ரஜினி என்ற மாபெரும் சக்தியின் சகல வல்லமைகளைப் பற்றி ஊடகங்களும் அரசியல் உலகமும் கட்டி எழுப்பியிருக்கும் கருத்துலகம் உண்மையில் ஒரு ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்தான். அதற்கு ஆதாரமாக பாபா படம் வெளியான போது திருச்சியில் இந்த பலூனை வெடிக்கவைத்த கதையை இங்கு காலப்பொருத்தம் கருதி பதிவு செய்கிறோம்.
சில திரைப்படங்களுக்கு எழுத்தில் விமரிசனம் செய்தால் போதுமானதாக இருப்பதில்லை. சமகால வரலாற்றைத் திரித்து பம்பாய், ரோஜா போன்ற இந்து மதவெறி ஆதரவுப் படங்களை மணிரத்தினம் வெளியிட்டபோது அவற்றுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பாலியல் வக்கிரங்களையே பண்பாடாக்கும் ஆபாசத் திரைப்படங்களுக்கு எதிராகவும் இத்தகைய நேரடி நடவடிக்கை தேவைப்பட்டிருக்கிறது.
ஆபாசமும் வக்கிரமும் படத்திற்குள்ளேதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாபா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் கதை இன்னதென்று தெரியாவிட்டாலும், படம் வெளியாவதற்கு முன்னால் அதற்குப் பத்திரிகையுலகம் அளித்த விளம்பரமும், தமிழகமெங்கும் பாபா வெளியீட்டையொட்டி நடைபெற்ற கூத்துகளும் ஆபாசம் வக்கிரம் என்ற சொற்களுக்குள் அடக்கவியலாத அளவுக்கு அருவருப்பானவை.இந்த அசிங்கம் தோற்றுவிக்கும் நாற்றத்தை எதிர்கொள்ளவியலாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிச் செல்வதென்பது தமிழ் மக்களின் சுயமரியாதைக்கே விடப்பட்ட சவாலாகக் கருதினோம். எனவே தமிழகத்தில் ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம் இயங்கும் திருச்சியில், பாபாவையும் பக்தகேடிகளையும் நேருக்கு நேர் சந்திப்பது என்று களத்தில் இறங்கினோம்.
பாபா வெளியிடப்பட்ட ஆகஸ்டு 15, 2002 அன்று தமிழகத்தின் சூழல் என்னவென்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். நெசவாளர்களுக்குக் கஞ்சித் தொட்டி வைத்த தி.மு.க வினர், முட்டை பிரியாணிக் கும்பலிடம் அடி வாங்கி, சிறை சென்ற முன்னாள் சபாநாயகர் உள்ளிட்ட 110பேர் கண்டிசன் பெயிலில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். நெசவாளர்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருந்தனர்.
காவிரியில் தண்ணீர் விடாமல் கர்நாடகம் அடாவடித்தனம் செய்து கொண்டிருந்தது. தஞ்சை பஞ்சபூமியாகி விவசாயிகள் எலிக்கறி தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். தமிழகமெங்கும், ஆசிரியர் போராட்டம், வழக்குறைஞர் போராட்டம்.
இந்தச் சூழலில் தமிழகப் பத்திரிகைகளில் பாபாதான் அட்டைப்படக் கட்டுரை அல்லது முக்கியச் செய்தி. இதை விடப் பெரிய பூச்செண்டை பாபாவைத் தவிர யாரும் ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்க முடியாது. அந்த அளவிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டன மக்கள் பிரச்சினைகள்.பாபா வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன் ராமதாஸ் ரஜினியைப் பற்றித் தெரிவித்த விமரிசனம் பத்திரிகைகளில் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டிலும், ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்திய செய்திதான் முக்கியத்துவம் பெற்றது. ரசிகர்கள் “கொந்தளிப்பு – ஆவேசம்” என்றும் ரஜினி மட்டும் தடுத்து நிறுத்தாமலிருந்தால் ரசிகர்கள் தமிழ்நாட்டையே கொளுத்தி விடுவார்கள் என்பது போலவும் ஒரு பயங்கரத் தோற்றத்தையும் உருவாக்கின பத்திரிகைகள்.
தங்கள் முகத்தை பூதக்கண்ணாடி வழியே பார்த்து தைரியம் பெற்ற ரசிகர்கள் எனப்படும் தெள்ளவாரிகள் கூட்டம் ” ராமதாசையும் திருமாவளவனையும் பொடாவில் கைது செய்” என்று அறிக்கை விட்டு தங்கள் அரசியல் பார்வையைத் தெளிவுபடுத்தியது; இதுவும் மாலைப் பத்திரிக்கைகளின் முதல் பக்கச் செய்தியானது.
