Sunday, April 11, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!

சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!

-

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு  அரசியலில் களமிறங்கிய ராமதாசு, இதுவரை தமிழகம்  கண்டிராத பச்சோந்தி என்று அம்பலப்பட்டு, சொந்த சாதியினர்  மத்தியிலேயே மதிப்பிழந்து போனதால், தனது அடுத்த  ஆயுதமாக ஆதிக்க சாதிவெறியைக் கையிலெடுத்திருக்கிறார்.  51 சாதிச் சங்கங்களைக் கூட்டி “அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை”யை உருவாக்கியிருக்கிறார். சாதி கடந்த  திருமணங்கள் அனைத்தையுமே தடுக்க வேண்டுமென்பதும்,  வன்கொடுமைச் சட்டத்தை முற்றிலுமாக முடக்க வேண்டும்  என்பதும்தான் அவர்களது கோரிக்கை.

வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பதற்கு இனி  ஒருவனுக்கும் தைரியம் வரக் கூடாது. பள்ளி, கல்லூரிக்குச்  செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித்  தெளிவாகச் சோல்லுங்கள்” என்று வெறியுடன்  பேசியிருக்கிறார் ராமதாசு. “ஆலய நுழைவுப் போராட்டம்  நடத்த வந்தார்கள். ஒரு லோடு செங்கல் எடுத்துத்  தாக்கினோம். வாலைச் சுருட்டிக் கொண்டார்கள்” என்று  ரெட்டியார் சங்கமும், “கலப்புத் திருமணம்தான் நம் முதல்  எதிரி” என்று மறுமலர்ச்சி முஸ்லிம் லீகும்  பேசியிருக்கின்றனர். இந்து மக்கள் கட்சியும் இதில் கலந்து  கொண்டு, இந்து என்பவன் எவன் என்று காட்டியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பேசியவற்றுக்காகவே இவர்களை  வன்கொடுமைச் சட்டத்தில் உள்ளே வைத்திருக்க வேண்டும்.  ஆனால் அம்மாவின் அரசை விமரிசித்தாலே அவதூறு  சட்டத்தைப் பாய்ச்சும் ஜெ அரசு, இவர்கள் யாரையும் கைது  செய்யவோ வழக்குத் தொடரவோ இல்லை. வெளிப்படையான  இந்த சாதிவெறிப் பேச்சுகளையும், வன்கொடுமைச் சட்டம்  குறித்து ராமதாசு பரப்பும் அபாண்டமான பொய்களையும்  ஓட்டுக்கட்சிகள் கண்டிக்கவும் இல்லை. தனிக்குடியிருப்பு,  தனிச்சுடுகாடு, தனிக்கிணறு, தனிக்கோயில்கள்,  தனிக்குவளைகள் ஆகியவை கிராமப்புறங்களில் அமலில்  இருப்பதும், தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஊராட்சி  மன்றப் பிரதிநிதிகளும் தலைவர்களும் அவமதிக்கப்படுவதும்  நாடறிந்த உண்மை.

இவற்றுக்கெதிரான போராட்டங்கள் நடக்கும் இடங்களில் கூட  அரசு நிர்வாகம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று  நாடகமாடுகிறதே தவிர, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்  வழக்குத் தொடர்வதில்லை. திண்ணியம் போன்ற  வழக்குகளிலேயே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் குற்றவாளிகள்  தண்டிக்கப்படுவதில்லை. தற்போது நடைபெற்றுள்ள நத்தம்  சாதிவெறியாட்டத்திலும், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.  நாடு முழுவதுமே வன்கொடுமைத் தடுப்புச் சட்ட  அமலாக்கத்தின் யோக்கியதை இதுதான்.

