Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !

அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !

-

அப்சல் குரு
அப்சல் குரு

2001 – பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி அப்சல் குரு இன்று காலை (9.2.2013) 8 மணிக்கு புதுதில்லி திகார் சிறையில் தூக்கிலடப்பட்டார். இந்தப் படுகொலை நடந்த உடன் இதை பெருமையாக உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே காவி பயங்கரவாதிகள் மனம் குளிருமாறு தெரிவித்திருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் அப்சல் குருவின் மீதான வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தால் 2004-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. அப்சல் குரு மீதான கருணை மனுவினை சில நாட்கள் முன்புதான் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதனையடுத்து காசாப்பை இரகசியமாக தூக்கிலட்டது போல அப்சல்குருவையும் இரகசியமாக தூக்கிலிட்டு கொன்றிருக்கின்றனர். குற்றமிழைத்த கசாப்பை தூக்கிலிட்ட போதே குற்றமிழைக்காத அப்சல் குருவையும் தூக்கிலிட வேண்டும் என்று இந்துத்தவ வெறியர்கள் வற்புறுத்தினர்.

அப்சல் குருவின் குடும்பம் வடக்கு காஷ்மீரில் வாழ்கிறது. கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பதை குருவின் மனைவிக்கு தெரிவித்திருக்கிறார்கள். அப்சல் குருவின் உடலைக் கூட அவரது உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சிறையிலேயே புதைக்கப்படுவார் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்சல் குருவை கொன்றிருப்பதால் காஷ்மீர் மாநிலம் மீண்டும் தீப்பற்றி எரியும். இதை எதிர்பார்த்து அங்கே ஊடரங்கு சட்டத்தை பிறப்பித்திருக்கிறார்கள்.

அப்சல் குரு ஒரு அப்பாவி என்பதை அருந்ததி ராய் முதல் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வரை ஆதாரப் பூர்வமாக நிரூபித்திருக்கின்றனர். கீழே தொடர்புடைய இடுகைகளை வாசகர்கள் அவசியம் படியுங்கள். அதில் அப்சல் குரு தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதமும் இருக்கிறது. அதில் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளில் எல்லாம் தனது பெயர் வேண்டுமென்றே சேர்க்கப்படுவதை அவர் கண்டிக்கிறார். முக்கியமாக அந்த குண்டு வெடிப்புகளை வெளிப்படையாக கண்டிக்கிறார்.

மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடித்தது. காங்கிரசு அரசு இன்று அதை நிறைவேற்றியிருக்கிறது.

இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டிருப்பதால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும்.  அப்சல் குருவை இரகசியமாக தூக்கிலட்ட இந்திய அரசுக்கு காஷ்மீர் மக்கள் தக்க  பதிலளிப்பார்கள்.

அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் இந்த அநீதியை கண்டிக்க வேண்டுமென கோருகிறோம்.

 1. I am shocked that VINAVU is backing afsal,who is a terrorist,had killed number of INDIANS.Please dont support this kind of activists.I strongly beleive that there is no religion for TERRORISM.

  • அப்சல் குரு நிரபராதி என்பதை தெரிந்து கொள்ள இந்தக்கட்டுரையின் தொடர்புடைய இடுகைகளை படியுங்கள், பின் முடிவு செய்யுங்கள் யார் பயங்கரவாதி என்று!

   • ஏன்ன கொடுமை இது …./**தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக**/ தேசத்தின் மனசட்ஷி என்பது …பெரும்பன்மை மனசாத்ஷி தனோ…எனக்கு தெரிந்த வகையில் பெரும்பன்மை மனசட்ஷியும் இதில் திருப்தி அடையது…
    இன்னும் தொடரமல் இருக்க மனசட்ஷி உல்லவர்கலிடம் …அன்புடன் கெட்டுகொல்கிரென் ….இதை தவிர வெரு என்ன சொல்ல ….னான்ரிகல் பல வினவு …

 2. அமெரிக்க சியோனிச முட்டாள்தனமான ஆதாரமே இல்லாமல் யாரோ செய்ததற்கு யாரோ ஒருவரை பலிகடா ஆக்கி ,பெருன்பான்மை மக்கள் விரூப்பபடி(என்று அவர்கள் மட்டும் சொல்லிகொள்கிறார்கள் ) காவிகளுக்கு தீனியை போட்டுள்ளது காங்கிரஸ் கதர் காவி அரசு . அநீதி …..

 3. We condemn this punishment for Afsal Guru.

  Lot of events ..

  Modi is eating lunch with europeans yesterday and being praised by the media.
  modi say abt afsal guru : better late than never !

  Rajapaksa easily comes to India, he is granted a state welcome by Chittor collector.

  there is legal evidence to prove modi and Rajpaksa are war criminals.. but ….

  Govt has no proof that afsal has invloved in terror act…but…

  *****

  Kill thousands and become CM(Modi) PM(Rajapakse) and President(Obama)
  Be innocent and get killed as afsal.
  be a mediator and get arrested as (Dandapany mohanty)

  Incredible India !
  Incredible World !

  Long live democracy !

  Long live democracy.

 4. //பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும்,
  அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில்
  ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக
  அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட
  உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.//

  அய்யா

  கொடுமை

  உணர்தியதற்க்கு நன்றி

 5. Kishore Kswamy நீ ஒரு குற்றவாளி … உன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் பட வில்லை , அவ்வாறு நிரூபிக்கப் படவில்லை என்பதனால் , உன்னுடன் கைது செய்யப் பட்ட மற்றவர்கள் அனைவரையும் விடுவிக்கின்றேன் … எனினும் உன்னை விட முடியாது …. ஏன் என்றால் , யாராவது ஒருவர் தண்டிக்கப் பட வேண்டும் ….. சம்பவம் நடந்தது என்பதனால் , தண்டனையும் யாரவது பெற்றாக வேண்டுமே …. எனவே உன்னை தூக்கில் போட வேண்டும் , அது தான் பெருவாரியான மக்களின் மனசாட்சியின் எதிர்பார்ப்பு , சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதை விடுத்து , பெருவாரியான மக்களின் மனசாட்சியின் காவலனாக நீதிமன்றம் எப்படி உருவாக முடியும் என்று கேள்வி கேட்காதே …. நான் தான் இறுதித் தீர்ப்பை சொல்லக் கூடியவன் …. நீ சாகலாம்