திருச்சி நகரமோ பாபா நகரமாகவே இருந்தது. ஷாகுல்ஜி (ஷாகுல் ஹமீது) தலைமையில் அதிகாரபூர்வ ரசிகர் மன்றம்; கலீல்ஜி (கலீல்) தலைமையில் போட்டி ரசிகர் மன்றம். மாவட்டத்தில் மொத்தம் 550 கிளைகள், இரு ரசிகர் மன்றங்களுக்கிடையிலான போட்டியில் திருச்சி நகரத்தின் எல்லாச் சுவர்களுக்கும் ஆயில் பெயிண்ட் அடித்து விட்டனர். ஒரு சுவர் விளம்பரத்துக்கு 3000 ரூபாய் என்று மதிப்பிட்டாலும் மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய்க்கு (600 இடங்களுக்கு மேல்) பாபா விளம்பரம் செய்திருந்தனர். விளம்பர வாசகங்களைப் படித்தால் தன்மானமுள்ள வாசகர்களுக்கு அது கொலை வெறியை ஏற்படுத்தும் என்பதால் எழுதாமல் விடுகிறோம்.
இவையன்றி, சுவரொட்டிகள். ரஜினி திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 5 கோடியென்றால் ரசிகர்கள் செய்யும் விளம்பரச் செலவு 10 கோடி என்பதை ‘படையப்பா’ படம் வெளிவந்த போது உரிய விவரங்களுடன் புதிய கலாச்சாரத்தில் எழுதியிருக்கிறோம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ‘தலைவர்’ படம் வருகிறதென்பதால் விளம்பரம் எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.ரஜினியின் நண்பரும் தொழில் கூட்டாளியுமான முன்னாள் காங்கிரசு எம்.பி அடைக்கலராஜின் கொட்டகை உட்பட 3 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. ஆகஸ்டு – 15 அன்று மட்டும் 5 திரையரங்குகளில் அன்றாடம் 5 காட்சிகள்.
ஆகஸ்டு – 14 ஆம் தேதியன்று போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்த திருச்சி நகர மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள், ஆகஸ்டு – 15 ஆம் தேதியன்று பாபா திரையிடப்படும் ரம்பா திரையரங்கின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கண்டன ஊர்வலத்திற்கும் போலீசிடம் அனுமதி கேட்டனர்.
“சுதந்திர தினத்தன்று குடிமக்கள் எந்த விதமான ஜனநாயக உரிமையையும் பயன்படுத்த அனுமதிப்பது வழக்கமில்லை” என்ற புனிதமான மரபை போலீசார் சுட்டிக் காட்டினர். 16 ஆம் தேதி அனுமதியளிப்பதாக வாக்களித்தனர்.
“பாபாவுக்குப் பால்குட ஊர்வலம் நடத்த அனுமதித்தால் அதை எதிர்த்து காலிப்பானை ஊர்வலம் நடத்துவோம் ” என்று போலீசை எச்சரித்தோம். பால்குட ஊர்வலத்தை அனுமதிக்க மாட்டோமென உறுதியளித்தனர் போலீசு அதிகாரிகள். ரஜினியின் படம் வெளியாகும் நாளன்று நகரம் எப்படி இருக்குமென்பதைத் தமிழக மக்களுக்கு விளக்கத் தேவையில்லை. சுதந்தி தினத்தன்று பிராந்திக் கடை திறக்கக்கூடாது என்ற ‘ கருப்புச் சட்டம்’ அமலில் இருப்பதால் 14 ஆம் தேதியே போதுமான அளவு ‘ ஜனநாயகத்தை’ வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டிருந்தார்கள் பாபாவின் பக்த கேடிகள்.
எம் தரப்பில், பாபாவை அம்பலப்படுத்தும் 3500 சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை 14 ஆம் தேதி இரவு ஒட்டுவதைக் காட்டிலும் காலையில் ஒட்டுவதன் மூலம்தான் பக்த கேடிகளை “நேருக்குநேர்” சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், ரஜினி ரசிகர்கள் எனும் ” மாபெரும் சக்தி ” பற்றி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமையை உடைக்க முடியும் என்பதாலும் ஆகஸ்டு 15 அன்று காலையில் ஒட்டுவதென முடிவு செய்தோம்.
செஞ்சட்டையணிந்த தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து திருச்சி நகரின் எல்லாப் பேருந்துகளிலும் சுவரொட்டிகளை ஒட்டினர். மக்கள் கும்பல் கும்பலாகப் படித்து ரசிக்கத் தொடங்கினர். ரசிகர்கள் நின்று படித்துவிட்டு மவுனமாக இடத்தை விட்டு அகன்றனர். ஒட்டும்போது வம்புக்கு வந்தாலோ ஒட்டிய பிறகு கிழித்தாலோ என்ன நடக்கும் என்பது சுவரொட்டியிலேயே அச்சிடப்பட்டிருந்தது. படித்துப் புரிந்து கொள்ளத் தவறும் ரசிகர்கள் பார்த்தே புரிந்து கொள்ள ஏதுவாக உரிய தயாரிப்புடன் சென்றனர் தோழர்கள். “ராமதாசுக்குத் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்தினார்கள், கொதிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள் ” என்று பத்திரிகைகளால் வருணிக்கப்பட்ட ரசிகர்கள் ஒரு இடத்திலும் மூச்சு விடவில்லை.
