Tuesday, April 13, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி படிக்கட்டு பயணம் - கொழுப்பா, நிர்ப்பந்தமா?

படிக்கட்டு பயணம் – கொழுப்பா, நிர்ப்பந்தமா?

-

படிக்கட்டு பயணம்‌டந்த டிசம்பர் பத்தாம் தேதி பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்த பேருந்து விபத்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேர் இறந்தனர். உடனே மாணவர்கள் படிக்கட்டில் நின்று சாகசம் செய்கிறார்கள் என்பதாக ஊடகங்களில் அறிவுரை பெருத்து ஓடுகிறது.

நீதிமன்றமோ தானாகவே முன்வந்து அரசை அறிக்கை தாக்கல் செய்ய சொல்கிறது. பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி அமைக்கலாம் என தினமணி அறிவுரை கூறுகிறது. நீதிபதி படிக்கட்டில் பயணம் செய்பவர்களிடம் ரூ.100 அபராதம் விதிக்க சொல்கிறது. தொடர்ந்து அப்படி பயணம் செய்தால் பள்ளியை விட்டும் நீக்க பரிந்துரைக்கிறது. வரும் ஜனவரி 2 ஆம் நாள் இதுபற்றி அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.

இறந்த மாணவர்கள் அனைவரும் பதின்ம வயதை சேர்ந்தவர்கள். மாணவர்கள் வயதில் படிக்கட்டில் பயணம் செய்வது போன்ற செயல்களை செய்யாமல் வந்தவர்கள் மிகவும் குறைவு தான். ஆனால் பிரச்சினையை எல்லோரும் திசைதிருப்புகிறார்கள். சென்னையின் மக்கள்தொகை ஒரு கோடியை தாண்டி விட்ட நிலையில் இயக்கப்படும் பேருந்துகளோ 3637 மட்டும்தான். ஒரு பேருந்துக்கு உட்காரும் நபர்களது எண்ணிக்கை 48 மற்றும் நிற்பவர் எண்ணிக்கை 25 மட்டும் தான் அனுமதிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் குறைந்தது 150 பேராவது சென்னை பேருந்துகளில் காலை நேரங்களில் பயணிக்கிறார்கள். இதில் மாணவர்களுக்கு இலவச பாஸ் என்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அவர்களை கடைசியாகத்தான் ஏறச் சொல்கிறார்கள். டிக்கெட் போடுவதற்கும் அது சௌகரியமாக இருப்பதாக கருதுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களுக்கு படிக்கட்டு பயணம் என்பது அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.

சிலர் மாணவர்களுக்கு தனியாக பேருந்து விடலாம் என்கிறார்கள். பெரு நகர வாழ்வில் தனிப் பேருந்துகளை தவற விட நேர்ந்தால் மாணவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். தினமணி இன்னொரு ஐடியா கொடுக்கிறது. கிராமப்புற பகுதிகளில் இருப்பது போல சில சீட்டுகளை கழற்றி விட்டு நிற்க வைத்தால் அதிக நபர்களை ஏற்றலாமே என்கிறது. அரசுப் பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பற்றிய ஏளனமான பார்வையின் வெளிப்பாடு தான் அவர்களை இப்படி ஆடு, மாடு போல கருத வைக்கிறது. கிராமப்புற பகுதிகளில் இப்போதும் இடமில்லாத காரணத்தால் பேருந்தின் மேற்புற கூரையில் உட்கார்ந்து பயணிப்பதை பார்க்கலாம். உடனே இதை சாகச விருப்பம் என்று முத்திரை குத்தி பார்ப்பது சரியானதா?

