Wednesday, October 9, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்'மகாத்மா' காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

-

மகாத்மா-காந்திதமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், “கலப்பு’த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, “காந்தி சாதி’ என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். “பீ’யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார். ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.

ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற “அற்புதமான’ கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் “சின்ன சின்ன ஆசைகளை’க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.

எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட “பர்சானியா’ திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் “மகிமையை’, “உலகப் பொருளாதார மன்ற’த்தில் வியந்தோதுகிறார்.

காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான “ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.

காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.

உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சில வரலாற்று உண்மைகளின் ஒளியில், இப்பொய்களை அடையாளம் காண்போம்.

****
காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில்,

“”எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன”

என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் “பொறுப்பை’ ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.

அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.

காந்தியும் அவரது காலங்களும்’ என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“”புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.”

தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி “வன்முறை’ என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.

இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம்,

“”இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்”

என விளக்கமளித்தார்.

முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு,

“”போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது”

என நியாயம் கற்பித்தார்.

பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் “யங் இந்தியா’வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு,

“போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.”

பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.

“”சுதந்திரம் என ஒன்று வருமானால், அது மாபெரும் பிரிட்டிஷ் அரசுடன் ஒரு கண்ணியமான ஒப்பந்தத்தின் மூலமே வரவேண்டும்”

என 1929இல் காந்தி எழுதினார். காந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை, அதன் திசைவழியை, இந்த ஒற்றை வரியை விட வேறெதுவும் விளக்கிவிட முடியாது. காந்தி முரண்பாடற்று, கடைபிடித்த ஒரே கொள்கை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மக்களால் சமரசமற்று வென்றெடுக்கப்படுமாயின், அது பிரிட்டிஷ் ஆட்சியை மட்டுமல்ல, முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் மட்டுமல்ல, தன்னையும் சேர்த்தே தூக்கி எறிந்து விடும் என்பதை காந்தி தெளிவாக அறிந்திருந்தார். அதனால்தான், நடைமுறையில் மக்கள் சக்தியின் இயல்பான கோபாவேசத்தின் சிறுபொறி எழும்பினால் கூட, உடனடியாக அப்போராட்டத்தையே கைவிட்டு மக்களை திகைத்துப் பின்வாங்கச் செய்தார்.

இதனை 1921 ஒத்துழையாமை இயக்கம் முதல் 1942 தனிநபர் சத்தியாக்கிரகம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை, நாம் காண முடிகிறது. காந்தி நடத்திய மூன்று இயக்கங்களிலும், போராட்டத்தின் போக்கில் மக்கள் போலீசு மீது எதிர்த்தாக்குதல் தொடுப்பதும், அவர்களைச் சிறை பிடிப்பதும், அரசுச் சொத்துக்களை நாசப்படுத்துவதும் தன்னியல்பாக நிகழ்ந்தது.

1921இல் சௌரி சௌரான் விவசாயிகள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததையொட்டி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதாக இருக்கட்டும்; 1930இல் மக்களின் போராட்டத் தீ பற்றி எரிந்த வேளையில் வைஸ்ராய் இர்வினோடு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்திற்கு முன்வந்து, போராட்டத்தை கைவிட்டதாக இருக்கட்டும்; 1942இல் “தான் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களது வன்முறைக்கு தாம் பொறுப்பல்ல’ என ஆகஸ்டு போராட்டத்தை கைகழுவியதாக இருக்கட்டும், காந்தியின் வன்முறைக்கெதிரான பரிசுத்த வேடத்திற்குள், போராட்டம் தனது கைகளிலிருந்து நழுவ விடக்கூடாதென்ற இடையறாத அச்சம் ஒளித்து கொண்டிருந்தது.

காந்தியப் போராட்டத்தினுடைய வர்க்கச் சார்பு முதலாளிகளையும், வணிகர்களையும் சார்ந்திருந்தது தற்செயலானதல்ல. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும், பர்தோலி விவசாயிகளின் வரிகொடா இயக்க போராட்டத்திலிருந்தும், தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதும், அவர்களை விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கச் செய்வதும் அபாயகரமானது எனத் தான் உணர்வதாக காந்தி வெளியிட்ட அறிக்கைகளை, அன்றே தமது “இளம் அரசியல் தொண்டர்களுக்கு‘ எனும் கட்டுரையில் மாபெரும் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சுட்டிக் காட்டினார். சுருக்கமாகச் சொன்னால், காந்தியப் போராட்டத்தின் வர்க்க உள்ளடக்கம்தான் அப்போராட்டத்தின் வடிவத்தையும் வரம்புகளையும் தீர்மானித்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம் என்பதெல்லாம் வெறுமனே வார்த்தைப் பூச்சுக்கள் மட்டுமே.

1929இல் சுதந்திரம் கிடைக்காமலேயே சுதந்திரக் கொடியேற்றும் கோமாளித்தனத்தை அரங்கேற்றினார், காந்தி. வீரதீரமாக “முழுச் சுதந்திரமே இலட்சியம்’ என்று அறிவித்த கையோடு வைஸ்ராய்க்கு எழுதிய நீண்ட கடிதத்தில்,

“”என்னால் இயன்ற வரை, தங்களுக்கு எத்தகைய அனாவசியமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை” எனக் குழைந்தார். வைஸ்ராய், ஒரு அலட்சியமான பதிலை வீசியெறிந்தார். “”நான் மண்டியிட்டு உணவு கேட்டேன். ஆனால், எனக்கு கல்தான் கிடைத்திருக்கிறது”

எனப் புலம்பினார் காந்தி. வைஸ்ராய்க்கு “தர்மசங்கடத்தை’ ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த தர்மசங்கடத்திற்கு பெயர்தான் “தண்டி யாத்திரை’.

ஆனால், ஆங்கில அரசு குயுக்தியாக காந்தியின் சகாக்களை கைது செய்தது; காந்தியை மட்டும் கைது செய்யாமல் விட்டு, அவரைச் சிறுமைப்படுத்தியது. உடனே அகிம்சாமூர்த்தி ஒரு அழகான தந்திரம் செய்தார். உப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு, உப்பைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். வேறு வழியின்றி, அவரை அரசு கைது செய்ய நேர்ந்தது. பறிமுதல் செய்வது சத்தியாக்கிரகம் என்றால், வங்கியை கொள்ளையடிப்பது கூட சத்தியாக்கிரகம் தானே? “தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வது’ என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான், சத்தியாக்கிரக வடிவத்தைக் கைவிட்டு, “பறிமுதல்’ என்ற போராட்ட வடிவத்துக்கு மாறினார் காந்தி. அதே நேரத்தில், “”உப்பை மட்டுமல்ல, மொத்த சுதந்திரத்தையுமே பறித்தெடுக்க வேண்டும்” என்று கூறிய பகத்சிங் முதலான புரட்சியாளர்களை, “தீவிரவாதிகள், வன்முறையாளர்கள்’ என்றார் காந்தி.

சட்ட மறுப்பு இயக்கத்தை “இரகசியம்’ சூழ்ந்து விட்டதாகக் கூறி, காந்தி அதனைக் கைவிட்டு, இர்வினிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சரணாகதி அடைந்த பொழுது,

“”ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஐயமின்றிக் கருதுகிறோம். தனது வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி மேலும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது”

என சுபாஷ் சந்திர போஸும், வித்தல்பாய் படேலும் வியன்னாவிலிருந்து பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். இருப்பினும் பார்ப்பனபனியாக் கட்சியான காங்கிரசுக்கு, மக்களை ஏய்க்க காந்தியின் “முகமூடி’ தேவைப்பட்டது. ஆங்கில அரசுக்கோ, இத்தகைய விசுவாசமான “எதிரி’ கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

இவ்வாறு முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் வர்க்கத்தின் மனம் நோகாமல், காந்தி நடத்திய “அரசியல் பரிசோதனை’களுக்கு “சோதனைப் பிராணி’களாக இந்திய மக்கள் அடிபட்டார்கள். உதைபட்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். சொத்துக்களை இழந்தார்கள். சிறையில் வாடினார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் கழுத்தறுப்பிற்கு பிறகும் விரக்திக்கும், வேதனைக்கும் தள்ளப்பட்டார்கள். இதைவிடக் கொடூரம்,

“”போராட்டத்தின் தோல்விக்கான காரணம், மக்களின் ஆத்ம சுத்தி போதவில்லை”

என காந்தி சொன்ன குற்றச்சாட்டையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1942இல் யுத்தத்தில் ஜெர்மனி-ஜப்பான் முகாம் வெற்றி பெறலாம் என்ற கணிப்பில், அரை மனதோடு, காந்தி “வெள்ளையனே வெளியேறு‘ முழக்கத்தை முன்வைத்த மறுகணமே, காங்கிரசின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இம்முறை மக்களின் போர்க்குணம் முழுமையாக வெளிப்பட்டது. தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. போலீசும், இராணுவமும் தாக்கப்பட்டனர். ஷோலாப்பூர் போன்ற பல இடங்களில் இராணுவமோ, போலீசோ பல நாள்களாக உள்ளே நுழையக் கூட முடியவில்லை. கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

“காங்கிரசு சோசலிஸ்டுகள்’தான் வன்முறைக்கு காரணமென்று, காங்கிரசுத் தலைவர்கள் ஆள்காட்டி வேலையில் ஈடுபட்டார்கள். எதற்கும் உதவாத அகிம்சையை, மக்கள் நடைமுறையில் வீசியெறிந்தனர். சிறையிலிருந்து விடுதலையான காந்தி, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தின் பொழுது, சாதி, மத வேறுபாடுகளற்று நாடே கிளர்ந்தெழுந்த பொழுது, சுதந்திரம் வாயிற்படி வரை வந்ததென்றால், 1942இல் சுதந்திரம் வீட்டிற்குள்ளேயே கால் வைத்தது. ஆனால் இந்த முறையும் காந்தி அதன் காலை வாரிவிட்டார்.

