Sunday, April 18, 2021
முகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் காதல் : கொலையாளிகளும் கலையாளிகளும் !

காதல் : கொலையாளிகளும் கலையாளிகளும் !

-

கமல்ஹாசன்
இனியாவது காதல் இளவரசன் பட்டத்தை வெட்கத்துடன் துறப்பாரா?

தாழ்த்தப்பட்டோரின் ஊரையும் கொளுத்திவிட்டு, உடைமைகளையும் பறித்துவிட்டு, சந்தடி சாக்கில் வந்தவரை ஆதாயம் என வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும், அதன் பல்லைப் பிடுங்க வேண்டும் என ஆதிக்கசாதி வெறியர்கள் அய்ந்து நட்சத்திர விடுதியில் ரூம் போட்டு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாகாரர்களையே விஞ்சும் வகையில் ‘நாடகக் காதல்’ எனப் புது ட்ரீட்மென்ட்டோடு பாமக ராமதாஸ் போன்றோர் பிலிம் காட்டவும் இறங்கிவிட்டார்கள். “டேய்! எவனாவது சாதி மாறி காதலிச்சா வெட்டுங்கடா!” என காடுவெட்டியும், கந்துவட்டியும் உருட்டுக் கட்டையோடு உலா வருகையில், “ஒரு பொண்ணும் நீயும் லவ் பண்ணா… அவள கடத்தி தருவேன், உனக்கே மண முடிப்பேன்..” என்று ‘போடா!போடியில்!’ ஸ்டெப்பு போட்ட எந்த சிம்புவும் சந்து பக்கம் கூட காணோம்! மொத்த கோடம்பாக்கத்து கும்பலுக்கும் இது பொருந்தும்.

காதலுக்கு விதவிதமாக ‘சீன்’ சொன்னவர்கள், பார்த்து காதல், பார்க்காமலே காதல் என்று காதலிலே கரைகண்டவர்கள், காதலுக்கு மெட்டு போட்டே கட்டை தேய்ந்த விற்பன்னர்கள், காதலுக்கென்றே பிறந்து வளர்ந்ததுபோல காட்டிக் கொள்ளும் கவிஞர்கள், இப்படி ஊரை உசுப்பேத்தியே காதலை வைத்து கல்லா கட்டியவர்கள் எல்லாம், ஒரு காதல் திருமணத்தை சாக்கு வைத்து வன்னிய சாதிவெறியோடு செட்டு போடாமலேயே சேரியை கொளுத்தும்போது, எட்டிப்பார்க்கவும் இல்லை, எதிர்த்துப் பேசவுமில்லை என்றால் இந்த கோடம்பாக்கத்து காரியவாதிகளை ஆதிக்க சாதிவெறிக்கு அடிக்கொள்ளிகள் என்று ஏன் சொல்லக்கூடாது? காதலுக்கு கண்ணில்லாமல் போகலாம், ஆனால் சாதி, வர்க்கம், மதம், ஆணாதிக்கம் எல்லாம் இருக்கிறது, எதார்த்தத்தில் இவைகளைக் கடந்து இரு தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ள விரும்பும்போது, தடுக்கும் ஆதிக்க வெறியர்களை தட்டிக் கேட்டு, சமுதாயத்தை நாகரிகப்படுத்துவதுதான் சமூக அக்கறையுள்ளவர்களின் வேலை.

காதல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வெட்டுங்கடா! என்ற கும்பலும், காதல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிங்கடா! படத்தை ஹவுஸ்புல்லா ஓட்டுங்கடா! என்ற கும்பலும் சமூக அக்கறைக்கும், நாகரிகத்துக்கும் சம்பந்தமில்லாதவர்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தருமபுரி தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள்.

