privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !

-

 ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்
இந்திய இராணுவம் மணிப்பூர் மாநிலத்தில் நடத்தி வரும் மனித உரிமை மீரல்களை அம்பலப்படுத்தி பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம்

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

 • தடா, பொடா போன்ற கொடிய கருப்புச் சட்டங்களைக்கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடிய இப்பயங்கரவாதச் சட்டம், இந்தியா ‘குடியரசாக’ அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கொண்டு வரப்பட்ட பெருமையுடையது. 1950 களில் அசாமிலும், அப்பொழுது யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூரிலும் அதன் பின்னர் நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதன் அதிகார வரம்புகளும் விரிவுபடுத்தப்பட்டன.
 • இச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மைய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
 • இச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது.
 • ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம்.
 • இராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது.
 • இராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம்; பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம்; எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.
 • ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள்; மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள்; பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள்; இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள்; இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள்; தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள்” ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 • இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.
 • இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

ஐரோம் சர்மிளாஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை” என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அவ்வளவு பின்னோக்கிக்கூடப் போக வேண்டியதில்லை. தற்பொழுது இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில்கூட இராணுவம் குடிமக்களைக் கேள்விக்கிடமின்றி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதற்குச் சட்டபூர்வ அதிகாரம் அளிக்கபட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும்தான் சுட்டுக் கொல்வதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை அரசும் இராணுவமும் நடத்தி வருகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே வாழும் ‘இந்தியர்களும்’ இந்தப் புளுகுணிப் பிரச்சாரத்தை நம்புகின்றனர். ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.

இச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம். இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல; கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானதும் ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.

சட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.

சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் செயல்படும் இராணுவச் சிப்பாய்களை விசாரிக்க மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியும்; அத்துமீறல்களில் ஈடுபடும் சிப்பாய்களை இராணுவமே விசாரிக்கும் என்ற நடைமுறையும் இராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவதற்கும் அரசு பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்குமே பயன்படுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பத்ரிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிகள் இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அப்பாவிகளை எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்திரித்து இப்படுகொலையை மூடி மறைத்துவிட எத்தணித்தது, இந்திய இராணுவம். உலகெங்கும் அம்பலப்பட்டுப் போன இவ்வழக்கில், இப்படுகொலையை நடத்திய இராணுவத்தினரை விசாரிக்கும் அனுமதியை இன்றுவரை வழங்க மறுத்து வருகிறது, மைய அரசு.

2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.

அரசாங்கம் அறிவிக்கும் பரிசுப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளவும், பதவி உயர்வு பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஏராளமான போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கிறது, இராணுவம். நாடெங்கும் அம்பலமான போலி மோதல் கொலை வழக்குகளும்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தாண்டி நகர்ந்ததில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இராணுவமோ, தீவிரவாதத்தை ஒழிக்கும் வேலையை போலீசிடமிருந்து மாற்றித் தன்னிடம் ஒப்படைக்கும்பொழுது, சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படும்பொழுது இச்சட்டம் தனக்குத் தேவை என வாதாடுகிறது. இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரினாலோ, அல்லது இச்சட்டத்தில் சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்யக் கோரினாலோ, அதனைத் தேச விரோத செயலாகக் குற்றஞ்சுமத்துகிறது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பொருத்தவரை பா.ஜ.க.வின் கருத்தும் இராணுவத்தின் கருத்தும் ஒன்றுதான் என்பது வியப்புக்குரிய விசயமல்ல. காங்கிரசோ இப்பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஆலோசனை நாடகத்தை நடத்தி முடித்திருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் இச்சட்டத்தைத் திரும்பப் பெறவும் கூடாது, திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ” ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது பாதுகாப்பிற்கான அமைச்சர்கள் குழுவைக் கூட்டி, இச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக காங்கிரசுக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவுவதாகக் காட்டிக் கொண்ட அக்கட்சி, பின்னர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் இருந்து இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள ஆலோசிப்பதாக பாவ்லா காட்டியது. அதன் பின்னர், நகரங்களில் இருக்கும் தேவையற்ற பதுங்கு குழிகளைக் கைவிடுவது என இந்த நாடகம் சுருங்கிப் போனது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எட்டு அம்ச சலுகைத் திட்டத்தை அறிவித்த கையோடு காஷ்மீர் மக்களின் இக்கோரிக்கையை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டது, காங்கரசு. சிவில் நிர்வாகம் இராணுவத்திற்கு அடிபணிந்துவிட்டது என்றே இதனைக் கூறலாம்.

இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவதைவிட, சில சில்லறை பொருளாதார சலுகைகள் வழங்குவதன் மூலம் இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைப் பிசுபிசுக்கச் செய்துவிடலாம் என காங்கிரசு கணக்குப் போடுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரிலும் மணிப்பூரிலும் நடந்து வரும் போராட்டங்கள் வேறொரு உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் அம்மாநிலங்களில் ஒரு மறைமுகமான இராணுவ ஆட்சிக்கு வழி கோலியிருக்கிறது என்பதும்; இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் துப்பாக்கி ஏந்திய நான்கைந்து தீவிரவாதிகள் நடத்தும் திடீர்த் தாக்குதலாக மட்டும் இல்லாமல், இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் அரசியல் ஆர்ப்பாட்டங்களாகவும் வளர்ந்துவிட்டன என்பதும்; இச்சட்டத்தையும் இராணுவத்தையும் திரும்பப் பெறுவதன் மூலம்தான் அம்மாநிலங்களில் குறைந்தபட்ச அமைதியைக்கூட ஏற்படுத்த முடியும் என்பதும்தான் அவ்வுண்மை.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

 

 1. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !…

  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் : பிரிட்டின் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை…

 2. […] This post was mentioned on Twitter by வினவு, siraj. siraj said: RT @vinavu: ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் ! https://www.vinavu.com/2010/11/29/armed-forces-special-powers … […]

 3. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்த இந்திய நாடு உண்மையில் அதன் ஜனநாயகம் காகித்தத்தில் மட்டும்தான் என்பதை அதிகார மாற்றம் நிகழ்ந்ததிலிருந்து நீரூபித்து வருகிறது. இதில் சீனா,மியான்மர்,வடகொரியாவை பார்த்து தேச பக்த நடுத்தர வர்கத்தினர் ஈயம் பித்தளையைப் பார்த்து பல்லிளித்த கதையாக வெற்று கூச்சல் போட்டுக் கொள்கின்றனர்.

