Saturday, July 20, 2024
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்கூடங்குளம் அணு உலையை மூடு! நெல்லை ஆர்ப்பாட்டம் - படங்கள்!

கூடங்குளம் அணு உலையை மூடு! நெல்லை ஆர்ப்பாட்டம் – படங்கள்!

-

மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக திருநெல்வேலி பாளை மார்க்கெட் ஜவஹர் திடலில் கடந்த 21.01.2012 அன்று கூடங்குளம் அணுஉலையை மூடகோரி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் தவிர திருநெல்வேலியை சேர்ந்த வழக்குரைஞர்கள்,ஜனநாயக சக்திகள்,எழுத்தாளர்கள் உட்பட சுமார் 125 நபர்கள் கலந்து கொண்டனர்.ஆர்பாட்டத்தில் அமலநாதன்
மற்றும் விஜயக்குமார் பாக்கியம் தவிர மற்ற அனைவரும் உரையாற்றினர்.ம.க.இ.க மைய கலை குழுவின் நாடகம் மற்றும் பாடல்கள் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வு பிரசுரம் PDF பெற இங்கே அழுத்தவும்

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

–  மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

 1. மனித உரிமை வெற்றியடைய வாழ்த்துக்கள்.
  கூடாங்குளம் இயங்கினால் வருங்கால சந்ததிக்கு ஆபத்து.

 2. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் உடன் வந்துருக்கீங்க… ஏனைய போராட்டக்காரர்கள் மாதிரி அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தாமல் போராடுவது வரவேற்கத்தக்கது…
  ஆனால் வருத்தமளிக்கிற விடயம் என்னவென்றால் இந்த போராட்டத்தினால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை… கூடங்குளம் இயக்கம் ஆரம்பிச்சாச்சு… வானவேடிக்கை மாட்டும் தான் பாக்கி…

 3. நடுவண் அரசே! கூடங்குளம் அணு உலையா! உனக்கு ஆட்சிப்பீடமா? கூழுக்கும் ஆசை;மீசைக்கும் ஆசை என எண்ணாதே! நாங்கள் இன்றி மன்மோகன் அரசு இல்லை.பொருளாதார மேதை எனச் சொல்லும் பிரதமருக்கு எங்களின் உணர்வினைப் புரியும் அளவுக்குப் பொருளற்ற ஆட்சியை நடத்துகின்றாரா?

  • \\பொருளாதார மேதை எனச் சொல்லும் பிரதமருக்கு எங்களின் உணர்வினைப் புரியும் அளவுக்குப் பொருளற்ற ஆட்சியை நடத்துகின்றாரா\\
   இந்த மங்குனி மன்மோகன் பிரதமராக அமைந்தது இந்தியாவின் சாபக்கேடு… இந்த காங்கிரஸ் கும்பலை ஆட்சியை விட்டு துரத்தி அடிக்கும் நாள் தான் இந்தியாவுக்கு விடிவு…
   கருணா கூட்டத்தை துரத்தியது போல, இந்த மங்குனி கூட்டமும் துரத்தப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை… வெற்றி நம் கையில்…

   • அவன் அவன் அவனனவனோட பிசினஸில் கண்ணும் கருத்துமா இருக்கான்யா…. காங்கிரஸ் தூக்கி எறியப் படவேண்டிய கட்சி தான்… ஆனால் அடுத்து யாரை ஆதரிக்கணும் என்ற கேள்விக்கான பதிலில் தான் ‘மனிதனின்’ குசும்பு அடங்கி இருக்கிறது.

    • ஏன்பா எப்பயுமே உங்களுக்கு சந்தேகந்தானா? காங்கிரசை நீக்கு என்றால், பாரதிய ஜனதாவை ஆதரி என்று அர்த்தமா? நான் என்ன இங்க பிரச்சாரமா செய்ய வந்திருக்கிறேன்…
     இயங்காத காங்கிரசை தூக்கி ஏறிய வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமும்… அடுத்து யாரை ஆதரிக்க வேண்டும் என்பது அவரவர் தனி விருப்பம்..

     • //பாரதிய ஜனதாவை ஆதரி என்று அர்த்தமா?//
      இந்த வார்த்தையை தான் எதிர்பார்த்தேன் ‘மனிதன்’ அண்ணே…!!! போச்சா… இனி உங்களால நடுநிலை வேசம் போட முடியாதே?

