Wednesday, March 3, 2021
முகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் மணிரத்னம் கைதாக தன்னார்வக் குழுக்கள் போராட்டம் நடத்துமா?

மணிரத்னம் கைதாக தன்னார்வக் குழுக்கள் போராட்டம் நடத்துமா?

-

கடல்-சினிமாதலைப்பிலுள்ள இந்தக் கேள்விதான் மண்டையை குடைந்துக் கொண்டிருக்கிறது.

‘ராவணன்’ என்னும் படுதோல்வி படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படம், ‘கடல்’. ஜெயமோகன் வசனம் எழுத, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அரவிந்த் சாமி, அர்ஜுன், லட்சுமி மஞ்சு போன்றோர் நடிக்க, கார்த்திக்கின் மகன் கவுதம், கதாநாயகனாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர், சமந்தா. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், கவுதமுக்கு அக்கா போல் அவர் தெரிந்ததாலும், அவருக்கு ஏற்பட்ட சரும பாதிப்பினாலும், சமந்தா இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார். அல்லது விலக்கப்பட்டார். இது பழைய கதை.

இதனையடுத்து ‘கடல்’ படத்தின் கதாநாயகியாக நடிக்க முன்னாள் நடிகை ராதாவின் இளைய மகள் துளசியை ஒப்பந்தம் செய்தார்கள். படப்பிடிப்பும் முடியும் தருவாயில் இருக்கிறது.

எப்படி பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் வழியாக கார்த்திக்கும், ராதாவும் சினிமாவில் அறிமுகமானார்களோ அப்படி ‘கடல்’ படத்தின் மூலம் அவர்களது வாரிசுகள் திரைத்துறையில் வலது காலை எடுத்து வைத்து நுழைகிறார்கள். சினிமா வரலாற்றிலேயே இது புதுமை… என்றெல்லாம் உரோமம் சிலிர்க்க பத்திரிகைகள் எழுதப் போகின்றன. அறிமுகப்படுத்தப் போகின்றன.

இந்த புல்லரிப்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டால், ஒரு கேள்வி எழுகிறது.

கதாநாயகியாக ‘கடல்’ படத்தில் நடித்து வரும் துளசிக்கு வயது, 14. இன்னும் பத்தாம் வகுப்பைக் கூட இவர் முடிக்கவில்லை. மனதளவிலும், உடலளவிலும், உலக அறிவிலும் இன்னும் பண்படாத வயது. சிறுமி.

இவரை வைத்துத்தான் காதல் காட்சிகளையும், டூயட் பாடல்களையும் மணிரத்னம், படமாக்கியிருக்கிறார். ஊடகங்களும், இணைய அறிவுஜீவிகளும் மணிரத்னத்தை பர்பெக்ஷனிஸ்ட் என கொண்டாடுகின்றனர். ஒரு காட்சி ‘சிறப்பாக’ வர வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைப்பார் என உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர். சரியான முகபாவனைகள் வரும் வரை நடிகர்களை ‘பெண்டு’ நிமிர்த்துவார் என நேரில் இருந்து பார்த்ததை போல்தான் இதுவரை எழுதியும், பேசியும் வந்திருக்கிறார்கள்.

எனில், துளசி தொடர்பான காட்சிகளிலும் இப்படித்தான் செயல்பட்டிருப்பார். இதன் அர்த்தம், காதல் காட்சிகள் உணர்ச்சிகரமாக வரும் வரை திரும்பத் திரும்ப நடிக்க வைத்திருப்பார் என்பது. இன்னும் மேஜர் ஆகாத ஒரு சிறுமியை இப்படி காதல் காட்சிகளில் நடிக்கவைப்பது சட்டப்படி தவறில்லையா?

உண்மையில் சிறுமிகளை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கயவர்களுக்கும், மணிரத்னத்தின் இந்த ‘பர்பெக்ஷனுக்கும்’ என்ன வித்தியாசம் இருக்கிறது?

கல்வி வியாபாரத்தில் விலை போக முடியாததால், உழைக்கும் மக்கள் வேறு வழியின்றி தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, இந்தப் பெற்றோர்களை ஏதோ வில்லன்களை போல் சித்தரிக்கும் தன்னார்வக் குழுக்கள், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக தாங்கள் மட்டுமே போராடுவதாக தொடை தட்டுகின்றன. ஊடகங்களும் இவர்களையே சமூகப் போராளிகளாக சித்தரிக்கின்றன. ஒருபோதும் இந்த சமூக அமைப்பில் வாழும் வரை உழைக்கும் மக்களால் தங்கள் பிள்ளைகளுக்கு என்னதான் ஆசைப்பட்டாலும் கல்வியறிவை அளிக்க முடியாது என்பதை மூடி மறைக்கின்றன.

