Saturday, April 17, 2021
முகப்பு சமூகம் சினிமா ரஜினி ரசிகர்கள்: விடலைகளா? விபரீதங்களா?

ரஜினி ரசிகர்கள்: விடலைகளா? விபரீதங்களா?

-

இணைப்பு:

ரஜினி-ரசிகர்கள்

விடலைப் பருவத்துக்கேயுரிய அறிவு வளர்ச்சியும் உதிரித்தனமும் கொண்ட உழைக்கும் வர்க்கத்து இளைஞர்கள்தான் ரஜினி ரசிகர்களில் ( எல்லா ரசிகர்களும்தான் ) முக்கியமானவர்கள். குழப்பமான, உதிரித்தனமான மனோபாவத்தில் வளரும் இவர்கள் ரஜினியைத் தலைவா என்றும் தெய்வமே என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த விடலைத்தனம் இத்தோடு முடிந்து விடுவதில்லை. பிழைப்புவாத அரசியலின் சமூக அடித்தளமாக இவர்கள் மாறுகிறார்கள். எம்.ஜி.ஆர் கட்சி இதற்கொரு முன்னோடி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பாசிச சக்திகள் அதிகாரத்துக்கு வரும்போது இதே கூட்டம் அவர்களது குண்டர் படையாக மாறுகிறது. இந்தக் கொக்குகளின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடித்து விடலாம் என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளின் கனவு.

ராஜ்குமாருக்குக் குரல் கொடுத்த ரஜினி, காவிரிக்குக் குரல் கொடுக்காதது ஏன் என்று கேட்டபோது “தேவையில்லை சார், அவர் ஒரு பிசினஸ்மேன் “என்று திமிராகப் பதில் சொன்னார் ஒரு ரசிகர் மன்றத் தலைவர். “நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே” என்று கேட்டதற்கு ” எங்களுக்குத் தலைவர் அவரு. அவருக்கு யார் குரு என்று எங்களுக்குக் கவலையில்லை”என்று தெனாவெட்டாகப் பதில் சொன்னாராம் திருச்சி நகரத் தலைவர் ஷாகுல் ஹமீது.

அரசியல், சமூகப் பிரச்சினைகளில் ரஜினியின் நிலை பற்றிச் சொன்னால் ” அவர் அரசியல்வாதி கிடையாது; நடிகர்” என்கிறார்கள் ரசிகர்கள். அப்புறம் ” தலைவா, தமிழகத்தைக் காப்பாற்று என்று எழுதுகிறீர்களே “என்று கேட்டால், ” அவர் அரசிலுக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்றுவர்” என்று திருப்பிப் பேசுகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளை விஞ்சுகிறது ரசிகர்களின் சந்தர்ப்பவாதமும் திமிரும். “தலைவா, காங்கிரசில் சேர்; தனிக்கட்சியாவது தொடங்கு” என்று 1995 இல் ரஜினிக்கு வேண்டுகோள் விட்டவர்கள் இந்த ரசிகர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, பிராந்திக் கடை, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை நடத்தும் ரசிகர் மன்றத் தலைவர்கள், வட்டம் மாவட்டத்துக்குரிய அனைத்துத் தகுதிகளுடனும் தலைவராக இருக்கின்றனர். பெயர்ப்பலகை மாற வேண்டியதுதான் பாக்கி.

இந்தக் கும்பல் மேலிருந்து கீழ் நோக்கி எப்படிக் கிரிமினல்மயமாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாபா டிக்கெட் விற்பனை. பாபா படத்தை விநியோகஸ்தர்கள் மூலமாக விற்காமல் நேரடியாகத் திரையரங்குகளுக்கு விற்றிருக்கிறார் ரஜினி. பத்திரிகைகளின் கணிப்புப்படி மொத்த வருமானம் 70 கோடி. பன்மடங்கு தொகை கொடுத்து படத்தை வாங்கிய தியேட்டர் அதிபர்கள் ஒவ்வொரு காட்சியையும் ஏலம் விட்டுள்ளனர். ரசிகர் மன்றத்தின் நகரத் தலைவர்களுக்கு முதல் காட்சி. திருச்சியில் ஷாகுல் ஹமீதுக்கு 4 காட்சி; கலீலுக்கு 2 காட்சி. இதை ரசிகர்களிடமே பிளாக்கில் விற்று சில லட்சங்களை இவர்கள் சுருட்டிக் கொள்வார்கள்.

