செய்தி -101
இப்போது இரவு 12 மணி. சில்லென்ற கடற்காற்று, எலும்பு வரை ஊடுறுவுகிறது.
கூடங்குளம் அணு உலையின் பின்புறம், அணு உலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட கடற்கரையில், சற்று வடக்குப்புறமாக, உலையிலிருந்து சுமார் 1000 மீட்டர் தூரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக, சுருண்டு படுத்திருக்கிறார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அடங்கலாக இடிந்த கரை ஊர் முழுவதும் இங்கே வந்துவிட்டது – நடக்கமுடியாத சில முதியவர்களைத் தவிர ஊருக்குள் வேறு யாரும் மிச்சம் இல்லை.
குளிரில் நடுங்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை அணைத்தபடி தாய்மார்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் இருள் கவியத் தொடங்கிய பின்னர்தான் அதிரடிப்படை சற்று பின்நோக்கி நகர்ந்தது. பதற்றம் நிறைந்த பகற்பொழுது ஒருவழியாக முடிந்தது.
இரவுக்கு உளுந்தங்கஞ்சி. பசியாறிய அயர்ச்சியில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்க, நாளைய சமையலுக்கான ஆயத்தங்களை சில இளைஞர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். வேறு சில இளைஞர்கள் கையில் டார்ச் விளக்குடன் சிறு சிறு குழுக்களாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் – போலீசின் ஊடுறுவலைத் தடுப்பதற்கும் அவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும்தான்.
ஆரவாரமோ கூச்சலோ இன்றி வேலைகள் நடக்கின்றன. கடற்காற்று பலமாக இருந்த காரணத்தினால் பகலில் பந்தல் போட முடியவில்லை. சில இளைஞர்கள் மீண்டும் முயன்று கொண்டிருந்தார்கள். பெண்களின் பயன்பாட்டுக்கான மறைப்புகளை சிலர் நிறுவிக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தண்ணீர் டிரம்களை ஆங்காங்கே கொண்டு வந்து வைத்து நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.
நடுக்கும் குளிரில் “கையது கொண்டு மெய்யது பொத்தி” திட்டுத்திட்டாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள், சீட்டாடிக் கொண்டிருக்கும் சில இளைஞர்கள், அவர்ளைக் கடிந்து கொள்ளும் பெரியவர்கள்.. என்று போராட்டக் களமாகவும், திருவிழாச் சூழலாகவும் காட்சி தருகிறது இந்தக் கடற்கரை. “போராட்டமே மகிழ்ச்சி” என்பதை தங்களது நடவடிக்கைகள் மூலம் மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறார்கள் இந்த மக்கள்.
“இது மீன்பிடிக்கும் சீசன். கடலுக்குப் போனால் சுலபமாக வாரம் 5000 ரூபாய் சம்பாதிக்க முடியும். இப்போது விட்டால் அப்புறம் மீன் கிடைக்காது. இழப்புதான். ஆனால் அணு உலையை இப்போது விட்டால், அப்புறம் எப்படி தடுக்க முடியும்?” என்கிறார் ஒரு மீனவர்.
கடல் அலைகள் வந்து காலைத்தொட்டுச் செல்லும் கடற்கரை ஓரத்தில், வெட்டவெளியில் குளிரில் படுப்பதையோ, இன்னும் சில நாட்களை அங்கேயே கழிக்க வேண்டியிருக்கும் என்பதையோ யாரும், ஒரு பிரச்சினையாக கருதவில்லை. கைக்குழந்தைகளுடன் படுத்திருந்த தாய்மார்கள் முகத்தில்கூட இது குறித்த கவலை எதையும் காண முடியவில்லை.
“பெண்களும் குழந்தைகளும் கட்டாயப்படுத்தி அழைத்துவரப் பட்டிருக்கிறார்கள்” என்கிறது போலீசு. கட்டாயத்தின் பேரில் வந்திருப்பவர்கள் போலீசு படையினர்தான் என்பதை அவர்களது முகமே காட்டுகிறது. ஷு க்கள் மணலில் புதைய, “ஒரு புறம் முட்புதர்கள், மறுபுறம் கடல், எதிரில் மக்கள்” என்று விசித்திரமானதொரு சூழலில் நடக்க முடியாமல் நடந்து வந்து நின்று கொண்டிருக்கும் இரும்புத் தொப்பியணிந்த பெண் காவலர்களின் முகம்தான் பரிதாபத்துக்குரியதாக தெரிந்தது.
