Wednesday, November 6, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!

கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!

-

கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பிக்க ஒப்புதல் அளித்த கையோடு அடக்குமுறை தர்பாரையும் ஏவிவிட்டிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. ஏற்கனவே முன்னணியாளர்கள் 11 பேர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறது. இந்தக் கைதை எதிர்த்துக் கிளம்பிய கூட்டப்புளி கிராம மக்கள் 178பேர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் 45 பேர் பெண்கள். மேலும்20க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இதில் உண்டு. அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறை அங்கிருக்க இப்படி தொலைவில் உள்ள வேறு மத்திய சிறைகளில் அடைக்க வேண்டிய அவசியம் என்ன? தொலை தூரமென்றால் போராடும் மக்கள் விரக்தியடைவார்கள், சொந்த பந்தங்கள் யாரும் சடுதியில் பார்க்க முடியாது என்ற பாசிச நோக்குடன் தமிழக போலீசு இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

அதன்படி கூட்டப்புளி மக்கள் நேற்று இரவு பத்து மணி அளவில் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட உடன் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் விரைவாக அணிதிரண்டு சிறை வாசலில் காத்திருந்தனர். பேருந்துகள் வந்த உடன் போராடும் மக்களை வாழ்த்தியும், பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் போடப்பட்டன.

தமது கிராமத்தை விட்டு தொலைவில் இருக்கும் திருச்சியில் நம்மை யார் கவனிப்பார்கள் என்று இருந்த மக்கள் இந்த உற்சாகமான வரவேற்பைப் பார்த்து அவர்களும் முழக்கம் இட்டனர். மேலும் ம.க.இ.க கலைக்குழுத் தோழர்கள் ஏற்கனவே இடிந்தகரை வட்டாரத்தில் விரிவான பிரச்சாரம் செய்திருந்த படியால் மக்கள் தோழர்களை அடையாளம் கண்டு கொண்டதோடு கைதான கவலையை விடுத்து அச்சமின்றி சிறை வாசலில் முழக்கமிட்டனர்.

கைதான மக்களை சிறையில் தள்ளிவிடும் நேரம் என்பதால் போலீசு உணவு ஏதும் வழங்கவில்லை. சிறைத்துறையோ நேரம் கடந்துவிட்டபடியால் உணவு இல்லை என்பதாக கைவிரித்து விட்டது. பொதுவில் கைதாகி செல்லுபவர்கள் அனைவருக்கும் இப்படித்தான் ‘வரவேற்பு’ இருக்கும். இந்நிலையில் தோழர்கள் போலீசின் அலட்சியத்தை கண்டித்ததோடு உடனே அருகாமை கடைகளில் இருந்து பிரட், பழம் வாங்கி மக்களுக்கு அளித்தனர்.

இதே போன்று கைது செய்யப்பட்ட 11 முன்னணியாளர்களும் நள்ளிரவில் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் அணிதிரண்டு இரவு 1.30 மணிக்கு சிறை முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தனர். அந்த நேரத்திலும் தம்மை வரவேற்க திரண்டிருந்த தோழர்களை கண்டு கூடங்குளம் முன்னணியாளர்கள் நெகிழ்ந்து போயினர்.

திருச்சி, கடலூர் சிறைகளுக்கு கொண்டு சென்று விட்டால் இந்த மக்களை தனிமைப்படுத்தி முடக்கிவிட முடியும் என்று நினைத்த போலீசின் திமிரை முறியடிக்கும் வண்ணம் இந்த சிறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறைக்கு செல்லுமுன்னே மக்களிடம் தோழர்கள் உணர்ச்சிகரமாக உரையாற்றினர். தொடர்ந்து தமது புரட்சிகர அமைப்புகள் அவர்களுடன் உடனிருப்பதாக உறுதி அளித்தனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________

– செய்தி, புகைப்படங்கள்: ம.க.இ.க, திருச்சி, பு.மா.இ.மு, கடலூர்.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை முறியடிப்போம். புரட்சிகர வாழ்த்துகள்..

    எந்த அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் மக்கள் போராட்டத்தை என்றும் ஆதரிப்பவர்கள் ம.க.இ.க வினர் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்கள் தோழர்கள்..

  2. இந்த அராஜகநிலையை கண்டித்து தமிழகத்க்டின் மற்ற பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும்நடக்த்டி போராட்டக் காரர்களுக்கு ஆதரவு மற்றும் மன உறுதியை தரவேண்டியதுநம் கடமை ! அதை செய்யும் அமைப்பினருக்கு வாழ்த்துக்கள் !

  3. hi ,

    Jayalalitha madam, please at any cost shut down this vinavu blog which is irritating me always.But i love to listen the complaints from the vinavu blog.Its so funny. At any cost the kudankullam nuclear power plant will be opened.

