privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்மீனவர் சகாயம்: அணு உலைக்கு இரண்டாவது இரத்தப்பலி!

மீனவர் சகாயம்: அணு உலைக்கு இரண்டாவது இரத்தப்பலி!

-

கடற்படை-விமானம்மீனவர் சகாயம் இறந்துவிட்டார். இன்று பிற்பகலில் நாகர்கோயில் ஜெயசேகர் மருத்துவமனையின் மருத்துவர்கள் இதனை அறிவித்து விட்டனர்.

தோழர் முகுந்தனின் பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டிருந்ததைப் போல, இது கூடங்குளம் அணு உலைக்கு அரசு கொடுத்திருக்கும் இரண்டாவது இரத்தப்பலி.

இன்னும் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அதனைப் பதிவு செய்தால்தான் உடலை பரிசோதனைக்கு அனுப்ப இயலும். ஆனால் இந்தக் கொலைக்கான பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வது எப்படி என்பதுதான் அரசின் அணுகுமுறையாகத் தெரிகிறது.

லாக் அப்பில் அடித்துக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை மூடும் திறமை வாய்ந்த போலீசுக்கு, சகாயத்தின் மனைவி கொடுத்துள்ள புகாரைக் கையாள்வதொன்றும் பெரிய விசயமல்ல. இருந்தாலும் எந்த விதத்திலும் இது பற்றி தங்களுக்கு தெரியாது என்பது போல நடிக்கவே போலீசு முயற்சிக்கிறது. ஒரு போராட்டம் இல்லாமல் இதற்கு நீதி கிடைக்கப் போவதில்லை.

இனி, தமிழக மீனவர்களைத் தாக்கும் பணி சிங்கள இராணுவத்துக்கு இருக்காது. அணு உலைப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்தப் பணியை இந்தியக் கடலோரக் காவற்படையே எடுத்துக் கொள்ளும் என்பதையே சகாயத்தின் மரணம் காட்டுகிறது.

இனி தென் தமிழகத்தின் கடற்பரப்பு முழுவதும் கடற்படையின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். தமிழக மீனவர்களின் கடலாடும் உரிமை சிறிது சிறிதாகப் பறிக்கப்பட்டுவிடும். மீனவர்கள் அனைவரும் அணு உலையைத் தாக்கவரும் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுவார்கள். கூடங்குளம் பகுதியைச் சுற்றி உருவாக்கப்படும் போலீசு சாவடிகள் மக்களை நிரந்தரக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும்.

இது அணு உலையால் உயிர் போவது குறித்த பிரச்சினை அல்ல, அதற்கு முன்னரே, மக்களின் உயிர் வாழும் உரிமை பறிபோவது குறித்த பிரச்சினை.

மூன்றடுக்கு முப்பதடுக்கு பாதுகாப்பெல்லாம் இதற்கு உதவாது. மக்களின் போராட்டம் ஒன்றுதான் உரிமைக்கான பாதுகாப்பு.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. அன்புள்ள வினவு:

  இந்திய ராணுவத்தில் பல விதமான நவீன ஆயதங்களை சோதிக்கும் பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் ஒன்று கண்ணில் புலப்பட ஆயுதங்கள் மூலம் தாக்குதல். இஸ்ரேலிகள் இத்தகைய பல ஆயுதங்களை பாலஸ்தீனம் லெபனான் உள்ளிட்ட நாடுகளில் பிரயோகித்திருக்கின்றனர்.

  இங்கிலாந்து போன்ற நாடுகளில் பதினெட்டு வயதுக்கு குறைந்த விடலைகளின் காலித்தனங்களை கட்டுப்படுத்த என்று கூறி இத்தகைய ஆயதங்கள் சட்டப்படியாக விற்கப் படுகின்றன. அந்த கருவிகள் எழுப்பும் ஒலி இளையோருக்கு மட்டுமே கேட்கும். ஐந்து நிமிடங்களுக்கு மேல் கேட்கும் பட்சத்தில் அந்த இளையோர் நிலை குலைந்து விழுந்து விடுவார்கள்.

