முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு

கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு

-

இடிந்தகரையில் போராடும் மக்களோடு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் சக்தி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை மிரட்டும் வண்ணம் போலீசு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் அவரை தொலைபேசியில் கூப்பிட்ட அதிகாரிகள் சரணடைந்து விடுமாறு மிரட்டினர். அவரோ தான் எங்கேயும் ஒளிந்து கொண்டிருக்கவில்லை, மக்கள் மத்தியில் பகிரங்கமாக இருந்து வருகிறேன், மக்கள் முடிவின் படிதான் இங்கு இருக்கிறேன் என்று அந்த மிரட்டலை புறந்தள்ளினார். இதனால் ஆத்திரமுற்ற போலீசு வேறு ஒரு வழியினை கண்டுபிடித்திருக்கிறது.

உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவிலில் சாக்கர் மெட்ரிகுலேஷன் நடுநிலைப்பள்ளியினை நடத்தி வருகிறார். ஏற்கனவே இங்கு இந்துமுன்னணி காலிகள் சுற்றுச்சுவரை இடித்து நாசப்படுத்தியிருக்கின்றனர். அதை புகார் செய்த பிறகு காவல்துறை ஒரு போலீஸ் சென்ட்ரியை பாதுகாப்பிற்கு நியமித்திருக்கிறது. ஆனால் முந்தாநாள் மட்டும் அந்த போலீசு காவலை வாபஸ் வாங்கியிருக்கிறது. போலீசு சென்ற பிறகு போலிசு அமர்த்திய கூலிப்படையினர் பள்ளிக்குள் நுழைந்து அனைத்தையும் நாசப்படுத்தியிருக்கின்றனர். பள்ளி வேன், நூலகம், நாற்காலிகள், கண்ணாடிகள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை அந்த கும்பல்.

இது போலீசு செய்ததாகவோ இல்லை போலிசு ஏற்பாடு செய்து நடத்தியதாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் உதயகுமாரை சரண்டர் செய்யுமாறு மிரட்டியதற்கு அடுத்த நாள்தான் இது நடந்திருக்கிறது. அதுவும் போலீசு காவலை நீக்கிய பிறகு கச்சிதமாக நடந்திருக்கிறது. இதை எதிர்த்து மீரா உதயகுமார் புகார் செய்தும் அதை பதிவு செய்து வரிசை எண் கொடுப்பதற்கு போலீசு மறுத்து வருகிறது.

அணு உலையை எதிர்க்கிறேன் என்று பேசுவதற்கு கூட இந்த நாட்டில் ஜனநாயக உரிமை இல்லை என்பதோடு அப்படி பேசினால் வாழும் உரிமை கூட இல்லை என்பதற்கு இந்த சம்பவமே சான்று. கீழே பள்ளியில் வன்முறைக்கும்பல் நடத்திய அராஜகத்தினை விள்க்கும் புகைப்படங்கள் உள்ளன.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________________

– செய்தி-படங்கள்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. அடிமைகளாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் அழிக்கப்படுவீர்கள்,
    நீங்கள் வாழும் இடம் உங்களுடையது அல்ல இன்னும் சொல்லப்போனால் உன் உடல் கூட உனக்கு சொந்தமில்லை, உங்களை உயிருடன் வைத்திருப்பது எமது பெருந்தன்மை இப்போது தெரிகிறதா நாங்கள்தான் கடவுள்.

  2. வழக்கம் போல் கண்ணீர் விட்டு நம்மை இரக்கமனதுகாரனாக பிலிம் காட்டுவோம்,இல்லையெனில் “அரசை எதிர்த்தா இப்டிதான்” என்று ஆளும் சொறிநாய்களின் கூட்டத்திற்கு புறங்கழுவி திருப்தி அடைவோம் என்பதே தமிழனின் மனநிலையாகி விட்ட போது என்ன செய்யலாம்?
    போராட்டத்தை தமிழகம் முழுவதும் வளர்த்தெடுப்பதை தாண்டி வேறெதுவும் தெரியவில்லை இல்லையென்றால் இரத்த வெறிகொண்ட பாசிச போலிசு கும்பல் தொடங்கவிருக்கும் படுகொலைகளை தடுக்க முடியாது……..

    • போ ராஜா கூடங்குளத்திற்க்குப் போய் போராட்டத்தை வளர்த்தெடு…போலீஸிடம் உன் வீரத்தைக்காட்டு..

  3. வினவு … தமிழனுக்காக போராடும் உதயகுமார்.. ஏன்யா
    மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தனும்?? அதுக்கே பில்டிங்க இடிக்கனும்….
    ஒன்ரயனா ஸ்கூல இடிச்சதுக்கே இவ்வளவு எரியுதுனா…என் நாடு 1000 கோடி போட்டு ஆரம்பித்த அணூ உலய மூடுன்னா….நாங்க என்ன விரல் சப்பிக்கிட்டு இருக்கனுமா….

    • Annae vaanga, 1000, 10,00, 1,00,000 kodiya thinnu seruchavan mayira kooda pudungala, vanthuttenga pulli vivarathoda….
      thappi thavari koodankulam pakkam vanthuraatheeka…

    • அம்மா 1100 கோடி கட்டுன கட்டிடத்த சும்ம பூட்டி வச்சுருக்காங்களே அத கேக்காம இப்ப எத சப்பிகிட்டு இருக்கே? விரலதானே

  4. வினவு மாமா.. ஏற்க்கனவே உன்னய போலிஸ் விசாரிச்சுட்டு போயிருக்கு… இது மாதிரி கிருக்கிக்கிட்டு இருன்ந்தே வய்யி….. டோட்டல் டமேஜ் ஆயிடும்.. பாத்து.. இது இந்தியா….

    • இந்தியான் மாமா நீங்க இப்படி செய்யிற மாமா வேலைக்கு அரசு விசாரிசுட்டு போச்சு உங்களுக்கு இந்தியாவின் மாமாக்களின் மாமா விருது கொடுக்க போறாங்களாம்.. விரல் எடு

  5. சரி இதோடு விட்டு விடலாம்…போனால் போகிறது…இந்தியா வல்லரசாகி விடட்டும்! இந்தியா வல்லரசாகி விட்டால் கோடானுகோடி ஏழைகளுக்கும் நல்லது நடக்கும்!

    இப்படி பிடிவாதம் வேண்டாம் சாமிகளா!

  6. Udayakumar & co delayed the operation of the plant for 6 months.When the majority are in favour of the plant , few individuals should not stop a public utility.
    Vinavu should come out this issue

    • பெரும்பான்மையானோர் ”ஆதரிப்பதால்” கூடங்குளம் இயங்கட்டும் என்றால் அதே பெரும்பான்மையானோர் எதிர்ப்பதால் பல்லாயிரம் கோடிகளை மக்களிடமிருந்து கொள்ளையிடும் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு,மின் கட்டண உயர்வு, மதிப்பு கூட்டு வரி உயர்வு ஆகியனவற்றை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.அதற்கு யார் பொறுப்பேற்பது.

  7. தமிழர்கள் ஒன்றிணைந்து எந்த போராட்டம் நடத்தினாலும் இந்த பார்ப்பனர்களுக்கு ஏன் பிடிப்பதில்லை?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க