தலைமையை விஞ்சி எழும்பும் மக்களின் போர்க்குணத்தை அதன் திரண்ட வடிவத்தில் 1942இல் காந்தி கண்டார். அதனால்தான் பின்னர் பிரிவினைக் கோரிக்கை எழுந்த பொழுது, பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதைத் தவிர காந்திக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனெனில் இன்னொரு “மக்கள்திரள் அரசியல் போராட்டம்’ என்பது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பெயர்த்தெடுக்காமல் அடங்காது என்பதைக் காந்தி புரிந்து கொண்டார். பிரிவினைக் கோரிக்கையை ஏற்பதற்கான காங்கிரசுத் தீர்மானத்தின் முன்மொழிவில், இதனைக் குறிப்பிடவும் செய்தார்.

பிரிவினைக் காலத்தில், கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் காந்தி சென்றார். ஆனால், அவரது சமரச முயற்சிகளும், போதனைகளும் இந்துமகா சபா வெறியர்களிடமும், முசுலீம் லீக் வெறியர்களிடமும் எடுபடவில்லை. காந்தியின் ஆத்மார்த்த சீடர் ஆச்சார்ய கிருபாளனியே, காந்தியினுடைய முயற்சிகளின் பலனைக் கீழ்க்காணும் முறையில் விவரிக்கிறார்.

“”அவர் நவகாளிக்கு சென்றார். அவரது முயற்சிகளால் நிலைமை சற்றே முன்னேறியது. இப்பொழுது பீகாரில் இருக்கிறார். நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் கொழுந்து விட்டெரியும் வன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த இந்தியாவிற்கான இந்துமுசுலீம் ஒற்றுமைப் பிரச்சினையை பீகாரில் தீர்க்கப் போவதாகக் கூறுகிறார். ஒருவேளை அவ்வாறு நடக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்பது சிக்கலாகவே தோன்றுகிறது. சாத்வீகமாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தைப் போல, இலக்கை அடைவதற்கான எத்தகைய தீர்க்கமான வழிமுறைகளும் இதில் இல்லை.” பின்னர், “”பீகாரில் தங்களது அகிம்சை எவ்வாறு வேலை செய்தது?” எனக் கேட்டபொழுது “”அது வேலையே செய்யவில்லை. மோசமாகத் தோல்வியடைந்தது”

என்றார் காந்தி.

காந்தியின் ஆசிரமம் தாக்கப்பட்டது. தில்லியில் நடத்திய கடைசி உண்ணாவிரதத்தின் இறுதியில் காந்தி

“நான் எனது ஓட்டாண்டித்தனத்தை ஒத்துக் கொள்கிறேன்”

என தனது இயலாமையை வெளியிட்டார். அகிம்சையின் தந்தை காஷ்மீருக்கு படைகள் அனுப்ப ஆதரவளித்தார். தான் சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசியலையும் பிரிப்பேன் என்றார். அடுத்த கணமே,

“”மதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வார இறுதி விசயமாக அல்லாமல், ஒவ்வொரு நொடியும் மதத்திற்காகச் செலவிடப்பட வேண்டும்” என்றார். காந்தியால் தனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட நேரு, “காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் காலங்கடந்தவை’ என அவருக்கே கடிதம் எழுதினார். “”காந்தி தனது இறுதி நாள்களில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்தார்”

எனத் தெரிவிக்கிறார் கிருபாளனி.

இதே காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் தொடுத்த தாக்குதல்களும், 1945 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளர் போராட்டங்களும் காந்தியின் அரசியல் முடிவை முன்னறிவித்தன. இரண்டாம் உலகப் போரில் பலவீனமடைந்த ஆங்கில அரசு, நேரடியாகத் தனது காலனிகளை இனிமேலும் அடக்கியாள முடியாது என்ற நிலையில், இந்தியா, இலங்கை மற்றும் பிற காலனிகளின் தரகு முதலாளிகளுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றிக் கொடுக்க முன்வந்தது.

காந்திஅரசியல் அரங்கத்தால் புறந்தள்ளப்பட்ட காந்தியின் பிம்பம், இன்றளவும் பாதுகாக்கப்படுகிறதென்றால், அதற்கு கோட்சேயின் நடவடிக்கைதான் உதவி செய்தது என்று சொல்ல வேண்டும். காந்தியம் வெளுத்து, அதன் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில், காந்தி ஒருவேளை தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால், காந்தியம் தவிர்க்கவியலாமல் செத்துப் போயிருக்கும். கத்தியின்றி, இரத்தமின்றி, சுதந்திரத்தின் கழுத்தறத்ததுதான், “காந்தி’ எனும் ஊதிப் பெருக்கப்படும் “சோளக்காட்டுப் பொம்மை’யின் சுருக்கமான அரசியல் வரலாறு.

“”என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லையா?” என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், “வாடிக்கையாளரே நமது எசமானர்’ என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத்தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மைதான்.

______________________________________________________
புதிய கலாச்சாரம், ஜனவரி 2008
(மீள்பதிவு)
______________________________________________________

  1. திட்டிமிடப்பட்டே பிரபல்யமாக்கி அரசியல் லாபத்திற்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு Trademark காந்தி என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிரீர்கள்…வாழ்த்துக்கள்!!

  2. “நான் பாரதி வந்திருக்கிறேன்…!” என்கிற ஒரு அல்டாப் அதட்டலில், ‘அப்பாயிண்ட்மெண்ட்’ வாங்காமல் வந்து கத்தியதற்கே, கூட்டத்திற்குள்ளே அனுமதித்தார், காந்தி. ஏனென்றால் அந்தக் கூப்பாடு ஒரு மேல் சாதிக்காரனுடையது.

    இவரின் ஒரு ‘ஹரிசன்’, “நான் மண்ணாங்கட்டி வந்திருக்கிறேன்’ என்று குரல் கொடுத்திருந்தால், குப்பைத்தொட்டிக்குப் பக்கத்தில் உட்காரவைத்து குமுறி எடுத்திருப்பார்கள் காந்திக் குல்லாய்கள்.

    அக்ரகாரத்தை வென்றெடுக்க முடியாமால், அக்ரகாரத்து வீடுகளில் நுழைய முடியாமல், அதன் திண்ணைகளிலேயே சம்மணமிட்டு சோத்துக்காக உட்கார்ந்து, நோகாமல் நோன்பு செய்து, ‘ஹரிசனத்தை’ கண்டுபிடித்த காரியாவாதி காந்தி!

    • இத சொல்லி சொல்லித்தான் கருணாநிதி தமிழனை கொள்ளையடிச்சிட்டானே இன்னும் என்ன வேணும் ஒங்களுக்கு

  3. இந்து முஸ்லிம் பிரச்சினையின் காரணம் காந்தியின் இற்றுப்போன இந்துத்வ பற்றை தவிர வேறில்லை. தற்போது பார்பனர்களூக்கு மட்டுமே சுதந்திரமே தவிர இந்தியா இன்னும் அனைத்து வெகுசன மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவில்லை.

    • தலித்தான ராசா ஊழல் பண்ணலியா?எங்க பார்ப்பனன் இருக்கிறான்?கருணாநிதி குடும்பம் பார்ப்பன குடும்பமா?தலித்துகளின் வாயில் மலம் கரைத்து ஊற்றுவது பார்ப்பனர்களா?ரெட்டை குவளை தீண்டாமை சுவர் இதெல்லாம் எந்த பார்ப்பனன் இப்போ செய்யிறான்?

      • துட்ட ஆட்டைய போட்டுட்டு மாட்டிக்குறது முட்டபய பண்றது, பார்பனன் ரெண்டு குவளையும் குடுக்க மாட்டான்!

    • அதான் மாயாவதி கே ஜி பாலக்ருஷ்ணன் ராசா போன்றவர்களுக்கு ஊழல் பண்ண சுதந்திரம் இருக்கே!!

  4. ஜெயமோகன் இன்றைய காந்தி புத்தகத்தில் இந்த கேள்விகளுக்கு எல்லாமே பதில் அளித்துள்ளார் ,

    ஆனால் வசவு ஆட்களுக்கு படிக்கும் பழக்கமே கிடையாதே அய்யா .

    • மதிகெட்ட இந்தியா,

      காந்தி போற்றி புராணங்களை ஏதோ ஜெயமோகன்தான் பாடுறார்னு இல்லை ஏகப்பட்ட பேர் பாடியிருக்காங்க, அல்லா லைப்பரரிங்களிலும் இந்த போற்றி குப்பைகள்தான் ஏராளம்.

      மத்தபடி உங்க கடவுள் ஜெயமோகன் உளறல்களுக்கெல்லாம் சுனிதி குமார் கோஷ் என்ற இடது சாரி அறிஞர் ஆதாரங்களுடன் தண்டி தண்டியாய் நிறைய புத்தகங்கள எழுதியிருக்கார். அவர் பேரைக்கூட மதி கெட்ட இந்தியாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?

      அல்லாத்தையும் வேதத்துலயே சொல்லிட்டான்னு கங்கைக்க கரையிலும், காவிரைக்கரையிலும் அரிசியையும், கோதுமையைமு உண்டு வாழும் பார்ப்பனப் பண்டாரங்கள் மமதையுடன் சொல்றது ஒன்னும் புதுசு இல்லையே?

      • அப்போ யாருதான் தலிவரு?சொல்லுன்க்னா?வீழ்ந்த ரசியாவின் மும்மூர்த்திகள்(லெனின் ஸ்டாலின் மாவோ ) மட்டுமதானே!வேற யார நீங்க ஒப்புகுவீங்க .அப்புறம் வந்த போரிஸ் எல்சின் கோர்பச்சேவ் பற்றியெல்லாம் எழுதலாமே!!அவர்களெல்லாம் போலி கம்யூநிச்டுகல்னா அப்புறம் லெனின் சொன்ன கருத்துக்கள் மக்கள் ஏற்கும் அளவு இல்லையா?இதையும் சொல்லுங்க.ஏன் செசென்யாவை இறுக்கி புடிச்சிக்கிடிருந்தீங்க(இன்னும் இருக்கீங்க?)