   • நம் மக்கள் இப்படித்தான். தான் ஏன் இப்படி இருக்கிறோம் என யோசித்து கேள்வி கேட்பதில்லை. மாறாக அடுத்த ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைவது. சைனாவை கம்பேர் செய்யும் நீங்கள் மணிப்பூரில் இருந்து மற்ற இந்திய மாநிலங்களை கம்பேர் செய்து பாருங்கள். ஆறுதல் அடைவதை நிறுத்துங்கள்.

 4. பெரும்பான்மையான மக்களை பயங்கரவாதிகளிடம்/வன்முறையாளர்களிடம் இருந்து காபந்து செய்திட, இதுபோன்ற சட்டம் தேவைதான்!

  பிரிவினை சக்திகள், நேராக நின்றா போரிடுகிறார்கள்!?
  மக்களோடல்லவா பயமுறுத்தி களையாக இருக்கிறார்கள்!

  கவசமாக மக்களைக் கொண்டு போரிடுவதால் தானே, இடையில் அப்பாவிகள் பலியாகிறார்கள்!

  பாம்பேது? பழுதேது? என்பது சிலசமயம் தடுப்பாளர்களால் அறிய முடியாததால், நடை பெறும் சம்பவங்களை, பெரிதுபடுத்தி, பிணங்களை வைத்துக் கொண்டு, அரசியல் செய்கிறார்கள்!

  பிரிவினை தீய சக்திகள், கொலை செய்வதெல்லாம் அப்பாவிகளைத் தானே? எளிய இலக்குகளைத் தானே? அவர்களுக்கு மட்டும் ஏன் விடுதலை வீரர் பட்டம்! பெருமை?புகழாரம்?

  • rammy அவர்களே

   ///பெரும்பான்மையான மக்களை பயங்கரவாதிகளிடம்/வன்முறையாளர்களிடம் இருந்து காபந்து செய்திட, இதுபோன்ற சட்டம் தேவைதான்!///
   ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்
   என்ன காரியம் பன்னியிருக்கு என்பதற்கு மேலெயுள்ள புகைப்படம்தான் சாட்சி
   நிர்வணமாக அவர்கள் போராடும் அளவுக்கு இந்த சட்டம் கொடுமையானது
   ஆயுதப்படையின் எந்த ஆயுதம் வேல செய்யுதோ இல்லையோ அவர்களின் சொந்த ஆயுதம் இந்த சட்டத்தின் பலஹீனத்தை பயன்படுத்தி மேய்ந்திருக்கிறது
   மேலெயுள்ள சகோதரிகள் என்ன தேவுடியாக்கள? இல்லை அவர்கள் இப்படி நிர்வணமாக நின்று போராடுவோம் என்று நினைத்துக்கூட பார்த்துயிருக்க மாட்டார்கள்
   இந்திய இரனுவமும் சிறப்பு சட்டங்களும்
   இப்பெண்களை நிர்வணமாக்கியது போதும்
   இனியும் தொடர வேண்டாம்

   • பொது இடங்களில் குண்டு வைத்து, அப்பாவி பொது மக்களை கொல்வது என்ன விதமான விடுதலைப் போர்?

    வெளி நாட்டு பயங்கரங்கள்/ உள்நாட்டு பிரிவினைவாதிகள் அனைவருக்கும், எளிய இலக்கு, பொது மக்கள் தானே?

    கஷ்மீரத்தில், இதுவரை நடந்த, பயங்கரவாதக் கொலைகளை, எதிர்த்து ஏன் அந்த மாநில மக்கள் போராடவில்லை?கொலைகளை செய்த பயங்கரவாதிகளை ஏன் விரட்டவில்லை?

    அரசு கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும்! மயிலறகால் தடவிக் கொடுக்க வேண்டும்! பிரிவினைவாத பயங்கரங்களைக் கண்டு பயந்து போக வேண்டும்!
    அவர்கள் வைக்கும் குண்டுகளுக்கு மக்களை பலிகொடுக்க வேண்டும் என்று ஒரு சாரார் போராடுவது அவர்களுடைய உரிமை எனினும், நீண்ட கால அமைதிக்கும், ஒருங்கிணைந்த நாட்டின் நலனுக்கும் அது உகந்ததல்ல!

    விடுதலைப் போர் எனும் பெயரில் நாட்டை, சிதைக்க எண்ணும் சக்திகளை, அரசு வேரோடு அழிக்க வேண்டும்! ஆதரிக்கும் சக்திகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்!

    அரசு படைகளில் இருக்கும் வீரர்களை, இது போன்ற சென்சிடிவ் பகுதிகளில்,தொடர்ச்சியாக பணி கொடுக்காமல்,மாற்று வீரர்களை பணியமர்த்தினால், கடுமையான பணியின் சுமையால், மன விகாரமடைந்து, மனித உரிமை மீறலில், காவல்/ராணுவ வீரர்கள் ஈடுபடுவதை தவிர்க்க முடியும்!

    • //பொது இடங்களில் குண்டு வைத்து, அப்பாவி பொது மக்களை கொல்வது என்ன விதமான விடுதலைப் போர்? //

     பொது இடங்களில் துப்பாக்கிச் சூடும், லத்தி சார்ஜும் நடத்தியும், குடியிருப்புப் பகுதிகளில் அதி நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியும் மக்களையும், பழங்குடியின மக்களையும் கொன்றொழிக்கும் அரசு என்னவிதமான அரசு ரம்மி அவர்களே?