  • இதிலே எனக்கு எள்ளலவு சதேகம் இருக்கு… ஏன்னா கல்பாக்கம் இருக்கே…

   • ….. அண்மையில் கல்பாக்கம் அணு உலைக்கு அருகில் குடியிருக்கும் சிலர் இறந்ததற்கு அணு உலையினால் வெளியிடப்பட்ட கதிர்வீச்சே காரணம் என அணு ஆற்றல் துறை ஒப்புக்கொண்டுள்ளது … (ஆதாரம: http://keetru.com/index.php?option=com_content&view=article&id=18241 ). இதுக்கு என்ன சொல்றீங்க?

    • கீற்று என்ன கெசட்டா, GO மாதிரி பிரிண்டட் கண்டேன்டை ஆதராம் காட்ட…
     ஆறு வருடங்களில் 14 பேர் கல்பாக்க சுற்று வட்டாரத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது செய்தி.. எப்படியெல்லாம் மிகைப்படுத்துகின்றனர் பாருங்கையா…

     • முதிலில் ஒண்ணுமே இல்லைங்கிறது. இருக்கு பாரு’ன்னு காட்டினா, இதெல்லாம் ஒரு மேட்டராங்கிறது. அப்போ இதை பாருன்னு (புகுசிமா)வை காட்டினா, அதெல்லாம் இங்க நடக்காதுன்னு உதார் விடுறது. யப்பா ‘மனிதா’… என்ன தாம்பா உன் கணக்கு?

      • அணு உலை ஆபத்தானது என்பது உண்மை.. அதை யாரும் மறுக்கவில்லை…
       ஒவ்வொரு ஊர்களில் நூற்றுக்கணக்கில் மக்கள் கான்சரில் அவதிப்படும்போது, கல்பாக்கத்தில் 14 பேருக்கு கான்செர் வந்திருப்பது ஒரு பேரழிவா? அதை ஏன் மிகுக்க வேண்டும்… கல்பாக்கத்தில் பசுவின் சாணம் சற்று நிறம் மாறினால் கூட அதற்கும் அணு உலை தான் காரணம் என்று சொல்வது என்ன வகை?

       ஆபத்து ஆபத்து என தங்கள் போராட்டத்திற்கு நியாயம் கற்பிக்க மிகுத்து கூறப்படும் செய்திகள் இரசிக்கபடுவனவாக இல்லை.. அதிகப்படியான அச்சம் தரக்கூடிய தகவல்களை சேகரித்து அதை அப்பாவி மக்களிடம் காண்பித்து அவர்களை பயத்தின் விளிம்புக்கு தள்ளி, மக்களின் அச்சத்தை கேடயமாக கொண்டு ஒரு போராட்டத்தை எடுத்து செல்வது எதிர்மறையான விளைவுகளை தருகிறது…

       இவர்கள் திரட்டி சேர்க்கும் தீங்கதிக தகவல்கள், மிகுக்கப்பட்டிருப்பது கண்டவுடன் அணு உலை ஆதரவாளர்கட்கும் அரசுக்கும் அல்வா சாப்பிடுவது போல ஆகிவிடுகிறது… இவர்கள் போலி அச்சத்தின் விற்பனையாளர்கள் என்று புரிந்து கொண்டு, உண்மையான கோரிக்கையை மறந்து விடுகிறார்கள், போலியான அச்சத்தை விதைப்பவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகிறார்கள்…

       அணு உலை வந்தால் தமிழகம் அழிந்துவிடும் என்று சொல்வதும் 2012 ல் உலகம் அழிந்து விடும் என்று சொல்லுவதும் ஒன்று தான்.. இப்படி சொல்லி அப்பாவி மக்களை தான் பயமுறுத்த முடியும், ஒரு நாட்டின் அரசாங்கத்தை அல்ல…

       • ஒரு பேச்சுக்காகவாவது நான் கொடுத்த லிங்கை படித்துவிட்டு வாருங்கள் ‘மனிதன்’. அப்புறமா வந்து சாமியாடலாம்…!!! அப்படியே ‘அணு உலையையும், அது குறித்து இந்திய அரசு மறைத்த உண்மைகளையும் (விக்கிலீக்ஸ் வெளியிட்டுவிட்டது) சற்று புரட்டி விட்டு வந்து இங்கு உடுக்கடியுங்களேன்’…!!!

