Thursday, December 12, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் சபா.நாவலன் நேர்காணல்!

கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் சபா.நாவலன் நேர்காணல்!

-

இலண்டனில் இயங்கும் ஜி.டி.வி எனும் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 24.03.2012 சனிக்கிழமையன்று கூடங்குளம் தொடர்பான விவாதமொன்று ஒளிபரப்பானது. வெளிச்சம் எனும் விவாத நிகழ்ச்சிக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் இனியொறு தோழர் சாபா.நாவலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பங்கேற்றனர். நாவலன் நேரிலும், மருதையன் தொலைபேசி மூலமும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன் முழு வீடியோ யூ.டியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றேகால் மணி நேரம் இடம் பெறும் விவாதத்தில் இரு முறை விளம்பர இடைவேளை வருகின்றது. ஆரம்பத்தில் தோழர் மருதையனின் புகைப்படம் என்று தோழர் மதிமாறனது படத்தை தவறாக காட்டியிருக்கிறார்கள். பின்னர் நீக்கியிருக்கிறார்கள்.

விவாதத்தில் கூடங்குளம் போராட்டம் தொடர்பாகவும், அதன் அரசியல் பரிணாமங்களும் விளக்கப்பட்டிருக்கின்றது. அதன் பொருட்டு அந்த உரையாடலை இங்கு வெளியிடுகிறோம்.

 

படிக்க

  1. சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கும் இந்த நேர்காணல் பல முக்கியமான செய்திகளை நமக்கு அளிக்கிறது. கூடங்குளம் அணு உலை ஏற்படுத்தவிருக்கும் அரசியல் ரீதியிலான ஆபத்தையும் கதிர் வீச்சினால் வரப்போகும் ஆபத்தையும் தெளிவாக்குகிறது. இவ்விரு ஆபத்துகளும் தமிழக-இந்திய மக்களை மட்டுமல்ல அது இலங்கை-ஈழ மக்களையும் பாதிக்கிற ஒன்றாக பார்க்கப்பட வேண்டும் என்கிறதொரு புதிய கண்ணோட்டத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

    இலண்டன் ஜி.டி.வி, மருதையன், சபா.நாவலன் மற்றும் வினவுக்கு நன்றி!

  2. இந்த உரையாடலில் இரண்டு முறை சபா.நாவலன் இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு (SEZ) இலவச மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தவறான தகவல்.

  3. அதில் மருதயைனாக காட்டப் படுபவர் மதிமாறன் ஒரு படத்தைக் கூட வினவால் தெளிவாகத் தரமுடியாதா?

    • எழில்,
      இது ஜி.டி.வியின் தவறு என்பதை புரிந்து கொள்க! பதிவிலேயே அதைக் குறிப்பிட்டும் நீங்கள் படிக்கவில்லை போலும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க