“போக விரும்புகிறவர்கள் போகலாம்” என்று அந்தப் போர்க்களத்தில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், அத்தனை போலீசாரும் ஓடி விடுவார்கள் என்பது மட்டும் உறுதி. இந்தப்பக்கம் பத்தாயிரம் மக்கள். அந்தப்பக்கம் ராஜேஷ்தாஸ், பிதாரி இன்ன பிற அதிகாரிகள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.
இதுதான் உண்மை நிலை. “கட்டாயப்படுத்தி கொண்டுவரப்பட்ட பெண்கள்” கடற்கரை திறந்த வெளியில் படுத்துக் கிடக்க, “கடமையாற்ற வந்த போலீசார்”, இரவு திருமண மண்டபங்களுக்கு அனுப்ப பட்டு விட்டார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு அணு மின்நிலையத்தின் விருந்தினர் மாளிகை.
விடிந்தவுடன் குளித்து, டிபன் சாப்பிட்டு, சீருடை அணிந்து வந்து “சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட” வேண்டுமே, இரவு நேரத்தை கடற்கரைக் குளிரில் கழிக்க முடியுமா?
“மண்டபத்திலேயே தங்கட்டும், அதுதானே அவர்களுக்குப் பாதுகாப்பு” என்று கூறி நக்கலாக சிரித்தார் ஒரு மீனவ இளைஞர்.
அணு உலையை முன்னிருத்தி இப்பிராந்தியம் முழுவதையும் ஒருவகை இராணுவக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன. தென்தமிழகத்தை ஒரு இராணுவ கன்டோன்மென்டாக, இன்னொரு காஷ்மீராக, வடகிழக்காக மாற்றும் பணி தொடங்கிவிட்டது.
உவரி, கூட்டப்புளி, கூடங்குளம் என்று எல்லா ஊர்களிலிருந்தும் வருகின்ற சாலைகள் அடைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் காட்டு வழியில், முட்புதர்களின் ஊடாக நடந்தும், கடல் வழியே படகுகளிலும் மக்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அணு உலையின் வாயிற்புறமான கூடங்குளத்தில், தேவாலயத்தின் எதிரில் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கிறார்கள். அணு உலையின் வலப்புறமும் இடப்புறமும் நீண்டு செல்லும் கடற்கரையெங்கும் இருக்கும் கரையோர மக்கள் போராட்டத்தின் தீயால் தீண்டப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.
“அடித்தால் வாங்கிக் கொள்ளவேண்டும். திருப்பி அடிக்கக்கூடாது. அமைதி, அகிம்சை” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் உதயகுமார்.
“மக்கள் மேலே கைவெச்சா அப்படியே கடலுக்குள்ள போயிடுவோம். போகும்போது ஆளுக்கொரு போலீசுக்காரன கையில பிடிச்சுகிட்டுதான் போவோம்” என்றார் ஒரு நடுத்தர வயது மீனவர்.
“துப்பாக்கியை கீழே வச்சிட்டு, கையில தடிக்கம்ப எடுத்துகிட்டு வரட்டும். நாங்க வெறுங்கையா வாரோம். யாருன்னு பாத்துகிறுவோம்” என்றார் இன்னொரு இளைஞர்.
கடலுக்குள்ளே கட்டுமரத்தின் மேல் கால் பதித்து அவர் நின்று கொண்டிருப்பது போலவும். போலீசு படைகள் அலை மேல் மேவி நிற்க முடியாமல், துப்பாக்கியை ஊன்றுகோலாக்கி நின்று தடுமாறுவதைப் போலவும் வேடிக்கையான ஒரு மனச்சித்திரம் அவர் பேச்சைக் கேட்கும் போது நமக்கு எழுகிறது.
கடல் தொடும் இடத்துக்கு வந்துவிட்டதனாலோ என்னவோ மக்களின் முகத்தில் தைரியம் கூடிவிட்டது. போராட்டத்தில் கடலும் தங்களுக்குத் துணை நிற்பதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை போலும்!
இந்த நள்ளிரவில், நடுக்கும் குளிரில், கடல் அலையின் அச்சுறுத்தும் பேரிரைச்சலில், அமைதியாக உறங்கும் குழந்தைகளையும் தாய்மார்களையும் காணும்போது, அது உண்மையென்றுதான் தோன்றுகிறது!
