அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்களுக்கு அந்நிய நாடுகளில் இருந்து நிதி திரட்டிக் கொடுத்து, அவற்றின் மூளையாக இருந்து, திட்டங்கள் தீட்டிக் கொடுத்து, தானும் பங்கேற்றவர் என்று ஒரு பொய்ப் புகார் சுமத்தி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கணினிப் பொறியாளர் சோன்டெக் ரைனர் ஹெர்மன் என்பவரை கடந்த மாத இறுதியில் நாகர்கோவிலில் பிடித்து இரவோடு இரவாக, இரகசியமாக சொந்த நாட்டுக்கு நாடு கடத்தி விட்டனர், உளவுப் பிரிவு போலீசார்.
மத்திய உளவுப் பிரிவு போலீசார் (ஐ.பி.) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரைனரைப் பிடித்து நாடு கடத்தும்படி ஐ.பி, தமிழக போலீசு இயக்குநர் ராமானுஜத்திற்கு பரிந்துரைத்தது, தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் அவ்வாறு செய்தனர்; ரைனரிடம் ஐ.பி. அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்தி, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்கு நிதி திரட்டியதும் போராட்டக் குழுவினருடன் பேசியதும் வழிகாட்டியதும், போராட்டத்தில் அவர் பங்கேற்றதும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கே அவர் சென்றதும் ரைனரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது என்று போலீசு மூலம் செய்தி கிடைத்ததாக எல்லா நாளேடுகளும் எழுதியுள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அவர்களின் “சமக்சா” நாராயணசாமி கூறிவரும் புகாருக்கு ஆதாரங்களைத் “தேடித் தரும்படி” மத்திய உளவுத்துறை சி.பி.ஐ.க்கு உத்திரவிடப்பட்டிருக்கிறது; அதிகாரபூர்வமற்ற ஆதாரமற்ற இந்த விசாரணை எவ்வாறு அமைய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. விளக்கம் கேட்டிருக்கிறது. சி.பி.ஐ.யின் விசாரணை விளையத்துக்குள் கண்காணிப்பு வட்டத்துக்குள் நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்று அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் வந்துள்ளன; அவற்றில் இரண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனி சுற்றுலாப் பயணியை நாடு கடத்துவது, மத்திய அரசின் சி.பி.ஐ., ஐ.பி. மற்றும் மாநில அரசின் கியூ பிரிவு உளவுத்துறையினரின் விசாரணை கண்காணிப்பு, நடவடிக்கைகள் எதுவும் வெளிப்படையாகவும், அதிகாரபூர்வமாகவும் சட்டப்படியும் செய்யப்படவில்லை. இத்தாக்குதல்கள் எல்லாம் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் இடிந்தகரை மக்களையும் தலைமையையும் மிரட்டிப் பணியவைக்கவும், முடக்கி வைக்கவும் மேற்கொள்ளப்படும் சதிசூழ்ச்சி தாம் என்பது நாடும் மக்களும் அறிந்த வெளிப்படையான உண்மை. பிடிபட்ட ஜெர்மானியர், விசாரணை கண்காணிப்பு வளையத்துக்குள் வந்த அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மீது தக்க ஆதாரங்கள் இருப்பின் நேரடியான, வெளிப்படையான அதிகாரபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதுதானே! அதற்குமாறாக சதித்தனமான, நள்ளிரவு, திரைமறைவு, குறுமதி நடவடிக்கைகள் ஒருபுறமும், அவதூறுக் கூச்சல் மறுபுறமும் ஏன்?
