Monday, June 17, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!

கூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!

-

கூடங்குளம் குழந்தைகள் பெண்கள்

கூடங்குளம் போராட்டத்தின் இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்கிவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதியன்று கூட்டப்புளியில் கைது செய்யப்பட்ட 178 பேரை திருச்சி சிறையிலும், கூடங்குளத்தில் கைது செய்தவர்களை கடலூர் சிறையிலும் வைத்திருக்கும் செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

கூட்டப்புளி மக்கள் 178 பேரில் 106 பேர் ஆண்கள், 42 பெண்கள், 30 சிறுவர்கள். அவர்கள் மீது இ.பி.கோ 143, 188, 353, 294-B, 506(2), 7 1(A) ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்திருந்தது போலீசு. ஆபாசமாக திட்டுவது முதல் வன்முறையில் ஈடுபடும் முயற்சி வரை பல குற்றப் பிரிவுகள் இதில் அடக்கம்.

இவர்களைப் பிணையில் விடக்கோரி உடனே மனு தாக்கல் செய்தார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள். பிணை மனு இன்றைக்கு வள்ளியூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் தோழர் ராஜுவும் அவருடன் பத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களும் கூட்டப்புளி மக்கள் சார்பில் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியவுடனே தனது வக்கிரமான அழுகுணி ஆட்டத்தை போலீசு தொடங்கியது. சிறை வைக்கப்பட்டிருக்கும் 178 பேரும், “அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது (பிரிவு 121), அவ்வாறு போர் தொடுக்க சதி செய்வது (பிரிவு 121-A), போர் தொடுக்கும் நோக்கத்துடன் இரகசியமாக மறைந்திருப்பது (பிரிவு -123)” ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அவை குறித்து தீவிரமாகப் புலன் விசாரணை செய்யவேண்டியிருப்பதால், இவர்களைப் பிணையில் விடக்கூடாது என்றும் தீவிரமாக ஆட்சேபித்தது போலீசு தரப்பு.

இபிகோ 121 க்கான அதிகபட்ச தண்டனைதூக்கு.                     
இபிகோ
121A, 123 க்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை.

சிறையில் இருப்பவர்கள் யார்? சாதாரணமான எளிய மீனவ மக்கள். மீனவப் பெண்கள். சிறையில் வைக்கும் அளவுக்கு வயதில்லை என்பதால் திருச்சி சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் 30 பள்ளிச் சிறுவர்கள்.

இவர்கள் உண்மயிலேயே செய்த குற்றம் என்ன? கூடங்குளத்தில் போராட்டக்குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் ஊரில் உடனே சாலை மறியல் போராட்டம் செய்தார்கள். அவ்வளவுதான்.

அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை கேலி செய்த தோழர் ராஜு,  “போலீசு அதிகாரிதான் குற்றம் சாட்டுபவர், இந்த வழக்கில் சாட்சியமும் அவர்தான். எனவே கூட்டப்புளி மக்களை மட்டுமல்ல, நீதிமன்றத்தில் உள்ள எல்லா வழக்குரைஞர்களையும் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக அவர் கைது செய்ய முடியும்” என்று கூறி எள்ளி நகையாடினார். “இபிகோ 302 இல் கொலை வழக்கு போடுவதென்றால் பிணம் ஒன்றைக் காட்ட வேண்டும். பிணமே இல்லாமல் கொலை கேசு போடமுடியாது. அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக அன்றைக்கு சொல்லாத போலீசு இன்றைக்கு இவ்வாறு கூறுகிறதே, இடைப்பட்ட இந்த நாட்களில் இக்குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதையாவது, போலீசு நீதிமன்றத்திற்கு தந்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

வாதங்கள் எதற்கும் அரசு தரப்பு பதிலளிக்கவில்லை. வள்ளியூர் நீதிமன்ற வளாகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு போலீசு குவிக்கப்பட்டிருந்தது – அது மட்டும்தான் அரசு தரப்பின் வாதம். மக்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் சேர்த்து அரசு விடுத்த எச்சரிக்கைதான் அந்த போலீசு குவிப்பு.

நமது தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி, அரசு தரப்பு வாதத்தைப் பார்த்தார். பிறகு பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இனி நெல்லை அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம். அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம்… மனு, நோட்டீசு, வாய்தா.. . ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி ஜாமீன் வாங்கி விட்டால், சிறையை விட்டு வெளியே வர முடியாமல் அடுத்தது புதிதாக ஒரு வழக்கு வரும்.