சாதி மறுப்பு காதல் திருமணங்களாலும், வன்கொடுமை  வழக்குகளாலும் ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டிருப்பதாக  ராமதாசு சித்தரிப்பது, தனது சாதிவெறி அரசியலை  முன்னெடுத்துச் செல்வதற்கான தந்திரம். இதன் மூலம்  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்ற பிரிவு மக்களிடம்  சாதிவெறியைத் தூண்டுகிறார் ராமதாசு. மறுகாலனியாக்க  கொள்கைகளுடைய தாக்குதலின் விளைவாக மக்களின்  அன்றாட வாழ்க்கையும், தொழில்களும் வெகு வேகமாக  அழிக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றுக்கெதிராகப்  போராடாமல் மக்களைத் திசை திருப்பும் சதியே இது.  பெரியாருடைய பணியின் காரணமாக, சாதிப் பெயரைப்  போட்டுக் கொள்வதே இழிவானது என்ற  பொதுக்கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கும் தமிழகத்தை,  மிகவும் கேவலமான நிலைக்கு இழுத்துச் செல்ல  முயற்சிக்கின்ற இந்த அருவெறுக்கத்தக்க ஜந்துக்கள்  தலையெடுப்பதற்கு முன்னர் நசுக்கப்பட வேண்டும்.

_____________________________________________________

– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
____________________________________________________________

 1. //“கலப்புத் திருமணம்தான் நம் முதல் எதிரி” என்று மறுமலர்ச்சி முஸ்லிம் லீகும் பேசியிருக்கின்றனர்.//
  இசுலாமியரிடையேயும் சாதி வெறியா? சுவனப்பிரியர் பதிலுரைக்கட்டும்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. அமெரிக்காவிடம் சொல்லி ராமதாசு குழுவை உலக பயங்கரவாதிகள் அட்டவனையில் சேர்க்க செய்ய வேண்டியதுதான் மீதம் பாக்கி. இது போன்ற கையாலாகாத கபோதிங்கதான் இலங்கை தமிழர்களுக்கு கை கொடுக்க ஆசை பட்டாங்களாம்! தூ! இவனுங்களை போன்றக தமிழ்நாட்டுல சுதந்திரமா உலாத்துகிற வரைக்கும் தமிழனை அழிக்க துடித்துக் கொண்டிருக்கும் இன்னும் நிறைய ராஜபக்சேக்களுக்கு நிறைந்த எதிர்காலம் உண்டு.

 3. உலகப் பயங்கரவாதியிடம் உளளூர் சாதிப் பயங்கரவாதி பற்றி புகார் கூறுவதா?

 4. தைலாபுரம் ராமதாஸ் வீட்டில் இருக்கும் அம்பேத்கர் சிலை 2007 அன்று டிசம்பர் மாசம் நிருவபட்டுது! அந்த திருப்பு விழாருக்கு திருமாவளவன் அழைக்கப்பட்டார். அவரை மகிழ்ச்சி படுத்த அன்று ஒரு ஜோடிகளுக்கு கலப்பு திருமணம் நடத்தப்பட்டது அப்போது குச்சி கொளுத்தி வைத்தியருக்கு தெரிய வில்லையா…….இது கலப்பு திருமணம் என்று.

 5. “வன்னிய சாதிவெறி” என்கிற ‘பிராண்ட்’ வார்த்தை இந்தக் கட்டுரையில் எங்குமே இல்லாததைக் கண்டிக்கிறேன்.

  // //சொந்த சாதியினர் மத்தியிலேயே மதிப்பிழந்து போனதால்// //

  இது உண்மையாக இருக்குமானால், வினவில் இந்தக் கட்டுரையே வெளிவந்திருக்க தேவை இல்லை.

  // //மறுகாலனியாக்க கொள்கைகளுடைய தாக்குதலின் விளைவாக மக்களின் அன்றாட வாழ்க்கையும், தொழில்களும் வெகு வேகமாக அழிக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றுக்கெதிராகப் போராடாமல் மக்களைத் திசை திருப்பும் சதியே இது.// //

  அடடா… அற்புதம்… இப்படியே பேசிக்கொண்டிருங்கள். பாமர மக்களுக்கு இதையே விளக்கிக் கூறுங்கள்.

  • // “வன்னிய சாதிவெறி” என்கிற ‘பிராண்ட்’ வார்த்தை இந்தக் கட்டுரையில் எங்குமே இல்லாததைக் கண்டிக்கிறேன்.”

   நானும் கண்டிக்கிறேன்.நாலு வரிக்கு ஒரு தடவை “வன்னிய ஜாதி வெறி” மற்றும் பத்து வரிக்கு ஒரு தடவை “குச்சி கொளுத்தி ராமதாஸ்” போன்ற வார்த்தைகளை உபயோகிக்கனும்.