கல்வி தனியார்மயமான பிறகு அருகாமைப் பள்ளிகள் என்பது இல்லாமலே போனது தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம். விபத்து நடந்த பெருங்குடி பகுதியில் சாமான்யர்கள் படிக்குமளவிற்கான ஒரு ஆரம்ப பள்ளி கூட இல்லை. ஆனால் அமெரிக்க உறைவிடப் பள்ளி இருக்கிறது. லட்சங்களில் துவங்கும் கட்டணங்களை செலுத்த வழியில்லாத செம்மஞ்சேரியின் உழைக்கும் மக்கள் தங்களது குழந்தைகள் தூரத்திலிருக்கும் நகர அரசுப் பள்ளிகளில் படிக்க அனுப்புகிறார்கள். எந்த பணமில்லாமல் மாநகராட்சி பள்ளிக்கு அம்மாணவர்கள் துரத்தப்பட்டார்களோ, அதே பணத்தை அபராதமாக படிக்கட்டில் பயணம் செய்தால் வசூலிக்க சொல்லுகிறது நீதிமன்றம். பள்ளிக் கூடத்தில் ஸ்காலர்சிப் என்று எள்ளி நகையாடும் வாய்களுக்கு, பேருந்தில் ஓசி பாஸ் என்ற வசனமும் இயல்பாக வருகிறது. அது பதின்ம வயது குருத்துகளை ஃபுட் போர்டுக்கு தள்ளி பின்னால் வரும் லாரியின் சக்கரத்திற்குள்ளும் தள்ளுகிறது.

இறந்த மாணவர்களில் ஒருவன் விஜயன் (17). சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறான். கடந்த காலாண்டுத் தேர்வில் 1200 க்கு 1144 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அவனை பள்ளி மாநில அளவில் தேர்வு பெறுவான் என கணக்கிட்டு இருந்தது. இந்த மாதிரி மாணவனிடம் சாகச உணர்வு இருந்திருக்கும் என்ற கூற்றை இன்னுமா உங்களால் நம்ப முடிகிறது? 2004 வரை சாந்தோமிற்கு அருகில் கடற்கரை மீனவ குப்பத்தில் வசித்த விஜயனின் பெற்றோரை சுனாமிக்கு பிறகு செம்மஞ்சேரிக்கு இடம்பெயர வைத்தது அரசு. நடந்து போகும் தூரத்தில் இருந்த பள்ளிக்கு பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளான விஜயன் மட்டும் விபத்தில் இறக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன் அடையாறு பகுதியில் சாலையை கடக்க முயன்ற அவனது தந்தையும் இப்படி ஒரு விபத்தில் தான் பலியானார். இப்போது அந்த குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. இரு பெண் குழந்தைகளுடன் விஜயனது தாய் காலத்தை ஓட்டியாக வேண்டும்.

செயற்கையான ந‌கர்மயமாதலை ஊதிப் பெருக்கும் தனியார்மயம் செம்மஞ்சேரி போன்ற நவீன சேரிகளை உருவாக்கவும் தவறவில்லை. பள்ளி, மருத்துவம், மின்சாரம், குடி நீர் என எதுவுமே அங்கு சரிவர கிடைப்பதில்லை. அருகிலுள்ள கண்ணகி நகர் போன்ற பகுதிகளை சமூக விரோதிகளது கூடாரம் என்பது போன்ற செய்திகளை கிசுகிசு வாக பரப்புவதை இப்போது செய்யத் துவங்கி உள்ளார்கள். விஜயன் போன்ற மாணவர்களை இழந்த பிறகும் அருகாமைப் பள்ளிகளைப் பற்றிப் பேசத் தவறினால் தனியார்மயம் நமது சந்ததியை உடனடியாக சுடுகாட்டில் சேர்ப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

 1. தனியார்மயக் கல்வி கொள்ளை பற்றியோ அரசுப்பள்ளிகளின் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டுமான வசதி பற்றியோ வாய்திறந்தோ அல்லது தானாக முன்வந்து வழக்கெடுக்கவோ வக்கற்ற ௨யர்நீதிமன்றம் மானவர்களுக்கு ௨பதேசிப்பதை விட்டு எத்தனை வழக்கு போட்டாலும் நீதிமன்றங்களும் சட்டமும் என் கால் செருப்புதாண்டா எனும் அகிலாண்டவல்லி அம்மாவுக்கு அட்வைஸ் பண்ணலாமே!!

