Thursday, April 15, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் சாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்!

சாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்!

-

ஆதிக்க சாதி பெருமை பேசும் உழைப்பாளி மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்…

 • ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பேருந்து முதலாளி தனது சாதி மக்களுக்கு சலுகைக் கட்டணம் பயணத்தை அனுமதிப்பாரா ?
 • ஆதிக்க சாதியை சேர்ந்த மற்றும் முதலாளிகளின் வீட்டுப் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ அதே சாதியில் உள்ள கூலி விவசாயியை, ஏழையை, தொழிலாளியை திருமணம் செய்து கொடுப்பாரா ? அல்லது தெரியாமல் காதலித்துவிட்டால் தான் சேர்த்துவைப்பாரா ?
 • ஆதிக்க சாதியை சேர்ந்த பண்ணையார் தனது சாதியை சேர்ந்த கூலி விவசாயிக்கு அதிக கூலி கொடுப்பாரா ? கொடுக்கிறாரா ?
 • தொழிற்சாலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த முதலாளி, நிர்வாக அதிகாரி போன்றோர் தனது சாதிக்கார தொழிலாளி என்பாதால் சலுகைக் காட்டுவாரா ? அதிக சம்பளம் கொடுப்பாரா ? சங்கம் கட்ட அனுமதிப்பாரா ?
 • ஆதிக்க சாதியைச் சேர்ந்த் பள்ளி, கல்லூரி முதலாளிகள் அதே சாதியில் உள்ள மாணவனுக்கு இலவசமாக கல்வி வழங்குவாரா ? குறைந்தபட்சம் அய்யோ பாவம் என்று அதிக கட்டணம் வசூலிக்காமல் கல்வி கொடுப்பாரா ?
 • ஆதிக்க சாதிக்காரர் வைத்திருக்கும் மளிகை கடையில் எங்க சாதிக்காரனுக்கு மட்டும் தான் பொருள் விற்பனை என அறிவிக்கத் தயாரா ? அதையும் சலுகை விலையில் வழங்கத் தயாரா ?
 • ஆதிக்க சாதியில் பிறந்து வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் ஆகாமல் நொந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உழைப்பாளி பெண்களுக்கு வரதட்சணை இல்லாமல் வாழ்க்கை தரவேண்டும் என்று அதே சாதி இளைஞர்களை வலியுறுத்த ஆதிக்க சாதிச்சங்கங்கள் தயாரா ?
 • நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் எங்கள் சாதிக்காரன் தயாரித்தால் மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறத் தயாரா ?
 • ஆதிக்க சாதி பெருமை பேசி திரியும் ஒருவர் பேருந்தில் ஏறும்போது தாழ்த்தப்பட்டவர் வண்டி ஓட்டுகிறார் என்றால் ஏறாமல் விட்டுவிடுவாரா ? அதிகாரி தாழ்த்தப்பட்டவர் என்றால் கூழைகும்பிடு போடாமல் இருப்பாரா ?
 • ஆதிக்க சாதிக்காரர் உபயோகிக்கும் ரூபாய் நோட்டை இதற்கு முன் தாழ்த்தபட்ட ஒருவர் கையில் இருந்து வாங்கி இருந்தால் இவர் அதை கீழே போட்டுவிடுவாரா?
 • தொழிலாளியாக ஆலைக்குள் நுழையும்போது, பேருந்தில் ஏறும்போது சாதி குறுக்கே வருகிறதா ? அங்கே சாதி பெருமையை பேச முடியாதது ஏன் ?
 • ஆதிக்க சாதிக்காரர்கள் தனது சாதிக்கு மனு இட்ட கட்டளைகளை, பழக்க வழக்கங்களை அப்படியே கடைபிடிக்க முடியுமா ? முடியவில்லை என்றால் காரணம் என்ன ?
 • ஆதிக்க சாதிக்காரர்கள் என்றால் காவிரித் தண்ணீர் உடனடியாகவோ, மின்சாரம் தடையில்லாமலோ கிடைத்து விடுகிறதா?
 • அன்றாடம் ஆயிரம் வேலைகளில் வர்க்கமாக ஒன்றுபட்டு நிற்கின்ற உழைப்பாளிகளை சாதியாக பிளப்பதால் ஆதாயமடைவது முதலாளிகள்தான் என்பது தெரியவில்லையா ? ஆதிக்க சாதியில் பிறந்து அரும்பாடுபடும் தொழிலாளி தனது உரிமையை கேட்க சங்கம் கட்டுவதை தடுக்கும் முதலாளிகளின் வீடுகளை ஆட்களை திரட்டி இடிப்பதற்கு ரோஷம் வராததன் மர்ம்ம் என்ன ?
 • சாதி வெறியை தூண்டிவிட்டு துப்பாக்கி சூடு, சிறைவாசம், வழக்குகளுக்கு ஆளாகிய உங்களின் நிலையும் , இதனால் ஆதாயம் அடைந்து சொத்து சேர்த்துள்ள தலைவர்களின் யோக்கியதையும் தெரியுமா ?

