Tuesday, September 28, 2021
முகப்பு கலை கவிதை அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள்?

அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள்?

-

வாங்கும் பொருளை உற்றுப் பார்ப்பவர்கள்
இதை வழங்குவோர் வாழ்க்கையை
நெருங்கிப் பார்த்ததுண்டா?

கடை சாத்தப் போகும் கடைசி நேரம் …
அரைக் கிலோ அரிசிக்கு
எடை போட வேண்டும்.
சிதறிய பொருளில் பசியாறி
சிற்றெறும்பும் நேரத்தே உறங்கும்.

ஒவ்வொரு நாளும் பதினோரு மணிக்கு …
ஏங்கிய குடலில் ராச்சோறு திணித்து
மறுநாள் ’லைன்’ வியாபாரிக்குத்
தர வேண்டிய காசைப் பாகம் பிரித்து,
விடிகாலை மார்க்கெட் சாமானுக்கு
வேண்டியதை எடுத்து,
குடும்பச் செலவுக்கு கேட்பதைக் குறைக்கையில்,
மனைவியின் பார்வையும்
மணி பன்னிரெண்டு முள்ளும்
கண்களைக் குத்தும்.
கண்களை மூடினால்
தசை கடுகடுத்துக் கொத்தும்.

அதிகாலை நான்கு மணிக்கெழுந்து
முகம் கழுவி, கொப்பளிக்க
புல் இமை மூடி நிலம் கூட அசந்து தூங்கும்.
எழுந்து கொள்ளும் தாயுடல் வேகத்தில்
இமை திறவாமல் பிள்ளை அசைந்து துவளும்.

இரு சக்கர வாகனத்தை எடுத்து உதைக்கையில் …
நடக்க வழியின்றி நாளும் கடைக்குள்

சிறைப்பட்ட கால்களில் சீரான ஓட்டமின்றி
இரத்த நாளம் வெடுக்கென வலிக்கும்.

வண்டியின் சுமைகள் கூடக் கூட
தனக்கென உடல் ஒன்றிருப்பதை
உணர்த்தும் நரம்பின் வலிகள்.
இத்தனையோடும் …
உங்கள் தேவைகளைத் தருவிக்கும்
சிறு கடை வாழ்க்கை!

பால்குடிப் பிள்ளைக்கு
மனைவி கேட்ட மருந்துகள் மறப்பினும்
கடையில் கேட்ட குரல்கள் துரத்தும்…
பால் பாக்கெட், தண்ணீர்—— கேன்
குழம்பு, வறுவல், பொறியலுக்கேற்ற பலவகைக் காய்,
புலம்பும் எதிர் வீட்டுக்காரர் உடலுக்கேற்ற
பாகற்காய், சுண்டக்காய்,
அவசரமாய் நீளும் கைகளின் தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லி, கோழி முட்டை – என
உங்கள் தேவையின் தெரிவு
கடையினில் தெரியும்.
காலையிலிருந்து காய்ந்த
கடைக்காரரின் வயிறோ
ஒரு தேநீர் கேட்டு இரைப்பை எரியும்!

சில்லறைக் காசுக்கு சீரகம், புளி வரை
’கிரடிட்’ அட்டை தேவையில்லை …
சிறு சிகரெட் அட்டையில்
உங்கள் கடன் மொழி அடங்கும்.
வாந்தி, மயக்கம் அவசரத் தேவைக்கு
அடைத்த கடையைத் திறந்து உடனே
சோடா, ஜிஞ்சர் பீர் …
முகம் வாடாமல் அண்ணாச்சி உழைப்பில்
மனித உறவு தொடங்கும்.