இவ்வளவு காலம் ‘காதலை’ வைத்து வயிறு வளர்த்தோமே என்ற கூச்சநாச்சம் கொஞ்சமாவது இருந்தால், காதல் பிரச்சனையை சாக்குவைத்து ஆதிக்க சாதிவெறியை கிளப்பி வெறியாடும் அயோக்கியர்களுக்கு எதிராக ஒரு கண்டனம், இல்லை ஒரு ‘கனிவான’ அறிக்கை கூட வெளியிடாமல், எந்த ஜோடியாவது சாகட்டும், நாம் அடுத்த காதல் ‘சிச்சுவேசனை’ ‘டெவலப்’ பண்ணி காசை பார்ப்போம் என்று தன்பாட்டுக்கு காதலை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த கும்பல்தான், காதலை வைத்து காசு பறிப்பவர்களே ஒழிய தலித் காதலர்கள் அல்ல, என்ற உண்மையை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். எது எதுக்கோ ‘விஸ்வரூபம்’ எடுக்கும் காதல் ‘இளவரசன்’ பழைய பட்டத்துக்கு ஏற்ற மாதிரி பாய்ந்து புரள வேண்டாம், ‘கலைஞானி’ அளவுக்காவது கத்தக்கூடாதா? உள்ளூரில் ஒன்று நடக்கும்போது வாயைத்திறக்காத இவர் குறைந்த பட்சம் காதல் இளவரசன் பட்டத்தையாவது வெட்கத்துடன் துறப்பாரா? கன்னட இனவெறியன் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்த, சூப்பர்ஸ்டார் காதலர்களை வாழ வைக்க காடுவெட்டிக்கு ஒரு ‘வாய்ஸாவது’ கொடுக்கக்கூடாதா? நத்தம் காலனி பற்றி எரியும்போது வாயைத் திறக்காமல், சத்தம் போட்டு ‘தீ..தீ..’ என்று காதலியோடு பாட்டுப்பாடி ‘டூப்பு’

போட்டால் போதுமா? படிக்கப் போகும் பெண்ணை விரட்டி, விரட்டி காதலித்து “எங்கள எல்லாம் பாத்தா புடிக்காது! பார்க்க பார்க்கத்தான் புடிக்கும்!” என்று விடலைகளை உசுப்பேத்தும் தனுஷ், அல்டிமேட், ஆக்சன் கிங், இளையதளபதி, சின்னதளபதி, காதல், திருமணம் அனைத்தையுமே விஜய் டி.விக்கு வியாபாரமாக்கிய சினேகா-பிரசன்னா இப்படி காதலை பல பரிமாணத்தில் தமிழகத்துக்கு கலக்கி கொடுத்த பெரிய பட்டியலே.. நாட்டில் காதலை முன்வைத்து ஒரு அநியாயம் நடக்கும்போது வாயை மூடிக்கொள்வது, நமக்கேன் வம்பு! என்ற பிழைப்புவாத கண்ணோட்டம் மட்டும் காரணமல்ல, திரைத்துறைக்குள்ளும் தினவெடுத்து திரியும் சொந்தசாதி அரிப்பும்தான்!

மனிதனிடமுள்ள எல்ல நற்குணங்களையும் காதல்தான் வெளிக்கொண்டு வரும்! ஆதலினால் காதல் செய்யுங்கள்! என்று மூன்று மணிநேரம் நம்மை தியேட்டரில் வைத்து வகுப்பெடுத்த இந்த ‘படைப்பாளி’ கும்பல், சாதிவெறி, காதலர்களை படுத்தும்போது உங்கள் நல்ல குணம் எந்த டிஸ்கஸனில் ‘புல்’ ஆகி இருந்தது? நாட்டில் எது நடந்தாலும் அதை வேடிக்கை பார்த்து, அதிலும் வியாபாரத்திற்கு ஒரு ‘ஒன்லைன்’ கிடைக்குமா? என்பதுதான் கோடம்பாக்கத்தின் ஒரிஜினல் கேரக்டர். சினிமாவில் பதினெட்டுபட்டியைக் கூட்டி மரத்தடியில் ‘கலப்புத் திருமணத்திற்கு’ ஆதரவு கொடுத்து ‘இதுதாண்டா இந்த நாட்டாமையோட தீர்ப்பு!” என்று சொடக்கு போடும் சரத்குமாரும், காமெடி ட்ராக்கில் கலக்கும் ’தேவர்’ கருணாஸூம் பச்சையான சாதிவெறி ரகமென்றால், மத்த பார்ட்டிகள் அவர்களுக்கே உரிய இயக்குநர் இமயம், இயக்குநர் சிகரம் என்று தனி ஆங்கிளில் சாதி பார்ப்பவர்கள்தான்.

