Tuesday, July 23, 2024
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?

பேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?

-

பேஸ்புக்பேஸ்புக் இன்றைய ‘நவீன இளைஞர்’களின் முகவரி. பல் துலக்காமல் கூட இருக்க முடியும், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடாமல் இருக்க முடியுமா என்ற பழமொழி இணையத்தில் பிரபலம். ஒபாமா அரசியல் முதல் உசிலம்பட்டி டீக்கடை வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்வதும், தனது படம், பெருமைகளை அப்டேட் செய்வதும் இவற்றுக்கெல்லாம் லைக் போடுவதும் பேஸ்புக்கில் அனிச்சை செயலாக மாறியிருக்கிறது.

ஒண்ணாம் கிளாஸ் முதல கல்லூரி வரை கூடப் படித்தவர்கள், பழைய தெருக்காரர் முதல் புதிய தெருக்காரர் வரை, நேரில் சிரித்துக் கொள்கிறார்களோ இல்லையோ பேஸ்புக்கில் முகம் கொடுக்காமல் இருக்க முடியாது. நட்பின் இலக்கணத்திற்குள் பேஸ்புக் கணக்கு வைத்திருப்பது ஒரு நிபந்தனையாக மாறி வருகிறது.

எனினும் பேஸ்புக்கில் அனைத்து உணர்ச்சிகளும் ஒரு வணிக நோக்கத்திற்காகவே திரட்டப்படுகின்றன. ஒரு கவிதையையோ இல்லை படத்தையோ இல்லை ஒரு கார்ட்டூனையோ பேஸ்புக்கில் போட்டோ பகிர்ந்தோ புரட்சியாளர் ஆனவர்கள் ஆயிரம் பேர். இந்த மாய உலகம் உருவாக்கியிருக்கும் உணர்ச்சி உண்மை உலகத்தோடு உள்ள உறவை மறைத்து வருகிறது. இப்படித்தால் புரட்சியையும், காதலையும்  நடப்பையும் கூட உரமாக போட்டு சமூக வலைப் பின்னலை உருவாக்கியிருக்கிறது பேஸ்புக் நிறவனம்.

இணையம் என்ற நிகர் நிலை உலகில் பேஸ்புக் ஒரு திருவிழாக் கூட்டம் என்றால் மிகை அல்ல. பொதுவாக மக்கள் கூடும் இடங்களில் தமது சரக்குகளை கடை பரப்புவதற்கு வியாபாரிகள் போட்டி போடுவார்கள் என்பது இப்போதைய உலக நடைமுறை. பேஸ்புக் தான் கூட்டிய கூட்டத்தை பயன்படுத்தி காசு சம்பாதிக்க விளம்பரங்களை காட்டுவது, விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவது என்று பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது.

சமீபத்திய பங்குகள் வெளியீட்டிற்கு பிறகு பேஸ்புக்கின் பங்குகளின் விலை ஆரம்ப விலையிலிருந்து ($38) பாதியாக குறைந்து விட்டிருக்கின்றது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பங்குச் சந்தை எதிர்பார்க்கும் லாப சதவீதத்தை காட்ட வேண்டும் என்று அழுத்தம் பேஸ்புக் நிறுவனத்தின் மீது அதிகமாகிக் கொண்டே போகிறது.

பயனர்களின் சமூக உறவுகளை காசாக்குவதற்கான புதிய புதிய வழிகளை தேடினால்தான் பேஸ்புக்கின் வருமானத்தை அதிகரிக்க முடியும். வருமானத்தை அதிகரித்தால்தான் பங்கு விலையை சந்தையில் தூக்கி நிறுத்த முடியும்.