  இதனை ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி தனியார் தமது இல்லங்களில் பொருத்திக் கொள்ள முடியும். கம்பெனிகள் விற்கவும் முடியும். இதே அடிப்படையில் ஒலி மற்றும் ஒளியால் நிலை குலையச் செய்யும் ஒலி ஆயதங்களை தாழப் பறக்கும் விமானங்கள் மூலம் எழுப்பிப் போராட்டங்களை ஒடுக்க முடியும். இது இந்திய ராணுவத்தின் யுக்திகலில் இதுவும் ஒன்று. இஸ்ரேளிகளுடன் செய்து கொண்ட ஆயுத வான்களில் இதுவும் ஒன்று. ஒரு சாதாரண டோர்னியர் விமானத்தின் சத்தம் காதுகளை கழிக்காது. மூளைச செயல் இழப்பை உண்டு பண்ணாது.

  ஆனால் இத்தகைய சிறிய விமானங்களைப பயன்படுத்தி ஒலித் தாக்குதல் நடத்த முடியும். உங்கள் செய்தி உண்மை என்ற பட்சத்தில் இது ராணுவத் தாக்குதல் என யூகிக்கலாம்.

  குமரன்

  • Many will ask how can airforce be responsible for death of a person standing below when there was no physical injury / gun shot

   Blast injuries can cause hidden brain damage and potential neurological consequences

   High-order explosives produce a supersonic overpressure shock wave, while low order explosives deflagrate (subsonic combustion) and do not produce an overpressure wave.

   A blast wave generated by an explosion starts with a single pulse of increased air pressure, lasting a few milliseconds. The negative pressure (suction) of the blast wave follows immediately after the positive wave.

   Displacement of air by the explosion creates a blast wind that can throw victims against solid objects.

   http://en.wikipedia.org/wiki/Blast_injury
   http://en.wikipedia.org/wiki/Sonic_weapon

   • தாழப்பறந்த விமான மிரட்டல் காரணமாக மீனவர் சகாயம் மட்டும் ஏன் மரணமடைய வேண்டும்?, மற்றவர்கள் ஏன் மரிக்கவில்லை என்று சில அதிமேதாவிகள் யோசிக்கலாம். முந்தைய கட்டுரையிலேயே இந்த விமானம் தாழப்பறந்த போது பல முதியவர்களும், சிறுவர்களும் நிலை தடுமாறி மயங்கி விழுந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறோம். அதில் சகாயம் ஒருவர். அவர் அதிகமாய் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் அவர் கடல்போராட்டத் தடுப்பிற்காக பாறைகளில் ஏறி கயிறு கட்டிக் கொண்டிருந்தார். விமானம் பறந்து போன விநாடியில்தான் அவர் மயங்கி விழுந்தார். அதற்கு முன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர் விமானம் கடந்த பிறகு மயங்க வேண்டிய அவசியம் என்ன? இடி இடித்து பூமியில் பாயும் போது கூட ஒரு வட்டாரத்தில் ஓரிருவர் இறக்கும் போது மற்றவர் ஏன் இறக்கவில்லை என்று கேட்க முடியாது. அது போலத்தான் இதுவும். மேலும் சகாயத்தின் உடலுக்கு முறையான பிரதேசப் பரிசோதனை செய்யும் போது இந்த உண்மைகள் வெளிவரும் என்பதால் இந்தநிமிடம் வரை போலீசு அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நாகர்கோவில் ம.உ.பா.மை வழக்கறிஞர்கள் அதற்காக போராடி வருகிறார்கள்.

   • yeah vallavan you are right. India bought this sonic weapon(Long Range Acoustic Device) from a US firm for anti piracy operations. It was to be fixed in the Indian Navy ships for paralysing pirate boats. But the beauty is that the device is portable and it can be mounted on any military vehicle. Its a high possibility but the problem is, its hard to prove India navy used such systems. US uses this for crowd control in Iraq. If we can get a complete ground report we can ascertain that.

