Thursday, April 15, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு! விவசாயிக்கு ஆதாயமா?

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு! விவசாயிக்கு ஆதாயமா?

-

சில்லறை-வணிகம்சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பவர்களும், அமல்படுத்தும் அரசும் பல பொய்களை நம்பும் விதத்தில் திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்கின்றனர். இது குறித்து இன்றைய (24.9.2012) தீக்கதிரில் “சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு மத்திய அரசின் கோயபல்ஸ் விளம்பரமும் – உண்மையும்” என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது.

அதில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டின் வருகை குறித்த அரசின் பிரச்சாரங்களுக்கான பதில்கள் விரிவாக தரப்பட்டிருக்கிறது. அதில் முதன்மையானது வால்மார்ட்டால் விவசாயிகளுக்கு நன்மை என்ற கருத்து. ஆனால் வால்மார்ட்டின் வருகை இந்தியாவில் இருக்கும் சிறு விவசாயிகளை ஒழித்து விட்டு பண்ணை விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத்தான் கொண்டு வரும். மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஒரு விவசாயிக்கு சில பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கும் போது இந்தியாவில் அது ஓரிரு ஏக்கராக இருக்கிறது. பண்ணை விவசாயம் வந்தால் பல கோடி சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழப்பார்கள்.

அடுத்து விவசாயிகளின் பொருளை கொள்முதல் செய்து குளிர்பதன கிட்டங்கியில் வைத்து விற்பார்கள் என்பெதல்லாம் ஏட்டுச்சுரக்காய் மட்டுமே. நடைமுறையில் சாத்தியமே இல்லை. மேலும் உள்ளூர் அளவில் நுகரப்படும் விலை குறைந்த சந்தையை வால்மார்ட் அழித்து விடும் என்பதும் முக்கியமானது. இதனால் நகர்ப்புறத்து விலைகளுக்கு இணையாக கிராமங்களிலும் விலைவாசி உயரும்.

வால்மார்ட்டின் வருகைக்குப் பிறகு பல நாடுகளில் சில்லறை வணிகத்தை நம்பி வாழும் மக்கள் தூக்கி எறியப்பட்ட கதை எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது வேலையின்மையை அதிகரிக்கவே செய்யும். வணிகர்களை மட்டுமல்ல, சிறு, நடுத்தர தொழில்களையும் வால்மார்ட்டின் வருகை ஒழித்து விடும். சீனாவிலிருந்து மலிவு விலையில் பல்வேறு பொருட்கள் வால்மார்ட்டால் இறக்குமதி செய்யப்படும் போது இந்தியாவின் தொழில்கள் பல காணாமல் போகும். இந்த வேலையிழப்பு தனி.

இவை குறித்தும், இன்னும் பல உண்மகளை ஆதாரங்களோடு தீக்கதிர் கட்டுரை விரிவாக பேசுகிறது. படித்துப் பாருங்கள். அதே நேரம் போலிக் கம்யூனிஸ்டுகள் சீனாவை இன்னமும் ஒரு கம்யூனிச நாடாக கருதுவதால் இந்தக் கட்டுரை சீனாவில் வால்மார்ட்டின் வருகை பிரச்சினை எதையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது. அமெரிக்க வால்மார்ட்டின் விற்பனை என்பது சீனத் தயாரிப்பினால்தான் சாத்தியமாகிறது என்பதற்கேற்ப சீன மக்கள் சுரண்டப்படுகின்றனர்.

மேலும் அமெரிக்கா அதிகம் தின்றால்தான் சீனாவின் பொருளாதாரம் இழுத்துச் செல்லப்படும். சீனாவின் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமென்றாலும் அந்த பலனும் அமெரிக்க கடன்பத்திரங்களின் மேல்தான் முடக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தின்பதைக் குறைத்தாலோ, இல்லை டாலரின் மதிப்பு குறைந்தாலோ சீனாவின் பொருளாதாரம் பிரச்சினைக்குள்ளாகும். இதை இந்தக்கட்டுரை கணக்கில் கொள்ளவில்லை. மற்றபடி இந்தக்கட்டுரை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை தர்க்க பூர்வமாக முறியடிக்கிறது.