  தர்ம தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதோ நீதி தன்னை ஊமையாக்கி தலை குனிய வைப்பதோ ….. என்று பாட்டை கேட்டு , வேலையைப் பார்ப்போம்

 6. அப்சல் குரு ஒரு அப்பாவி என்பதை அருந்ததி ராய் முதல் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வரை ஆதாரப் பூர்வமாக நிரூபித்திருக்கின்றனர்.//// இவர்கள் எல்லாருமே அரசு என்ற அமைப்பு என்ன சொன்னாலும் எதிர்க்கணும் என்ற எதிர்ப்பரசியல் மட்டுமே நடத்துபவர்கள்.வேறென்ன செய்வார்கள்.மரண தண்டனையே ஒழிக்கவேண்டும் என்பது என் நிலைப்பாடு. அதற்காக அப்சல் குரு நிரபராதி என்று ஜல்லியடிக்கவிரும்பவில்லை. மரணதண்டனை எதற்குமே தேவையில்லை. கடுமையான குற்றத்துக்கு தனிமைச்சிறையே தண்டனைதான்…இது அரசின் கொடூரம்தான்.

  ஆனால் இப்போதைய நிலவரம் -அது அப்துல் கசாப் மாதிரி ஆட்கள் வேறு நாட்டிலிருந்து வந்து பொதுமக்கள் சூழும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தும்போது – என்ன செய்ய? பஜனையோ,இல்லை தொழுகையோ நடத்தி அவர்களை நல்வழிப்படுத்தவா செய்யமுடியும்? இதே தண்டனை குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட இந்து தீவிரவாதிகளுக்கும் கிடைக்கவேண்டும்.பாராளுமன்றதாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் எல்லாம் அப்பாவிகள் இல்லையா?

  • கொல்லப்பட்டவர்கள் அப்பாவி என்பதால் அப்சல் குருவுக்கு தூக்கு தர வேண்டுமா ?.. அல்லது பகுத்தறிவு கொண்டோர் முன் வைக்கும் காரண அடிப்படைகளின் கீழ் இந்திய உளவுத் துறைக்கும் அன்றைய உள்துறை அமைச்சன் அத்வானிக்கும் தூக்கு கொடுக்க வேண்டுமா ?.

   அப்சல் குருவின் மீது சாட்சியின்றி குற்றம் சாட்டி தண்டனை கொடுக்க முடியும் என்றால், உளவுத்துறையின் மீதும் அதே குற்றத்தை சாட்டி தண்டனை அறிவிக்க போதுமான அடிப்படை இருக்கிறது.

 7. “மிக அதிகப்படியான உயிரழப்புகளை உருவாக்கிய, அரசு இயந்திரத்தையே முடக்கிய, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த, இந்த நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதின் மூலமே ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சி திருப்திபடுத்தப்படும்… இந்தியாவின் ஒற்றுமைக்கும், இணக்கத்துக்கும், இறையாண்மைக்கும் சவால் விடும் இது போன்ற தீவிரவாத சதி செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குமரண தண்டனை விதிக்கபடுவதன் மூலமே ஈடு செய்ய முடியும்”

  • Nanbha PaNdiyarasu where are U Now, gujarath courtrawali A1 yaar, Narendhira modiya?
   How many Afzal Gurs died in the Godhra train Fire where had you gone,are BELONGS TO HINDU RSS OR hINDU VERIYAN, India having over domocray in unjustice that you know please turned to wright direction what is wright & sraight.CONSIDER DEEPLY !!!!!!! COMMONLY HUMAN BEING ARE SIX KIND OF KNOWLEDGE……………………….suriyan

 8. “கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் ” என சில சமயம் முடிவு எடுத்தாக வேண்டிய காலம் இது. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். இது போன்ற குற்றங்களுக்கு விரைவாக விசாரணை முடித்து இன்னும் கடுமையான தண்டனை பொது இடத்தில் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் வெறும் தீவிர வாதியும், பொறுக்கியும் தான் நாட்டில் வாழ முடியும். வினவு ஆசிரியரே இன்று மனித வுரிமை அமைப்பு எண்பது பணம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளுக்கு துணை போகும் அமைப்பாக மாரி விட்டது. டெல்லி கற்பழிப்பு குற்றவாளி, கசாப், மற்றும் அனைத்து குற்றவாளிக்கும் குரல் கொடுக்கும் மனித வுரிமை அமைப்பு. மற்றுமொரு ஐயம், “வினவு புலனாய்வு அமைப்பு” அனைத்து குற்றவாளிகளையும் நல்லவராக எப்படி சித்தரிக்க முடிகிறது?

  • “இது போன்ற குற்றங்களுக்கு விரைவாக விசாரணை முடித்து இன்னும் கடுமையான தண்டனை பொது இடத்தில் வழங்கப்பட வேண்டும்.”
   பாண்டியரசு, நிச்சயமாக உங்கள் க்ருத்துடன் உடன்படுகிறோம். அதனுடன் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். “விரைவான, முறையான, (வெகுஜனத்தினை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இல்லாது) நீதியான நீதி விசாரணை நடைபெற வேண்டும்” என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

   • TAMIL u know very well about indian History because the history totaly based on traitors,every one caught by like through ettappan,In the same way Afzal had the sme incident,do U know Godhra train fire in India in the state fo Gujarath fortunatly, M-Gandhi was born there,BJP govt had no guts to do His period.A govt thats hAVING based on the religiuos its never have a constant top leader,they become to bend foreign country,now india under the control USA it will continue the same if the govt changed–UGLY THING.
    India have High standard country,the ruler every one got short brain ,they may very intelligent in the budget & all that but if they not human mind its never become stand in own backbone.

    ……..Suriyan

 9. பகத்சீங்கை தூக்கிலட்கோரிய காந்திய காங்கிரசு துரோகிகலுக்கு அப்சல்குருவை தூக்கில் போட்டது ஆச்சரியமில்லை.

 10. மரண தண்டனை என்பது யாரோ சிலரின் திருப்திக்காக நிறைவேற்றப்படுவது. தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலுக்கு பிண்ணனியில் உள்ளவர்களை எப்போதுமே அரசு கண்டுபிடிப்பது கிடையாது. அல்லது அதனை விரும்புவது கிடையாது. அதனால் தூக்குதண்டனை போன்று அரச பயங்கரவாத செயல்களை நிறைவேற்றுகின்றனர்.