        • சரியா சொன்னீங்க.வினவு எல்சின் கோர்பச்சேவ் போன்ற “பெரும் புள்ளிகள்” பற்றியும் எழுதலாமே!!

        • கரக்ட், இவங்களுக்கெல்லாம் மார்க்ஸ், லெனின், மாவோதான் தலைவருங்க. அவங்கெல்லாந்தான் நாட்டு சொத்தை நல்லா சொரண்டி பொது மக்களுக்கு எப்படி கூறு போட்டு கொடுக்குறதுன்னு விலாவாரியா சொல்லியிருக்காங்க. அப்படி இவங்க குடுத்துட்டு அமெரிக்காக்காரனோ சீனாக்காரனோ வந்தா, விரலை சூப்பிக்கிட்டு உக்கார்ந்திருப்பாங்க. காந்திகூட “ஏழைங்களுக்கு கொடுங்கோ, ஏழைங்களுக்கு கொடுங்கோ” ன்னுதான் வாழ்நாள் ஃபுல்லா சொல்லிக்கிட்டு இருந்தாரு. இவங்களுக்கு இங்கே என்ன கோபம்னா அதை அவரு “ஏய்! யாரங்கே! அரசு கஜனாவை ஏழைகளுக்கு திறந்துவிடுங்கள்” ன்க்ற மாதிரி முழு மனசா சொல்லலியாம். மென்னு முழுங்கி சொன்னாராம். அதக்கூட அப்ப இருந்த அரசியல்வாதிங்க கேக்கலியாம். வினவுல இன்ஃபர்மஷன் நிறய இருக்கு, ஃபோகஸ் காமெடியா இருக்கு.

          • //கரக்ட், இவங்களுக்கெல்லாம் மார்க்ஸ், லெனின், மாவோதான் தலைவருங்க. அவங்கெல்லாந்தான் நாட்டு சொத்தை நல்லா சொரண்டி பொது மக்களுக்கு எப்படி கூறு போட்டு கொடுக்குறதுன்னு விலாவாரியா சொல்லியிருக்காங்க.\\

            நாட்டு சொத்து என்பது எது?

            • நாட்டு சொத்து என்பது எது?

              இன்றைய சூழலில் நாட்டு சொத்து ஆரம்பம் ஆவது நம் வரிப் பணத்தில்.
              அதில் கிடைக்கும் உபரி வருமானத்தில் கட்டும் அணை போன்ற கட்டுமானங்கள் நாட்டு சொத்து ஆகும்.
              அதைத் தாண்டினால், ஆதாயம் தரும், இண்டஸ்ட்ரி, ட்ரேட், இரிகேஷன் போன்ற எந்த ஒரு ஸ்தாபிதமும் நாட்டு சொத்து ஆகும்.
              அதற்கு அடிப்படையாக இருக்கும் நிலம், நீர், ரோட், பில்டிங்க், டௌன்ஷிப் எல்லாமே நாட்டு சொத்து ஆகும்.
              இவற்றிற்கு ஆதரமாக இருக்கும் பலதரப்பட்ட திறமை வாய்ந்த பலதரப்பட்ட மக்களும் நாட்டின் சொத்து ஆவர்.
              இது போக, எக்ஸ்போர்ட், இம்போர்ட், பின்னர் பல வரவு செலவுகளும் நாட்டின் சொத்தை நிர்ணயிக்கின்றன.
              கோயில், குளங்கள், லிட்டரேச்சர், கல்ச்சர், ஹெரிடேஜ் எல்லாம் நாட்டு சொத்துக்களாக கணக்கிடலாம், அவை இப்பொழுது தேவையில்லாத விஷயங்கள்.

              நாட்டு சொத்தை சுரண்டுவது/கொள்ளையடிப்பது எப்படி?

              நாட்டின் முன்னேற்றதிற்கு செலவிட வேண்டிய வரிப் பணத்தை ஏழைகளுக்கு வாரி வழங்குவது.
              செய்தவர்கள் குடும்பத்துடன் சிறை சென்றாலும் வாங்கிக் கொண்டவர்கள் வாளாவிருப்பது.
              அப்படி செய்துவிட்டு, இண்டஸ்ட்ரியல், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட்டுக்குப் பதில் எம்என்ஸிகளை அண்டி இருப்பது.
              நாட்டின் வருவாய் ஈட்டும் முக்கியஸ்தர்களை அவர்கள் பணக்காரர்கள் என்று சொல்லி அவர்களை உண்டு இல்லை என்று ஆக்குவது.
              அந்த இடத்தில் எம்என்ஸிக்களை இட்டு நிறைப்பது.
              படித்தவர்கள், பணக்காரர்கள், பார்ப்பனர்கள் இவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களை இருக்க விடாமல் செய்வது.
              அந்த இடங்களில் ஏழைகள் உட்கார்ந்துகொண்டு எந்த வித தார்மீக பொறுப்புமின்றி தாம் தூம் என்று குதிப்பது.
              அதற்கு காந்தி, பாரதி, மற்றும் லெனின், மார்க்ஸ் போன்றோரை துணைக்கு அழைப்பது.
              வசதி பெற்ற முன்னால் ஏழைகள் வசதி பெறாத ஏழைகளுக்காக சமுதாயத்தை சாடுவது.
              கிடைக்கிற கேப்பில் வெளிநாட்டுக்கு ஓடுவது.
              கோவில், குளம், சாதி, மதம் போன்ற எந்தவித நமது பாரம்பரியத்தையும் கெட்ட வார்த்தையை கேட்டது போல் விதிர் விதிர்ப்பது.
              அதற்கு பதில் மேற்கத்திய முறைகளை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொள்வது.
              மொத்தத்தில் நாட்டை சுயநிர்ணயமற்ற சோத்துக் கூட்டமும், இருப்போரை கொள்ளையடித்து, அயலாரை அண்டி பிழைக்கும் அடிமைகள் கூட்டமும் நிறைந்ததாக மாற்றுவது.

              • //நாட்டின் முன்னேற்றதிற்கு செலவிட வேண்டிய வரிப் பணத்தை ஏழைகளுக்கு வாரி வழங்குவது//

                முதலில் நாடு என்பது எது பெரும்பான்மை மக்களா அல்லது நாட்டை கொள்ளை
                அடித்து தொழிலதிபர்களென்ற போர்வையில் திரியும் விரல் விட்டு என்னக்கூடிய அயோக்கியர்களா?
                நாட்டின் முன்னேற்றம் என்பது எந்த மக்களின் முன்னேற்றம்.
                பெரும்பான்மையான ஏழைமக்களின் முன்னேற்றமா?. குறுக்குவழி
                வாய்ப்புகிடைத்த சிறுபான்மையான புத்திசாலிகளாக காட்டிக்கொள்ளும்
                கொள்ளையர்களா?.

                //நாட்டின் வருவாய் ஈட்டும் முக்கியஸ்தர்களை அவர்கள் பணக்காரர்கள் என்று சொல்லி அவர்களை உண்டு இல்லை என்று ஆக்குவது//
                இந்த அயோக்கியர்களுக்கு தொழில் தொடங்க அரசு செய்யும் சலுகைகளில் பாதியளவு கூட சிறுதொழில்களுக்கு செய்வதிலை. ஏனென்றால் இந்த அயோக்கியர்களின் அரசியல் பிரதிநிதிகள்தான்
                இந்த அரசு மற்றும் அரசியல்வாதிகள்.அதனால்தான் முக்கிய மசோதாக்களில் சமூகசேவகர்களை சேர்த்துக்
                கோள்ளமாட்டார்களாம்..மனசாட்சிக்கு விரோதமில்லாமல் 25 வருடமாக தொழில்செய்யும் ஒருவரால்
                ஒரு வீடுகூட வாங்க முடியவில்லை.ஆனால் இவர்கள் 10 வருடத்தில் 1000…..10000…500000..(இதற்குமேல் சுழியங்களை சேர்த்துக்கொள்ளவும்) கோடி சம்பாதித்தார்களாம்?அந்த ரகசியத்தை சொல்லவும்!.இந்த அயோக்கியர்கள் பிற்காலத்தில் வருவாய் ஈட்டும் முக்கியஸ்தர்கள் .ஏழைகளின் நிலங்களை
                தீவிரவாதிகளால்(போலீசு துப்பாகி வைத்து காந்திய வழியில்?) துப்பாகிமுனையில் மிரட்டி பல
                நேரங்களில் ஏழைகளை கொலைகள் செய்தும் பிடுங்கிய்ம் இந்த அயோக்கியர்களுக்கு கொடுக்கப்
                படுகிறது.ஆனால் இவர்கள் ஏழைகளுக்கு எதிராக இவர்களின் பிரதிநிதிகளான அரசு மற்றும் அரசியல்வாதிகளை வைத்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.இதனால் இந்த முக்கியஸ்தர்களையும் அவர்களை உருவாக்கும் அரசியல்வாதிகளையும் உண்டு இல்லை என்று ஆக்குவது தவறில்லை. கல்வியில் கூட ஏற்றதாழ்வு.

                ஏழைகள் என்பவர்கள் யார். ஏழைகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்.இதை முதலில் தெளிவாக தெரிந்துகொள்ள்வும்.

                • // இந்த முக்கியஸ்தர்களையும் அவர்களை உருவாக்கும் அரசியல்வாதிகளையும் உண்டு இல்லை என்று ஆக்குவது தவறில்லை.//

                  Does this include Ambanis, Ratans and Dr. Singh.