‘என் இனிய தமிழ் மக்களே’ என்று நம்மை சினிமா டிக்கெட் வாங்க கூப்பிடும் கிராமத்து பாரதிராஜா… காதலர்களுக்காக காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் எதிராக பேசாதது ஏன்? ‘சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!’ நாடு முழுக்க ‘வீராசாமிகள்’ கேட்கிறார்கள்! பதில் சொல்லுங்கள்! தமிழர் தாய்நிலத்தை பறித்த சிங்கள வெறியர்களையும், சிங்களச்சிகளையும் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென மேடை போட்டு கொட்டி முழக்கும் செந்தமிழன் சீமான்… வன்னிய சாதிவெறிக்கு தீக்கிரையான நாய்க்கன் கொட்டாய் சேரிகளுக்காக, வன்னிய ராசபக்சே ராமதாசை ஜாடையாகக் கூட கண்டிக்காத மர்மமென்ன? ஒருவேளை உங்கள் தமிழ்த்தேசத்தில் சேரிகள் சேர்த்தியில்லையோ?

வார்த்தைக்கு வார்த்தை “நான் தமிழன். தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சொல்லுகின்ற சினிமா தமிழ்நாட்டில் இல்லை!, நான் விவசாயி. தானே புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளின் அவலத்தை ஆவணப்படமாக எடுத்து போராடுகிறேன்!” என்று வழக்காடிய தங்கர்பச்சான் இந்நேரம் சொந்த சாதி ஆதிக்க வெறிக்கு எதிராக உடுக்கெடுத்து “பாவிகளா! சேரிகளை கொளுத்தி சாதிக்கு படையல் போடும் உங்கள் சங்கை மிதிப்பேன்!” என்று ஆடியிருக்க வேண்டாமா? சக மனிதனை வாழவிடாத வன்னிய சாதிவெறியின் கேவலத்தை முதலில் உங்கள் பாட்டாளி சொந்தங்களுக்கு படம்பிடித்துக் காட்டுங்கள்! ஒட்டுமொத்த தமிழர்களுக்கான உலகத்தரத்தை பிறகு பார்க்கலாம்! இவர்கள் மட்டுமல்ல, கோடம்பாக்கத்துக்குள்ளேயே குட்டி அக்ரஹாரங்களும், மேலத்தெருவும், கீழத்தெருவும், காலனிகளும் ‘மெயின்டெய்ன்’ ஆகும்போது, இவர்களின் சமூக உணர்வு சாதியெல்லை தாண்டாதது ஆச்சரியமில்லை. சொந்த காலையே கழுவாத இந்த சுரணையற்றதுகள்தான் சமூகத்தை குளிப்பாட்டி கலையாக்கப் போகிறார்களாம்!

பாரதிராஜா
காதலர்களுக்காக காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் எதிராக பாரதிராஜா பேசாதது ஏன்?