 2. the issue is lack of sufficient number of buses during peak hours. not only students but many other adults too are FORCED to travel on foot boards in jam packed buses. Govt run MTC is corrupt, mismanaged and inefficient. can never meet the rising demand. unless private sector is allowed to compete in this, there is no solution sight. Pls see my arguments at :

  http://www.tamilpaper.net/?p=4130
  “அரசாங்கம் விலகிக் கொள்ளட்டும்”

  also the counter post by a transport union comrade (Chitraguthan, who writer here) (where i have argued in the comments area) is :

  http://www.tamilpaper.net/?p=7204
  பேருந்துகளும் விபத்துகளும் : தனியார்மயம்தான் தீர்வா?

 3. சில பேருக்கு/சில சமயம் கொழுப்பு, சில பேருக்கு/சில சமயம் நிர்பந்தம்.

 4. Good post Athiyaman sir. You are one of the few(!) liberal writers in Tamil. The problem with Socialists is that they don’t offer any solution rather waste their time grumbling over the fortune of others. It is high time that they realize that free market ideology is nothing but common sense. They perceive liberals and successful entrepreneurs as blood-thirsty parasites who cheat on destitute to earn a living. They need to understand that we liberals are also keen on improving the society and emancipating the poor, but in a practically working methodology (privatization/capitalism).

  • need an example of ///blood-thirsty parasites who cheat on destitute to earn a living//
   read the below article

   பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!
   https://www.vinavu.com/2012/08/14/pharma-nazi/

   I think you will call the above article an exceptional case(or rarest among rare cases)

   Mr adhiyaman we already called you for giving arguments in the above article

   ///அதியமான் கூட கொஞ்சம் சமூக அக்கறையோடு வினவில் விவாதிக்க வரலாம்/////

 5. அனைத்து பொது மக்களாலும் பொதுவாக அறிந்து கொள்ள முடிந்த
  குறைவான எண்ணிக்கை பேருந்துகள், நிர்வாகக்குறைவு,ஒரே சமயத்தில் ஆரம்பிக்கும் பள்ளிகள்,கட்டாயத்தின் பேரில் பயணம் செய்யும் மாணவர்கள்(ஒரு சில பேர்களை தவிர)
  நீதிக்கு தெரியாமல் போனது வேடிக்கைதான்.

 6. புதிய சட்டம் போடுவதர்க்கு பதிலாக பேருந்துக்கு கதவு போடலாம்…

 7. PALLIKALIN VELAI NERATHAI MATRIAMMAIKA VENDUM ALLATHU THODAR PERUNTHUGAL VIDUVATHARKU MUYARCHI SEIYA VENDUM ATHAI VITTU VITTU MANAVAR METHU MATTUMEI KUTRAM SUMMATHUVATHU THAPIKKUM VALIYAGA MATTUMEI ULLATHU , PAYANULLA KARUTTHUKALI PATHIVU SEIYAVEI OOTAKAM ATHAI VITTU VITTU MANAVARKAL METHU ELAM PESUVATHU KAIYALAKKATHA THANTHAI MATTUMEI VELLIPADUTHUKIRATHU..

 8. மக்கள் தொகைபெறுக்கம் காரணமாக,பேருந்துகளின் என்னிகையை உயர்த்த போகிறோம் என்ற போக்குவரத்து கழகத்தின் திட்டம் நிரைவேருமா,பள்ளி,கல்லுரி நேரங்களிள் கூடுதல் பேருந்து இயக்கப்படும் என கூரியுள்ளது,,,மேலும் சில கல்லுரி மற்றும் பள்ளி மாணவர்கள் படியில் பயனம் செய்ய விரும்புகின்றனர்,,,,விபத்து நடந்து சில நாட்கள் ஆன பிறகும் எந்த மாற்றமும் இல்லை,,, நீதிமன்ற உத்தறவின் பிறகும்,,,,மறைந்து போகும் இவையும் விவாதங்களில் இடம் பெற்று வழக்கம் போல,,,

 9. அருகாமை என்பது தவறு அருகாமை என்றால் கிடைக்காமை என்று பொருள்படும் வேண்டுமானால் அருகமைந்த பள்ளி என்றுகுறிப்பிடலாம்

  • அருகாமை பள்ளி என்று கூறுவது கிடையாது. அருகமை பள்ளி என்றே கூறவேண்டும்.