                  அப்ப யாருங்கனா தலீவரு? கோவணம் எங்கள் தேசிய உடை டால்டா டின் எங்கள் தேசிய சின்னம் அப்படியா?

                  ஏழைகள் என்பவர்கள் யார்? சோற்றுக்கு வழியில்லாதவர்கள். ஏழைகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள்? ஊதியம் இல்லததால். இந்த ஊதியத்தை கொடுப்பவர்கள் யார்? பணக்காரர்கள். அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். எல்லாப் பணக்காரர்களும் ஏழையை சுரண்டித் தின்னுபவர்கள் இல்லை. ஏழைகளயும் நாட்டையும் வாழ வைக்கும் ஒரு அங்கமாகவேத் திகழ்கிறார்கள்.

                  மக்களை முன்னேற்ற வேண்டும் மக்களை முன்னேற்ற வேண்டும் என்று வெறும் கூச்சல் போட்டால் மட்டும் போதாது. எப்படி முன்னேற்ற வேண்டும் என்றும் ஆராய வேண்டும். அப்படிப் பார்க்கும்போது ஏழை பணக்காரர் மோடல் இயல்பாகவே வரும். இந்த மோடலில் எப்படிப்பட்ட பணக்காரர்களை உருவாக்குகிறோம் எத்தகைய கட்டமைப்பை உருவாக்குகிறோம் என்பதில்லேயே ஒரு நாட்டின் திறன் இருக்கிறது. வெறும் கூச்சலில்லை.

                  ஏழை பணக்காரன் என்பது இயற்கை, இயல்பு, நியதி. இந்த சம்பிரதயத்தை அழிக்க நினைத்த எந்தவொரு நாடும் அழிந்துதான் போயிருக்கின்றனவே தவிர உயர்ந்ததில்லை. ரஷியா, சீனா, பிரான்ஸ் உதாரணங்கள்.

    • இந்த தி இந்து தமிழ் வந்ததிலிருந்து ஜெ மோ, அ மார்க்ஸ் ஞாநி ஆகியோர் ரவுசு தாங்க முடியல. இன்னிக்கு அ மார்க்ஸ் காந்தியைப்பற்றி எழுதியிருக்கிறார். அதையெல்லாம் படிச்சுட்டு பலர் வைக்கோலை வைத்து சொறிஞ்சுட்டு இருக்காங்க (புல்லரிக்குதாம்)

  5. பர்பானிகளுக்கு(Bஅஎக்& மதி கெட்ட இந்தியா)கோவம் வந்திரிச்சு. பார்தீர்களா? எவ்வளவு கோபம் என்பதை!

    இனித்தான் பார்க்கப் போகிறீர்கள். அடங்கிக்கிடக்கும் வர்கத்தின் கோவத்தை.வரும்போது பாருங்கள் உங்களூக்கெல்லாம் என்னநடக்குமென்று. உங்கள் வர்க்கத்தின் மிக கேவலமான குறியீடுதான் காந்தி என்பதை காலம்நிரூபிக்கும். அதை சொல்வது உங்களுக்கு பொறுக்கவில்லயா?

  6. ”நான் விரும்புவதும், இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும், ஏங்கியதும், என்னை நானே அறிய வேண்டும என்பதற்கும், கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும், மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன்; நடமாடுகிறேன். நான் இருப்பதும் அதற்காகவேதான். நான் பேசுவன, எழுதுவன, ராஜீயத் துறையில் முயற்சி செய்வன ஆகிய றாவும் இக்குறிக்கோளை கொண்டவையே.

    26, நவம்பர், 1925 ல் தனது சத்திய சோதனை முன்னுரையில் காந்தியார் இவ்வாறு எழுதி

    “தம்மைத் தாம் தூய்மைப் படுத்திக் கொள்ளாமல் அகிம்சை தர்மத்தை அனுசரிப்போமென்பது வெறும் கனவாகவே முடியும். மனத்தூய்மை இல்லாதோர் என்றுமே கடவுளை அறிதல் இயலாது.

    ”ஆன்மத் தூய்மைக்கான மார்க்கம் மிகவும் கஷ்டமானதாகும். பூரணத் தூய்மையை அடைவதற்கு, அவர் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் காமக் குரோதங்களை அறவே நீக்கியவராக இருக்க வேண்டும். அன்பு-துவேஷம், விருப்பு-வெறுப்பு என்னும் எதிர்ப்புச் சுழல்களினின்று அவர் வெளிப்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

    ”அந்த மூன்று தூய்மைகளும் இன்னும் என்னுள் இல்லை என்பதை நான் அறிவேன்.

    ”என் உள்ளத்தினுள்ளே மறைந்துகொண்டு தூங்கிக் கிடக்கும் ஆசாபாசங்களை நான் அனுபவித்து வருகிறேன். அவை இன்னும் என்னிடம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப்பற்றிய எண்ணம், நான் தோல்வியும்படி செய்துவிடவில்லையாயினும், அவமானப்படும்படி செய்கிறது.

    இறுதியில் மேற்கண்டவாறு எழுதி விடைபெற்றுக் கொள்கிறார்.

    தான் மோட்சத்தை அடைய வேண்டும் என்கிற சுயநலம் கருதியே காந்தியார் அனைத்தையும் செய்துள்ளார். தனது சுயநலனுக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களையும் தன்பின்னே அழைத்துச் சென்றுள்ளார். சரி, அதிலாவது வெற்றி பெற்றாரா என்றால் அவமானத்தோடு இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்.

    காந்தியாரின் வாழ்க்கை முழுதுமே சுய முரண்கள் நிறைந்த, நடைமுறையில் வெற்றி பெறாத அனுபவங்களே நிறைந்திருக்கின்றன.

    காந்தியின் உண்மை முகத்தை அறிய அவரது சுயசரிதையே போதுமானது. வேறு ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை.

    605 பக்கங்கள் கொண்ட சத்திய சோதனை வெறும் முப்பது ரூபாய்க்கு கிடைக்கிறது. 1994 லிருந்து 2009 வரை 4 60 000 பிரதிகள் தமிழில் மட்டும் அச்சடித்துள்ளார்கள். எத்தனை பேர் முழுமையாகப் படித்தார்கள், படித்தவர்களில் தொகுப்பாகப புரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை.

    காந்தியின் மீது உயர்ந்த மதிப்பு வைத்துள்ளவர்கள் முதலில் சத்திய சோதனையை படித்துவிட்டு வாருங்கள். காந்தியைப் பற்றி மேலோட்டமாக கேள்விப்பட்ட செய்திகளிலிருந்து விவாதிப்பது அறிவுபூர்வமானதாக இருக்காது, உணர்ச்சிவயமானதாகத்தான் இருக்கும். இது ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச் செல்லாது.

    • உங்கள் கருத்து முற்றிலும் சரி.

      சத்திய சோதனை புத்தகத்தை படித்தால் சுதந்திர போராட்ட வரலாற்றை ஓரளவிற்கு தெரிந்துக்கொள்ள முடியும் என்று நினைத்தேன். அது, மலத்தில் அரிசி தேடும் செயல் என்று படித்த பின்னர் தான் மண்டைக்கு உறைத்தது. ஆனால் திட்டமிட்டு-வலியச் சென்று தொடர்பு ஏற்படுத்தி ஒரு நாட்டின் தலைவராக இப்படியும்(த்தூ) உயரலாம் என்பது நன்றாகவே புரிந்தது. இன்னும் என்னென்ன எளவெல்லாமோ கூட புரிந்தது…

      ஆனால், அப்புத்தகத்திற்கு இச்சிறு விமர்சனக் கட்டுரை எல்லாம் எம்மாத்திரம்!

    • ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது அல்லது வாழக்கூடாது என கற்றுக்கொள்ள விரும்பினால், சத்திய சோதனையை தவறாது படியுங்கள்!!

    • முஸ்லிம் தீவிரவதிகளை பற்றி , முஸ்லிம் தீவிரவாதம் பற்றி எப்போதாவது எலுதி இறுக்கிரீகளா நண்பரே ! காந்தி மேல் ஏன் இவ்வலவு துவேசம் என்று தெரிந்த்து கொல்லலாம?

  7. காந்திய எல்லாரும் தான் திட்டுறீங்க – இடது, வலது, தலித், ஆர்.எஸ்.எஸ்., தி.க., இன்னபிற

    இது என்ன புதுசா ?

  8. இதை விட இன்னும் எவ்வளவோ நல்ல விசயங்ள் அவரிடம் இருக்கின்ட்றன.

        • அமெரிக்காவுக்குப் போனாலும், ஆட்டுப் பால் அருந்துவதைச் சொல்கிறீரா?
          அவித்த கடலை உண்டதைச் சொல்கிறீரா?

          மதுரையில் அரையாடையோடு இருந்த விவசாயிக்கு
          அரையாடைதான் விதி என்று நிர்மாணிக்கப் பட்டிருந்தது.
          அதைப் பார்த்து இவரும் அரையாடை அணிந்து கொண்டால் அதுதான் எளிமையா?
          ஆனால் அந்த மதுரை விவசாயி அரைப் பட்டினி இருந்தாரே அது போல காந்தி இருந்தாரா?
          கடல் கடந்து அரசியல் செய்யும்போதுகூட, கொழுப்பான ஆட்டுப் பால்; சத்து மிகுந்த நிலக் கடலை.

          அதே மதுரை நபர் சோற்றுக்கு வேறு வழியே இல்லாவிட்டால் ‘பீ’ அள்ளி சம்பாதிக்கவும் தயங்கமாட்டார்.
          நம்மவர் அதைச் செய்வாரா?

          கந்தல் துணி மதுரைக்காரர் எளிமைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப் பட்டார்.
          கதராடைக்காரர் பப்ளிசிடிக்காக எளிமையை வலிந்து ஏற்றுக்கொண்டார்.