 11. ஊடகங்களின் செய்திகளில் அப்பட்டமான ஒருபக்க சார்புநிலை தெரிகிறது. இது குறித்தான செய்திகள் சொல்லும் பொழுதெல்லாம் கசாப்பையும் சேர்த்து சொல்கின்றனர். பத்திரிக்கைகளும் மற்றும் பலரும் தூக்கிலிட்டது குறித்து சந்தோசம் தெரிவித்ததாய் தெரிவிக்கின்றனர்.

  “நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஒரு நிராபராதி தண்டிக்கப்படக்கூடாது” என கருத்து சொல்வார்கள். ‘தேசத்தின் மனச்சாட்சியை’ திருப்திப்படுத்த ஒரு நிராபராதி தூக்கிலிடப்பட்டிருக்கிறார். எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

 12. அப்சல் குரு நிரபராதி என்பதை தெரிந்து கொள்ள இந்தக்கட்டுரையின் தொடர்புடைய இடுகைகளை படியுங்கள், பின் முடிவு செய்யுங்கள் யார் பயங்கரவாதி என்று……. சூப்பர்…. வினவுல கட்டுரை வந்தா அவனுங்க எல்லாம் நிரபராதியா??? __________________….. கடைசி காலம் வரைக்கும் ____________ மேய விடனும்….. முதலாளிதுவத்தை எதிர்ப்பது, தீவீரவாதத்தை ஆதரிப்பது, பணக்காரனை பார்த்து வயிர் எரிவது வினவு கும்பல்லோட குணாதசியம்…நீ எழுதி ஒரு மண்ணும் ஆவப்போரதில்லை…. இந்தியா இந்துக்களுக்கே..

  • இந்தியா இந்துகளுக்கு தான் என்பது எங்களுக்கு தெரியும் . இந்துக்கள் அதிகமாகவாலும் இந்த இந்திய திருநாட்டில் அரசியல் கட்சிகள் தங்களுடைய வாக்காளர் ஓட்டை பெறுவதற்காக முஸ்லிம்களை சமிபகாலமாக உடனடியாக தூக்கில் போடும் சம்பவங்களை பார்க்கிறோம் . அதே போல அஜ்மல் கசாப்பை தூக்கில் போடுவதற்கு முன்னால் தூக்குதண்டனை கைதிகளாக 16 பேர் இருந்தனர் அனால் அரசியல் ஆதாயத்திற்காக அஜ்மல் கசாப்பாய் முதலில் தூக்கில் போட்டனர் . அஜ்மல்கசாப் மற்றும் அப்சல்குரு ஆகிய இருவரும் முஸ்லிம் என்பதற்காக நானிதை சொல்லவில்லை தவறு யார் செய்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் . மாறாக அது ஜாதி மத வேறுபாடு இன்றி கொடுக்கபடவேண்டும் . அப்பொழுதுதான் இந்தியா ஜனநாயக நாடு என்று கூற முடியும் . 2001 டிசெம்பர் 13 அன்று நடந்த தாக்குதலுக்கு அப்சல் குருவும் காரணம் என்று அப்சல்குருவிற்கு தூக்குநேரைவேர்விட்டது ஆனால் ராகிவ்கந்தி கொன்றவர்களுக்கு துணை இருந்தவர்களுக்கு மரணதண்டனை அறிவித்தும் அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கவில்லையே அது ஏன்?இதன் மூலம் அப்பட்டமாக தெரிகிறது நீதித்துறையை இந்து மத வாதிகள் ஆள்கின்றனர் என்று.

  • தம்பி உங்க இந்துமத டவுசர்தான் தர்மபுரியில கிழிஜ்சி தொங்குதே அப்பரம் என்ன இந்து,சந்து,பொந்துனு என்னையும் உங்க கூட சேத்துகிரீங்க நானும் இந்துதான் அதுகாகவெல்லாம் இந்த சம்பவத்த ஆதரிக்க முடியாது. . . .

   • //இந்துமத டவுசர்தான் தர்மபுரியில கிழிஜ்சி தொங்குதே

    கட்டை பஞ்சாயத்து, கொலைகளை ஆதரிக்க வேண்டும் என்கிறீர்களா?

    • ஏனுங்க நான் அத சொல்ல வறலீங்கோ உங்க இந்து மதம் இருக்கே [ பாப்பான்ஸ் ] உருவாக்கிய சாதிய அமைப்பு எங்கள சூத்திரன்னு சொல்லுது அப்பறம் என்ன மைத்துக்கு எங்களயும் உங்க கூட இந்துனு சேத்துகிரிங்கோனு கேட்டேன். . .

 13. Afsul guru is a hard core terrorist from north Kashmir inhabited by mostly terrorists financed by Pakistan government with the local people.It is highly shameful for our Indian government as he was not hanged for such a long time though the Honorable Supreme court ordered to hang him in 2004 itself.

 14. பயங்கரவாதிகளின் ஆட்சியில்தான் இந்தியா இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.இதை “இந்துக்களின் மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக” என்கிறது தீர்ப்பு. அப்சல்குருவைத் தூக்கிலிடுவதன் மூலம் இந்துக்களின் மனசாட்சி திருப்திப்படுத்தப்படுகிறது என்பது உண்மையா? இந்துக்கள் எல்லோரும் இந்து வெறியர்கள் எனக் கணக்கீடு செய்யும் இதை இந்துக்கள் கண்டிக்கவேண்டும்.

  • “இந்துக்களின் மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக”
   ————————————————–
   “இந்துக்களின் மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக” என்கிறது தீர்ப்பு. அப்சல்குருவைத்

   தூக்கிலிடுவதன் மூலம் இந்துக்களின் மனசாட்சி திருப்திப்படுத்தப்படுகிறது என்பது உண்மையா?????

   இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா!இல்லை. இல்லவே, இல்லை.

   இந்துக்கள் எல்லோரும் இந்து வெறியர்கள் எனக் கணக்கீடு செய்யும் இதை இந்துக்கள்

   கண்டிக்கவேண்டும்.

   பகத்சிங்கை என்ன சொல்லி தூக்கிலிட்டார்கள்,மகாத்துமாவின் வழியில் அவரின் சீடர்கள்.மக்கள்

   கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள். தக்க நேரத்தில் பதிலடி நிச்சயம் உண்டு.

 15. டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, இந்திய பொது துறை நிறுவனங்களை விற்று மக்களுக்கு பட்டை நாமம் போடுதல் போன்றவற்றை மக்களின் பார்வையுள் இருந்து மறைக்க இந்த மாதிரி பிளாஷ் நியூஸ் வரவைப்பது காங்கிரஸ் அரசின் இயல்பு.