 10. அருகாமை என்பது தவறு அருகாமை என்றால் கிடைக்காமை என்று பொருள்படும் வேண்டுமானால் அருகமைந்த பள்ளி என்றுகுறிப்பிடலாம் படிக்கட்டுப்பயணம் ஒருசிலரின் கொழுப்பும் அதிகம் இருக்கிறது உள்ளே போகச்சொன்னால் சரி சரி உன் வேலையைப்பார்த்துக் கொண்டுபோ என எகத்தாளம் வேறு உட்புறத்தில் இடம் இருந்த போதிலும் கூட உள்ளே செல்வதில்லை. உள்ளே போகச்சொன்ன நடத்துநருக்கும் அடி உதை …….

 11. முதலில், போதுமான பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். முடியுமா? சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை இயற்றுவது ரொம்ப எளிது, ஆனால் அதை கடைபிடிப்பதென்பது எளிது அல்ல.

  கிட்டத்தட்ட சென்னையின் அனைத்து வழித்தட பேருந்துகளும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிதுங்கி வழியும் அளவுக்கு பயணிகளை ஏற்றி செல்கிறது. படிக்கட்டில் பயணிக்கும் பெரும்பாலானோர் ‘வேறுவழி’ இல்லாத காரணத்தாலும், செல்ல வேண்டிய இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டிய காரணத்தாலுமே இவ்வாறு பயணம் செய்ய வேண்டியதாகிறது. பெரும்பாலான இடங்களில் ஷேர் ஆட்டோக்கள் இயங்கினாலும், பெருகிவரும் மாநகர மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை.

  மாநகர போக்குவரத்துக் கழகத்தால் போதுமான பேருந்துகளை இயக்க முடியவில்லை என்றால், தனியார்கள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கலாமே!
  போதுமான பொது போக்குவரத்து இருந்தால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும்.

  பேருந்துகள், பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் இறங்க மற்றும் ஏற தேவையான கால அவகாசத்துடன் நிற்க வேண்டும். பெரும்பாலான பேருந்துகள் பயணிகள் இறங்க போதுமான நேரம் தருவதில்லை. இதனால் பயணிகள் படிக்கட்டு அருகே நின்றுகொண்டே பயணம் செய்ய வேண்டியதாகிறது. பேருந்துக்கு மத்தியில் இருக்கும் பயணிகள் படும் பாடு இருக்கிறதே… கேக்கவே வேண்டாம். இதில் சீக்கிரம் இறங்கசொல்லி நடத்துனரின் வசைச்சொல் வேறு.

  இதுபோன்ற பயணிகளுக்கான சட்டங்கள் அனைத்தும் குளுகுளு அறையிலும், அரசு வாகனத்திலும் பயணிக்கும் அதிகாரிகள் முடிவு செய்வது காலக்கொடுமை. ஒவ்வொரு MTC பணிமனையிலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ‘ஓபன் ஹவுஸ்’ எனப்படும் போக்குவரத்து உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நடத்தப்பட வேண்டும். இதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்கிற விதிமுறைகளை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

  பயணிக்கும் பேருந்தின் தன்மையை, பாதுகாப்பை, பயணிகளை விட வேறு யார் சிறப்பாக சொல்ல முடியும்.