தேநீர்க் கடைகள், தெருக்கள் என்று நகரின் உட்பகுதிகளெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரேயொரு தெருவில் சுவரொட்டியைக் கிழித்த ரசிகர் கூட்டத்தைத் ‘ தக்கபடி கவனித்து ‘ கையில் பசைவாளியையும் சுவரொட்டிகளையும் கொடுத்து அவர்களையே ஒட்டச் செய்தனர் தோழர்கள். நகரின் மையமான இடங்களில் இதே முழக்கங்கள் ( தாழ்ந்த தமிழகமே! கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் காவிரிக்கு உழவன் கண்ணீர் விடும் மண்ணில் பாபா காட்சிக்கு அலை மோதும் ரசிகர் கூட்டம்! பாபா டிக்கெட் 600 ரூபாயாம்! தமிழனே! உன் சூடு சொரணை எத்தனை ரூபாய்?! ஆர்ப்பாட்டம், “ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!” ) பெரிய தட்டிகளாக எழுதி வைக்கப்பட்டன. அவற்றுக்கும் சேதமில்லை.
மதியம் தட்டிகளைக் கையிலேந்தியபடி பல குழுக்களாகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரச்சாரம் செய்யச் சென்றனர் தோழர்கள். ரஜினி ரசிகர் மன்றங்களில் உட்காந்திருந்தவர்களை அழைத்துப் பேசினர். “ரேசன் வாங்க வைத்திருந்த காசைக் காணோம்; பைனான்சுக்கு வைத்திருந்த காசை எடுத்து விட்டான்; பாத்திரத்தைக் காணோம்; நகையைக் காணோம்” என்ற தாய்மார்களின் புகார்களும், வசவுகளும், கண்ணீரும் எல்லாத் தெருக்களிலும் கேட்டது. இந்த எதிர்ப்பியக்கத்தை மக்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்று மேலும் விளக்கத் தேவையில்லை.
“படம் படுதோல்வி ” என்ற செய்தி அதற்குள் நகரம் முழுவதும் பரவிவிட்டது. ” பாபா படுதோல்வி! போண்டியானது ரசிகர்கள்தான் – ரஜினி அல்ல! பண்ட பாத்திரத்தை விற்று ரஜினிக்கு மொய் எழுதிய ரசிகர்களே இனியாவது திருந்துங்கள்!” என்ற தட்டிகளை அன்று மாலையே நகரின் மையப்பகுதிகளில் வைத்தோம். அன்று காலை “ஜெயங்கொண்டத்தில் படப்பெட்டியைப் பா.ம.க வினர் பறித்துச் சென்று விட்டனர் ” என்ற செய்தி மாலைப் பத்திரிகைகளின் பரபரப்புக்குத் தீனியானது.
போலீசுக்கோ 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்க இது ஒரு முகாந்திரமானது. ” அடுத்த 10 நாட்களுக்குள் பாபாவுக்கு எதிராக எதுவும் செய்ய அனுமதிக்கக்கூடாது ” என்று அம்மாவின் அரசு உத்திரவிட்டிருப்பதாகக் கூறினர். தடை உத்திரவை நள்ளிரவு 1 மணிக்குக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் 16ஆம் தேதி காலை 9 மணிக்குத் தடையை மீறி திருச்சி சிங்காரத் தோப்பில் திடீரென்று குழுமிய தோழர்கள் ஊர்வலமாகக் கிளம்பி ரம்பா திரையரங்கம் நோக்கிச் சென்றனர். தெப்பக்குளம் அருகே ஊர்வலத்தை மறித்துக் கைது செய்தது போலீசு. பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அனைத்திலும் செய்தி வெளிவந்தது. ( பரபரப்பு முக்கியத்துவம் என்று ஒன்று இருக்கிறதே )
பண்ருட்டியில் சுவரொட்டி வாசகத்திற்காக அதனை ஒட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். “”ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!” என்ற அந்தச் சுவரொட்டி வாசகம் இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி குற்றப் பிரிவு 153-ஏ இல் கைது செய்து சிறை வைத்தனர். அதாவது பாபர் மசூதியை இடித்ததற்கு அத்வானி மேல் போடப்பட்ட அதே குற்றப் பிரிவு!
16 – ஆம் தேதி இரவே திருச்சி நகரச் சுவர்களை அசிங்கமாக்கிக் கொண்டிருந்த பாபா விளம்பரங்கள் மீது வெள்ளையடித்து “உலக வங்கிக் கைக்கூலி ஜெயா” வுக்கு எதிரான முழக்கங்களை எழுதத் தொடங்கினார்கள் தோழர்கள். வெள்ளையடிக்கும் பணி மறுநாள் பகலிலும் தொடர்ந்தது. இதைக் கண்டும் ரசிகர்கள் யாரும் கொந்தளிக்கவோ குறுக்கிடவோ இல்லை. ஒரு இடத்தில் ரஜினியின் முகத்தில் வெள்ளையடிக்கும்போது மட்டும் ஒரு ரசிகர் குறுக்கிட்டார். ” தலைவா… பாத்து… தலைவர் முகத்தில் அடிக்கும் போது மட்டும் கொஞ்சம் பாத்து அடிங்க ” என்றார்.
பார்த்து அடிப்போம்.
__________________________________________________
புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
_____________________________________________
Super & fantastic analysis. Hats off Vinavu!!!!!!!!