குழந்தைத் தொழிலாளர் உழைப்பை தடை செய்ய வேண்டுமென்று மாதந்தோறும் ஏதாவது ஒரு பள்ளிக்கூட மாணவர்கள் ஊர்வலம் போவதும், தன்னார்வக் குழுக்கள் இதற்காக மாபெரும் கருத்துப் பிரச்சாரத்தை எப்போதும் செய்வதையும் பார்த்திருக்கிறோம். எனில் மணிரத்தினம் 14வயது சிறுமியை நடிக்க வைப்பது மட்டும் குழந்தை தொழிலாளர் உழைப்பில் சேர்த்தியில்லையா? இல்லை அதற்கு மட்டும் விதிவிலக்கு சட்டப்படி உண்டா? அல்லது சமூகநலத்துறையிடமிருந்து அவர் அனுமதி வாங்கியிருக்கிறாரா? அப்படித்தான் அனுமதியும் கொடுத்து விட முடியுமா?

முக்கியமாக காம உணர்வு, விரததாபம், காதல் போன்ற காட்சிகளை ஒரு சிறுமியை வைத்து நடிக்க வைப்பது என்ன விதத்தில் நியாயம்? ஏற்கனவே ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறுமிகள் குத்துப்பாட்டுக்களையும், பருவம் வந்த பெண்களின் உணர்ச்சி பாவத்துடன் பாடுவதையும் பார்த்திருக்கிறோம். இதுவும் சட்டப்படி சரியா?

சமூக காரணிகளால் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளப்படும் சிறுமிகள் குறித்து மேம்போக்கான ஆய்வுகளை செய்யும் தன்னார்வக் குழுக்கள், மணிரத்னம் போன்ற மேட்டுக்குடி ‘கலைஞன்’ மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருக்கின்றன.

உழைக்கும் மக்களுக்கு ஒரு நியாயம், சட்டம்… மேட்டுக் குடியினருக்கு ஒரு நியாயம், சட்டம் என்பது அரசின் கொள்கை மட்டுமல்ல. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கொள்கையும் அதுதான். அதனால்தான் அவர்கள் ‘அரசுசாரா அமைப்புகள்!’

குழந்தை தொழிலாளர் உழைப்பை தடை செய்ய விரும்பும் கனவான்களும், சீமாட்டிகளும் மணிரத்தினத்தின் காரியத்தை கண்டிப்பார்களா? நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்களா?

  • U.S.A .என்றாலே என்னமோ நல்லது மட்டும் நடக்கும் என்று பாவனை காட்ட வேண்டாம் .10,12 வயது குழந்தைகள் அங்கு குழந்தைகளுக்கு தாயாகுவதை பார்க்கவில்லையா?

 1. மணிரத்னம் மட்டுமல்ல, சிறுமியின் பெற்றோர்களும் தண்டிக்கபட வேண்டியவர்கள்.

 2. நீங்கள் எழுதயுள்ள உண்மையும் அதன் ஆதங்கமும், மணிரத்தினத்தின் ரத்தினமான ரசிகபெருமக்கள் உணர்ந்து கொள்வதென்பது சிரமமே. அவர்கள் ரசனை அவ்வாறு!!!

  அக்கறையுடன் அருமையாக எழுதியுள்ள இப்பதிவுக்கு நன்றி !

 3. இதென்ன பிரமாதம், இந்த சிறுமியை எப்படியெல்லாம் இன்ச் பை இன்சாக நமது டமில் பதிவர்கள் வர்ணிக்கப்போகிறீர்கள் என்று மட்டும் பாருங்க.

 4. உண்மையில் சிறுமிகளை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கயவர்களுக்கும், மணிரத்னத்தின் இந்த ‘பர்பெக்ஷனுக்கும்’ ஒரு வித்தியாசமும் இல்லீங்கோ…….

 5. //கதாநாயகியாக ‘கடல்’ படத்தில் நடித்து வரும் துளசிக்கு வயது, 14. இன்னும் பத்தாம் வகுப்பைக் கூட இவர் முடிக்கவில்லை. மனதளவிலும், உடலளவிலும், உலக அறிவிலும் இன்னும் பண்படாத வயது. சிறுமி.//

  4-5 வயசான குழந்தைகளுக்கு அணு உலை பத்தி தெரிஞ்சு போராட்டமெல்லாம் நடத்துறபோது, இது முடியாதா?