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அமலாக்கப்படும் நாட்டை காலனியாக்கும் கொள்கைகாளால் அன்றாடம் பல்வேறு பாதிப்புகளை, கொடுமைகளை அனுபவிக்கும் உழைக்கும் மக்களை பிளக்கும் சாதி பெருமை நம் வாழ்வை பாதுகாக்காது. மாறாக உழைப்பாளிகளை பிளவுபடுத்தி, முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிப்பதையும், சுரண்டி கொழுப்பதையும், உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து முறியடிப்போம் ! உழைப்பாளிகள் அனைவரும் சம்ம் என்ற ஜனநாயக உணர்வுகொள்வோம் ! புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறுவோம்!

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தமிழ்நாடு-புதுச்சேரி

 1. இதுல சட்டையடி கேள்விகள் எங்கே இருக்கு? இந்தமாதிரி சீரியசான தலைப்புக்கு காமெடியான கட்டுரையா? 😉

  • பதிலளிக்க முடியாது என்பதால்தான் இது சாட்டையடி கேள்விகள். இதில் காமடியை கண்டுபிடித்த உங்களது நகைச்சுவை உணர்வு திடுக்கிட வைக்கிறது.

 2. சாட்டையடி கேள்விகள் என்றில்லாமல் செருப்படி கேள்விகள் என்றிருந்தால் ௨ங்களால் காமடியை கண்டுபிடித்திருக்க முடியாது மேதமைதாங்கிய இமலாதித்தன் அவர்களே!!!

 3. சாதிக்க வெறி… சாதிக்க வெறி …… என்று நீங்கள் தான் மூச்சுக்கு 300 தடவை பேசுரீங்க. உயர் சாதீகரன் அவன் பாட்டுக்கு போய்கிட்டு இருக்கான் .உங்கள மாதிரி அவனும் கூட்டம் கூட்டி போராடுனனா நாடு குட்டி செவுர போய்டும் .போங்க போங்க .இந்த மாதிரி வெட்டி ஜாப் பாக்காம உழைச்சு நாட்டை எல்லாரும் சேர்ந்து முன்னேற்ற வழிய பாருங்க .

 4. நான் உங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன் தம்பி நீங்கள் ஒரு தாழ்ந்த குலத்தை சேர்ந்தவராக இருக்கிறீர்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. உங்கள் சமுதாயத்தை பற்றிமட்டும் பேசுங்கள். வேற சமுதாயத்தை பற்றி பேசகூடாது. இல்லை என்றால் உங்களின் அனைத்து பகுதிகளும் கூடிய விரைவில் மூடவேண்டிவரும்.இது எச்சரிக்கை என்று எடுத்துகொள்ளாமல் நேரடியாக சொல்வதுபோல் எடுத்துகொள். இந்த பதிப்பு உன்னுடைய அலுவலகம் இருக்கும் பகுதிக்கு செயலாளராக இருக்கும் க.தனசேகரன் இளைஞர் அணியின் அமைப்பினர் எழுதிகொள்வது.