இதில் கவிஞர்கள் தனிரகம். வட்டார வழக்கில் அசத்துவதாக சொல்லி “ஏடி.. கள்ளச்சி.. தெரியலயா” என்று காதல் பாட்டில் ‘கள்ளப்பாட்டு’ எழுதும், சமூகப் பேரவை என்ற பெயரில் சாதிக் குழுக்குறி கொண்டாடும் கவிப்பேரரசு, ‘தமிழுக்குச் சோறு போட்டு’ சாதிக்கு குழம்பு ஊத்தும் பேர்வழி. எல்லா சாதிக்கும் காதலை கவுச்சியாகப் பாட்டெழுதினாலும், தன் வாயை மட்டும் ‘அவா’ பாஷையை கழுவாமல் வைத்திருக்கும் வாலி, சசிகலா நடராசனும் சாதிக்கூட்டணியில் கோதிக்கொண்டு “உன்னக் கொன்னா கூட தப்பேயில்ல’ என்று காதலாய் கசிந்துருகும் சினேகன், காதலை வார்த்தைகளில் வாழவைக்கும் ‘கவிப்பேரலை’ நா. முத்துக்குமார், வித்தகக்கவி விஜய், இன்னும் பல வெங்காயக் கவியெல்லாம், “சாதிமாறி காதலித்தால் வெட்டுவோம்” என்று சவால்விடும் போதும்! வடநாட்டு டான்சருக்கு குத்துப் பாட்டெழுத தெம்பிருக்கும் இந்தக் கவிராயர்களால், வன்னிய சாதிவெறி காடுவெட்டி குருவுக்கு ஒரு குத்துமதிப்பு அளவுக்காவது கண்டனம் தெரிவிக்க சாதியக் கட்டுமானம் இடம் கொடுக்கவில்லை போலும்.

இப்படி சினிமா கலைஞர்கள் மட்டுமல்ல, சினிமாவுக்கு துண்டு போட்டு நோட்டம் பார்க்கும் இலக்கியக் கும்பல்களுக்குள்ளும் ஆதிக்க சாதிவெறிக்கெதிரான ‘ஆளுமை’ பீறிடவில்லை. “வெட்கத்தைக் கேட்டால்.. என்ன தருவாய்” என்று குமுதத்தில் காதலுக்காகவே சீழ் வடிந்த தபூ சங்கரால், இராமதாசிடம் போய் காதலைக் கேட்டால் என்ன தருவாய் என்று கேட்க நேரமில்லை போலும். காதலுக்காகவே நேரம் ஒதுக்கி சிந்தித்த இந்தக் கழிசடைகள் கிடக்கட்டும். பின்தொடரும் நிழலில் கம்யூனிச அபாயத்தை எச்சரிக்கும் ‘தரமான’ படைப்பாளி, காடுவெட்டிக் குருவைப் பின்தொடர்ந்து போய் எச்சரிக்கத் தயாரா? இதுதவிர தமிழ்ப்படைப்பாளிகள் எழுத்தாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு சமூக உணர்வைக் கொப்பளிக்கும் பிரபஞ்சன் வகையறாக்கள் வரை ராமதாசுக்கு எதிராக பொருள் பொதிந்த ஒரு கொட்டாவியைக் கூட விடக் காணோம்! இவர்கள் மட்டுமல்ல, காதலை கலை இலக்கியம் என பல வடிவங்களில் கடை விரித்த எந்தக் கும்பலும் காதலர்களை வழிமறிக்கும் சாதிவெறிக்கு எதிராக தெருப்பக்கம் காணோம். காதலர்கள் மேல் சாதிவெறி தீ வைக்கும்போது களத்தில் வந்து போராடாமல், எதையும் ‘வித்தியாசமாக’ வேடிக்கை பார்க்கும் இந்த வியாபாரிகள்தான் கலை வளர்க்கும் விற்பன்னர்களாம்! என்ன ‘இவற்றினைப்’ பார்க்கவே பயங்கரமாயில்லை!

_____________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013

_____________________________________________________________________________________________________________

 1. ஸ்கூல் படிக்கும் போதே காதலிக்க சொன்னான்,நாடு விட்டு நாடு போய் காதலிக்க சொன்னான்,பாக்காமலேயே காதலிக்க சொன்னான்,ஏன் நிச்சயம் ஆன பொண்ணை கூட காதலிக்க சொன்னான்…ரைட்டுதான் எவன் எஸ்சி பையனையோ பொண்ணையோ காதலிக்க சொன்னான்.வாய்ப்பே இல்லை ப்ரொட்யுசர் என்ன வெண்ணையா? அதெல்லாம் உசாரா இருப்போம் இல்ல ஆனா என்ன இந்த சின்ன புள்ளைவோ தான் பாவம் டீஷர்ட் ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் இதெல்லாம் பாத்து மயங்கிடுதுவோ.அதுக்கு தானே ஒன்நா சேந்துருக்கோம்.பாத்துக்குறோம்.