பசி, நீர் ஒடுக்கி
சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு
நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல்
தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும்
அண்ணாச்சி வாழ்க்கையைக்
காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’

தெரிந்தவர் வாழ்க்கை அழிபடும் தருணம்
தெரிந்தே நழுவுதல் தேசத் துரோகம்.
ஆபத்து ! அண்ணாச்சிகளுக்கு மட்டுமல்ல.
சில்லறை உணர்ச்சிகளின்
அந்நியப் பாக்கெட்டுகளில்
அடைக்கப்படப் போவது நீங்களும் தான்!
இதயத்தை விற்கச் சம்மதிக்காதவர்கள்
போராடுகிறார்கள்… நீங்கள்?

– துரை. சண்முகம்.

_______________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_____________________________________________________

 1. உழைப்பை விதைத்தவர்கள்
  உயிரை விடுகிறார்கள்
  பணத்தை விதைத்தவர்கள்
  பகட்டோடு வாழ்கிறார்கள்

  எய்க்கும் கூட்டம்
  எத்தனை நாள் தாக்குபிடிக்கும்

  • ஆமா.அவங்க தான் நல்லா சம்பாதிக்ராங்க அப்புடின.நீங்களும் போய் கடை வச்சி வேலை செய்து பாருங்க அப்ப தெரியும் கஸ்டம்…

 2. அண்ணாச்சிகள் அப்படியே அண்ணாச்சிகளாய்
  அன்றாடம் அயலுருபவர்களாக இருப்பதையே
  வினவு இருக்க விரும்புகிறது… அரை பாட்டில் சோடாவுக்காக
  ஆனால் மாறும் என்ற தத்துவத்தை தவிர அனைத்தும் மாறும்
  என்பதை வினவு மறை(றத்த)ந்ததேனோ…

  • Don’t be naive.

   One of the conditions of Coke/Pepsi when they supplied free Branded Refrigerator (Red/Blue ones) to Annachi shops (small shops) is that they should not keep stock of local brands.

 3. @Hari,

  I am telling, it is shameful to mention name of a caste to support a group of small business owners. caste is a stupid idea of hindu religion. to see reference to caste in an article that is about saving small business is shameful. I support all small business of Indians, be it is nadars, chettiars, dalits, thevars or muslims.

 4. well,you are the only Nadar who feels like that,back in Trivandrum it is totally different.Nadars get great social support from the community to set up businesses like many other business community.

  Anyway,you have your opinion.

 5. அண்ணாச்சி என்ற வார்த்தை வந்தவுடன் அப்படி அழைக்கப்படுபவர்களெல்லாம் ஹோட்டல் சரவண பவன் அண்ணாச்சி, அல்லது தி.நகரில் பாதிக்கு சொந்தக்காரராய் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை மனதில் நினைத்துக் கொண்டு பின்னூட்ட கருத்துக்கள் தொடர்கிறதோ என்கிற அய்யம் எழுகிறது. வினவு சொல்ல வருகிற விசயம், அண்ணாச்சியோ, தேவரோ, செட்டியாரோ, தலித்தோ ஒரு சிறு கடை வைத்து அதற்கு அதிகாலை எழுந்து சரக்குகள் வாங்குவதிலிருந்து நடு இரவு கடை அடைக்கும் வரை கடுமையான உழைப்பு என்பது அதில் அடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட சிறிய வியாபரிகளை சில்லரை வியாபாரததில் அந்நிய முதலீடு என்கிற வகையில் நுழையும் வால்மார்ட்கள், மெகா மால்கள் அழித்துவிடும் என்கிற அபாயத்தை சொல்ல வந்த கட்டுரை இது. சரியான பாதையில் விமர்சனங்கள் தொடரட்டும்

 6. சட்டைக் காலரில் அழுக்குப்படியாமல் 5 இலக்கத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இப்படித் தானே பின்னூட்டம் இடுவார்கள். அவர்களுக்கு எங்கே சிறு வியாபாரிகளின் வலி தெரியப் போகிறது.

  • அவனும் உழச்சுத்தான சம்பாரிக்கிறான்…..சட்டேல அழுக்குப்ப்ட்டு வேர்வவந்தாத்தான் அதன் பேர் உழைப்பா????

