கூடங்குளத்தை ஒரு கொலைக்களமாக மாற்றுவதற்குத் தயார் நிலையில் நின்று கொண்டிருக்கிறது போலீசு. போராட்டக்குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 11 பேர் நேற்றே கைது செய்யப்பட்டு, போலீசு வேனிலேயே நாள் முழுவதும் வைக்கப்பட்டிருந்தனர். 2011ஆம் ஆண்டு இறுதியில் சிவசுப்பிரமணியன் மீது போடப்பட்ட ராஜத்துரோகம், சதி உள்ளிட்ட பொய்வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராஜத்துரோகம், சதியில் ஈடுபட்ட அவரையும் உதயகுமார் போன்றோரையும்தான் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சந்தித்து உரையாடினார் என்பது நினைவிருக்கலாம். கைது செய்யப்பட்ட 11 பேரும் கடலூர் சிறைக்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர்.
இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து கூட்டப்புளி கிராமத்தில் கைது செய்யப்பட்ட 184 பேர் நேற்று நள்ளிரவு நெல்லை ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை இரவோடு இரவாக சிறைக்கு அனுப்பும் முயற்சியை வழக்குரைஞர்கள் முறியடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 45 பேர் பெண்கள். மாணவர்களும் அடக்கம். சிறை வைக்கப்படுவதை எதிர்த்து பெண்கள் போராடினர். இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இடிந்தகரையில் உதயகுமார் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அங்கே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். மரியாதையாக வந்து சரணடைந்து விடுமாறு போலீசு எஸ்.பி தன்னை மிரட்டுவதாக மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் உதயகுமார் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். கைது ஆவதற்குத் தான் தயாரென்றும், ஆனால் மக்கள் அதனை விரும்பவில்லை என்பதால், மக்களின் விருப்பத்தையே தான் நிறைவேற்ற இயலும் என்றும் அவர் போலீசுக்கு பதிலளித்திருக்கிறார்.
அங்கே கூடியிருக்கும் மக்களை மிரட்டும் வகையில் சுமார் 60, 70 ஆயுத போலீசு வாகனங்கள் அதிரடியாக வருவதும் பின்னர் பின்வாங்குவதுமாக ஒரு உளவியல் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. நரித்தனமாக உதயகுமாரைக் கைது செய்து கூட்டத்தைக் கலைப்பது அல்லது ரத்தக் களறி நடத்தியாவது இன்றிரவு இதனை செய்து முடிப்பது என்ற திட்டத்தில் போலீசு இருப்பதாகவே தெரிகிறது.
இடிந்தகரை செல்லும் சாலை வழிகள் எல்லாம் போலீசால் அடைக்கப்பட்டு விட்டன. 144 தடையாணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. கடல் வழியாக வந்து இடிந்தகரைக்குள் நுழையும் மீனவர்களைக் கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் ஏற்ப டார்னியர் விமானங்கள் கடலின்மீது வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
நேற்று மதியம் முதலே கைது செய்யப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் வள்ளியூர், நெல்லை நீதிமன்றங்களில் செயல்பட்டு வருகிறார்கள். இடிந்த கரைக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் 15 பேர் நெல்லை டி.ஐ.ஜி யை சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடிந்தகரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க கூடாது என்று அனுமதி மறுக்கவோ, இடிந்தகரைக்கு செல்லக்கூடாது என்று வழக்குரைஞர்களை தடுக்கவோ போலீசுக்கு சட்டப்படி அதிகாரமில்லை. இப்போது அங்கே நடந்து கொண்டிருப்பது துப்பாக்கியின் ஆட்சி. மத்திய அரசும், ஊடகங்களும், திமுக, காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளும் தனக்குத் துணை நிற்கும் தைரியத்தில் ஒரு பேயாட்டத்தை நடத்துவதற்கு தயாராகி வருகிறது பாசிச ஜெயா அரசு. நலத்திட்டம் என்ற பெயரில் தான் வீசிய 500 கோடி ரூபாய் லஞ்சப்பணத்துக்கு பல்லிளித்து அடிபணியாமல் போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்து உறுதியாக நிற்பதால், கூடங்குளம் அணு உலைக்கு முன்னதாக, அம்மாவின் தாயுள்ளம் வெடிக்கத் தயாராக காத்து இருக்கிறது.