  • //51 சாதிச் சங்கங்களைக் கூட்டி “அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை”யை உருவாக்கியிருக்கிறார். சாதி கடந்த திருமணங்கள் அனைத்தையுமே தடுக்க வேண்டுமென்பதும், //

   வன்னிய சாதிவெறி அனைத்து ஆதிக்க சாதிவெறியாக உருவெடுத்திருப்பதையும், அதற்கு வன்னிய சாதிவெறி என்னும் ‘பிராண்டு’ தலைமை தாங்குவதையும் தங்களால் உணரமுடியவில்லையா, அருள்?

   ரொம்ப சப்பையாக பேசுகிறீர்களே!! ஆச்சரியம்தான்!

  • //// //சொந்த சாதியினர் மத்தியிலேயே மதிப்பிழந்து போனதால்// //

   இது உண்மையாக இருக்குமானால், வினவில் இந்தக் கட்டுரையே வெளிவந்திருக்க தேவை இல்லை.//

   அனைத்து சமுதாயங்களிலும் நல்ல மக்களும் சமாதான விரும்பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் நெருப்பைப் பற்ற வைக்கும் வேலைகளில் தீவிரமாக இருப்போரை தொடர்ந்து அடையாளங்காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறதுதானே?

   அருளின் பின்னூட்டங்களில் ஒருவித சுயவெறுப்பும், பயமும் தெரிகிறதே! அப்படித்தானா? 🙂

  • பாவம் அருள்! பயத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் கண்டதையும் கழிந்து கொண்டிருக்கிறார்.

   இவர்களுடைய ங்கொய்யா வின் பெருமை புழுத்து நாறிக் கொண்டிருப்பதால், இவர்களுடைய எணணம் ஈடேறாது என்று தெரிந்ததிலிருந்து அருளுக்கு நிக்காமல் போய்க் கொண்டிருக்கிறது போலும்.

   லூஸ் மோஷன நிறுத்துற மாத்திரை இருந்தா யாராவது கொடுத்து உதவுங்கள்.

 6. ##பெரியாருடைய பணியின் காரணமாக, சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதே இழிவானது என்ற பொதுக்கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கும் தமிழகத்தை, மிகவும் கேவலமான நிலைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்ற இந்த அருவெறுக்கத்தக்க ஜந்துக்கள் தலையெடுப்பதற்கு முன்னர் நசுக்கப்பட வேண்டும்.##

  காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும்.

 7. அதாவது பூர்வீக தலித் மக்களை ஏதோ தலிபான் போன்ற தீவிரவாதிகள் போல் சித்தரித்தும், இவர்கள் ஆணவத்தை(?) அடக்க புண்ணிய ஆதிக்க சக்திகளை ஒன்று கூட்டி “புதிய ஐக்கிய நல்மார்க்க ஆதிக்க சாதிகள் அமைப்பை” உருவாக்கி புனிதப்போர் செய்ய கிளம்பி இருக்கிறார் நம்மை எல்லாம் தலித் மக்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப் போகும் நவீன சுதந்திர போராட்ட வீரர் ராமதாசு.

  இந்த ராமதாசு இப்படியே போனாருன்னா, இவர் தலித்துக்களை அழிக்க துவங்கியுள்ள இந்த “புனித போர்”க்கு அமெரிக்க, ஐரோப்பா இன்னும் சொல்லப் போனால் அருகாமையில் உள்ள சிறீ லங்கா ராஜபக்சேவையே கூட துணைக்கு அழைச்சுக்குவாரு. தூ!

  ஆஹா தமிழா! என்னே உன் அறிவும் ஆற்றலும், சிந்தித்து செயல்படும் விதமும்! அண்ணா, காமராசர் மற்றும் பெரியார் போன்றோர் இதை கேவலத்தை பார்த்தார்கள் என்றால், அவமானம் தாளாமல் வந்த அதே வேகத்தில் திரும்பவும் தங்கள் கல்லறைக்கு திரும்பி ஓடி ஒளிந்து கொள்வர்.

