Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பாட்ஷா பாபாவான கதை!

பாட்ஷா பாபாவான கதை!

-

இணைப்பு:

ரஜினி-விகடன்அவதரித்த திருநாளன்றே பாபா சமாதியானார். வழக்கமாகப் படம் வெளியாகிக் கல்லா கட்டியவுடனே ஆன்மீகப் போதைக்கு ஆட்பட்டு இமயத்துக்குப் புறப்பட்டுவிடும் ரஜினி இந்த முறை கிளம்பக் காணோம். படத்தின் தோல்வி, போதையை இறக்கி விட்டது போலும்! அவதாரமாக முடியாவிட்டாலும் சூப்பர் ஸ்டார் தகுதியையாவது தக்கவைத்துக் கொள்ள அடுத்த திரைக்கதைக்கு மசாலா அரைக்கத் தொடங்கயிருப்பார்.

” பாபா படுதோல்வி ” என்று நிச்சயமானவுடன், ரஜினி புகழ் பாடுவதையே தம் குலத்தொழிலாகக் கொண்டிருந்த பத்திரிகைகளும் ரஜினிக்கு சில ஆலோசனைகள் கூறுமளவு தைரியம் பெற்று விட்டனர். செத்த பாம்புதான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு கோடம்பாக்கத்திலிருந்தும் கூட சில சூரப்புலிகள் களமிறங்கியிருக்கிறார்கள். ‘ படத்தில் கட்டமைக்கப்படும் புனைவுகள், குறியீடுகள், சொல்லாடல்கள்’ இந்துத்வ அரசியலை முன் நிறுத்துவதாகக் கூறி, பாபா படத்தைக் கட்டுடைப்பதன் மூலம் ரஜினியின் அரசியலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சில அறிஞர் பெருமக்கள் இறங்கி விட்டனர்.

தன்னை அவதார புருசனாகவும் தனது ரசிகர்களைப் பக்தகோடிகளாகவும், தன்னை ஒரு மீட்பனாகவும் தமிழக மக்களைக் கடைத்தேற்றம் பெறக் காத்திருக்கும் மந்தையாகவும் சித்தரிக்கும் துணிச்சல் ரஜினி என்ற காரியக் கிறுக்கனுக்குத் தீடிரென்று வந்து விடவில்லை. ராமதாஸ்  இதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்ததாகவும் தான் துணிந்து அதைச் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

பூனைக்கு மணி கட்ட அஞ்சிச் சும்மாயிருந்திருந்தால் பரவாயில்லை. பூனையைப் புலியாகச் சித்தரித்தனர். பிறகு “புலி வருது… புலி வருது” என்று எல்லா ஓட்டுக்கட்சிகளும் பத்திரிகைகளும் பெரிதாக ஊதிவிட்டனர். பிறகு தாங்கள் ஊதிப் பெதிதாக்கிய பலூனைக் கண்டு தாமே மிரண்டனர்; வணங்கினர். அந்தப் பலூனின் மீது ஒரு சிறிய குண்டூசியை வைத்துப் பார்க்கும்  தைரியம் மட்டும் யாருக்கும் வரவில்லை – மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் தவிர.

இதைப் பெருமைக்கு கூறவில்லை. தமிழகத்தின் அருவெறுக்கத்தக்க நிலையை எண்ணி வெட்கி வேதனைப் பட்டுக் கூறுகிறோம். 1995 இல் ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்களின் வெறுப்பு உச்சத்தில் இருந்தபோதுதான் பாட்ஷா அரசியல் பேசத் தொடங்கினார். “கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் ” என்ற பாடிக் கொண்டிருந்த நடிகர்களை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும். காரணம் ” ஆன்மீகமும் தேசியமும் இணைந்த பாரதீதய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு உகந்த அரசியல் கண்ணோட்டத்தை ரஜினி கொணடிருந்தார் ” என்பதுதான்  – அப்போதே கூறினோம். ” கழிசடை அரசியல் நாயகன் ரஜினி “என்று சிறு வெளியீடு போட்டு 50,000 பிரதிகளைத் தமிழகமெங்கும் பேருந்துகள், கடைவீதிகள், குடியிருப்புக்களில் விற்றோம்; பொதுக்கூட்டங்களில் பேசினோம்.