இந்த அடக்குமுறைகளும், கைதுகளும் ஏற்படுத்தும் தற்காலிகப் பின்னடைவுகளை வென்று முன் செல்வோம். ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் போராடும் மக்களுக்குத் துணை நிற்பார்கள். “கூடங்குளம் அணு உலையை மூடு, அடக்குமுறையை நிறுத்து, பொய்வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்” என்ற முழக்கங்களின் கீழ் இவ்வமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
மின்வெட்டைக் காட்டி கூடங்குளத்துக்கு தமிழக மக்களிடம் ஆதரவு தேடும் சதியை திரைகிழிக்கும் வகையில் தமிழகமெங்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது. கூடங்குளத்தின் மக்களை அடக்குமுறையால் சிதறடித்து விட்டால், அப்போராட்டம் அடங்கிவிடாது. தமிழகமெங்கும் அதனைக் கொண்டு செல்வோம். அம்மக்களின் போராட்டத்தைத் தமிழக மக்களின் போராட்டமாக மாற்றியமைப்போம்.
___________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
- மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!
Poi velaya parungada verum pathayiram per than ethukuringa pathu kodi per atharikirom.
Poi velaya parungada பன்ச் pathayiram per than ethukuringa பன்ச் பன்ச் pathu kodi per atharikirom பன்சோ பன்ச்
இது ஒன்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் நாடக போராட்டம் அல்ல. மக்கள் போராட்டம் அடக்கு முறைகளுக்கோ, லஞ்சத்திற்கோ அடி பணியாது என்பதை நிலை நிறுத்தி போராடும் அவர்களுக்கு துணை நிற்பது அனைவரது கடமை.
கூடங்குளம் போராட்டத்தை, தமிழ் நாட்டு மக்கள் நம் ஒவ்வொருவரின் வாழ்வுரிமை போராட்டமாக நினைத்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.
அனு ஆயுதம் வைத்துள்ள நாடுகளான நம் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் எந்த இடத்திலெல்லாம் ஆயுதம் உள்ளன, எவ்வளவு, என்ன பாதுகப்பு என்று எவருக்குமே தெரியாது…
இதை தெரிந்து கொள்வது சாத்தியமல்ல..
இந்நிலையில் மனித சமூகம் எப்போதோ அழிவை நோக்கிய பயனத்தைத் தொடங்கிவிட்டதாகவே நாம் கருதவேண்டும்…
கூடங்குளம் என்பது அத்தகைய ஆபத்தில் ஒரு பகுதி தான்…
அத்துமீறுவோம், அடக்கு முறைக்கு பதிலடி கொடுப்போம்
கூடங்குளம் அனுமின்நிலையம் அமைவதால் பகுதியில் அரசு நலதததிட்டம் செயல்பட்டால் மீனவர்களுக்கு, ஏழைகளுக்கு உதவி செய்கிரோம், என்று வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று தாங்கள் தன்னாற்வு தொன்டு நிறுவனம் என்று மக்களையும் , அரசையும் ஏமாற்றி எகபோக உயர்மட்ட சொகுசுவாழ்க்கை பாதிக்கும் என்பதற்க்காக பாமர மக்களை ஏமாற்றி போராட்டத்தை தூண்டிவிடுகிரார்கள்.
மேலும் இந்தபகுதில் இருந்து கடல் மூலம் கடத்தல் செய்ய முடியாது. ஆலயங்களில் மனிதன் தெய்வத்தை வழிபடவேண்டும். ஆனால் இவர்கள் மதவாதம் ,மதமாற்றம், பிரிவனைவாதம் தூண்டுகிறார்கள், சுயலாபத்திற்காக மாற்று மதத்தை இழிவுபடுத்தி தொண்டுநிறுவனம் நடத்துகிறார்கள்.