மற்ற காட்சிகளனைத்தும் பகிரங்க ஏலம். ரசிகர்கள், ரசிகரல்லாதவர்கள் எனப் பலரும் ஏலம் எடுத்துள்ளனர். 1000 இருக்கைகள் கொண்ட அரங்கில் ரூ. 50 ( சராசரி ) வீதம் ஒரு காட்சியின் உண்øமையான விலை 50,000. கேளிக்கை வரி இதற்கு மட்டும்தான். ஒரு காட்சி ஒரு லட்சம் முதல் ஒன்றேகால் லட்சம் வரை ஏலம் விடப்பட்டிருக்கிறது. ஒரு டிக்கெட் 100, 125க்கு வாங்கி 200, 250க்கு விற்று விடலாமென்றும் ஓரே நாளில் 50, 60 ஆயிரங்களைப் பார்த்துவிடலாம் என்றும் கனவு கண்டவர்கள் ஏலமெடுத்திருக்கிறார்கள். வீடு , நகையை அடமானம் வைத்து, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியும் பலர் முதலீடு செய்திருக்கின்றனர்.

படம் தோல்வியடைந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான பேர் தமிழகமெங்கும் திவாலாகியிருக்கின்றனர். மனைவிக்குத் தெரியாமல் நகையை வைத்து ஒரே நாளில் சம்பாதித்து மனைவியிடம் காட்டி அவளை ஆச்சரியத்திலாழ்த்த விரும்பியவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாகச் சொன்னார் ஒரு திரையரங்க அதிபர்.

திருச்சி நகரில் ஒரே நாளில் இத்தகைய ‘ முதலீட்டாளர்கள் ‘ பத்துப் பேரைச் சந்தித்தோம். எல்லொரும் 40,000 முதல் 75,000 வரை இழந்தவர்கள். தீடீர்க் காசு பார்க்க விரும்பிய இந்தக் கூட்டம் ஏமாந்து விட்டது குறித்து நாம் வருந்தத் தேவையில்லை. ஆனால் ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த அர்சத் மேத்தாவின் பெயர் பாபா!

________________________________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
________________________________________________________________________

 1. பொருக்கி கலாச்சாரத்தின் புதிய பரிமானங்களை உருவாக்கியதில் பெரும் பங்கு தமிழ் சினிமா கழிசடை ஈரோக்களின் தயவாலும் 60 வயதானாலும் ரஜினிகாந்த் போன்ற கிழவன் டூயட்டை ரசிக்கும் முட்டாள் ரசிகர்களுக்கும் ௨ள்ளது.
  தமிழ் சினிமா அபத்தங்களை பகுத்தரிவுள்ள எந்த மனிதனும் ஏற்கமாட்டான்…

  • உங்க பகுத்தறிவு வெங்காயம் என்னன்னு எங்களுக்கும் தெரியும்…போய் வேலவெட்டியப்பாருங்கப்பா…

 2. //“நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே” என்று கேட்டதற்கு ” எங்களுக்குத் தலைவர் அவரு. அவருக்கு யார் குரு என்று எங்களுக்குக் கவலையில்லை”என்று தெனாவெட்டாகப் பதில் சொன்னாராம் திருச்சி நகரத் தலைவர் ஷாகுல் ஹமீது.//
  ஏன் ஒரு இந்துவும் முஸ்லீமும் நண்பர்களாக இருக்கக்கூடாதா…ஏன் ஒரு தீவிர இந்துவுக்கு(ரஜினி), ஒரு தீவிர முஸ்லீம் (ஷாகுல் ஹமீது) ரசிகராக இருக்கக்கூடாதா???

  னான் ரஜினிக்கும் ரகுமானுக்கும் ரசிகன்…எனக்கு உண்மையான முஸ்லீம் நண்பர்கள்நிறைய பேர் உண்டு….
  இந்துவும் முஸ்லீமும் அடித்துக்கொண்டால் தான் உன் போல தந்திரக்காரனுக்கு லாபம்….

  • தனது பாட்ஸாவிலும், பாபாவிலும் முஸ்லீம்களை அவர் பெருமைப்படுத்தவில்லையா?? முஸ்லிம்களும் இந்துக்களும் சகோதரர்கள் என இந்தப்படங்கள் விளக்கவில்லையா…

    • ஆக மொத்தம் வினவின் சிஸ்யப்புள்ளைங்க யாரும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுறதேவே இல்ல…

     • யோவ் பையா கேள்விக்கு பதிலளிக்கலாம் அல்லது ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது எதிர்கருத்தை சொல்லாம் ஆனால் அபத்தமான வார்தைகளுக்கு என்ன சொல்ல முடியும்?