பேஸ்புக்கில் லைக் என்ற விருப்பத்தை தெரிவிக்கும் பட்டன் அடிப்படையான ஒரு வசதி. அதன் மூலம் குறிப்பிட்ட கருத்து அல்லது ஸ்டேட்டஸை ஆதரிப்பதாக ஒருவர் தெரிவிக்கலாம். இன்னார் இன்ன கருத்தை ஆதரிக்கிறார் என்ற விபரம் அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிய வரும். அவர்களும் அதைப் போய் படிப்பார்கள். இப்படி ஒரு சமூக கருத்துப் பரிமாற்றத் தளமாக பேஸ்புக் வளர்ந்துள்ளது.

இந்த சமூக உறவு பரிமாற்றத்தை வணிக ரீதியில் அறுவடை செய்யும் முயற்சியில் இப்போது வான்ட் அதாவது தேவை என்ற பட்டனையும் கலெக்ட் அதாவது சேகரி என்ற பட்டனையும் பேஸ்புக் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக்குடன் ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனங்கள் தமது விற்பனை பொருட்களை தொகுப்புகள் (கலெக்சன்ஸ்) என்ற பெயரில் வெளியிடுவார்கள். அந்தப் பொருட்களுக்கு அருகில் வான்ட் அல்லது கலெக்ட் என்ற பட்டன் காண்பிக்கப்படும். அதை அழுத்தினால் அந்தப் பொருளை தனக்கு தேவை என்று பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும் அந்தப் பொருளை பேஸ்புக்கின் வழிகாட்டலுடன் விற்பனையாளரின் தளத்திற்கு சென்று வாங்கிக் கொள்ளவும் முடியும்.

‘இன்னார் இன்ன பொருள் தேவை என்று பதிவு செய்திருக்கிறார் அல்லது இன்ன பொருளை வாங்கியிருக்கிறார்’ என்று அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிய வர இன்னும் அதிகமான பேர் அதை வாங்குவதற்கான சாத்தியம் ஏற்படும்.

பேப் டாட் காம், மைக்கேல் கோர்ஸ், மேட்டுக் குடியினருக்கான டிபார்ட்மென்ட் ஸ்டோர் நெய்மன் மார்கஸ், பாட்டரி பார்ன், ஸ்மித் ஆப்டிக்ஸ், உள்ளாடைகள் நிறுவனம் விக்டோரியாஸ் சீக்ரட், வேய் பேர் என்ற ஏழு வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தற்சமயம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் சோதனை ஓட்டம் அமெரிக்காவில் மட்டும் நடத்தப்படுகிறது.

தீனி போட்டு கொழுக்க வைத்த ஆட்டுக் கிடாய்களை ஒவ்வொரு திருவிழாவக்கு ஒன்றாக வெட்டி பொங்கல் வைப்பது போல சமூக வலைப்பின்னலுக்குள் பிடித்து வைத்துள்ள பயனர்களை வணிக நிறுவனங்களுக்கு பொங்கல் வைக்கத் தயாராகிறது பேஸ்புக். கூடிய சீக்கிரத்தில் வணிக அழுத்தம் அதிகமாக அதிகமாக இணையப் புரட்சியாளர்கள் தமது புரட்சியை நடத்த என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறி!

பேஸ்புக் உங்களையும் உங்களது விருப்பங்களையும் விற்பனை செய்கிறது. அந்த விற்பனை உண்மையில் வணிக நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்ய உதவுகிறது. இறுதியில் பேஸ்புக்கின் உண்மையான உணர்ச்சி இந்த சரக்கு உணர்ச்சிதான் என்றால் முகநூல் புரட்சியாளர்கள் ஒத்துக்கொள்வார்கள?

படிக்க

 1. எது எப்படியோ..! எகிப்தில் ஒரு புரட்சி வெடிக்க காரணமாக இருந்தது..! பத்திரிக்கைவிட அதிக வேகத்தில் எதெனும் நண்பனிடமிருந்து உலகத்தின் ஏதெனும் இடத்தில் நடக்கும் விடயங்களை அறிந்துக்கொள்ள முடிகிறது!!