இவர்கள் மதத்தில் சாதி இல்லையா?
எக்காரனாம் கொன்டு இதை ஆதரிதல் பின் தெவரம் மலை உதகை பின் சேலம் எல்லாம் அன்னு மயம் ஆகும்.ட்
அனில் கக்க்கொதர் அன்னவம் தடவம் ஆகும். ஏன் செஇதபுர் மக்கல் வெட்ரி கொல்ல்வில்லையா?தமில்நடு சுடுகாடு ஆகும்.
இதயமும் இல்லை. அதில் ஈரமும் இல்லை. அதனால் தான் சொல்கிறார்களொ இரும்பு பெண்மணி என்று உன்னை.
மூளை சலவை செய்யப்பட கூட்டத்திடம் எவ்வளவு கட்டினாலும் எடுபடாது மக்களே
அதத்தான் நாங்களும் சொல்றோம். . ..மாக்களே…
கவிதை… கவிதை… சூப்பர் கவிதை
//According to a senior Police official, the state government wanted a ‘silent clearance operation’ in Koodankulam. “We have requested media to vacate the premises and sealed all entry points. We will use force only as a last resort,” said the police official who wished to remain anonymous. According to sources, the Police have cut power supply to Idinthakarai and are planning to delink the water supply to the village.//
http://www.tehelka.com/story_main52.asp?filename=Ws200312Nuclear.asp
Sabaash. Excellent strategy. Good way to clear the area of all irritating elements like media and nachukirumigal like Udayakumar. But why is police planning on using force as last resort? It should be first resort. Break the backbone of protest by literally breaking bones and backbones. If need be, shoot at sight. Amma vaazhga!
டேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையா … நீங்களும் பத்து பெரும் சேர்ந்து எதிர்த்த நாங்க பத்து லட்சம் மூடிட்டு இருக்கனும்..ஏன்டா டேய் உங்களுக்கு புடிகலன்ன நீங்க என்கிடாவது ஓடி போய்டுங்க
நல்லா கூஜா தூக்குங்க! நாங்க ஏன் ஓடி போகனும் உனக்கு ஆசையா இருந்தா உன் வீட்டை எழுதி கொடுத்துட்டு போ, அணு உலைக்காக.
வெரும் பதில்து சதவீதம் பேர்தான் சுதந்திரத்துக்காக போராடினார்கள், மீதி 90% பேர் வீட்டில் உங்களைப் போல ஏகடியம் பேசிக்ன்கொனண்டு சும்மாதான் இருந்தார்கள்,மிஷ்டர் ராஜேஷ்.
ஜெயா வின் நிஜ முகத்தைநாம் எப்போதோ பார்த்துவிட்டோம். இடைத்தேர்தல் முடிந்த பிறகு அறிவிப்பு செய்வது, இவர்கள் எந்த அளவிற்கு ஈனத்தனமானவர்கள் என்பதையே காட்டுகிறது.
அறிவிளிகள், அணுமின் அரசியலின் பின்புலத்தை, அதில் விளையாடும் பலனுறு கோடி பணத்தை, எதிர்கால சந்ததிகள் சந்திக்க இருக்கும் சவால்களை பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள்.
ஆதரிப்ப்வர்களுக்கு ஒரு கேள்வி: உங்கள் கணக்குப்படி, கரன்ட் தரமுடியவில்லையென்றால், உங்கள் முகத்தை எங்கே வைத்துகொள்வீர்கள்? அணு விபத்துநடந்தால்,நஷ்ட ஈடு அவன் தரமாட்டான்:நீங்கள் தருவீர்களா?
எங்கள் வாழ்க்கையை, எங்கள் சந்ததியை அழிக்கும் உங்களுக்கு என்ன தண்டனை?