இது நாள் வரை கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டி, ஜெயலலிதா ஏமாற்றிக் கொண்டிருக்க, போராடும் மக்கள் மீது சரம் சரமாகப் பல பொய் வழக்குகளை போலீசு பதிவு செய்து வைத்திருந்தது. அம்மாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்துக்கு “கூடங்குளம் போராட்டம்” என்ற காய் தேவைப்பட்ட நாள் வரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. இப்போது காய்கள் வெட்டுக் கொடுக்கப்படுகின்றன.

“யாரையும் நாங்கள் ஊருக்குள் புகுந்து கைது செய்யப்போவதில்லை” என்று அன்பும் கருணையும் ஒழுகப் பேசியிருக்கிறார் ஏடிஜிபி ஜார்ஜ். ஆனால் அவர்கள் போட்டிருக்கும் எப்.ஐ.ஆர்களில் அந்தக் கருணை இல்லை. வஞ்சகம்தான் இருக்கிறது.

போலீசு பதிவு செய்து வைத்திருக்கும் டஜன் கணக்கிலான முதல் தகவல் அறிக்கைகள் அனைத்திலும், முதலில் உதயகுமார், சிவசுப்பிரமணியம் என்று சில முன்னணியாளர்களின் பெயர் இருக்கிறது. அதன் பின்னர் மேற்படி நபர்களுடன் கண்டால் அடையாளம் சொல்லத்தக்க இரண்டாயிரம் பேரும் சேர்ந்து என்ற மங்கல வாக்கியம் எல்லா எப்.ஐ.ஆர்களிலும் இடம் பெற்றிருக்கிறது. அந்த இரண்டாயிரம் பேர் யார், யார் என்பதை போலீசு இன்றைய தனது தேவைக்கு ஏற்றபடி எழுதிக் கொள்ளும்.

ஆபாச வசவுக்காக கைது செய்யப்பட்ட 178 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டாகிவிட்டது. திருச்சி சிறையிலிருக்கும் அந்த 178 பேருக்குள்ளேயே 25 பேர் மீது மட்டும் தனியாக வேறு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

இவையெல்லாம் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று இச்சகம் பேசி கழுத்தறுத்த அன்புச் சகோதரி, “அந்த 2000 பேரில் ஒருத்தியாக உன் பெயரையும் சேர்த்துக் கொள்ளட்டுமா?” என்று இப்போது மீனவப் பெண்களை மிரட்டுகிறார்.

“எங்களையும் சேர்த்துக்கொள்” என்று பல்லாயிரம் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஒலிக்கச் செய்வோம்.

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. இந்தியாவின் நீதித்துறை மக்களுக்கு நீதி வழங்கத்தான் என்று யாரும் நம்புகிறீர்களா?

 2. TN will be silent ! for all the atrocities committed by the state .This is the wishfull thinking of the state and ADMK,DMK,Congress,BJP,CPM,CPI. What a clear cut unity ! People of Kudankulam on one side and the whole TN on the other side.

  If we are going to sit and watch this cat and mouse game , one fine day our back will burn and then all will end in a disaster.

  “He who passively accepts evil is as much involved in it as he who helps to perpetrate it. He who accepts evil without protesting against it is really cooperating with it.”
  – Martin Luther King, Jr.

 3. \\“எங்களையும் சேர்த்துக்கொள்” என்று பல்லாயிரம் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஒலிக்கச் செய்வோம்.\\

  சும்மா இப்படி பில்ட் அப் மட்டும் கொடுத்துக்கிட்டே இறு..யேன் நீ போய் கைதாகவேண்டியத்தான…

  8 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பின்னும் அந்த உதயகுமாரால இப்படித்தெம்பா பேச முடியுது..கொஞ்சம் பேச்சின் வேகத்தை மட்டும் குறைத்துக் கொண்டு,நிறுத்தி நிதானித்துப் பேசுகிறா இதே போல் உண்ணாவிரதம் இருக்கனும்னா இன்னும் நூறு நாள் கூட இருக்கலாம்.

  • 8 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பின்னும் அந்த உதயகுமாரால இப்படித்தெம்பா பேச முடியுது..

   அதானே இதுமாதிரி அன்னா அசாரேவால மட்டும்தானே முடியும். இல்லியா பீயா

   • க்ருப்பா…னான் அன்னா கசாரே ஆதரவாளரா..இவன் ஒரு ஸ்டேட் லெவெல் டகால்டி, அவனுக்குநீ ஒரு லோக்க்ல் டகால்ட்டி..