________________________________________________________________
– வினவு செய்தியாளர்கள், கூடங்குளம் கடற்கரையிலிருந்து
படங்கள் – வினவு செய்தியாளர்கள், மற்றும் டயாநூக்
________________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- கூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!
- கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!
- இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !
- கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு! படங்கள்!!
- கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!
- கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!
- கூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!
- கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
- கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!
- கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
- மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
- கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் மருதையன், சபா.நாவலன் நேர்காணல்!
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!
நீங்கள் இந்த போராட்டத்தை கண்மூடிதனமாக ஆதரிக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அப்பாவி மக்களை வெகு சுலபமாக உயிர் பயம் காண்பித்து வரவழைத்து விட முடியும். நீதி மன்றம் அனுமதி கொடுத்த பிறகும் ஆர்பாட்டம் செய்வது அராஜகம். அப்படி நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை இல்லாவிட்டால் அதை அணுகி இருக்கவே கூடாது. இப்போது உச்ச நீதி மன்றம் செல்வதை விடுத்து இம்மாதிரி அப்பாவி மக்களை தூண்டி விடுபவர்களை உள்ளே போட வேண்டும். இப்படி ஆள் ஆளுக்கு சட்டத்தை கையில் எடுத்து கொண்டால் நாட்டில் ஒரு வேலையும் நடக்காது – இம்மாதிரி போராட்டங்களை அனுமதிக்கவே கூடாது.
Ama neengathan sattathe hindiyavil nilai naata vanthavanga..arasiyal athigararkalin kolayum kollaiyum oru packam poikondae…..enacku neraya velai irucku ungaloda karutha pagirnthu en neram veenadicka virumbala evlo sonnalum olanja tape recorder mathiri ithethan solluveeenga…
you are saying that we should be highly adaptable to any decision taken by state even after seeing bhopal,endosulphon,monsento,sivakasi accident,
remember this
if any thing happen to me it is just a news for you and viceversa
i am not an expert in this nor any of the guys who are writing about this nor any of the protestors. The protestors are emotionally black mailed with such happenings quoted by you. If we are going to worry about such occurences in the world, the human kind would have stayed in stone ages. Every technology comes with a price. we have to be careful and ensure safety precautions are taken. Involve experts in this field rather than blindly supporting protestors. you guys believe the Indian government is creating a mass crematorium? For god sake, we have a kalpakkam site which is functional for over 2 decades – I have relatives who have been born and brought up in kalpakkam and are HEALTHY. Kalpakkam is much more beautiful and liveable than even Chennai city.
you are not expert its ok
science should see everything as a doubt
if there is no critical view then no science
we all can say “everything is created and controlled by god” without any doubt and any critique . if that happens we will be in stone age
in Egypt everybody believed that pharaohs are sent by god to rule us.
you are telling that there should be no questioning the authority against scientist.
as a scientist there should be critical thinking
as an engineer we should prepare for t
he worst,learn from our mistakes and others mistakes(fukishima)
before writing any comments first of all read major disasters (mainly in industries ,man made disasters)
excellent read about Air Accidents, road accidents, water accidents and stop all forms of transport. Stopping according to you is the learning. As far as I am concerned, you learn from mistakes and rectify it. Stopping is not the solution.
சென்ற ஆண்டு போபாலுக்குச் சென்ற மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஆலையின் மண்ணை கையில் அள்ளி எடுத்து, “என்ன நடந்து விட்டது, நான் செத்தா போய்விட்டேன்?“போபால்கள் நடக்கலாம். அதற்காக நாடு முன்னேறாமல் இருக்க முடியாது” என்று தன்னை சந்திக்க வந்த போபால் மக்களின் பிரதிநிதிகளிடம் கூறியிருக்கிறார் மன்மோகன்சிங்.