 2. கூடங்குளம் இன்னொரு முல்லைதீவாக மாறிவிட்டது என்பதற்கு மீனவர் சகாயம் அவர்களின் படுகொலை ஒரு சான்றாக நம் முன் நிற்கிறது…
  ஈழத்தில் கோட்டைவிட்டது போன்று நாம் இன்று தமிழகத்தையும் கொடுத்துக்கொண்டு உள்ளோம்.அறவழி என்பது இனி வேலைக்குஆகாது.சீமான், வைகோ போன்ற பிழைபுவாதிகளிடம் இருந்து விலகி புரட்சிகர அமைப்புகளுடன் இணைத்து போராடினால் தான் இதற்கு விடிவு பிறக்கும்.

  • many of NAAM(NATIONAL ALLIANCE OF ANTINUCLEAR MOVEMENT) members are PhD OR DOING PhD e.g SOWMYA DUTTA(SCIENTISTS OF DST),SUVRAT RAJU(PHYSICSIST completed his PhD in howard university.you Can also check lokayat.org.in/.

 3. இன்னொரு விக்கெட் விழுந்தாச்சு…. இந்திய அரசாங்கம் என்ன ஆனாலும் அங்கே அனூஉலையை தொடங்கனும்… முதல்ல பேடி உதயகுமாரன புடிச்சி, கைய, கால உடச்சி உள்ள போட்டா எல்லாம் சரியாயிடும்…

 4. நீ எப்படிப்பட்ட மேதாவின்னு தெரியுது.

  ” they are all done Phd?”

  அரைகுறையா இங்கிலிஷ தெரிஞ்சு வச்சுகிட்டு எழுதுற உனக்கு இவ்வளவு லொள்ளு இருக்கலாமா

 5. இன்னும் நாங்க பவுலிங் ஆரம்பிக்கல.அதுனால அந்த பக்கம் விக்கட் விழல.அது ஞாபகம் இருக்கட்டும்.

  முதல்ல இந்த போலி தேச பக்த மண்ணு மோகன்,அத்வானி ல ஆரம்பிச்சு அந்த கேடிகளுக்கு வால் பிடிக்கும் இந்தியன்களை பூரா புடிச்சி, கைய, கால உடைச்சி தமிழ்நாட்ட உட்டு துரத்தி அடிச்சா எல்லாம் சரியாயிடும்…

 6. இந்திய மற்றும் தமிழக அரசுகளால் கொல்லப்பட்ட கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளி சகாயம் அவர்கள்…

  நிம்மதியாக செல்லுங்கள் தோழரே….

  உங்கள் பணி முடிக்க நாங்கள் இருக்கிறோம்..

 7. முகநூலில் அருள் எழிலன் பக்கத்தில் இட்ட பின்னூட்டம்.
  https://www.facebook.com/arayanmagan

  சி.பி.எம் கும்பல் எவ்வளவு கேடுகெட்ட மக்கள் விரோத பாசிச கும்பல் என்பதை சிங்கூர், நந்திகிராம் போராட்டங்களை ஒடுக்கிய போது இந்த நாடே கண்டது.

  கூடங்குளம் போராட்டத்தை ஆரம்பத்தில் மூர்க்கமாகவும் தற்போது மென்மையாகவும் எதிர்த்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள முற்போக்கு சக்திகள் மத்தியில் சி.பி.எம் கும்பல் முன்னெப்போதையும் விட மோசமான முறையில் அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