      இஸ்லாமியர்களையும், கிருஸ்துவர்களும் இந்தியவின் புற்றுநோய்கள், அவர்களை அழிக்கவேண்டும் என்று சொன்ன மத, சாதி வெறியனான, பால் தாக்ரேவை தனது குருவாக கொண்ட சிஷ்ய பிள்ளை ரசினிகாந்து.

      இந்த வெங்காயம் தான் உங்களுக்கு யோக்கியனாக தெரிகிறானா?

      • யோவ் பையா கேள்விக்கு பதிலளிக்கலாம் 🙂

       அல்லது ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளலாம் :-):-)

       அல்லது எதிர்கருத்தை சொல்லாம் :-):-):-)

       ஆனால் அபத்தமான வார்தைகளுக்கு என்ன சொல்ல முடியும்? :-):-):-):-)

       அட ஆண்டவா…பொதைலயா இருக்கீர்…கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும்..

 3. தேர்தல் பாதை தவறு என்றால் வட கொரியாவைப் போல் மன்னராட்சிதான் சரியானதா? தேர்தல் பாதையை கைவிட்டால் எதேச்சதிகாரம்தான் மிச்சம் இருக்கும். தேர்தல் பாதை என்பது மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை பங்கிட்டுக்கொடுக்கும் ஒரு வடிவமாகும் தற்போது அய்ந்தாண்டுக்கு ஒரு முறை வாம்மா…மின்னல்…என்பதுபோல் உள்ளது தற்போதைய தேர்தல் முறை. இதை மாற்றி தேர்ந்தெடுத்த பிரதிநிதியை நீக்கும் அதிகாரம் கேட்பதுதான் சரியானது.அதே போல் அரசு ஊழியர்களையும் நீக்கும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும் நீங்கள் கேட்பது முடியாட்சி அதனால்தான் மக்கள் உங்களை ஏற்க மறுக்கின்றனர்.

 4. //“நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே”//

  கலவரங்களும் மனதில் வன்மமும் எப்படி தோன்றுகிறது என ஆராய்ச்சி செய்தால்..ஆங்கிலேயெனைப் போல பிரித்து ஆளும் ஒரு சூழ்ச்சி புத்திக்கொண்டே இந்த தோழர்கள் போர்வையில் இருந்துக்கொண்டு வீசமக்காரர்கள் செய்யும் வேலைகள் என்பதற்கு மேற்க்கொண்டவையே சாட்சி…

   • ஆமா அடுத்த முறை ஆர்.எஸ்.எஸ் அரை டவுசருங்க ‘இந்து வெல்லாம் இந்து கடையில வாங்கன்னு’ சொல்லும் போது நம்ம சீனு அவமானம் தாங்க முடியாம டீ குடிப்பார்!

    • பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டவுடன், பதில் சொல்லாமல் வேறு ஒரு கேளிவியா…தியாகு கேட்ட கேள்விக்கு பதில் என்ன?

     அப்ப ஆர்.எஸ்.எஸ்சும், வினவும் ஒன்னா….ஆர்.எஸ்.எஸ்ஸ எப்படி வேனும்னாலும் அசிங்கப்படுந்த்துங்க இப்படி வினவோட கம்பேர் செய்து அசிங்கப்படுத்தாதீர்….ஆர்.எஸ்.எஸ்வது இந்துத்வத்தினை சப்போட் செய்யும், ஆனா வினவு இந்து முஸ்லீம் பிரிந்து இருப்பதையே விரும்பும்….ரெண்டு பேத்தையும் மாத்தி மாத்தி திட்டி கத(கட்டுரை) எழுதுனா வினவிற்க்கு பொழப்பு நல்ல ஓடும்…

     • ரஜினி ஒரு அரைக்கால் டவுசர் ஆதரவாளன் என அம்பலப்படுத்துவதில் உமக்கு என்ன வயிற்றெரிச்சல். இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிக்க அரைக்கால் டவுசர் அம்பிகள் வைத்த குண்டுகள் எத்தனை எத்தனை.

      • பிசாசுத் தம்பி, இதற்க்கு என்ன பதிலோ..

       //“நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே”//

       கலவரங்களும் மனதில் வன்மமும் எப்படி தோன்றுகிறது என ஆராய்ச்சி செய்தால்..ஆங்கிலேயெனைப் போல பிரித்து ஆளும் ஒரு சூழ்ச்சி புத்திக்கொண்டே இந்த தோழர்கள் போர்வையில் இருந்துக்கொண்டு வீசமக்காரர்கள் செய்யும் வேலைகள் என்பதற்கு மேற்க்கொண்டவையே சாட்சி…

       • அதான …..கழுத மேய்க்கிற பையனுக்கு இவளோ அறிவானு போறாமைங்க …அதான் பதில் சொல்ல மாற்றாங்கோ !

