படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
இந்த அழைப்பிதழின் PDF பெற இங்கே அழுத்தவும்
போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல்!
மக்களுடைய எதிர்ப்பை பொருட்படுத்தாமல் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டு விட்டது!
அணு உலையின் அபாயம் குறித்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை!
கேள்வி எழுப்பிய குற்றத்திற்காக அடுக்கடுக்கான பொய்வழக்குகளை தொடுத்துள்ளது!
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய நாட்டுப்பற்றாளர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளை இன்று போராடும் கூடங்குளம் மக்கள் மீதும் போட்டிருக்கிறது தமிழக அரசு!
ஆபத்தான அணு உலை வேண்டாம் என்று கூறுவது தேசத்துரோகமாம்!
இ.பி.கோ.120 சதித்திட்டம் தீட்டுவது – இ.பி.கோ.121 அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது – இ.பி.கோ.124 ஏ ராஜத்துரோகம் – இவற்றிற்கு ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை வழங்க முடியும்.
இ.பி.கோ.199, 188, 121, 121(A) 123, 124(A), 125, 143, 147, 153(A), 294(b) 341, 342, 353, 447, 500, 505(I), (b) 506(II), 3 Of Ppdl Act, 7(1) (A) CLA Act r\w 120(b) என்ற கடும் குற்றப் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடங்களம் அணு உலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டம் அனைத்து மக்களுக்குமானது. இந்திய ஆளும் வர்க்கத்தின் அணு குண்டு, வல்லரசு கனவு, மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால்தான் அரசு இயந்திரங்களும் அதன் அடிவருடிகளும் அப்போராட்டத்தை ஒருசேர ஒடுக்க முயல்கிறார்கள். சாலை மறியல் செய்த பெண்கள், சிறுவர்கள், நோயுற்றவர்கள், உள்பட கூட்டப்புளி மக்கள் 178 பேர் மீது தூக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவில் சிறையில் அடைக்கிறார்கள். தலைக்கு இருவர் என 356 பேர் வள்ளியூர் நீதிமன்றம் வந்து ஜாமீன் கொடுத்து பிணையில் வந்தாலும், தினமும் காலையில் கொடும் குற்றவாளிகளைப் போல் காவல் நிலையத்தில் கையெழுத்திடச் செய்கிறார்கள். பிணையை தளர்த்த நீதிமன்றம் சென்றால் ஒரு மாதம் கழித்து வாருங்கள் அது எனது கொள்கை என அறிவிக்கிறார்கள். பேருந்து வசதியில்லாத பாதையில் பழவூர் காவல் நிலையத்திற்கு காலை 10-00 மணிக்கு சென்று தினமும் கையெழுத்து போட்டால் பிழைப்புக்கு கடலுக்கு எப்படி செல்வது? குடும்பத்திற்கு கஞ்சி யார் ஊற்றுவது? ஆனால் மக்களின் இப்பிரச்சினைகள் பற்றியும் வாழ்க்கை குறித்தும் அரசு இயந்திரத்திற்கு மயிரளவும் கவலை கிடையாது.
கூடங்குளம் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உட்பட 18 பேர், கூட்டப்புளி ஃபாதர் சுசிலன் உட்பட 30 பேர் மற்றும் முகிலன், சதீஷ் ஆகியோர் நான்கு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 23 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு பிணையில் வந்துள்ளனர். வழக்கம் போல் நக்சலைட் பீதியூட்ட முகிலன், சதீஷ் ஆகியோருக்கு பிணை மறுக்கப்பட்டு சிறையில் வைத்துள்ளனர். உதயக்குமார் உட்பட யாரை வேண்டுமானாலும் ஆயிரக்கணக்கில் கைது செய்யும் வகையில் கடந்த ஆண்டே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இத்தகைய வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதுதான் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படும் போராட்டக்குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துள்ளனர். காவல் துறை உயர் அதிகாரிகள், கலெக்டரை பல முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். நேற்று வரை போராட்டத்தில் உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்று நாடகமாடிய ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன், 144 தடையுத்திரவு மூலம் போக்குவரத்து, மின்சாரம், பால்,தண்ணீரை நிறுத்திப் போராடும் மக்களை பணிய வைக்க முயற்சித்தார். தமிழக அரசின் இம்முயற்சிக்கு நாடு முழுவதும் கண்டனக்குரல் எழும்பவே பகுதி அளவில் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. வாழ்வுரிமைக்காக போராடியதைத் தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத அப்பகுதி மக்களை வழக்கு, கைது, சிறை என பய பீதியூட்டி வருகிறது தமிழக அரசு. போலீசின் தடியடி, துப்பாக்கி சூட்டைக்காட்டிலும் இது கடுமையான ஒடுக்குமுறை.