ஜெ. எதிர்ப்பு அலையின் குறியீடாகவே ரஜினியை முன்நிறுத்தி கருணாநிதி முதல் தகவல் ஊடகங்கள் வரை அனைவரும் பிரச்சாரம் செய்த அந்தக் காலத்தில் ம.க.இ.க வைத்தவிர வேறு யாரும் இதைப் பேசவில்லை; ஜெயலலிதாவுக்கு மாற்றாக இன்னொரு ஆம்பிளை ஜெயலலிதாவை முன் நிறுத்தும் பார்ப்பனக் கும்பலின் சூழ்ச்சி பற்றி யாரும் முணுமுணுக்கக் கூட இல்லை. ரஜினி ரசிகர்கள் என்ற அந்த ‘ மாபெரும் ‘ ஓட்டு வங்கியை அப்படியே களவாண்டு விடலாமென எல்லா ஓட்டுக் கட்சிகளும் வாயில் எச்சிலொழுகப் பின்தொடர்ந்தனர்; வழிபட்டனர்; வால் பிடித்தனர். ரஜினியைப் பற்றி எதிர்கருத்து வைத்திருந்தவர்கள் கூட அந்த நேரத்தில் அதைப் பேசத் தயங்கினர்; அஞ்சினர்; ராஜதந்திரமாக மவுனம் சாதித்தனர்.

பாட்ஷா ஏழாண்டுகளுக்குப் பின் பாபா ஆகிவிட்டார். இடையில் வந்த தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு படத்திலும் கள்ள மாக்கெட்டில் டிக்கெட் விற்று 100 கோடி ரூபாய் சம்பாதிக்க ரஜினிக்குப் பாதுகாப்பு வழங்கியது. இப்போது ரஜினியிடம் பூச்செண்டு வாங்கிய ஜெயலலிதா கள்ள மார்க்கெட் உரிமையைச் சட்டபூர்வமாக்கி விட்டார். கொள்ளைக்காரன் பாட்ஷா அவதாரபுருசன் பாபாவாகி விட்டார். இவர்கள் யாரும் பாபாவைத் தோற்கடிக்கவில்லை. ரஜினி தன் சொந்த முயற்சியில்தான் தோல்வியைச் சாதித்திருக்கிறார். “வாழ்க்கையே ஒரு சினிமாதான் ” என்ற தத்துவத்தைத் தன் சொந்த வாழ்க்கை மூலம் ரசிகர்களுக்குப் போதனை செய்ய முயன்று தோற்றிருக்கிறார்.

விடலைத்தனதமான சேட்டைகள், பொறுக்கித்தனங்கள், சினிமா வாய்ப்பு, புகழ், பார்பனக் குடும்பத்துடன் மண உறவு, பல கோடி ரூபாய் கருப்புப் பணம், துதிபாடிகளின் கூட்டம் இவையனைத்தும் தாமே உருவாக்கும் போதை மற்றும் அவர் தனியாக ஏற்றிக் கொண்ட போதை… என்பன போன்ற பலவிதமான ரசாயனப் பொருட்களின் அங்ககச் சேர்க்கையில்தான் பாபா அவதரித்திருக்கிறார்.  புளித்த ஏப்பக்காரனின் ஆன்மீகம் பசி ஏப்பக்காரர்களின் ஆன்மீகத்தோடு சேரவில்லை. பாபாவை அவதாரமாகவும், பிராண்டாகவும், அரசியல் தலைவராகவும், பொறுக்கியாகவும் ஒரே நேரத்தில் சித்தரித்து எல்லா முகங்களும் தருகின்ற வருமானத்தைப் பிழிந்து எடுத்து விடக் கனவு கண்ட லதா ரஜினியின் பேராசையும் பாபாவின் தற்கொலைக்குக் காரணமாகியிருக்கிறது.

மைனர்  கெட்டால் மாமா; மாமா கெட்டால் …? பாட்ஷா கெட்டால் பாபா; பாபா கெட்டால் …? என்ன வர இருக்கிறது என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்குக் கட்டியம் சொல்ல வரும் பத்திரிகைக்காரர்களை அடிக்க உதவும்.