அரசும் ஆளும் வர்க்கங்களும் இத்தகைய தந்திரங்களில் சதித்தனங்களில், அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் ஒன்றும் புதிதில்லை. மக்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு நேர்மையாக முகங்கொள்வதற்கு பதில், ஒன்று அந்நிய சதி, சமூக விரோத, தேசவிரோதச் செயல் அல்லது பயங்கரவாத, தீவிரவாதச் செயல் என்று முத்திரை குத்தி அரசு எந்திரத்தை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்துவது என்பது வாடிக்கையானதுதான். உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடும் நிதியுதவியும் இருப்பதாலேயே மக்கள் போராட்டங்கள் எல்லாம் தவறாகி விடும் என்றால் வங்கதேசம் முதல் சமீபத்திய இலங்கை-ஈழம், மாலத்தீவு விவகாரங்களில் இந்திய அரசின் தலையீடு ஏற்கக்கூடியனவா?
கூடங்குளம் போராட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் சூழ்ச்சிகள், தந்திரங்கள், அடக்குமுறைகள் எல்லாவற்றிலும் ஜெயலலிதா அரசுக்கும் பங்கு இருக்கிறது. கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போட்டு, ‘கியூ’ பிரிவு போலீசை ஏவி, திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்வது முதல் கடைசியாக பரமக்குடி பாணியில் கொலைவெறி தாக்குதல் தொடுப்பதற்கு வசதியாக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் போலீசை அனுப்பி தயாரிப்புகள் செய்கிறது.
ஆனால், புலிகள் பிரபாகரனைப் போல ஜெயலலிதா உதவியுடன் மத்திய அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது என்பதுதான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அக்கறை, எச்சரிக்கை!
___________________________________________
– புதிய ஜனநாயகம், மார்ச் – 2012 (தலையங்கம்)
___________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வல்லுநர் குழு அறிக்கை, அணுநிலைய எதிர்ப்பாளர் மனு பற்றி கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. இதன்பின்னர் ஜெயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப் பானது என தெரியவந்துள்ளது.
அணுமின் நிலையத்தால் மீனவர், கடல்வாழ் உயிரினங் களூக்கு பாதிப்பு இருக்காது என்று ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.மேலும் கூடங்குளம் சுற்றுவடடார வளர்ச்சிக்கு 500 கோடி நிதி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டது.
வினவு …நான் சொல்லல……. டீ…. நீ எல்லாம் காமிடி பீசு டி….
தனக்குத்தானே சூன்யம் வைத்துக்கொள்வது என்பது உனக்குத்தாய்யா செல்லும். எந்த அக்கரையும் இல்லாமல் கொள்கை பேசுவதாக நினைத்துக்கொண்டு விதன்டாவாதம் பேசுவதால் தான் இம்மாதிரியான தீர்மானமெல்லாம் நிறைவேத்தராங்க.
எந்த வல்லுநர் குழு ,போபால் விஷ வாயு தாக்கிய பொழுது , அந்த UNION CARBIDE நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதே அதை
போல வல்லுநர் குழுவா. இந்த அரசு எல்லாவற்றையும் மக்கள் நலனுக்காக தான் எடுக்கிறதா Mr INDIAN
அவர்தான் இந்தியன் ன்னு சொல்லிட்டாரே. அப்புறம் அவர்கிட்ட என்ன வாதம், விவாதம்!
இதுக்கு மேல அவமானம் வேற இல்ல அவர்க்கு.
இதை நிரூபித்து விட்டார் ஜெயலலிதா!
http://tamil.oneindia.in/news/2012/03/19/tamilnadu-9-members-anti-kknpp-committee-arrested-aid0091.html
http://tamil.oneindia.in/news/2012/03/19/tamilnadu-tn-cabinet-meets-today-aid0128.html
இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போலவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு ஜெயா ஒப்புதல் வழங்கிவிட்டார். கூடவே போராட்ட முன்னணியாளர்களை கைது செய்து, மக்களை ஒடுக்குவதற்கு பெரும் போலீஸ் படையையும் அனுப்பியிருக்கிறார். இது தொடர்பான செய்திகளை சேகரித்து வருகிறோம். விரைவில் எழுதுகிறோம்.
