privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

வலியில்லா ஊசி!

-

ஊசின்றைய நவீன அறிவியியல் உலகில் கூட ஏராளமான உடல்நல குறைபாடுகளுக்கும், நோய்களுக்கும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் பலவற்றுக்கு நோய்க்கான காரணம் கூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மருத்துவத்துறையில் ’புதிய சாதனையாக’ ஊசி போடும்போது வலி இல்லாமல் இருக்க ‘வலி இல்லா ஊசி’ தென் கொரிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தோல் சிகிச்சைகளூக்கு பயன்படுத்தப்படும் லேசர் கற்றையின் உதவியால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் ஒரு லேசர் கற்றையை உருவாக்கும் அமைப்பும், உட்செலுத்த வேண்டிய மருந்தை நிரப்பிவைக்கும் அறையும், அத்துடன் சவ்வினால் பிரிக்கப்பட்ட நீரும் இருக்கும். நீர் இருக்கும் அறையினுள் ஒரு வினாடியில் 4000ல் ஒருபங்கு நேரமேயுள்ள லேசர் கற்றை செலுத்தப்படும் போது, அது சவ்விற்கு அப்பாலிருக்கும் மருந்தின் மேல் (சவ்வூடு பரவல்- Osmosis முறையைப் போல) அழுத்தத்தை ஏற்படுத்தும், அந்த அழுத்தத்தால் மிக மிக மெல்லிய முகக்குழாய் (Nozzle) வழியே வெளியேறும் மருந்து மனித தோலை ஊடுறுவி செல்ல போதுமானதாகும். இதை சந்தைக்கு ஏற்ற முறையில் தயாரிக்க ஒரு பன்னாட்டு கம்பெனியுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

எதற்காக இந்த கண்டுபிடிப்பு? உலகிலேயே முக்கிய மருத்துவ பிரச்ச்னை, ஊசி போடும் வலி என்பது போலவும், அதற்காக மெனக்கெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த ஊசியால் யார் பயனடையப் போகிறார்கள்? இந்த ஊசி குத்தும் வலியைக் கூட இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதா? உலகெங்கிலும் மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்க முடியாத ஏழைகளுக்கா வலியில்லா ஊசி கிடைக்கப்போகிறது? விக்கல் எடுப்பதற்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஓடும் பணக்காரர்களுக்கு தான் அது முதலில் சாத்தியமாகும்.

நோயாளிகளுக்கு ஊசி போடுவதால் ஏற்படும் வலி என்பதா இவர்களது அக்கறை? குழந்தைகளுக்கும், ஊசி போடுவதால் ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ள முடியாதோருக்கும் இந்த கண்டுபிடிப்பு பயன்படும் என்று சிலர் வாதிடலாம். உலகம் முழுவதிலும் தேவையான அடிப்படை மருத்துவம் கிடைக்காமல் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 800 (ஐந்து வயதிற்கு குறைவான) குழந்தைகள் இறந்து போகின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீடு.

ஏற்கனவே கண்டுபிடித்திருக்கும் எல்லா மருந்துகளுக்கும் மருந்து கம்பெனிகள் காப்புரிமை வாங்கிவைத்துக் கொண்டு, கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. ஏழைகளுக்கு பயனடையும் வகையில் உள்ளூர் மருந்து கம்பெனிகள் மருந்து தயாரிப்பதை நீதிமன்றங்களில் சண்டமாருதம் செய்து தடை செய்திருக்கின்றன. இதனால், மிகச்சாதாரண நோய்களுக்கு கூட மருந்து கிடைக்காமல் உலகெங்கிலும் பல பச்சிளம் குழந்தைகள் மாண்டுபோகின்றன. சென்ற 2011-ம் ஆண்டில் மட்டும் 69 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளதாக குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீடு.

அதைப்போல் இந்த வலியில்லா ஊசியும் பன்னாட்டு கம்பெனிகள் காப்புரிமை வாங்கி வைத்துகொண்டு லாபமீட்டவும், சாதாரண வயிற்றுவலிக்கு கூட MRI ஸ்கேன் எடுக்க சொல்லும் தனியார் மருத்துவமனைகள் இனி வலியில்லா ஊசி என்று லாபமீட்டவுமே பயன்படும். மருத்துவ ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் சமூக நோக்கத்துடன் இல்லாமல் லாபநோக்குடன் இருப்பதால் தான் இத்தகைய அபத்தங்கள் நிகழ்கின்றன. இந்தியாவில் காலராவுக்கும், மலேரியாவுக்கும், நாய்க்கடிக்கும் கூட போதுமான மருந்துகள் இன்றி பல ஏழைகள் வருடந்தோறும் இறக்கின்றனர். ஒரு வேளை வலியில்லா ஊசி வந்தால் கூட மருந்து இருந்தால்தானே போட முடியும்?

நாம் இவற்றை சொன்னதும் காசிருப்பவன் வலியில்லா ஊசி போட்டால் உங்களுக்கென்ன என்றும், விஞ்ஞான கண்டுபிடிப்பை ஏன் எதிர்கிறீர்கள் என்றும் சிலர் கிளம்பி வரலாம். இதில் தற்செயல் ஒற்றுமை என்னவெனில், இந்த புதிய கண்டுபிடிப்பு பரிசோதிக்க தடிமனான பன்றியின் மேல் சோதித்து பார்க்கப்பட்டதில், மருந்து தோலை ஊடுறுவி உட்சென்றிருக்கிறது, இந்த ஊசி தோல் தடிமமானவர்களுக்கானது தான் என்பதில் சந்தேகமில்லை.

படிக்க