  • நல்ல கேள்விகள்.
   உழைக்கும் மக்களுக்கு முன்னேற்ற தடையாக இருப்பது, அவர்கள் நம்புகின்ற சாதியே தான்.
   காலங்காலமாக உழைப்பாளிகள் ஏய்க்க படுவதும் இந்த சாதியினால் தான்.

  • ஐயா, நீங்கள் யார், எந்த கூட்டத்திற்கு இளைஞர் அணி செயலாளர், எங்கள் அலுவலகத்தை எப்போது மூடப்போகீறீர்கள், உங்கள் பெயர், முகவரி என்ன?,தெளிவாக சொல்லுங்கள்!

 5. ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பேருந்து முதலாளி தனது சாதி மக்களுக்கு சலுகைக் கட்டணம் பயணத்தை அனுமதிப்பாரா ?
  ஏன் தலித் முதலாளிகள் அவனுங்க சாதிக்கு சலுகைக் கட்டணத்துல அல்லது இலவசமா கூட்டிட்டு போராங்களா….. சும்மா ஏதாவது பேத்தாதயா… கீழ் சாதிக்கு எதுக்கு மேல் சாதிக்காரன் கூட கூட்டு சேர துடிக்கரான்? அவன் உண்டு..அவனுங்க சாதி உண்டுன்னு போவாமே எதுக்கு மறுபடி மறுபடி சாதிக்காரன் காலை நக்கணும்? இதுல போராட்டம்.. சாட்டையடி கேள்வி.. அது..இதுன்னு தமாசு வேற… இப்படி இருக்கும் போதே இவ்வளவு கேள்வின்னா… இன்னும் இவனுங்களுக்கு எடம் குடுத்தா…. ஊரு உருப்புட்ட மாதிரித்தான்…..

 6. நீயே கேள்வி கேட்டு…நீயே சொல்லிக்கோ… பதில் சொல்ல முடியாத கேள்வின்னு…. அடுத்த மாசம் தர்மபுரியில ஒரு மீட்டிங் இருக்குது…. தைரியமும்… முதுகெலும்பும் இருந்தா அங்க வந்து கேளுப்பா இந்த கேள்விய எல்லாம்.. சும்மா சேமத்தியா கிடைக்கும் பதில்…

  • ஏம்ப்பா காமெடி பீசு. ஒரே ஒரு கேள்விக்கு நியாயமா பதில் சொல்லேன் பாப்போம்.
   //இன்னும் இவனுங்களுக்கு எடம் குடுத்தா…/// உங்க ஆட்டத்துக்கு முடிவு கட்டப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 7. சாதி ரீதியாக எதையும் முடிவு செய்யாதீர் என்கிறீர்கள்
  ரொம்ப சரி… ஆனால் வர்க்க ரீதியாக ஒரு முடிவுக்கு வரலாமா…?
  சில மாதங்களுக்கு முன் வந்த வழக்கு எண் திரைப்படம் ஒரு ஏழையை
  நேர்மையாளனாகவும் வீண் பழி சுமத்தப்படுபவனாகவும் காட்டியதை உமது தளம்
  மனம் திறந்து பாராட்டி உச்சிமுகர்ந்தது… ஆனால் நடை முறை உண்மைகள் வேறு மாதிரியல்லவா
  இருக்கிறது.. உதாரணம் நாடே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி மிருகத்தனமாக கற்பழிப்பு சம்பவத்தில்
  முக்கிய குற்றவாளி மிருக மிகு ராம்சிங் ஒரு டிரைவர.. நம் ஊர் புழலில் பணத்திற்காக ஆசைப்பட்டு
  இன்ஸ்பெக்டர் மனைவியை படுகொலை செய்தவர்கள் சாதாரண உதிரி தொழிலாளிகள்
  ஆவர்… இப்போது எந்த சக்திவேல் பாலாஜியை விட்டு படம் எடுக்கச் சொல்வது.. அப்படி
  எடுத்தாலும் நீர் உம் தளத்தில் திட்டித் தீர்ப்பீர்கள்.. உம்ம நியாயம் நல்ல நியாயம்டா சாமி…