________________________________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
________________________________________________________________________

 1. இன்று அவர் பிறந்தனாள்…அவருக்கும் ரசிகர்களுக்கும் உள்ள பந்தம், உறவு, புரிதல் உன்னமாதிரி ________________________ஆளுகளுக்குப் புரியாது….

  எனிகவ் பிறந்தனாள் வாழ்த்துக்கள் தலைவா…

  //எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்குக் கட்டியம் சொல்ல வரும் பத்திரிகைக்காரர்களை அடிக்க உதவும்.///

  சரியான ஆள் என்றால் இன்றே பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு எத்தன பேரவேண்டுமானாலும் கூட்டிக்கொண்டு போயஸ்கார்டன் வா…..

  • அது தான ..எங்கடா ஒன்னையும் காணோமே … அவசர அவசரமா ரஜினிய தாக்குறதுக்கு பாபா படத்தோட பழைய தோல்விய சொல்லி ஒரு கட்டுரை … இதுக்குள்ள நடு நிலைமையா இருக்கோம்னு நெனைப்பு வேற … நீ எழுதுற கட்டுரை முன்னும் பின்னும் முரண்பாடோட இருக்கறது தெரியுதா உனக்கு …ஒரு நாள் இந்துவா பத்தி தப்ப எழுதிட்டோம்னா அடுத்த நாள் முஸ்லிம்ன்கள பத்தி தப்ப எழுதறது …அப்போ உன்ன பொறுத்த வரைக்கும் யார் நல்லவன் …

   ரஜினியோட போட்டோ எல்லா பத்திரிகையிலும் வந்த உடனே ஒரு கட்டுரையா … அப்போ வினவு பத்தி ஒரு காலத்துல (ஒரு வேலை ) பெருமையா எல்லாரும் நெனச்சி உன்ன பத்தி பேசுனா …அபோ உன்னை நீயே விமர்சனம் செய்வியா ??

   ரஜினி ஒரு நடிகன் … அதுக்கு மேல அவரும் செய்யலை எதையும் எதிர்பாக்கலை … நீ எதுக்கு அரசியல்ல சம்பந்த படுதுரே …

   இவளோ பேசுறியே …வினவே நடத்துறதுக்கு இது வரைக்கும் எவளோ திருட்டு வேலைகள் செய்யுறே ….

   எங்கே இதனோட வருமான வரி கண்ணுக்கு வெளியிடு பாப்போம் …

   யாருக்கு எவளவு சம்பளம் குடுகுறேனு சொல்லு பாப்போம் …

   நீ ஏழை மக்களை பத்தி எழுதுறே …அதே ஏழை பணக்காரன் ஆனா அவனையும் எழுதுறே /….நீ என்ன பைத்தியமா ??

   சரி …அவர்களுக்கு என்ன உதவி செஞ்ச ???

   அப்படி அவர்களுக்கு என்ன செஞ்சன்னு வெளிய சொல்ல மாட்டேனு சொன்னா ….அப்போ நீ என்ன “ஒரு கைல குடுக்கறத இன்னொரு கைக்கு குடுக்க கூடாது” என்ற ஒரு மதத்தோட நம்பிகை வாளுரியா ??

   • //ரஜினி ஒரு நடிகன் … அதுக்கு மேல அவரும் செய்யலை எதையும் எதிர்பாக்கலை … நீ எதுக்கு அரசியல்ல சம்பந்த படுதுரே // இப்படி பேசறதுக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லியா உங்களுக்கு எல்லாம்… வினவின் இன்னுமொரு பதிவில் உங்களுக்கான பதில் ….

    //அரசியல், சமூகப் பிரச்சினைகளில் ரஜினியின் நிலை பற்றிச் சொன்னால் ” அவர் அரசியல்வாதி கிடையாது; நடிகர்” என்கிறார்கள் ரசிகர்கள். அப்புறம் ” தலைவா, தமிழகத்தைக் காப்பாற்று என்று எழுதுகிறீர்களே “என்று கேட்டால், ” அவர் அரசிலுக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்றுவர்” என்று திருப்பிப் பேசுகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளை விஞ்சுகிறது ரசிகர்களின் சந்தர்ப்பவாதமும் திமிரும். “தலைவா, காங்கிரசில் சேர்; தனிக்கட்சியாவது தொடங்கு” என்று 1995 இல் ரஜினிக்கு வேண்டுகோள் விட்டவர்கள் இந்த ரசிகர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, பிராந்திக் கடை, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை நடத்தும் ரசிகர் மன்றத் தலைவர்கள், வட்டம் மாவட்டத்துக்குரிய அனைத்துத் தகுதிகளுடனும் தலைவராக இருக்கின்றனர். பெயர்ப்பலகை மாற வேண்டியதுதான் பாக்கி.//