  என் பள்ளி மற்றும் கல்லூரித் தோழர்களை கேட்காமலேயே கண்டுபிடித்து தூசி தட்டி மீண்டும் நட்பை தொடரவைத்தது…!

  இன்னும் பலருக்கு பழைய காதலியின் இன்றைய வாழ்வியலை தெரிந்துகொள்ள உதவுகிறது..!

  விளம்பரம் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யட்டும்…முகநூல் கட்டணம் என எதுவும் வசூல் செய்யாமல் இருந்தால் போதும்…!

  “சாதி சண்டை மைதானம்” என்ற குழு முகநூலில் உள்ளது. சாதி சண்டை போடுபவர்கள் வந்து சேர்ந்துக்கொள்ளலாம்.. மருத்துவமனைகள் தங்கள் விளம்பரங்களை அங்கு தரலாம்..(ஏதோ எங்களால் முடிந்தது)

 2. Ha Ha Ha Nice Article. Can you tell me one source, (be it entertainment, knowledge base, data sharing , medical field , or even devotional items ) where there is no advertisement is there now a days ? Whether You like it or not, you have to see the advertisements, brands, etc on any paid or unpaid services , you enjoy – is the current status .

  One should develop a habit of not getting involved in such advt techniques, not to invest their feature income while buying , not to buy things which is not necessary for them- even if it is available for just Rs. 1 /= Slowly the impact of advertisements will go down.

  Yes. It is a collective effort .

  R’s Ram

  • ராம்,

   சினேகா-பிரசன்னா கல்யாணத்தில் கேமராவை உள்ளே விட்டாங்க. ‘நாங்க ஒரு பக்கம் கல்யாண சடங்குகளை நடத்திக்கிறோம். கேமரா அதுபாட்டுக்கு படம் பிடிக்கட்டும். டிவில போட்டா காசுக்கு காசும் ஆச்சு’ என்று நியாயப்படுத்தி.

   https://www.vinavu.com/2012/05/14/sneha-prasanna-marriage/

   அது மாதிரிதான் இருக்கு உங்க லாஜிக்கும். “நான் பாட்டுக்கு என் நட்பு, உறவு, பாசம், காதல் எல்லாம் பரிமாறிக் கொண்டு இருக்கேன். ஒரு ஓரமா பேஸ்புக் விளம்பரம் பண்ணிக்கட்டும்”ணு இப்போ சொல்றீங்க.

   ஆமைய தண்ணில போட்டு கொஞ்ச கொஞ்சமா சூடேத்துவது போல கொஞ்ச கொஞ்சமா நம்ம உணர்வுகளை மரக்க வச்சு, கொஞ்ச நாளில் ‘இன்னார் இன்னாரிடம் ஐ லவ் யூ சொன்னார், அதை சொல்வதற்கு முன்பு காட்பரீஸ் சாக்லேட் சாப்பிட்டார், நீங்க?’ என்று personalized விளம்பரம் காட்ட ஆரம்பிப்பாங்க. அதையும் எஞ்சாய் பண்ணுவோம்.

   அதுக்கப்புறம், ‘இன்னாருக்கு தலைவலி வந்து குரோசின் சாப்பிட்டார், நீங்களும் சாப்பிடுங்க குரோசின்’னு நம்ம நோய்களையும் கடை பரப்பி விற்பனை செய்ய ஆரம்பிப்பாங்க. அதையும் நியாயப்படுத்திக் கொள்வோம்.

   கடைசியில மனித உணர்ச்சிகளை எல்லாம், வாழ்க்கையையே கடைப் பொருளா மாத்தி வச்சிருப்பாங்க, அந்த மாதிரி உலகத்தைத்தான் வருங்கால சந்ததிக்கு விட்டுட்டு போகப் போறோம்.

   • No Mr. Kumaran. Your argument and comparison is not correct.