    • மான் கராத்தே புலியே, தேவைனா அன்னா பப்பு வேகலைனா கலட்டி விட்ருவீஙக, சரிபாஸ் குல்லா கோஸ்டி மோடி மாதிரி இருக்கல்லாமா,

  • Why u r always worried abt foreign hand ??? Do u really think we are a competion to US or other world countries… All this SUPER power in 2020, 4020 are just to cheat the public … If u still believe we are a competition to US just check the below link…

   http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_patents

   The current so called development in IT is not an actual growth…Its because we are CHEAPER not because we are BETTER… Even now our IT which is the backbone of OUR so called economic growth on 90% depend on US…PLS THINK… DO NOT get carried away by the famous slogan SUPER POWER in 2020 , 4040 etc.. Even iam an IT employee working for a TOP MNC.

   • Jenil.. Its not about becoming Super power or not. US wants to carry on with its 123 agreement with India and wants India to depend on US’s technology and nuclear power plant companies. Koodankulam plant is Russian built. Now even South Korea is offering to provide Power plant capability through South Korean companies. The successful operation of these power plants reduces the dependency of India on the U.S and gives it a bargaining power. It is more economics based decision rather than politically motivated one for the U.S.

    • The logic seems to be non applicable.. If US is supporting this protest will they not be aware that if this protest continues then even people from other parts of INDIA will also protest then it will make the business of NUCLEAR REACTOR itself will be doomed in INDIA that includes business done by US also..

     For example when INDIA was planning to buy fighter planes the proposal by US was rejected for that they didn’t FUND any NGO and made them to protest saying “WHY WE NEED WAR PLANES WHILE MILLIONS OF PEOPLE ARE STARVING” becos they know closing a business will harm them also equally… Also iof they want to get the business from RUSSIA and S KOREA they can do it diplomatically this kind of OPERATION is not needed for this matter.. AL the above are totally CONSPIRACY THEORIES…

     If u can say like this even i can make a story like this…

     US is afraid of GROWTH of young population in INDIA so to hinder the development of INDIA US sponsored RSS to destruct BABUR MASJID to create communal violence.. Now also they are giving money to BJP and ANNA HAZARE to distrupt the government of INDIA… WIll u believe the above also ?? Iam not a politician even iam able to fabricate a story like this ??? Will u believ this also ???

    • Also 123 agreement is already passed and even amendments were done in it in favour of INDIAby US senate .. AFter doing all this for us do u really believe that 123 agreement will not include their intrests in it?? What iam trying to say is the benefits wat US will enjoy from 123 is already included into the agreement itself …. Even if u go to S.Korea or RUSSIA we are still dependent on US for Nuclear reactor… Answer my simple question if we can get everying from RUSSIA and S.Korea then y did we singed 123 with US ???

  • Even there was protests in SINGHUR and NANDHIGRAM at that time y u ppl where silent ?? Where did that people got money for their protest ?? The simple answer is those ppl majority are HINDUS now the protesting people are mostly NON HINDUS.. SO Tamil Hindu will immediately come with FOREIGN HAND.. Pls think atleast once..

 4. //8 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பின்னும் அந்த உதயகுமாரால இப்படித்தெம்பா பேச முடியுது..கொஞ்சம் பேச்சின் வேகத்தை மட்டும் குறைத்துக் கொண்டு,நிறுத்தி நிதானித்துப் பேசுகிறா இதே போல் உண்ணாவிரதம் இருக்கனும்னா இன்னும் நூறு நாள் கூட இருக்கலாம்.//

  ‘மக்கள் என்ன வேணும்னாலும் போராடுங்க, அமைதி வழி, காந்தி வழி எல்லாம் பின்பற்றி உண்ணா விரதம் இருங்க. நாங்க எங்க எஜமானர்கள் சொல்வதை நிறைவேற்றி வைப்போம் என்பதுதான் ‘ மன்மோகன் சிங்+சோனியா காந்தி + ஜெயலலிதா+கருணாநிதி முதலான அதிகார வர்க்கத்தின் நிலைப்பாடு.

  நாளைக்கு நம்ம வீட்டு முற்றத்துக்கு பிரச்சனை வரும் போதுதான் நாம் விழித்துக் கொள்வோம். அது வரை தமது உரிமைகளுக்காக போராடுபவர்களை பார்த்து கிண்டல் செய்யத்தான் தோன்றும்.

  காந்திய வழி எவ்வளவு டுபாக்கூர் என்று கூடங்குளம் போராட்டத்தை பார்த்தால் தெளிவாக புரிகிறது. இதிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடம் மறக்க முடியாததாக இருக்கப் போகிறது.

  • தல என்ன போலி கம்யூனிஸ்ட் கட்சிய விட்டீங்க நம்ம மாதவராஜ் அண்ணன் ப்ளோக்ல பூசி மொழுகுராறு.