 2. புரட்சிக்காரர்களே
  சமூக சண்டை ஆரம்பிக்க சங்கு ஊதியவர்களே
  கருத்து கனத்ததால் அதை இளைக்க வைக்க கட்டுரை எழுதியவர்களே
  ஒரு தேநீருக்காக முச்சு இளைக்க இளைக்க பேசியவர்களே
  ஆதிக்க சாதியில் பிறந்தும் ஆமைப் போல் அமைதியாய் புரட்சி செய்யும் அன்பர்களே
  இந்த கட்டுரையை படித்த பின்பாவது

  ஒரு சேரிப்பெண்னுக்கு வாழ்க்கை கொடுங்கள்

  • Cheri Ponnukko or paiyanukku Inga yarum valkai kudunnu onnum thongikittu illa, nor are they salivating to marry any caste animals, what the author and writer say here is to learn to live like human beings, and treat fellow humans with dignity instead of behaving like the vanniyar, thevar caste virulent pathogens of Tamil Nadu. Caste is a pathology without any treatment yet, but one day all the dalits take up arms in their hands and give the right punishments to the casteists perhaps that day they will realize that oh wait….we better stop the caste shit right here……….we can no longer play around with peoples lives and sabotage others property, live and rights in the name of caste hegemony, that is the message here. Don’t think that there are dalits salivating to marry any caste thugs, and the mentally retarted and sick ramadoss/kaduvetti like morons are going around and causing social unrest and damages to our state of Tamil Nadu, when will you all wake up and say enough is enough and stop this caste veriyan once and for all….put him in life time jail..or better yet hang them for various anti dalit criminal activities, burning houses, villages, rapes, murders and so on..

   • There are many perverted poor people who try to get rich by using this method of amking girls fall in their love trap and u have to accept that.

    The problem comes when the family of the girl try to do soemthing against the guy,then VCF of SC/ST lawyers or officials try to do panchayat betwene them.

    why dont these guys talk through somebody else?

    If Dalits feel they are innocent and undeserving of social taboo,then they should also act against these guys who abuse provisions given for dalits like vankodumai act.

  • தியாகு அவர்களே இவ்வளவு நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள், ஏதாவது ஒரு முன்னேற்றமோ முதிர்ச்சியோ வேண்டாமா? இங்கே சேரி பெண்ணுக்கு வாழ்கை தரச்சொல்லி யார் உங்களிடம் பிச்சை கேட்டார்கள்? காதலால் கசிந்து, காதலை மையப்படுத்தி காதலால் மட்டுமே வாழும் காதல் பட நிபுணர்கள் என் வாயை மூடிகொண்டார்கள் என்று ஒரு கேள்வி தான் எழுப்பப்பட்டிருக்கிறது.

 3. நீங்கள் குறிப்பிடும் இத்தனை பேரில் ஒருவரும் இது குறித்து பேசவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஜாதி வெறி தவிர பயமும், “நமக்கேன் வம்பு” என்பதும் காரணமாக இருக்கலாம். காவிரி, முல்லைப்பெரியார், இலங்கை ஆகிய பிரச்சினைகளில் பேசினால் யாரும் தொல்லை தரமாட்டார்கள். ஆனால் இந்த விவகாரம் பற்றி பேசினால் பாமக அடியாட்கள் தொல்லை தருவர். அந்த பயம் காரணமாக இருக்கலாம். உங்களுக்கு பிடிக்காத பாரதி மொழியில் சொன்னால் “நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி” இருக்கிறார்கள்.