படியுங்கள்:

 1. அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பண்ணைகளில் ஒரு லிட்டர் பாலை ரூ. 77.38 பைசாவிற்கு கொள்முதல் செய் கிறது. அதனை கடைகளில் ரூ.176.12 பைசாவிற்கு விற்கிறது. அதே நேரத்தில் தற்போது தமிழகத்தில் பால் பண் ணையில் ஒரு லிட்டர் ரூ.22 கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் மூலம் சில்லரை விற்பனைக்கு ரூ.32 என விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த முறை நுகர் வோருக்கு சிறந்தது? வால்மார்ட்டா? ஆவினா? பன்னாட்டு பெரும் சில்லரை வர்த்தக நிறுவனங்களில் குறைந்த விலை என்பது “அரசனை நம்பி புருஷனை இழந்த கதையாகத்தான் ” இருக்கும். [தீக்கதீர்-நன்றி ]
  இதை நம்ம ஊரில் படிக்காத மக்கள் கூட எளிமையாக புரிந்துகொள்வார்கள். ஆனால்
  அமெரிக்காவில் படித்த இவர்கள் அங்கேயே தன் மூலையை விட்டுபுட்டு இங்கே முண்டங்களாக வந்து தண்டத்துக்கு சட்டம் போடுகிரார்கள்.இனி கூடங்கூலம்/இடிந்தகரை மீனவர்களை போல் விவசாயிகளும் , வியபாரிகளும் திரண்டு எழ வேண்டியதுதான்.இல்லையென்ரால் தோல் இருக்க சுழையை முழுங்கி விடுவார்கள்.

 2. ஒத்த கருத்துள்ள வினவின் கட்டுரைகள் தீக்கதிரில் சுட்டப்படும் என நம்புவோம்.நல்ல ஆரம்பம்

 3. நேற்றைய செய்தித்தாளில் புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு புதிய பொருளாதார முன்னேற்றம் பற்றிய ஒரு கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி கபாடியாவும், 29ம் தேதி முதல் தலைமை நீதிபதியாகப்போகிற அல்தாமஸ் கபீர் ஆகிய இருவரும் பங்கு பெறுகின்றனர். அவர்களை வைத்துக் கொண்டே மன்மோகன் சிங் அந்நிய முதலீடுகளைப்பற்றி புகழ்ந்து பேசுகிறார். தலைமை உரையாற்றுகிற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் பொருளாதார முன்னேற்றத்தின் அவசியம் குறித்துப் பேசுகிறார். அதே செய்தித்தாளின் மற்றொரு பக்கத்தில் FDI ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்தியும் வெளியாகி உள்ளது,

  மன்மோகன்சிங்- சவால்களை சமாளிக்கும் வகையில் வணிக மற்றும் நிறுவனச் சட்டங்களை மாற்றியமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது… சர்வதேச தரத்தில் நிறுவன சட்டங்கள் அைமந்திருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கிறது….சட்டமியற்றும் பிரிவு நிர்வாகம், நீதித்துறை ஆகிய அரசின் 3 பிரிவுகளுக்கு இடையிலான சமன்பாடுகளில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படலாம். ஆனால் அவை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளன (அய்யா கபாடியா, அல்தாமஸ் கபீர் கவனிச்சுக்குங்க – உங்களைத்தான் நல்லவருன்னு சொல்லியிருக்கேன், 2ஜி, நிலக்கரி, அந்நிய முதலீடு ன்னு வழக்குகள் பரபரப்பா நடத்தலாம் – ஆனால் கடைசியா தீர்ப்பு நம்ம பேசினபடி இருக்கணும் சரியா?)

  கபாடியா- இழப்பு உண்மையானது, லாபம் ஊக அடிப்படையிலானது…நம்மில் எத்தனை பேருக்கு பொருள்கள் மதிப்பிடுவது தொடர்பாக அடிப்படை விசயங்கள் தெரியும்? இப்போது இது தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது…பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடு மிக அவசியமானது. இந்தியாவின் மக்கள் தொகையில் 30 சதவீதம் இளைஞர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். அந்த அடிப்படையில் பிரதமர் நிகழ்த்திய உரையில் இளம் தலைமுறையினரின் எதிர்கால நலனை கருதி எடுக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் என குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. (என்ன சிங் தலீவா, உன்னோட சினா தானாவும், மான்டேக்சிங் அலுவாலியாவையும் மிஞ்சும் விதத்தில் இருந்ததா என் பேச்சு)

  (மேற்படி பேச்சுக்கள் ஆதாரம் / தினமணி, தி இந்து / (அடைப்புக் குறிக்குள் இருப்பது சுவாரசியத்திற்காக நமது நக்கல்)

  ஆக அரசியலும்- நீதித்துறையும் இணைந்து இந்தியாவை விற்க ரெடி / எல்லா வழக்குகளின் விசாரணையும் பொறி பறக்கும் விவாதங்களுடன் நடந்து, கடைசியில் அரசின் கொள்கை முடிவு என தீர்ப்பாகும் – வாழ்க ஜனநாயகம், வெல்க இந்தியா விற்பனை???

 4. initially it will be beneficial to all consumers (reduced rate) farmers(increased price). in long run, most small vendors will vanish. Reverse will happen.

  Now own commission agents & merchants are swallowing money. In this, outside agent will swallow more with the help of corporate. DOES ANY SHOP DISPLAY PURCHASE & SELLING PRICE?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க