        • \\ஆறு வருடங்களில் 14 பேர் கல்பாக்க சுற்று வட்டாரத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது செய்தி.. எப்படியெல்லாம் மிகைப்படுத்துகின்றனர் பாருங்கையா…\\
         இது கீற்று கட்டுரைக்கு தான் போட்ட விமர்சனம்… உங்கள் சொந்த கருத்தில் இது இல்லை.. ஆகவே உங்களை நோக்கியல்ல என உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்…
         கோஷங்களை எழுத்துக்களில் சேர்க்கும் வழக்கம் கீற்றில் உண்டு…

         • வியாக்கியானம் தேவை இல்லை மனிதன்…. ராம் கேசவனும் இதே கட்டுரையை படித்துவிட்டு, அதற்கு சம்பநதமான மறுப்பினை பதிவு செய்துள்ளார். உங்களிடம் அதுபோன்றவற்றை தான் எதிர்பார்த்தேன். ஏமாற்றம் தான் மிஞுசியது. 🙁

          • கான்சர் மட்டுமல்ல, வாந்தி, பேதி, மூட்டு வலி, படை, சொறி, சிரங்கு போன்ற சரும வியாதிகள், பல் சொத்தை, வாய் துற்நாற்றம் ஆகிய சகல விதமான நோய்களும் அணுமின் நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்ற அரிய உண்மையை, “உண்மையான” விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் கண்டு பிடித்து சொல்லியிருக்கிறார்கள். இந்த சுட்டியில் காணவும்.

           http://www.ieer.org/sdafiles/11-1.pdf

          • Natramizhan said:

           natramizhan
           பெப்ரவரி 7th, 2012
           REPLY QUOTE
           உயிரைக்கொள்ளும் புற்றுநோயையும், தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்களையும் ஒப்பிடும் அவரது மருத்துவ அறிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது…….
           ஒரு வேளை அவரது குடும்பத்தினர் யாருக்காவது புற்றுநோய் வந்தால் தான் அவருக்கு அதன் வலியும், பிரச்சனையும் தெரியும் என நினைக்கின்றேன்….
           அவரை நீங்கள் இந்த காணொளியை பார்க்க சொல்வது நன்று….
           http://thamizhstudio.com/shortfilms_rpamudan_kalpakkam.php

    • //….. அண்மையில் கல்பாக்கம் அணு உலைக்கு அருகில் குடியிருக்கும் சிலர் இறந்ததற்கு…..இதுக்கு என்ன சொல்றீங்க?//

     பொன்ராஜ்,

     கீற்று கட்டுரை DNA வில் வெளியான “DNA investigations: Deaths confirm cancer risk near N-reactors” செய்தியை ஆதாரமாக காட்டுகிறது. இந்த கட்டுரையில் 1995 முதல் 2011 வரையில் பதினாறு ஆண்டுகளில் 3 தொழிலாளர்கள் புற்றுநோயால் இறந்திருப்பதாக, தகவல் அறியும் சட்டத்தின் படி பெற்ற விவரம் தெரிவிப்பதாக சொல்கிறது.

     சுமார் 5000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்யும் எந்த இடத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே ஒர் சிலர் புற்றுநோயால் இறந்திருப்பர். 16 ஆண்டுகளில் 3 என்பது உலக அளவில் காணப்படுவதுதான்.

     The figure of three employees at Kalpakkam having multiple myeloma during 16-17 years is not higher than the normal prevalence of such form of cancer among others, in India or abroad,”

     மோகன் தாஸ் மற்றும் பொன்னையா ஆகிய இரு தொழிலாளர்கள் அதிக கதிர்வீச்சின் காரணமாக இறந்து விட்டதாகவும் பெயர் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. கல்பாக்கத்தில் வேலை செய்தவன் என்ற முறையில், ஒவ்வொரு தொழிலாளியின் டொசெ ரெcஒர்ட்ம் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். கதிர்வீச்சு உள்ள இடங்களில் எந்த ஒரு தொழிலாளியும் தனியாக வேலை செய்ய அனுமதியில்லை. குறைந்தபட்சம் இரண்டு பேராவது சேர்ந்துதான் செல்வோம். மோகன் தாஸோ, பொன்னையாவோ DOSE வாங்கியிருந்தால் அது மற்ற தொழிலாளர்களுக்கு தெரியாமல் இருந்திருக்காது. அவர்கள் எல்லாம் இன்று வரை மௌனமாக இருப்பது ஏன்?

     இவர்களின் குடும்பத்தினர் அணுமின் நிலைய நிர்வாகத்தின் மீது இன்றுவரை வழக்குத் தொடராதது ஏன்?

     அடையாறு கான்ஸர் ஆஸ்பத்திரியில் போய் ஒரு நாள் உட்கார்ந்து, அங்கே வரும் புற்றுநோய் பேஷண்டுகளில் எத்தனை பேர் அணுசக்தி துறையில் வேலை செய்கிறார்கள், எத்தனை பேர் அணு உலைக்கு அருகில் குடியிருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுங்களேன்?