  இங்கே மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் போலீஸ் அதிகாரிகள், நிறுத்தங்களில் நிற்காமல், நிறுத்தத்தை விட்டு தள்ளி நிறுத்தும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் மீது ‘ஆன் தி ஸ்பாட்’ நடவடிக்கை எடுப்பார்களா?

  நிர்வாக சீர்கேடுகளையும், மக்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனபோக்கையும், அடுத்தவர்களை குற்றம் சாட்டும் போக்கும் இந்த விபத்து தோலுரித்து காட்டிவிட்டது. சமுதாயத்தின் அனைத்து சீர்கேடுகளையும் சீர்தூக்கி பார்த்து, அதை சரிசெய்வதை விட்டுவிட்டு, அங்கங்கே பிரச்சனைகள் வரும்போது மட்டும் அதை அடைக்க பஞ்சர் போடும் வேலையை அதிகாரிகள் இனிமேலும் செய்யாமலிருக்க வேண்டுகிறேன். அதுவே எதிர்கால வாழ்கையின் பாதுகாப்புக்கு ஒரு அஸ்திவாரம்.

  உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகத்தையும் எதிர்காலத்தையும் விட்டு செல்லுங்கள். நீங்கள் அவர்களுக்காக சேர்த்து வைக்கும் பணம் எப்போது வேண்டுமானாலும் அவர்களை விட்டு கரையக்கூடும்.

 12. நிர்பந்தம்தான் காரணம், ஒன்றிரண்டு கொழுப்பு இருக்கலாம், அதை சில புரிதலின் மூலம் மாற்றிட முடியும்.

  ஆனால் நீதிமன்றம் வினவிய முறை சரியல்ல என்பது என் கருத்து

 13. இரண்டு மூன்று மாணவர் ஸ்பெஷல் வண்டி கூடவா விட முடியாது? சாப்ட்வேர்-க்கு 25 ஏசி பஸ் விடும்போது இது கூடவா அந்த குப்பத்து மாணவர்களுக்கு செய்ய முடியாது? குப்பத்தை தள்ளி வைத்து விட்டு, வேலைகாரர்கள் ஒழுங்கா வரல சம்பளம் எக்கசெக்கம் கேக்கறாங்க, பொறுக்கித்தனம் பண்றாங்கன்னு சொல்ல வேண்டியது!

 14. //இறந்த மாணவர்களில் ஒருவன் விஜயன் (17). சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறான். கடந்த காலாண்டுத் தேர்வில் 1200 க்கு 1144 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அவனை பள்ளி மாநில அளவில் தேர்வு பெறுவான் என கணக்கிட்டு இருந்தது. இந்த மாதிரி மாணவனிடம் சாகச உணர்வு இருந்திருக்கும் என்ற கூற்றை இன்னுமா உங்களால் நம்ப முடிகிறது? 2004 வரை சாந்தோமிற்கு அருகில் கடற்கரை மீனவ குப்பத்தில் வசித்த விஜயனின் பெற்றோரை சுனாமிக்கு பிறகு செம்மஞ்சேரிக்கு இடம்பெயர வைத்தது அரசு. நடந்து போகும் தூரத்தில் இருந்த பள்ளிக்கு பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளான விஜயன் மட்டும் விபத்தில் இறக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன் அடையாறு பகுதியில் சாலையை கடக்க முயன்ற அவனது தந்தையும் இப்படி ஒரு விபத்தில் தான் பலியானார். இப்போது அந்த குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. இரு பெண் குழந்தைகளுடன் விஜயனது தாய் காலத்தை ஓட்டியாக வேண்டும்.//

  இந்த மாணவன் கொழுப்பு எடுத்து படிக்கட்டில் பயணித்தான் என்றால், கொழுப்பு இல்லாத ஒரு மனிதனையும் காணமுடியாது. முட்டாள் நீதி மன்றங்கள். மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லை, பொய்யை மட்டும் பேசும் பெரும்பாலான வழக்கறிஞ்சர்களுடன் வாழ்வதனால் வந்த பயன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க