Vinavu,i like your writings. really good.but won’t completely agree with your comments about rajini.Rajini never asked his fans to celebrate his film openings; it is purely a fault of these fans.Rajini is a actor,nothing more.and we are his fans, nothing more.See this actor as actor.
மிக சிறந்த கட்டுரை…….ஆனால் எத்தனை பேர் கும்மி அடிக்க போகிறார்கள் பாருங்கள்…உண்மை இவர்களுக்கு புரிவதில்லை அது இவர்களுக்கு அவசியப்படவும் இல்லை.
//தனது படத்தை வைத்து சுமார் 100 கோடியை கொள்ளையடிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த சூப்பர் ஸ்டார் நவம்பர் 2 ஆம் தேதி ரசிகர்களை பெரிய மனதுடன் சந்தித்தார்.//
//ரஜினி என்ற மாபெரும் சக்தியின் சகல வல்லமைகளைப் பற்றி ஊடகங்களும் அரசியல் உலகமும் கட்டி எழுப்பியிருக்கும் கருத்துலகம் உண்மையில் ஒரு ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்தான்//
//திருச்சி நகரில் ஒரே நாளில் இத்தகைய ‘ முதலீட்டாளர்கள் ‘ பத்துப் பேரைச் சந்தித்தோம். எல்லொரும் 40,000 முதல் 75,000 வரை இழந்தவர்கள். தீடீர்க் காசு பார்க்க விரும்பிய இந்தக் கூட்டம் ஏமாந்து விட்டது குறித்து நாம் வருந்தத் தேவையில்லை. ஆனால் ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.//
இந்த உண்மைகளெல்லாம், ரஜினி ரசிகர்களாகிய உங்களுக்கு வலிக்கும்…உங்களுக்கு வலித்தால் அது எங்களுக்கும்தான் வலிக்கிறது…ஏனென்றால் நீங்கள் எங்கள் சகோதரர்கள்தானே!
Good detailed analysis… Well done..
As Raj mentioned the fans should understand alteast by now !!!!
Un peenaavum, Naavum Kooda en thalaivarai oru Naal Pugazhum…..
Antha Naal veghu tholaivil Illai..
Hello, Thalaivar nu sollurathuku Rajiniku arukathai kuda iruka.. appadi yenna pa avaru sathichutaru.
Till this day i thought who ever can come to Tamil nadu as C.M.
But now even though i am a die hard fan of Thalaivar its not good for every one to come as c.m.. here i mentioned good is not the nominee as C.M but not good for my tamil nadu people because i love my tamil nadu very very very much.. see how many crisis regarding water issues made by karnataka.. that time while farmers ate mice me a small boy but now i am able to understand clearly about the indepth politics in these games.. why that time no one come front to save my people i dont know.
elam solkindranar arasiyal oru saakadai endru aanal athu oru kaalathil nala thaneeraga irunthathai maranthu vitu ipadi solgindranar.. oru nala thalaivar kandipaaga thamilzakathuku vendum.. ithu varai irunthavargal ena saathithu vitargal.. yarum vendam.. ini varum arasiyalvaathi yavadhu en thamilzhaga janathai entha theengum varathu thhan kudumbathai pol pavikum
oru thalaivan vendum.. ithai thavira solvatharku veru onrum illai..
and again i want to mention here is all my rajini fans lets see our family first then give the money for the ticket cost.. lets be a son to mother husband to wife and a good person to our society and last a fan for him.. don make this in reverse order. it will give danger not only for us and also a bad name for rajini.. also rajini sir should not try to feed his religious thought over cinema and that hindu politics and all. if u can help our tamil nadu help us.. otherwise leave it.. let some one can come and save us or we will be like this.. i want my tamilnadu to be safe and wealth and health.
Rgrds
Kannan.B
அய்யா அதி மேதாவி அவர்களே !
ஒரு சாதாரண திரைப்பட வெளியிட்டிர்க்கு எதிராக இவ்வளவு செய்தீர்களே,
என்றைக்காவது ஒரு அரசியல் காட்சி மாநாடு நடக்கும் பொழுது இப்படி செய்தீர்களா ?
அன்றைக்கு நீங்கள் சொல்வது போல் எந்த தவறும் தமிழ் நாட்டில் நடந்தததிலையா ?
நாங்கெல்லாம் படம் வெளியீடு அன்று எங்கள் மகிழ்ச்சிக்காக அவ்வாறு செய்கின்றோம். அதுவும் நீங்கள் சொல்வது போல் மோசமாக இல்லை.
உங்களுக்கு பொழப்பு போகணும் என்பதர்க்க ஏன் அடுத்தவங்களை குறை சொல்றீங்க
வெக்கம இல்ல உங்களுக்கு ?
//Un peenaavum, Naavum Kooda en thalaivarai oru Naal Pugazhum…..
Antha Naal veghu tholaivil Illai..//
டேய்.. நீங்கெல்லாம் உப்புப் போட்டுத் தான் திங்கறீங்களாடா? சொரணையே கிடையாதா? சுயமரியாதைன்னா என்னான்னு கேள்விப்பட்டிருக்கியா?