 5. பையா, உன்னோட தமிழ் இந்து முல்லைப் பெரியாறு பத்தி என்ன எழுதிருக்குன்னு கொஞ்சம் லிங்க் கொடேன். வேலிக்கு ஓணான் சாட்சி சொன்ன மாதிரி வெளிநாட்டில் பணம் வாங்கி நாட்டை நாசமாக்க சதி செய்யும் ஆர் எஸ் எஸ் பொறுக்கிகள் சொல்வது சாக்கடை பன்னி கத்துவதுக்கு ஒப்பானது.

  • ரகசியத்த வெளியே சொல்லாதொனுநிக்கு எத்தினி தடவ சொல்ரிக்க்கேன். இல்லியா பீயா

 6. புழுத்துப்போன அரிசியத்தான்
  ரேஷனிலே வீசினாலும்
  பொங்கித் திங்கப் பழகிக்க.
  புதுசு ஒண்ணும் இல்லையே?!
  தெரு லைட்டு இல்லைன்னா
  தடவி நடக்கப் பழகிக்க.
  புதுசு ஒண்ணும் இல்லையே?!
  குடிக்கத் தண்ணி இல்லைன்னா
  கொஞ்ச நாளு பொருத்துக்க.
  புதுசு ஒண்ணும் இல்லையே?!
  கொசுத்தொல்லை இருந்தாக்கா
  கொசு அடிக்கக் கத்துக்க.
  புதுசு ஒண்ணும் இல்லையே?!
  http://puthiyapaaamaran.blogspot.in/2012/03/blog-post_27.html

  • மின்சாரம் இல்லையே
   படிக்கத்தான் முடியலே!
   கூடன்குளத்தை திறக்கக்கூடாதம்!
   அய்யோபாவம் அரசியல் வாதிகள்!
   கொசுத்தொல்லையில் குழந்தைகள்
   அலும்குரல் கேட்கிறதே!
   இருட்டு நேரத்தில் தாய்ப்பாலை
   எப்படி ஊட்டுவீன்!
   என் தாய் குலமே தந்தகுலேமே
   எங்கள் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்.
   மின் ஒளி தாருங்கள்
   மக்களோடு குழந்தைகளையும்
   காப்பாற்றுங்கள்!!!

 7. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கும் போது அமைதியாய் இருந்த மக்கள் அதை செயல்படுத்தும் போது மட்டும் எதிர்ப்பது ஏன்? தொடங்குவதற்கு முன்பே மக்கள் அதை எதிர்த்து போராட வேண்டும் அதை விட்டு எல்லாம் முடிந்த பின் இப்போது போராட்டம் செய்து என்ன பயன் வரப்போகிறது? இது மக்களின் அறியாமையை உணர்த்துகிறது.அணுமின் நிலையம் தொடங்க தெரிந்த அரசுக்கு அதை செயல்படுத்த தெரியாமலா போகும்?

  • ஏன் வெள்ளைக்காரன் வந்தவுடனே போராடாம 300 வருசம் கழிச்சி போராடி “விடுதல” வாங்குனீங்கனுநல்ல கேளுங்க மேடம்.

   • மேடம் போபாலு போபாலுனு ஒரு ஊர்ல என்ன நடந்திச்சினு தெரியுமா? ஆன்டர்சனுக்கும் ரா(ச்)சீ காந்திக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? 20,000 மக்கள் சாவு, நிவாரணம் இன்னும் கிடக்கல இப்படி ஏதாவது காதுல விழ கேட்ருக்கீங்கலா?
    அதுசரி அதுவாநம்ம வேல?

 8. //கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கும் போது அமைதியாய் இருந்த மக்கள் அதை செயல்படுத்தும் போது மட்டும் எதிர்ப்பது ஏன்? தொடங்குவதற்கு முன்பே மக்கள் அதை எதிர்த்து போராட வேண்டும் அதை விட்டு எல்லாம் முடிந்த பின் இப்போது போராட்டம் செய்து என்ன பயன் வரப்போகிறது? இது மக்களின் அறியாமையை உணர்த்துகிறது.அணுமின் நிலையம் தொடங்க தெரிந்த அரசுக்கு அதை செயல்படுத்த தெரியாமலா போகும்?//

  கேள்வி – தயவு செய்து இதை சிந்தித்து பார்க்கவும் . அணு உலை பாதுகாப்பானதா ? இந்தியாவால் பேரபாயம் விளைவிற்கும் அணு உலைகளை ஒரு தவறும் நிகழாமல் நடத்த இயலுமா ? தன் வாழ்வுரிமைக்காக போராடும் இந்த சாதாரண மக்கள் மீது இது போன்ற பொய் வழக்குகளை அரசாங்கம் போடுவது நியாயமா ?

