன்கேபினெட்டில் முக்கிய நபராக இருக்கும் இந்த ஆள் இப்படி பேசாமல் வேறு எப்படி பேசுவார்?

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. “அவராக முன் வந்து, இன்னின்ன அம்சங்கள் குற்றவாளிக்குச் சாதகமாக உள்ளன’ என்பதை நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும். எப்படியாவது தண்டனை வாங்கித் தருவேன் என்று செயல்படுவது அவருடைய கடமை அல்ல.”… இது இங்குள்ள அட்வகேட் ஜெனரல் மற்றுமுள்ள அரசு வழக்குரைக்கர்களுக்கும் பொருந்துமா?
    அப்படியிருந்தால்,உடனே தூக்கப்படுவார்கள்.ஊருக்கு தான் உபதேசம்!

  2. //ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் சோ லீகலாக வேறு விசயங்களை இட்டுக்கட்டி பேசுகிறார்//

    நியாயமான வரிகள்!

    ஆனால் ஒரு அரசையே தவறாக பயன்படுத்திகொண்டு ஒரு நாட்டு மக்களையே முட்டாள் ஆக்கும் சொக்க தங்கத்தையும், மஞ்சள் துண்டையும் விமர்சிக்கும் போதும் இத்தகைய நாடு நிலைமையை வினவிடம் எதிர் பார்க்கிறோம்!

  3. ஆச்சார்யா – பேரைப் பார்த்தா பார்ப்பான் மாதிரி தெரியுது. பார்ப்பான்ல யாரையாவது விமர்சிக்கும்போது மறக்காம “இவன் பார்ப்பான்” அப்பிடின்னு சொல்லிட்டு திட்டுவ. இப்போ ஆச்சார்யாவ பாராட்டற மாதிரி இருக்கு. “இவன் பார்ப்பான்” அப்பிடின்னு சொல்லிட்டு பாராட்டலாம். செய்ய மாட்டியே. இது தான் நடுநிலை. வாழ்த்துக்கள்.

  4. வயதில் பெரியவர்களான அமைசசர் உள்ளிட்ட சகலரையும் காலில் விழவைத்து மகிழும் முதல்வர் தலை குனிந்து சோ விடம் அட்சதை ஆசீர்வாதம் வாங்கும் படத்தை எங்கே பிடித்தீர்கள். இது தான் இந்த ஸ்டோரியின் சிறப்பு

        • கூட இன்னொரு கேள்வியையும் சேத்துக்க.. ஏன் கோவில்பட்டியில் இருக்கும் கோவில் அர்ச்சகன் காலில் விழ வில்லை என்று.

  5. இதற்கும் பூணுலுக்கும் என்ன சம்மந்தம்?

    ஆச்சார்யா என்ற பெயரை வைத்து கொண்டு உள்ள இவரும் பூணுல் தானே? அடுத்து இவர் மீது வலிமையான கேஸை போட்டு உள்ளே தள்ளியதும் ஒரு பூணுல் ஆள் தானே?

    சும்மா இவங்க செய்யற அயோக்கியதனத்திற்கு எல்லாம் பூணுலை இழுக்காதீர்கள். பூணுல் பிராமணர்கள் மட்டும் அல்ல. பிற சமூகத்தவர்களும் அணிகின்றனர். அடுத்து ராசா செய்யும் ஊழலை தலித் ஊழல் என்று சொல்வது எவ்வளவு முட்டாள் தனமோ அதே அளவு பார்ப்பண ஊழல் என்று சொல்வதும்.

    தேவையில்லாத இடத்தில் பூணுலை இழுத்து உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்ள வேண்டாம். சம்மந்தப்பட்ட மக்களை விமர்சனம் செய்வதில் தவறில்லை. அதை வைத்து மற்றவர்களை விமர்சனம் செய்வதை வினவு தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

  6. ஒரு காலத்தில் நானும் தொடந்து துக்ளக் வாங்கி கொண்டு இருந்தேன். ஆனால் எடியுரப்பாவை மிக மோசமானவராக விமர்சனம் செய்து அதற்கு அடுத்த பக்கத்தில் ஜெயாவை புகழ்ந்து தள்ளினார். எடியுரப்பா ஊழல் செய்வில்லை என்று யாரும் சப்பை கட்டு கட்ட முடியாது. அதே சமயத்தில் அவரை விட பல ஆயிரம் மடங்கு ஊழல் செய்பவருக்கு இவர் துணை போகிறாரே? இதை எந்த அளவீட்டில் சரி என்று ஏற்று கொள்வது…

  7. அய்யா திருச்சிக்காரன், திசை திருப்ப வேண்டாம். தனி நபர் நேரடியாக பயன் பெறாவிட்டாலும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்தால் அதுவும் தண்டிக்கப்படக்கூடிய குற்றம்தான். அதுசரி யாரை மிரட்டப்பாக்கிறீர்கள் சாமியையா. அவர் சோனியாவுக்கே ஆப்பு அடித்தவர். சிதம்பரம் எனக்கு தெரிந்து சுப்ரீம் கோர்டை கலக்கிய வக்கீலாக என்றைக்கும் இருந்தது இல்லை. அதனால் சாமி இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் கலங்க மாட்டார்.

  8. Acharya is a conscientious lawyer and also a brahmin. Cho is a brahmin and a power broker, which he himself has accepted. Don’t reduce corruption to brahmin bashing. Corruption is done by all people including dalits, vaishyas and million other castes. Calling yourself as a revolutionary, you should not indulge in hate politics like other casteist and communal outfits.Also Brahmin bashing has no novelty-sundaram

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க