    “The craze on something of our people , be it male or female; working class or managerial class etc ” is the deciding factor. சினேகா-பிரசன்னா marriage album sold by them is there own decision and the craze of ours to view this make few to roll some money on this issue. (Thanks to சினேகா-பிரசன்னா – they have not allowed the firstnight session to be captured and broadcast )

    The craze on TV, Craze on Cricket, Craze on Film and film starts interview, craze on WWW shows, etc etc are the motivating factor for making them more commercialized.

    When you come to social network and show your love, care , feeling, emotions, and expect no one should comment, copy and paste , or any other type of usuage is UN Ethical. It is something like running on the street commenting about himself on any subject and expect no one in the street to reproduce or use the message some where. You can not stop.

    If you have that much concern, use different medium to express your love, affection , friendship, carrring , your creativity etc etc . Not to come and share in public wall.

    Thalai , that is why there is a famous saying in tamil, “Eli valai analum, thani valai” nnu . Thanks Ram

    • திரு ராம்,

     முதலில் நீங்கள் இப்படி சொன்னீங்க

     //One should develop a habit of not getting involved in such advt techniques, not to invest their feature income while buying , not to buy things which is not necessary for them- even if it is available for just Rs. 1 /= Slowly the impact of advertisements will go down. //

     அப்படீன்னா அடுத்தடுத்த கட்டங்களில் பேஸ்புக் இப்படி செய்தால்

     //ஆமைய தண்ணில போட்டு கொஞ்ச கொஞ்சமா சூடேத்துவது போல கொஞ்ச கொஞ்சமா நம்ம உணர்வுகளை மரக்க வச்சு, கொஞ்ச நாளில் ‘இன்னார் இன்னாரிடம் ஐ லவ் யூ சொன்னார், அதை சொல்வதற்கு முன்பு காட்பரீஸ் சாக்லேட் சாப்பிட்டார், நீங்க?’ என்று personalized விளம்பரம் காட்ட ஆரம்பிப்பாங்க. அதையும் எஞ்சாய் பண்ணுவோம்.

     அதுக்கப்புறம், ‘இன்னாருக்கு தலைவலி வந்து குரோசின் சாப்பிட்டார், நீங்களும் சாப்பிடுங்க குரோசின்’னு நம்ம நோய்களையும் கடை பரப்பி விற்பனை செய்ய ஆரம்பிப்பாங்க. அதையும் நியாயப்படுத்திக் கொள்வோம்.//

     அவர்களின் வியாபாரப் பொருளா நீங்களே மாறுவதை இப்போ ஏத்துக் கொள்கிறீர்கள்.

     //If you have that much concern, use different medium to express your love, affection , friendship, carrring , your creativity etc etc . Not to come and share in public wall. //

     ‘பேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் காதல், அன்பு, கோபம், வீரம் எல்லாமை கடைப்பொருளாக விற்பனைக்கு பயன்படுத்தப்படலாம். அது உங்களுக்கு விருப்பமா?’

 3. ஆஹா … இப்படியெல்லாம் வேற நடக்குதா? எது எப்படியோ, ஃபேஸ்புக் இலவசமா இருக்கிறவரைக்கும் பாவிக்கவேண்டியது தான். நான் ஒன்றும் ஆன்லைன்ல வாங்கப் போவது இல்லை. மற்றவர் வாங்குவது அவரவர் பாடு .. 🙂

 4. நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் வியபாரநோக்கமோ வருமானமோ இல்லாமல் சமூகவலைத்தளங்களை எப்படி நடத்த முடியும்?

  • //வியபாரநோக்கமோ வருமானமோ இல்லாமல் சமூகவலைத்தளங்களை எப்படி நடத்த முடியும்?//

   நடத்த முடியாதுதான். சமூக வலைத்தளங்கள் மட்டுமில்லை, மக்களின் உணர்வுகள், உழைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் என ஒவ்வொன்றும், லாபம் ஈட்டித் தருவதற்கான வடிவத்துக்கு திரிக்கப்பட்டு, விகாரமான ஜந்துக்களாகத்தான் இன்றைய உலகில் நமக்குக் கிடைக்கின்றன.