  • Rammy,

   First they came for the communists, and I did not speak out–
   because I was not a communist;

   Then they came for the trade unionists, and I did not speak out–
   because I was not a trade unionist;

   Then they came for the Jews, and I did not speak out–
   because I was not a Jew;

   Then they came for me–
   and there was no one left to speak out for me.

   -Martin Niemöller-

  • ரம்மி,
   யார் பிரிவினை சக்திகள், யார் பயங்கரவாதிகள் என்பதை அப்புறம் பார்க்கலாம். மக்களைக் கொள்ளையடிக்கும் உரிமையை யாருக்கு வழங்குவது என்பதற்காக இந்திய அரசு தேர்தல் வைத்து தன்னை ஒரு ஜனநாயகவாதியாகக் காட்டிக்கொள்வதெல்லாம் இருக்கட்டும். இந்திய அரசு யோக்கிய சிகாமணியாக இருந்தால் காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? இந்தியாவுக்கா? அல்லது காஷ்மீர் மக்களுக்கா? என்பதை முடிவு செய்யும் உரிமையை அம்மக்களுக்கு வழங்க இந்திய அரசு ஒரு தேர்தல் நடத்துமா? இக்கோரிக்கையை நீங்கள் இந்திய அரசிடம் எழுப்பிப் பாருங்கள் நீங்களும் பிரிவினை சக்தி, பயங்கரவாதி பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்.இந்திய அரசின் துப்பாக்கி சொந்த நாட்டு மக்களை மட்டும்தான் குறி பார்க்கும். அந்நிய அல்லது உள்நாட்டு மக்கள் எதிரியை குறிபார்த்ததாக வரலாறு இல்லை.

 5. //பெரும்பான்மையான மக்களை பயங்கரவாதிகளிடம்/வன்முறையாளர்களிடம் இருந்து காபந்து செய்திட, இதுபோன்ற சட்டம் தேவைதான்//

  நண்பர் ரம்மி
  பெரும்பான்மை என்றால் .அவர்கள் போராடும் இடத்தில் அவர்களே பெரும்பான்மையினர்.

  //பிரிவினை சக்திகள், நேராக நின்றா போரிடுகிறார்கள்!?
  மக்களோடல்லவா பயமுறுத்தி களையாக இருக்கிறார்கள்//

  ஆகவே மக்களையும் சேர்த்து கொல்ல வேண்டியதுதான் .நல்ல வேளை எல்லாருமே திவிரவாதிகள்தான் எல்லாரையும் கொன்றுவிட்டால் நலமாக இருக்கும் என்று சொல்லாமல் விட்ட உங்கள் மனித நேயம் வாழ்க.

  என்ன விகிதம் என்று சொன்னீர்கள் என்றால் நலமாக இருக்கும்.

  ஒரு பிவினைவாதிக்கு 100 பொதுமக்கள் சாகலாமா?

  மனிப்பூர் பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன?

  அரசாங்கம் செய்வதை வழி மொழிகிறேன்,அல்லது வினவு தோழர்கள் எதை சொன்னாலும் எதிர்ப்பேன் என்பதை தவிர மனிப்பூர் பிரச்சினை பற்றி நீங்கள் அறிந்தவற்றை விளக்கி எதனால் இந்த கருத்தை கூறீனீர்கள் என்றும் சொன்னால் ந்ன்றாக இருக்கும்.

  • திரு.சங்கர்!

   நிரபராதிகள் பலியாவது, அரசால் மட்டுமே அல்ல! பயங்கரவாதிகளால் பலியாவது, பெரும்பாலானோர், நிரபராதிகளே!

   கடுமையான தவறுகளை செய்வதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கண்டிப்பாகத் தேவை!

   அரசுப் படைகள் தவறிழைத்தால், அவர்களும் தண்டிக்கப் பட வேண்டியவர்களே!(அரசினால்!)

   வினவின் பார்வையே, படிப்பவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது நியாயமல்ல!
   மாற்றுக் கருத்துக்கள், உங்கள் வாதத்தின், மறுபக்கமே!

   • //அரசுப் படைகள் தவறிழைத்தால், அவர்களும் தண்டிக்கப் பட வேண்டியவர்களே!(அரசினால்!)//

    ஒரு காவல் நிலையத்திற்கு சென்று ஒரு காவல்துறை அதிகாரி என்னிடன் இலஞ்சம் ககேட்கிறார் என்று புகார் கொடுத்தால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்.

    நமக்கு கூட தகவல் அறியும் சட்டம் என்று உண்டு. அதனை பயன் படுத்தி இதுவர எத்தனை அரசுப் படைகள் எதற்காக எப்போது அரசினால் தண்டிக்கப் பட்டார்கள் என்ற விவரங்களை கூற முடியுமா

    //வினவின் பார்வையே, படிப்பவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது நியாயமல்ல!//

    மாற்றுக் கருத்து இருந்தால் அத்ற்கு காரணம் ஆதாரம் இருக்க வேண்டும்.
    தங்கள் கருத்தில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் விவாதிக்கலாமே.

   • வினவின் பார்வை பிறரையும் தொற்றலாம் என அவர் அஞ்சுகிறார்.

    அவர் போன்றோருக்கு அரசு என்றால்என்ன என்றே விளங்காது போலுள்ளது.
    பிறகு அரச பயங்கரவாதம் என்றால் விளங்குமா?

    அரசு என்றால் என்ன எனறு திரும்பத்திரும்ப விளக்குவது வினவின் கடமை.

 6. While there is no denying the violations and undemocratic actions by Indian state, it is funny and hypocritical when communists say this. their methods and principles call for much much harsher and ruthless violations of basic human rights. and they continue to justify Stalin and Mao’s violations and ‘purges’ till date, in the name of
  idealogy.

  Only those who advocate liberal democracy and belive in Universal Human rights have the moral right to criticize Indian violations. People like Dr.Binayak Sen, Medha Patkar, Arundhadhi Roy have this moral right while you people do not have.
  Readers should understand this first.

  • Now they will change the tune and get personal in their replies.