  • well said Venkat. There was a collection in our Church for Dalit brothers affected in violence. I gave 300. Next week I was shocked to hear that the total collection is 450. Our Church has 200+ families. Appalled by how much caste feeling is there inside the Church 🙁

 4. சினிமா என்ற தொழில் செய்யும் பிழைப்புவாத முதலாளிகளிடம் அவர்களை சார்ந்த கூலிகளிடமும் இராமதாஸ் – காடுவெட்டி குரு போன்றவர்களை பற்றி கருத்து கூற வேண்டிய அவசியமில்லையே. தமிழகத்தை பொறுத்தவரையிலும் 20% க்கும் கீழுள்ள தலித்களை நம்பி, 80% மேலுள்ள ஆதிக்க சாதிகளையும், அவர்களது அமைப்புகளையும் எதிர்த்து பகையை சம்பாரித்து கொள்ள வேண்டாமே என எண்ணிருக்கலாம். மக்களிடம் காட்சு கொடுத்து ஓட்டை வாங்கிற முக்கிய அரசியல்வாதிகளே அமைதியா இருக்கிறப்போ, மக்களிடம் காசை வாங்கி பிழைப்பை நடத்தும் சினிமாக்காரங்க எப்படி ஆர்பறிக்க முடியும்?

 5. மக்களிடம் காட்சு கொடுத்து ஓட்டை வாங்கிற முக்கிய அரசியல்வாதிகளே அமைதியா இருக்கிறப்போ, மக்களிடம் காசை வாங்கி பிழைப்பை நடத்தும் சினிமாக்காரங்க எப்படி ஆர்பறிக்க முடியும்?

 6. நீங்கள், நடிகர்கள் சமுதாயப் பிரச்சனை எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கவேண்டும் என்கிறீர்கள். அது அவர்கள் வேலை இல்லை என்பது உங்களுக்குப் புரியவில்லை. உங்களைப்போல் சாதாரன மக்களும் நினைத்து ஓட்டுப் போட்டதால்தான் நடிப்பைத் தவிர வேறெதுவும் தெரியாததெல்லாம் ஆட்சியில் இருக்கிறது.
  நீங்கள் ஊழலுக்கு எதிராக பேசும் முற்போக்குக் குரலாக காட்டிக் கொள்கிறீர்கள். ஆனால், அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராடியபோது, ஏதேதோ காரணம் காட்டி ‘வாய்ஸ்’ கொடுக்கவில்லை! ஆனால், நடிகர்கள் சமுதாயப் பிரச்சனை எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கவேண்டும் என்கிறீர்கள். இந்த முரண்பாடு கூட உங்களுக்குப் புரியாதது ஆச்சர்யம்தான்.

 7. “தம்பி நீ மேல் சாதி பெண்ணை காதலி”,”பெண்ணே நீ கீழ்சாதி பையனை காதலி”..இது தான உங்கள் சாதி எதிர்ப்பு வழிமுறை.”நாம் சமுகத்தில் மிகவும் பின் தங்கி உள்ளோம்,நம் நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்,நல்ல கல்வி அறிவு பெறுவோம்,நமது சமுகத்தை முன்னேற்றுவோம்” என இளைஞர்களை அறிவுறுத்தி வழி நடத்தாமல் காதலிக்க சொல்லுவது மிகவும் தவறான செயல் அல்லவா வினவு ..மேல்சாதி அடக்குமுறைகளை அவர்கள் முன்னேறுவற்கான வெறியாக மாற்ற முயலாமல், இவ்வாறு சின்ன செயல்களில் சிந்தனை படுத்துவது சரியல்ல..