 8. இராமதாசு போன்ற ஆதிக்கசாதி வெறியர்களை தமிழகம் பலமுறை வீழ்த்தியுள்ளது.இதனாலயே பார்பன பனியா கும்பல் தமிழகத்தில் அடங்கி கிடக்கிறது.அதனுடைய அடியாளாக சேவையை இப்போது ராமதாசு செய்ய தொடங்கியது போல் தெரிகிறது.இவர் போடும் ஆதிக்க சாதீ புகை மூட்டம் எவ்வளவுநாள்நீடிக்கும்.கல்வி அறிவு குறைவாக பெற்று இருந்த காலத்திலேயே பார்பனியத்தையே வீழ்த்திய தமிழகம் ,இன்று எண்ணிலடங்கா அறிவாளிகளும்,பகுத்தறிவாளிகளும்,உழைப்பாளிகளும் செங்கொடியின் துணையோடு அணிவகுத்து நிற்கையில் ராமதாசு போன்ற குப்பகள் போடும் புகை மூட்டம் விரையிலேயே அகற்றப்படும்.

 9. வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதை ஒரு குழு திட்டமிட்டு செய்து, காதல்நாடகங்களை நடத்தி பணம் கேட்கிறது.

  இதெல்லாம் நடக்கவே இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். வடக்கு – மேற்கு தமிழகத்தின் எந்தக் கிராமத்துக்கு வேண்டுமானாலும் சென்று விசாரித்துப் பாருங்கள். பேருந்தில் பயணிக்கும் போது பக்கத்து இருக்கை பயணியிடம் கேட்டுப்பாருங்கள். உண்மை விளங்கும்.

  • யப்பா !
   என்னா, உன் அட்டவனையில புதுச்சேரிய விட்டுட்டேய? பாவம், மறந்துட்டாயா?

   அது சரி தமிழ் நாட்டுல வழக்குல கிழக்குல உள்ள அத்தனை கிராமமும் என்னா உங்க ஊட்டு சொத்தா? எதையாவது ஊதி பெருசா ஆக்கி பினாத்தி பயமுறுத்துவன்னு முடிவு செய்துட்டியா? புச்சேரிக்கு தப்பித்தவறி போயிடாதேப்பா. அங்க நெறைய காக்கி சட்டைக்காரவங்க தலித் சமுதாயத்த சேந்தவங்க. உன்ன ரொம்ப சிறப்பா கவனிச்சுவாங்க, ஜாக்கிரத, சொல்லிப்புட்டேன்!

   காலா காலமா தலித் மக்களை அடிமைத்தனம் செய்து அவங்க முதுகுல இலவசமா சவாரி செய்து ஒதுக்கி வஞ்சித்து வாழ்வாதாரம் அடையாளம் அழித்து சிறுமை படுத்திய அவங்க இரத்தத்தை உறிந்து உடல் பெருத்த உங்களைப் போன்ற ஆதிக்க சாதின்னு ஒலகத்தை ஏமாற்றி வந்த சமுதாயத்துக்கு அந்த தலித் சமுதாயங்களும் பதிலுக்கு நெறைய திருப்பி தர ரொம்ப கடமை பட்டிருக்கிறாங்க. தவறாம அதை எல்லாம் வட்டியும் முதலுமா சேர்த்து சமத்தா திருப்பி வாங்கி கொள்ளுங்கப்பா.

   அநாவசியமா எரியிற நெருப்பில எண்ணைய ஊத்தாத அப்பு. அப்புறம் தப்பு தண்டா, கொலை, தீ வைப்பு, சூறையாடுதல், அமைதி கெடுதல் பொன்ற அசம்பாவிதம் உண்டானா நீயும் உன் ஜகதலப் பிரதாபன் ராமதாசும் அவரின் ஜால்ரா கும்பலும்தான் பொறுப்பாகுவீங்க.

   அமெரிக்காவும் ஐரோப்பாவும் உன ஜகதலப் பிரதாபனை பயங்கரவாதி லிஸ்டுல சேர்த்திடுச்சாம். கேள்விபட்டாயா?

   தமிழ்நாட்டுல சக தமிழ் சமுதாயங்களோடு சரி சமமா வாழத் தரியாத நீங்கள் எல்லாம் தமிழ் நாட்டுல வாழ தகுதியற்றவர்கள்!