 16. இந்து வாக்குகள் போய்விடுமோ என்று பயந்துகொண்டு கசாபையும், அப்சல் குருவையும் தூக்கிலிட்ட காங்கிரசுக்கு இப்போது எங்கே முஸிலிம்களின் வாக்குகள் போய்விடுமோ என்ற உதைப்பு தோன்றியிருக்கும். எனவே, ‘நாங்கள் பாரபட்சம் இல்லாமல்தான் நடந்துகொள்கிறோம்’ என்று காட்டுவதற்காக இந்து மதத்தைச் சேர்ந்த சில ‘பயங்கரவாதிகளை’ தூக்கிலட்டாக வேண்டும்! ஆக காங்கிரசின் அடுத்த இலக்கு தமிழ் மூவராகவே இருப்பார்கள் என்று யூகிக்கலாம். நல்லவேளையாக அவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இருந்தாலும், ‘கருணை மனு நிராகரிக்கப்பட்டது சரியே’ என்று தீர்ப்பு வந்து தொலைத்தால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லக்கூட அவகாசம் தராமல் மறுநாள் காலையே மூவரையும் தூக்கிலிட்டுவிடுவார்கள்.

 17. டெல்லி வல்லுறவு வன்முறையை தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் தூக்கு தண்டனைக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்க தொடங்கியதையும் அதன் பிரதிபலிப்பு சமீபத்திய 2 நீதிமன்ற தீர்ப்புகள் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்ததையும் இங்கு இணைத்து பார்க்க வேண்டும். கசாப் தூக்கில் இட்டபோது Guru next ? என மீடியாக்கள் ஓலம் இட்டதும், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க காங்கிரஸ் அரசு தயங்காது என காட்டிகொள்ளும் நிர்பந்தம்.

  அப்சல் குருவின் வழக்கு விசாரணையில் ஏகபட்ட்ட ஓட்டைகள் உள்ளதை புலனாய்வு பத்திரிக்கைகள், அமைப்புகள் முன்வைத்ததையும், குரு ஒரு இந்திய காஷ்மிரி என்பதால் அவர் தூக்கிலிடப்பட்ட மாட்டார் என அறிவார்ந்த வட்டாரங்களின் கூற்று இன்று பொய்த்து போய் உள்ளது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் 3 மாத இடைவெளியில் 2 தூக்கு என்பது மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கும், போராளிகள் ஜனநாயக பாதையில் திரும்ப முயற்சிக்கும் அமைப்புகளுக்கும் மிகப்பெரிய பின்னடைவே. எது எப்படியோ, அப்சல் குரு தூக்கு காஷ்மீர் மக்களை நம்மிடம் இருந்து மேலும் அந்நியப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • பயங்கரவாதியை போராளி என்று சொல்லும் உங்கள் வாதத்திலும் ஓட்டை இருக்கிறது

 18. குற்றவாளி கடிதம் எழுதியிருக்கிறார் பாருங்கள்…என்றால் எல்லாரையுமே விடுதலை செய்யவேண்டியிருக்கும் ஐயா…தூக்குதண்டனை தவறு என்றுவாதிடுங்கள்…JKLK என்ற இயக்கத்தில் இருந்தவர்..பாகிஸ்தானில் 2மாதம் பயிற்சி பெற்றவர்…இதையெல்லாம் கவனிங்க. அருந்ததிராய் நிரூபித்துவிட்டார் என்கிறார்கள். என்ன நிரூபித்தார்…?

  இவர் கொடுத்த இன்டர்வியூவை வைத்து இவர் குற்றவாளி என்று பேட்டி எடுத்தவர் முடிவுக்கு வந்ததாக சொல்லியிருக்கிறார்…புரியவேயில்லை…

  மீண்டும் நினைவுபடுத்துவது…தூக்குதண்டனைக்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்கவேண்டியது கட்டாயமே…அதற்காக பாராளுமன்றதாக்குதலே பிஜேபியில் நாடகம் என்று பிரச்னையை சிக்கலாக்குகிறீர்கள். இதையும் அருந்ததிராயே நிரூபித்தாராம்..யே யப்பா அந்த பெண்மணிக்குத்தான் என்ன ஒரு துப்பறியும் சக்தி. இதை சொன்னால் நீ காவி,ஆர்.எஸ்.எஸ் என்று வசை பாடுவீர்கள். கடைசியில் குற்றவாளிகளும் அதற்கு குரல் குடுக்கிற மனித உரிமை அமைப்புகளும்,அருந்ததிராயும்தான் இருப்பார்கள். அருந்ததிராய் அம்மா பாராளுமன்ற தாக்குதலில் செத்துப்போன 9பேரை பத்தி ஏதாச்சும் சொன்னாங்களாம்மா? இல்லை அது நார்மல் என்று விட்டுவிட்டார்களா? போலீஸ் செத்தா வினவும் ரொம்ப சந்தோசப்படும்…அவ்ளோதான்

  • ///இவர் கொடுத்த இன்டர்வியூவை வைத்து இவர் குற்றவாளி என்று பேட்டி எடுத்தவர் முடிவுக்கு வந்ததாக சொல்லியிருக்கிறார்…புரியவேயில்லை…/// இவர் குற்றவாளி அல்ல என்று இருக்கவேண்டும்

 19. மனது வலிக்கிறது,! நாசமாய் போகட்டும் இந்த தேசமும் ஈனதலைவர்களும்..பொட்டு பொறுக்கிகளும்…

 20. இந்து தர்மம் தழைத்தோங்கும் நாட்டில் இதையே நியாயம் என்பார்கள். இந்த இந்து வெறியர்களை கணக்கை மக்கள் முடிக்கும் நாள் எதுவெனத்தான் காத்திருக்கிறேன்.

 21. on Afsal Guru, Nobody knows if he’s guilty or not, I dont believe both Roy and Congress and our judiciary. Truth is that we dont have guts or intelligence to address the root cause. Everything is vote bank politics.

 22. இன்று இந்தியா முழுவதிலும் அப்சல் குருவின் தூக்கை கண்டித்து குரல்கள் எழுந்து கொண்டிருக்கும் வேளையில் மற்றுமொரு காஷ்மீரி, சீருடை அணிந்த ஒருவனால் எவ்வித எதிர்ப்புமின்றி கொல்லப்பட்டு கொண்டிருக்கலாம் …. அவர்களின் மரணங்கள் வெளியே தெரிய வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம் ….