அந்த சொறி மூஞ்சியன் தானாடா உங்க தலைவன்? அவனோட தனிவாழ்க்கையாகட்டும் சமூகத்தோட அவனோட உறவாகட்டும் கொஞ்சமாவது உருப்படியானதா? உன்னெ மாதிரி பொழப்புக்கெட்ட லூசுப்பயலுக தாண்டா அவனோட அடித்தளமே..
சுயமறியாதையை பற்றி சொன்ன நீங்கள்…. ஒரு மனிதரை இப்படி சொல்வது சரியா என்று அந்த அறிவிடம் கேட்டு பாருங்கள்…….
//என்றைக்காவது ஒரு அரசியல் காட்சி மாநாடு நடக்கும் பொழுது இப்படி செய்தீர்களா ?//
அதெப்படி செய்வார்கள்? ஒரு திமுக மாநாட்டில் இவ்வாறு செய்திருந்தால் அப்புறம் கழுவுற கையால் தான் சோறு திங்க வேண்டும் என்பதை அறிந்தவர்கள் இவர்கள்.
//என்றைக்காவது ஒரு அரசியல் காட்சி மாநாடு நடக்கும் பொழுது இப்படி செய்தீர்களா ?//
தனது தலைவர் படத்தின் உரையாடல்களை மனப்பாடம் செய்து வைத்து இருக்கும் இவர்களை போன்ற ரசிக சிகா மணிகள்.. ஒரு விமர்சனத்திற்கு பதில் தெரியவில்லை அல்லது பதில் சொல்ல முடியவில்லை என்றால் திரும்ப கேட்கும் கேள்வி “என் தலைவனை திடடியது போல் மற்றவனையும் திட்டினாயா?”
இந்த கட்டுரையை வெளியிட்ட “புதிய கலாச்சாரம்” இன்றும் வெளிவருகிறது.. “ரஜினி ரசிகன்” இதழை வாங்குவதற்கு நீங்கள் செலவிடுவதற்கு பதில் புதிய கலாசாரத்தை வாங்கி படித்து பாருங்கள்… இந்த அமைப்பை பற்றி , இந்த அமைப்பின் பணிகளைப் பற்றி தெரிந்த பின்பு உங்களின் விமர்சனத்தை முன் வைக்கலாம்..
கருணாநிதியை திட்டினாயா.. ஜெயலலிதாவை திட்டினாயா என்று கேட்கும் அன்பர்களே.. திடடியது அதற்காக போராடியது மட்டும் இல்லாமல் பல பாடல் ஒலிப் பேழைகளையே இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது.. 🙂
“தலைவா தமிழகத்தை
நீ தான் காப்பாத்தனும் ”
என்ற ரசிகர்களின்
கோரிக்கை
நேத்து வந்தவனெல்லாம்
பொறுக்கி தின்னும்
போது நான் மட்டும்
கேனப்பயலா ?
என்பதிலிருந்து எழுந்ததே
இந்த ரஜினிகள் தான்
தங்ளை பராரி
ஆக்கியவர்கள்
என்பது தெரியும்
வரை
ரசிகர்களின்
வாய்கள் ரஜினியின்
கால்களுக்கானதாகவே இருக்கும்
Well said… Very good article… A must read for all rajini fans… Want to know more about your Organisation/Group…. Do reply back.
ஸேம் பிளட் திரு.வினவு அவர்களே…
http://www.athishaonline.com/2008/11/blog-post.html
நேரம் கிடைக்கும் போது பாருங்க…
உங்களுக்கு ஆபாச பின்னூட்டம்லாம் வரலையா
dear editor. all ur comments are around rajani only.
rajini is an indian only. asper our constitution he can work any where to earn his bread as i do though iam native of thirunelveli i earn my bread only in mangalore since1972.like meas a business man by profession, rajini is also an actor by profession,in tahil nadu people are foolsto support an actor to this extent.rajini before entering into cine field he never wentrequested any tamilianto feed his bread we fools have supported him &brought him to this stage. now he is entering into politicsin a week or two the news will come out. if he enters into politics it is definite he only will decorate the cm’s chair.karunanidhi &hissurandal company have to fly away from politics.for u when a man comes saying heis a tamilan u will not see hisauthority as a tamilan instead u see his casteu don’t see his capabilityusing ur weakness if other fello goes up like rajini, u will cryhuo ho. now it is time to control ramdoss toplay music against rajini, otherwiseit will turn as a fatal music to many t.n politicians. ifu cry like this rajini will go up only because he is a gentle man. personaly he deserves respect even all tamilians in karnataka support rajini only.
Dear friends,
Dont waste your life by running behind this guy rajini. He is a millionaire. He is living a peaceful life in his own world. There is no use of running behind him and losing your life. Take care of your family.
regards
RAJINI IS JUST AN ACTOR WHO IS HAVING LOT OF FANS AND FOLLOWERS.
PERSONALLY HE IS A GOOD MAN
I DONT KNOW WHAT IS UR PROBLEM???