 10. முதலில் ஜாதி பெயரை சொல்லி சாடுவதை நிறுத்துங்கள். பொதுவாக நீங்கள் அனைவரையும் திட்டும் பொது அனைவருக்கும் அவரவர் சார்ந்த ஜாதியை பற்றி யோசிக்க வைக்கிறது வுங்களின் கட்டுரை. நீங்கள் வன்னிய ஜாதிவெறி என்று பொதுவாக எழுதும் போதும், பொதுவாக திட்டும் போதும் அதை படிக்கும் அந்த இன மக்களுக்கு வினவின் மீது வெறுப்பே மிஞ்சும். பொருளாதார அடிப்படை வைத்துதான் இப்போது கலப்பு திருமணம் நடக்க சாத்தியம். ஒன்னும் இல்லாத வக்கதவனுக்கு பொண்ண நீங்க கட்டி கொடுபீங்கலா ? நானும் கலப்பு திருமணம் செய்தவன்தான் பெண் வீட்டில் பெரிதாக எதிப்பு இல்லை ஏனென்றால் நான் பெண் வீட்டாரை விட பல மடங்கு வசதியாய் இருக்கிறேன். இன்றுவரை நாங்கள் சந்தோசமாக இரண்டு குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்கிறோம். கலப்பு திருமணம் பேசுவதற்கு முன் நீங்கள் சொல்லும் தாழ்த்தப்பட்ட இன மக்களை படித்து முன்னேற சொல்லுங்கள். அப்பறம் கலப்பு திருமணம், அந்தஸ்து பற்றி போசுவோம். முதலில் இடஒதுக்கீடு பொருளாதாரம் அடிப்படை சார்ந்ததாக மாற்ற சொல்லுங்கள். அப்புறம் ஜாதி சான்றிதழ் எங்குமே தேவை படாத காகிதமாக மாற்ற சொல்லுங்கள். இட ஒதுக்கீட்டுக்கு ஜாதி வேணும். காதல் பண்ண நீங்க சொல்லற மாதிரி ஆதிக்க சாதி பொண்ணு வேணும். நல்ல இருக்கே வுங்க வியாக்கியானம். முதல்ல வுங்க அழுக்க கழுவுங்க அப்புறமா ராமதாசு பத்தி பேசலாம். திருமா பேச்சை ஒரு முறை கேட்டல் நீங்களே தலித் விரோத போக்கு கடை பிடிக்க வேண்டிய நிர்பந்ததுக்கு வருவீர்கள். ஒரு தலைவர் (திருமா) சொல்கிறார். 1. குடியான சாதி பொண்ணு(தலித் அல்லாத பொண்ணு) ஒருஒருத்தியும் காலனி காரன் (தலித் மக்கள்) கருவை சுமக்கனும். குடியான பொண்ண கரெக்ட் பண்ணி கூட்டிகிட்டு வந்தா 5 லச்சம் பரிசு. இதுதான் நீங்க வளக்கற சமத்துவமா ? ஒழுங்கா பொழப்ப பாக்கறவங்கள கெடுக்காம இருந்தா போதும். நாடு அமைதியா இருக்கும். பெரியார் பேர வச்சு அடுத்தவன் இந்த வீரமணி, திருமா அடிக்கற கூத்தைவிட ராமதாசு செய்யற வெளிபோக்கான பேச்சே பரவாஇல்லை. பள்ளிகூடத்துல இருந்தே புள்ளங்க காதலிக்கனும்னு வீரமணி சொல்லறாரு. ச்சீ.. நல்லா உருப்படும். ராமதாசு விசயத்துக்கு வருவோம். எனக்கு ராமதாசு மீது தனிப்பட்ட விருப்போ வெறுப்போ கிடையாது. 21 வயது நிரம்பிய பெண்ணும் 23 வயது நிரம்பிய ஆணும் காதல் திருமணம் புரியலாம். தான் பெற்ற பிள்ளைகளின் எதிர் காலம் பற்றி பெற்றோர்களுக்கு இல்லாத அக்கறை வுங்களை போன்ற ஊடகங்களுக்கு இருக்க போவது இல்லை. நீங்கள் சும்மா பரபரப்பு கூட்டுவதற்காக வேண்டுமானால் எழுதலாம். காலம் முழுவதும் அழ போவது சம்ந்தபட்டவர்களே. ராமதாசு மதுரைல சொன்ன பெரும்பாலான கருத்துக்கள் ஏற்க தக்கவையே.