  • \\சரியான ஆள் என்றால் இன்றே பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு எத்தன பேரவேண்டுமானாலும் கூட்டிக்கொண்டு போயஸ்கார்டன் வா//

   ரெம்பத்தா கொந்தளிக்கிரையே பையா இந்த காரிய கிறுக்கனை அம்பலப்படுத்துற இன்றைய பதிவுகள் அத்தனையிலும் வந்து ஆத்திரப்படுறியே உனக்கு தில் இருந்தா உன் ரஜினி பக்த கேடிகளை எத்தன பேர வேன்னாலும் கூட்டிக்கிட்டு வினவு ஆபிசுக்கு போய் பாரேன்.இந்த மாதிரியான சவடால்களுக்கு எல்லாம் அஞ்சாதவர்கள் தோழர்கள் இணைப்பில கொடுத்திருக்கும் கட்டுரையையும் படிச்சுப்பாரு.

   ரஜினி பாபாவும் பக்தகேடிகளும் – ஒரு நேருக்குநேர் !

   \\எம் தரப்பில், பாபாவை அம்பலப்படுத்தும் 3500 சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை 14 ஆம் தேதி இரவு ஒட்டுவதைக் காட்டிலும் காலையில் ஒட்டுவதன் மூலம்தான் பக்த கேடிகளை “நேருக்குநேர்” சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், ரஜினி ரசிகர்கள் எனும் ” மாபெரும் சக்தி ” பற்றி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமையை உடைக்க முடியும் என்பதாலும் ஆகஸ்டு 15 அன்று காலையில் ஒட்டுவதென முடிவு செய்தோம்.

   செஞ்சட்டையணிந்த தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து திருச்சி நகரின் எல்லாப் பேருந்துகளிலும் சுவரொட்டிகளை ஒட்டினர். மக்கள் கும்பல் கும்பலாகப் படித்து ரசிக்கத் தொடங்கினர். ரசிகர்கள் நின்று படித்துவிட்டு மவுனமாக இடத்தை விட்டு அகன்றனர். ஒட்டும்போது வம்புக்கு வந்தாலோ ஒட்டிய பிறகு கிழித்தாலோ என்ன நடக்கும் என்பது சுவரொட்டியிலேயே அச்சிடப்பட்டிருந்தது. படித்துப் புரிந்து கொள்ளத் தவறும் ரசிகர்கள் பார்த்தே புரிந்து கொள்ள ஏதுவாக உரிய தயாரிப்புடன் சென்றனர் தோழர்கள். “ராமதாசுக்குத் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்தினார்கள், கொதிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள் ” என்று பத்திரிகைகளால் வருணிக்கப்பட்ட ரசிகர்கள் ஒரு இடத்திலும் மூச்சு விடவில்லை.//

   • எப்பவும் வினவு எழுதும் சுயபுராண கட்டுரைகளை(கதிகளினை) பார்ர்க்கும் போது நான் நினிஅப்பது ஒன்று தான்……………….அடிச்சுவிடு, கத அழக்கிறதுன்னு வந்தப்பறம் காசா, பணமா??

    • ஊளை உதார் விட மட்டும்தான் தெரியுமா.உனக்கு தில் இருந்தா நான் சொன்னதை செஞ்சிருக்கனுமே.சரி சரி புரியுது.ஒ அழுகை சத்தம் இங்கவரைக்கும் கேட்குது.அதுக்கு அர்த்தம் கீழ எழுதிருக்கேன்.சரியா காதுல வாங்கிருக்கனான்னு பாரு

     இதுக்கு மேல வர சொல்றதுக்கு வேற இடம் இல்லப்பா.ஒன்லி பாடி லாங்குவேஜ் தாம்பா.உள்ள ஒன்னுமில்லப்பா.ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா வெரட்டி வந்து சண்டைக்கு கூப்பிடுறது.