          • ஆதிமூலம் எனும் மகாத்மா, ‘இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே’ எனும் வினவின் இன்னொரு கட்டுரையில் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். காந்தியின் எளிமை ஏணி வைத்து ஏறினாலும் இந்த ஏழைப் பங்காளனின் எளிமையின் கால் தூசைக்கூட தொட்டுவிட முடியாது!

            ஐய்யா ஆதிமூலம் அவர்களின் எளிமையைக் கண்டு வெட்கப்படுங்கள்!!

          • மதுரைக்கர்ரருக்க காந்தி அரையாடை அணிந்தார்… ஆதிமூலதுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் (வருத்தப்படுவதை தவிர) புதிய பாமரன்? நாடெங்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் பால் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்…. நீங்கள் காபி/ஹர்லிக்க்ஸ்/ காம்ப்ளான் குடிப்பதை நிறுத்திவிட்டீர்களா புதிய பாமரன்? இன்று எத்தனை தலைவர்கள் தொண்டர்களின் வாழ்கை முறையை பிரதிபலிகிறார்கள் சொல்லுங்கள்? நீங்கள் புதிய பாமரன் அல்ல. (அரதப்) பழைய பாமரன்…. முதலில் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து கொண்டு பிறகு கமெண்ட் போடுங்கள். எங்களுக்கும் கேள்வி கேக்க தெரியுமுல்ல…

            • காந்தி அரையாடை அணிந்தது “நீங்கள் இப்படி அரையாடை மட்டுமே அணிந்திருங்கள்” என்று கூறியது போல் உள்ளது. இது ஒரு அரசியல்வாதியின் மலிவான விளம்பர யுக்தியாக மட்டுமேதான் இருக்க முடியும். அவர்களும் கோட்டு சூட்டு போடவேண்டும் என்று எண்ணியிருந்தால் சரியாக இருந்திருக்கும். அம்பேத்கர் அரையாடை கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
              ஒவ்வொரு தனித்தனி ஆதிமூலதிற்காக சென்று உடை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அது எம். ஜி.ஆர் பாணி. காந்தி பாணி. ஏழை பணக்காரன் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிரந்தரமாக களையப்பட்டால் தனித்தனி ஆதிமூலத்திற்கு சட்டை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

              • இன்று எத்தனை தலைவர்கள் தொண்டர்களின் வாழ்கை முறையை பிரதிபலிகிறார்கள் சொல்லுங்கள்?

                • மீண்டும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். பொதுவுடைமை சமுதாயத்தில் தலைவனுக்கோ தொண்டனுக்கோ தேவைகள் இருக்காது. எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு ஒரு தலைவனின் அவசியம் உள்ளதா என்று. மார்க்ஸ் லெனின் ஆகியோர் ஆசிரியர்கள். தங்களை அடுத்தவர் விமரிசிப்பதை என்றுமே தடை செய்ததில்லை.

            • நூறு ஆதிமூலத்திடமிருந்து பிடுங்கிக்கொண்டிருப்பவர்களை ஆதரித்துப்பேசி அவர்கள் நலனிற்காக எல்லாம் செய்துவிட்டு பின்னர் ஒருவருக்கு சட்டையை கொடுப்பவரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

  9. //அப்போ யாருதான் தலிவரு?சொல்லுன்க்னா?வீழ்ந்த ரசியாவின் மும்மூர்த்திகள்(லெனின் ஸ்டாலின் மாவோ ) மட்டுமதானே!வேற யார நீங்க ஒப்புகுவீங்க .அப்புறம் வந்த போரிஸ் எல்சின் கோர்பச்சேவ் பற்றியெல்லாம் எழுதலாமே!!அவர்களெல்லாம் போலி கம்யூநிச்டுகல்னா அப்புறம் லெனின் சொன்ன கருத்துக்கள் மக்கள் ஏற்கும் அளவு இல்லையா?இதையும் சொல்லுங்க.ஏன் செசென்யாவை இறுக்கி புடிச்சிக்கிடிருந்தீங்க(இன்னும் இருக்கீங்க?)//

    என்ன தான் வேற பேர்ல வந்தாலும் கடையேழு வள்ளல்களில் ஒருவர் கொண்டைய மறைக்க மறந்துடுறார். மன்னிச்சு விட்டுடுவோம்.

  10. தோழர் வினவு,

    மருதன் எழுதி கிழக்கு வெளியீடாக வந்திருக்கும் ‘ இந்தியப் பிரிவினை’ புத்தகத்தில்

    சில வரிகள் வரும் காந்தியைப் பற்றி. அது அவர் யூதர்களுக்கு சொன்ன அருள்வாக்கு.

    படித்துப் பாருங்கள். சரியான பைத்தியக்காரத்தனமான உளறல் அது.

  11. This is a nice article, but the conclusions are not correct.

    Gandhi, during his struggle for freedom, was in a tri-junction. One side is the poor and oppressed, the other side is the rich and the tradionalists, and the third side is the all powerful British. Gandhi was pro-poor all along. He couldn’t step out right off and claim for poor. Then he would lose the support of the rich and traditionalists who were very powerful at that time. Similarly he couldn’t make hard stand against the British as they could get very hard on him, that would jeopardise his struggle (for freedom). He has to soft pedal sometime especially against the British. With such situations contradicting stand and statements are inevitable.

    Gandhi was for poor and oppressed all along. And it was the poor who supported him the most. Everytime when Gandhi was jailed, it was the poor and loyalists who went on a rampage, and made the British to pause. It was this nexus, between Gandhi and the poor and oppressed who took the struggle all along.

    Same situation he was facing after the independence. He couldn’t declare a pro-poor stand because it will affect the continum. He probably was expecting the country will slowly transform to being pro-poor.

    Am I a fan of Gandhi? No. He swam into these headless models and screwed all up. But I am not unconvinced about him being a master tactician and his die hard courage. May be his tactical sense and courage sees a trend for headless model, I don’t know.

  12. காந்தியை பற்றியும், மோடியை பற்றியும், இந்திய ராணுவத்தை பற்றியும், காவல் துறையை பற்றியும் குறை பேசும் நம்மில் எத்தனை பேர் சமுதாய சீர்திருத்தங்களை உருவாக்கி அதை நம் வாழ்க்கையில், நம் குடும்பன்ல்களில் நடைமுரைப்படுத்தியிருக்கிறோம்.கூட்டங்கள் போடுவதாலும்,கோசங்கள் போடுவதாலும்,
    நாம் யோக்கியர்கலாகிவிட முடியாது.அகமதாபாத்தில் வன்முறை நடந்த போது அமைதி ஏற்படுத்த அங்கு மகாத்மா காந்தி சென்ற வழியில் எதிர்ப்பாளர்கள்
    மனித கழிவுகளை (மலங்களை) பாதையெங்கும் பரப்பி வைத்தனர். ஆத்திரப்படாத
    காந்தி தன அருகில் உள்ளவர்களிடம் ஒரு கூடையை வாங்கி அந்த மனிதக்கழிவுகளை
    தன கைகளால் அள்ளிப்போட்டு சுத்தம் செய்தார் அவர் சுத்தம் செய்தது பாதையை மட்டுமல்ல பாசி படிந்த மனித மனங்கலயும்தான்.படிப்பில்லாத,பணவசதியில்லாத,சுதந்திரமில்லாத காலத்திலும் சமுதாயத்திற்காக வாழ்ந்து மறைந்தவர்களை பற்றி குறை சொல்ல நமக்கு எந்த யோக்கியதையும் இல்லை. அனைத்து வசதியும் வைத்திருக்கும் நாம் இப்போது என்ன கிழித்துவிட்டோம்.பகுத்தறிவு கொண்டவன் தன குடும்பத்தில் நடக்கும் மூட நம்பிக்கை சடங்குகளை தடுக்க தயாராக இல்லை, அரசியல், பொது இயக்கத்தில்
    இருப்பவன் தன தலைவன் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட துணிவு இல்லை, அரசியல்வாதியால் அமைக்கப்படும் அரசாங்கத்தில் உள்ள திருடர்கள்,சுயநலவாதிகள் செய்யும் தவறுகளுக்கு தேசத்தை குறை சொல்லும் குருட்டு அறிவாளிகள் திருந்தும் நாள் எந்நாளோ???/ மாச்சம்பாளையம் மாரியப்பன்

    • ////அதே மதுரை நபர் சோற்றுக்கு வேறு வழியே இல்லாவிட்டால் ‘பீ’ அள்ளி சம்பாதிக்கவும் தயங்கமாட்டார்.
      நம்மவர் அதைச் செய்வாரா??//////

      புதிய பாமரா…மாரியப்பன் கருத்தை வாசிக்கவும்…

  13. What is the idea of publishing this article ?
    now the one million dollar question is that whether we should vote for Congres in 2014 General Election ?
    We need enthusiastic youngesters to form the Government at Centre and a young leader to lead India,
    as Dr. Manmohan Singh is a DUMMY…master, puppet in the hands of Sonia Gandhi..

  14. இதுபோன்ற விமர்சனங்களின் மூலமும் பதிவுகளின் மூலமும்தான் மக்களின் மனதில் பதியவைக்கப்பட்டுள்ள கந்தி என்னும் துரோகியை தூக்கிஎறிய முடியும்.
    நன்றி வினவு.

    மேலும் இந்த சோளகாட்டு பொம்மையை பற்றி ஆதாரத்துடன் அறிந்து கொள்ள ‘புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வெளியீட்டுள்ள கீழைக்காற்று பதிப்பகத்தின் ” காந்தியும் காங்கிரசும்-ஒரு துரோக வரலாறு” 50 பக்க நூலை படிக்கவும்.