க்ளைமேக்ஸ் தெரிஞ்ச விஷயம்தானே… ஓடவிட்டு பிடிக்கிறது என்பது இதுதான் போலும்…
//புலிகள் பிரபாகரனைப் போல ஜெயலலிதா உதவியுடன் மத்திய அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது என்பதுதான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அக்கறை, எச்சரிக்கை!//
கூடங்குள பிரச்சனையில் அனைத்து அரசியல் வாதிகளும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைதான் என்பது தெரிந்த ஒன்றுதான். திரைமறைவில் இருந்த உண்மை இன்று சட்டசபையில் தீர்மானமாக நிறைவேறியுள்ளது.
இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை இதனால் ஜெவின் அடிவருடிகள் திருந்தவும் மாட்டார்கள் அவர்களுக்கு இப்பொழுது பரப்பரப்பாக பேச ஐநாவில் அமெரிக்க கொண்டுவரும் காகித தீர்மானம் இருக்கிறது.. அதை சாக்காக வைத்து இன்னொரு முறை ஜேவின் காலை வருட தயாராகியிருப்பார்கள்..
“செய்திகளை சேகரித்து வருகிறோம். விரைவில் எழுதுகிறோம்.”
நீங்கள் என்ன எழுதினாலும் அணுமின்நிலையம் வந்தே தீரும். அதை யாரும் தடுக்கமுடியாது.
அணுமின்நிலையங்கள் வந்தே தீரும். அது பின்னாலேயே பயங்கரமான பேரிளப்புகளும், கொடுமையான நோய்களும் வந்தே தீரும்.
அதை யாரும் தடுக்க முடியாது என்று சொன்னால் ,எதற்கு 5000 போலீசார் ,எதற்கு இத்தனை கைது.இங்கு ஊழல் வாதிகளான காங்கிரெஸ் ,பா ஜா க
அ தி மு க ,தி மு க ஒன்று சேர்ந்து மக்களை ஒடுக்க வேண்டும் .
இங்கு ஊழல் வாதிகளான காங்கிரெஸ் ,பா ஜா க
அ தி மு க ,தி மு க எவ்வளவு தான் சண்டை போட்டாலும் இப்படி மக்கள் பாதிக்கப்படும் விடயத்தில் பிரிவினை இல்லாமல் மக்களை ஒடுக்குவதில் , ஊழல் செய்வதில் ,
முதலாளிகளுக்கு சலாம் போடுவதில் பிரிவினை இல்லாமல் இருக்கிறார்களே . நீங்கள் சொல்லும் பிரிவினையின் அர்த்தம் அது தானே இந்தியன்
மக்கள் போராட்டம் வெற்றி பெறவில்லை என்றாலும், மைய, மாநில அரசுகளின் அடாவடித்தனத்தையும், நாடகத்தையும் மீண்டும் மீண்டும் தோலுரித்து காட்டுவதற்காவது பயன் படட்டும், இது போன்ற போராட்டங்கள்.
யார் என்ன எழுதிக் கிழித்தாலும் அணு மின் நிலையம் செயல்படத் துவங்குவது உறுதி. இந்தியாவைப் பொறுத்தவரையில்…ஏதாவது ஒரு பெரிய விபத்து நடந்தாலொழிய அணுமின் நிலைய கட்டுமானப் பணிகள் எந்தத் தடையுமின்றி நடத்தப் படும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்குமாயின் தயவு செய்து இந்தியாவுக்குள் காலடி வைத்து நடக்கவும்!
இன்னும் மக்கள் உங்களை போன்ற பிரிவினைகளை எழுதும் பதிவுகளை நம்ப தயார் இல்லை என்பதி வினவு எப்பொழுது தான் உணருமோ …?
நீர் தமிழில் எழுதுவதாலே, தமிழன்தானா என்பதை எங்களாலும் நம்ப முடியவில்லை. என் இந்த அடிமை புத்தி ?