“போபால் விபத்துக்குக் காரணம் சீக்கிய தீவிரவாதிகளின் சதிவேலை” என்பதுதான் கார்பைடு நிர்வாகம் முதலில் அவிழ்த்து விட்ட புளுகு. மறுநாள், “இது நிர்வாகத்தைப் பழிவாங்க ஒரு தொழிலாளி செய்த சதி” என்று வேறொரு பொய்யை பரப்பி விட்டது. “ஊட்டச்சத்துக் குறைவினால் ஏழைக் குழந்தைகளின் நுரையீரல் பலவீனமாக இருந்ததுதான் அவர்கள் சாகக் காரணம்” என்றும் “மக்கள் தாறுமாறாக ஓடியதனால்தான் பலர் மிதிபட்டுச் சாக நேர்ந்தது” என்றும் மிகவும் வக்கிரமாக பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைப் போட்டது கார்பைடு நிர்வாகம்.
இது எங்கள் ஆலையிலிருந்து கசிந்த வாயுவே அல்ல” என்று சாதித்தான் ஆலையின் ஒர்க்ஸ் மேனேஜர் முகுந்த். “மெதில் ஐசோ சயனைட் என்பது நஞ்சல்ல, கண்ணீர்ப்புகை போல கண்ணெரிச்சல் தருமே தவிர, உயிருக்கு ஆபத்தே இல்லை” என்று நவபாரத் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தான் போபால் ஆலையின் மருத்துவ அதிகாரி டாக்டர் லோயா.
துணிச்சல் இருந்தால் ஆலை உள்ளே சென்று விஷவாயு பெட்டகத்தை அப்புறப்படுத்தவேண்டியது தானே!
தாக்கியது சயனைட் வாயுவாக இருக்கக்கூடும் என்று ஊகித்து, மக்களைக் காப்பாற்ற சோடியம் தயோ சல்பேட் என்ற முறிவு மருந்தைக் கொடுக்கத் தொடங்கினார்கள் அரசு மருத்துவர்கள். இந்திய மருத்துவ ஆய்வுக்கழகமும் இதே மருந்தை சிபாரிசு செய்தது. இதனைத் தொடர்ந்து 10,000 குப்பிகள் ஊசிமருந்து ஜெர்மெனியிலிருந்து வந்திறங்கியது. சோடியம் தயோ சல்பேட்டைக் கொடுத்து மக்கள் பிழைத்துக் கொண்டால், ஆலையிலிருந்து வெளியேறியது சயனைட் வாயுதான் என்ற உண்மை உலகுக்கே அம்பலமாகிவிடும் என்பதால், அந்த மருந்தையே கொடுக்கவிடாமல் தடுத்தது கார்பைடு நிர்வாகம்.
history repeats by itself
actual meaning of this -from history we are learning nothing so history repeats byitself
மக்களை அங்கு திரட்டி நியாயம் கிடைக்க போராடுங்கள். அதை விடுத்து இங்கும் அதே மாதிரி நடக்கும் என்று பீதியை கிளப்புவது தேவை அற்றது.
for evidence check
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1142333/
http://books.google.co.in/books?id=lpcwvvK9xlsC&pg=PA111&lpg=PA111&dq=sodium+thiosulphate+and+methyl+iso+cyanide++bhopla&source=bl&ots=fOu-siZEMK&sig=bHt1ijhyy19UvxkLOKUAv5BVhC8&hl=ta#v=onepage&q=sodium%20thiosulphate%20and%20methyl%20iso%20cyanide%20%20bhopla&f=false
I am not disputing about Bhopal issue – what has a chemical plant disaster got to do with nuclear power plant? all over india we are building metro rails and there have been few accidents already? why don’t people ask this to be stopped also? with the lack of safety aspects a train falling in a busy crowded area could kill thousands of people too..
further on reading the link you have sent, it is very clear that they were dismantling the system and were about the sell the company. the govt. had a mere 22% stake in this. This is a chemical plant whereas what is being built is a nuclear power plant. If the objective of this protest, is the concern for safety, then that should be the slogan – the protestors are vociferous in informing that irrespective of whatever is being said, they will not allow the power plant to operate – Arrogance is an under statement. This shows their intention without doubt and hence should not be encouraged.
i would rather go behind union carbide and get 10b$ compensation than wasting time to stop this power plant.
then go face the state in bhopal issue
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, இலங்கை படையால் விரட்டப்பட்டனர், என்று தினமும் செய்தி வந்ததே அப்பொழுது எல்லாம் எங்க போனார்கள் இந்த போலீஸ் நாய்கள்?
கிரானைட் ஊழல் செய்தவனுக்கு முதல் வகுப்பு சிறை தர சொல்லி நிதிபதிகள் சொல்லுகிறார்கள், ஆனால் போராடும் மக்களை விரட்டுவேன் என்று சொல்லுகிறார்கள், இது தான் உங்கள் நீதி?