   They havent put their “political philosophy” in these website. But vinavu’s is much inclined towards chinese or USSR or kind of flavor of communism.So when you question about Uligur Muslims (Xinhuag province), Tibet, Taiwan Tienanmen Square, internet search engine restriction, stalin legacy, right to speech in Communist countries either they go personal or just parrot it is capitalist conspiracy. 2 or 3 out of 51 Muslim nations is democratic and they have harsh rules against minority. (eg., blashphemy rule pakistan )These two angels come here and question the integrity of Indians! They talk loud about kashmir… why still a “azad kashmir” hasnt been created out of non-India occupied kashmir and akshai chin? Do you think you will get answers! Who is blocking them from creating aazad kashmir and register in UN? And inspite of they they will name call you (if u are believer of God) as irrational, when their rationality itself questionable?

  • //they continue to justify Stalin and Mao’s violations and ‘purges’ till date, in the name of
   idealogy.//

   who said, they were communists?

   நமது நாட்டாமையின் தீர்ப்பு இதோ!
   ” அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்! ஆகையால் அவர்களையும், விலக்கி வைக்கிறேன்!”

 7. Vinavu…

  Spectrum pathi onnume pesala … kasu vankiyacha…

  Nira Radiya Tape pathi onnu sollave illla.. please mounathai kalaiyungal … otherwise I wont come to your side…

  ராசாவுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது…?
  http://www.savukku.net/

  தற்போது, சென்னை அண்ணா சாலையில் எஸ்ஐஈடி கல்லூரி எதிரில் வோல்டாஸ் ஏ.சி நிறுவனம் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறது. வோல்டாஸ் நிறுவனம் டாடா குழுமத்திற்கு சொந்தமானதாகும். இந்த இடத்தில் வோல்டாஸ் நிறுவனம் வாடகைக்கு இருந்தது. வோல்டாஸ் நிறுவனத்துக்கும், நிலத்தின் சொந்தக் காரருக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. வோல்டாஸ் நிறுவனம் அந்த இடத்தை வாங்க முயற்சி செய்ய, சொந்தக் காரர் மறுக்க பிரச்சினை பஞ்சாயத்துக்காக தொழில் அதிபர் ராசாத்தி அம்மாளிடம் செல்கிறது.

  ராசாத்தி அம்மாள் பிரச்சினையை சிறப்பான முறையில் தீர்த்து வைக்கிறார். என்ன செய்கிறார் என்றால், நீங்கள் இருவரும் அடித்துக் கொள்ளாதீர்கள். நிலத்தை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, அதன் படியே வாங்கிக் கொள்கிறார். அந்த இடம் மொத்தம் 18 கிரவுண்டுகள். 2009 அன்று சந்தை நிலவரப்படி 300 கோடிக்கு போகும். ராசாத்தி அம்மாள் என்ன விலை கொடுத்து வாங்கினார் என்று தெரியவில்லை. ஆனால், இதற்கு பதிலாக ரத்தன் டாடா அவரிடம் ஒரு பேரம் பேசுகிறார். என்னவென்றால், தயாநிதி மாறன், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆகக் கூடாது என்பதுதான் அந்தப் பேரம். இதை ஒட்டியே கனிமொழி நீரா ராடியாவிடம் மாறனை மந்திரி சபையில் சேர்க்கக் கூடாது என்று பேசுகிறார்.

  மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆகாவிட்டால், அதற்கு பதிலாக அந்த இடத்தில் என்ன கட்டிடம் கட்டுகிறார்களோ, அந்தச் செலவு டாடா குழுமத்தினுடையது என்று பேசி முடிக்கப் படுகிறது.

  ராசாத்தி அம்மாள் ஐந்து நட்சத்திர விடுதி கட்டலாம் என்றும், கனிமொழி “ராசாத்தி மருத்துவமனை“ கட்டலாம் என்றும் திட்டமிடுகின்றனர்.

  • புலிகுட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழல்: இந்திய ஆட்சியாளர்களை ஊழலிலிருந்து பிரிக்க முடியாது என்பதை வினவு ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையின் மூலம் அம்பலப்படுத்தியிருந்தது. ஊழலின் பிதாமகன்கள் யார் யார் என்பதிலிருந்து இவர்களை ஈன்றெடுக்கும் இந்திய ஜனநாய அமைப்பு முறையின் யோக்கியதையை கேள்விக்குள்ளாக்கும் அம்சங்களைக்கொண்டவையாக அக்கட்டுரை அமைந்திருந்தது. உங்களுக்கு தெரியவில்லை என்பதற்காக பேரம் பேசுவது போல் வந்து அணுகுகிறீர்களே, இது என்ன வகைக் கண்ணோட்டம்?

 8. பார்ரா.. இப்பல்லாம் I.S.I. கிட்டவிருந்து நம்ம வினவுக்கு வாரம் இருமுறை சன்மானம் வருது போல.. அதான் காஷ்மீர் கட்டுரைகளா குவியுது. பரவாயில்ல குடுக்கற காசுக்கு மேலேயே கூவுறீங்க. சபாஷ்.

 9. நண்பர் ரம்மி,எடிசன்
  ஒரு கருத்தை கூறினால் அதை ஏன் சொல்கிறீர்கள் என்பதற்கு காரணம் வேண்டும். ஒருவர் ஒரு கருத்தை சொல்கிறார் அவர எனக்கு பிடிக்காது என்பதால் அவர் சொல்லும் கருத்தை எல்லாம் எதிர்ப்பேன் என்பது சரிய்ல்ல.

  மனிப்புர் பிரச்சினை ஏன் ஆரம்பித்தது? அதை அரசாங்கம் எப்படி எதிர் கொள்ளுகிறது போன்ற விஷ்யங்களை சொல்லி உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

  மனிப்புரி மக்கள் இந்த ஆயுதப் படை சட்டத்தை எதிர்த்து போரடுகிறார்கள்.
  இந்த செய்தியே பொய் என்று சொல்லுகிறீர்களா?

  அரசாங்கம் செய்வது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்கிறீர்களா?

  நானோ என் உறவினரோ பாதிக்கப் படவில்லை.எனக்கென்ன என்று கூறுகிறீர்களா.?