  • மிஸ்டர் வெண்ணை,

   //4-5 வயசான குழந்தைகளுக்கு அணு உலை பத்தி தெரிஞ்சு போராட்டமெல்லாம் நடத்துறபோது, இது முடியாதா?//

   தமிழ்நாட்டில் உம்மைப் போன்ற ______________ கன்டிஷன் உள்ள ஆட்கள் இருக்கும் போது நிச்சயம் முடியும்.

   ஆபத்தை ஆபத்து என்று சொல்லத் தெரிவதும் இதுவும் ஒன்றா?

  • vena vetti சீனு unaku unarchi poratatukum kamathukum vitiyasam theariyatha un antha vayasula ponnu irutha ne nadika viduviya ila unaku antha vayathula sister irutha nadika viduviya da earuma \\4-5 வயசான குழந்தைகளுக்கு அணு உலை பத்தி தெரிஞ்சு போராட்டமெல்லாம் நடத்துறபோது, இது முடியாதா?// 4-5 vayathu kulaithaigal poraduvathu tan uyir kum tamilnada tin makkal uyir kum tan poraduraikagal kaadal padathil nadikum ponnu uyir kagava poraduthu? antha chinna pona kamathuku thinichu vithurukam manirathinam avanuku ne vakalatha?

  • yes that is correct, without seeing the film , how u can comment about the actor and director .even the article lacks the photo of the actress.

   If a story demands a 14 yr girl , then wt can a director do , select a 28 yr girl and act her like 14 yrs girl ? i don’t understand Ur logic here ..

  • கடல் படம் பார்த்துவிட்டு முடிவுக்கு வரலாமே?

   ஸுப்பர் ஷங்கர்நல்ல கேள்வி !
   அப்ப விலைவாசியால் மக்கள் உண்மையிலெயெ கஷ்டப்பட்டு சாகராங்களான்னு பார்த்துட்டு அத எதுத்து பேசுவோம் !
   வால்மார்ட் உள்ள வந்த பிறகு அண்ணாச்சிகள்ளாம் தூக்கு பொட்டுக்குறாங்களா இல்லியான்னு பொறுமையா இருந்து பார்துட்டு அத பத்தி வினவலாம் !

   சரி தானே!

 6. புகழ் மயக்கம் மனத்தையும் மயங்கச் செய்துவிடுகிறது.மணி என்ன விதி விலக்கா?

 7. அப்போ என்ன செய்யலாம்….
  பேசாமநடிகர் சூரியா ஆதவன் படத்தில் கிராபிக்ஸ் மூலமாக சிறுவானாகநடித்ததைப்போன்று, காதலிக்கும் வயதை எட்டியநடிகையை கிராபிக்ஸ் மூலாமக சிறுமியாகக்காட்டலாம்…

 8. //உண்மையில் சிறுமிகளை கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கயவர்களுக்கும், மணிரத்னத்தின் இந்த ‘பர்பெக்ஷனுக்கும்’ என்ன வித்தியாசம் இருக்கிறது?//

  ஒரு விதியசமும் இல்லை.இதுதான் மணிரத்தினத்தின் வெற்றியின் ரகசியங்களில் ஒழிந்திருக்கும் மாயைகளில் ஒன்று.கலை வியாபாரி வேறு எப்படி யோசிக்க முடியும்.

 9. வசதி வாய்ப்புள்ளவர்களும் மேன் மட்டத்திலிருப்பவர்களும் என்ன செய்தாலும் அது குற்றமாகாது என்பதுதானே இந்திய திருநாட்டின் விதி,இப்படி ஒரு கட்டுரை வந்ததால்த்தான் ஆ அப்படியா என்று எனக்கும் எண்ணத்தோன்றுகிறது. அரசியல் வியாதிகளும் இந்த சினிமா காமுகர்களும் ஒடுக்கப்படவேண்டும். இந்த இரண்டும்தான் நாட்டையே தன்னகப்படுத்தி வைத்திருக்கிறது.

 10. சரியான கோணளில் பார்த்து நேர்மை தவறாமல் செய்யப்பட்ட அலசல். சுடும் உண்மைகள். மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  மணிரதனம் போன்றவர்கள் பருவமடையாத சிறுமிகள் மீது பாலுணர்வால் தூண்டி இழுக்கப்படும் (pedophelia) வயது முதிர்ந்த காமுகர் வகையறாவை சேர்ந்தர்களாத்தான் இருக்க முடியும். தன் ஆழ் மனதில புதைந்து கிடக்கும் இவ்வீன உணர்ச்சிகளை காமிரா பின் இருந்தபடி பார்த்து ரசித்து தீர்த்து கொள்வதோடு அதை மற்ற தமிழரர்களோடும் பகிரங்கமாக பகிர்ந்தும் ஆனந்தம் கொள்கிறார். ஒழிக புதுமை கேடு கெட்ட மணிரத்னம் தமிழர் பண்பாடு.