ஆபத்தான அணு உலை வேண்டாம் என அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துப் போராடியதால் அப்பகுதி மக்கள் வேலை இழந்தார்கள், உணவை இழந்தார்கள், வருமானத்தின் ஒரு பகுதியை போராட்ட நிதியாகக் கொடுத்து வருமானத்தை இழந்தார்கள். தற்போது வழக்கு, கைது, சிறை துன்பங்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாகிறார்கள். நான்கு வழக்குகளில் 200 பேரை பிணையில் எடுக்க ம.உ.பா. மைய வழக்கறிஞர்கள் 10 பேர் 20 நாட்களாக இரவு பகலாக உழைத்து கட்டணம் வாங்காமல் விடுவித்தோம். நூற்றுக்கணக்கான வழக்குகளில் ஆயிரக்கணக்கான மக்களை அது போல் பிணையில் எடுப்பது சாத்தியமா? அவசியமா? என்றால் இல்லை. இது நீதிமன்றத்தில் தீர்க்கும் பிரச்சினை அல்ல. மக்கள் மன்றத்தில் தீர்க்கப்பட வேண்டியது.
எனவே அணு உலைகளுக்கு எதிராக மட்டுமல்ல, போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற நாம் அனைவரும் போராட வேண்டும். இன்று நாம் போராட விட்டால் அனைத்து மக்கள் போராட்டங்களையும் ஒடுக்க அரசு இம்முறையை கையாளும். போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல். ஆகவே சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தியாகங்களை படித்துப் பெருமை கொள்ளும் நாம் சம காலத்தில் நடக்கும் போராட்டத்தை ஆதரிப்பது, பங்கேற்பது நமது கடமை.
போலீசின் பொய் வழக்குகளும், அரசின் அடக்கு முறைகளும், மக்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்க நாம் அனுமதிக்க கூடாது! அனைவரும் வாரீர்!
___________________________________
ஆபத்தான அணு உலை வேண்டாம் எனப்போராடுவது தேசத்துரோகமா?
அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெறு!
கருத்தரங்கம்
நாள்: 21.4.12 சனிக்கிழமை, நேரம்: காலை 10-00 முதல் 1-00 மணி வரை
இடம்: எம்.எச்.பிளாசா, கோல்டன் ஹால், மதுரை ரோடு, திருநெல்வேலி ஜங்சன், திருநெல்வேலி.
தலைமை: வழக்கறிஞர். சிவராச பூபதி, மாவட்டச் செயலாளர், ம.உ.பா.மையம், நாகர்கோவில்.
கருத்துரைகள்:
வழக்கறிஞர். பாலன், உயர் நீதிமன்றம், பெங்களூரு.
வழக்கறிஞர். சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.தோழர். காளியப்பன், இணைப்பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
பேராசிரியர். அமலநாதன். வழக்கறிஞர். புனித சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
வழக்கறிஞர். சே.வாஞ்சிநாதன் உயர்நீதிமன்றம், மதுரை. ம.உ.பா.மை, மாவட்ட து.செயலாளர்,
வழக்கறிஞர். தௌ.அப்துல் ஜப்பார் செ.கு.உறுப்பினர், வழக்கறிஞர் சங்கம், திருநெல்வேலி.
வழக்கறிஞர். இரா.சி.தங்கசாமி மேனாள் தலைவர், வழக்கறிஞர் சங்கம், திருநெல்வேலி.
வழக்கறிஞர். ஜிம் ராஜ் மில்டன் உயர்நீதிமன்றம், சென்னை ம.உ.பா.மை, மாவட்ட செயலாளர்,
நன்றியுரை: வழக்கறிஞர். சுப.ராமச்சந்திரன் மா.செயலாளர். ம.உ.பா.மை, தூத்துக்குடி.
பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கு சொந்த நாட்டு மக்களைக் காவு கொடுக்காதே!
ஆபத்தான அணு உலையை இழுத்து மூடு! அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெறு!