  • மணிப்பூர் மட்டுமல்ல! அனைத்து மாநில பிரச்சனைக்கும், அரசாங்கம் மட்டுமே காரணம் என்று சொல்லும்,உங்களிடம் வென்ன வாதம் செய்வது?! கருத்து மட்டுமே!

   • அவ்வளவுதானா?

    நான் கூட எதோ மனிபுரில் பல காலம் பணியாற்றி அம்மக்களுக்காக அரசாங்கம் கொண்டு வந்த அருமையான திட்டங்களை நேரின் கண்ட அனுபவத்தில், அரசாங்கம் அவ்வளவு செய்தும் சிலர் பிரிவினைவாதம் பேசுவதால், அம்மக்களை அவர்களை பிரிவினைவாதிகளிடம் இருந்து பாதுகாக்கும் இந்த நல்ல சட்டத்தை எதிர்க்கலாமா என்று கருத்து தெரிவித்தாக நினைத்துவிட்டேன்?.

    காவல் படைக்கு முழு அதிகாரம் கொடுத்தால் என்ன ஆகும் என்று தெரியுமா?.

    ஒன்னும் இல்லை உங்களளுக்கும் இன்னொருவருக்கும் ஒரு பிரச்சினை காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தால் என்ன நடக்கும் என்று கூற முடியுமா?.

    ஒரு தடவை அனுபவம் இருந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள். இன்னும் பேசுவோம்.

    • //காவல் படைக்கு முழு அதிகாரம் கொடுத்தால் என்ன ஆகும் என்று தெரியுமா?.//

     அதிகாரத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்?

  • //மனிப்பூர் பிரச்சினை ஏன் ஆரம்பித்தது?//

   மணிப்பூர் பிரச்சனை ஏன் ஆரம்பித்தது, ஏன் தொடர்கிறது, தொடர்புடைய பலப்பல குழுக்களின் நோக்கங்கள் என்ன என்பது போன்ற விவரங்களை கேள்வி-பதில் வடிவில் தொகுத்து தந்திருக்கும் சுட்டி இதோ.

   http://somiroy.tripod.com/id45.html

   காஷ்மீரில் ராஜா மக்கள் விருப்பத்துக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து கொண்டார் என்றால் மணிப்பூரில் ராஜாவை நிர்பந்தப்படுத்தி இந்தியா இணைத்துக் கொண்டது என்ற குற்றச்சாட்டு.

   பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பாதிரிகளின் மதமாற்றத்தால் விளைந்த அனர்த்தங்கள்.

   கம்யூனிஸ்ட் சீனாவின் பொருளாதார மற்றும் ஆயுத பங்களிப்புகள்.

   மியன்மார், மற்றும் பங்களாதேஷிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருள்கள்.

   இப்படி பலப்பல பரிமாணங்கள் கொண்ட பிரச்சனைக்கு இந்திய அரசாங்கம் மட்டுமே முழுப் பொறுப்பு என்று வாதங்கள்.

   • //காஷ்மீரில் ராஜா மக்கள் விருப்பத்துக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து கொண்டார் //

    காஷ்மீர் எப்போங்க இந்தியாவோட இணைந்தது? அதுவும் மணிப்பூர் மாதிரி? புதிய விசயமா இருக்கு?

    • தமிழகமாவது இந்தியாவில் இணைந்துள்ளதா? இல்லை அடித்து சேர்ப்பிக்கப் பட்டதா?

    • உங்களுக்குத்தான் எல்லா வரலாறும் பிங்கர் டிப்புல இருக்குல்ல. நீங்களே சொல்லிருங்க தமிழகம் அடிச்சி இணைக்கப்பட்டதா இல்லே ஆட்டோமேட்டிக்கா இணைக்கப்பட்டதான்னு.

     ஒரு கேள்விக்கும் ஒழுங்கா பதில் சொல்லாம எதையாவது ஏனைக்க மேனைக்கன்னு பேசுவதன் பெயர் விவாதமல்ல என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்

    • எகனை மொகனை – தங்களிடம் பழகியதே!

     உங்கள் குழாம் உறுப்பினர்கள், எந்த மாற்றுக் கருத்தை,மாற்று மொழியாளர்களை ஏற்றுக் கொண்டுள்ளீர்?

     எனவே, வீண்வாதம் செய்யாமல், கருத்து மட்டுமே!

    • //எனவே, வீண்வாதம் செய்யாமல், கருத்து மட்டுமே!//

     கருத்து எங்கேங்க சொல்லிருக்கீங்க? காஷ்மீர் எப்போ இந்தியாவோட இணைந்ததுன்னு கேட்டேன் அதுக்கு உங்களிடம் பதில் இல்லை. மாறாக, விதண்டவாதமாக தமிழகமாவது இணைந்ததான்னு கேக்குறீங்க. விதண்டவாதம்தான் நோக்கமென்றால் அதை தெளிவாகச் சொல்லிவிடுங்கள். வேறு வேலை பார்க்கச் செல்வேன்.

   • //இப்படி பலப்பல பரிமாணங்கள் கொண்ட பிரச்சனைக்கு இந்திய அரசாங்கம் மட்டுமே முழுப் பொறுப்பு என்று வாதங்கள்//

    மணிப்பூர் அல்பிரட் மனைவிக்கும் அவருக்கும் சண்டை, மணிப்பூர் மார்க்கேட்டில் பிக்பாக்கேட் தொல்லை, மணிப்பூர் ரோடுகளில் குண்டும், குழியும் நிறைந்திருப்பது, மணிப்பூர் நாய்க்கடி தொல்லைகள், மணிப்பூர் குடிநீர்க் குழாயிலும் வெறும் காற்று மட்டுமே வருவது இப்படி பலப்பல பரிமாணங்கள் கொண்ட பிரச்சனைக்கு இந்திய அரசாங்கமே மட்டுமே முழுப் பொறுப்பு என்று வாதிடுவது சொத்த பொறுப்பில்லாதத்தனம் என்றே நானும் கருதுகிறேன்.