இந்தியன்’னாலே அடிவருடி தான்’னு நிரூபிச்சிட்ட டா.மாமா.
Velinaattukaranidam kasu vangi konduthan makkal porattam nadthukirarkal ena kuruvathu nadalumanrathil kelvi ketka panam vangiya avarkalin keduketta puthiyaithan kattukirathu
இன்றைய தினமலம் செய்தியை பாருங்கள்..
இந்த மலங்களுக்கு நடுவில் வாழ்கிறோம் என்கிற உணர்வே ஒரு அருவருப்பை தருகிறது.
//ஆனால், புலிகள் பிரபாகரனைப் போல ஜெயலலிதா உதவியுடன் மத்திய அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார்//
இங்கே உதயகுமாரை, புலிகள் தலைவர் பிரபாகரனோடு ஒப்பிட்டதன் உள்நோக்கம் என்னவோ?
அணு உலை எதிர்ப்பு வெகுஜன போராட்டமல்ல, ஒரு குழுவினரின் போராட்டம் என்பதாலா?
உம்மை போன்றவர்கள் எப்படித்தான் சந்தில் சிந்து பாட முடிகிறதோ. இது வெகுஜன போராட்டம் என்பதில் ஐயம் கொள்ள வேண்டாம்.
அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது; நடைமுறைப்படுத்துகிறது என்பதனாலேயே ஒரு திட்டம் மக்களுக்கானது என்றாகி விடாது. தற்போதைக்கு இத்திட்டத்தினால் சிறிதளவு பயன் உண்டு – மின் உற்பத்தி – என்பதனாலேயே அது பயனுள்ள திட்டமாகிவிடாது.
வரும் முன் காப்பதே சிறந்த வழி என்று ஒரு பக்கம் உபதேசம் செய்து கொண்டே ஆபத்தை விளைக்கு வாங்குகிறோம் என்பதை அறியாமலேயே ஆதரிக்கும் ‘அறிவாளிகள்’ நிறைந்த நாடு இது. ஒரு பக்கம் விபத்து நடந்தால் – அது இடிந்தகரை மக்களை மட்டுமே பாதிக்கும் என்று எடுத்துக் கொண்டாலும் – அணு உலை கதிர் வீச்சினால் வரும் ஆபத்து உடனே தெரிந்து விடும்.
மற்றொரு பக்கம் விபத்து நடக்காது என்றே வைத்துக் கொண்டாலும் அணு உலை ஒப்பந்தத்தில் ஒளிந்திருக்கும் ‘ வல்லரசுகளுக்கு நாம் அடிமைப்படுகிறோம்’ என்கிற ஆபத்து ஒட்டு பொத்த இந்தியர்களையே பாதிக்கும் என்கிற உண்மை இப்போதைக்கு உரைக்காதுதான். உலக மயத்தின் ஓர் அங்கமான ‘காட்’ ஒப்பந்தத்தின் விளைவைப் போல பட்டுதான் திருந்துவேன் என்றால் இவர்களை யார்தான் திருத்த முடியும்!
அனைத்து அரசியல் கட்சிகளும் மீண்டும் ஒருமுறை தங்களது ஓட்டுப் பொறுக்கி அரசியல் பிழைப்புத் தனத்தை நிரூபித்து இருக்கின்றனர். கூடங்கள மக்களுக்கு ஆதரவாக மேடையேறிய அனைத்து ஒட்டுண்ணி அரசியல்வாதிகளும் வாய்மூடி மௌனியாக இருக்கின்றனர். இனி இந்த பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கிகளால் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க இயலாது என்பதனை மக்களும் போராட்டக் குழுவினரும் புரிந்துகொள்ளவேண்டும். இனி நக்சல்பாரிகளின் பாதையே தீர்வான காரணியாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
//இனி நக்சல்பாரிகளின் பாதையே தீர்வான காரணியாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.//
போப்பா போய் பிள்ள குட்டிகளப் படிக்க வைங்கப்பா..