   ‘நமக்கு இருப்பதாகச் சொல்லப்படும் சுதந்திரமும் உரிமைகளும் போலியானவை’ என்பதுதான் நிதர்சனம். ‘நாம் என்ன வேலை பார்க்க வேண்டும், எத்தகைய வீட்டில் வசிக்க வேண்டும், எந்தப் பொருட்களை வாங்க வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று சகலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக பொருளாதார உறவுகள்தான் இருக்கின்றன.

   வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பை ஒழித்தால்தான் மனித படைப்பாற்றலும், சமூக உறவுகளும் ஆரோக்கியமான சூழலில் முழுமையாக மலர முடியும்.

 5. நம்ம ஊர்ல Want, Collect அறிமுகமாகட்டும் அப்பறம் பாருங்க பொறை, buiscuit ல இருந்து காவேரி, ஈழம் வரைக்கும் வாங்கி காட்டறோம் 🙂

 6. இலவசமே வாழ்கை என்று இருக்கும் நம் நாட்டில், face புக்கின் இந்த மாற்றம் இங்கு வேலைக்கு ஆகாது.

  இப்போதே இன்டர்நெட் ஓசியில் கிடைப்பதால் தான் (ஆபீஸ், கம்பெனியில் டேட்டா கார்டு, கம்பெனி சிம்) face புக்கில் நிறைய பேர் போஸ்ட் செய்வதும், லைக் பண்ணுவதும் வாடிக்கையாக உள்ளது..

 7. ‘நமக்கு இருப்பதாகச் சொல்லப்படும் சுதந்திரமும் உரிமைகளும் போலியானவை’ என்பதுதான் நிதர்சனம். ‘நாம் என்ன வேலை பார்க்க வேண்டும், எத்தகைய வீட்டில் வசிக்க வேண்டும், எந்தப் பொருட்களை வாங்க வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று சகலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக பொருளாதார உறவுகள்தான் இருக்கின்றன.

  கடைசியில மனித உணர்ச்சிகளை எல்லாம், வாழ்க்கையையே கடைப் பொருளா மாத்தி வச்சிருப்பாங்க,
  அந்த மாதிரி உலகத்தைத்தான் வருங்கால சந்ததிக்கு விட்டுட்டு போகப் போறோம்.

  இவைகள் அருமையான வரிகள்…..
  இன்றைய இணையதளம் என்பது இருந்த இடத்திலிருந்தே அனைவருடைய கருத்துகளையும் பரிமாற்றம் செய்ய கூடிய இடம்.
  அதேபோல் சமூகநல்லிணக்கத்தையும் உருவாக்குற இடம்…….
  ஒரு பக்கம் நட்பு, ஒரு பக்கம் காதல், ஒரு பக்கம் உறவுகள்ஒருங்கிணைப்பு,
  ஒரு பக்கம் ஆட்சியாளர்கள், ஒரு பக்கம் எதிரிகள், ஒரு பக்கம் சாதி மத சண்டை
  ஒரு பக்கம் புறட்சி… ஒரு பக்கம் விழிப்புணர்வு…..
  இதேபோல்தான் ஒருபக்கம் வணிக சந்தை……..
  இதெல்லாம் கலந்ததுதான் இணைய தளம்……..
  இக்கட்டுரையை வைத்து நாம் அறிய வேண்டியது……!
  நாம் எப்படியெல்லாம் பிறர்க்கு உபயோகமுள்ளவர்களாய் இருக்கிறோம் என்பதுதான்.

 8. கதை மட்டும் எழுத கூடாது. முன் உதாரணமாக இருக்க வேண்டும். வினவு ஏன் facebookஐ like செய்ய வேண்டும். தயவுசெய்து facebookஐ நீக்குங்கள். ஊருக்கு மட்டும் உபதேசமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க