 8. எல்லா இடதிலும் சாதி பார்பது இல்லை குடும்பம் வேரு தொலில் வேரு இரன்டைஉம் குலப்ப வெஇன்டாம்

  • குனசேகரன் அண்ணன் சொல்லிட்டாருப்பா.அது வேறு இது வேறு அதாவது கண்ணாலம்னா குடும்பம். பெண்டாளுவதுன்னா தொழில். ரெண்டுலயும் வேலை செய்றது …சுன்றனாலதான் எல்லாருக்கும் குழப்பமாம். அதனால தெளிவா புரிஞ்சிக்கங்க கண்ணாலத்துக்கு சாதி பார்க்கனும். பெண்டாளுவதற்கு சாதி பார்க்கக்கூடாது.

   தூ……..

 9. வினவுக்கு ஒரு வேண்டுகோள்! காமெடி பீசுங்க போடுற கமெண்டெல்லாம் நீக்கிடுங்க பா, தொல்ல தாங்க முடில.

 10. vinavu,

  why cant u just go infront of some caste meeting and ask these questions. kovai sathish you go and ask these questions infront of them. see, in darmapuri problem, i can tell that problem is more with dalit side compared to vanniyars side. leave that issue. if i dont like your caste , i dont interfere in any of your problem or i dont cause any problem to your, then what the ****** problem you have. see i am telling now, i hate dalit peoples.

   • உஙளுக்கு எதுக்கு வெங்கட் கண்ணக் கட்டனும்? அவர் கண்தான் ஏற்கனவே கட்டப்பட்டிருக்கு!

  • //why cant u just go infront of some caste meeting and ask these questions.// சொன்னா மட்டும் ஒத்துக்கவா போறீங்க? இல்ல எங்க தலைய சீவிட போறீங்களா?

   //i can tell that problem is more with dalit side compared to vanniyars side.// எத வச்சு சொல்றீங்க பாஸ்?

   //see i am telling now, i hate dalit peoples.// இப்படி பேசனும்னுதான் எனக்கும் சொல்லி குடுத்தாங்க, ஆனா மனுசப்பயலுக்கு அறிவுன்னு ஒன்னு இருக்கும் தான? அதான் நான் சொந்தமா யோசிச்சும் , நல்லதா படிச்சும் மனுசன சாதியா பார்க்காம மனுசனா மட்டும் பார்க்க பழகிட்டேன்.

   //what the ****** problem you have. // இப்படி ஆறு ****** போட்டா என்ன அர்த்தம்? A&&H*** அதுவா?.

   I THOUGHT YOU WERE JUST VENTING OUT YOUR ANGER BUT IT IS OBVIOUS YOU ARE JUST A PIECE OF GARBAGE 🙂

   PS: English feels sorry for you and I feel sorry for English.

 11. every living being on this world is one and the same…. It was the ******* society which created all this ******* caste community and religion…. No ******* human being has got the right to disturb the other one in the name of caste or community of religion…. **** you people who want to create problems in this beautiful world in name of any caste or community….

 12. Vinavu, What is your intention? Keep on blaming somebody as if everyone exist in this world only to degrade dalits…

  Please write at least one article which will IMPROVE your community is some way or other.. Like giving them directions, help for education etc..

  Keep on writing something which will yield No result is equal to NOT WRITING

 13. சாதி என்றாலும் மதம் என்றாலும் அதன் பொருள் “வெறி” அதனால் கேள்விக்கு பதில் கிடைக்காது.