நிலகரி ஊழல், அலைகற்றை ஊழல் செய்தவன் எல்லாம் ஜாலிய இருக்கிறான் இந்த மக்கள் தான் தேச துரோகிகள்! நல்ல இருக்கு உங்க சட்டம்?
மக்கள் மேலே கைவெச்சா அப்படியே கடலுக்குள்ள போயிடுவோம். போகும்போது ஆளுக்கொரு போலீசுக்காரன கையில பிடிச்சுகிட்டுதான் போவோம்” என்றார் ஒரு நடுத்தர வயது மீனவர்l i k e
அய்யா கண்ணா, இந்த மாதிரி மக்கள் போராட்டங்களை புரிந்துகொள்ளவேண்டுமானால் குறைந்தபட்ச மனிதனனாவாது இருக்க வேண்டும்.
ஐயா மணிகண்டன், எல்லா தவறுகளையும் ஆதரிப்பவன்தான் மனிதன் என்றால், ஐயா நான் மனிதனாக இருக்க விரும்பவில்லை – நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று மொண்டி செய்பவர்களிடம் என்ன செய்ய முடியும்? கோர்டுக்கு போவோம் ஆனால் எங்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னால் கேட்க மாட்டோம் என்று சொன்னால் என்ன ஞாயம்?
அய்யா கண்ணா, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அணு உலையின் ஆபத்து பற்றி தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு எல்லாம் தெரிந்து தான் இருக்கிறது, ஆனாலும் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மக்களை ஒடுக்கும் அரசின் ஒரு அங்கம் தான்.
மீனவர்கள் தாக்கல் செய்த மனுவில் “நாங்கள் உண்ணும் மீனில் கதிர்வீச்சு இருப்பதாக உணர்கிறோம். அதை ஆராய்ந்து உண்மையா? என்பதைத் தெரிவிக்கவும்”.
மீன்களை ஆராயக் குழு அமைத்த டெல்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில்” மீன்களில் கதிர்வீச்சு இருப்பது உண்மை. ஆனால் நாட்டின் பாதுகாப்பு கருதி கதிவீச்சின் அளவை வெளியிட முடியாது” என்று கூறியது.
நாட்டின் பாதுகாப்பு என்பது உண்மையில் யாருடைய பாதுகாப்பு? மக்களின் பாதுகாப்பா? இல்லை ஆட்சியாளர்களின் பாதுகாப்பா?
“சட்டபூர்வமானவை அனைத்தும் நியாயமானது இல்லை.நியாயமானது அனைத்தும் சட்டப்பூர்வமானவை இல்லை”
//மீன்களை ஆராயக் குழு அமைத்த டெல்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில்” மீன்களில் கதிர்வீச்சு இருப்பது உண்மை. ஆனால் நாட்டின் பாதுகாப்பு கருதி கதிவீச்சின் அளவை வெளியிட முடியாது” என்று கூறியது.// do you have relevant link. I am hearing this for the first time that the government admitted to having this effect in the fish. whatever i have read, is to the contrary. It said the fishes are healthy and infact are reproducing well.
மன்னிக்கவும். அந்த வழக்கு நடந்தது மும்பை உயர் நீதிமன்றத்தில். வழக்கைத் தொடுத்தவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் தாராப்பூர் அணு உலையின் அருகில் உள்ள வசிக்கும் மீனவ மக்கள்(தானே நதிக்கரையின் அருகில்).
ஆதாரம்: கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ.முத்துக்கிருஷ்ணன்
பக்கம்:30-31
http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=29&Itemid=2
மேற்கண்ட இணைப்பில் அந்தப் புத்தகம் PDF வடிவில் உள்ளது.
//சொன்னால் கேட்க மாட்டோம் என்று சொன்னால் என்ன ஞாயம்?//
தீர்ப்பு நாயமா இல்லை என்று அர்த்தம்
கோர்டுக்கு போகும் அனைவரும் தனக்கு சாதகம் இல்லாத தீர்ப்பு வந்தால், இப்படி நடந்து கொண்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
நீதிபதி தீர்ப்பை ஒழுங்கா சொல்லுவான் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கன்னா நாம சோத்த தின்னா மட்டும் போதாது அந்த சோத்த கொடுக்குற மக்களை பற்றியும் யோசிக்கனும். ஒரு ஒட்டு மொத்த மக்கள் கூட்டம் எப்பவுமே நியாயத்தின் பக்கம் தான் இருக்கும். அநீயாயத்துக்காக எப்பவுமே போராட வரமாட்டார்கள்.