   • நீங்க ஏன் சார் அங்க ஏல்லாம் போரீங்க. கோவனத்துல நிக்கிறவன் அம்மனமா நிக்கிறவன பாத்து சிரிச்சானாம் அந்த மாதிரில இருக்கு. . . .??????

 23. வழக்கம் போல் r s s டவுசர்கள் தொடை தட்டுகின்றன.
  இதில் என்னை r s s என்று சொல்லாதே என்ற பிலாக்கணம்
  வேறு.நாலாயிரம் முஸ்லீம்களை நரவேட்டை ஆடிய
  நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் எனில் இது போன்ற
  காய் நகர்த்தல்கள் கேடு கெட்ட காங்கிரசுக்கு அவசியமாகிறது.
  என்னை கேட்டால் அடுத்த முறை b j p யே வந்து தொலையுட்டும்.
  திருடன் கையில் சாவியை கொடுத்தால் முஸ்லீம்கள் கொஞ்சம்
  நிம்மதியாக வாழலாம். அணைத்து முஸ்லீம்களும் b j p க்கே
  உங்கள் வோட்டை போடுங்கள்.
  முதுகில் குத்தும் காங்கிரஸ் பச்சை துரோகிக்கு
  எதிரே நின்று நெஞ்சில் குத்த வரும் b j p எவ்வளவோ மேல்.

  • நீங்கள்தான் இப்போது rss போல பேசுகிறீர்கள் ஐயா…நான் ஒருபோதும் மோடிக்கு ஆதரவு தரமாட்டேன்.இந்தியாவில் எந்த தலைவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்…அப்படி மோடி தண்டிக்கப்படுவார் எனில் மகிழ்ச்சியே…கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு முடிந்து கிட்டத்தட்ட 40பேர் தூக்கு விதிக்கப்பட்டிருக்கின்றனர் கீழ் கோர்ட்டில். பிறகு நடந்த கலவர வழக்கு முடியப் போகிறது என்று தெரிகிறது.அதிலும் தூக்குகள் இருக்கவே செய்யும். நான் சொன்னது தூக்கே வேணாம் என்று. அது பேரறிவாளன் உட்பட மூன்றுபேருக்கும் பொருந்தும். ஆனால் எல்லாரும் அருந்ததிராய் நிரூபிச்சிட்டார் அவர் குற்றவாளி இல்லைனு என்கிறீர்கள். அவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது,அரசால் தடைவிதிக்கப்பட்ட அமைப்பில் இருந்தது எல்லாம் உண்மைதானே…அவர் குற்றவாளி இல்லை என்று எழுதப்பட்ட கட்டுரைகள் எதிலும் இதைப்பற்றி சொல்லப்படவில்லை. மறைக்கிறார்கள். குற்றவாளி கடிதம் எழுதியிருக்கிறார் பாருங்களேன் என்றுஒரு விவாதம்.

   அவரை 2006ல் முதலில் பேட்டி கண்டாராம் ஒரு நிருபர். அவரை பார்த்ததும் இவர் குற்றவாளி இல்லை என்று தெரிந்ததாம்…

   எந்த கருத்தாவது முஸ்லிம்களுக்கு எதிராகவோ,கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவோ இருந்தால் அதை நேரடியாக பதில் அளிக்க துப்பில்லாமல், காவி, ஆர்.எஸ்.எஸ் என்று பதில் அளிப்பது யார் பலவீனம் சார்!

 24. கடல் மூலமோ,ஆகாய மார்க்கமாகவோ அல்லது தரை வழியே
  வழியே நுழையும் தீவிரவாதிகளை யார் உள்ளே அனுமதிப்பது ?
  குடி நுழைவு துறை என்று ஒன்று இருக்கிறதே அது யார் மயிரை
  புடுங்கி கொண்டிருந்தது? காசை வாங்கிகிட்டு உள்ளே உட்டா
  அந்த பயலுவல என்ன பண்றது? இல்ல இமிக்ரேசன் பூரா பாயுங்க
  தான்னு சொல்வானுங்களா ?

 25. காங்கிரசு அரசின் மோசமான பாசிசநடவடடிக்கை – எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்

 26. http://indiatoday.intoday.in/video/mohamammed-afzal-guru-pranab-mukherjee-parliament-attack-case/1/249612.html

  இது அப்சல் குரு முன்பு கொடுத்த ஒரு பேட்டி.இதில் அவர் உண்மையை சொல்வதாகவே கருதலாம்.ஆனால் அவரை தூக்கில் இடாமல் சிறையிலேயே வைத்திருந்து இருக்கலாம் என்பதே என் கருத்து.கொஞ்சம் இந்தி தெரிந்தால் புரியும்… ஆனால் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பது ஜல்லியடித்தல்தான்… தூக்குதண்டனையை எதிர்க்கிறேன் பேர்வழி என்று எதிர்ப்பரசியல்ஆட்கள் எல்லாரையும் பரிசுத்த புண்யவான்கள் என்று பேச தொடங்குவதுதானே நடப்பது…

 27. காவி தீவிரவாதிகளை களைஎடுப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை

 28. அப்சல் தூக்கும், அயொததி தீர்ப்பும் பார்க்கும்போது 2013 கலவர ஆண்டாகவே இருக்கும் என தோன்றுகிறது! இந்தித்வா நாட்டை எந்தத்திசையில் இழுத்து செல்லுகிறது பார்தீர்களா? ஆடுகள் சண்டையிடட்டும் ! ஓனாய்கள் காத்திருக்கின்றன!

 29. இந்துத்வ கார்பொரேட்டுகளுக்கும், ஊழலில் அம்பலப்பட்டுபோன காஙகிரசுக்கும்நடக்கும்நடக்கும் போரில், தனது கடைசி துருப்பு சீட்டை இறக்கிவிட்டது காஙிரசு! ஏற்கெனவே ஷின்டே போட்ட ஆர் எச் எச் குண்டு புகைந்து கொன்டிருக்கிறது! வரும் ஆண்டு இன்னும் பல வாண வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்! ஓய்வு பெற்ற ராணுவ தளபதியும், இன்னும் பல (ஓய்பெற்ற/பெறாத?) அயொத்தி தீர்ப்பு புகழ் நீதி அரசர் போன்ற உயர் குல அதிகாரிகள் காஙிரசுக்கு மேலும் பலநெருக்கடிகள் கொடுக்கலாம்! அடுத்து தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் மூன்று தமிழர்கள் கதி நிர்ணயிக்கபடும்? குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்போவது அவாள்தான்! எமெர்ஜென்சி ! எமெர்ஜென்சி!!