  • பையா உனக்கு வில்லன் ரோல் ஒத்துவராது, எப்பொழும்போல காமெடி ரோலே டிரைப்பன்னு….

 2. ரஜினிக்கு காவடித்தூக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகலுக்கு என் சார்பிலும் ஒ௫செருப்படி
  நன்றி வினவு..

 3. உன் தளமே சாப்ட்வேர் ல பென்ச்ல இருக்கற வெட்டி ஆளுங்கனால தான் ஓடுது ..அதனால சாப்ட்வேர் எஞ்சினீர பாவாமா காட்டி கட்டுரை எழுதுறது ஒரு பொழப்பா ??

  அவனுங்க நாலா தான் சென்னை ல தெருவுக்கு நெறையா பேர் வந்தான்னு தெரியாதா ??

  இதுல அவனுங்களுக்கு ஐடியா வேற ..

  உனக்கு கம்யுனிச பத்தி என்ன தெரியும் ????

  நீ செயுறது சந்தர்ப்ப வாதம் ?

  இதுக்கு முன்னாடி ஒரு கட்டுரைலையே கேட்டேன் ..

  நீ அரவிந்த் கேஜ்ரிவால பத்தி எழுதுனியே ..
  அவன் உதய குமார சந்திச்சத பத்தி எழுதிநியாட ??
  உனக்கு தேவை எவன் தெருவுல எறங்கி சண்ட போடுவான் ..அவன பத்தி பெருமையா பேசுறது …

  உன் வேலைநாள மக்களோட மக்களுக்கு எரிச்சலும் சண்டையும் தான் வரும் .. நீ தூண்டி வேடும் கேடு கேட்ட ஜென்மம் …நெனச்சு பாரு …இது வரைக்கும் எதுனா பேருக்கு எதிர்ப தூண்டி விற்றுப்பே ….

  எல்லலாமே தனி மனித ஒஉக்கம் …உன் வழிக்கு

  மத்தவங்களையும் நடக்க சொல்லி எதிர்பாகுறியே …
  நீ நடதுறதும் மதம் தான் ….வேற என்ன சொலு பாப்போம் …

  உன்னடுய கொள்கை என்னனு சொலு பாப்போம் ??

  நக்சல் மதம் …. வன்முறை மதம் …எதுக்கும் உதவாத மதம் …. மனிதனை மனிதனே அளிக்கும் மதம் ….

  இந்த கேள்விக்கு விடை எழுது …அது தான் என்னை மாறி சாப்ட்வேர் ஆளுங்க வினவு வந்து பாக்குற கடைசி விடை …

  • /நீ அரவிந்த் கேஜ்ரிவால பத்தி எழுதுனியே ..
   அவன் உதய குமார சந்திச்சத பத்தி எழுதிநியாட ??/

   ஓ….. அப்படியா!!

   நீ மனசுல நினைப்பதையெல்லாம் மற்றவர்கள் பதிவிடனும் நினைக்கிறிறே நீ என்ன லூசா?

   பாவம் உன் நிலைமை வினவை குறைசொல்ல ரொம்ப நாளா தேடி கண்டுபிடுச்சுருக்க….

 4. //தன்னை அவதார புருசனாகவும் தனது ரசிகர்களைப் பக்தகோடிகளாகவும், தன்னை ஒரு மீட்பனாகவும் தமிழக மக்களைக் கடைத்தேற்றம் பெறக் காத்திருக்கும் மந்தையாகவும் சித்தரிக்கும் துணிச்சல் ரஜினி என்ற காரியக் கிறுக்கனுக்குத் தீடிரென்று வந்து விடவில்லை. ராமதாஸ் இதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ///

  ஹா ஹா …ரெண்டு நாளைக்கு ராமதாச பத்தி கிழிச்சு எடுத்த …

  ராமதாஸ் ஒரு கிறுக்கன் அவனுக்கு முடிவே எடுக்க தெரியாது நு சொன்னே ??
  இபோ அவரோட கருதும் இன்று வேத வாக்கு??
  இன்று அன்புள்ள ராமதாஸ் ??