VAYITHTHERICHAL
JAI SUPER STAR JAI SUPER STARJAI SUPER STARJAI SUPER STARJAI SUPER STARJAI SUPER STARJAI SUPER STARJAI SUPER STAR
WE DONT MIND ABOUT BARKING DOGS- RAJINI FANS
unaku ennada prechanai?
kushboo ku kovil kattum pothu enna pannitu irundha?
unaku publicity venum.. adhukku rajni eh thittura..
onnu nalla purinjukanum kanna, rajni eh thitti un vayiru neraiyum na… un kudumbam valum na sandhoshama sei.. ner valila polachuka…
but remem.. poonai kanna moodikitta ulagham irundidaathu… nee evalo kathunaalum unmai marainjudaathu… rajni en thalaevan… he ll rule in our hearts atleast for the next few eons to come and not so far s the day wen u keep scribling wen he rules n rules n rules in all somany places u can ever imagine…
When read this “Blog Posting” (BP) I had a doubt that is this BP finding fault at Rajni or at the “Press/Media”.
You will also have the same doubt if you read the first 3 para again.
and later the BP says that the “Rajini Fans” did not beat/fight with the “Tzholarkal”. So did you expect Rajini fans to get into violence. Rajini never advocated violence so there nothing wrong in “Rajini Fans” not beating up ur “Tzholargal”
//திருச்சி நகரில் ஒரே நாளில் இத்தகைய ‘ முதலீட்டாளர்கள் ‘ பத்துப் பேரைச் சந்தித்தோம். எல்லொரும் 40,000 முதல் 75,000 வரை இழந்தவர்கள். தீடீர்க் காசு பார்க்க விரும்பிய இந்தக் கூட்டம் ஏமாந்து விட்டது குறித்து நாம் வருந்தத் தேவையில்லை. ஆனால் ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று//
There is some thing called “Share Market” across the world. The whole worlds’ economy revolves around it. What is the difference between this. When Some one makes money is Share Market its for him to keep it. If some one looses it then its loss. No one returns him his money. He takes the risk and get the result. But atleast in “Baba case” Rajini paid back the “amount of money” that the theater owner were satisfied.
— I could not read any more.. so boring….I read so far just to see if there are any sense in this BP, but I could not find any more. So I thought.. forget it.. and thought ok lets check what the comments were…there too I cant go over more a cpl..
//தனது படத்தை வைத்து சுமார் 100 கோடியை கொள்ளையடிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த சூப்பர் ஸ்டார் நவம்பர் 2 ஆம் தேதி ரசிகர்களை பெரிய மனதுடன் சந்தித்தார்.//
Raj,
-If he has not met his fans as per their request the he is going to be accused like “he makes cores out of these fans and he does not have time to meet his fans”
If you ask why now
.
He already has said 100 times ( fools wont remember this) if the fans has to meet him how much financial/practical difficulty it will cause them. Thats the reason he had never wanted to cause trouble… be he has been forced to because of the Fans.
//There is no use of running behind him and losing your life. Take care of your family.//
Malini, this is Funny, Cos if you watch his recent interview he has said the “VERY SAME” advice to his fans. So please…, we do not need the same EXPERT ADVICE from you.
Come on Guys..there are more to do and talk and write….wake up and open your eyes.
Rajini Fans are crazy and go out and celeberate his film release…I agree.. Dont you celeberate Diwali,Pongal, Christmas…for your happiness.. For them its his film release and that too comes once in ever 3 years…let them have fun… you go and do your “Saving the Country” work by writing “IMPORTANT POSTS” Like this
rajini periya allau illaina nee ennda dog artical eluthura ,avara pathi elluthuna nee enna periya ivana ,ennda dog baba aduthu vanatha chthiramuki,sivaji pathi artical elluthu ,mega hit block buster enna thriuma ,rajini pathi ellutha nee enna periya unthma pundai ,edduvata maganie
A non sense analysis. Ramadoss kudathan pakkurathukku kanraaviya irukkan, avanellam tamil nattula jaathi pera sollu kodi kodi-ya sambathikkurathukkum unna mathiri alunga avanukku kutti kudukkurathukkum irukkum pothu, enga thalaivar rajini-kku ennada naaye kuraichal? intha vayitherichal velai ellam inga vendam…
Media persons are using Rajini’s name only for business sake.
Why can’t u blast Media Person….
Now only you people are talking about him. Anyone would have talked him 20 years before. Because at that time he is not famous. Either Media nor U “Vinayu” have not written about him because there is no commerical or business use.
Everyone has there personal commitments. He is just a human being not a GOD. No one in Perfect including U.
Hello Friends!
Y u Targeting Rajini y cant u target kalaignar and his family and so on some political issues and it is good for society. if u feel its hurting u yes i am just giving infromation to u please try to cahnge and publish some interesting things ………….
Super Star Rajinikanth is a good man.he is a good actor, people likes him b’couse of his style. if u don’t like him, please don’t speake abt him. he succeed by his hard work.
dai ithulam oru velanu ne paniruka paru thu……
vera entha nadikaroda rasikarkallum ipdi panathea ilaya….
vera entha nadikarkallum avaka rasikarkala vachi sapptatheilaya… da
dai ika yarum 100% nallavanum ila 100% kettavanum ila intha adipai aarivu kuda illatha ne alluthina sry kerukina ithu padicchutu well saidnu comment pananukaela avanukalukuma da arrivu ila..
dai muditu poi vera vella irutha paru da unnoda valiya ne paru aduthavanuku avan ena pandranu thereium ithe thaan enakum allarukum mothala nambala papom athkaparama adthavakalla pathi pesallam po da dai………….