  அதுபோல காதல் விசயத்தில் கலையாளிகளிடமான உங்கள் எதிர்பார்ப்பு மிகவும் தவறானது…நெல் மணிகளை விளைவித்த நம் சகோதரன் தற்கொலை செய்ததை எண்ணி நாம் என்றாவது பட்டினி கிடந்தது உண்டா,உணவு உண்கையில் இதை நினைத்து பாதியில் எழுந்தது உண்டா..ஒரு வேலை உணவை கூட துறக்காத நாம், மற்றவர்களை துறக்க சொல்வது எப்படி சரியாகும்.. காதல் படம் எடுத்தவன் அவனென்றால், பணம் கொடுத்து கை தட்டி,விசில் அடித்து ,அது போல அடுத்த படம் எடுக்க துண்டியது நாம் அல்லவா..காசுக்காக கூத்தாடுபவனை,கருத்து சொல்ல சொன்னால்,என்ன சொல்வான்..அடுத்த படத்தை பார் தம்பி,அருமையான செய்தி ஒன்று நாட்டிற்கு உண்டு என்பான்.

 8. சமுதாயத்திலுள்ள பலதுறைகளில் கடைந்தெடுத்த கடைமட்ட கழிசடை துறைதான் சினிமாத்துறை .இங்கே பொய்,பித்தலாட்டம் ஏமாற்று ,விபச்சாரம் என்று அயோக்கியதனங்களின் அத்தனை சொற்களுக்கும் நேர்முக சாட்சிகளை பார்க்கலாம் .காசு சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் ,எப்படி வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டார்கள் .சென்சார் எதையெல்லாம் அனுமதிக்குமோ அத்தனையும் செய்ய துணிவார்கள்.சென்சார்போர்டு முழு நிர்வாணத்தையும் அனுமதிக்குமானால் எவ்வித வெட்கமும் இல்லாமல் நிர்வானமாக் காட்சி தர எந்த நடிகரும் நடிகையும் மறுக்கமாட்டார்கள் சமுதாயத்தில் குற்றங்களை கற்று கொடுப்பவர்களே இவர்கள்தான் .குற்றங்களை ,தப்பு தண்டவாளங்களை ,பாவங்களை எப்படி செய்ய வேண்டும், எங்ஙனம் திறம்பட செய்ய வேண்டும்?எங்ஙனம் எளிதாக செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இளைஞர்களுக்கு கற்றுகொடுத்து சமுதாயத்தை சீரழிப்பதில் முன்னோடிதான் சினிமா .

  • இப்ரா, ஒரு 60 வயது கிழவன் 6 வயது பிஞ்சுக் குழந்தையை திருமணம் செய்வது போலக் காட்டினால், எந்த நாட்டு சென்சார் போர்டும் அனுமதி வழங்காது. அப்படிப் பட்ட கேடு கெட்ட அயோக்கியத் தனத்தை செய்தவனை கடவுளாக நினைக்கும் நீங்கள், சினிமாவின் அயோக்கியத்தனத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது!

 9. கொளுத்தியதை எழுதும் நீங்கள் ஏன் அவர்கள் கொளுத்தினார்கள் என்பதை தொடர்ந்து எழுத மறப்பதேன்?
  தவறு செய்வதற்கு தாழ்த்தப்பட்டவன் என்பது என்ன உங்களுக்கு வழங்க பட்ட கேடயமா?
  உண்மை என்னவாக இருந்தாலும் பரவாஇல்லை, தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனைபேரும் உங்கள் கால்களை கழுவி குடித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றால் அது என்ன நியாயம்?
  எந்த பிரச்னை ஆனாலும் நாங்கள் நடுநிலைமையோடும், நேர்மையுடனும் துணிச்சலுடனும் அணுகுவோம் என்று சொல்வது வெறும் வேற்று உதார்தானா?
  ஒருதலை சார்பாகவே நீங்கள் தொடர்ந்து நிற்பதின் மர்மம் என்ன?
  எங்களை பொறுத்தவரை நீங்கள் நோயை பரப்பும் ஒரு நச்சு கிருமி, அதை ஒழித்தே ஆகவேண்டும்.

 10. சினிமா என்பது ஒரு வியாபாரம். அந்த பபின்னணியில் இதை பார்க்க வேண்டும். சினிமாவில் இவர்களுடய முகமுடிகளை பார்த்து நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட எதிர்பார்ப்பு,
  நமக்கு ஏமாற்றத்தையே தரும். அவர்களும் தான் அணிந்த அந்த முகமூடியை நிஜவாழ்வில் கழற்றாமல் இருப்பதால் இந்த சவுக்கடி.