    இந்த நூலில் இருந்து சில வரிகளை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

    இன்றைய அரசியல் தலைவர்கள் எழுத்தாளர்கள் சிலரும் காந்தி,பகவத்சிங்கின் மரணதண்டனையை குறைக்கப்பாடுபட்டார் என்றே கூறுகிறார்கள்.
    காந்தியார் தண்டனைய குறைக்கச் சொன்னாரா என்பது ஒருபுறமிருக்க,தண்டனையை எப்போது நிறைவேற்றலாம் என்று அரசுக்கு யோசனை சொல்லியிருக்கிற விசயம் அரசாங்க கோப்பில் உள்ளது.
    இச்செய்தியை தி ட்ரிபியூன் பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது.பட்டாபி சீத்தாராமையாவும் பட்டும் படாமல் ஒப்புக்கொள்கிறார்.தண்டனையை குறைக்க காந்தியார் முயன்றும் இர்வின் பிரபுவால் அந்தவிசயத்தில் உதவ இயலாமல் போய்விடது என்றும்,கராச்சி காங்கிரசு மாநாடு முடியும்வரை வேண்டுமானால் தண்டனையை ஒத்திபோடுவதாகக் கூறியதாகவும் காந்தியாரோ,இவ்விளைஞர்களைத் தூக்கிலிடுவதாக முடிவு செய்து விட்டால் காங்கிரசு மாநாட்டுக்கு முன்பே தூக்கிலிடிவதுதான் நல்லது என்று உறுதியாகக் கூறிவிட்டதாகவும் சீதாராமையா எழுதுகிறார்.
    எப்படியோ காந்தியார் தான் ஒரு அருமையான ராஜதந்திரி என்பதை நிருபித்துவிட்டார்.ஒருகால் ,இர்வின் பிரபு கூறியமாதிரி மாநாட்டுக்குப் பிறகு தூக்குத் தண்டனை வைத்திருந்தால் பெரிய குழப்பம் ஏற்பட்டு காந்தி-இர்வின் ஒப்பந்தம் நிறைவேற பகத்சிங்கின் தண்டணையைக் குறைப்பது ஒரு நிபந்தனையாக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் காந்தியார் கூற்றுப்படி மாநாட்டுக்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டுவிட்டதால் .வெறும் இரங்கல் தீர்மானம் ஒன்றைநிரைவேற்றிவிட்டு,ஒப்பந்தத்தை மாநாடு எற்றுகொண்டுவிட்டது.-[நூலின் கடைசிபக்கம்]

  15. சோஷலிசம் பற்றியும் கம்யூனிசம் பற்றியும் காந்தி சொன்ன விஷயங்களை மருதன் எழுதியிருக்கிறார். படியுங்கள். http://www.tamilpaper.net/?p=6861 அவர் என்ன சொன்னார் என்பதையே சொல்லாமல் அவரை திட்டுவதை விட சொல்லிவிட்டு திட்டுவது நல்லது.

  16. அக்டோபர் 2 நமக்கு விடுமுறை, காந்தி ஜெயந்தி என எனது நண்பர்களிடம் கூறினேன். அதற்கு அன்றைய தினம் காந்தி பிறந்தார அல்லது சுட்டுக்கொல்லப்பட்டாரா என தன் திருவாய் மலர்ந்தான். என்னவொரு அருமையானக் கேள்வி அல்லவா. முன்னா பாய் படம் பார்த்து என்ஜாய் பண்ணியவன் காந்தியக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் இல்லையல்லவா. இந்தியாவின் தேசப்பிதா என அழைக்கப்படும் போற்றப்படும் மகாத்மா என அடைமொழி எல்லாம் மக்களுக்கு மறந்தே வெகு நாளாயிற்று. அதான் நாம சுட்டு கொன்னுட்டோமே.
    இந்த அரையாடை மனிதன் அப்படி என்ன பெரியதாய் கிழித்துவிட்டான். விடுதலையென்பது லட்டா, அப்படியே தூக்கி நமக்கு தந்துவிட. அப்படி இவன் சாதித்தது என்ன?
    அகிம்சை என்னும் சொல்லைக் கண்டுபிடித்தவர். வன்முறை என்றும் நிலைக்காது, மிதவாதமே என்றும் நிலைக்கும் எனக்கூறி நமக்கு சுகந்திரம் வாங்கி தந்தவர். உலகப்போரில் அடிவாங்கிய ஆங்கிலேயர்களிடம் மோதாமல் சம பலத்துடன் மல்லுகட்டியவர். இவரைப் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அன்றைய இந்தியாவின் ஒட்டு மொத்த சக்தியாக திகழ்ந்தவர்.
    இந்திய விடுதலைக்குப் பின் காங்கிரஸை கலைத்துவிடக் கூறியதை யாரும் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. தன்மீது தவறே அல்லது தன் கொள்கையின் மீதான தவறுகளை அவர் நம்மூர் அரசியல்வாதியைப் போல் மறுக்கவில்லை. தன் மனதில் பட்ட உண்மைகளை செல்ல ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை. மனதில் ஒன்று வைத்து வெளியே ஒன்று சொல்லும் சாதாரண மனிதனாக அவர் இல்லை.
    தென் ஆப்பிரிக்க மக்களின் உரிமைப்போராட்டம் நடத்திய நெல்சன் மண்டேலா, அமெரிக்க மக்களின் உரிமைப்போராட்டம் நடத்திய மார்ட்டின் லூதர் கிங் காந்தியவாதத்தால் கவரப்பட்டவர்கள்தான்.
    காந்திவாதம் எப்படி செயல்படுகிறது என்று பார்போமா..
    மவோஸ்டுகள் நக்சல்பாரிகள் ஆயுதம் ஏந்தி போராடுவது நாம் அறிந்ததே.. இவர்கள் போராடுவது சுமார் முப்பது ஆண்டுகள் என எடுத்துக்கொள்வோம். முப்பது ஆண்டுகளாக ஆயுதம் எந்திய கைகள் வெறிபிடித்த முடிவுகள் எல்லாவற்றையும் அவர்கள் ஒரேநாளில் விட்டு ஆட்சிபீடம் ஏறி மக்களிடம் அன்பு பாரட்டமுடியாது. பாராட்ட மனமும் வராது. கொஞ்சநாள் கழித்து பழைய ஆட்சியாளர்களை விட அதிக மடங்கு கொடுமையே அவர்கள் செய்யமுடியும்.
    ரஷ்ய ஆதிக்கத்தை ஆப்கானில் ஒழிக்க அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட தாலிபான்கள் அம்மக்களிடம் காட்டிய அன்பு மிகையல்ல என்பது யாவரும் அறிந்ததே. இதைத்தான் காந்தி அன்றே வன்முறையால் பெறப்படும் வெற்றி தற்காலிகமானதே எனக்கூறினார்.
    அது சரி பின்னர் எப்படி புரட்சி செய்வது. கத்தியின்றி இரத்தமின்றி.
    ஆயுதம் ஏந்துவதை விட அங்கு ஒரு பள்ளியை நிறுவி அங்குள்ள இளம் மாணவர்களுக்கு மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுக்கவேண்டும். அது எப்படி முடியும் எனக்கேட்கலாம்? ஆயுதம் வாங்க காசு இருக்கும்போது கல்வி பயல முடியாது எனக்கூறுவது நியாமற்றதே.
    இவர்கள் IAS, IPS, DOCTORS, ENGINEERS, TEACHERS என படித்தால் குறிப்பிட்ட இனமக்களின் வாழ்வு உயரும். அதே முப்பது ஆண்டுகளில் இம்மக்கள்களின் வாழ்கை புதியபரிமானத்தை எட்டும்.
    ஒரு மாவோ முப்பது வருடம் போரடினால் அது தற்காலிகமானதே, ஒரு காந்தியவாதி போராடினால் அது நிரந்தரமானதே. இதுதான் காந்தியம்.
    வெ.இராமலிங்கம் பிள்ளை முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.
    ’கத்தி யின்றி ரத்த மின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’

    • அஹிம்சை வாதிகளால் நாடு சீரழிந்தது தான் மிச்சம் ..
      பொருளாதாரம் எனும் நெடுஞ்சாலையில் அன்று ஆங்கிலேயன் இந்தியாவை சூறையாடி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தான் .அவனுடைய வழியில் ஒரு எருமை மாடு கூட்டம் அஹிம்சை அஹிம்சை என்று வாய் மெண்டு கொண்டு இருந்தது.அதை பார்த்த ஆங்கிலேயன் ச்சு …ச்சு ..என விரட்டி பார்த்தான் .சுரனையில்லாத எருமை மாடுகள் அப்படியே நின்று கொண்டு இருந்தது .எருமை மாடுகளுக்காக கொஞ்சம் வழிவிட்டு திரும்பவும் ஜெட் வேகத்தில் இன்று வரை பயணித்து கொண்டு இருக்கிறான் .ஒதுங்கி செல்லும் ஆங்கிலேயனை பார்த்து எருமை மாடுகள் சுதந்திரம் கிடைத்து விட்டது என மே …மே …மே ….(அஹிம்சை )என்று கத்தி கும்மாளமிட்டது .இன்று ஆங்கிலேயன் மட்டும் இல்லாமல் உலகின் பல நாடுகள் இந்தியாவை உறிஞ்சிக்கொண்டு இருக்கிறது .ஏற்றுமதி என்னும் பெயரில் இந்தியாவின் மூலபொருட்கள் அடிமட்ட விலைக்கு லாபவெரியினால் உரிஞ்சபடுகிறது .அன்று ஆங்கிலேயன் கஷ்ட்டப்பட்டு உறிஞ்சினான் .இன்றோ மெத்தையில் உட்க்கார்ந்து கொண்டு அது வேணும் , இது வேணும் ,தரமாக வேண்டும் என்று ஆர்டர் போடுகிறான் .இப்படி இந்தியாவையே எருமை மாடாக மாற்றிய பெருமை அஹிம்சைவாதிகலையே சாரும் . அன்று பகத்சிங் எனும் இளஞ்சிங்கம் ஆங்கிலேயனுடைய வழியில் குறுக்கிட்டு வேட்டை யாடியது .அதை கண்டு மிரண்டு போன ஆங்கிலேயன் எருமைமாடுகளின் உதவியுடன் கொன்று போட்டான் ..அன்று மட்டும் அல்ல இன்றும் கூட பொருளாதார நெடுஞ்சாலையில் சிங்கங்கள் குருகிட்டால் எருமை மாடுகளின் உதவியுடன் கொன்று குவிப்பான் ..

