Thursday, July 18, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

-

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்-14

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!

போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு கடற்கரை வழியாக நேற்று சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நயவஞ்சகமான சட்ட மொழியில் பேசி முயன்றனர். இதற்கு தோதாக நீண்ட நாட்களாக 144 தடையுத்திரவையும் பிறப்பித்திருந்தனர். 5000த்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்றிரவு முழுவதும் கடற்கரையில் வெட்டவெளியில் தங்கிய மக்கள் இன்றும் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களை போக்கு காட்டிவிட்டு அலையவிடும் தந்திரத்தை போலீசு தொடர்ந்து மேற்கொண்டது. இறுதியில் கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தியிருக்கிறது தமிழக போலீசு. கையில் கிடைத்தவர்களை கொடூரமாக தாக்கி கைதும் செய்திருக்கிறது. கடலுக்குள் ஓடிய மக்களை மீண்டும் கரை திரும்பாத வண்ணம் அரண் அமைத்து வேட்டை நாயைப் போல காத்திருக்கிறது போலீசு.

இடிந்தகரைக்கு உள்ளேயும் போலீசு படை நுழைந்து, போராட்டக்காரர்களின் பந்தலைக் கைப்பற்றியிருக்கிறது. தேவாலயத்துக்கு உள்ளேயும் நுழைந்திருக்கிறது. ஊரைக் கைப்பற்றிய ஆக்கிரமிப்பு படை போல ஊர் முழுவதையும் போலீசு ஆக்கிரமித்திருக்கிறது. பலர் படகுகளில் கடலுக்குள் செல்கிறார்கள். பெண்கள் குழந்தைகள் திசைக்கொருவராக சிதறியிருக்கின்றனர். யாருக்கு என்ன நேர்ந்த்தென்று தெரியவில்லை.

அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் இந்த நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எமது அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும். என்று கோருகிறோம்.

ஒரு பட்டாசு தொழிற்சாலையில் கூட மக்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்க வக்கில்லாத அரசுக்கு, அணு உலையின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் தருவதாகப் பேசுவதற்கே அருகதை கிடையாது. காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட மாற்று மின் தயாரிப்பு முறைகள் உலகமெங்கும் பரவிவரும் இக்காலத்தில் இந்தியாவின் மீது அணு உலைகள் திணிக்கப்படுவதற்கு காரணம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை இலாப நோக்கமும், இந்திய அரசின் இராணுவ நோக்கமுமே தவிர வேறில்லை.

அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

அ.முகுந்தன்,

ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு.

ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு.

 1. டாஸ்மாக் கில் மதுபானம் விலை ஏறியதற்கு கோவப்படும் தமிழக குடிமக்கள் …
  குழந்தைகளையும்,பெண்களையும்,பத்திரிக்கயாளர்கலையும் நிராயுதபணியாக நிற்கும் மக்களையும் கொடூரமாக தாக்கும் போலீஸ் நா ….களை…பார்த்து கோவப்பட்டதாக தெரியவில்லை

 2. […] கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித…மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த […]

 3. enakku thamili eppadi adikkavendum endru theriavillai mannikkavum koodunkulathil jeya arasin paspsa vanmurai oliga.naan vanmaiga kandikeran.vai ko nedumaran seeman pondravarkalai patri koodunkulam makkal purithu kolvarkal.avargal jeya vai neradiga kandikkamattargal

 4. ரததக் காடேரிகள் ஏடிஜிபி ஜார்ஜ்,ஐ.ஜி.ராஜேஸ்தாஸ் எஸ்.பி.டாக்டர்.செந்தில்வேலன் ஆகியோர் பாசிச ஜெயாவின் ஏவல் நாய்களாக பாய்ந்து மக்களைக் கடித்துக் குதறுகிறார்கள்.இப்படி விசுவாசம் காட்டிய ஏவல் நாய்கள் எத்தனையோ போன இடம் தெரியவில்லை.மக்கள் பெயரைச் சொல்லி மக்களையே கொல்லும் கயவர்களும் பன்னாட்டு முதலாளிகளின் தாசர்களுமான இவர்கள் இறுதியில் நம்புவது போலீசு,ராணுவத்தைதான்.ஆனால் மக்கள் விரோதிகள் எல்லாம் மண்ணைக் கவ்வியதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. அதிகார போதையில் பாசிஸ்டுகள் இதை உணர்வதில்லை.மக்கள் வாழ்வார்கள் .மக்கள் விரோதிகள் வீழ்வது வெகு தொலைவில் இல்லை!