   • நீங்கள் எல்லாம் கடையில் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கிக் குடிப்பவர்கள் தானே!! அப்படித்தான் பேசுவீர்கள். ஒரு நாளாவது தெருப் பைப்பில் கூட்டத்தில் வரிசையில் நின்று குடத்தில் தண்ணீர் பிடித்துக் குடித்துப் பாருங்கள். பின்னர் தெரியும். இரண்டு தண்ணீருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று!!!

 7. Raja February 24, 2012 at 9:09 pm
  Permalink
  6

  எங்கள் பகுதியில் ஒருவர் விருதுநகர், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து மொத்தமாக வாங்கி, அதை சுத்தமாக சலித்து, புடைத்து சிறு சிறு பாக்கெட்டுகளாக அடைத்து கடைகளுக்கு வினியோகம் செய்கிறார். 20 அல்லது 25 பெண்கள் வேலை செய்கிறார்கள். அந்த பெண்கள் கொண்டுவரும் பணத்தை நம்பி அவர்களின் குடும்பத்தில் எத்தனை உயிர்கள் காத்திருக்கிறது என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  silandhy February 24, 2012 at 9:41 pm
  Permalink
  7

  செய்ய மாட்டார்கள்,மாறாக அந்த அடிவருடி,அல்லக்கை,சொம்புதூக்கிகள்
  எப்போதும் பாடும் புராணத்தையே பாடுவார்கள்.ஆனால் ஒன்று நாடு
  சிங்கப்பூர் போல ஆகிவிடும்.ஊழல் மற்றும் லஞ்ச விசயங்களில் அல்ல
  வாழ்க்கை செலவினங்களில்.

  silandhy December 9, 2011 at 3:59 pm
  Permalink
  1

  எவ்வளவு தெளிவாக எழுதினாலும்,இந்த அல்லக்கை சொம்புதூக்கிகள் மாறப்போவதில்லை.வரிசையா வருவானுங்க பாருங்க.
  ஆனா ஒரு பயலும் கட்டுரையில் உள்ள மேட்டரை
  தொடவும் மாட்டானுங்க.கேள்விக்கு பதிலும் வராது.

 8. //தெரிந்தவர் வாழ்க்கை அழிபடும் தருணம்
  தெரிந்தே நழுவுதல் தேசத் துரோகம்.
  ஆபத்து ! அண்ணாச்சிகளுக்கு மட்டுமல்ல.
  சில்லறை உணர்ச்சிகளின்
  அந்நியப் பாக்கெட்டுகளில்
  அடைக்கப்படப் போவது நீங்களும் தான்!
  இதயத்தை விற்கச் சம்மதிக்காதவர்கள்
  போராடுகிறார்கள்… நீங்கள்?
  //
  நம் வாழ்கை இல்லவே, தெரிந்தவர் வாழ்க்கை தானே. நமக்கு ஆபத்து வராதவை நமக்கு உரைக்காத அளவுக்கு நமது தோல் தடித்து விட்டது.

 9. இன்று காலை ஏசியாநெட் நியூஸில் திரு. பாலகோபாலன் என்பவர் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றி கூறும் போது சொன்னது : “ஒரு மாத உபயோகத்திற்கான மருந்து ‘சிப்லா’ மருந்து கம்பெனியில் இருந்து வருவது ரூபாய். 9,000.00 க்கு கிடைக்கிறது. அதே மருந்து ஜெர்மன் கம்பெனியிலிருந்து வருவது ரூபாய். 1,20,000.00 ஆகிறது.”

  ஆக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் அண்ணாச்சிக் கடைகள் அழிபடுகிறதோ இல்லையோ பாவப்பட்ட மக்களாகிய நாம் அழிந்து போய்விடுவோம் என்பதை ஆதரவு தருபவர்கள் சிந்திக்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க