 5. //ஆனால் ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.இந்த அர்சத் மேத்தாவின் பெயர் பாபா!//

  முழ்ங்காலுக்கும் மொட்டைத்தைக்கும் முடிச்சி போடுவதை கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் இப்போதான் முதன்முதலா பார்க்கிறேன்…

  வினவுக்கு, நான் ஒன்று கேக்குறேன் !! புதிய ஜனநாயகம் பத்திரிக்கை கற்பனைக்காக 10 லட்சம் பிரதிகள் விற்பதாய் வைத்துக்கொள்வோம் அதில் வரும் லாபம் என்பது கொள்ளையா..???

  ரஜினி படத்தை பார்த்தே ஆகவேண்டும் என ஆப்கானிஸ்தான் காரர்களை வைத்து மிரட்டியா பணம் வாங்கி படத்தை ஒட்டுகிறார்கள்….

  அராஜக மனிதர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இன்றுதான் அராஜக கட்டுரையை படிக்கிறேன்….

  • வினவு எழுதறத நீங்க படித்தே ஆகவேண்டும் என யாராவது கட்டாயப்படுத்தினார்களா?

   • அப்ப ரஜினி படத்த பாத்தே ஆவனும்னு உம்மயாரவது கம்பெல் பண்ணுனாங்களா?

    • அது சரி.. வினவு எழுதற அராஜக கட்டுரைக்கு நீங்க ஏன் எதிர்வினை செய்றீங்க?

      • ஆமாமா,இவரு விளக்குனாருன்னா எப்பேர்ப்பட்ட வாத்தியார்ன்னாலும் பிச்சை வாங்கணும்.ஒழுங்கா நாலு வரி தமிழ்ல எழுத துப்பு கெட்ட ஜென்மத்துக்கு …லொள்ள பாரு..எகத்தாளத்த பாரு…

      • //chumma thaan,enna vinavu unmai maadhiriye poi sollum pozhuthu atha ulagathukku vilakka thaan.//

       அப்படித்தான். ரஜினி போன்ற கிறுக்கனுங்க பின்னாடி அலையறுதல ஒரு பிரயோசனமும் இல்லைன்னு உலகுக்கு விளக்குது வினவும். இத்னால உங்களுக்கு ஏன் எரியுது?

 6. ரஜினிகாந்த் ரூபாய் 10 லட்சம் தானே புயலுக்கு நிவாரண நிதி வழங்கிய அன்று பாராட்டு செய்யாத வினவு, அவர் பிறந்தநாளன்று அவரை வசை பாடுவது தவறு..

  முடிந்தால் இன்று அவருக்கு ஒரு வாழ்த்து பதிவு செய்யுங்கள்,
  பிறகு அவர் செய்யும் தவறுகளை சுட்டி காண்பியுங்கள்.

  – அசாத்

  • உதவி என்பது என்ன?
   …………… ­…………… ­…….
   நிறைய அறிவுஜுவிகள் நினைப்பது, பாரட்டவது எதையென்றால், ‘இல்லாதவற்கு உதவுகிறான்’, ‘கல்வி வள்ளல்’, ‘மக்களுக்கு பணவுதவி, போருளுதவி செய்கிறான்’ (Charity) என்றெல்லாம் முட்டாள் தனமாக புகழ்கிறார்கள். ­

   ஒருவன் தான் சாப்பிட வைத்திருக்கும் உணவை தான் உண்ணாமல் மற்றவனுக்கு கொடுப்பதை வேண்டுமென்றால் உதவியென்று சொல்லலாம்.

   ஒருவன் தனக்கு உண்ண இரண்டு உணவை வைத்துக்கொண்டு அதில் ஒன்றை எடுத்து மற்றவனுக்கு கொடுப்பதை உதவி என்று சொல்லுவது அயோக்கியதனமானது ­. ஒருவன் தனது அடிப்படை தேவையை விட அதிகமாக
   அவனிடம் இருப்பது நிச்சயம் அவனுடையதல்ல. அது இன்னொருவனுக்கு போய் சேரவேண்டியது. இன்னொருவனுக்கு போய் சேரவேண்டியதை ஒருவன் வைத்திருப்பதே அநீதியானது, அப்படியிருக்கும ­்போது, இந்த ஆபாச செயலை உதவியென்று சொல்லுவது இழிவானது.