ராஜத்துரோகம் உள்ளிட்ட காலனியாதிக்க சட்டங்கள் அனைத்தையும் ரத்துசெய்!
அணு உலைக்கு எதிராகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை!
கதிர் வீச்சுக்கும் மரணத்துக்கும் எதிராகப் போராடுவது மக்களின் வாழ்வுரிமை!
21.4.12 அன்று மாலை 2-30 மணிக்கு இடிந்த கரை மத்தியில் போலீசின் பொய் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி? என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் விளக்கவுரை ஆற்ற உள்ளனர்.
_____________________________________________________
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கன்னியாகுமரி & தூத்துக்குடி மாவட்டங்கள்
தொடர்பு: 9443527613, 9486643116,
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- கூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!
- கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
- கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
- மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
- கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் மருதையன், சபா.நாவலன் நேர்காணல்!
- அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
- கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
- அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
- ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
- இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
- அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்!
- அடிமை ! அடியாள் !! அணுசக்தி !!!
- கூடங்குளம்: தடையை மீறி இடிந்தகரை நோக்கி HRPC வழக்கறிஞர்கள்!
- கூடங்குளம்: இடிந்தகரையில் HRPC வழக்கறிஞர்கள் – நள்ளிரவுக் கூட்டம்!
- இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !
- கூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு! படங்கள்!!
- கூடங்குளம்: கைதான மக்களுக்கு திருச்சி, கடலூர் சிறைகளில் நள்ளிரவு வரவேற்பு!
- கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!
- கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
- கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
- கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
- நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!
கண்டிப்பாக எதாவது செய்ய வேண்டும் ஆனால் எப்படி போராடி அரசாங்கத்தை பணிய வைக்க முடியும் என புரியவில்லை .அஹிம்சை முறையில் போராடினால் நீதி கிடைக்காது என தெரிந்த பின்னும் அதே வழியில் போராடினால் போகாத ஊருக்கு வழி கேட்பது போன்றது. என்ன செய்ய முடியும்,இந்த மக்கள் விரோத அரசை எதிர்த்து?
நாங்கள் எங்கள் மண்ணில் வாழப் போகிறோம் எனச் சொன்னால் தேசத் துரோகம் என அரசு சொல்கிறது. நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதல்வர் எங்கள் மண்ணில் துய்ப்பாராம் என்ன கொடுமை. எது தேசத்துரோகம்? எங்கள் வரிப்பணத்தில் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் செய்யும் மன்மோகன் சிங்கு. பிரதீபா பாட்டி{ல்} இவர்கள் தேசத் துரோகிகள் இல்லையா? கூத்து ஆடும் கூட்டத்திற்குக் கொள்கை இல்லை; கொடியும் இல்லை.
போராடுவதற்கான உரிமையே மற்ற உரிமைகளை பெறுவதற்கான திறவுகோல்-
ஜெயலலிதா நெட்ரு டில்லியில் கூடஙகுலம் போராட்டத்தை ஒழித்து தமிழ்னாட்டை அமைதிப்பூஙாகா ஆக்கி விட்டதாக பேசி இருக்கிரார்.கொடுஙகோல் அரசி.முதுகில் குத்தும் துரோகி.
Whether our struggle against koodankulam project succeeds or not we have to fight and raise awareness beyond tamilnadu and express solidarity with those people fighting against nuclear projects in other states.srinivasan sundaram
The President of India is a mere rubber stamp….even though he is Constitutional Head…Article 14 of the Constituion
gaurentees equal oppotunity to all….but a common man cannot question the unilateral decison of the Govt. at the centre,
as our PM and his cabinet collegues are trying to be in power by any means…hookor crok…The Secretaries are Political Heads and the decision once taken by the Govt. cannot be changed by us, unless until we undertake a different tactics and strategy.
Thanks to raise the question..
இவ்வளவு தூரம் கரடியா கத்துறுயே வினவு. அனைவரும் வருகன்னு போர்டு போட்டிருக்க. எத்தன பேர் வராங்கன்னு பாரு. தில் இருந்தா உண்மையிலே எத்தனை பேர் வந்தாங்க என்பதை நிகழ்ச்சிக்கு பிறகு சொல்லு. சும்மா அமோக வெற்றி, அபார வெற்றின்னெல்லாம் ரீல் சுத்த கூடாது. எவனுமே வரலப்பா…இந்த நாட்டு மக்களை திருத்தவே முடியாதுன்னு வெளிப்படையா எழுது.[ஒரு பயலும் வரமாட்டன் என்கிற தைரியத்துல இத எழுதறேன்.]