  இதனால், எந்த சமுகப்ரச்சனை என்றாலும் நமக்கு இவர்களிடம் ஒரு முட்டாள்தனமான எதிர்பார்ப்பு. இந்த பின்னணயில் தான் தகுதியற்றவர்கள் எல்லாம் உயர்ந்த பதவியில் அமர்த்தி இருக்கிறோம்.

  நிஜ வாழ்வில் இவர்கள் ஒரு சாதாரண மனிதர்கள். இது எல்லாவிதமான கலைகளுக்கும் பொருந்தும்.

 11. காதல் தெயவீகம் என்பதோ, சாதியை அல்லது தோலின் நிறத்தைகொண்டு காதலிப்பதோ மிருகத்தனம்தான்! ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சட்டப்படி மண்ந்து வாழ எந்த தடையும் இருக்க கூடாது! இதில் பெண்பாலரே அதிகம் பாதிபடைகின்றனர்! காதலிக்கும் போது ஆனும், திருமணத்திற்குபின் பெண்ணும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்! காதலிக்கும்போது ஆஙகில கனவான் போல செயல்படும் ஆண், கல்யாணத்திற்கு பின் சராசரி இந்திய கணவனாகிறான்! பாதிக்கபடும் உதவிக்கு கூட யாரையும் நாட முடியாது! பொருளாதாரத்தில் சுய சார்புடைய பெண்கள் மட்டுமே காதலில் வெற்றியடைய முடியும்! காதலித்து வெற்றியடைவது அவ்வளவு ஈசி அல்ல!

 12. கன்னட இனவெறியன் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்த, சூப்பர்ஸ்டார் காதலர்களை வாழ வைக்க காடுவெட்டிக்கு ஒரு ‘வாய்ஸாவது’ கொடுக்கக்கூடாதா?

  hehehehe andha aalum(rajkumar) sethuthaaru andha nayyayum(errapan) sori naya suttu konna madhiri suttu pottachu appuram edhuku heai illama indha comparision summa edho eludhanumgradhukaga edhayavadhu eludah endiyadhu

  • ஐயா, பின்னூட்டங்களை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதுங்கள். தமிங்கிலிஷில் எழுதும் பின்னூட்டங்களை படித்து வெளியிடுவது சிரமம் என்பதால் வெளியிடுவதில்லை. நன்றி

 13. சாதி யாருக்குமெ பிடிக்கவில்லயாம். அப்பொ அரசாங்கதுக்கு மனு போடுரது தானெ. சாதி மூலம் வேலை வேன்டாம்.எதுவும் வேனாம்ம்னு

 14. வியாபாரி வாடிக்கையாளரை பகைச்சிக்கனும் என்று சொன்னா நல்லவா இருக்கு? ஆசைக்கு ஒரு அளவு வேணாம்? போகாத ஊருக்கு வழி கேட்பதை விட்டு விட்டு நல்ல வீதி நாடகங்களை உங்கள் தோழர்கள் தெருவெங்கும் நடத்தட்டும். அப்போதும் கவனமாக சாதீயத்தை சாடுங்கள். மறந்த வாக்கில் சாதியை சாடி காரியத்தை கெடுத்துவிடாதீர்கள். வர வர உங்கள போக்கு கண்ணை கட்டுது சாமியோவ்.

 15. today only i read these articles….. i don’t think, people thinks cinema that much serious….and not following cinema… everyone thinks practically except this writer of article…..few immaturity people might supported these so called love films and they go on take it……
  vinavu should accept one fact…… if you feel , only with love marriages the caste will be nil…. it is not going to happen.
  so called upper caste guy marrying so called lower caste gal are very less compared to vice versa…. which means so called lower caste men themselves ignore their girls……..
  please don’t come and say we should not see caste at all….. what i want to say is first we have self respect….. improve this by your lifestyle/career etc and that is what it is good for all the so called lower caste people…….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க