ரொம்ப ஆட்டம் போட்டால் இப்படி தான்.. வெறும் வெட்டி கொள்கைகள் தேவை இல்லாதது … நடைமுறைக்கு சாத்தியம் எதுவோ அதுதான் ..
வினவு மக்களிடத்தில் பெருவினை ஏற்படுத்துவதே உன் வேலையா?
அறிவிலிகளே…….கூடங்குளத்தில் என்ன பிரச்சனை தெரியுமா… அங்கு இருக்கும் பாதுக்காப்பு வசதி பற்றி யாருக்காவது அறிவு இருக்கா…
வினவுல எழுதறதால உங்களுக்கு சமமா நினெக்க வேண்டாம்…
சும்மா தமிழ்..தமிழ்ன்…தமிழ் இரத்தம்….தமிழ்ச்சி.. அப்படி.அது இதுன்ணு கிறுக்கு புடிச்சி அலயாம….. போய் வேலய பாருங்கப்பா…
வேணீ கிட்ட.. அப்பவே சொன்னேன்… தோறப்பாங்கன்னு….. மடப்பசங்க கேட்டாதானே….. சும்மா மீன் கார கூட்டத்த கூட்டீ…. இந்திய அரச எதிர்தா இதான் நடக்கும்…. சுடாம வுட்டானேனு சந்தோசப்ப்டுக்கப்பா…..தமிழனுங்களா….
//வினவுல எழுதறதால உங்களுக்கு சமமா நினெக்க வேண்டாம்…//
ஆமாம், நீ பெரிய அப்பாடக்கர்தான்.
நாம் பிரச்சனையை காய்தல் உவத்தல் அன்றி பார்ப்போம்….
யாரும் இல்லாத பாலைவனத்தில் அணுமின் நிலையத்தை ஆரம்பிக்கவில்லை…
நனறாக பார்த்து கடற்கரைஓரம் ஆரம்பிப்பதே (கூ.குளம்.கல்பாக்கம்) நோக்கம் தெளிவாகிறது… உடனே கப்பல் மூலம் ஒரு ‘பொருளை’ எடுத்துச் செல்ல… அது என்ன… என்ரிச்சுடு யூரேனியமாக இருக்கலாம்….அது எதற்கு… உள்ளங்கை நெல்லிக்கனி….வியாபாரத்துக்கா… இல்லை சொந்தத் தயாரிப்புக்கா… அல்லது இரண்டுக்குமாக இருக்கலாம்… நாம் ஏன் அணுகுண்டு வைத்துக் கொள்ளக்கூடாது… காரணம் (1) நாம் முதலாளித்துவ நாடு (2) லெனின் மாவோ வைத்துக் கொள்ளலாம்… ஆனால் ஒரு இந்து முதலாளித்துவ நாடு வைத்துக் கொள்ளலாமா…அய்யோ அபச்சாரம்…
சரி… நாம் ஆரம்பிப்பது… சீனாவுக்கு தலைவலி.. பாக் அமெரிக்காவுக்குத் தலைவலி… அணு ஆயுதம் வைத்திருந்தால் உலக அரங்கில் நம் குரல் எடுபடும் (ஏதுக்கு.. சந்தை பிடிக்கத்தான்)..
மேல சொன்னது முதலாளிகளின் தரப்பு…
நம் தரப்பு…
பாதிப்பு இருக்குமா… நிச்சயம் உண்டு
ஓநாய் வாழம் நாட்டில் நாமும் ஓநாய் போல கத்தவே அணுகுண்டு தேவை… அது லெனின் நாட்டுக்கு மட்டுமல்ல… ஏதோ குறைந்த பட்ட சனநாயகத்துடன் ஆளும் இந்து முதலாளித்துவ நாட்டுக்கும் உண்டுதான்…..