  ஹ ஹ

  அது வேற வாய் ..இது நார வாய ???

  இதுக்கு வினவு பதில் சொல்லியே ஆகணும் ??

  • லூசு, இந்த கட்டுரை எழுதியது 2002- பத்து வருசத்துக்கு முன்னால
   திட்றதுக்கு முன்னால ஒழுங்கா படிச்சிட்டு திட்டு, உன் கஞ்சா தலிவர் போலவே போதையில இருக்கீயா?

   • அடக்குஞ்…10 வருசத்துக்கு முன்னாடி எழுதுன கட்டுரைய என்ன ஆனியனுக்கு இப்ப பப்ளிஸ் செய்யுது வினவு,,,

 5. கடந்த வருடம் கருணாஸ் ரஜனி பிறந்த நாளுக்கு ரஜனி குடும்பத்தார் வருவார்கள் என்று எதிர் பார்த்து காத்து இருந்து வராமல் போக திட்டிவிட்டு போனார் இந்த முறை ரசிக கண்மணிகளை சந்தித்து அவர்களுக்கு புத்தி மதியும் சொல்லிவிட்டு போயிருக்கிறார் இந்த முறை சந்திக்க வேண்டிய நிலைக்கு வந்ததின் முக்கிய காரணம் அவருடைய கொசடையான் படம் வெளிவர இருப்பது தான்

 6. சினிமா என்னும் _________ தொழில் செய்யும் தறுதலைகளை உதாரண புருசர்களாக பின்பற்றி நடக்கும் எல்லா மதத்தவர்களும் ஒரு நாள் இரவு சினிமா கூத்தாடிகளை நோட்டம் இட்டு பார்த்தால் எவ்வளவு கேவலம் கெட்ட
  வாழ்வு வாழ்கிறார்கள் என தெரியும். ஸ்டார் ஹோட்டல்களிலும்,சில நடிக,நடிகர்களின் வீடுகளிலும் முழுக்க முழுக்க
  தொழில் தான் நடக்குது.நாட்டில் விபச்சார தொழில் பெருகியதற்கு சினிமா,சின்னத்திரை தான் முதல் காரணம்.பத்திரிக்கைகாரன் வாங்கும் காசைப் பொறுத்து வாழ்த்தியும்,தாழ்த்தியும்
  எழுதுவார்கள்.ஆண்டவர்களும்,ஆள்பவர்களும் அந்த கூட்டம் தானே.வினவின் பணி தொடரட்டும்.வாழ்த்துகள்

 7. //பார்பனக் குடும்பத்துடன் மண உறவு//

  அடப்பாவி இது என்ன அவ்வளவு பெரிய குற்றமா???

  • அட ஆமாம் இது என்ன அவ்வலவு பெரிய குத்தமா?…ரஜ்னி என்ன பெரியார் வலிநடக்க என்ன சத்யராஜா ????

 8. கமல் styleல சொல்லணும்னா ரஜினி அரசியலுக்கு வருவாருன்னு அவரோட ரசிகர்கள் சொல்லல.. வந்தா நல்லா இருக்கும்னு சொல்றாங்க..

  • அந்த காரியக் கிறுக்கனே அரசியலுக்கு வந்து நாட்டை கொள்ளை அடிக்க நாக்கில் எச்சில் வடிய காத்திருக்கும் ஓநாய்தான்.

   படையப்பா படத்தில் ஒரு காட்சி.

   காரிய கிறுக்கனை சந்திக்க ஒரு அரசியல்வாதி வருகிறான்.அப்போது நடக்கும் உரையாடல்.

   வந்தவன்;அரசியலுக்கு வா,வா ன்னு சொன்னா வர மாட்டேங்கிறானே.

   படையப்பா; ஏம்பா நா நல்லா இருக்குறது உனக்கு புடிக்கலையா.

   இன்னொரு அல்லக்கை; நீங்க நல்லா இருந்தா போதுமா.ஜனங்க நல்லா இருக்க வேணாமா.

   படையப்பா; நம்ம கையில என்ன இருக்கு.எல்லாம் அந்த ஆண்டவன் கையில இருக்கு.