 30. அப்சல் குரு ஒரு நியாயமானவன் என்று வினவு சொன்னால் அனைவரும் எற்றுக்கொள்ள வேண்டுமாம். என்ன கொடுமை பாருங்கள்! நூறு கோடி ஜனங்கள் உள்ள இந்த மக்களாட்சி நடை பெரும் நாட்டில் ஒரு பயங்கர வாதிக்கு துணை!!! காஷ்மீரில் லட்சக்கணக்கான இந்துக்களை விரட்டி அடித்து தில்லியிலும் ஜம்முவிற்க்கும் அனுப்பினார்களே அதை என்ன வென்று சொல்லுவது. உலக அளவில் படுபயங்கரவாதிகளாக திகலும் இஸ்லாமியர்களை தண்டிக்கக்கூடாதாம். தமிழகத்தில் ராஜீவைக் கொன்றவர்கள் இந்துக்களுக்காக வாதடவில்லை!! இந்து மதத்திற்க்காக அல்ல!!! ஆனால் அப்சல் குரு போன்ற கொடுமைக்காறர்கள் இஸ்லாமுக்காக வாதாடுபவர்கள்!! இஸ்லாம் அல்லதவர்களையும் இஸ்லாமியர்களையும் தாம் உலக அளவில் தினசரி கொன்று கொண்டு இருக்கிறர்கள்! அருந்ததிராய் ஒரு மகா புண்ணியவதியாம்!! அவர் சொல்லை கேட்க வெண்டுமாம்!! எங்கெல்லம் கொடுமை நடக்கிறதோ அங்கெல்லம் சென்று ஆதரவு தருவது இந்த புண்ணியவதியின் செயல்!!! இதற்கு வக்காலத்து வாங்க ஒரு “வினவு”!!!!!!!!

  • நட்டு கழன்ட ராயன் அவர்களே வினவுல சொன்னா உங்கல யாரு நம்ப சொன்னது கட்டுரையை படிச்சி பாத்து தப்புனா நிருபிங்க நாங்கலும் நம்புறோம். . . . .

 31. நாட்டின் இறையான்மைக்கு தீங்கு விளைவிக்கும் யாரையும் சட்டம் படி தண்டிக்கட்டும் இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கபோவதில்லை,ஆனால் இங்கு ஓருசாரார் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டு பலி பீடத்தில் நிறுத்தபடுவது ஏன் ? முஸ்லிம்களுகளுக்கு எதிரானா எத்தனையோ குற்றச்சம்பங்களில் நாட்டின் அன்றைய எதிர்கட்சிதலைவரிலிருந்து நாளைய பிரதமர்கனவுகளில் வலம் வரும் தலைவர்கள் (????) வரை ஈடுப்பட்டும் அதற்க்கான சாட்சிகள் மலிந்து கிடந்தும் இவர்கள் மீது ஓரு சிறு துரும்பையும் கிள்ளிபோடமுடியவிலையே நீதிமன்றங்களால் இதுதான் நீதியா………….??, முதலில் நீதிதேவதையின் கண்களை கட்டியிருக்கும் கருப்பு துணியை அவிழ்த்துபோடுங்கள், அவளாவது பார்கட்டும் சட்டத்தின் பெயரால் இங்கு நடத்தப்படும் கேலிகூத்துக்களை.

 32. சவூதிக்கும் இந்தியாவிற்கும் ஏதேனும் வேறுபாடுகள் இருக்கிறதா?

  • அப்சல் குரு போன்றவர்கள் சௌதியில் இருந்திருந்தால் அப்போதே தலை துண்டிக்கப்பட்டிருக்கும்!!! ஆனால் இந்தியாவில் அவ்வாறு செய்யாமல் காலங்கடந்து தண்டனையை நிறைவேற்றி இருக்கிறார்கள்!

   • குற்றம் நிரூபிக்கபடாமல் அளிக்கப்பட்ட தண்டனையைப் பற்றி நான் சொல்ல வருகிறேன்.

 33. பேய்களின் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள். ஆதாரங்களுடன் தெஹெல்கா வெளியிட்டபின்னும் யோக்யர்களாக குஜராத் படுகொலைக்கரர்கள் வளம் வருகிறார்கள. ராஜீவ் காந்தி படுகொலையில் சு சாமி. சந்திராசாமி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று வேலுசாமி கூறினாலும் விவரமாக அம்புகளை மட்டுமே முறிதுக்கொண்டிருக்கிரார்கள்.
  ஆதாரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு சொல்லவேண்டியவர்கள் அப்சல் குருவிடம் காவல் துறை வாங்கிய வாக்குமூலத்தை வைத்து கூட குற்றவாளி கூறமுடியாது என்று கூறிய நீதிமன்றம் இந்துக்களின் மனசாட்சிக்காக தீர்ப்பு சொல்கிறேன் என்பது கொஞ்சநஞ்சம் அதன் மேல் இருக்கும் மதிப்பையும் சிதைக்கும் வண்ணமாக உள்ளது. நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக தூக்குத்தண்டனை என்பது குரூர புத்தியின் கொடிய அடையாளமே.

 34. People who dont support this ‘innocence’ of Afsal Guru may not be from RSS. This is a ‘clearly’ confusing case like Rajiv Gandhi’s assasination. Congress branded Gandhi’s killers as Hindu Terrorism, Indira’s as Sikh terrorism, Rajiv as Tamil terrorism, all post 92 incidents as Islamic terrorism, Orissa incidents as tribal terrorism or naxalism and the list goes on…. BJP would like this as well… and also people are now completely fine tuned to these terms. ooru rendu pattu koothaadigalukku kondaattam thaan.

 35. Australian christian father staines and his son and daughter was killed by bajrang dal darasingh in orissa .set fire to the car and burned to death.this kind of hindu terrorism should not comes under indian penal code.supreme court follows hindu rule of law.

   • மருந்து மாத்திரை கொடுத்து மதமாற்றம் செய்தால் மனு நீதிப்படி உயிருடன் எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொல்லிருக்கிறதா? அந்தச் சின்னக் குழந்தைகளையுமா எரித்துக் கொல்ல வேண்டும்? பஜ்ரங்தள்ளின் காலித்தனத்தை சரி என்று சமாளிப்பதற்காக மனிதத்தை மறந்து விடாதீர்கள்.