     இதுக்கு என்ன சொல்றீங்க?//

     http://kractivist.wordpress.com/2012/01/22/kalpakkam-data-morbidity-survey/

     • Natramizhan said:

      natramizhan
      பெப்ரவரி 7th, 2012
      REPLY QUOTE
      ஒவ்வொரு உயிரும் மகத்தானது என்கிறேன் . இல்லை எங்களுக்கு கிடைக்கும் மின்சாரம் அதை விட மகத்தானது என்கிறார் அவர். ஒருவேளை அணு உலை கதிர்வீச்சால் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அவரது தந்தையாகவோ, தாயாகவோ இருந்தால் இதே பதிலை தான் அவர் தருவாரா?????

      • பொன்ராஜ் / நற்றமிழன்

       Fallacies of Argument எனப்படும் விவாதங்களை திசை திருப்புவதில் ஒரு வகைக்கு பெயர் அனுதாபத்தை கோருதல் “Appeal To Pity”.
       நீங்கள் செய்வது அதைத்தான். உங்க அப்பா அம்மாவுக்கு புற்றுநோய் வந்தாத்தான் தெரியும் என்பது போன்ற அறிவியல் அற்ற வாதங்களை விடுத்து, புள்ளி விவரங்களின் அடிப்படையில் மட்டும் பேசுங்கள். கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சின் காரணமாக ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உங்கள் குற்றச்சாட்டு. அனு உலையின் மிக அருகாமையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகளில் ஒருவன் என்ற முறையில் இது உண்மையல்ல என்று நான் சொல்லுகிறேன்.

       • எனது உடலமைப்பும், நோயெதிர்ப்பு சக்தியும் எல்லோருக்கும் இருக்கும் என்பது எப்படி சரியான கருத்தாகும்? நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களே இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது தானே அறிவியலின் படி சரியான வாதம், அதைவிடுத்து எனக்கு புற்றுநோய் வரவில்லை, நானும் கல்பாக்க அணு உலையை சுற்றியே வசித்துவருகின்றேன் என்பது எப்படி சரி?

        மேலும் கதிர் வீச்சு கதைகள் என்ற காணொளிக்கான சுட்டியை கொடுத்திருந்தேன், அதையும் பாருங்கள், அதுவும் கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டது தான்.

       • உயிரைக்கொள்ளும் புற்றுநோயையும், தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்களையும் ஒப்பிடும் அவரது மருத்துவ அறிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது…….
        ஒரு வேளை அவரது குடும்பத்தினர் யாருக்காவது புற்றுநோய் வந்தால் தான் அவருக்கு அதன் வலியும், பிரச்சனையும் தெரியும் என நினைக்கின்றேன்….
        அவரை நீங்கள் இந்த காணொளியை பார்க்க சொல்வது நன்று….
        http://thamizhstudio.com/shortfilms_rpamudan_kalpakkam.php

        what is the answer for this question?

        • நற்றமிழன்,

         காணொளியை கண்டேன். மருத்துவர் புகழேந்தி, புளுகேந்தி என்பதை புரிந்து கொண்டேன்.

         த்ரீ சிக்மா கான்ஃபிடென்ஸ் லெவல் (three sigma confidence Level), ஸ்டாடிஸ்டிகலி ஸிக்னிஃபிகண்ட்(statistically significant), என்று சொல்லுகிறார். IARC என்ற சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் 15 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் அணுசக்தி துறை ஊழியர்களின் புற்றுநோய் அபாயம் பற்றி நிகழ்த்திய ஆய்வு முடிவுகளை ஒரு மோனோகிராஃப் ஆக வெளியிடிருக்கிறார்கள். சுட்டி இதோ.

         http://monographs.iarc.fr/ENG/Monographs/vol100D/index.php

         அந்த அறிக்கை Occupational Studies பற்றி என்ன சொல்லுகிறது என்பதை நீங்களே படித்து கொள்ளுங்கள்.
         International Agency for Research on Cancer 15-country study

         IARC conducted a collaborative study of cancer risk among workers in the nuclear industry. Analyses include 407391 nuclear industry workers who were individually monitored for external irradiation (primarily γ-rays),and were employed in the industry for at least 1 year (Cardis et al., 2007). Workers with potential for substantial doses from other radiation types and workers with potential for high-doserate exposure were excluded from the main study population. [The Working Group noted that strengths of the study include a common core study protocol and quantitative radiation dose estimates based upon personal dosimetry.