ஓட்டு போடுறதோட நம்ம வேலை முடிஞ்சு போச்சு… அப்புறம் அவங்க வந்து எல்லாம் பார்த்துப்பாங்க… ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவங்களை மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றுகிறபடி ஒரு சட்டம் வருமா?
y this kolaveri mr elavu sorry vinavu…
good punch mr dubukku
தனக்குத்தான் சந்ததியே இல்லையே… அப்புறம் ஏன் கவலைப்படனும்னு ஜெயா நினைச்சிட்டாப்போல…
என்னமா யோசிக்கிறாங்கப்பா… சூப்பர் கமென்ட்
நரித்தனமாக உதயகுமாரைக் கைது செய்து கூட்டத்தைக் கலைப்பது அல்லது ரத்தக் களறி நடத்தியாவது இன்றிரவு இதனை செய்து முடிப்பது என்ற திட்டத்தில் போலீசு இருப்பதாகவே தெரிகிறது.
இது நரித்தனம் இல்ல வினவு மாமா…. பொறூமைக்கும் ஒரு எல்லை உண்டு… ரொம்ப சீன் போட்டா.. இப்படிதான்
உயிரைக் கொடுத்து போராடும் ஒரு மக்கள் போராட்டத்தை சீரியசா நினைக்காம சீன் போடறதா சொல்ற உனக்குத்தான் போன பதிவிலேயே மாமா பட்டம் கொடுத்தாச்சே.!
எந்த அளவு பொறுமை , ELECTION முடியற வரைக்கும் புரட்சி தலைவி WAIT பண்ணாங்களே அப்படியா இந்தியன் .
அமெரிக்க மாமா இந்தியன், மக்களோட பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அது சீன் போடும் போது உங்களைப் போன்ற தேசத் துரோக மாமாக்களின் நிலை பரிதாப’மாமா’க இருக்கும்.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரோ அல்லது அட்லீஸ்ட் சங்கரன் கோவில் தேர்தலுக்கு முன்னராவது இந்த ஆதரவு நடவடிக்கையை அதிமுக எடுத்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும்… ஆனால் வாக்களித்த மை காயும் முன்னே, ஒட்டு எண்ணுவதற்கு முன்னரே இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது … வாக்களர்களை அவமானப்படுத்தும் செயல்…
முட்டாள் தமிழனே, அடி முட்டாள் தமிழனே… ஒட்டு போட்ட பின் உன்னால் ஒரு பயனும் இல்லை, ஒன்றும் செய்ய முடியாது என்ற எகத்தாளம் தானே… மை வைப்பதோடு உன் வேலை முடிந்தது, ஓட்டை நாங்க என்னிக்கிறோம்… நீ கிளம்பலாம்… என்ற எக்காளம் தான் இது…
மிக அதிக பட்ச சுய நலத்தோடு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவில், பொது நலம் இருப்பதாக பெரும்பாலோனோர் கருதினாலும்… ஓட்டுக்காக அந்த பொது நலத்துக்கு இன்டர்வெல் விட்ட செயலை பாராட்டுவது அடி முட்டாள்தானம்.. பாராட்டுவோர் ஏமாளிகளே…
அம்மான்னா சும்மாவா! வெச்சாங்கல்ல ஆப்பு! இன்னும் நாலு வருஷம் இருக்கு முருகா! அனுபவி! தமிழா…நல்லா இரு! என்ஜாய் மாடி!
நாவு என் ஜொய் மாடது பிடி..நிம் கர்நாடகதள்ளி தொட்ட ட்ராமா(எடியூரப்பா) நடிதாயிதே சொல்ப்ப அதுநோடப்பா..
நீர் ரோஸ் தமிழனும் அல்ல,ரோஸ் கன்னடனும் அல்ல. அல்லக்கை இந்தியன் போலும்!
அம்மக்களின் போராட்டத்தைத் தமிழக மக்களின் போராட்டமாக மாற்றியமைப்போம்- konjan kastamthaan atleast nam poraduoom.