கூடங்குளம் போராட்டத்தை நசுக்குவதற்க்காக பாசிச ஜெயாவின் போலீசு கிட்டத்தட்ட முழுப் போரையே இடிந்த கரை மக்கள் மீது தொடுத்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் அங்கே செல்ல முடியவில்லை. மேலும் அருகாமை இடங்களில் பேருந்து மூலம் செல்லும் மாணவர்களும் முடக்கப்பட்டிருக்கின்றனர். கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசு எப்போதும் கண் கொத்திப் பாம்பாக முற்றுகை இட்டு வருகிறது.
கடலூரில் கைது செய்யப்பட்டுள்ள 11 முன்னணியாளர்களில் ஒருவர் பார்வையற்றவர். மற்றொரு முதியவருக்கோ இரண்டு முறை மாரடைப்பு வந்துள்ளது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட மக்களில் பெண்களும், சிறுவர்களும் கூட உண்டு. இவையெல்லாம் போலீசின் காட்டு தர்பார் எத்தகையது என்பதை விளக்குகின்றன.
இந்நிலையில் இடிந்தகரை நோக்கி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் இன்று செல்கின்றனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் பயணத்தில் இருந்ததால் அவரது நேர்முக உதவியாளர் மனுவை பெற்றுக் கொண்டு ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனாலும் இதுவரை அதிகார வர்க்கம் எவரையும் இடிந்தகரை நோக்கி விடவில்லை.
இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் தன்னை சந்திக்க வரும் வழக்கறிஞர்களை போலிசு தடுப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவித்தார். தற்போது வள்ளியூர் நீதிமன்றத்தில் மக்களை பிணையில் எடுப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து விட்டு ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் அனைவரும் இடிந்தகரை நோக்கி செல்கின்றனர்.
போராடும் மக்களுக்கு தோள் கொடுப்போம். போராட்டத் தீயை அணைய விடாமல் காப்போம்.
மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனு:
அனுப்புநர்;
எஸ் ராஜூ, வழக்கறிஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் / தமிழ்நாடு
பெறுநர்; உயர்திரு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகத்துறை நடுவர் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி.
பொருள்; ”கூடங்குளம் இடிந்தகரைப் பகுதி மக்களுக்கு சட்ட உதவி வழங்க வழக்கறிஞர்களை அனுமதிக்க கோரி”
அய்யா, வணக்கம்!
கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி நடக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் வாழ்வுரிமைக்கானதாகும். அது ஜனநாயக முறைப்படி அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஆகும். சமீபத்தில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை தடைசெய்து கு.வி.மு.ச. பிரிவு 144-ன்படி உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம்.
தாங்கள் ராதாபுரம் தாலுக்காவில் பிறப்பித்த பிரிவு 144 தடை உத்தரவின் விளைவாக அந்த சுற்றுவட்டார பல்வேறு கிராமப் பகுதிகளில் குடிநீர் தடைசெய்யப்பட்டுள்ளது. பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளிக் கூடங்களில் சென்று படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளார்கள்.
கூத்தங்குளிக்கு சென்று தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட போலீசாரைக் குவித்து கிராமமே போர்க்கோலமாக காட்சியளிக்கிறது. சாலை மறியல் செய்ததற்காக 42 பெண்கள் உட்பட 178 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பிணையில் எடுக்கவும், அவர்களின் உறவினர்களை சந்தித்து விவரங்களை கேட்டறியவும், மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் கூடங்குளம் காவர்நிலையத்திற்கு சென்று கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டனர். தொலைப்பேசி வாயிலாக D.I.G.-யை கேட்டபோது, அவரும் 144 தடை உத்தரவால் அனுமதிக்க முடியாது எனக் கூறிவிட்டார்.
மேலும் போராட்டக்குழுவினர் இந்த அணுசக்திக்கு எதிரான நிலுவையிலுள்ள உயர்நீதிமன்ற வழக்குளை எங்களிடம் ஒப்படைத்து அவர்கள் சார்பாக நாங்கள் நடத்திவருகிறோம். போலீசாரால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்று தற்காத்துக் கொள்வதற்கு அவர்கள் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கு உரிமையுண்டு. அதுபோல் வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்து நீதிமன்றத்தில் வாதிட உரிமையுண்டு. இது அரசியலமைப்புச்சட்டம் நமக்கு வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமையும், இயற்கை நீதியுமாகும். 144 தடையுத்தரவால் மக்களின் வாழ்வுரிமைகளான அடிப்படை உரிமைகளை நிறுத்திவைக்கவோ, ரத்து செய்யவோ முடியாது. மேலும் 144 தடையுத்தரவை ரத்துசெய்து காவல்துறையை திரும்ப பெறவேண்டுமென சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரனைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து சட்ட உதவிகளை வழங்க காவல்துறை அனுமதி மறுப்பது சட்டபுறம்பானது, மனித உரிமைகளுக்கெதிரானது. எனவே மக்களை சந்திப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.