         Although it was a large study, the 15-country study’s statistical power was limited by small numbers of workers with higher doses. As is common in occupational cohort mortality studies, there was limited information available on confounders, such as cigarette smoking.] Concerns about confounding by smoking were addressed indirectly by the examination of associations between radiation dose and nonmalignant
         respiratory disease. Smoking-related and non-smoking-related solid cancers were also analysed separately. No statistically significant association was seen between radiation dose and any of the groups of non-malignant respiratory diseases examined. Risk estimates for mortality from all non-malignant respiratory disease and for chronic bronchitis and emphysema combined were positive but not significantly different from zero, and risk estimates for chronic pulmonary disease not otherwise specified and for emphysema were negative, but not significantly different from zero.

         அதே கழகம் இந்தியாவில் புற்றுநோய் பற்றிய பல தகவல்களை தெரிவிக்கிறது. 5 ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 9.5 லட்சம் பேர். அதில் பாதி மார்பக புற்று நோய், மற்றும் செர்விகல் கான்ஸர். பாதிக்கப்படுவது பெண்கள். இதில் முக்கால்வாசி வாக்ஸினேஷன் மற்றும் மாமோகிராம் அகியவற்றால் தடுக்கக் கூடியது.

         http://globocan.iarc.fr/

         புகழேந்தியின் மற்றொரு கண்டு பிடிப்பு அணுக்கழிவுகளை கடலில் கொட்டி விடுகிறார்கள் என்பது. எந்த ஆதாரத்தை வைத்து இதை சொல்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

         • //புகழேந்தியின் மற்றொரு கண்டு பிடிப்பு அணுக்கழிவுகளை கடலில் கொட்டி விடுகிறார்கள் என்பது. எந்த ஆதாரத்தை வைத்து இதை சொல்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள்.//

          ……
          many of the ugliest forces in the Western world have seen this as a great opportunity to steal the country’s food supply and dump our nuclear waste in their seas.

          Yes: nuclear waste. As soon as the government was gone, mysterious European ships started appearing off the coast of Somalia, dumping vast barrels into the ocean. The coastal population began to sicken. At first they suffered strange rashes, nausea and malformed babies. Then, after the 2005 tsunami, hundreds of the dumped and leaking barrels washed up on shore. People began to suffer from radiation sickness, and more than 300 died
          ……
          http://www.huffingtonpost.com/johann-hari/you-are-being-lied-to-abo_b_155147.html

 4. மின்சாரம் வேண்டாம் என்று அறியாமையில் நி யூ யார்க் மக்கள் இப்படி தான் போராடினார்கள். அணு உலை வேண்டாம் என்றால் நீங்க எதுவும் மின்சாரம் தயாரிச்சு தரபோறிங்களா, உதயகுமார் போன்ற ஏன்.ஜி.ஒ. க்களுக்கு பின் ஏன் திரிகிறாய். எங்க கூட்டம் சேர்ந்தாலும் போய் விடுவதா?கொள்கை கிடையாது , கோட்பாடு கிடையாது .

  • திரு பரமேசு அவர்களே, இங்க உங்க சார்பா நான் ஒரு பொம்மை போடுறேன்…
   🙂

   • வினவுல கமெண்டு போடுவது சுப்புணிக்கு எண்டெர்டெயிண்ட்மெண்ட்டாம்…!!! பக்கத்து இலைக்கு பாயாசம் கேப்பது ‘மனிதனுக்கு’ என்ன பார்ட் டைம் ஜாபோ? 🙂

     • சாப்பிட்டு பார்க்கும் முன்பே அது பாயாசம் அல்ல, பாய்சன் என்று முடிவெடுப்பது உங்கள் வழக்கமா? 🙂

      • உண்ணாவிரதம் இருப்பவனுக்கு பாயசமும், பாய்சனும் ஒன்றுதான் பொன்ஸ்…

 5. அட பய புள்ள, சொல்லவே இல்ல…..
  அப்துல் கலாமுக்கு ஒண்ணும் தெரியாதாம்…மீன் கார பயலுக்கு யெல்லாம் தெரியுமாம்…
  இரு டீ…. இன்னும் ரெண்டு மாசம்தான்… உபி தேர்தல் முடியட்டும்…யெல்லா பயலும் லுங்கி கீழிய ஒட போரடி மாப்புள……

  • படித்தவன் பொய் சொன்னால் அய்யோவென்று போவான்… இது ஆல்பிரட் நோபல்,ஐன்ஸ்டீனுக்கு மட்டுமல்ல, அப்துல் கலாமுக்கும் பொருந்தும்…!!!