 14. வினவுக்கு இப்ப என்னதான் வேண்டும். ஆதிக்க சாதி எல்லாம் உடனடியாக சொத்துகளை ஒப்படைத்து விட்டு பரதேசி ஆகவேண்டுமா. சட்ட புர்வமாக அணுகவேண்டிய பிரச்சினையை ஊதி பெருசாக்கும் வேலையை வினவு விடவேண்டும் .

  • கேட்ட கேள்விக்கெல்லாம் மற்றொரு கேள்விதான் பதிலா?

   //நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் எங்கள் சாதிக்காரன் தயாரித்தால் மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறத் தயாரா ?//

   இந்த ஒரு கேள்விக்கு நேரிடையான பதிலைச் சொல்லுங்கள். பரதேசி ஆவறதைப் பத்தி அப்புறம் பேசலாம்.

 15. First thing is everybody should be educated to the same level with same syllabus and same quality. Then the caste will die. Until then the caste system will be a major raodblock to the progress of Tamilians. Tamilians do nto have any recognition anywhere in the world

 16. ஸ்டாலின் , வினவின் கேள்விகள் அனைத்தும் ஒரு பண்பட்ட நிலையில் இல்லை, கூடவே குருட்டுத்தனமாகவே இருந்தது. அதனால் தான் அதை காமெடி பதிவு என்று மறுமொழிந்திருந்தேன்.

  @ bala

  சொந்த கருத்துகளை தைரியமாக வெளிப்படையாக சொல்ல தெரியாத உங்களை மாதிரியான ஜால்ராக்கள் ஒதுங்கி நிக்கலாம்.

 17. ஆதிக்கசாதி என்று ஒன்றுமில்லை இப்போது!ராஜாஜியின் காங்கிரசு+பெரியாரின் திராவிடகழகம் முதல் சாதீய அடிப்படையில் உருவானது தான் நம்தமிழ்நாட்டில்.இன்று திக எத்தனை கட்சிகளாக சிதறியுள்ளது?அதேபோல எத்தனை சாதிக்கட்சிகள் உருவாகியுள்ளன?அனைத்திற்க்கும் அந்தசாதியில் உள்ள முதலாளிகளா? இல்லை.தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் கூட ஒரு சாதியை மற்றொரு சாதி வீண்சண்டையிடுகிறது.ஏன்? உலகில் மற்றநாடுகளில் முதலாளி தொழிலாளி பிரிவு உண்டு ஆனால் இந்தியா அல்லது தமிழ்நாட்டில் தங்களது கேள்விகள் சரியாகத்தெரியும்.ஆனால் இவர்களின் படிப்பறிவு,பண்டையத்திலுள்ள நிலப்பிரிவு,படையெடுப்பு,பின் விருப்பமில்லா கலப்பு,இதனை என்ன?சொல்ல கம்யூனிசுடுகள் மற்ற நாட்டில் என்ன?நிலை.இங்கு என்ன?நிலை.கிருக்கனும்+கோமாளியும்…

 18. “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; … ….” —(குர்ஆன் 49:13 -ல் இறைவன் )

  “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” —திருமூலர்.

  “சாதிகள் இல்லையடி பாப்பா…
  குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்…” —பாரதியார்.

  “தீண்டாமை ஒரு பாவச்செயல்…
  தீண்டாமை ஒரு பெருங்குற்றம்…
  தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்” —தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்.

  ‘”நம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க என்னதான் தீர்வு..?”‘
  http://pinnoottavaathi.blogspot.com/2011/02/blog-post_04.html

  • //“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; … ….” —(குர்ஆன் 49:13 -ல் இறைவன் )//
   இதுல உன் காமெடி வேற. பாய் , தாவா அப்புறம் பண்ணலாம்.