அருமையான கட்டுரை.இந்த நாட்டு மக்களின் நிரந்தர, அகற்ற முடியா சாக்கடை பற்றி எடுத்துரைத்து குறித்து ம்கிழ்ச்சி.
ARUMAYAANA KATTURAI. ITHAI MELUM PARAPPA THUNDU ARIKKAIKALAKI VINIYAGIKALAAMAA.
Dai u don’t have any rights to talk about my thalaivar.
My superstar is always great gentle man.
Super star Vazghaa
Hello
Many fools (Include u) they dont know about our thalivar MrRajinikanth.
S Maharajan
Dubai
ரஜினி பேரை போட்டாதான் blog க்கு எல்லாரும் வருவாங்கனு எதாவது கிருக்கவேன்டியது போடா லூசு இது எல்லாம் ஒரு சின்ன சந்தோசம்தான் ரசிகர்கள்லுக்கு நீ அடேதவ்ங்களை பத்தியே தப்பா எழுதி போலப்போ நடத்டுளியா இதுக்கு அது தேவாலாம்
Rajini has attained the fame beyond a limit that no one could bring his popularity down for whatever reasons. He proved that through Chandramukhi and Sivaji…. after Baba debacle that he is not just an air filled baloon but an unavoidable and admirable person not just among Tamils but among indians. Your intention was very clear so can’t read after 1st paragraph. Very Silly post. Keep it up. You post attanied considerable hits because of Rajini, I am ure wont mind it.
Dai vekkang kettavane! mothalla nee ethavathu urupadiyana vela ethavathu paaruda!
chumma unnoda suya vilambarathukaaga thalaivara thappa pesathada paradesi.
My Dear Vinay,
Kuttram kand pidithu per vangum pulavar neengal.
Try to write something be honour- dont write what ever
comes in your mind.
This is really hurt superstar fans.
don’t say any thing about rajini. he is good human being.
ப்ரியங்கா பிரபாகரன் ஒரு குற்றவாளி ,அவருக்கு மன்னிப்பு கிடையாது என்கிறார்.
ராஜிவ் காந்தி கொல்லபட்டதில் பல சந்தேகங்கள் உள்ளன்.அக்கட்சியை சேர்ந்தவர்கள் மீது கூட சந்தேகம் எழுந்துள்ளது விசாரணையில்.
பிராபகரன் என்ற தனி மனிதன் மீது சந்தேகம் கொண்டு இந்தியா இந்த போரை ஆதரிக்கிறது.
இது வெட்ட வெளிச்சம்.
அப்படியே ,பிரபாகரன் குற்றவாளி என்று வைத்து கொண்டாலும்.ஒரு தனி மனிதனை அழிப்பதற்க்காக ,சோனியாகாந்தியும் காங்கிரஸும் ஆயுத உதவி வழங்கி பல்லாயிரம் அப்பாவி ஈழ தமிழர்களை கொன்று குவிக்கிறது.
ஆயிரகணக்கான ஈழதமிழ் மக்களை கொன்று ,பிரபாகரனை அழிக்க நினைப்பது எப்படி நியாயமாகும்,
ஆயிரகணக்கான ஈழ தமிழர்களை குழந்தைகள்,முதியவர்கள்,பெண்கள் என்று பாராமல் கொன்று குவிப்பதற்கு சோனியா காந்தியையும்,ப்ரியங்கா மற்றும் காங்கிரஸையும் யார் மன்னிப்பார்கள்,
இது என்ன நியாயம்.
சோனியா காந்தியே நீ உன் கணவரை இழந்ததற்காக ,எத்தனை பெண்கள் தங்கள் ,தாலியை இழக்க வேண்டும்,எத்தனை பெண்கள் தங்கள் குழந்தைகளை இழக்க வேண்டும்,எத்தனை ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் பெற்றோரை இழக்க வேண்டும்,.
இத்தனை பேரின் இரத்தத்தில் தான் உன் ,வெறி அடங்குமா?
அத்மட்டுமல்ல,.உன் தனி பட்ட காழ்புணர்ச்சியால் ஈழ தமிழரின் உரிமை போராட்ட்ட்த்தை அல்லவா நீ சிதைத்து விட்டாய்.
இதை வரலாறு என்றும் மன்னிக்காது
Purely Rajini is a great human being.
He don’t have to run behind money,,,,He only accepts a movie twice an year nowadays.
If rajini is running behind money he will act dozens of movies a year.
Manasaatchi ilaama ipdi elutha vendaam.
Nandri
Pure tamilan.
காய்ச்ச மரத்தில் தான் கல்லடி படும்னு சும்மாவா சொன்னாங்க!!!
///காய்ச்ச மரத்தில் தான் கல்லடி படும்னு சும்மாவா சொன்னாங்க!!! ///
Superb… oru vaarththai sonnaalum NACH nu sonneenga.