   • பொன்ராஜ் சார் நம்ம நண்பர்கள் எதுவும் பொய் சொல்லவில்லையே… எதுக்கும் ஒரு முறை செக் பண்ணிக்கிட்டு சாபம் விடுங்க…

    • அணு உலை வந்தால் தமிழ்நாடு மட்டும் அல்லாது, இந்தியாவே ஒரே இரவில் நட்டுகிட்டு நிக்கும் என்று பில்டப் கொடுப்பதற்கு பெயர் ‘அக்மார்க்’ உண்மையோ? அணு உலை பின்னால் இருக்கும் அரசியலை மறைத்துவிட்டு, கொஞ்சம் கூட கூச்ச நாச்சமின்றி ‘உண்மையை’ பேசுறோம், இருந்தாலும் ‘விவாதிக்க’ தயார் இல்லை, மீறினால் உங்க பின்னாடி என்.ஜி.ஓ வேலை செய்ய்துன்னு உங்களை முடிச்சி விட்டிருவோம்னு மிரட்டுவது தான் ‘சத்திய பாதையோ’?

   • ஏன் அதை சொன்ன பாரதிக்கே பொருந்திற்றே! காந்திக்கும் பொருந்திற்றே! அது போதாதா உதாரணத்துக்கு.

  • அப்துல் காமெடியன் எழுதிய ஒரு ஒரேஒரு ஆராய்ச்சி கட்டுரையை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம். அந்தாள் இயற்பியல் படிக்க வக்கற்று போய்தான் பொறியியல் படிக்கப் போனார். அதையும் ஒழுங்காக முடித்தாரா. பொறியியலையும் ஏன் படையல் வைத்தார் என்றால் மனி மேன் மனி. வேறு என்ன ம@#$க்கு. படிச்சுபுட்டு இருக்கிறவனுக்கு நல்லா சொம்பு அடிச்சதால டைரக்டர் பதவி வாங்கினார். இந்த திரு(ட்டு) நாட்டில் முன்னே வந்தவனெல்லாம் எப்படி வந்தான். இப்படித்தான். இப்போ பெரிய இயற்பியல் வெண்ணை மாதிரி வாய் கிழிய பேச வேண்டியது. மக்களே. இந்தாள் கட்டுரையெல்லாம் சுட்டது மக்களே சுட்டது. ஆபீசில கணக்கெழுதினதெல்லாம் இன்னைக்கி அறிவாளியாம். போறாத காலம்.

  • தெருவில் நடந்துகொண்டே செல்லும்போது திடீரென தனது வீட்டு விலாசம் ஐன்ஸ்டீனுக்கு மறந்து போச்சாம்…!!! இப்பேர்பட்ட மறதிகாரனை எதோ உலகபுகழ் வாய்ந்த அறிவியல் வல்லுநர்னு உலகமே பாராட்டுது… (உங்க வாதப் படி) இது செம காமெடி தானே சுப்புணி?

   • thats not my argument,according you we should do things only after 100% guarantee that never happens in real life.But the only thing which i agree with u and a question in my head is what was the reason for choosing koodankulam as the place for the reactor?

      • இவ்ளோ அப்பாவியா இருக்கியலே? இதை கொஞ்சம் படிங்க… அதுக்கு அப்புறம் உங்க கருத்தை சொல்லுங்க…(http://keetru.com/index.php?option=com_content&view=article&id=18241). நோக்கு ஒண்ணு தெரியுமோ? உல்கத்துக்கே யுரேனியம் சப்ளை பண்றவன் ஆஸ்திரேலியாகாரன். ஆனால் அவன் ஊருல மின்சாரம் தயாரிக்க அவன் இதுவரை எந்த அணு உலையையும் கட்டுனதே இல்லை.. கட்டப் போறதும் இல்லை… ஏன்? யோசிங்க கண்ணுங்களா…!!!

      • Cost of power from nuclear is actually expensive. The nuclear waste management is normally hidden by government. Also what is the lifespan of nuclear power station? after that that should be maintained.