  • ஏன் வெள்ளைக்காரன் வந்தவுடனே போராடாம 300 வருசம் கழிச்சி போராடி “விடுதல” வாங்குனீங்கனுநல்ல கேளுங்க ச்ச்ச்சார்ர்ர்

 9. கூடங்குளம் மக்களுக்கு அல்குயிதா மற்றும் பாகிச்தான் ஆப்கானிச்தான் தீவிரவாதிகள் தொடர்பு ! இதை பற்றி விசாரிக்க 15 பேர் கொண்ட புலனாஇவுக்குழு அமைக்கப் படட்டுள்ளது. இப்படி ஒரு செய்தி எப்போ வரப்போகுட்கு !

  • மரிம் உத்து கான், நீய்ங்கோ ஆப்கானிச்தான்ல்லருந்தூதானே வர்தூ..? கூடங்குள்துட்கு தானே போகுதூ..?? புடீ..புடீ..

 10. குழந்தைகள் என்று கூட பாராமல் முப்பது சிறுவர்களும் தீவிரவாதிதான் என்று கைது செய்து. அம்மா அரசு தன் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி நாங்கள் நேர்மையாகத்தான் செயல்படுகிறோம் என்று நிருபிக்கவா?

 11. தமிழ் மக்களுக்கு கல்யாண் ஜுவலர்ஷ் நடத்தும் புரட்சி போராட்டம் தான் சரி.

 12. இங்கே சிறுவர்களைக் கைது செய்தது பெரிய விஷயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்படுவோம் எனத் தெரிந்தே மக்கள், தானாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி இருக்கும்போது சிறுவர்களை ஏன் போராட்டத்தில் ஈடுப்படுத்தவேண்டும்.

  முன்பு ஒருமுறை இதே வினவில் பெண்களுடன் சேர்த்து குழந்தைகள் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானது (ஜெயாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என நினைக்கிறேன்). கைது செய்ய வாய்ப்புள்ள ஒரு போராட்டத்தில் ஈடுபடும்போது ஏன் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அப்படியே கைது செய்யும் போது குழந்தைகளையும் ரோட்டில் அனாதையாக விட்டு செல்லவேண்டும் என கூறுகிறிர்களா?

  போராடுவது தவறில்லை. ஆனால் கைது செய்யப்பட்டப் பின் பெண்கள், குழந்தைகள் என அனுதாபம் தேடுவது ஏன்?

  • அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை பற்றியும் கருத்துச் சொல்லுங்கள்.

 13. //கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கும் போது அமைதியாய் இருந்த மக்கள் அதை செயல்படுத்தும் போது மட்டும் எதிர்ப்பது ஏன்?//

  காலங்காலமாக ஓட்டு போட்டுவிட்டு அடுத்தடுத்த 5 வருசத்திற்கு எருமை மதிரி இருந்து பழகிவிட்ட பழக்கதோசம்தான் இப்படியெல்லாம் கேட்க வைக்குது. புகுஷிமா விபத்திற்குப் பிறகுதான் மக்களுக்கு உணர்வு வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதில் உங்களுக்கு என்ன குடைச்சலாக இருக்கிறது.

 14. கூடங்குளம் அணுமின நமது நாட்டுக்கு மிகவும் முக்கிய தேவையாகும். மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கையை நினித்துப்பார்க்க முடியாது. உலகம் முழுவதும் ஏராளமான அணு உலைகள் உள்ளன. தற்போது உயர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு வருகிறது. இதற்க்கு ஏன் இந்த எதிப்பு. இதெல்லாம் அமெரிக்க டாலர் செய்யும் வேலை. கல்பாக்கம் சென்று எதிர்ப்பு தெரிவிக்கலாமே? ஏன் செய்யவில்லை. மற்றவர்களை உசிப்பிவிட்டு குளிர் காய்வது இவர்களின் வேலை. அங்குள்ள மக்களுக்கு நமது நாட்டு விஞ்ஞானி கலைக்கட்டிலும் என்ன தெரியும். மூன்று வேலை இலவசமாக கொடுக்கப்படும் சோறுதான் தெரியும். அந்த பகுதியில் சென்று மின் தேவையைப்ப்ற்றி கேட்டால் ‘தேவை’ என்று அலுத்த்ம்திருத்த்மாக சொல்லுவார்கள். ஒரு சில பாதிரிகள் அச்சமூட்டும் வகையுள் பயமொருத்தி வைத்துள்ளார்கள். 99 சதவீதம் ஆதரவு.மிதித்தான் ஓரளவு பயங்கலந்த அதரவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க