   இன்னும் இது போன்ற உளறல்களை கடந்த இரு பத்தாண்டுகளில் வந்த ரஜினியின் படங்களில் காணலாம்.

   இப்படியாக நாட்டை உய்விக்க வந்த அவதார புருசனாக காட்டிக் கொள்ளும் காட்சிகளை அமைப்பதுலிருந்தே தெரியவில்லையா ரஜினியின் உள்நோக்கம்.டைரக்டர் தான் காட்சி அமைப்பாருன்னு சால்ஜாப்பு சொல்ல வேணாம்.பெரிய ஹீரோ படங்களில் அவர்கள் ஒப்புதல் இல்லாமல் இது போன்ற காட்சிகளை அமைக்க முடியாது.

  • பதிவனுங்க அரடவுசரோட கடவாயில எச்சிலொழுக சுத்திட்டிருந்தப்போ மூன்று முகம் பாத்த கன்றாவி கதையெல்லாம் எழுதலாம்..

   டீவிலயும் ரேடியோலயும் இந்த கிறுக்கனோட 30 வருச ‘சாதனை’ களை திரும்ப திரும்ப காமிச்சும் பேசியும் பிளேடு போடலாம்

   மரண மொக்க சிவாஜியை மறுபடியும் 3dல எடுத்து அந்த மூஞ்சிகளை குளோச்ப்புல காமிச்சு புள்ள குட்டிகளுக்கு ஜன்னி வர வக்கலாம்

   அந்த கஞ்சாகுடிக்கி முழுபோதையில இமயமலையில சாவே வராத பாபாஜியை பார்த்து மொக்கை போட்டதையெல்லாம் குட்டி கதைன்ற நாலு கதையை திரும்ப திரும்ப சொல்லி ஊரையே சாவடிக்கலாம்

   பத்தே பத்து பார்முலாவை வச்சுகிட்டு இந்த கோடம்பாக்கம் ஆட்டுப்புழுக்கையாட்டும் நூத்துக்கணக்குல சினிமா வுடலாம்

   விசேசமா நம்ம சீனு போல மதவெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளெல்லாம், திரேதாயுகம்-துவாபரயுகம்னு டயோனோசர் காலத்து கதையெல்லாம் கலந்துகட்டி காவி கலர்ல இன்னமும் ரீல் வுடலாம்

   ஆனா வினவு மட்டும் இந்த கழிசடை நாயகனை பத்து வருசத்துக்கு முன்னால தோலுறிச்ச கட்டுரையை மறுபடியும் எடுத்து போட்டா கசக்குதாக்கும்… சந்தோசம்… வயிரு எரிஞ்சே சாவுங்கடா.

   அடிப்படை நாகரிகம் பத்தி பேசுறவரை பாரு, கேவலம் ஒரு சினிமா நடிகனுக்கு காவடி தூக்கும் தன்மானமற்றவர். இது எப்படி இருக்கு — க்க்க்கர்ர்ர்ர்தூஊஊஊஊ!

  • இது ஒரு பயங்கரமான விமரிசனம்னு தூக்கிட்டு ஓடி வர்றேயே ”பாப்பா” பக்தரே.அதுல அந்த ______என்ன எழுதிருக்கு. சாவ கிடந்த கஞ்சா குடிக்கி பொழச்சு வந்து பிறந்த நாள் கொண்டாடுதாம்.பிறந்த நாள்ல வாழ்த்தனும்.இல்லேன்னா கம்முனு இருக்கனும்.இதுதான் அந்த புத்திசாலி வைக்கிற வாதம்.வினவின் விமரிசனங்களுக்கு ஒரு வரி கூட பதில் சொல்ல துப்பு கெட்ட மட சாம்பிராணிக்கு மதி கெட்டது ஒன்னு இங்க வந்து போஸ்டர் ஒட்டுது.

  • // அப்படி செத்து பொழைச்சு எப்படியோ வந்து சேர்ந்து இருக்கான்.//

   செத்துப் பொழச்சு வந்தான்பா இந்த சொல்லுக்கு நம்ம சனங்க எப்புடில்லாம் மயங்குறானுங்க பாத்தீங்களா. உதாரனம் முதல்ல எம்ஜிஆர், பிரபாகரன், இப்போ ரஜினி. அட ஒன்னும் அறியாத சனங்க மயங்குறதுல தப்பில்ல. எல்லாம் தெரிஞ்ச மாதிரி சீன் காட்டுற அறிவுசீவிங்க கூட இப்படிதாம்பா இருக்காங்க. கண்றாவி.