    • i am not supporting them but staines is no saint.Chrtsianity has been slaughtering native people in south America/Goa/Africa merely for not accepting Jesus Christ since a long time.

     Mr.Graham Stains should have understood the risk of associating himself with such a stained organization like Jesuits and be wary of harvesting souls.

     so,murpagal vinai pirpagal sudum,avlo thaan.

     • So, mr. Harikumar, without Christian faith spreading in Africa/South America or India, do you expect them any better than cavemen? Christian religion brought civilization to countries like India where lower caste people and women were treated worse than animals. Even today hinduism is the worst religion that discriminates its own people. Why you associate yourself with such a filthy religion? unnaiyum koluthiralama?

      • please dont give me all this time pass about civilization and all,

       dont give me ur white man’s burden bullshit.

       u think,i am a five year old to believe that the Jesuits went far and wide to civilize the people.

       Are u telling me that inquisition in South America/Goa is all Lies?

       regarding lower caste people,r u telling me that caste system doesn’t exist amongst Christians in India or what about White American Protestants racially abusing Black people,even ask whether christian nadars ll put sc christians above hindu nadars?

       oh even better,Eastern Orthodox serbs were killing Roman Catholic Croats in erstwhile yugoslavia,

       munadha nethu convertu aana neeyellam idha pathi pesa koodathu thambi,

       paathu soodhanama nadanthukka.

       Our Indian society would have been much better off without Mozzies and Fernandos in it.

       Your paadhiris play politics in India because the local people were too strong for u to kill them off,

       • Mr. Harikumar, you speak as if you know everything under the Sun that is why you are not replying to any issue raised by Mr. Hisfeet. This clearly shows your hardcore prejudice and closed mind. Father Staines was taking care of hapless leprosy patients in India. Even if there is doubt that he was converting people, does it hive license to the religious fundamentalists to brutally murder him and his minor children by burning them to death? Is it what your great Hindu dharma teaches? Are you supporting such Jungle Raj. If any one suspects of converting etc. he should have taken them to court and prove the charges in a civilized society. If you know basics of Indian history, you should have known dalit children were barred from studying and only Christian Missionaries started school, provided education to the poor dalits.

        • Puthiyavan Raj

         Let christians come and do service work here,i am from kanyakuamri district and i know the work done by christian missionaries there and also i went to a catholic convent.

         But this is the good side of the story,there is an ugly side too involving money.The amount of money and corporations of christianity to dangerous and desperate extents,Mr Staines might be innocent and Dara Singh might be guilty but there is a historical political context that caused this crime.

         Jesuits throw bread crumbs and harvest souls shamelessly.They forget that the whole industrial revolution and modern medicine came up because of the protestant revolt of Martin Luther and most of the European countries today which excelled in science and technology did so because of rejecting the ideas of the Catholic church and the papal bureaucracy.

         But despite all this historical evidence,the catholic church ll shamelessly use that very modern means/medicine that is so opposed to sell Christianity,the Portuguese ll do mass slaughter/conversion of Hindus in Goa and Mangalore.

         Let people convert to Christianity whether they like the bible/see miracles like the cross shining on their aluminium roof or for getting education/money or whatever,

         but the story is as long they try to disrespect other native faiths and arrogantly try to erase cultural history just like that due to their money power,they ll keep provoking their opponents into committing something like that.

         • //They forget that the whole industrial revolution and modern medicine came up because of the protestant revolt of Martin Luther and most of the European countries today which excelled in science and technology did so because of rejecting the ideas of the Catholic church and the papal bureaucracy.//

          There is something called counter reformation. That made Catholics reform themselves and make them in par with Protestants. I myself being a protestant know that there are more reformed minds in Catholic Church than in Protestant circles like Baptists or AG. Pope apologized to Galileo and officially announced that Catholics can believe in evolution.

          //but the story is as long they try to disrespect other native faiths and arrogantly try to erase cultural history just like that due to their money power,they ll keep provoking their opponents into committing something like that.//

          What you want to respect? Temple prostitution? Burning of widows? Female infanticide? Killing of Muslims/Christians/Dalits?

          Again don’t bring in Catholic priests raping children. These things are not the teaching of Christian religion, but temple prostitution is part of teaching of your religion. Such religions deserve no respect!

          If we provoke, you will kill us and justify it by blaming us for provocation. The same is happening in pakistan. You are no different than talibans. Saffron mujahideen.

       • //r u telling me that caste system doesn’t exist amongst Christians in India or what about White American Protestants racially abusing Black people,even ask whether christian nadars ll put sc christians above hindu nadars?

        oh even better,Eastern Orthodox serbs were killing Roman Catholic Croats in erstwhile yugoslavia,//

        All these things are not Christian teachings. Bible teaches equality of believers. And to note, there were 3 African popes. There are many African saints (Augustine, Paul the Hermit etc). Archbishop of York (Church of England) is John Semantu (Black man). There are lot of Christians who ignored caste and moved forward. And Indian Christians follow caste not because of Church teaching but because of their hindu roots. Those Christians who practice caste do it against Christian religion.

        Now comparing this to hinduism, hinduism officially teaches castism. Those who suppress lower caste people do that in accordance to hinduism and with hindu pride. Now tell me one dalit who serves in palani or thirupathi! In theory there is no opposition for a black to be pope or arch bishop in my religion. But your religion won’t even allow that a dalit to enter the altar.

        //munadha nethu convertu aana neeyellam idha pathi pesa koodathu thambi,//
        innum adimai pozhappu nadathura neeyellam pesumpothu, naan pesurathu thappilla. As a convert I get more respect and equality in my new religion than you get in your religion.

 36. http://viruvirupu.com/2013/02/10/46651/
  தீவிரவாத குற்றச்சாட்டில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்க போவதாக அறிவித்துள்ள லெஷ்கர் இ தொய்பா இயக்கம், “அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதற்காக இந்தியாவுக்கு சரியான பாடம் புகட்டப்படும். இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்படும்” என அறிவித்துள்ளது.

  லெஷ்கர் இ தொய்பா செய்தி தொடர்பாளர் அப்துல்லா கஸ்னாவி, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றுக்கு போன் மூலம் இந்த தகவலை கொடுத்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.

  அப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடத்தப் போவதாக சில இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

  இந்நிலையில் லெஷ்கர் இ தொய்பா செய்தி தொடர்பாளர் அப்துல்லா கஸ்னாவி, “அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். பழிக்கு பழி வாங்குவோம். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை தகர்ப்போம். இந்தியா தன் செயலுக்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்” என்று எச்ரிக்கை விடுத்துள்ளார்.