 6. இங்க யாரும் மின்சாரம் உற்பத்தி செய்ய கூடாதுன்னு மாங்கா மடையன் கணக்கா போராடுல… அணு உலை வேண்டாம்னு தான் போராடுறாங்க..!!! இந்த ரெண்டுக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கு… சாம்பிளுக்கு இதோ: 1. சமீபத்தில் கடலூர் மாவட்டமே சிதைந்தது. மத்திய அரசின் மெத்தனமான நடவடிக்கை எல்லோருக்கும் தெரிந்ததே. கடைசியில் எலும்பு துண்டான ரூ.500 கோடியை கொடுத்தது மத்திய அரசு. கடலூரில் அடித்த புயல், கொஞ்சம் திசை மாறி கூடங்குளத்தை நாசம் செய்திருந்தால் இப்போது பல்லை இளித்துகொண்டு ‘அணு உலையால் ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் வருவோம்’ என்று சொல்லும் மத்திய அரசு, அப்போது மட்டும் வருமா? இதை நம்ப சொல்கிறீர்களா? 2. அணு உலையால் உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்தில் 30 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கிடைக்குமாம். அந்த 30 சதவீதம் மின்சாரமும் யாருக்கு கொடுக்கப் படும் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனால் சாமானியனுக்கு எந்த பயனும் இல்லை. அப்புறம் ஏன் கொங்ஜ்சம் கூட நாகூசாமல் ‘தமிழ்நாடு’ மின்சார பற்றாகுறையில் இருந்து விடுபட்டு, தன்னிறைவு அடையும் என்று புளுக வேண்டும்? 3. எத்தனையோ முறை வலியுறுத்தியும் கடலில் இறங்கி மீன் பிடிக்க செல்லும் மீனவனின் உயிருக்கு உத்திரவாதம் தராமல், அவனை ‘பேராசைகாரன்’ என்றும் எல்லை தாணுகிறான் என்றும் கைகளுவி விட்ட மத்திய அரசு, கடல் கரையில் இருக்கும் அதே மீனவன் கேட்காமலேயே அணு உலையை திணித்து, பின்பு உயிருக்கு உத்திரவாதம் தருவது போல ஏமாற்றுவதை யார் தான் பொறுக்க முடியும்? அந்த மக்கள் நம்பும்படி எந்த காரியத்தையாவது இந்திய அரசு செய்துள்ளதா? கடலில் சிங்களனால் சுடப் படாமல் பாதுகாத்திருந்தாலாவது, இன்று அந்த மீனவன் மத்திய அரசை நம்பி இருப்பான். ஆனால் அப்படி சுடப் பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லும் மத்திய அரசை, கூடங்குளம் விசயத்தில் மட்டும் எப்படி நம்புவான்?

  • sinhalese guys have blood veangeance against tamils,thats why they shoot them.but Indian government should stop it but the fisherfolk are also an arrogant bunch,they ll take risk and go whereve rthey want.not an easy situation.

   • நேரத்துக்கு ஒரு பேச்சு பேசாதீங்க சுப்புணி… சிங்களன் சுடுறான்னு சொல்றதுக்கு எதுக்கு ‘இந்திய கடலோர காவல் ப(வ)டை’? அவன் சதா சுத்தி சுத்தி வற்றான்னா, அதைவிட அதிமகால்ல ப(வ)டை சுத்தி இருக்கனும்? அட மீனவனை விடுங்க ஓய்… வடை சுட்டுகொண்டிருந்த ஒரு காவல் படை ஆளையே கடத்திட்டு போனான் சிங்களன்… என்ன பண்ண முடிஞ்சுது நாளைக்கு மறுநாள் வல்லரசாக போற இந்தியாவால? நீங்களும் தான் மீனவன் ‘பேராசை’ பிடிச்சு போய் எல்லை தாண்டி மீன் பிடிக்க போகிறான்னு சொல்றீங்க? அப்படி அந்த ‘எல்லை’ எங்கதாண்டா இருக்குன்னு பார்த்தா அது நம்ம ‘கச்ச தீவு’. நான் தெரியாம தான் கேக்குறேன்… என்ன நோக்கத்துக்காக இந்தியா தமிழனுக்கு சொந்தமான கச்ச தீவை பிடுங்கி சிங்களனுக்கு கொடுத்தது? இந்தியாவின் பாதுகாப்புக்காகவா? நடக்கிறதெல்லாம் பாத்தா அப்படி தெரியலியே? தமிழனுக்கு சொந்தமான கச்ச தீவை சிங்களனுக்கு கொடுத்தது மட்டும் இல்லாமல், அதே தமிழனை சிங்களன் சுடும்போது வேடிக்கை பார்ப்பதும், எப்படி சுட வேண்டும் என்று பயிற்சி கொடுக்கும் இந்தியா, 500 பேருக்கும் மேல இறந்திருந்தாலும் அப்படி செத்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லும் இந்தியா, 500 பேரு செத்திருந்தாலும் அதுக்காக இந்தியா இலங்கை மீது போரா தொடுக்க முடியும் என்று மீனவனின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுகொண்டு அவனுக்கு எதிராகவே பேசும் இந்தியாவுக்கு, “தமிழக மீனவன் பேராசைக்காரன்” என்று சொல்ல எந்த தகுதியும் கிடையாது.