இடம்: திருநெல்வேலி
தேதி: 21.03.2012
இப்படிக்கு உண்மையுடன்
(எஸ். ராஜூ)
____________________________________________________________
– தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
____________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!
- கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!
- கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
- மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!
கூடங்குளத்தில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை உடனே நிறுத்தவேண்டும்…
கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்…
Hitler’s Germany…Sadam’s Iraq…Now Singh’s India…
Shame on you Jaya…
சட்டபடியே ஆட்சி செய்யும் பேடிகளே! சட்டததை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
அறவழியில் போராடும் கூடங்குளம் மக்களை, தம் வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களை இப்படி வதைப்பதுதான் ஜனநாயக அரசா? இந்த அரசுகள் செய்வதல்லவோ மிகப்பெரிய வன்முறை! இந்த அளவுக்கு நெருக்கடியைச் சந்திப்பதற்கு அந்த மக்கள் என்ன கெடுதலைச் செய்துவிட்டனர்? இதே நிலமை நீடிக்கும் பட்சத்தில், இந்த கேடுகெட்ட போலி ஜனநாயகத்தை தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் எதிரிகளான இந்த ஊழல் ஆட்சியாளர்களை, கொலைகார ஆட்சியாளர்களை மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தும் காலம் நிச்சயமாக வந்தே தீரும், அந்த உயர்ந்த இலக்கை நோக்கியே இந்த அசிங்கம் பிடித்த பயங்கரவாத ஆட்சியாளர்கள் நம்மை, மக்களைத் தள்ளூகிறார்கள். கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெற்றே தீரும். உழைப்பவர்களின் போராட்டம் தோற்பதில்லை! அவர்களின் வெற்றிதான் தமிழர்களின் வெற்றி! அவர்களின் போராட்டம் தமிழர்களுக்கான போராட்டம்.
புரட்சிகர இயக்கத் தோழர்களின் அன்பும் ஆதரவும் எம்மை நெகிழ வைக்கிறது! தமிழ் உணர்வாளர்கள், பொதுவுடமையை நேசிப்பவர்கள், உண்மையான பெரியாரின் தொண்டர்கள் புரட்சிகர இயக்கத்தின் இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் என்றுமே நன்றியுள்ளவர்களாயிருப்போம்! காசிமேடுமன்னாரு.
சரியாகச்சொன்னீர்கள்
பாசிச ஜெயாவின் அராஜக போக்கை எதிர்த்து துணிவுடன் கூடங்குளம் நோக்கி செல்லும் ம.உ.பா.மைய தோழர்களுக்கு வீர வணக்கங்கள்.
manmohan and sonya wants to kill tamils and make south zone a military camp and tamil people as refugees as it is done in srilanka.either we should be sec citizen or die. jaya wants to establish her inner urge anarchy
a new angle of thinking; and cannot be ignored.
Victory to HRPC lawyers ;victory to the poor people ;
கூடங்குள அணு உலையை திறந்துவிட்டதால்,நாளை முதல் மின்சாரம் தடையில்லாமல் வருமென்று எங்களூரில் காங்கிரஸ் காலிகள் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
நாம் இப்போது போராடத் தவறினால், எப்போதும் போராடமுடியாமல் நசுக்கப்படுவோம். நாம் இப்போது பேச தவறினால் எப்போதுமே பேச முடியாத அளவிற்கு பேச்சுரிமையை இழப்போம். அதுமட்டுமின்றி இதுநாள்வரை போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழக்கநேரிடும். எனவே நாம் போராடுவோம், போராடும் மக்களுக்கு துணைநிற்போம்.