  4. ஒடுக்கு முறையை கண்டு அஞ்சாமல் போராடும் மக்களுக்கும் அதரிக்கும் ம.க.இ.க. தோழர்களுக்கும் வீர வணக்கமும் வாழ்த்துக்களும்.

  5. அடேங்கப்பா…. அடி குடுத்த வினவுக்கே இத்தன காயம்னா….. அடி வாங்கினவன் உயிர்ரோட இருப்பான்னு நெனக்கிறியா நீயீ……

    • யாரு பா இந்த இந்தியன், சீரியஸ் மேட்டர் பேசறப்ப காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார்,இவர பார்த்தா இந்தியன் மாதிரி தெரியல
      மக்களுக்கு ‘அந்நியனா ‘ இருக்கார் . இல்லைனா மக்களை பாதிக்கற விடையத்த காமெடி பண்ண முடியுமா .

    • ச்சீ…காமெடி கூட காப்பி தான் அடிப்பியா? சொந்தனமா யோசிக்க தெரியாதா இந்தியனுக்கு..போ.போ.சுட்டி டிவி பாரு பா…..

  6. இதப்பத்தி இன்னும் ஓராயிரம் கட்டுரையும் கதைகளும் எழுதினானும் இனி ஒன்னும் பண்ண முடியாது, தயவு செய்து அரைத்த மாவையே அரைக்காமல் புதிதாக எதாவது செய்ய முற்படலாமே…

  7. 1947 க்கு முந்தைய நிலையை உணர முடிகிறது. அப்போதும் சுதந்திர போரை கேலி செய்யும் வீணர்கள் இருந்திருப்பார்கள் என்பது புலனாகிறது. ஆகஸ்ட் 15 , 1947 வரும் என்று அப்போது கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார்கள். வந்தபின் வெட்கமில்லாமல் அதற்கு உரிமையும் கொண்டாடி இருப்பார்கள். அயோக்கியர்கள்…

  8. We will not surrender to police: SP Udayakumar

    Continuing the fight for life, protesters at Koodankulam hold on as police cut supply of power, water and milk in the area.

    http://tehelka.com/story_main52.asp?filename=Ws210312Koodankulam.asp

    இந்திய அரசு மக்கள் மீது தொடுத்துள்ள யுத்தம் இது. முல்லிவாய்க்காலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

  9. எப்படியோ ….இப்படி ஒரு பதிவு எழுதி ….அந்த அப்பாவி மக்களை புரட்சி காரர்களாய் மாற்றி ….நிரந்தரமாக உள்ளே தள்ள முயற்சி செய்கிறீர்கள் என்பது மட்டும் எனக்கு தெரிகிறது

    • கூட்டியும் கொடுக்கிறது.காட்டியும் கொடுக்கிறது இந்தியன் தானே.அப்டி தான் பேசுவீங்க.

    • ம.க.இ.க வின் அசுரகானம் பாடல் தொகுப்பில் “போதும் நிறுத்து போதும் நிறுத்து போதும் நிறுத்துடா ” என்ற பாடலில் ” வெள்ளக்காரன் பெத்தெடுத்த வேசிப்புள்ள, நீ தேசப் பக்தி வேசம் போடுற நாட்டுக்குள்ள ” என்ற வரி வரும். அந்த வரிகள் மலத்தைத் தின்னுவிட்டு வாந்தி எடுக்கும் தின மலத்துக்கும் பிற அல்லக்கைகளுக்கும் அருமையாகப் பொருந்துகிறது.
      மக்களின் நலனை விடுத்து தேசநலம், தேசப்பற்று என்று பேசுபவர்கள் அனைவரும் அயோக்கியர்கள்.
      சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும் போது ராமன் அதப் புடுங்கினான், இதைப் புடுங்கினான் என்று முட்டாள்தனமான காரணத்தைக் கூறி அதைத் தடுத்து நிறுத்தினார்கள் பார்ப்பன பன்றிகளும், அவர்களது அடிவருடிகளும். ஆனால் அணு உலை பற்றிய பிரச்சினைகளை பல அறிஞர்கள் அதாரப் பூர்வமாக விளக்கியிருக்கிறார்கள். மேலும் அணு உலையை அதரிப்பவர்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்கள், அதற்கு யோக்கியமாக பதில் சொல்ல வக்கில்லாமல் பார்ப்பன பாசிசப் பன்றி செயாவின் அயோக்கியத்தனமான,நேர்மையற்ற நடவடிக்கைகளைப் போற்றுகின்றனர் இந்தியன் போன்ற தேசப்பற்று கொண்டவர்கள்.

  10. அப்பாவி மக்களை கொல்லலாம் ,ஆனா எந்த காரணத்திலும் அவங்க கேள்வி கேட்க கூடாது , புரட்சிக்காரன்களா ஆக கூடாதா ???

    ‘அந்நியன் ‘ (மக்களுக்கு அந்நியமானவன் )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க