சூப்பர ஸ்டாருதான் லூசுன்னா அந்தாளு ரசிகனும் அப்படியே இருக்கானே..
தானே பின்னூட்டம் போட்டு தானே பாராட்டிக்கறான் பாரு..கருமம் கருமம்
‘ தக்கபடி கவனித்து ‘ – rowdy kumbal!
poda dai
unmayai eludhiya umaku en parattukal tholaaaaaaaaaaaaaaaa
I like rajini. Long live rajini.
[…] […]
“நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே” என்று கேட்டத////
இதுலேயும் அழகா சிண்டு முடிஞ்சு விட முயற்சி பண்ணி இருக்கீங்க
Rajini is a stupid…
ரஜினி ரசிகர்கள் எவளோ முட்டாள்கள் என்று பின்னூட்டங்கள் நிரூபிக்கிறது.
கோடம்பாக்கதில் எல்லாம் உட்கார்ந்து யோசிச்சு எப்படி மக்களை மொட்டை அடிக்கலாம் என்று படத்திற்கு ரெண்டு வசனத்தை போட்டு சும்மா இருக்கிற மக்களை ரசிகர்களுனு ஏத்திவிட்டு, 15ந்தே நாட்களில் கோடிகணக்கில் சுருட்டுகிறார்கள்.மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைநடக்கிறது.தனியார்மய கல்வி முதல் தாராளமய கொள்ளை வரை .ஏதாவது ஒரு போராட்டம்நடத்தி ஜெயிலுக்கு போறது கிடக்கட்டும்,ஒரு கூட்டம்நடத்தி எதிர்ப்பு கூட ஒருத்தனும் தெரிவித்தே கிடையது.
இனிமேலாவது, ரசிகர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள் என்றுநம்புவோம்.
நினைவூட்டலுக்கு நன்றி ,வினவு.
அன்று ரஜினியை எதிர்த்த ராமதாசும், திருமாவும் இன்று எங்கே? திருமா சிறிது காலம் ரஜினி வழியில் நடிக்கப் போனதாக கேள்வி? உலக வங்கியின் கைக்கூலியோ அடுத்தக் கட்ட சுரண்டல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். காலம் மாறுகிறது; அனால் நாம் மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்தே தொடங்க கட்டாயப்படுத்தப்படுகிறோம்.
உண்மையெது
செருப்புத் தைப்பவனாய் கதாநாயகன்
கருப்புச் சீட்டு வாங்கினான்
நூறு கொடுத்து;
செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம்
பேரம் பேசினான்
ஐந்து ரூபாய்க்கு!!
//ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!// இது இசுலாமியர்களுக்கு மட்டும் ஆதரவான அமைப்பு என்பதற்க்கு இந்த ஒற்றை வரி சாட்சி சானாதான இந்துக்கள் கூட ஏசுவை திராட்சை மது அருந்தியவர் என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள் ஆனால் அதையும் மீறி ஏசுவை கஞ்சா அடிக்கும் ஒரு கிறுக்கனைப்போல சித்தரிப்பதை மத உணர்வு உள்ளவர்கள் மட்டும் அல்ல கம்மூனிசத்தை உருவாக்கிய மார்க்ஸ் கூட சிந்தித்து இருக்கமாட்டார் என்பது அவரது சில கருத்துகளை படித்த எந்தன் நிலைப்பாடு வாழ்க உமது கமூனிச சிந்தனை
கஞ்சா அடிப்பதை இந்து சாமியார்களே ஒத்துக்கொள்கிறார்கள். இறைவனை அடைவதற்கான வழி என்றும் சொல்கிறார்கள். கோடி பத்தி கேள்விபட்டது இல்லையா நீங்கள். இந்து மதத்தை எப்படி இழிவுபடுத்தலாம் என்று அந்த சாமியார்களிடம் கேட்டீர்கள் என்றால் அதில் நியாயம் இருக்கிறது. இல்லை அவர்கள் கஞ்சா பிடிப்பதை நியாயப்படுத்தி இந்து ஆண்மீக கண்காட்சியில் கடை போடுபவர்களை கேட்டால் ஒரு நியாயம் இருக்கிறது.அத இவங்க எடுத்து சொல்றது தப்பா?
/கோடி பத்தி கேள்விபட்டது இல்லையா நீங்கள். /
‘அகோரிகள்’ பத்தி கேள்விபட்டது இல்லையா நீங்கள். என்று வாசிக்கவும்
என்னதான் கருத்து வேறுபாடிருந்தாலும், ‘செஞ்சட்டையணிந்த’ தோழர்களின் இப்படியான செயல்களை வாசிக்கும் போது பெருமையாக இருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோருமே ரஜினியின் பின்புறத்தைக் கழுவிய தண்ணியை எடுத்து தலையில தெளித்துக் கொள்ளக் காத்திருக்கிறார்கள் என்பது போலத் தான் நான் இதுவரை நினைத்திருந்தேன். 🙂
அருமையான கட்டுரை……
இதை பலருக்கும் பகிர வேண்டியிருக்கிரது… பதிவுக்கு மிக்க நன்றி