    • when did i say anything else about this issue?

     regarding fishing i wont blame the fishermen,the zones of fishing keeps moving and they have to go and get it.

     I dont support giving katchatheevu to them for any reason,infact i am the guy who believes India should have invaded SL and made it another state of India.

     sari adha vidunga.

     • இது நீங்க எழுதுன கமெண்டு தானே சுப்புணி?
      //
      https://www.vinavu.com/2012/01/26/indian-republic-ready/#comments
      chumma argumenta thisai thiruppaadheenga,TNla congress rule or any national rule irunthiruntha inneram mullai periyar prachanai mudinju irukkum.Anyway it is almost over already.

      Koodankulam thittam oru prachanaye illa,chumma catholic church kitta dhuttu vaangikittu NGO ellam kadhai allakaaranga,dhuddu kedaicha ellarum pothikittu poiruvaanga,thamizhaga meenavargal ellai thaandi meen pidikkiradha pathi modhalla pesunga,appuram eppadi bullet varudhunnu paarpom.

      i cant keep repeating points everytime,u r such a moron.
      //
      தமிழக மீனவன் எல்லை தாண்டி மீன்பிடிக்க போறதை முதலில் பேசுன்னு சொன்னது நீங்க தானே? இப்போ இப்படி பல்டி அடிச்சு பேசுறீங்க…? நான் உங்களை பத்தி சொன்னது சரிதானே? நீங்கள் நேரத்துக்கு ஒரு பேச்சு பேசும் ஆள் தானே?

 7. இன்று அலுவலகத்தில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போதிருக்கும் ஆறு மணி நேர மின்தடை இனி ஒன்பது மணி நேரமாக அதிகரிக்கப்போகிறதாம்! இதைச் சொல்லிவிட்டு இதையும் சொன்னார்கள். “உதயக்குமாரப் போட்டா எல்லாம் சரியாயிடும்”

  இன்றைய நிலையில் பல்வேறு மக்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

  • //“உதயக்குமாரப் போட்டா எல்லாம் சரியாயிடும்”//

   எத்தனை உதயகுமாரை போடுவீங்க?

   • பொன்ராஜ்,
    அது என் கருத்தில்லை. என் கருத்து அதற்கு நேரெதிரானது. ஆனால் பலருடைய மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது. எல்லா மக்களுக்கும் இந்தப் பிரச்சினையை அறிவுப்பூர்வமாக அணுகுவதில் சிக்கல் இருக்கிறது. அதற்கு மூலகாரணம் அவர்களது சுயநலமே! தனக்கு கரண்ட் வந்தால் போதும்.. அது எந்த முறையில் வந்தால் என்ன என்கிற மனோபாவத்தை எப்படி மாற்றுவது!

    • //அது என் கருத்தில்லை//
     தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் நண்பரே.நான் உங்களை குறிப்பிடவில்லை. தவிர, தமிழனின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு பிரச்சனையிலும் மருத்துக்கு கூட எட்ட் பார்க்காத காங்கிரஸ்,இந்து முண்ணனி களவாணிகள், வியக்கதக்க வகையில் அதுவும் ஒன்றாக ஒரே குரலாக ‘அணு உலை வேண்டும்’ என்று குரைப்பது சற்றே யோசிக்க வேண்டிய விசயம் அல்லவா? “போட்டு தள்றதையே பொழப்பா வச்சிருக்கிற ஒருத்தன், திடீர்னு ஒருநாள் உங்களுக்கு குளிர்பானத்தை தந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?”… அது தான் காங்கிரஸ்,இந்து முண்ணணி களவாணிகளிடமும் வரும் சந்தேகம்…!!!

 8. மின்வெட்டு நேரத்தை அதிகப்படுத்தி மக்களிடம் மின்சாரத்திற்கு அணு உலை அவசியம் என்ற கருத்தை திணிக்க அரசு திட்டமிட்டே முயல்கிறது. இனி போராட்டம் வேறு வகையில் தொடரவேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் தடையற்ற மின் விநியோகத்தை அம்பலப்படுத்தி அந்நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் நடத்தவேண்டும்.

  • சென்னையில் ஒரு மணி நேர மின்வெட்டு மட்டுமே அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மின் பகிர்மானத்திற்கு வழி செய்யவேண்டும். அதற்குப் போராடினால் ஒருவேளை பிரச்சினையின் வீர்யம் அரசுக்குத் தெரிய வாய்ப்புண்டு!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க