 9. ரஜினி என்கிற ஒரு தற்குறிக்கு ஏதோ சில படங்கள் ஓடிவிட்டன, ‘உடனே சூப்பர் ஸ்டார்’, ‘ஸ்டைல் மன்னன்’ என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டனர்.

  சிகரெட்டை பற்றவைப்பது, தூக்கிப்போடுவதெல்லாம் சார்லி சாப்ளின் படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் யாருடைய ஸ்டைல் என்று.

  ஒரு முட்டாளை தூக்கி அரியனையில் வைத்தால் எப்படியிருக்கும்??

  (மற்றவருக்கு தெரியாது, ஆனால் அந்த முட்டாளுக்கு தெரியும் ‘தான் முட்டாள் என்று’.)

  அந்த முட்டாள் என்ன செய்வான்?

  பயந்து, பயந்து சாவான். ஒவ்வொரு நிமிடமும் தயங்கிக்கொண்டே இருப்பான். எங்கடா தன் முட்டாள்தனம் வெளிப்பட்டுவிடுமோ என்று?

  நிறைய நாள் நிம்மதியாக தூங்கியிருக்க மாட்டான் என்பது நிச்சயம். இப்படி இருக்கும் ஒருவனுக்கு பித்துபிடிக்கும்.

  இன்னும் மற்றவர் புகழ்போதையை, பணப்போதையை ஏற்றிவிட, முட்டாள்தனத்தை உயர்த்தி, ‘தன்னை ஒரு ஞானிபோல் நினைத்துக்கொண்டார்’. அதன் பிரதிபளிப்பு பாபா என்ற படம்.

  போலி வேடம் போகவம் அடக்கிவாசிக்க ஆரம்பித்தான்.

  எதாவது மேடை பேச்சை பார்த்தால் தெரியும், ‘எப்படி நடக்க வேண்டும் எதை, எப்படி பேச வேண்டும், எப்படி நிற்க வேண்டும்’ என்றெல்லாம் நாடகம் போல் நடிப்பான்.
  பேசுவது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் என்று வாரக்கணக்கில் பயிற்சி பெற்றிருப்பதை பார்த்தாலே தெரியும்.

  உயிரேப் போனாலும் பயிற்சிப்பெற்ற வார்த்தைகளைதவிர அதிகமாக பேச முடியாது இந்த கோமாளியால்.

  இந்தாலுக்கு தில் இருந்தால் ஒரு நேரலை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளட்டும் பார்ப்போம் இவனது புத்திசாலி தனத்தை.

  என்னதான் கோமாளியாக இருந்தாலும் பேராசை விடாது தானே அதனை பாபா-வில் பார்க்கலாம்.

  அதாவது இந்த பொறுக்கியாக இருப்பானாம், இவனுக்கு வரம் கிடைக்குமாம்,

  கடைசி ஒரு வரம் – ஆனால் வாழ்வா சாவா என்ற போராட்டமாம்..

  தனுக்கு வாய்ப்பு இருந்தும் ஒரு நல்ல மனிதரை முதலமைசர் ஆக்குகிறாராம்.

  அந்த வரத்தை வைத்து ‘உலகில் உள்ள அனைத்து துன்பமும் நீங்க வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொள்ள வேண்டியதானே??

  ஆனால் இந்த முதலமைச்சர் கனவு தான் இருக்கிறது.

  அதுசரி! தலைவன் என்று சொல்லும் மானங்கெட்டவர்கள் இருக்கும்போது பன்னிக்கூட முதலைச்சர் கனவுக் காணத்தான் செய்யும்……..

 10. avar mattum arasiyalukku varanumnu vidhi irundhaal?
  adhai endhak kombanaalayum thadukka mudiyaadhu.
  neengalellaam oruththarai asingap paduththaradhaala oruththar azhinjiduvaarunaa?appuram ongalamaadhiri kedu kettavangalai ellaam kumbida aarambichchu ongalukku kovil katta vandhuruvaanga.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க