privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு!

அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு!

-

ந்தியாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வணிகத்தை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த அமெரிக்காவின் டல்லாஸை தலைநகரமாக கொண்டு இயங்கும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது.

1985-ம் ஆண்டு செயற்கைக் கோள் வழியாக தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதியை பெங்களூருவில் நிறுவி இந்தியாவின் ஐடி அவுட்சோர்சிங் துறையை தொடங்கி வைத்த நிறுவனம் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (டிஐ). அந்நிறுவனம் இந்தியாவில் 1500 பொறியாளர்களை வேலைக்கு வைத்திருக்கிறது.

டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆண்டுக்கு $14 பில்லியன் (சுமார் ரூ 77,000 கோடி) வருமானம் ஈட்டுகிறது. மொபைல் போன் சில்லுகள் உற்பத்தியில் இன்டெல், சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

அதன் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஒரு வணிகப் பிரிவையே இழுத்து மூடுவதாக டிஐ முடிவு செய்திருக்கிறது. மொபைல் போன், டேப்லட் போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் சில்லுகளிலிருந்து அதிக லாபம் தரும் துறைகளுக்கு கவனத்தை திருப்பப் போவதாக அறிவித்திருக்கிறது. குவால்காம் போன்ற நிறுவனங்களின் கடும் போட்டியாலும், சாம்சங் போன்ற வாடிக்கையாளர்கள் தாமே சில்லுகளை உற்பத்தி செய்து கொள்வதாலும் டிஐ கம்பியில்லா இணைப்புக்கான துறையில் கவனத்தை செலுத்த முடிவு செய்திருக்கிறது.

உலகெங்கும் உள்ள ஊழியர்களில் 5 சதவீதம் பேரை (1700 பேர்) வேலை நீக்கம் செய்வதன் மூலம் ஆண்டுக்கு $450 மில்லியன் சேமிப்பு கிடைக்கும் என்று கணக்கு போட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் 300 முதல் 500 வரை பொறியாளர்கள் வேலை இழப்பார்கள். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவமுடைய மென்பொருள் வல்லுனர்கள். வேலை இழப்பவர்களில் சில உயர் மேலாளர்களும் அடங்குவார்கள்.

மின்னணு கருவிகள் உற்பத்தி செய்யும் பிற நிறுவனங்களும் இந்தியாவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன.

ஏற்கனவே, பிரான்சைச் சேர்ந்த அல்காடெல்-லூசென்ட் 1,000 இந்திய ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது. இந்த ஆட்குறைப்பில் பெரும்பகுதி 7,000 பேர் வேலை பார்க்கும் பராமரிப்புப் பணிகள் பிரிவில் செய்யப்படும். உலக அளவில் 5,000 ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்று அல்காடெல் ஜூலை மாதம் அறிவித்திருந்தது.

மேலும் நோக்கியா சீமன்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் உலக அளவில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் மொபைல் தொலைபேசி நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வரும் எரிக்சன்ஸ், ஹூவாவெய், ZTE ஆகிய நிறுவனங்களும் சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.

உலகளாவிய பொருளாதார சூதாட்டக் குமிழியின் போது ஆயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், குழிழி உடைந்த பிறகு தமது லாபத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்களை நடுத்தெருவில் விட ஆரம்பித்திருக்கின்றன.

‘சந்தையின் செயல்பாடு இப்படி இருந்தால்தான் நாட்டுக்கு(முதலாளிகளுக்கு) நல்லது’ என்ற மந்திரத்தை முதலாளித்துவ ஆதரவாளர்கள் முணுமுணுக்கலாம். ஆனால் வேலையிழந்த ஊழியர்கள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் வாழ்க்கை இல்லை!

படிக்க:

  1. இது மாதிரியான ஆட்குறைப்பு நடவடிக்கையினால் நிறுவனங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இலாபமாக வரும் ஆண்டில் கிடைக்கும் என்ற வக்கிரமான கணக்கு வேறு.

  2. வேலையே போனாலும் கக்கூஸ்ல உட்கார்ந்து ஒரு பத்து நிமிஷம் அழுதுட்டு, எதுவுமே நடக்காத மாதிரி வீட்டுக்கு போவாங்களே தவிர எதுக்கு இந்த ஆட்குறைப்புன்னு எதிர்த்து ஒரு கேள்வி கேட்க மாட்டாங்க.. IT நண்பர்களே இனியாவது சிந்தியுங்கள்.

  3. ஆட்குறைப்பு நடத்தினால் என்ன. ஒரு நிறுவனம் திவால் ஆகும் நிலையில் , தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆட்குறைப்பு நடத்தினால் என்ன. ஒருவேளை நிறுவனம் நட்டம் அடைந்தால் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் கப்பற்றுவர்களா. அல்லது சட்டம் கதைப்பவர்கள்கப்பற்றுவர்களா. ஒரு நிறுவனம் முடிகிறபோது வேலை கொடுக்கிறார்கள், முடியாதபோது நிறுத்துகிறார்கள்

  4. wELL SAID rIZVI. When the company is facing loss, it needs to stablise iteself, by reducing the cost overall. Yes. Of course, after retrenchment, no new employees are recruited and the extra works shared to other employees, it may be considered as OVERLOAD.

    Organistions are not marrying the employees – to stay with life long . It is just recruiting.

    • ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு இடத்தில் இயங்குவதற்க்கு சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் ஒரு ப்ரவ்சிங் சென்டெர் ,மளிகை கடை ,சிறு தொழிற்ச்சாலை ,போன்றவை நடத்துபவர்களுக்கு கமர்சியல் விலையில் மின்சாரம்.
      அப்பறம் தடையற்ற தண்ணீர் வினியோகம் அடிமாட்டு விலையில் நிலம் (அதுவும் தன் ஆட்சி பிரதேசங்கள்) இதெல்லாம் எதற்க்கு மக்களுக்கு வேலை குடுபான்னு தானே வேலையெ இல்லைன்னா பன்னாட்டு நிறுவனம் எதற்கு ?????

      • எல்லா இந்திய நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், மளிகைக்கடைகள் முறையாக அரசுக்கு வரி செலுத்தினால் பன்னாட்டு நிறுவனம் எதற்கு?

        • ப்ரவ்சிங் சென்டெர் ,மளிகை கடை ,சிறு தொழிற்ச்சாலை ,போன்றவை வரி கட்டவில்லை என்றால் ஜப்தி பன்னலாம் .

          ரிலையன்சு 1000 கொடி வரி பாக்கி
          டாடா 1000 கொடி வரி பாக்கி
          பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி சலுகை

          ஒன்னும் இல்லை மார்ச் மாசம் ஆனா வறுமான வரி செலுத்தலைன்னா எத்தனை நோட்டீஸ் வருது

Leave a Reply to ram பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க