Thursday, April 15, 2021
முகப்பு செய்தி பொறுக்கிக்காக பெண்ணைத் தாக்கிய பஞ்சாப் போலீசு! வீடியோ!!

பொறுக்கிக்காக பெண்ணைத் தாக்கிய பஞ்சாப் போலீசு! வீடியோ!!

-

ட்ட ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரத்தில் உள்ள போலீஸ் கிரிமினல்களால் பெண்களுக்கு என்றும் பாதுகாப்பு இல்லை என்பதை பஞ்சாப் மாநிலத்தில் நடுரோட்டில் எல்லோர் முன்னிலையில் ஒரு பெண்ணை தாக்கியுள்ள போலீஸாரின் போக்கு நிரூபித்திருக்கிறது.

பஞ்சாபில் உள்ள தரன்தாரனில் திருமணம் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த 23 வயதான ஹர்பிந்தர் கவுர் என்ற பெண்ணை அந்தப் பகுதியில் உள்ள லாரி டிரைவர் ஒருவன் பாலியல் தொல்லை செய்துள்ளான்.

பெண்ணை அடிக்கும் பஞ்சாப் போலீஸ்அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்குச் சென்று ஹர்பிந்தர் கவுரின் தந்தை காஷ்மீர் சிங்கும் அவரது சகோதரனும் உதவி கேட்டுள்ளனர். போலீஸ் கான்ஸ்டபிள்கள் இது குறித்து லாரி டிரைவரிடம் விசாரித்துவிட்டு அவன் கொடுத்த மாமூல் பணத்தை வாங்கிக் கொண்டு, உதவி கேட்ட பெண்ணை சரமாரியாக லத்தியாலும் கைகளாலும் அடித்துள்ளார்கள். கூடவே அவரது தந்தையையும், சகோதரனையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அதிகாரத் தோரணையில், காக்கிச் சீருடையில் அவர்கள் நடத்திய இந்த கொடூரத்தை அந்நிகழ்வினை நேரில் பார்த்த ஒருவர், தன் செல்போன் காமிராவில் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ, தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி பரபரப்பானதைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் செய்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 4 காவலர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

‘தாக்கப்பட்ட பெண்ணின் தந்தை குடித்து விட்டு தகராறு செய்ததாகவும் அதற்காக அவரை கைது செய்ய வந்த போலீசை இப்பெண் தடுத்ததால் அவளை அடித்தோம்’ என்றும் கதை சொல்லியிருக்கிறார் எஸ்.பி. கன்வல்ஜித் சிங் தில்லோன்.

‘பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு சட்டத்தை கடுமையாக்குவதும், போலீஸ் ரோந்தை அதிகரிப்பதும் உதவி செய்யும்’ என்று முன் வைக்கப்படும் தீர்வின் போலித் தனத்தை இந்த சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கிறது. தங்களுக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்ய போலீசை நாடும் பெண்களுக்கு நியாயம் கிடைப்பது சாத்தியம் இல்லை என்பதை இந்த சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த போலீஸின் அடவடித்தனத்தை காட்டும் வீடியோ:

மேலும் படிக்க
Women beaten- Punjab. Badal bows public orders probe
Heat on Punjab police officer after constables beat up woman

  1. போலிசு என்பவன் பொருக்கிதான் என்பதை காட்டியிருக்கிரார்கள்.

  2. இந்த நாட்டில் சட்ட ஒழுங்கை மதிக்காதவர்கள் பட்டியலில் கிரிமினல்கள் கூட இரண்டாம் வகையினர் தான். முதல் வகையினர் காவல்துறை தான். என்னவோ சட்ட ஒழுங்கு விதிகள் தங்களுக்கு கிடையாது என்பது தான் அவர்களின் ஒவ்வொரு செயலிலிலும் வெளிப்படுகிறது.

    பெண்களின் மீதான வன்முறையை தடுக்க காவல்துறைக்கு அதிக அதிகாரம் கேட்கிறார்கள். கொடுத்தால் திருடனிடமே சாவி கொடுத்த கதை தான்.

  3. இந்தநாட்டில் சட்டம் போலீசு கடுமையாக்கனா பெண்கலுக்கு பாதுகாப்பு என்ட்ர மாயை என்பதை இந்த சம்பவம் எடுத்துரைக்கிரது.இனிநாம் கையில் எடுப்பது சட்டம் அல்ல போராட்டம்.என்பதை மார்ச்-8ல் சூளூரைப்போம்.பெண் பெண்ணாக் இருப்பதை விட போராலியாக இருப்பதுவே பேணிக்காக்க முடியும்.நன்றி வினவுக்கு.

  4. உலக மகளீர் தினத்தில் இந்திய ஜனநாயகத்தின் அன்பளிப்பு ஒவ்வொரு மகளீருக்கும்.

  5. ‘தாக்கப்பட்ட பெண்ணின் தந்தை குடித்து விட்டு தகராறு செய்ததாகவும் அதற்காக அவரை கைது செய்ய வந்த போலீசை இப்பெண் தடுத்ததால் அவளை அடித்தோம்’ என்றும் கதை சொல்லியிருக்கிறார் எஸ்.பி. கன்வல்ஜித் சிங் தில்லோன்.—கதைவிடுவதில் இவர்களை மிஞ்ச முடியாது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க