      • தென்ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் நிறவெறி காரணமாக நடைபெற்ற போராட்டங்கள் காந்திய வழியில் வந்ததா அல்லது மாவேக்கள் வழியில் வந்ததா.. மிதவாதமே என்றும் நிலைக்கும் எனக்கூறி நமக்கு சுகந்திரம் வாங்கி தந்தவர். உலகப்போரில் அடிவாங்கிய ஆங்கிலேயர்களிடம் மோதாமல் சம பலத்துடன் மல்லுகட்டியவர்.

        ஒரு மாவோ முப்பது வருடம் போரடினால் அது தற்காலிகமானதே, ஒரு காந்தியவாதி போராடினால் அது நிரந்தரமானதே. இதுதான் காந்தியம். அகிம்சை ஒன்றினால் மட்டுமே நிரந்தர விடுதலையைப் பெறமுடியும்.

        • காந்திய அகிம்சை, இந்தியாவில் செய்த துரோகத்தை அம்பலப்படுத்தும் போதெல்லாம், காந்தியின் சொம்பு தூக்கிகள் வைக்கும் வாதம் தென் ஆப்பிரிக்கா, அமெரிக்க கருப்பின மக்கள் போராட்டம்.

          என்னது, அமெரிக்க கருப்பின மக்களும், தென்னாப்பிரிக்க கருப்பின மக்களும் நிரந்தர விடுதலையை சுதந்திரத்தை பெற்று விட்டார்களா? என்ன கொடுமை சார் இது? உங்களுக்கு உண்மையிலேயே, கிரானைட் நெஞ்சம் சார்!

          அந்த மக்கள் இன்றும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறவில்லை என்பது ஒரு புறமிருக்க, காந்திய அகிம்சை வழி தோன்றலகளாக கோவணாண்டிகளால் முன்வைக்கப்படும் நெல்சன் மண்டேலா-ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், மார்டின் லூதர் ஆகியோரின் யோக்கியதையையும், NGO சார்பையும் அருந்ததி ராய் “Capitalism Ghost Story”-ல் அம்பலப்படுத்தியுள்ளார்.

          காந்திய அகிம்சையை பின்பற்றியவராக உங்களால் முன்நிறுத்தப்படும் நெல்சன் மண்டேலா, இந்தோநேசியாவில் கம்யூனிஸ்டுகளையும், அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்த சர்வாதிகாரி ஜெனரல்.சுஹர்தோவிடம் விருது வாங்கி மாட்டிக்கொண்டார். (ஆரம்பத்தில் மண்டேலா நேர்மையானவராக இருந்திருக்கலாம், ஆனால் அதனால் தெனாப்பிரிக்க மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? பின்னட்களில் அவர் என்னவாக ஆனார்?))

          Black Panther அமைப்பையும், கருப்பின மக்களின் விடுதலை வேட்க்கையையும் கட்டுப்படுத்த NGOக்கள் மொன்னையான கருப்பின அமைப்புகளுக்கு நிதி அளித்தன. அந்த வகையில் மார்டின் லூதருக்கும், ராக்பெல்லர் பவுண்டேசனூக்கும் இருந்த தொடர்பு, அவரின் இறப்புக்கு பின் குழிதோண்டி புதைக்கப்பட்டு, (இங்கு காந்தியை போலவே) அவருடைய பிம்பம் பெரிதாக்கப்பட்டது.

          இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும், அகிம்சைமுறையை போராட்ட முறையாக அறிவிப்பவர்கள் அனைவரும், ஆளும்வர்க்க நலன்களுக்காகவும், ஏகாதிபத்திய நலன்களுக்காகவுமே வேலை செய்கிறார்கள்.

          • //அவரின் இறப்புக்கு பின் குழிதோண்டி புதைக்கப்பட்டு, (இங்கு காந்தியை போலவே) அவருடைய பிம்பம் பெரிதாக்கப்பட்டது.//

            மாண்கோமாரி நிகழ்ச்சியெல்லாம் கோமாளிதனமான செயலா…மார்ட்டின் லூதர் சும்மா சிங்கி அடிச்சி கிடந்தாரா… சமயம் இருந்தால் youtube ல் அவரது videos clips களை பார்க்கவும்

            • நாங்கள் யூ-டியூப் பார்ப்பது இருக்கட்டும், முதலில் அந்த மக்களுக்கு நிரந்தர விடுதலை கிடைத்துவிட்டதாக சொன்னதற்கு நீங்கள் ஆதாரங்கள், தரவுகள் தரவேண்டும் மிஸ்டர் கிரானைட்.

              ராக்பெல்லர் பவுண்டேசன்னுக்கும் லூதருக்கும் இருந்த தொடர்புக்கு நான் அருந்ததிராய் கட்டுரையை சொன்னேனே, அதை படித்தீர்களா?

              நெல்சன், சர்வாதிகாரியிடம் மெடல் வாங்கியது? இது தான் அகிம்சையா?

              என்ன மிஸ்டர் கிரானைட் நெஞ்சம், பதில் சொல்லாம அதப்பாரு, இதப்பாருன்னு சொல்றீங்க ?

            • யுவர் அட்டென்சன் பிளிஸ் மிஸ்டர் கிரானைட் நெஞ்சம், நீங்கள் கருப்பின மக்களுக்கு நிரந்தர விடுதலை கிடைத்துவிட்டதாக சொன்னதற்கு ஆதாரங்கள், தரவுகள் தரவேண்டும் மிஸ்டர் கிரானைட்.

              • பழைய அடிமை முறைகளை விட தற்போது எவ்வளவோ முன்னேறி இருக்கிறார்கள்…

                black power group என்ற வன்முறை ஆப்பிரிக்கர்கள் செய்து காட்டிய நல்ல செயல்களையும் மார்ட்டின் லூதர் கிங் செய்த காரியங்களைப் பட்டியல் இடலாமே….

          • ///இந்தோநேசியாவில் கம்யூனிஸ்டுகளையும், அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்த சர்வாதிகாரி ஜெனரல்.சுஹர்தோவிடம் விருது வாங்கி மாட்டிக்கொண்டார்.///

            கம்னிஸ்டுகள் மாவோயிஸ்டுகள் மட்டும் கொலை செய்யமாட்டார்களை… சொல்லவே இல்லை.. ஆப்பிரிக்க மக்களின் பல உரிமைகள் அகிம்சை, civil right மூலம் பெற்று வந்தவையே.. ராக்பெல்லர் உதவி செய்தால் அது நிறவெறியா எப்படி என விளக்கவும்… கருப்பின மக்களுக்கு பிற இனமக்கள் உதவி செய்யக் கூடாதா…

            நெல்சன் மன்டோலா 250 க்கு மேற்பட்ட பெரிய விருதுகள் வாங்கியுள்ளர்… விருது யார் வேண்டுமானலூம் தரலாம்.. அதனால் அவர் அடிமையானார் எனப் பொருளாகாது..

            • விருது யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால் யார் தந்தாலும் வாங்குவேன் என்பவர் காமெடி பீஷ். ஆப்பிரிக்காவில் கறுப்பர் விடுதலை வந்திருச்சாம், அமெரிக்காவில் நிற வெறி ஒழிஞ்சிருச்சாம். இந்த ரகசியத்த வெளிய சொல்லிறாதீக எல்லாருக்கும் தெரிஞ்சிரப் போவுது…

        • வெள்ளைக்காரனுக்கு இந்தியாவை சுரண்டி அடக்கி ஆள உதவிய கைக்கூலிதான் இந்த காந்தி. அப்படி இல்லையென்றால்,என்னைக்கோ காந்தி கதையை வெள்ளையன் முடித்திருப்பான். இந்திய மக்களை பிரிட்டிஷ் படையில் சேர சொன்னவன் தான் இந்த சுயநலகார காந்தி.இவன்தான் சுதந்தரத்த அங்க இருந்து வாங்கி தூக்கி சுமந்து கொண்டு வந்து இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கையிலும் கொடுத்தானாம்.

  17. எது எப்படியிருந்தாலும் காந்தியை, அஹிம்சையை எவ்வளவு தூரம் இந்தியா ஏற்றுக்கொண்டு மதிப்பளிக்கிறது என்பதிலிருந்து காந்தியின் உண்மை மதிப்பீடு தெரிகிறது. “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை”. காந்திக்கு அடுத்து கொண்டாடப்பட்டுவந்தவர் நம்ம குழந்தைகளின் தோழன் வல்லரசு கனவின் நாயகன் அப்துல்.கலாம்.இன்னும் ஒரு 50 வருடங்களின் பின்……………

    • அடுத்த காந்தி சொந்த ஊர் மீனவர்கள் மேல் சிறிதாவது இரக்கம் காட்டட்டும்.

  18. காந்தி – போதைப் பெயர், ஒரு மத வெறியர், ஒரு நம்பிக்கை துரோகி… இன்னும் ஏராளம் ஏராளம்… மொத்தத்தில் காந்தி ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. அவரின் வாழ்க்கை இன்றளவும் குழந்தைகளுக்கு மூடி மறைத்து கற்றுத் தரப்படுகின்ற ஒரு தவறான வரலாறு.