    எப்படிங்க இதுமாதிரில்லாம் பேசுறீங்க? அங்கே ராணுவச் சிறப்புச் சட்டம் மூலம் காட்டாட்சி நடந்து வருகிறது. தெஹல்கா கூட ஒரு போலி எண்கவுண்டரையும் அதில் கிராஸ் பயரில் கொல்லப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண்ணையும் முழுமையாக போட்டோ எடுத்துப் போட்டனர். பத்து வருடங்களாக சட்டவிரோதமாக சிறையிலடைபட்டிருக்கும் ஐரோம் சர்மிள் துப்பாக்கித் தூக்கியா போராடினார்? இப்படி இருக்கும் போது, போதை மருந்து, ஆயுதக் கடத்தல்னு எதையெதையோ பேசுறீங்க?

    வூட்டுல இருக்குற ஆளுங்கள ஒழுங்கா வைச்சிருந்தா வெளிய இருந்து ஏன் இன்னொருத்தன் இடைஞ்சல் செய்யிறான்? மணிப்பூரில் நியாயமாக என்ன செய்யனுமோ அதைச் செய்ய வக்கில்லாத இந்திய அரசு கொடும் ஒடுக்குமுறையை ஏவிவிட்டுவிட்டு அதன் துணை விளைவாக நடக்கும் பிற அயோக்கியத்தனங்களை கை காட்டுவது சுத்த மொள்ளமாறித்தனமாகும். இதற்கு அருந்ததிராயின் வரிகளில் பதில் சொல்வதென்றால் அது இதுதான்:

    //The government has slammed the door in the face of every attempt at non-violent resistance. When people take to arms, there is going to be all kinds of violence — revolutionary, lumpen and outright criminal. The government is responsible for the monstrous situations it creates.//

    • //இப்படி இருக்கும் போது, போதை மருந்து, ஆயுதக் கடத்தல்னு எதையெதையோ பேசுறீங்க? //

     போதை மருந்து, ஆயுதக் கடத்தல்னு எதையெதையோ நான் பேசலைங்க. இந்தியாவில் அரசியல் வன்முறையும், போலீஸும் என்ற புத்தகத்தில் பிரபல ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரி டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன் சொல்லியிருப்பதைத்தான் நான் எழுதியிருக்கிறேன்.

     (About K.S Subramaniam) http://www.flickr.com/photos/joeathialy/4128508960/

     ஆயுதப்படையின் செயல்களை உங்களைப் போலவே நானும் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஜீவன் ரெட்டி கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அரசு ஏற்க வேண்டுமென்பதிலும் உடன்படுகிறேன்.

     ஆனால் வடகிழக்கு பிரச்சனைகளின் காரணிகளில் ஒன்று போதை வஸ்து மற்றும் ஆயுத கடத்தல் என்பதை நீங்கள் மறுப்பதன் காரணம் புரியவில்லை.

     தீவிரவாதம் ஒரு பிரச்சனை என்றால் இந்தியாவிலேயே எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் அதிகமாக இருக்கும் மாநிலமும் மணிப்பூர்தான். மியன்மாருடன் 358 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் மணிப்பூரின் எல்லையை சரிவர பாதுகாக்க தவறிய குற்றத்துக்கு இந்திய ராணுவம் பொறுப்பு என்று சொல்லலாம். அனால் அங்கே இயங்கிக் கொண்டிருக்கும் தீவிரவாத கும்பல் அனைத்தும், விடுதலை போராட்ட வீரர்கள் என்ற இந்த கட்டுரையின் தொனி சரியல்ல என்பது என் கருத்து.

     வி. புலிகளின் வீச்சு மணிப்பூர் வரை பரவியிருப்பதற்கும் சான்று தருகிறார் சுப்பிரமணியன்.

     Political Violence and the Police in India by K.S. Subramanian Page 40

     Violence in the Northeast and Jammu and Kashmir:

     Anti-State organisations such as the United Liberation Front of Assam
     (ULFA), the National Socialist Council of Nagaland (NSCN), People’s
     Liberation Army (PLA) of Manipur and others are connected to
     networks of trans-border narcotics and weapons exchange. Intelligence
     sources indicate that narcotics trade has been lucrative enough to give
     rise to a multitude of insurgent groups in the Indian state of Manipur.
     The large Tamil population of Moreh, a town in Manipur bordering
     Myanmar, is suspected to possess links with the LTTE in Sri Lanka.

     http://wikimapia.org/14756359/PREM-NAGAR-TAMIL-SANGAM

     http://cira.med.yale.edu/parivartan/resources/reports/manipurhiv_1205.pdf

  • வட கிழக்கு மாநிலங்களின் இடியாப்ப சிக்கலை புரிந்து கொள்ள உதவும் இன்னொரு கட்டுரை.
   http://www.e-pao.net/epSubPageExtractor.asp?src=leisure.EI.Amar_Yumnam.Incomplete_Nation

   இந்திய அரசு சரிவர கவனிக்காத, அணுகாத பலப்பல பிரச்சனைகளில் மணிப்பூரும் ஒன்று.

   • என்ன சொல்ல வருகிறீர்கள்.?
    இது இணையத்தில் வெளியிரடப் பட்ட செய்தி.சரி
    //இப்படி பலப்பல பரிமாணங்கள் கொண்ட பிரச்சனைக்கு இந்திய அரசாங்கம் மட்டுமே முழுப் பொறுப்பு என்று வாதங்கள்.//

    இது உங்கள் கருத்தா?

    //இந்திய அரசு சரிவர கவனிக்காத, அணுகாத பலப்பல பிரச்சனைகளில் ////மணிப்பூரும் ஒன்று//

    அதாவது இந்தியா சரியாக அணுகவில்லை என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள்?
    என்ன செய்தார்கள்?என்ன செய்து இருக்க வேண்டும்?