அப்போ இவங்கள விட அதிகமா கூட்டம் கூட்டி அணுமின் நிலையம் வேணும்னு கேட்டா நீங்க எல்லாம் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு உட்டுட்டு போய்டுவீங்களா – காமெடி பண்ணாதீங்க பாஸ்.
அதிகமான கூட்டம் விரும்புற இடத்துல வச்சுக்குங்களேன்!
இதை வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சும்மா இருப்பதால் சத்தம் போடுபவன் அதிகம் என்று நினைத்து விட்டீர்கள். நிஜமாகவே பொது ஜனத்திற்கு இதில் விருப்பம் இல்லாவிடில் பல லட்சம் அல்ல கோடானகோடி மக்கள் திரண்டு இருப்பார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் போலிசுக்கு போக்கு காட்டுவது போல் படம் பத்திரிகைகளில் வந்து உள்ளது – இவர்கள் எல்லாருக்கும் நல்லது கேட்டது தெரியும் ஆனால் அரசாங்கத்துக்கும், நீதி மன்றத்துக்கும் தெரியாது என்று நீங்கள் சொல்லுவீர்கள் நாங்கள் அதை நம்ப வேண்டும் – Please stop sensationalizing this.
//நிஜமாகவே பொது ஜனத்திற்கு இதில் விருப்பம் இல்லாவிடில் பல லட்சம் அல்ல கோடானகோடி மக்கள் திரண்டு இருப்பார்கள்//
மக்களைப் பொறுத்தவரை, பெரும்பான்மையானவர்கள் மத்திய, மாநில அரசுகளின், அப்துல்சலாம்களின்,நாற வாய்களின்(நாராயணசாமி) பொய்ப்பிரச்சாரத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள். மின்சாரம் வேண்டும் என்ற காரணத்திற்காக அணு உலையைத் திறக்க வேண்டும் என்கிறார்கள்.அவர்கள் அணு உலையின் அபத்தை இன்னும் முழுமையாக அறியவில்லை.
அணு உலையின் ஆபத்தை அறிந்த மக்களும், அரசின் அடக்குமுறைக்குப் பயந்து போராடாமல் இருக்கிறார்கள். இதுதான் நிலைமை.
//சிறுவர்களும் சிறுமிகளும் போலிசுக்கு போக்கு காட்டுவது போல் படம் பத்திரிகைகளில் வந்து உள்ளது – இவர்கள் எல்லாருக்கும் நல்லது கேட்டது தெரியும் ஆனால் அரசாங்கத்துக்கும், நீதி மன்றத்துக்கும் தெரியாது என்று நீங்கள் சொல்லுவீர்கள் நாங்கள் அதை நம்ப வேண்டும்//
நல்லது கெட்டது தெரிந்ததனால்தான் பல தலைமுறை மக்களைக் காவு கொள்ளத் துடிக்கும் ஆபத்தான அணு உலையை திறக்க வேண்டும் என்கிறார்களோ? இவர்கள் யாருக்கான நல்லது கெட்டது அறிந்தவர்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும்.
மக்கள் போராட்டம் வெல்லட்டும்.
we are already protesting for Bhopal (Bhopal movement- PEOPLE’S ART AND LITERURE ASSOCIATION)
how are you seeing the below statements
“மண்ணை கையில் அள்ளி எடுத்து, “என்ன நடந்து விட்டது, நான் செத்தா போய்விட்டேன்?”-jayaram ramesh
“போபால்கள் நடக்கலாம். அதற்காக நாடு முன்னேறாமல் இருக்க முடியாது” என்று தன்னை சந்திக்க வந்த போபால் மக்களின் பிரதிநிதிகளிடம் கூறியிருக்கிறார் மன்மோகன்சிங்.”