  • ஆக பதினாலு வயசில் எந்த பொண்ணு பசங்களுக்கும் காம உணர்வு வர்றதே இல்லைன்னு சொல்றீங்க.. நாட்டில் அந்த வயசு புள்ளைங்க தப்பு பண்ணி கேள்வி பட்டதே இல்ல.. தங்கர்பச்சான் அழகி படம் எடுத்ததெல்லாம் என்னவாம்? முதலில் உங்களுக்கு எது பிரச்னை ?

   • உன்னோட பொண்ணுக்கும் வரும் தானே?பின்னாடியே போய் படம் புடிச்சி வையேன்….ஏதாவது எதிர்த்து எழுதனும்ம்னு கப்பி தனமா ஏதாவது சொல்லிக்கிட்டு….ஸ்கூல் புள்ளைங்க யூனிபார்மோட எல்லா தில்லாலங்கடியும் செய்றா மாதிரி படம் எடுக்குரானுவோ பெத்தவன் அதை குழந்தைகளுக்கு காட்ட முடியுமா? அதாவது பரவா இல்லை கொஞ்சம் வளர்ந்த புள்ளைங்களை வெச்சி எடுக்குறான் இவன் பதினாலு வயசு பொண்ணை வச்சு எடுக்குறான் பாராட்ட சொல்றியா?

    • அப்போ என்னா ______துக்கு வழக்கு எண் படமெல்லாம் போட்டீங்க. 25வயசு குமரியா நடிச்சாங்க அதுல? படம் என்பது சமூத்தின் ஒரு கண்ணாடி மாதிரி.அதில் ஓரளவுக்கு நிஜம் தெரியும். அந்த படம் எல்லாம் பெத்தவங்க பாக்கணும்னு தான் எடுக்குறாங்க. கப்பித்தனமா ??? நீங்களா நானா ?

     • பெத்தவன் பாக்குறதை சொல்லல ——புள்ளைங்களுக்கு காட்ட முடியுமான்னு கேட்டேன்.

 11. படைப்பாளியான ஒருவன் படைக்கும் தனது ஆக்கத்தில் அவனது மனக்கிடக்கையும் அவன் கனவுகாணும் உலகமும் நிச்சியம் அந்த படைப்பில் பிரதிபலிக்கும். பாரதியின் மனவோட்டமும் நிஜ வாழ்வியலும் பாடல் வரிகளாக அதற்கு சான்று தந்து நிற்கின்றன. ஒருவன் தனது அடி மனது ஒத்துக்கொள்ளாத ஒரு விடயத்தை படைப்பிலக்கியத்தில் கொண்டுவர முடியாது. கற்பனையாக இருந்தாலும் மாறுபட்ட கோணத்தில் ஆக்கங்கள் உருவாக முடியாது.

  உதாரணத்துக்கு ஒளிவு மறைவில்லாத கண்ணதாசனின் ஆக்கங்களை மேற்கோள் கொண்டு முடிவுக்கு வரமுடியும்.

  கமலகாசனின் சினிமாவை எடுத்துக்கொண்டால் வக்கிரங்களும் அடங்காத வாழ்வியல் போக இச்சைகளும் தவிர்க்க முடியாமல் இடம்பெறுகின்றன. நோக்கம் இல்லாதவர்கள் கூச்சமில்லாமல் இதை செய்ய முடியாது.

  .நல்ல களத்துடன் புகழின் உச்சத்தில் இருந்தபோதும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தொட்டுச்செல்லாமல் தவிர்த்த சில விடயங்கள் அவரவர் மன கிடக்கையின் வெளிப்பாட்டாகவே ஆவணப்பட்டிருக்கின்றன.

  பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல மணிரத்தினம் போன்றவர்களின் ஈடேறாத அல்லது இன்னும் உள்ளூர உயிர்வாழும் மிருக வக்கிரங்களே இப்படி தலைகாட்டுகின்றன. இதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கலையை கலையாகத்தான் மணி எண்ணுவாராக இருந்தால் முதுபெரும் கலைஞன் கமலஹாசனை கதாநாயகனாக போட்டு ஏற்கெனவே சினிமா நடிகையாக இருக்கும் மணியின் மனைவி சுஹாஷணியை கதாநாயகி ஆக்கி ஹேராம் என்ற குப்பை சினிமாவில் கமலஹாசன் முத்தக்காட்சியில் நடித்தது போன்ற ஒரு காட்சியை சினிமாவாக எடுத்து வெளியிட்டு தனது கலை நயத்தை வெளிப்படுத்தி கலை வேறு வாழ்க்கையின் உறவு முறைகள் வேறு என நிரூபிக்கலாம்.