[…] : வினவு பகிர்ந்துகொள்ள […]
இந்தியாவில், கல்பாக்கம் (தமிழ் நாடு), கைகா (கர்நாடகா), கக்ரபார் (குஜராத்), நரோரா (உத்தர பிரதேசம்), ரவத்பதா (ராஜஸ்தான்) மற்றும் தாராபூர் (மகாராஷ்டிரா) அருகே வசிப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா. அங்கு தயாரிக்கப் படும் மின்சாரத்தை நீங்களும்தான் உபயோகித்து கொண்டு இருக்கிறீர்கள். அவர்களுக்கு இல்லாத பயம் உங்களுக்கு வந்தது என்றால், நீங்கள் எவ்வாறு பொய் பிரசாரத்தால் தவறாக வழி நடத்தப் பட்டதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதற்கான பதிலை வினவில் இதற்கு முன் வெளிவந்த அனு உலை தொடர்பான பல்வேறு கட்டுரைகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது, படித்து தெரிந்து கொள்ளவும்.
காந்தி உண்ணாவிரதம் இருந்தால் பிரீட்ஷ் அரசு மதிப்பு அளித்தது! அப்பொ!!
மக்கள் உண்ணாவிரதம் இருந்தால் இந்திய அரசு ‘மிதிப்பு’ கொடுக்குது!! இப்பொ!!!
அறம் தோற்றால் மறம் வெல்லும்!!!!!
நீங்கள் இந்தப் பிரச்சனையை அணூஉலை கட்டுமுன்னரே வெளிப்படுத்தியிருக்கலாமே? கட்டும் வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துவது என்ன நியாயம்? 13,500 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலையை மூடுவதுதான் தீர்வா? நாட்டின் வளர்ச்சிக்காகவும் தேவைக்காகவும் கட்டப்பட்ட அணு உலையை ஒரு 300 பேருக்காக அழிக்க முடியுமா??
யார் இந்த உதயகுமார் என்று நான் பலமுறை எழுதியிறுக்கிறேன்..இவன் எத்தன வருசம் அமேரிக்காவில சம்பாரிச்சுட்டு இப்ப வந்து ஆற்மாசமா மூடு மூடுன்னா…இந்த ஆளு இத்தனநாள எங்க போயிருந்தாரு…அமேரிக்காவுல சுகபோகமா சம்பாரிக்கப் போயிருந்தாரு…இப்ப விதவிதமா கதை/கட்டுரை எழுதும் வினவு எங்க போயிருந்தது
ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் அவர் மட்டும்தான் உமது கண்ணுக்கு தெரிகிறாரா?
மறுபடியும் முதலில்லிருந்தா.
அப்போ அந்த 300 பேரை அழித்து விடலாமா?
Paiyya,
Please read this.
http://www.dianuke.org/wp-content/uploads/2012/03/Koodankulam-Struggle-Chronology.pdf
Ean Neenga Naattukkaga AC podaama irukka advice pannunga, 100kodi makkalukkaga AMBAANI, TATA, BIRLA, Adicha kollaiyai recover pannunga,,, illa unga veettukku mela anu ulaiyai kondu vaanga…
Intha ambulimama kathaiyai poi vere yaarkittayavathu sollunga.
‘முள்ளிவாய்க்காலில் நடந்ததைப் போல எங்களைக் கொல்லப் போகிறீர்களா?’
இது தான் உதயகுமாரோட லேட்டஸ்ட் பில்ட் அப்
எல்லோரும் கைதாகத் தயார் என்று கூறிய பின்னும் கைது நடவடிக்கை இல்லாததால் தமிழக அரசு போராட்டத்தில் இருக்கும் மக்களை சமாதானம் செய்யும் எண்ணத்தில் இருக்கிறதா இல்லை ‘கலவரம்’ ஏற்படக் காத்திருக்கிறதா என்ற ஐயம் அவருக்கு எழும்பியிருக்கலாம். தமிழக அரசு தயங்காமல் இடிந்தகரை மக்களுக்கு நல்லெண்ண அறிக்கை ஒன்றை வெளியிடுவதும், ராஜேஷ் தாசின் போலீஸ் படைக்கு கடுமையான உத்தரவின் மூலம் அடக்குமுறையைத் தவிர்க்க ஆணையிடுவதும் அவசர,அவசியமான கடமை.
Paiya,
உங்க லிஸ்டில் செர்னோப்பில், புகுசிமா ஏன் சேர்க்கவில்லை?
மறந்துடீங்களோ!
avarukku athellam kannukku theriyaathu. NAATTU VALACHCHITHAAN MUKKIYAM, athukkuthaan ippadi romba MOKKURAARU.