   (இந்த தர்மகர்த்தா வேலைக்கூட நிலப்பிரப்புத்த ­ுவ அடிமைதனத்தின் நீட்சி. அப்பொழுது உருவாகிய கேடுகெட்ட மதங்கள்கூட பணக்காரர்கள் ஏழைக்கு உதவிசெய்யவேண்டும் என்று சொல்கிறது. அதும் எதற்கு உழைக்காமல் சல்லாபமாக வாழும் பணக்கார நாய்கள் உழைக்கும் மக்களின் கோபத்திலிருந்து ­ தங்களை காத்துக்கொள்ள. அதுசரி இறைவனை உண்டாக்கியவனே உழைக்காத சோம்பேரிகள்தானே )

   ­
   அரசு ஏழைக்கு இலவச அரிசி, இலவச உடை தருகிறதாம்!

   என்னடா உங்க நியாயம்?

   அவர்கள் உற்பத்தி செய்த உணவை, உடையை பிடிங்கி திரும்ப அவர்களுக்கு கொடுப்பது உதவியா?

   (இரத்தத்தைக் கூட உடல் திரும்ப உற்பத்தி செய்துவிடும் என்பதால்தான் மற்றவர்க்கு, கொடுத்து நமக்கு தேவைப்படும்போது ­ வாங்கிகொள்கிறோம ­்.)

   • உன்மை
    உண்மை…
    அதற்கு ஒருவர் பிறந்த நாளன்று அவரை திட்டுவது நியாயமன்று…
    மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும், அவ்வளவே…
    தன் குடும்பத்தாரின் விசேஷத்தை கொண்டாட முடியாத போது வேறு ஒரு நடிகனுக்கோ அல்லது கட்சி தலைவருக்கோ இது போன்ற நிகழ்ச்சி வைப்பது மிக தவறு / முட்டாள்தனம் .

 7. கடவுளை நம்பாத உங்களுக்கு யார்க்கு யார் குருவாய், ரசிகனாய் இருந்தால் என்ன.. அவரின் பிறந்தநாளில் இது போல் எழும் அவசியம் என்ன?

  • ரஜினி இரசிகர்கள் விடலைகள் என்பதற்கு பையாவும்
   விபரீதங்கள் என்பதற்கு சீனுவும் வந்து அட்டென்டன்ஸ் போட்டுவிட்டனர்

   நல்லது

   • வினவின் சிஸ்யப்புள்ளைங்க விபரீதமான விடலைங்க என்பத்ற்க்கு ஊசியேமிகச்சரியான எடுத்துக்காட்டு

 8. சினிமா கூத்தாடி வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன உன் வீட்டு அடுப்பில் தாயோ,மனைவியோ உலை வைத்திருக்கிறார்களா என்று பாருங்கள்.கோடியில் படுத்துக் கிடப்பவனுக்கு என்னய்யா
  போட்டி போட்டுக் கொண்டு வக்காலத்து வாங்குகிறீர்கள்.பொழைப்பை பாருங்கையா.

 9. திருச்சியில் நான் கண்ட ரஜினியின் பிறந்தநாள் போஸ்டரில் 12+12+12=36 இதை திருப்பி போட்டா 63 இது தலையோட 63 வது பிறந்தநாள் இது எப்படி இருக்குன்னு போட்டிருக்காங்க என்ன கொடுமை சரவணன் சார்…..

  • நல்ல அறிவாளிகள் சார்..
   எவ்வளவு நுண்ணறிவு…

   புதியவனுக்கு புதியது பிடிக்கவில்லை போலும்.

 10. 12.12.12-இன்னொரு 12 சொல்லவா திரு ஆர்.தியாகு,திரு சரவணன் சார்.
  அதான் 12-வது ஐந்தாண்டு திட்டம்.
  இந்த திட்ட காலத்தில் தான் நாட்டு மக்களின் வாழ்க்கை முழுவதையும் வேகமாக வேரோடு அழிக்க நினைக்கிறார்கள் மன்மோகன் சிங் தலைமையிலான கும்பல்கள்.
  இது கிரியேட்டிவிட்டி இல்லை சார்.

 11. thalaivaa maththavanga oodhi anaikkira theekkuchchiyaa? neenga yaar enna sonnaa enna?
  ungalai oru payalaalayum onnum panna mudiyaadhu.
  adhu avangalukke nallaath theriyum.
  palli kaththunaa?panjaangaththai paakkalaam.
  panni kaththunaa? ennaththai paakkaradhu.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க