IT ALSO SHOWS THAT YOU ARE IMPLICITLY SAYING THAT DISASTERS LIKE BHOPAL,ENDOSULPHON AND ROAD ACCIDENTS AS ONE
tomorrow if any thing happens russia will sell its company to USA
and it will say like union carbide
what will you do
just sitting
sorry the above comment is a reply to kannan
Jayaram Ramesh statement – Highly condemnable. I have no respect for Congress or any of their current ministers and am sure all of them will be booted out in the next election.
In regards to Manmohan Singh – It is a cruel statement – but truth.
I understand your apprehension; but asking the development for the fear of something that might happen is not the right approach.
[…] […]
Muttal makkalin vethu porattam.Poi,pithalattam,fraud.
Poi solli,bayam beedhiyay kilappi makkalai bayamuruthi nadathum christian porattam.Conversion nadakkathu endra bayathil evapadum porattam.
நீங்க வேணுமின்னா உங்க சாதியில சேத்துக்கிறோம்னு சொல்லி எதிர் போராட்டம் நடத்துங்களேன்.
idhula jaadhi enga vandichu,avunga dharaalama madam maarattum,aana indha konangi velai ellam seyyama iruntha sari.
emmakkalim veeram thriyaamal varugirai un nuni viral kooda inge em innthirkku ethiraaga ontrum cheyya mudiyaathu en st. xavier ingu vadugar padayai virattinathu unmain entraal neeum oduvaai
thambi kelambu,kathu varattum.
ஹரிகுமார்..முதல்ல நீ கிளம்பு…கொஞ்சமாவது காத்து வரும்…இங்கே என்ன நடந்துட்டு இருக்கு….நீ எத பத்தி பேசுற…..தண்ணி போட்டு வந்து இருக்கியா….முதல்ல உண்மையை தெரிந்து கொண்டு பேசு…..இதிலிருந்தே உன் பொது அறிவு….கத்தோலிக்கர்கள் ஒருபோதும் அந்த மதம்மாற்றும் காரியத்தை செய்யமாட்டார்கள்…அப்படி மதம் மாற சொன்னாலும் உன் சுய புத்தி எங்கெ போயிற்று….ஒரு நியாயமான போராட்டத்தை இப்படி மனிதாபிமானமே இல்லாமல் கொச்சைப்படுத்தாதீர்கள்….
Haha,naan kooda modhalla peirya manushan urupadiya etho solla porarnnu nenaichen,catholic church madham maathatudungra maaberum unmaya paraisaatri pullarikka vechiteenga.
pozhaippu vazhi illadhavangitta poi 500 kaasum,manthiricha thayathu,karthar vandhu karasevu vaangi tharuvaarnnu sonna yezhai enna seivan.
// yezhai enna seivan.//
அவர்களை ஏன் இன்னும் ஏழையாகவே வைத்திருக்கிறீர்கள்?
yaaru vachirukka yezhaya?
Athaan reservation irukku,padikka vendiyathu thane? govt schoolula vathiyaaru vara maatengaaro?
innaiku ivlo peru uyiraiye koduka araporatam panna kalambitingale, ithe intha koodangulam thittam podumpothu yenga poninga. Yella velaiyum mudicchu start panra time la keduka pakara ayal naatu, ul naatu sathigaranga, sulabama onnum ariya makkalai uyir bayam kaati thiratti nadathura poratame ithu. India yepdiyum muneri vida kudathunu nenaikaringale niyayama ??? Kannan u r realy wel said. Kunamakara Maruntha, kasakuthu athu vesamnu nenachu bayanthu alara kolanthaiku adichutha marunthu koduka mudiyum. Athutha kkoodangulam la nadakuthu.
ada arivuketta shek…..idhu eppodho aarpiththu vitta poraattam…..idayila vanthu mookai nuzhaiththukondu pesinaal atharku onnum seyya mudiyaadhu….athukku muthalla irunthu varanum….pazhaiya paththirikkaikali puratii paar….unmai puriyum…..nee yen inge vanthee…..israel kaaran paalasteene kaarana oru muslima konnuttaangalaam….poi kodi pudi….unkalukkelaam oru muslim seththa varra matha unarvu……saga manitharkal nadaththum poraattam patriya our manithaabimaanam illai…..nee vendumanaal un imaam solra maathiri nambittu po….yenna neeyellam aattumanthai koottaththai sernthavan….puththi kettavarkal….
தம்பி,
குழந்தை பொறந்த உடனே அல்லான்னு சொல்லாது. அதற்கதற்கு ஒரு அனுபவ அறிவு வேணும்.