 10. “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை”

  வாத பிரதிவாதங்களில் ஈடுபடும் அளவிற்கு நமக்கு திறமை பத்தாதுங்க, ஆனால் போராட்டங்களில் ஈடுபடுவதில் பொதுவாகவே தயக்கம் காட்டுகிற பெண்கள் நிர்வாண போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் எவ்வளவு வலிகளை அவர்கள் சுமந்து கொண்டிருந்தால் உயிரினும் மேலான மானத்தை ஆயுதமாக்கி ரோட்டில் நிற்பார்கள். அந்த தாய்களில் ஒருத்தியை நம் தாயாக நினத்துப்பார்த்தாலே குலை நடுங்குகிறது. சில பேருக்கு பல பேரை மனிதர்களாக கூட ஏற்கும் எண்ணம் இல்லை.. பிரச்சனைகளுக்கு அதுதான் காரணம்.

 11. //ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ” ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.//

  பு.ஜ குற்றம் சாட்டும் காங்கிரஸ் அரசு “புதைத்து’ வைத்திருப்பதாக ஜீவன் ரெட்டி கமிட்டியின் முழு அறிக்கையும் ஹிந்து பத்திரிகையின் வலைத்தளத்தில் இருக்கிறது. இந்த தவறான தகவலை திருத்தி விடுவீர்கள் என் நம்புகிறேன்.
  http://www.hinduonnet.com/nic/afa/

 12. //ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ” ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.//

  அறிக்கையை ஒளிச்சு, பொதைச்சு எல்லாம் வைக்கலீங்க அரசு. முழு அறிக்கையும் ஹிந்து வலைத்தளத்தில் காணலாம்.

  http://www.hinduonnet.com/nic/afa/

  இந்த திருத்தத்தை வெளியிடுவீங்கன்னு நம்பறேன்.

  • உண்மை 1:
   அறிக்கையை வெளியிடமாட்டேன் என்று மறுத்து அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் செய்திக் குறிப்பு.

   http://www.e-pao.net/epRelatedNews.asp?heading=1&src=091006

   Jeevan Reddy Committee recommends repeal of AFSPA
   Source: The Sangai Express / Siddharth Varadarajan ( The Hindu)

   New Delhi, October 08: On Friday, Union Home Minister Shivraj Patil declined to make public the report of a high-level official panel tasked with reviewing the provisions of the Armed Forces (Special Powers) Act (AFSPA).

   He had good reasons.

   The 147-page report of the Justice BP Jeevan Reddy Committee � a copy of which is now with The Hindu � unambiguously recommends the repeal of the controversial law against which people in Manipur and elsewhere in the North-East have been agitating for several years.

   “The Armed Forces (Special Powers) Act, 1958, should be repealed,” it notes in its recommendations.

   “The Act is too sketchy, too bald and quite inadequate in several particulars”.

   The report adds that the impression gathered by the Committee during the course of its work is that “the Act, for whatever reason, has become a symbol of oppression, an object of hate and an instrument of discrimination and highhandedness”.

   Acknowledging that the Supreme Court had upheld the constitutional validity of the Act, the Committee said that judgment “is not an endorsement of the desirability or advisability of the Act.”.

   The apex court may have endorsed the competence of the legislature to enact the law.

   But “the Court does not � it is not supposed to � pronounce upon the wisdom or the necessity of such an enactment.”.

   On this point, the Jeevan Reddy Committee’s findings are clear: “It is highly desirable and advisable to repeal the Act altogether, without, of course, losing sight of the overwhelming desire of an overwhelming majority of the (NorthEast) region that the Army should remain (though the Act should go).”.

   The other members of the Committee � set up by the Prime Minister in November 2004 � are Lt Gen (Retd.) V.R Raghavan, P Shrivastava, a former special secretary in the Union Home Ministry, Doctor S.B Nakade, a former Vice-Chancellor of the Marathwada University, and senior journalist Sanjoy Hazarika.

   The panel turned in its report in June 2005 but the Manmohan Singh Government has yet to officially accept or reject its findings.

   Rejecting the principal submission made by the armed forces in favour of continuation of the AFSPA, the Committee pointed out that protection from legal proceedings against soldiers acting in good faith already exists in Section 49 of the Unlawful Activities (Prevention) Act, 1967 (ULP Act).

   It also noted that “while providing protection against civil or criminal proceedings in respect of the acts and deeds done by ”the armed] forces while carrying out the duties entrusted to them, it is equally necessary to ensure that where they knowingly abuse or misuse their powers, they must be held accountable therefore and must be dealt with according to the law applicable to them.”.

   Accordingly, the Committee recommends amending the ULP Act to incorporate measures that would regulate the already permissible conduct of armed forces personnel in areas where they are deployed to fight terrorist activities and provide protection to ordinary citizens against possible abuse.

  • உண்மை 1:
   அறிக்கையை வெளியிடமாட்டேன் என்று மறுத்து அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் செய்திக் குறிப்பு.

   http://www.e-pao.net/epRelatedNews.asp?heading=1&src=091006

   Jeevan Reddy Committee recommends repeal of AFSPA
   Source: The Sangai Express / Siddharth Varadarajan ( The Hindu)

   New Delhi, October 08: On Friday, Union Home Minister Shivraj Patil declined to make public the report of a high-level official panel tasked with reviewing the provisions of the Armed Forces (Special Powers) Act (AFSPA).
   ……….

