Thursday, April 15, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் மின்வெட்டை எதிர்த்து காரைக்குடி - காளையார் கோவில் பொதுக்கூட்டம் !

மின்வெட்டை எதிர்த்து காரைக்குடி – காளையார் கோவில் பொதுக்கூட்டம் !

-

19/01/2013 அன்று காரைக்குடி, மகர் நோன்புத் திடலில்,பொதுக்கூட்ட பேனர்

 • திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு!
 • பன்னாட்டு முதலாளிகளுக்கு மின்சாரம் உள் நாட்டு மக்களுக்கு இருட்டு!
 • பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்!

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பொதுக்கூட்டம் மற்றும் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

செவ்வணக்கம்

 • பகுதித் தோழர் கல்யாணக்குமார் தலைமை தாங்கினார்.
 • பு.ஜ தொ.மு சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர் நாகராசன் உரையாற்ற,
 • அதன்பிறகு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

கலை நிகழ்ச்சி

அதைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மின்வெட்டு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, மருத்துவம், கல்வி, புதிய தண்ணீர்க்கொள்கை, போன்ற பல்வேறு விசயங்களிலும் முதலாளிகளுக்கு அடிவருடித்தனமாக நடந்து கொள்ளும் இந்திய அரசையும் ஆளும் வர்க்கத்தையும் உரைகள் அம்பலப்படுத்தின. கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி புத்துணர்வோடு இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

21/01/2013 அன்று காளையார்கோவில், தேரடிதெருவில்

 • திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு!
 • பன்னாட்டு முதலாளிகளுக்கு மின்சாரம் உள் நாட்டு மக்களுக்கு இருட்டு!
 • பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்!

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

காளையார் கோவில் ஆர்ப்பாட்டம்

 • பகுதித் தோழர் சரவணன் தலைமையேற்க,
 • பு.ஜ தொ.மு சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர் நாகராசன் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டின் பின்னால் உள்ள சதிகளை அம்பலப்படுத்திப் பேசினார்.
 • மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் குருசாமி மயில்வாகனன் மருது பாண்டியர்களின் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நினைவு கூர்ந்து, மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக மீண்டும் அதேபோல் போராடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
 • அதன் பிறகு சிறப்புரையாற்றிய புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாலளர் வழக்குரைஞர் தோழர் இராமலிங்கம் செயற்கையாகத் திணிக்கப்படும் மின்வெட்டையையும், மின்வாரியத்தைக் கடனாளியக்கிய ஜெயா, கருணாநிதியையும், முதலாளிகளின் லாபவேட்டைக்காக மக்களை நசுக்கும் ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

கூடியிருந்த மக்கள் கைதட்டி உரைகளை வரவேற்றனர்.

செய்தி : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

 1. மறுமொழிகள் குறித்து வினவின் கேவலமான கொள்கை:

  வினவு ஊரில் உள்ள அனைவரையும் விமர்சிக்கும், ஆனால் வினவின் உண்மையான இழினிலையை விமர்சித்து வரும் விமர்சனங்களை சத்தமில்லாமல் அழித்துவிடும்(பதியமறுத்துவிடும்)

  • சரியாக சொன்னிர்கள் நண்பரே. வினவுக்கு தைரியம் இருந்தால் மற்ற சில இணையதளம் போல வடிகட்டாமல் விட வேண்டும். வினவு பெரும்பாலும் சாதகமான கருத்துக்களை பிரசுரிக்கும். மற்றவற்றை மறைத்து விடும். அப்படியே கருத்து பிரதிபளிக்கனும்னு நெனச்சா இருக்கரவேலைய விட்டுபுட்டு வினவுல வேலைக்கு சேர்ந்தாதான் முடியும்.

   • உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சின? பொதுக்கூட்டத்தக் கேட்டீங்களா? மொதல்ல அதப்பத்தி சொல்லுங்க!சும்மா ஏன் ஏப்பம் விட்றீங்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க