பின் என்ன வழி…
சனநாயக அறிவாளிகள் (வினவு மட்டும் சொல்பவர் அல்ல) குழுவை ஏற்படுத்தி அனைத்தையும் விவாதம் செய்யது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வழியை தேட வேண்டும்..
எலியின் உயிர் பயத்தை மட்டும் பார்க்காமல், பூனையின் பசியைப் பற்றியும் அலச வேண்டும்… நமக்கு பிடிக்கிறதே இல்லையோ… ஒற்றை பார்வையோடு பார்ப்பது எந்த பயன் இல்லை.. வசையின் மூலமும் பயன் இல்லை..
//சனநாயக அறிவாளிகள் (வினவு மட்டும் சொல்பவர் அல்ல) குழுவை ஏற்படுத்தி அனைத்தையும் விவாதம் செய்யது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வழியை தேட வேண்டும்.. எலியின் உயிர் பயத்தை மட்டும் பார்க்காமல், பூனையின் பசியைப் பற்றியும் அலச வேண்டும்…//
எலியிலக்கூட உங்களுக்கு, தமிழ் எலிதான் வேணுமாண்ணா?
ஏன் கேரள எலி, ஆந்திர எலி, வங்காள எலி, டெல்லி எலி இதெல்லாம் வேணாமா?
இங்க எலியாக நாங்களே இருக்கும் போது, பூனையோட பசியைப் பற்றி அலச, நாங்கள் தயாரில்லை. தயவு செய்து எங்க கிட்ட வந்து அலசவோ ஆராயவோ சொல்ல வேண்டாம்.
யோவ் இளிச்ச வாய்…. நீர் நல்ல வாயா ஆவுறத்துக்கு வழியப் பாப்போம்னு சொன்னா… மறுபடியும் வசை கச்சேரி ஆரம்பிக்கலாம்னு சொல்றே… அததான் வேணாம்ய்யாங்கறேன்…. தமிழ் எலி இங்கலுசு எலின்னு பயன் இல்ல… தன்மான கலைஞர் புர்ச்சித் தலைவி ரெண்டும் கூ.கு ஆதரிக்குத்து… ரெண்டு பேரும் 75சத மக்கள மயக்கி வச்சுருக்காங்க… நீர் 0.000001 சதகூட தாண்டல… அப்ப என்ன பண்ணலாம்னு கேட்டா… வா எங்கூட சண்டைக்குன்னு சொல்றீர்… சரி.. சரி… நம்ம தலையெழுத்து… அது கிடக்கட்டும்… ஒரு கம்யனிஸ்டு கச்சியில இருந்துகிட்டு அலச மாட்டேன் ஆராய மாட்டேன்னு சொல்றது அன்சயின்டிபிக்கா இல்ல… இது எப்படி இருக்கு…..
கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராம் ஆகிவிடக்கூடாது என்று ராமதாஸ் கதறுகிறார். நந்திகிராம் ஆனால்தான் உலையை மூடமுடியும் என்பதை உதயகுமார் புரிந்துகொள்ளவேண்டும். இப்போது நடப்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால் இதுவே முடிவானதல்ல. தவறா, சரியா அதைப்பேசுங்கள்.@ குருசாமிமயில்வாகனன்
//ஐஜி ராஜேஷ் தாஸ் தலைமையில் போலீஸார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.// முல்லைப் பெரியாறு போராட்டத்தில் மக்களிடம் தர்ம அடி வாங்கி ஆஸ்பத்திரில இருந்துட்டு வந்த பயபுள்ளதானே இவன். கூடங்குளத்திலும் வாங்குவான். முல்லைப் பெரியாறில் தமிழகத்துக்கு ஆப்பு அடிக்க கொடி பிடிச்ச மானங்கெட்ட இந்தியர்கள்தான் கூடங்குளத்திலும் அணு உலையை பிடிச்சிட்டு தொங்குகிறார்கள்.