ஏன் கணக்கெடுத்து வந்தவங்களுக்கு ஏதாவது மெடல் தருவீங்களா மந்த்ரவாதீஈஈஈ.
கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம, சமூக விரோதம உம்மால இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறதே நீர் என்ன போலீசா?
அதற்கு போலீசாக இருக்க வேண்டியதில்லை மணிகண்டன். காக்கி அரை டவுசரை போடாமலே சிலர் ஆர்.எஸ்.எஸ் காரனை போல பேசுகிறார்கள் இல்லையா அதை போலத்தான் இதுவும். இத்தகையவர்களுக்கு தாம் தேசப்பற்றுடன் பேசுவதாக நினைப்பு வேறு இருக்கிறது ! எல்லாம் மறுகாலனியாக்க கொடுமை.
யப்பா…பின்றீங்களேடா! சிவப்பு காக்கி இந்த ரெண்டு கலர் தான் உங்களுக்கு தெரியுமா? ஊர் உருப்டா மாதிரிதான். இரண்டுமே குப்பைன்னு ஒருத்தனுக்கு சொந்த கருத்து இருக்க கூடாது, அப்படித்தானே? எத்தன காலம்தான் கிணத்துலேயே இருக்கப்போறீங்க?
உன் தலையில அக்னி-5 விழ.
ஆமாண்ணே நீங்க யோகியர்தான். ஆனா யாரும் நம்ப மாட்டுக்காங்கண்ணே….
போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள், மக்கள் விழிப்படையட்டும். நன்றி தோழர்கள்.
கூடங்குளம் தமிழகத்தின் நந்திகிராமம். இதை எப்படி ஆதிக்கம் செய்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அந்த நெருப்பை அணையவிடக்கூடாது. அது நம்மை விடுதலை செய்யும். போராட்டம் வெற்றிபெறவாழ்த்துக்கள்.
காவல் அனுமதி தந்ததா?கூட்டம்நடந்ததாஅ?
அவ்வளவு தான்பா ! தொறந்துட்டான் இதுக்கு மேல ஒண்ணும் செய்ய முடியாதென அடிமைகள், ஆளும் வர்க்க மனப்பான்மையின் அடிமை குரல்கள் எங்கும் ஒலிக்கிறட்கு. ஆனால் அவனுக்களே தன் சொந்த உடன் பிறப்புக்களோ , குடும்பத்தில் ஒருவருக்கோ சாகும்நிலை ஏற்பட்டு விட்டால் சொத்தை விற்றாவட்கு பெரிய பெரிய மருத்துவமனைகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வைத்தியம் செஇகின்றனர். அந்த உணர்வு தான் அவர்களின் பாசத்தைநிரூபிக்கும் செயல்.
அப்படிப்பட்ட மக்களின் மீதான பாசமிகு செயல் தான் இட்கு. ஆனால் இங்கு போராட்டத்தை கைவிடாட்கு இருப்பதேநமட்கு முக்கிய வேலை. தோல்விகள் ஆயிரம் இருந்தாலும் உண்மைக்கான குரல் உரத்து ஒலிக்கட்டும் ! வாழ்த்துக்கள் !
தமிழ் நாட்டில் இனி யாரும் மின்சாரம் உபயோகப்படுத்தகூடாது என்று சொல்லாமல் சொல்லுகிறீர்கள். முதலில் நீங்கள் அதனை செயல் படுத்துங்கள். கல்பாக்கம் மின்சாரத்தை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லி மக்களை தயார்படுத்துங்கள் பார்க்கலாம்!! அதேபோல் அனல் மின்சாரத்தால் காற்று மாசு படுகிறது என்று கூறப்படுகிறது. அந்த மின்சாரத்தையும் பயன் படுத்தாதீர்கள்!!! மக்கள் மின்சாரம் வேண்டாம் என்றா போராடுகிறார்கள். இல்லை!!! உங்களைப் போன்ற சிலர் மக்களை திசை திருப்புகிறீர்கள். மக்கள் யாரும் கூடங்குலத்திற்கு எதிராக போராடவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் உங்களால் தூண்டிவிடப்பட்டு கூட்டம் போடுகிரார்கள். மக்கள் நல்ல விழிப்புணர்ச்சியுடன் உள்ளார்கள்.