privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !

தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !

-

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமூக சேவை கல்லூரி
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமூக சேவை கல்லூரி

ந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதாகக் கூறி ஒரு தலித் பேராசிரியரை, விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த ரவுடிகள் அடித்து துவைத்திருக்கின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தூலே என்ற நகரின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமூக சேவை கல்லூரியில் பேராசிரியராக பணி புரிகிறார் பிரமோத் சுக்தேவ் பூம்பே. பேராசிரியர் பூம்பே இந்தியாவில் சமூக சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி பாடம் எடுக்கும் போது இராமாயணத்தைப் பற்றி சொன்ன கருத்துக்கள் தொடர்பாக சில மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்திருந்தனர்.

“இந்தியாவில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய விரிவுரை நடத்தும் போது இராமாயணத்தைப் பற்றி நான் சொன்ன சில கருத்துக்களுக்கு சில மாணவர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். நான் இந்தியாவில் சாதி அமைப்பின் வரலாற்றைத்தான் விவரித்தேனே ஒழிய யாரையும் பழிக்கவில்லை என்றாலும் பிரச்சனையை தீர்த்து வைக்க நான் மன்னிப்பு கேட்டேன்” என்கிறார் பேராசிரியர் பூம்பே.

இருந்தும் அந்த பகுதியில் செயல்படும் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் இயக்கங்களைச் சேர்ந்த மதவெறியர்கள் ‘பேராசிரியரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி வந்தன. கல்லூரி நிர்வாகம், பேராசிரியர் பூம்பேவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதோடு, உள்ளூர் ராமர் கோவிலில் பூஜை நடத்தி மத வெறியர்களை சமாதானப்படுத்த முயன்றது.

புதன் கிழமை (ஜனவரி 30, 2013) அன்று, இந்து அமைப்புகளைச் சேர்ந்த கும்பல் ஒன்று கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர் பூம்பேவை தேடியிருக்கிறது. அவர்கள் முதல் மாடியில் இருக்கும் நூலகத்துக்குள் புகுந்து அங்கு படித்துக் கொண்டிருந்த பேராசிரியர் பூம்பேவை அடித்து, மாடிப்படிகளில் தள்ளி விட்டிருக்கிறார்கள்.

‘அந்த கும்பலுக்கு தலைமை தாங்கி வந்தவர்கள் வட மகாராஷ்டிரா பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள்’ என்கிறார் டாக்டர் அம்பேத்கர் சமூக சேவை கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ரகுநாத் சீத்தாராம் மகாஜன்.

“இந்த சம்பவம் தொடர்பாக ரோஹித் சந்த்வாடே, கைலாஷ் மாடி, யோகேஷ் முகந்தே, ஹேமந்த் பட்டில், மனோஜ் ஜாதவ், உமேஷ் பீலா பட்டீல் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகளை சேர்ந்தவர்கள்” என்று தூலே தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீ ராம் சோம்வன்ஷி தெரிவிக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தூலே நகரம் மும்பையிலிருந்து இந்தூர் போகும் சாலையில் குஜராத் மாநில எல்லைக்கு அருகில் இருக்கிறது. தூலேயில் வசிக்கும் சுமார் 4 லட்சம் மக்களில் 63 சதவீதம் பேர் இந்துக்கள், சுமார் 25 சதவீதம் பேர் முஸ்லீம்கள்.

கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஒரு தெருவோர உணவு விடுதியில் சாப்பாட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு போலீசின் நடவடிக்கையால் முசுலீம் எதிர்ப்பு மதக் கலவரமாக உருவெடுத்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

தூலே கலவரம்“காவல் துறையினர் இரக்கமற்ற, ஒரு சார்பான தாக்குதலை சிறுபான்மை சமூகத்தினரின் மீது நடத்தினர்” என்கிறார் இது தொடர்பாக தூலேயில் 2 நாட்கள் விசாரணை நடத்திய உண்மை அறியும் குழுவில் இடம் பெற்ற மனித உரிமைகள் ஆர்வலர் ராம் புனியானி. உண்மை அறியும் குழுவின் அறிக்கைப்படி, ஒரு சிறிய சச்சரவை காவல் துறை பெரிதாக வளர விட்டது.

“தாமதமாக தலையிட்ட போலீஸ் படையினர் முஸ்லீம்களை குறி வைத்து தாக்கினர்” என்கிறார் உண்மை அறியும் குழுவின் இன்னொரு உறுப்பினர் டாக்டர் அபூர்வானந்த்.

“போலீஸ் அமைப்பு மொத்தமாக பாசிச மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது” என்கிறார் குழு உறுப்பினர் திரைப்பட இயக்குனர் மகேஷ் பட்.

“துப்பாக்கி சூட்டுக்குச் பலியானவர்களின் மீதான 90 சதவீதம் துப்பாக்கி காயங்கள் இடுப்புக்கு மேல் இருந்தன. போலீஸ் கூட்டத்தை கலைக்கும் நோக்கத்தோடு இல்லாமல், குறி வைத்து கொல்லும் நோக்கத்தில் சுட்டிருக்கின்றது” என்கிறார் டாக்டர் புனியானி.

‘காவல் துறையினருக்கு ஏற்பட்டதாக சொல்லப்படும் காயங்கள் லேசானவைதான்’ என்றும் உண்மை அறியும் குழு சுட்டிக் காட்டியது. “பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையிடம் புகார் அளிப்பதற்குக் கூட பயப்படுகின்றனர். அப்படி யாராவது புகார் அளிக்கப் போனால், ‘அவர்கள் மீது ஏற்கனவே வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், அவர்களது புகாரை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்’ சொல்லி என்று போலீஸ் அனுப்பி விடுகிறது” என்றார் டாக்டர் அபூர்வானந்த்.

“பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் பொது மருத்துவமனைக்குப் போக மறுக்கின்றனர். 2008ம் ஆண்டு மதக் கலவரங்களின் போது மருத்துவமனைக்குப் போன சிறுபான்மை சமூகத்தினரை சில ரவுடிகள் அடித்து விரட்டியிருக்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்தார். “தூலேயில் நடந்த சம்பவங்கள் நமது சமூகத்தை பிரதிபலிக்கின்றன. சீரியசாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கா விட்டால் நாடு மோசமான போராட்டங்களை சந்திக்க நேரிடும்” என்கிறார் அவர்.

இந்த கலவரத்தின் போது போலீஸ் சீருடை அணிந்த நபர்கள் கடைகளை உடைத்து கொள்ளை அடிப்பதையும், வீடுகளையும், இரு சக்கர வண்டிகளையும் அடித்து உடைப்பதையும் காட்டும் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காவல் துறை சீருடை அணிந்தவர்கள் நடைபாதைக் கடைகளை உடைப்பதையும், இரு சக்கர வண்டிகளை அடித்து நொறுக்குவதையுக் காட்டும் வீடியோக்கள்:

மேலும் படிக்க
பேராசிரியர் தாக்கப்பட்டது குறித்து

 

தூலே கலவரங்கள் குறித்து