 13. இவளுங்க எல்லாம் கஸ்டமர் கிடைக்காத கிராக்கிங்க… யாரோ எரிஞ்ச ஆயிரம் ரூபாக்காக நாடு ரோட்டிலே
  அம்மணமா நின்னாளுங்க..இவளுங்களுக்கு ஒரு வக்காலத்து…
  இந்த வினவு பசங்களே ஒரு வீணா போனவங்க தானே ..வந்துட்டாங்க நாட்டை திருத்த…இவனுங்களாலே ஒண்ணுமே பண்ண முடியல்லை..தானும் முன்னேற (பெரிதாக கொள்ளை அடிக்க) முடியல்ல..முன்னேருரவங்களை (பெரிதாக கொள்ளை அடிக்கிறவனை) பார்த்தும் வயத்தெரிச்சல்..அதை ஆத்துவதர்காக..இளிச்சவாய் இந்தியாவை பழிக்கிறாங்க..
  இவனுங்க தங்களது ஒவ்வொரு நாள் வாழ்க்கையில் நடக்கும் ஏதாவது விடயத்தை திருத்த பார்க்கிறாங்களா?
  உ+ம்: இவனுகளின் தெருக்களில் திரியும் லைசென்ஸ் இல்லாத ஆட்டோ? லஞ்சம் வாங்கும் ரபிக் போலீஸ் …சில்லறை தாராத பஸ் நடத்துனர் ..சீர்கேடான அரசமருத்துவமனை ..இவனுங்கள் யாரையாவது இங்கு வந்து இந்தியாவை குறை சொல்லுபவர்கள் திருத்த முற்பட்டார்களா?..இப்படி சின்ன சின்ன பிழைகளை திருத்தினால் தான் பெரிய பிழைகள் செய்யவும் எவனும் பயப்படுவான்..இதை செய்ய இந்த வினவு கும்பலுக்கு துப்பு இருக்கா? இவனுங்கலே இப்படி இடங்களில் இருந்து கொள்ளை அடிப்பவனுகள் தான்..இவனுகளுக்கு பெரிதாக கொள்ளை அடிப்பவனில் காண்டு.. அது தான்..தாங்கள் எதோ பெரிய சீர்திருத்தவாதுகள் மாதிரி கூவுறாங்க…

  • //வாழ்க்கையில் நடக்கும் ஏதாவது விடயத்தை திருத்த பார்க்கிறாங்களா?//

   யானை போன இடம் கண்ணுக்குத் தெரியாதாம், ஆனா சுண்டெலி போனதைப் பார்த்து குதிப்பானாம்.

   சுண்டெலிகளே சாக்கிரதை

  • தோ பார்ரா…. வந்துட்டார்டா… அம்பி!!

   கொஞ்ச நேரத்துல அன்னியன் அவதாரம் எடுத்து எல்லா தப்ப’யும் திருத்திடுவார் பாருங்க!!

   • இப்ப நடக்குற கூத்துல பாரத மாதாவே அம்மணமா நிக்குதாம்! இதுல நிர்வாண போராட்டம் நடத்துன பெண்களை பற்றி பேச வந்துட்டாரு சொம்ப தூக்கிக்கினு…

 14. உண்மை 2:
  அறிக்கையை வெளியிட்டது அரசு அல்ல. மணிப்பூர் அமைப்புகள்.

  Reddy Report on AFSPA ‘released’
  Posted on Oct 09, 2006 at 16:37 | Updated Oct 09, 2006 at 17:09

  New Delhi: Rights activists from Manipur on Monday released to the media what they claimed was the report of the Justice Jeevan Reddy Committee on a controversial anti-terror law that has sparked widespread protests in the state.

  The report on the Armed Forces (Special Powers) Act, 1958 they claimed, had recommended the law should be repealed

  உண்மை 3:
  http://www.hinduonnet.com/2006/10/10/stories/2006101002661100.htm

  நல்லவன் போல நடித்த மன்மோகன் ஒரு மசிரையும் பிடுங்கவில்லை. அரசினுடைய மசிரை ரகசியமாகப் பிடுங்கியது தி ஹிந்து பத்திரிகை. முழு அறிக்கையையும் வெளியிட்டது தி ஹிந்து பத்திரிகை தானேயன்றி அரசு அல்ல.

  மன்மோகனின் நடிப்பு:
  According to a report filed soon after by the Press Trust of India, the Prime Minister “held the hand of a weeping mother and said, `We will do something’.”

  True to his word, the Prime Minister appointed a high-level committee headed by Justice B.P. Jeevan Reddy with the mandate of “review[ing] the provisions of AFSPA … and advis[ing] the Government of India whether (a) to amend the provisions of the Act to bring them in consonance with the obligations of the Government towards protection of human rights; or (b) to replace the Act by a more humane Act.”

  அறிக்கையை வெளியிட்ட இந்து பத்திரிகை:
  Now that the report has been unofficially released by The Hindu, its contents can be studied and evaluated by civil society. B

  • எனவே கட்டுரையில் அறிக்கையை அரசு வெளியிடவில்லை என்றுள்ள கருத்துக்கள் 100% உண்மையையே.

 15. அப்பாவி பெண்கள் ஆயுதப்படை பிரிவினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி சின்னாப்பின்னமாக்கப்படும் வேதனையை ஒரு மனிதன் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பார்ப்பானேயானால் நிச்சயம் அவன் ஆக மலிவான அடிவருடிப் பேர்வழிதான் என்பதை அடித்துச் சொல்லலாம். மணிப்பூர் பெண்களின் நிர்வாணப் போராட்ட காட்சியைப் பார்க்கும் தன்மானமுள்ள எந்த மனிதனாலும் உங்கள் மாதிரி சிந்திக்க முடியாது. சிந்தனையிலே நேர்மையில்லாத நீங்கள் அப்பெண்களின் மான உணர்ச்சியை புரிந்து கொள்வதற்கு குறைந்தபட்சம் மனிதனாக் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

 16. என்ன வினவு சாரு…
  ரொம்ப பழைய படங்கள எல்லாம் தூசி தட்டி போடுராப்புல தெரியுது!!…

  • போட்டோ பழசுன்னாலும் போட்டோவுக்குரிய பிரச்சினைகள் எல்லாம் இன்னும் அப்படியேதானே இருக்கு. இன்னும் தீர்த்தபாடில்லையே…..

 17. Dear vinavu, I humbly request you, not to publish the low -cheap -comments made by the agents of Indian pimps. It is very disturbing to see the comments made by some persons because their words are ugly and not fit to publish. The women of Assam and Kashmir are our sisters and mothers . If we cannot support them atleast we should not speak against them. They are in love with people like Spectrum Rajas,Chavans,Yeddis,and they will even love and make love with their own…..sorry i do not want to go beyond this.
  regards,
  K Raghavan
  Chennai

 18. communism thotha yedho rendu amaanjigaloda suyanalamam… aanal indha prachanaigal, india mattrum india jananayaga siddhantathin padu tholviam.. indha mutta thana logic thaan purialai!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க