  சொந்தக்கட்சியாயினும் அதன் மக்கள் விரோத போக்கை விமர்சித்து சரிசெய்யாமல் ஊக்குவித்து நியாயப்படுத்துவதன் மூலம் இவர்கள் எல்லோரும் கட்சிக்கு எத்தகைய நன்மையை செய்கிறார்கள் ? தவறான வழியில் செல்லும் கட்சியை சரியான வழிக்கு வரவிடாமல் மேலும் மோசமான மக்கள் விரோதக் கட்சியாகவும், மேலும் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட கட்சியாகவும் மாற்றுகின்ற வேலையை தான் ஆதவன், கவின்மலர் போன்றவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

  கூடங்குளம் அணு உலையை மூடச்சொல்லி போராட முடியாது என்பது தான் சி.பி.எம் மின் நிலைப்பாடு. தற்போது மக்கள் போராட்டம் ஒரு எழுச்சியாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில், பாசிச ஜெயா அரசு மக்கள் போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கி வருகின்ற நிலையில் சி.பி.எம் உழைக்கும் மக்களின் பக்கம் நிற்க முடியாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு அம்பலப்பட்டுப்போயிருக்கிறது. இந்நிலையில் தனது பழைய நிலைப்பாட்டை அப்படியே பேசமுடியாது என்பதால் அதை கொஞ்சம் டிங்கரிங் செய்து ஆனால் அதே கருத்தை அழுத்தமாக வலியுறுத்தி சில புதிய வார்த்தைகளை போட்டு பிரகாஷ் காரத் தீக்கதிரில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

  அந்தக் கட்டுரையை வாசித்ததுமே காரத் மூஞ்சியில் காறித்துப்ப வேண்டும் போலிருக்கிறது. ஒரு முட்டாள் கூட சி.பி.எம்மின் இந்த அயோக்கியத்தனத்தை, வார்த்தை ஜாலங்கங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதை அறிந்துகொள்ள முடியும். ஆனால் அனைத்தையும் கட்டுடைக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் அந்தக் கட்டுரையில் மயங்கிவிழுகிறார்கள் !

  தமிழகத்தில் அறிவுஜீவி என்று அறியப்படும் அ.மார்க்ஸ் பிரகாஷ் காரத்தின் அந்த கட்டுரைக்கு ஒரு பொழிப்புரையே எழுதியுள்ளார். அணு உலை : சி.பி.எம் நிலைபாட்டில் மாற்றம் ? இது தான் கட்டுரைக்கு தலைப்பு. இந்த பொழிப்புரையை படிப்பதற்கு பதிலாக காறித்துப்ப வேண்டிய காரத் கட்டுரையையே பத்து தடவை படிச்சிறலாம்.

  சி.பி.எம் முக்கு அப்படி ஒரு ஜிங்குஜா.

  சொம்புன்னா சொம்பு அப்படி ஒரு சொம்பு.

  அ.மார்க்ஸ் கட்டுரை
  https://www.facebook.com/notes/marx-anthonisamy/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/384165161656214

 8. பச்சையான சந்தர்ப்பவாதிகளை
  (CPM) வைத்து தான்
  பாசிசம் அரகேறுகின்றது, என்று
  தோழர் டிமிடரோவ்
  சொன்னார்.

 9. கூடங்கூலம்/ இடிந்தகரை மக்கள் என்ன பாம்புகளா? பிழைப்புவாத ஓட்டு கட்சிகளின் மகுடிக்கு தலையாட்ட.கடலின் மீது சவாரி / சவால் செய்யும் வீரர்கள்.அவர்களை போர் வீரர்களாக மாற்றி இருக்கிறது சகாயத்தின் மரணம்.

 10. செர்ணொபில் போனற ஒன்றுநடைபெற்ற பின்புதான் எல்லொருக்கும் விழிப்பு வரும் போலும! கண் கெட்ட பின்புதான் சூரியநமஸ்காரம்! அவர்கள் கிடக்கட்டும்.

  நாம் மக்களுடன் இணைந்து போராட்டத்தை எடுத்துச் செல்லுவோம்.அவர்களுக்கு பின்தொடரவேண்டிய நிலை ஏற்படும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க