  • நன்றாக எழுதி உள்ளீர்கள்! ராமதசை வசை பாடுவதை நிறுத்திவிட்டு முதலில் “வினவு” திருந்த வேண்டும். எப்போது பார்த்தாலும் பார்ப்பனனை பற்றியே திட்டித் தீர்க்கும் இவர்தான் முதலில் ஜாதியைப்பற்றி பேசாமல் இருக்கவேண்டும். இவர் போன்றவர்களால்தான் அனைத்து ஜாதியினரும் தங்களது ஜாதிக்கு என்று அமைப்பை உருவாக்கி சாதீயத்தை வளர்த்து வருகிறார்கள். ஜாதியை வளர்ப்பது முதலில் வினவுதான். ராமதாஸ் அல்ல!!!! தலித் என்றும் ஆதிக்க ஜாதி என்றும் எழுதி ஜாதி “தீ” யை அணைக்காமல் பார்த்துக்கொள்கிறது!!

  • @பாண்டியராசு
   ////ராமதாசு மதுரைல சொன்ன பெரும்பாலான கருத்துக்கள் ஏற்க தக்கவையே.////

   ராமதாசுடன் பொ‌ன்னுசா‌மி மோ‌த‌ல்- பா.ம.க.வி‌லிரு‌ந்து வெ‌ளியே‌றினா‌ர்:
   பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாசு‌ட‌ன் ஏ‌‌ற்ப‌ட்ட மோத‌ல் காரணமாக பா.ம.க. நிர்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய பெட்ரோலிய துறை இணை அமை‌ச்சருமான பொன்னுசாமி இன்று பா.ம.க.வில் இருந்து விலகியு‌ள்ளா‌ர்.

   செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், எனது கொள்கைகளையும், குணத்தையும் வெளியே வைத்து விட்டு கட்சி பணிகளில் ஈடுபட்டு 15 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்தேன்.

   சில ஆண்டுகளாக டாக்டர் ராமதாஸ் எடுத்து வரும் நிலைகள் என் கருத்துக்கு முரணாக இருந்தது. ஆனாலும் நட்பை மனதில் வைத்து தாங்கி வந்தேன். ஆனால் சமுதாய ரீதியாக எடுக்கப்பட்ட கட்சியின் சில நிலைபாடுகள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. இதை பா.ம.க. நிர்வாக குழுவிலும், அன்புமணி ராமதாசிடமும் தனியாக விளக்கி கூறி இருந்தேன்……………………………………….

   நெல்லை மாவட்டத்தில் பா.ம.க. கலைப்பா?
   ‘பா.ம.க-வை வன்னியர் சங்கம் போலவே நடத்துகிறார் ராம​தாஸ். சாதி உணர்வுடன் செயல்படும் அவர் மாற்று சமூகத்தினரைக் கொஞ்சமும் மதிப்பதே இல்லை. இனியும் அவருடன் இணைந்து செயல்படுவதில் அர்த்தம் இல்லை என்பதால், கட்சியில் இருந்து வெளியேறுகிறோம்’ – இப்படி ஓர் அறிவிப்போடு நெல்லை மேற்கு மாவட்ட பா.ம.க. கூண்டோடு கலைக்கப்பட்டு இருக்​கிறது. அடுத்ததாகக் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளையும் ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து தி.மு.க-வுக்குச் செல்லத் திட் டமிட்டு இருக்கிறார், பா.ம.க-வின் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஆறுமுகப்பெருமாள்.