  19. தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி… பவம் அவர் காந்தி தொண்டர் வேரென்ன வழி தெரியும்

  20. its really sad to knw dat v had such misleadn leaders. lets create mre awareness n if v stand against caste discrimnation ,m sure v’ll progress towards growth n sucess

  21. காந்தி தான் இப்போது பல பிரச்சனை காரணம் என்று குறிப்பிடுகின்றிரா?
    அதற்கு தனி நபர் வழிபாடு காரணம் என்பேன்

  22. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஜின்னாவின் பங்கு என்ன? முஸ்லிம் லீக் என்ன செய்தார்கள்? பிரிவினைக்கு காரணம் என்ன ? இதை மைய்யமாக வைத்து வினவு ஒரு கட்டுரை வெளியிட வேண்டும் என்பது ஏன் வேண்டுகோள்.வினவு வெளியிடுமா?

    • அதை தான் எதிர் பார்க்கிறேன் நண்பா நானும்.. பாக்கிச்தானை பிரித்து கேட்டது ஜின்னாவா..? இல்லை வரலாற்றூநடிகன் காந்தி யால் பிரிக்க பட்டதா..? எனக்கு விளக்கம் வெண்டும்.? தமிழன்

  23. எல்லாத்தையும் விடுஙக….
    எங்கநாயுடுக்கள் தெனாப்பிரிக்காவில் தாத்தாவிடம் பணம் கொடுத்து…அதை கப்பலோட்டிய தமிழரிடம் சேர்க்க சொன்னார்கள்….படுபாவி தாத்தா…இன்று வரை சேர்க்கவில்லை!

  24. சம்பஞ்தி ராசாசியிடம் கூட்டணி வைத்துகொண்டு….வண்ணான் பையன் துணிதான் துவைக்கவேணும்..பரியாரி மகன் மசிருதான் வெட்டவேண்டும் என்று முழங்கியவந்தான்…உஙக..தாத்தா……

    • இப்போ வேலை வெட்டி இல்லாமல் அது தானே நடக்குது! அந்த தாத்தா இல்லாவிட்டால், நீ இப்படி பேச முடியுமா? நாயுடு !

  25. எங்கநாயுடுக்கள் தெனாப்பிரிக்காவில் தாத்தாவிடம் பணம் கொடுத்து…அதை கப்பலோட்டிய தமிழரிடம் சேர்க்க சொன்னார்கள்….படுபாவி தாத்தா…இன்று வரை சேர்க்கவில்லை!—அந்தாளு வாரிசுகள் பிடிச்சு கேளங்க.r.k

  26. மொதா மொதா இந்தியாவுல ரெண்டு தேசியம் இருக்கு. ஒன்னு முஸ்லீம், இன்னொன்னு இந்து. இரண்டும் ஒன்னு சேர முடியாது. ஆனா இந்துவோட அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லீம் தேசம் இருக்கலாம்னு இரு தேச கோட்பாடை அரசியல்ரங்கில் முன் வைத்தது இந்து மாஹா சபாங்க. அதைத்தான் பிற்பாடு முஸ்லீம் லீக் அப்படி அவசியமில்லீங்கோ நாங்க எங்க மெஜாரிட்டிக்கு ஒரு தேசம் வைச்சிக்கிறோம்னு போயிட்டாங்க. அம்பேத்காரோட புத்தகத்துல இருந்து //Such is the scheme of Mr. Savarkar and the Hindu Maha Sabha. As must have been noticed, the scheme has some disturbing features.

    One is the categorical assertion that the Hindus are a nation by themselves. This, of course, means that the Muslims are a separate nation by themselves. That this is his view, Mr. Savarkar does not leave to be inferred. He insists upon it in no uncertain terms and with the most absolute emphasis he is capable of. Speaking at the Hindu Maha Sabha Session held at Ahmedabad in 1937, Mr. Savarkar said :—

    “Several infantile politicians commit the serious mistake in supposing that India is already welded into a harmonious nation, or that it could be welded thus for the mere wish to do so. These our well-meaning but unthinking friends take their dreams for realities. That is why they are impatient of communal tangles and attribute them to communal organizations. But the solid fact is that the so-called communal questions are but a legacy handed down to us by centuries of a cultural, religious and national antagonism between the Hindus and the Muslims. When the time is ripe you can solve them; but you cannot suppress them by merely refusing recognition of them. It is safer to diagnose and treat deep-seated disease than to ignore it. Let us bravely face unpleasant facts as they are. India cannot be assumed today to be a unitarian and homogeneous nation, but on the contrary these are two nations in the main, the Hindus and the Muslims in India.”

    Strange as it may appear, Mr. Savarkar and Mr. Jinnah, instead of being opposed to each other on the one nation versus two nations issue, are in complete agreement about it. Both agree, not only agree but insist, that there are two nations in India—one the Muslim nation and the other the Hindu nation. They differ only as regards the terms and conditions on which the two nations should live. Mr. Jinnah says India should be cut up into two, Pakistan and Hindustan, the Muslim nation to occupy Pakistan and the Hindu nation to occupy Hindustan. Mr. Savarkar on the other hand insists that, although there are two nations in India, India shall not be divided into two parts, one for Muslims and the other for the Hindus; that the two nations shall dwell in one country and shall live under the mantle of one single constitution; that the constitution shall be such that the Hindu nation will be enabled to occupy a predominant position that is due to it and the Muslim nation made to live in the position of subordinate co-operation with the Hindu nation. In the struggle for political power between, the two nations the rule of the game which Mr. Savarkar prescribes is to be one man one vote, be the man Hindu or Muslim. In his scheme a Muslim is to have no advantage which a Hindu does not have. Minority is to be no justification for privilege and majority is to be no ground for penalty. The State will guarantee the Muslims any defined measure of political power in the form of Muslim religion and Muslim culture. But the State will not guarantee secured seats in the Legislature or in the Administration and, if such guarantee is insisted upon by the Muslims,/16/ such guaranteed quota is not to exceed their proportion to the general population. Thus by confiscating its weightages, Mr. Savarkar would even strip the Muslim nation of all the political privileges it has secured so far. // the partition of India by Ambedkar http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/ambedkar_partition/

    //Savarkar presided an
    annual conference of Hindu Mahasabha in which he delivered a
    provocative speech implying that the Congress had failed to win
    over the Muslims to merge themselves into a united Indian
    nation; that Muslims would be the last people to join hands with
    the Hindus in forming any common political notion in India; that
    Hindus should not run after the Muslims and resume the thread
    of their national life from the fall of the Maratha and Sikh
    empires; that Hindustan was the land of Hindus and it was the
    Hindu Nation that owned it; that Indian nation means the Hindu
    nation and that Hindus, Hindustan and India means one and
    same thing; that we were Indian because we were Hindus//

    இரண்டு தேசம் எனும் கோரிக்கையை மீண்டும் மீண்டும் பல வகையில் வலியுறுத்தி இங்கு இருந்தால் இரண்டாம் தர குடிமகனாக இருக்கலாம் என்று சொன்னவர்கள் வேறூ யாருமல்ல இந்து மஹாசபாவின் சவர்கார் மற்றும் ஆர் எஸ் எஸ் துரோகிகள்தான். இதை அம்பேத்கர் வேறு விதமாக சொல்கிறார், இந்து மஹாசாபா ஒளிவுமறைவின்றி பட்டென்று முன் வைத்த இரு தேச கொள்கை, இரண்டாம் தர குடிமகன் போன்றவற்றையே காங்கிரஸ் மிதமான முறையில் மூடி மறைத்து முன் தள்ளியது என்று. // Mahasabha is endorsed by Ambedkar in the following words: The only difference between the Congress and the Hindu Mahasabha is
    that the latter is crude in its utterances and brutal in its actions
    while the Congress is politic and polite. Apart from this
    difference of fact, there is no other difference between the
    Congress and the Hindu Mahasabha.// அம்பேத்கரின் இந்த கருத்தைத்தான் காங்கிரசு கமிட்டி அறிக்கையும் குறிப்பிட்டு காங்கிரசு கட்சியை எச்சரிக்கை செய்தது. இவ்வாறான மதப் பிரிவினை பற்றி ஜின்னா நடத்த முயன்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியை தழுவின. அதாவது 1937லில் சவர்காரின் இரு தேச பேச்சுக்கு பிறகு 3 வருடங்கள் பல முயற்சிகளுக்கு பிறகு 1940ல்தான் ஜின்னா முதல் முறையாக இரு தேச கோரிக்கையை முன் வைக்கிறார் முஸ்லீம் லீக் மாநாட்டில்.

    மேலும், சவர்க்காரின் பாத்திரம் இங்கு மிக முக்கியமாய் உள்ளது. இந்த சொறிநாய் துப்பாக்கி கடத்தியது, ஆங்கிலேய அதிகாரியை கொன்றது உள்ளிட்ட பல வழக்குகளில் பல சதி வேலைகளில் பிரிட்டிஸ் அரசால் கைது செய்யப்பட்டு பிறகு மர்மமான முறையில் விடுவிக்கப்பட்டுள்ளான். இவ்வாறு தெரிந்தே ஒரு எதிரியை பிரிட்டிச் அரசு விட்டு வைத்திருக்குமா என்ன? அதுவும் பல சதி வழக்குகளில் அவர் நேரடி தொடர்பு இருப்பது உறுதிப்பட்ட நிலையில் சவர்காரை பிரிட்டிஸ் அரசு விட்டு வைத்திருந்தது ஒரு பெரும் சதியின் பாற்பட்டதாகவே பார்க்கத் தோன்றுகிறது. அது, இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் பிரிட்டிஸ் தந்திரத்தில் சவர்க்கார் ஆற்றிய முக்கிய துரோக காதபாத்திரமே ஆகும். வங்கப் பிரிவினையின் மூலம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை கெடுக்க முயன்ற பிரிட்டிஸ் அரசை எதிர்த்து மத வேறுபாடின்றி நின்ற மக்கள் ஒரு 30 ஆண்டுகளில் தாமே பிரிவினை கோரி நின்றமைக்கு யார் காரணம்? வேறு யாருமல்ல சுதந்திர இந்தியாவிற்கு உரிமை கொண்டாடும் காங்கிரசும், இந்து மஹா சபாவுமே ஆவர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க