  இந்த எச்சரிக்கையை அடுத்து மத்திய உளவுத்துறை, அனைத்து மாநில காவல்துறைகளையும் உஷாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

 37. தீர்ப்பின் தமிழாக்கம் வாதங்களுக்கு வசதியாக திரிக்கப்பட்டிருக்கிறதே…

  judgment goes as,

  The gravity of the crime conceived by the conspirators with the potential
  of causing enormous casualties and dislocating the functioning of the
  Government as well as disrupting normal life of the people of India is some
  thing which cannot be described in words. The incident, which resulted in
  heavy casualties, had shaken the entire nation and the collective conscience of
  the society will only be satisfied if the capital punishment is awarded to the
  offender. The challenge to the unity, integrity and sovereignty of India by
  these acts of terrorists and conspirators, can only be compensated by giving
  the maximum punishment to the person who is proved to be the conspirator in
  this treacherous act. The appellant, who is a surrendered militant and who was
  bent upon repeating the acts of treason against the nation, is a menace to the
  society and his life should become extinct. Accordingly, we uphold the death
  sentence..

 38. The very root of the terrorism in Indian subcontinent is illogical division India on religious grounds and omission of kashmere,Nepal, hydrabad, Cylone, Sikkim and Buttan to the mercy of the mighty. Hindu maha saba (the RSS) wanted a Hindu only state after bifercation; but the majority congresmen wanted a secular state. From there on we have to fight with pakistan for every issue, even by sacrificing Gandhi’s life! Nehru government with Patel as homeminister banned RSS, but Indira removed the Ban, after getting support for her Emergency Rule! RSS is the only social group to come forward to support Indira’s Emergency !

 39. Emergency was supported bigtime in states like Kerala/TN by common man because it forced the government employees and trains and essential services to be efficient and work on time unlike the old sarkari system when no public employee would care about the services to be given by him.

 40. What the he** do you think yourself?

  Ok! I agree you are a centralist, but give me the proof for
  every word that you write here

  for ex: appavi afsal, poi aana kuttra chaatu…something like that…
  you don’t know anything…just a sadist by becoming a owner of this website
  and article as well

 41. மனிதவிரோதப் போக்குடன் கூடிய இச்செயலைக் கண்டிக்கிறோம்…

 42. அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

 43. ” ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் . ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது ” என்பது தான் இந்திய ஜனநாயகத்தின் நோக்கம் என்று கூறுகிறார்கள்.

  ஆனால் அப்சல் குரு போன்ற பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் பெருமையோ?

  // உச்ச நீதிமன்றம் அதன் ஆகஸ்டு 4, 2005 தீர்ப்பில், அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அது இப்படியும் சொல்கிறது. ‘பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தெளிவாகிறது’.

  ஆகவே, நேரடி சாட்சியம் இல்லை, ஆனால், சூழ்நிலை சாட்சியங்கள் உண்டு.

  தீர்ப்பின் சர்ச்சைக்குள்ளான ஒரு பத்தியில், ‘இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சவாலாக இருந்த இந்த பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களின் செயலுக்கு பரிகாரம் இந்த துரோகச் செயலில் சதிகாரர் என நிரூபிக்கப்பட்ட நபருக்கு அதிகபட்ச தண்டனையை அளிப்பதாகத்தான் இருக்க முடியும்’. //

  உச்ச்சாணிக் கொம்பு நீதிமன்றத்தின் யோக்கியதை மேற்கண்ட வரிகளில் காரித்துப்புவது போல் உள்ளது.

  சாட்சியங்கள் இல்லாத, குற்றம் சரிவர நிரூபிக்கப்படாத ஒரு முஸ்லீமுக்குத் தூக்கு. ஆனால் ஒப்புதல் வாக்குமூலம் தருகின்ற, தெருவில் ஓடவிட்டு சுட்டுத்தள்ளப்பட வேண்டிய நரவேட்டை மோடி, அத்வானி, மற்றும் ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் சுதந்திரமாக உலவுகின்றனர்.

  ” தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் ” என்ற பொதுக் கருத்து பெரும்பாலான மக்களின் மனசாட்சியை ஆள்வதனால்தான் இந்த அநீதிக்கெதிராக மக்கள் கொதித்தெழவில்லை.

  புரட்சிகர அமைப்பின் போராட்டங்கள்(கருத்திலும் , களத்திலும்) இந்தப் பொதுக்கருத்தைத் தகர்த்து இந்துத்துவ பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மக்களிடம் அம்பலப்படுத்துகின்றன. இனி மேலும் அம்பலப்படுத்தும்.

 44. அப்சல் குருவுக்கு ஆதரவாக பேசும் யாருக்கேனும் அவருடைய குடும்பத்தாரையோ இயக்க தோழர்களையோ தங்கள் வீட்டில் தங்கவைக்கும் தைரியம் உள்ளதா ? எல்லாம் வெறும் வாய் தான்.

  • நீதித்துறை சரியாக இருந்தால் ஆதரவு கொடுப்பார்கள் . ஆதரவு அப்சல் குருவிற்கு மட்டும் அல்ல இலங்கை அகதிகளுக்கும் ஆதரவு கொடுக்க தயாராக இருக்கின்றனர் . அவ்வாறு கொடுத்தால் எந்தவித ஆதாரமும் இன்றி அவரையும் தீவிரவாதி என்று பலி கிடாவாக பலி கொடுத்து விடுவார்கள் . ஏனென்றால் நீதி துறை அவ்வளவு வலுவாக உள்ளது .

  • தம்பி சாமாத்யமா பேசுறதா நெனைச்சிகாதிங்க உங்க கருத்து என்னனு மட்டும் சொல்லுங்க. . . .

  • சரி .. இப்படி பதிலுக்கு கேட்கிறேன் .. பதில் சொல்லுங்கள் ..

   இந்திய உளவுத்துறைக்கும் பிஜேபிக்கும் ஆதரவாகப் பேசும் யாருக்காவது இரண்டையும் சேர்ந்த எவனையாவது வீட்டில் தங்க வைக்க தைரியம் உண்டா ?..

 45. Hats Off to Vinavu for the brave title. It takes a lot of nerve to say that. Thanks for that.

  Nevertheless, sometimes you make me feel if you are a mole with support from local law enforcement(or intelligence agencies) to spread alternate views and polarize people.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க