  Mr மணி செய்வாரா??

 12. மணிரத்னம் மட்டுமல்ல சினிமா உலகமே இப்படித்தான். 15 வயசுப் பொண்ணுங்கதானே கதாநாயகிகளா அறிமுகமாகிறாங்க.

  பாலுமகேந்திரா மணந்து கொண்டதாகச் சொல்லப்படும் நடிகை ஷோபா இறக்கும் பொழுது வயது 17தான். அதற்கு முன்பே திரைப்படங்களில் நடித்து, ஒரு இயக்குனரோடு வாழ்ந்து, உயிரையும் இழந்திருக்கிறார். இந்தக் கேசே ஒன்னுமில்லாமல் இருக்கு. இதுல மணிரத்னம் மட்டுமல்ல… சினிமால எல்லாருமே இப்பிடித்தான்.

 13. ஒருதலை பட்சமான கட்டுரை. உங்கள் கொள்கைகளுடன் ஒத்துவராத எவரையும் இப்படித்தான் வினவு விமர்சிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இன்னும் தரமான கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

 14. கும்கி லும் சுந்தரபாண்டியனிலும் நடித்திருக்கும் லக்ஷ்மி மேனனும் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் தான். பெரிய டைரக்டரா பார்த்து எழுதினா தான் ஒரு பயர் இருக்கும் அப்படிதானே.

 15. வினவில் முதல் முறையாக வந்த உருப்படியான கட்டுரை

  மணிரத்னம் என்றுமே கள்ள காப்பி மாஸ்டர் இவருக்கு அடுத்தவன் வாழ்வில் எட்டிப்பார்ப்பது மிகவும் பிடிக்கும் ஆனால் இவரை ஏன் அறிவு ஜீவி என கொண்டாடுகின்றனர் என்பது புரியவில்லை இவருக்கு மேல் இவர் பெண்டாட்டி உலகிலேயே தானும் தன் குடும்பத்தினரும் தான் அறிவாளிகள் என்ற நினைப்புடனே என்றும் பேசுவார்.

  இவர் முதலில் எடுத்த இதயக்கோவில் படம் ஊற்றிக்கொண்டது, பின் ஓர் தெலுங்கு படத்தை கொஞ்சம் மாற்றி பகல்நிலவு என்ற படமெடுத்தார், இவரின் கதைகள் எல்லாமே திருட்டு கதைகள் தான் cliff hanger என்ற படத்தை மோசமான முறையில் காப்பியடித்து திருடா திருடா எடுத்தார்

  பம்பாய் ரவுடி வரதராஜ முதலியார் கதையை நாயகன் என எடுத்தார், மஹாபாரத கர்ணன் கதையை தளபதி என சுட்டார், பம்பாய் கலவரத்தை காசாக்கினார், indian oil manager கடத்தலை ரோஜாவாக்கினார், ராமாயணத்தை ராவணன் என எடுத்தார், எம்ஜியார் கருணாநிதி இவர்களின் கதையை இருவர் என ஆக்கினார், இலங்கை பிரச்சனையை கன்னத்தில் முத்தமிட்டால் என்றார், திருட்டு கல்யாணம் செய்ய அலைபாயுதே என இளசுகளின் மனதில் விஷத்தை விதைத்தார். இவர்ன் உருப்படியான படைப்பு என்றால் அக்னி நட்சத்திரம் மட்டும் தான் ஆனால் அதுவும் உத்தர் தக்ஷின் என்ற இந்தி படத்தின் கள்ள திருட்டுதான்.

  இவர் படங்களை தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும். இவரை குழந்தை தொழிலாளர் சட்டத்தை வைத்து கைது செய்யவேண்டும்

  • நிறைய பேர் கிட்ட இதை சொல்லியச்சு ! அவங்க ரிபீட் பண்ற ஒரே விசயம் அவர் படத்துல வர்ற கலை அம்சங்கள் ரொம்ப சூப்பரா இருக்கும் அப்படின்ற அழகுணர்ச்சி தான் ! ஆனா அது விதைக்குற விசயம் ரொம்ப விவகாரமானட்கு என்பதை யாரும் புரிஞ்சிக்கறட்கு இல்லை !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க