 19. “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; … ….” —(குர்ஆன் 49:13 -ல் இறைவன் )

  un matha paruppai veru engavathu poi vitrukkol!

  • un matha paruppai veru engavathu poi vitrukkol!////////
   இங்க மத பருப்ப விகிரோம்னு சொல்லவே இல்லையே……

   விக்கிறதுன்னு முடிவாகிடிசினா என்னக வேணும் நாளும் விப்போம்.

   நீ வாங்கனும்னு நெனச்சா வாங்கு இல்லனா இடத்த காலி பண்ணு….

 20. ஆதிக்க சாதி என்பதற்கு பதில் “சாதி வெறி பிடித்த ” என்பதுதான் சரியாக இருக்கும்.

 21. உங்க கேள்வியிலிருந்தே தெரியல ஆதிக்க சாதிகாரனெல்லாம் சாதிய பார்த்தாலும் அதிலேயும் தகுதி பார்க்கிராங்க(அவங்க சாதிக்குல்லேயெ பேதம் பாக்கும் போது)தலித்த எப்படி சேர்ப்பான்.

 22. சாதி இல்ல சாதி இல்ல என்று சொல்ர கட்சிகாரங்க, அவங்க கட்சியில உறுப்பினராக யிருக்க சாதிவிட்டு கல்யாணம் பண்ணனும் சொல்ல தயாரா?

  சாதிவிட்டு கல்யாணம் பண்ணனும் ஆளுக்கே எம் எல் ஏ எம்பி சீட்டுனு அறிவிக்க தயாரா?

  சாதிவிட்டு கல்யாணம் பண்ணாதவங்கலை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்க தயாரா?

  எல்லா தொகுதியிலும் தலித்த எம் எல் ஏ எம்பி பதவிக்கு நிருத்த தயாரா?

  தலைவர் பதவியும் முதலமைச்சர் பதவியும் தலித்துக்கு கொடுக்க தயாரா

  இதெல்லாம் நடந்தா நீங்க கேட்கரதும் நடக்கும்

 23. சாதி இல்ல சாதி இல்ல என்று சொல்ர கட்சிகாரங்க, அவங்க கட்சியில உறுப்பினராக யிருக்க சாதிவிட்டு கல்யாணம் பண்ணனும் சொல்ல தயாரா?

  சாதிவிட்டு கல்யாணம் பண்ணனும் ஆளுக்கே எம் எல் ஏ எம்பி சீட்டுனு அறிவிக்க தயாரா?

  சாதிவிட்டு கல்யாணம் பண்ணாதவங்கலை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்க தயாரா?

  எல்லா தொகுதியிலும் தலித்த எம் எல் ஏ எம்பி பதவிக்கு நிருத்த தயாரா?

  தலைவர் பதவியும் முதலமைச்சர் பதவியும் தலித்துக்கு கொடுக்க தயாரா?

  இதெல்லாம் நடந்தா நீங்க கேட்கரதும் நடக்கும்

 24. கல்லால் அடித்து காயை பழுக்கவைக்க முடியாது! தானாக கனியுமபோதுதான் சுவை! ஒற்றுமையும் ஒழுக்கமும் பேணும் சாதிகள் விரும்பப்படுகின்றன! குறைந்த பட்சம் தன் சாதி ஏழை மக்களுக்காவது யாரும் உதவுவீர்களா? சுய மரியாதை எனும் தன்னம்பிக்கை பெற்றால் அவரவர் சாதியே உயர்ந்த சாதியாகலாம்!

 25. ஆதிக்க சாதி வெரியர்கலே இங்கு கேதக பட்ட கேல்விகலுகு பதில் அளீத்து விட்டு உங்கள் சாதி வெறீயை கட்டுங்கள் பார்கலாம்…..?????????????

 26. கோவிந்த் அன்னே…. உங்கலுக்கு இப்போ என்ன வேனும் என்னநடகுதுன்னு தெரியாமா கேள்வி காதிங்க…??????

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க