 5. //அணுஉலையை விரட்டணுனா போராட்டத்த மாத்தணும்
  கூடங்குளம் இன்னும் ஒரு நந்திகிராமமாகணும் …//
  புரட்சிகர அமைப்புகள் வலியுறுத்துவதை போராட்ட குழு சிந்தித்து பார்க்க வேண்டும்.

 6. வீட்டுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்க வக்கற்றவன் மனைவியின் தலைமுடியிலுள்ள எண்ணெயை குறித்துக்காட்டி நெருப்பு வைத்து விளக்கேற்றி வெளிச்சம் கண்டதாகத்தாகத்தான் கூடன்குளம் அணு மின்னிலையத்தின் தார்ப்பரீகம் புரியவைக்கப்பட்டிருக்கிறது. இங்கு நியாயத்தை பகுப்பாய்ந்து முடிவுகட்டவேண்டிய நீதிமன்றங்களும் அரசியற் கட்சிகளின் ஆட்டுமந்தை மந்திரிசபையாக செயற்படுவதுதான் உச்ச அநாகரீகம். மக்களாட்சி சனநாயகம் என்று தம்பட்டம் அடிக்கும் ஆட்சியாளர்கள் ஈர்க்குவாண விஞ்ஞானம் படித்த அப்துல் கலாம் என்ற ஒற்றை தனிமனிதனின் விருப்பத்தை முன்னிலைப்படுத்துமளவுக்கு மண்ணின் மைந்தர்களாகிய மக்களுக்கும், அணுபற்றிய வரலாற்று சன்றுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆட்சியாளர்களின் இயலாமை இடங்கொடுக்கவில்லை. சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு லைசன்ஸ் கொடுத்து ஏழை படிப்பறிவில்லாதவர்களை கொன்றதுபோல கூடங்குளம் ஒருநாள் ஒரு பிராந்தியத்தை பூண்டோடு அழிக்கும்போது 5,00000 ரூபா நஷ்ட்டஈடும் அரசியல் வியாக்கியானங்களும் ஒரு ஐந்து நாட்களுக்கு நடைபெற்று தொலைந்து போகும்.

  நாடு வல்லரசாவடுவதற்கு குறுக்கு வழியில் இலகுவாக அணுவை பயன்படுத்தலாம் என இந்திய ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் எந்த அடிப்படையில் சிதிக்கிறார்கள் என்பது விசித்திரமானது.

 7. தோழர் உதய குமார் வாழ்க
  மக்களை வழிநடத்தி செல்லும் அவரது போராட்டம் ஓங்குக.
  ஜெயலலிதா பேயின் ஆட்சியை பற்றி மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள்
  மக்கள் விரோத ஜெயலலிதா ஒழிக.
  பார்பனத்தி ஜெயாவை நம்பாதீர்கள்
  அவளை நம்பிக் கெட்டவர்கள் நிறைய பேர்
  மக்கள் மாவோயிஸ்டாக மாறினால் மட்டுமே
  போராட்டம் வெற்றி பெரும்
  காவல் துறை ஒழிக.
  காட்டுமிராண்டியாக ஆயுதமின்றி இருக்கும் மக்களை அடித்து துன்புறுத்தும் காவல்

 8. உதயகுமார் ஒரு ஜெயலலிதா விசுவாசி. இதை அவர் மறைக்கவும் முயன்றதில்லை. அவரை கூடங்குளம் மாவோ என்று கருதுவதைப் போல் மடமை எதுவும் இல்லை.’கேப்டன்’ விஜயகாந்த்தை
  போலி கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டின் லெனின் என்று கருதுவது போன்றது தான் உதயகுமாரை லெனின்
  என்று கருதுவதும்.மார்க்ஸிய லெனினிய குழுக்களில் ஒன்றான மஜஇக
  கூடங்குளம் அணுவுலையை திறக்கக் கோறுகிறது. ஜெயலலிதாவைக் கன்டித்து ஒரு வார்த்தை கூட பேச முன் வராத உதயகுமாரை தூக்கி சுமப்பது யேன்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க