   • இங்க PMK பத்தி யாரும் பேசல. ஜாதிய பத்தி பேசி இருக்கோம். யாரும் ஜாதிய மனதளவில் விட்டு கொடுக்க விரும்பாத போது அதை பத்தி பேசி புண்ணியம் இல்லை. முதல்ல மதம் / ஜாதிய பயன்படுத்தி கிடைக்கற ஆதாயத்த நிறுத்தினா எல்லாம் சரியாய் போகும். ஊடகங்கள் நினைத்தால் மட்டுமே சாதியம் அழியும். நீங்கள் ஜாதியம் எழுதலன்னா உங்க நாளிதழ் எப்படி பொழப்பு ஓட்டறது? ஜாதிய அழிக்க முதல்ல கண்ட எடத்துல உன் ஜாதி என்ன? உன் ஜாதி என்ன? அப்படின்னு கேக்கற அரசாங்க விண்ணப்பங்கள திருத்த போராடுங்க. இங்க ராமதாசு, திருமா, கிருஷ்ணசாமி இன்னும் அணைத்து சமுதாய மக்கள் தலைவர்களுமே அரசியல் பிசினஸ் பண்ணற ஆட்கள். நீங்க இப்படி எழுதறத பாக்கும் போது அவங்களுக்கு நீங்களே இலவச விளம்பரம் கொடுக்க கெளம்பின மாதிரி தெரிது. முதலில் ஜாதி பெயரை எழுதாமல் வினவு விமர்சிக்க பழகட்டும். நீங்களே ஜாதி வுணர்வு வூட்டி விட்டு ஜாதி வேணா வேணா அப்படின்னா எவன் கேக்க போறான்? வுங்களுக்கு ரேட்டிங் மட்டுமே முக்கியம் அப்படின்னு நெனச்சா கொஞ்சம் பிட்டு சேர்த்து ஓட்டுங்க. இல்லனா ஜாதி வெறி இல்லாமல் தனிப்பட்ட நபரை மட்டும் விமர்சியுங்கள்.

    • @பாண்டியராசு
     ////ராமதாசு மதுரைல சொன்ன பெரும்பாலான கருத்துக்கள் ஏற்க தக்கவையே.////

     ராமதாசின் கருத்து ஏற்கத்தக்கவையாக இருந்தால் ஏன் அவர் கட்சிக்காரங்களே வெளிய போறாங்க

 11. சாதி அல்லது மதத்தினை ஒட்டுமொத்தமாக வையும் போது பல நல்லவர்களின் வெறுப்பை பெறுவது மட்டுமே நிகழும். மாறாக தவறு செய்பவர்களையும், ஒரு மதத்திலுள்ள தவறான விடயத்தை மட்டுமே சுட்டிக்காட்டுதல் பிறப்பால் அந்தப்பிரிவு சார்ந்து இருப்பவர்களினதும் ஆதரவைப்பெற உதவும். கலப்புத்திருமணம் என்பது யாராலும் தூண்டப்பட்டு நிகழ்வது தவறு. அதே நேரம் ஒரு ஆணும் பெண்ணும் மனமுதிர்ச்சி பெற்றபின் உண்மையான நேசத்தால் மனமொத்து இணைவார்களானால், அவர்கள் எந்தச் சாதியினை அல்லது மதத்தினை சார்ந்தவர்களானாலும் அதையாரும் தடுப்பது தவறு/தண்டிக்கப்பட வெண்டும்.
  பொதுவாக சாதிப்பெருமைகள் பேசித்திரிவோர் எல்லோரும் தம்மைப்பற்றி வேறொன்றும் பெருமையாகக் கூறிக்கொள்ளும் தகுதியற்றவர்களே. இது சமூகத்தில் நாங்கள் காணும் மனிதர்களுக்கும், ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

 12. இருபது ஒன்றாம் நூற்றாண்டின் பார்பனர்கள் இந்த ஆதிக்க சாதிகள்.
  சாதி வெறியால் எப்படி முன்னேற்றத்தை இழந்தார்கள் என்று முதலை கண்ணீர் விட்டு கொண்டே இட ஒதுக்கீடு கேட்கும் கும்பல்.
  நில உரிமையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வந்து தலித்களுக்கு பகிர்ந்து தரப்பட வேண்டும்….

 13. தலித்”துகளை சகோதர சகோதரிகளாக பொது இடங்களில் ஏற்கத்தயார் என்றால்..”சகோதரனாக வரமாட்டேன்..சம்மந்தியாக மட்டுமே வருவேன்” என்று அடங்க மறுத்து,அத்துமீறும் போக்கு ”தலித்” அரசியலுக்கு மட்டுமல்ல.. தமிழ்த்தேசியத்துக்கும் எதிராகவே அமையும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க